நீங்காதிரு…

உன் இதய எல்லைகளிள் இடமின்றி போகுமட்டும்

உன்னுள் எனை  நிரப்புமட்டும்

எஞ்சிய நான் உன் இரவுகளில் பனியாய் பொழியும் மட்டும்

உன் இளங்காலை விடியல்களில் கதிராய் கசியும் மட்டும்

நீங்காதிரு

பிரிவென்ற ஒன்றை பேசாதிரு

 

ஓராயிரம் ஜெபங்கள் உன்னவன் சொன்னதுண்டு

ஓதும் அவை அனைத்தும்

உன் ஓர் வடிவில் நான் விடை காணும் மட்டும்

ஓதம் என உயரும்  என் தேடல் அது தீருமட்டும்

என் நிறையா நெடும் பள்ளங்களில் உனை நான் நிரப்புமட்டும்

நீங்காதிரு

பிரிவென்ற ஒன்றை பேசாதிரு

 

ஆயிரமாயிரம் அதிகாலைகள்

அசைவிலியாய் உனை சிறை சேர்த்தன என் தோள்களில்

நீங்காதிரு

ஆகாயம் பிரிந்து கார் மேகம் கடந்து

எனக்காக வந்தாய்

நீங்காதிரு

என் தோள்களில் நீங்காதிரு

 

நீளும் என் விரல் உன் கூந்தல் தனில்

பேசும் முறை தீரும் மட்டும்

நீங்காதிரு

பிரிவென்ற ஒன்றை பேசாதிரு

Leave a Reply