நாம் என்பது ஓர் வரம்

துணை வந்த விடியல் உன்னால்

இயலவில்லை இரவுகள் என்னில்

தனி வழிப் பாதை என் பயணம்

தவறி இருப்பேன் நான், சாய்ந்தும் ஓய்ந்தும் தான்

பாதை மாறி பறந்தும் இருப்பேன்,

பயத்தில் பதராய் விளைந்தும் இருப்பேன்

தீங்கு செய் தீயாய்

தீது செறி கள்வனாய்

நோய் செய் உயிரியாய்

நேர்கண்ட சிதையாய் சிதறியும்தான்

தாகம் கொண்ட இதயத்தில்

தடமின்றி வந்து தங்கியவனே

நான் கண்ட நட்பே

நடைமுறைபடவில்லை இவை அனைத்தும்

துணை வந்த விடியல் உன்னால்

இயலவில்லை இரவுகள் என்னில்

போர்களம் தன்னில் நான்

போகும் முன்னே போர்வாள் தந்தவன் நீ

கவசமும் தான், கவசமாய் வந்தவனே

வில் அம்பு தந்தாய்

விளாமல் செய்தாய்

வெறும் விரல் கொண்டு

வெண்கல வில் வளைக்க

வழி வகை சொன்னாய்

விண்ணுலகில் உண்டு சொர்க்கம்

மண்ணுலகில் நட்பில்

அது நடைமுறைப்படும்

இடைவெளி இல்லாத,

ரகசியம் கொள்ளாத

நட்பிற்காய் ஜீவனை வார்ப்பதின் மேலான அன்பு ஏதுமில்லை

என்பது வேதம்.

நீ அதன் சாரம்

நம்மில் வரலாகாது தூரம்

மரணம்காதும்

நாம் என்பது ஓர் வரம்.

– நனைகின்றது நதியின் கரை அரண் ஜோனத்துக்காய்

Leave a Reply