நம் சந்தியாக் காலங்கள்

நீ காற்று கார் மேகம்
வளைந்து பரவும் மின்னல் காடு
சேதமுற்ற என் செம்மண் தரைகளில்
மறைந்திருக்கும் மண்வாசனை
பூக்களை மலரச் செய்யும்
சிறு தீண்டல் செய்தால் என்ன?

நான் காற்று கார் மேகம்
வளைந்து பரவும் மின்னல் காடு.
நொடி நேர உறவாடலில் வெந்து மாயும்
உன் எல்லைக் கோடு
வானோடு என் இல்.

வாசமுற்ற உன் வாள் முனைகளில்
விழுந்து அழியும் மழைக்கோடாய்
நிறம் நீங்கி நிலை மாறி
நின்னோடு நீயாகி
நிற்பதென்றால் சொல்.
இல்லெங்கில்
சிற்றளவும் தழுவாமல்
செல்லும்
என் இளம் சிறகுகளில்
சிந்தாமல் தளும்பியே கிடக்கும்
நம் சந்தியாக் காலங்கள்.

– காதலாம் பைங்கிளி வாணி விசாகனுக்காய் எழுதியது

Leave a Reply