நனைகின்றது நதியின் கரை 20(7)

அன்று சன்டே. தன் பைக்கில் ப்ரபாத்தின் வீட்டிற்குத்தான் வந்து கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவன் அந்த காட்சியைப் பார்த்தான். ப்ரபாத் வீட்டிற்கு பக்கத்து வீட்டு ட்ரைவர் தெருவில் நின்றபடி அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் கையிலிருந்த பேக்கை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்.

அந்த வேலைக்கார பெண் அந்த பேக்கை விடாமல் பிடித்து இழுக்க அந்தப் பெண்ணுக்கு உதவியாக ஒரு ஒல்லி குட்டை இளைஞன் அவள் கூட்டாளியாக இருக்கும்… அந்த ட்ரவைரை அடி வெளுத்துக் கொண்டு இருந்தான்.

ப்ரவிருக்கு அந்த ட்ரைவர் பற்றி நன்றாக தெரியும். மிகவும் நேர்மையான பொறுப்பான மனிதர். அந்த வேலைக்காரப் பெண் இரு முறை இவன் கண்ணில் இதற்கு முன் பட்டிருக்கிறாள். இவனுக்கு அவள் மீது நல்ல ஒபினியன் இல்லை. அவளிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று தோன்றும்.

ஆக இப்பொழுது வேகமாக சென்று அந்த ட்ரைவரை அடித்துக் கொண்டிருந்த இளைஞனை பின்னிருந்து பிடித்து இழுத்து ஓர் அறை வைத்த பின்தான் முகத்தைப் பார்த்தான் அது அவனது சரநிதா.

ஜர்னலிஸ்டான அவள் அலையும் தன் ப்ரஃபெஷனுக்கு சூட்டாகும் என நினைத்து அப்பொழுதுதான் வெட்டியிருந்த பாய் கட்டும், செக்ட் ஷர்ட்டும், ஜீனும் கேன்வாஷும்….பின்னிருந்து இவன் பார்த்திருந்த சூழ்நிலையும்…இதற்கு காரணமாகி இருக்க

பாறை என இறுகி இருந்த இவனது கை அவள் பட்டு கன்னத்தில் இறங்கி இருந்த அடையாளம்…அன்னிச்சையாய் அவள் கண்ணில் துளிர்த்திருந்த நீர்….வலியால் மட்டுமல்ல அடி வாங்கிவிட்ட அவமனத்தில்….அவள் தவிப்பது என எல்லாம் இவனுக்கு இன்ஸ்டென்டாய் புரிந்தாலும்…. தப்பி ஓடத் தொடங்கி இருந்த கல்ப்ரிட்டினை பிடிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் எதுவும் விளக்கம் சொல்ல முடியவில்லை.

அதற்குள் அந்த வேலைக்காரப் பெண் அந்த பேக்கைவிட்டுவிட்டு ஓடத் தொடங்கி இருந்தாள். அவளுக்கு ப்ரவிர் யாரென தெரியுமே… அவளைப் பிடித்து…..ஸ்டேஷனுக்கு அவள் தான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டிலிருந்து திருடிக்கொண்டு வந்த தகவலை  சொல்லிவிட்டு சரநிதாவைத் தேடினால் அவள் அங்கு இல்லை…

இவனுக்கு சரநிதாவின் செயல் புரிகிறதுதான். பொது இடத்தில் ஒரு பெண்ணின் உடமையை ஒரு ஆண்  கட்டாயமாய் பிடித்து இழுக்கும் பட்சத்தில் அவள் அந்த பெண்ணுக்கு உதவிக்கு சென்றிருப்பாளாய் இருக்கும்…

ஆனால் இவன் செயலைத்தான் அவள் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இவன் போலீஸ் ஆஃபீசர் என்பது கூட அவளுக்கு தெரியாது….காஷுவல்வேரில் வந்து கன்னத்தில் அடித்தால் என்ன நினைப்பாளாம் அவள்?

அவள் வீடு தெரியும் இவனுக்கு…..அவள் வேலை செய்யும் அலுவலகமும் தான். அதுவரை அவளிடம் பேச அவன் முயன்றது இல்லை…..வேலைக்கு போய் செட்டிலான பின் அவளை அப்ரோச் செய்வது தான் நியாயமாக பட்டிருந்தது அது வரை.

இப்பொழுதோ இவன் செயலை விளக்கியாக வேண்டும் என்று தோன்றிவிட்டது. போலீஸ் ஆஃபீசராக வீட்டிற்கோ அவளது ஆஃபீஸிற்கோ அவளை தேடிச் செல்வது அப்படி ஒன்றும் நல்ல இமேஜை அவளுக்கு உருவாக்காது என்ற நினைவில் முடிந்த வரை அவளை வெளியிடத்தில் வைத்து சந்திக்க முயன்றான் தான்….

ட்ரெய்னிங்கில் இருப்பதால் அகாடமியைவிட்டு வெளிச்செல்லும் வாய்ப்பு இவனுக்கு வீக் என்டில் மட்டும் தான் உண்டு..அப்பொழுது எத்தனை முறை அவளை அவன் பார்த்துவிட முடியும்…?

அப்படி அவன் அவளைப் பார்க்க நேர்ந்த ஓரிரு சமயங்களிலும் அனல் பறக்கும் ஒரு ஆசிட் பார்வையுடன் கூட வரும் நட்புக் கூட்டத்துடன் விலகிப் போய்விடுவாள். பேசும் அளவிற்கு வாய்ப்பு கொடுத்ததே இல்லை.

இந்த சமயத்தில் தான் ப்ரபாத் சங்கல்யா திருமணம்.

அடுத்து அவனுக்கு போஸ்டிங் சென்னையில் அரண் க்ரூப்ஸ் பாம்ப்ளாஸ்ட் கேஸ்….சரநிதா ஸ்போர்ட்ஸ் நியூஸ் கவரேஜிற்காக அப்ராட் போய் விட்டாள்.

“அண்ணி எதோ நீங்க என்னைப் பத்தி சொன்னத வச்சுதான் இன்னைக்கு என்னைப் பார்த்த பிறகும் டின்னர்ல இருந்து எழுந்து ஓடலை அவ….இப்பவாவது சொல்லுங்க உங்க ரெக்கமென்டேஷன் இல்லாம என் கேஸ் பாஸாகுமா என்ன?….ஆனால் அப்ரோச் டெக்னிக்லாம் எங்க அண்ணாட்ட கேட்க வேண்டி இருக்குது…”

சிரித்தாள் சங்கல்யா….

“நீங்கல்லாம் ப்ளான் போட்டா போட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்….நான் ஒரு உருப்படியான ஐடியா சொல்றேன்…வொர்க் அவ்ட் ஆகுற ஒரே ஐடியா…”

“என்னது அண்ணி…?”

“ஒழுங்கா போய் அவங்க அம்மாட்ட பொண்ணு கேளுங்க….அவ அம்மா சொன்னா கேட்பா…”

“நான் கல்யாணத்துக்கு வழி கேட்கேன்…நீங்க கம்பால அடிவாங்க வழி செய்றாப்ல தெரியுது…”

“ஏன்?”

“இது அவள கம்பல் பண்ற மாதிரி ஆகாதா?”

“உங்க அண்ணனுக்கு தம்பியா இருந்துட்டு கேட்க்ற கேள்வியப் பாருங்க…..”

ஒரு நொடி தன் அண்ணியை அதிசயமாக பார்த்தான்.

“சொல்றத சொல்லிட்டேன்…அடுத்து உங்க இஷ்டம்” முடித்தாள் சங்கல்யா.

சங்கல்யாவின் குணத்திற்கு பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் பேசச் சொல்வதென்றால்….நிச்சயம் சரநிக்கு இந்த திருமணத்தில்  சம்மதம் இருக்கிறது என்று தானே அர்த்தம். சரநி சங்கல்யாவோட ஃப்ரெண்ட்….ஆக விஷயம் உறுதியாக தெரிந்திருக்கும்….

“இவன் தேர்ற கேஸா தெரியலை சிக்‌ஸர்…..நாமதான் பார்த்து எதாவது செய்யனும்…சித்திட்ட சொல்லி நாம போய் சரநி வீட்ல பேசலாம்” ப்ரபாத் தான்.

‘உங்க அண்ணி குணத்துக்கு அடி மனதில் என்னை கல்யாணம் செய்றதுல சம்மதம் இல்லைனா நடிப்புக்குன்னு கூட அவளால ஃபியான்சின்னு ஒத்துக்க முடியாது…..அதான் அவள் ஃபியான்சின்னு ஒத்துகிட்டா அதுக்கப்புறம் இந்த கல்யாண கனவு னலாம்…..இல்லைனா இது கண்டிப்பா நடக்கவே போகாத விஷயம்னு ஒரு முடிவோடதான் முதல்ல அவட்ட அப்படி ஒரு ப்ரபோசல் வச்சேன்…’

ப்ராபாத் முன்பு சொன்னது இப்போது இவனுக்கு ஞாபகம் வருகிறது. பொண்ணோட மனதை பத்தி உறுதியாய் தெரியாமல் ஆசையை வளர்க்க கூடாது என்பவன் இப்பொழுது இப்படி சொல்வது என்றால்….

அண்ணனை திரும்பி ஒரு லுக் விட்டான் ப்ரவிர்.

“ நாங்கல்லாம் இப்படித்தான் இழுத்தடிச்சமா….பொண்ண பார்த்த அடுத்த அரை மணி நேரத்துல அவ என் ஃபியான்சிடா…”

‘ஏய் ஃபைவ் ஃபீட் டெய்ரி மில்க் உன்னால என் மானம் போகுது’ மனதிற்குள் சரநிதாவிடம் குற்றம் சொன்னான் போலீஸ்காரன்.

“உனக்கு சரநியா வந்து ப்ரபோஸ் செய்தாதான் போல…” சீண்டினான் அண்ணன்.

‘சாக்லேட் நீ இன்னைக்கு சட்னி.’ ஒரு முடிவோடு கிளம்பினான் காதலன்.

டந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சரநி “எனக்கு இன்னுமே இந்த ஒரு விஷயம் ரொம்ப…. இல்ல…. கொஞ்சம் இன்செக்யூர்டா இருக்குது ப்ரவிர்…அவங்கல்லாம் செலிப்ரெடீஸ்…அதோட ரிச் பிபுள்….உண்மையில் நீங்க அடிச்சதுக்கெல்லாம் நான் ஓடி ஒளியலை…அந்த இன்சிடென்ட் நடந்த அன்னைக்கே எனக்கு எல்லா விஷயமும் புரிஞ்சிட்டுது….அந்த பொண்ணு கல்ப்ரிட்..நீங்க போலிஸ்…என்னை தப்பா புரிஞ்சிட்டீங்கன்னு…

பட் என் பயம் உங்க பேக்ரவ்ண்ட்…உண்மையில் எனக்கு அந்த மீட்டுக்கு பிறகு உங்க மேல ஒரு அட்ராக்க்ஷன்…உங்களைப் பத்தி என்னால முடிஞ்ச வரை விசாரிச்சேன்….அப்பதான் நீங்க ப்ரபாத் அத்தானோட தம்பினு தெரிய வந்துச்சுது…நான் சாதாரண மிடில்க்ளாஸ் கேர்ள்….” அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திவிட்டாள் அவள்..

ஆழ்ந்து அவளைப் பார்த்தான்….

”அண்ணி பேக்ரவ்ண்ட் கொஞ்சமாவது உனக்கு தெரிஞ்சிருக்கும்தானே…..அண்ணாவையும் அண்ணியையும் சேர்த்து வச்சுருப்பது அன்பு…….அவங்களோட பணம் இல்ல….பணம் இருக்றவங்கல்லாம் ரிச் கிடையாது….அன்பு இருக்றவங்க…அதுவும் நதி மாதிரி பொங்கி ஓடுற அன்பு இருக்றவங்கதான் ரிச்…..பணம் இல்லாதவனுக்கு பணம் குடுத்தா அவன் வாழ்க்கை செழிக்கும்னு எந்த கேரண்டியும் இல்லை….

ஆனா இந்த அன்புங்குற ஜீவ நதி இருக்கே அது ஓடுற கரைல பாலை மண்ண அள்ளிப் போட்டா கூட நனைக்கும்…..என்ரிச் செய்யும்…செழிக்க வைக்கும்… அந்த வகையில நீயும் நானும் ரிச்சா இருக்றோம்ன்றது என் நம்பிக்கை… தவிர அண்ணா தான் க்ரிகெட்டர்…..நான் ஒரு போலீஸ் ஆஃபீசர்…..உன்னை மாதிரி பண வகையில் மிடில் க்ளாஸ்தான்…”

மலர்ந்திருந்தது சரநிதாவின் முகம்.

அடுத்த பக்கம்