நனைகின்றது நதியின் கரை 20(6)

ஃபைனல்ஸ் முடிந்த அன்று இரவு வின்னிங் பார்டி….. அது முடியவும் சரநிதாவை அவளது இடத்தில் ட்ராப் செய்ய சென்றது ப்ரவிர்.

காரில் இருவரும்….

“அதெப்படிங்க  சாக்லேட் கொடுத்து சாஃப்ட்டா ப்ரொபோஸ் செய்துட்டு….அதுக்கு நோ சொன்னப்ப நொந்து போய் நின்னாலும் ஒரு சின்ன எபெர்ட் கூட எதிரா எடுக்காம பரிதாபம பார்த்துகிட்டே போனவங்க…மறுநாள் இப்படி அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவா வந்து ப்ரபோஸ் செய்தீங்கன்னு கேட்பன்னு பார்த்தா….” சரநியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ப்ரவிர்.

“ம்..காரணம் கேட்டு  அதுக்கு பதில் சொல்லின்னு உங்கட்ட தனியா மாட்டிக்க வேண்டாம்னு தான்….சரி இவ்ளவு ஆசைப் படுறீங்கல்ல சொல்லிடுங்க…”

“தனியா மாட்னா என்னவாம்? அப்படி நான் என்ன செய்துடுவனாம்?”

“ம்… முதல் மீட்டிங்கிலே பல்லை உடச்சு கைல மட்டும் தான் குடுக்கலை….இதில் உங்கள நம்பி நான் எப்படி தனியா இருக்க…. அதனால இப்படித்தான்…. சரி இப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க…”

“அன்னைக்கு சாக்லெட்டை டஸ்ட் பின்ல போட்டுட்டு டின்னர் முடிஞ்சு நீ கிளம்புனதும்……” சொல்லத் தொடங்கினான் ப்ரவிர்.

ரநிதா விடைபெற்று கிளம்பியபின்,  பெரியவர்கள் அவரவர் அறைக்குச் சென்ற பின், ஹயாவை புஷ்பம் தங்களுடன் கொண்டு சென்றுவிட்டதால் தங்கள் அறைகளைப் பார்த்து திரும்பிய இளையவர் கூட்டம் முதலில் எதிர்பட்ட அரண் அறையில் மையம் கொண்டது.

இப்பொழுது அரணும் ஜோனத்துமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க,  அரண் கையை பற்றியபடி அவன் தோளில் சாய்ந்து அவர்கள் அரட்டையைக் கேட்டுக் கொண்டிருந்த சுகாவை கவனித்த ஜோனத் தன் ஷோல்டர் பர்டனை பார்வையால் தேட சற்று தொலைவில் தன் தம்பியிடம் அவள் பேசியபடி நிற்பது கண்ணில் பட்டது. ப்ரவிர் வழக்கம் போல் வாயாடிக் கொண்டிருந்தாலும் அவன் கண்களில் சற்று சோர்வோ?

“வா மாப்ள பாவம் பையன் கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்கட்டும்னு பார்த்தா இந்த ப்ரவிக்கும் நம்ம போல ஷோல்டர் பெய்ன் தேவை படுது போல…” அரணிடம் சொல்லியபடி ஜோனத் தன் தம்பி  புறம் திரும்ப

“ஷோல்டர் பெய்னா…ஹயாவ சொல்றியா….? “ என ஆரம்பித்த சுகா…..”ஏய் பால்பாக்கெட் எனக்கு நீ விஷயத்த சொல்லவே இல்லை…இந்த கண்டிஷன்ல லியாவ ஏன் ட்ரவல் செய்ய விட்ட….?” என கோபமாய் ஆரம்பித்து…

” ஐயோ…இந்த நிலமையிலா அவள இப்படி கிட்நாப்லாம் செய்து….”என பதற தொடங்கினாள். ஹயவைப் போல் ப்ரபாத்தின் தோளைக் கடிக்க குழந்தை வரப் போகிறது போலும் என புரிந்துவிட்டாள் அவள்.

“அப்படில்லாம் எதுவும் இல்ல…அதுக்குல்லாம் டைம் இருக்குது…..இது நான் ரெஸ்பான்ஸிபிலிட்டிய சொன்னேன் “ சுகா புரிந்த விதம் உணர்ந்து விளக்கம் சொல்லிய ப்ரபாத்திற்கு இப்பொழுதுதான் மனைவியின் ஹயா ட்யூஷன் ஞாபகம் வர, அவனது ஷோல்டர் பெய்ன்னுக்கு இன்னொரு அர்த்தம் கிடைக்க..

அப்பொழுதுதான் இவர்கள் கலந்துரையாடலை கவனிக்க தொடங்கி இருந்த சங்கல்யாவுக்கு கணவனின் மனம் போகும் திசை புரிய…. முகம் சிவப்பதை தடுக்க அவசரமாக அருகில் வந்து அவன் கையையே அழுத்திப் பிடித்துக் கொண்டாள் அவள். “ப்ளீஸ் எதுவும் வெளிய சொல்லி வச்சுறாதீங்க…” தன்னவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒரு கெஞ்சல்

“டேய் அண்ணா….கண்டிப்பா நான் உன்ட்டதான் டியூஷன் எடுத்தே ஆகனும்” என்றபடி வந்தான் அதைப் பார்த்திருந்த ப்ரவிர். மனம் திறந்து பேசிவிடுவது என முடிவுக்கு வந்திருந்தான் அவனும்.

“நான் காலேஜ் டைம்ல ஒரு கேம்ப்காக ஊட்டி போனப்பதான் அண்ணிய முதல் தடவை பார்த்தேன்…அப்ப அவங்களும் அவங்க ஃப்ரெண்ட் சரநியும் ஒருத்தனைப் போட்டு அடி பின்னிட்டு இருந்தாங்க..ஏதோ பொண்ணுட்ட வம்பு செய்தானாம்…அப்ப இருந்து அடுத்து எப்ப பார்க்கிறப்பவும்….முந்தின இன்சிடென்டே பிரவாயில்லைனு தான் தோணும்….அந்த அளவுக்கு இருக்கும் அண்ணி சரநி கூட்டணி…..

அதோட ரெண்டு பேரும் ஜென்ட்ஸைப் பத்தி பேசிப்பாங்க பாரு….நான் என்ன லூசா….எப்படி இந்த சரநிய லவ் பண்றேன்…. சரநி என்னைக்கு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி நமக்கு எப்ப கல்யாணம் நடக்க…அப்படியே நடந்தாலும் டெய்லி ஹாஸ்பிட்டல்லதான் குடும்பம் நடத்த வேண்டி இருக்கும்னு தோணிகிட்டே இருக்கும்….

அப்பதான் திடீர்னு ஒருநாள் ஹாஸ்பிட்டல்ல வச்சு உனக்கு கல்யாணம்னு நியூஸ்…ஓடி வந்தா எனக்கு மயக்கமே வந்துட்டு பொண்ணு இந்த கேங் லீடர்….அப்படி இருந்த பொண்ண….இப்படி ஆட்டு குட்டி மாதிரி ஆட்டிவைக்கியே …நானும் பாவமில்லையா…..எனக்கும் இந்த டெக்னிக்க சொல்லித் தாயேன்…. மிஷன் சரநி சக்சஸ் ஆக டிப்ஸ் ப்ளீஸ்” சொல்லிய ப்ரவிரை முறைக்க முயன்றாள் சங்கல்யா.

ஊட்டி கேம்ப் என்றால் இரண்டு வருஷங்களாவது சரநிதாவை ப்ரவிர் ஃபாலோப் பண்ணி இருக்கனும்…. மனதின் அறைகளில் வரும் புரிதலும் கூடவே பிறக்கும் சிரிப்பும்…கன்ட்ரோல் செய்து கொண்டாள். ப்ரவிர் சரநிதாவுக்கு பெர்ஃபெக்ட் பேர் என்றுதான் இவளுக்கு தோன்றுகிறது.

“அண்ணி நான் அப்பவே உங்கட்ட சரண்டர்…ரிமம்பர்…உங்க கால்ல விழுந்து என்ன ப்ளெசிங் வாங்கினேன்….உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும் எனக்குன்னு சொன்னீங்க…இப்ப பேச்சு மாறக் கூடாது…சரநி விஷயத்துல நீங்க எனக்கு சப்போர்ட் செய்யனும்….நோ முறச்சிங் பிஸினஸ்”

“அதான் உங்க அண்ணாட்ட ஆட்டுகுட்டியா ஆட்டி வைக்க வழி கேட்டீங்களே…பின்ன என் சப்போர்ட் எதுக்கு….?”

“கோபமா அண்ணி..? நோ…நோ….நீங்க தான் மிஷன் சரநில மோஸ்ட் இம்பார்ட்டன்ட் பவர்..அப்றம்தான் அத்தனை பேரும்…இன்க்லூடிங் அண்ணா…விஷயத்தை சொல்றேன் உங்களுக்கே புரியும்….” சொல்ல தொடங்கினான் அவன்…

ரெட்க்ராஸ் கேம்ப்பிற்காக ஊட்டி வந்த போதுதான் அவன் முதலில் சரிநிதாவைப் பார்த்தது. மனதில் ஒரு ஈடுபாடு முதல் பார்வையிலேயே வந்தாலும் காலேஜ் லைஃப் ஃபேன்டசி என அவன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் முயன்றான்.

ஆனால் அதன் பின் ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் சங்கல்யாவும் சரநிதாவும் அவன் பார்வையில் பட….ஐபிஎஸ் ஆஃபீஸராக அவன் வேலை செய்ய தமிழகத்தை தேர்ந்தெடுத்தான்.

அப்பொழுது அவன் ட்ரெயினிங்கில் இருந்தான்.

அடுத்த பக்கம்