நனைகின்றது நதியின் கரை 20(5)

தியம் மேட்ச் தொடங்கியது.

பிட்ச் முதலில் பேட்டிங்கிற்கு ஃபேவராக இருந்து பின் சற்று பவ்லிங் பிட்சாக மாறும் அதோடு டே அண்ட் நைட் மேட்ச் என்பதால் செகண்ட் இன்னிங்ஸ் ஃப்லட்லைட்ஸில் ச்சேஸ் செய்ய வேண்டி இருக்கும். ஆக டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு என்ற தகவல் அத்தனை பேர் மத்தியிலும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

இந்த ஒரு நம்பிக்கை சூழலில் டாஸ் வென்று முதலில் சவ்த் ஆஃப்ரிக்கா பேட்டிங்.

ஏதோ ஒரு ரெஸ்ட்லெஸ்நெஸ் அத்தனை மென் இன் ப்ளூ ரசிகர்களிடமும்.

சவ்த் ஆஃப்ரிக்கா 359 ரன்ஸ். அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியது.

அரண் அண்ட் ப்ரபாத்  களமிறங்கினர்.

என்னதான் பிட்ச் ஃப்ளட்லைட்ஸ் என இருந்தாலும் இன்டியன்ஸ் ஆர் பெட்டர் ச்சேஸர்ஸ் என நிரூபித்துக் கொண்டிருந்தது அவர்கள் கூட்டணி.

இப்பொழுது ஃஸ்ட்ரைக்கிங் என்டில் அரண். பால் அவனை நோக்கி எழும்ப, அஃபன்ஸிவாக இவன் ஒரு காலடி ஆஃப்சைடில் விலகி, ஆர்ம் லென்த்தில் பந்தை பேட்டால் பலமாய் எதிர்கொண்டான்…பெர்ஃபெக்ட் எலிவேஷனில் சூப்பர் சிகஸராய் முடிவடைந்தது அது. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அரங்கமே அதிர எழுந்து நின்று குதித்துக் கொண்டிருந்தவர்களில் சரநிதாவும் ஒரு நபர்.

அடுத்த பால்….க்ரீஸை விட்டு அரண்  ஒரு அடி முன்வந்து, பேட்டின் மத்தியில் பாலை எதிர்கொண்டு, ஓங்கி அடித்ததில்…. அந்த பிங்க் நிற பால் கதறிக் கொண்டு போய் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ப்ளாக்கின் ரூஃபில் விழுந்தது….. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..

மூன்றாம் பால்…”எ சிம்பிள் ஃப்ளிக் ஆஃப் ரிஸ்ட்…..மார்வலஸ் சிக்‌ஸ்…” கமென்டேட்டர் ஆச்சர்யமாய் ஆனந்தமாய் அறிவித்தார்…..ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்… அது மூன்றாவது சிக்ஸர்.

நின்ற இடத்தில் சிறிதாய் நடந்து பேட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்து தன்னை வார்ம் அப் செய்து கொண்டான் அரண். பௌல் செய்யும் முன் பந்தை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தார் பௌலர்….

அடுத்த பால்…. அது அடி வாங்கியதும் ”தொடர்ச்சியாய் நான்காவது முறை…….” என்றார் கமன்டேட்டர் ஆங்கிலத்தில்……அடுத்து அவர் பேசும் சத்தம் புரியவில்லை…அத்தனை கூச்சல் அரங்கத்தில்……… ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அந்த ஓவரின் ஐந்தாம் பால்….ஒரு ஃபுல் டாஸ்….பேட்டின் முனைக்கு அருகில் அதை எதிர் கொண்டு இலகுவாய் அடித்தான் அரண்…..அப்படியே போய் பவ்ண்ட்ரி லைனை தாண்டி விழுந்தது பந்து…..”ஐந்தாவது சிக்‌ஸர்….இப்பொழுது ஆறு தொடர் சிக்‌ஸர் அடிக்கும் லைசன்ஸ் இவருக்கு கிடைத்திருக்கிறது….” கமன்டேட்டர் சொல்வதை யாரும் கவனிக்கவில்லை…அதிர்ந்து கொண்டிருந்தது அரங்கம்……ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அந்த ஓவரின் கடைசி பால்……”ஆறு சிக்ஸர் அடிப்பாரா அரண்?” கமன்டேட்டர் கேட்டுக் கொண்டிருக்க வானத்தை ஒரு முறை பார்த்துவிட்டு ஓடி வரத் தொடங்கினார் பௌலர்…

ப்ரவிர் பார்வையை சுழற்றிக் கொண்டு கூட்டத்திற்குள் குறிப்பிட்ட இடம் நோக்கி சென்றான்.

எதிர்பட்ட பாலை…வலது காலை மட்டுமாய் முழங்காலிட்டு….பேட் முனையால் மான்ஸ்ட்டரஸ் ஹிட்….பார்வையாளர்களுக்கு இடையில் போய் தரை தொட்டது அது….. தொடர்ச்சியாய் 6 சிக்‌ஸர்ஸ்….அதிரும் அரங்கமும்…ஆர்பாட்டமும்…வெடிச் சத்தங்களும்….வானவேடிக்கைகளும்…..

ப்ரவிர் இப்பொழுது சரநிதாவை அடைந்திருந்தான்….சரநிதா எப்போது தன் சேரின் மேல் ஏறினாள் என அவளுக்கே தெரியவில்லை….மேலேறி முழு உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தாள். டார்க் ஆலிவ் க்ரீன் நிற டெனிம் த்ரீ ஃபோர்த்ம் வைட் கேஷுவல் ஷேர்ட்டுமாய்…தோள் விட்டு சற்று இறங்கி இருந்த முடியை ஃப்ரீஹேராய் விட்டு குதித்துக் கொண்டிருப்பவள் அருகில் போய் நின்று கொண்டான் ப்ரவிர். அரங்கத்தில் ஓரளவு அமைதி வந்த பிறகு ச்சேரிலிருந்து இறங்கினாள் சரநி.

“ஹேய் டெய்ரி மில்க்…” ப்ரவிர் கூப்பிட்டான்.

“என்ன சார் இந்த பக்கம்?” இவனைப் பார்க்காமலே அவள்….

“என் ஃபியான்சிய பார்க்க வந்தேன்….”

ஒரு நொடி இவன் மீது பார்வை கொண்டு வந்த அவள் கன்னத்தில் ஒரு ப்ளஷ்…அதை சட்டை செய்யாதவள் போல் மீண்டுமாய் பார்வையை ரீப்ளே ஓடிக் கொண்டிருந்த மெகா சைஸ் டீவிக்கு மாற்றிக் கொண்டாள்.

“கன்னா பின்னானு பார்த்தீங்க கண்ண நோண்டிடுவேன்.”

“அதான உனக்கு வேறென்ன வரும்? ஐ லவ் யூ சொல்ல வந்தவன்ட்ட பேசுற பேச்சா இது?”

“ஐ லவ் யூ வா…ஓகே நானே ஃபர்ஸ்ட் சொல்லிடுறேன்…. ஐ லவ் யூ  ….சொல்லிட்டேன் போதுமா?”

அதற்குள் அவள் டி வி யில் காண்பிக்கப்பட்டாள். இருந்த உற்சாகத்தில் மீண்டுமாய் ச்சேரின் மீது ஏறி “ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்……” என்ற படி குதித்தவள் காதில்

“அம்மா இப்ப டிவில வர்றாளே அதுதான் சரநி….அவ பேசுனதுலாம் கேட்டுதுல்ல….. கண்ண நோன்டுவேன்னு சொன்னாலும் ஐ லவ் யூவும் சொல்லிட்டாளே…சோ நீங்க அவ அம்மாட்ட போய் பேசலாம்.” அவன் சொல்லிக் கொண்டிருப்பது விழுந்தது.

தட தவென கீழிறங்கி….ஷர்ட் ஒழுங்காய் இருக்கிறதா என இரு பக்கமும் இழுத்து விட்டு..தலை முடியை அவசரமாய் செட் செய்து… பட படவென எகிறியது அவள் இதயம்.

“இந்தா கொடுக்றேன் நீங்களே அவட்ட பேசிடுங்க…” காதிலிருந்த ப்ளூடூத்தை எடுத்து எதிர்பாராமல் நின்றிருந்தவள் அனுமதியின்றி அவள் காதில் மாட்டினான்.

“டேய் டேய் ஏன்டா அவள எம்பஅரஸ் செய்ற…..இந்த நேரத்தில் “ அவர் சொல்லிக் கொண்டிருப்பது இவளுக்கு கேட்க…இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள் பெண். போகுதே மானம் சேட்டிலைட் ஏறி போகுதே…

அதை டி வி யில் அவரும் தானே பார்க்கிறார்…”இதுக்கெல்லம் ஃபீல் பண்ணாத சரநிமா…நாமலாம் ஒரே டீம்… நீ இப்படியே இரு நமக்கு நல்லா செட் ஆகும்… நீ அவன ஹேண்டில் பண்ற ஸ்டைலுக்கு நான் இப்பவே ஃபேன்…..நெக்‌ஸ்ட் வீக் உங்க வீட்ல மீட் பண்ணுவோம்டா….நீ இப்ப மேட்ச்சை என்ஜாய் பண்ணு….”

பேசி முடித்த பின்னும், முகம் சிவந்து சற்று உடல் வியர்த்து நின்றவள் முகம் பார்த்து கண்சிமிட்டிவிட்டுப் போனான் ப்ரவிர்.

தொடர்ந்த மேட்சில் அத்தனை உணர்வும் போய் படு டென்ஷன் மட்டுமே அனைவருக்கும்….

லாஸ்ட் ஓவர்….. 4 பால் முடிந்திருக்கிறது….. விக்கெட் இழப்பு 6…..ஆனால் தேவைப்படும் ரன்ஸ் 4.

ஸ்ட்ரைகிங் என்டில் அரண். பாலை ஃபுல் டாஸாக எதிர் கொண்டு….ஓங்கி அடித்த  அடியில் அது பவ்ண்ட்ரி லைனை கண்டிப்பாக கடக்கும் என எதிர் பார்த்தால் அது  மிட் ஆஃப்  ஃபீல்டரின் அபரித முயற்சியில் பாதியில் தடுத்து நிறுத்தப் பட்டது.

அதே நேரம் நான் ஸ்ட்ரைகிங் என்டிலிருந்த ஹர்ஷித் ரன்னிற்காக ஓடி வரத் தொடங்கி மீண்டும் குழப்பத்தில் திரும்பி தன் க்ரீஸிற்கே செல்ல…. ஒரு ரன் கூட இன்றி கழிந்தது அந்த பால்…

ஃபைனல் பால்….தேவை 4 ரன்ஸ்….ஆஃப் சைடில் பாலை எதிர் பார்த்து அரண்…. பேட்டால் பிட்ச்சை தொட்டபடி பேட்டிங்க் பொசிஷனில் அவன். பால் பௌலரின் கையிலிருந்து விடுபடும் போது தான் தெரிகிறது அது அவனை ஆன் சைடில் கடந்து, தடுக்கபடாமல் விட்டால் ஆன் சைட் ஸ்டம்பை தன்னோடு கொண்டு போகும் என… வெல் பௌல்ட்….

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……………………..என்றது கூட்டம்

சட்டென அந்த நொடியில் ரைட் ஹண்ட் பொஷிஷனிலிருந்து  லெஃப்டிற்கு திரும்பி இடது காலை மட்டும் முழங்காலிட்டு எதிரில் வந்த பாலை ஓங்கி ஒரு ராட்ச்சச அடி…. சிக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்………. நடந்தது ஒரு நொடி புரியாத மக்கள் அலற தொடங்கிய போது…..அரணும் சுஜித்தும் ஸ்டம்புகளை உருவிக் கொண்டு உள்நோக்கி ஓடத் தொடங்கியிருந்தனர்.

அடுத்தென்ன அத்தனை ஆர்பாட்டம் கொண்டாட்டம் கோலாகலம்…வேர்ல்ட் கப் இந்தியா வந்தது மறுபடியுமாய்.

அடுத்த பக்கம்