நனைகின்றது நதியின் கரை 20(3)

றுநாள் ஃபைனல்ஸ்.

இன்றைக்கும் டே அண்ட் நட் மேட்ச் தான். மேட்ச் தொடங்க இன்னும் நேரமிருக்கிறது. காலை ப்ரேக் ஃபாஸ்ட்டை முடித்த சரநிதா தன் வேலை விஷயமாக தங்கி இருந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் எதிரில் பார்க்கிங்கில் தன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் ப்ரவிர். கையில் ரெட் ரோஸஸ் பன்ச்.

‘ஐயோ இந்த கல்குதிரை எங்க இங்க…?’ இவள் யோசித்த நொடி சட்டென இன்னொரு கார் அங்கு வந்து நிற்கிறது.

ஆறு தடிமாடுகள் காரின் அத்தனை பக்கத்திலிருந்தும் இறங்கி அவனைச் சூழ….அவர்களுடன் நடக்க தொடங்குகிறான் அவன்.

ஏன்? அவன் முகபாவத்தைப் பார்க்கிறாள். இது அவனது இயல்பான முக பாவம் இல்லை.

என்ன நடக்கிறது இங்கே? என்னடா செய்றீங்க அவன?

இயல்பாய் செல்வது போல் சற்று இடைவெளியுடன் அவர்களை பின் தொடர்ந்தாள்.

“அவன் மேல கைய வச்சா அவன் உன்னை சும்மா விட்டுடுவானாமா?” தடிமாடு ஒன்றின் கேள்வி இவளுக்கு கேட்கிறது. தமனோட வேலையா?

அருகிலிருந்த அந்த உயர்ந்த கட்டிடத்திற்குள் அவனோடு நுழைகிறது அந்த கும்பல்…ஏதோ ஒரு ஆங்கிளில் க்ளிட் ஆகிறது அந்த ஆறு மாடுகளின் ஒன்றின் கையிலிருந்த பிஸ்டல்….

கட கடவென சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள் சரநிதா.

அந்த பில்டிங்கில் நுழைந்து லிஃப்டில் ஏறியது அந்த கும்பல்,,,,9த் ஃப்ளோரை செலக்ட் செய்ததற்கான அறிவிப்பு வெளியே சிவப்பாய் ஒளிர….அதுவரை அந்த கும்பலை பின் தொடர்ந்தவள் மீண்டுமாக வெளியே வந்து

அந்த உயர்ந்த பில்டிங்கின் பின் புறம் எமெர்ஜென்சி எக்சிட் போல் இருக்கும் ஒவ்வொரு ஃப்ளோரையும் இணைக்கும் இரும்பு ஏணியினை நோக்கி ஓடினாள்.

அதில் முழு வேகத்துடன் ஏறத் தொடங்கினாள். 7த் ஃப்ளோர்..8த்…..9த்….மனதிற்குள் எண்ணிக் கொண்டே வந்தவள்….அந்த ஃப்ளோரின் பின் கதவின் முன் போய் நின்றாள். தள்ளிப் பார்த்தாள். உள் பக்கம் பூட்டி இருந்தது. கதவின் அருகில் சற்று உயரத்தில் இருந்த ஜன்னல் தெரிந்தது. வழக்கம் போல் கம்பிகள் இல்லாத ஜன்னல். அதன் கதவை திறந்தால் இவள் நுழைய முடியும்.

கதவின் மேலிருந்த ஷன்ஷேடை தொவ்விப் பிடித்து, கதவின் கைப்பிடியில் கால் வைத்து இப்பொழுது அந்த ஜன்னலின் கீழ் புற சுவரை பிடித்து……புல் அப் செய்து அந்த ஜன்னலில் ஏறி அதன் கதவை திறந்து உள்ளே குதித்தால்…….

வாட் இஸ் திஸ்?

அவள் விழுந்தது  ஜம் ஜம் என துள்ளும் ஒரு மெத்தையில்…. எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த மெத்தையிலிருந்து உள் அறை நோக்கி பாதையாய் பரப்பப்பட்டிருந்த ரோஸ் பெட்டல்ஸ்….

கவுத்திட்டியா கல்குதிர…? இளைக்கும் மூச்சுடன்… இவள் பல்ப் ஐஸால் சூழலை ஸ்கேன் செய்ய…அந்த அறையின் வாசலில் தலையை சற்றே இடப்புறமாய் சாய்த்து இவளைப் பார்த்தபடி அவன்…

புருவம் உயர்த்தி மௌனமாய் என்ன? என கேட்டான்.

“அது…வந்து ……அது கி..கிட்நாப் பண்றது தெரிஞ்சதும் எல்லோருக்கும் ஹெ..ஹெல்ப் செய்றது போல உங்களுக்கும் ஹெல்ப் செய்ய…..” காரணம் சொல்ல தொடங்கியவள் அவன் அசையாமல் பார்த்த விதத்தில் துளி கூட அதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை என புரிய நிறுத்தினாள். இன்னுமாய் இளைக்கிறது மூச்சு. இத்தனை மாடி இப்படி பறக்காத குறையாய் ஏறி வந்தால்?

“எ..என்ன நீங்க…நம்பலை….”

இல்லை என தலையசைத்தான் அவன்.

“அப்போ?” சுருக்கென கோபம் வந்தது சரநிதாவுக்கு. ‘இவனுக்காக ஓடி வந்தா என்ன சொல்றான் இந்த கல்குதிரை…’ அதேநேரம் கொட்டிக்கிடந்த ரோஜா இதழ்கள் அவள் கருத்தில் பட…..

“முதல்ல வந்து உட்காரு…” அவன் சொன்ன விதத்தில் வேறு வழியின்றி அடுத்த அறைக்கு இவள் பின் தொடர்ந்தாள்….  அது அந்த வீட்டின் வரவேற்பறை போலும்… அங்கிருந்த சோஃபாவைப் பார்த்து கை காட்டினான்.

எச்சில் விழுங்கிய படி சென்று அமர்ந்தாள். வீட்டில் யாருமில்லை எனப் புரிகிறது இவளுக்கு.

“அந்த தடிமாடெல்லாத்தையும் அனுப்பிட்டேன்….ட்ராமா முடிஞ்சுட்டே”

இவள் மனதிற்குள் கேட்ட கேள்விக்கு வார்த்தை மாறாமல் பதில் சொன்னான்.

“இப்ப இத குடி” அவன் கொடுத்ததை கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.

“குடின்னு சொன்னேன்….”

“அது….ப்ரவிர்….நான் கிளம்பனும்….”

“ஹேய் என் நேம் சொல்லி கூப்டாத…”

புரியாமல் பார்த்தாள்.

“ஒழுங்கா அத்தான்னு  கூப்டு….” சொல்லியபடி கேஷுவலாய் இவளுக்கு அடுத்து நூலளவு இடைவெளியில் அமர்ந்தான்.

“ஹான்…”நெத்தி சுருக்கி திருட்டுப் பூனை முழி முழித்தாள் இவள். அவள் இதயம் கன்னா பின்னா வேகத்தில் தாறுமாறாய் துடிக்கும் சத்தம் அவன் காதில் கேட்குமோ?

தன்னை சமனப் படுத்த அவசர அவசரமாக அவன் தந்ததைக் குடித்தாள்.

அடுத்த பக்கம்