தென்றல் தென்றல் தென்றல் (3)

“அம்மா….ம்மா….ம்மா….ப்ளீஸ்மா…..இந்த ஒரு தடவமா…இதுவரைக்கும் நான் எதாவது இப்டி கேட்டுருக்கனாமா….? பிடிக்கலனாலும் …இந்த பாலம்ம சொல்றதுக்கெல்லாம் ஆடிகிட்டுதானே இருக்கேன்…..ஒரு ஸ்கூல் டூர் எங்கள அனுப்பி இருபீங்களா?…….காலேஜ்லயும் ஒரு தடவை கூட டூர் போகாத ஒரே ஆள் நான் தான்…இத்தனைக்கும் கேர்ள்ஸ் காலேஜ்… இப்பவும் நான் என்னமா கேட்கேன்…இந்தா இருக்கிற திருநெல்வேலி போய்ட்டு வாரேன்னு தான… ”

கெஞ்சிக்கொண்டிருந்த  தேவகிருபாவின் முகத்தில் இருந்தது அடக்கபட்ட எரிச்சல்.

“நீ சொல்றது புரியுது அம்மு….ஆனால் இப்படி கல்யாணம் நிச்சயமான நேரத்துல…..” யாருக்கும் இவர்கள் பேச்சு கேட்டுவிட கூடாதே என்ற அச்சமும் தவிப்பும் அந்த அன்னையின் குரலிலும் உடல்மொழியிலும். அதோடு மகளின் சிறு ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிராசையும்

“அதான் அததான் சொல்றேன்…இத்தன வருஷமா இந்த பாலம்ம சொன்னதுக்கு ஆடுனது பத்தாதுன்னு…இப்ப அது பாத்துருக்கிற ஒரு பட்டிகாட்டு இல்லிட்ரேட்டுக்கு அடிமை சாசனம் நீட்ட வேற ஒத்துகிட்டு தான இருக்கேன்….”

அடிபட்ட வலியோடு பார்த்தார் அம்மா, தவிப்பு அவரிடம் “ நிஜமாவே மாப்பிள்ள படிக்காதவரா அம்மு…? உனக்கு தெரியுமா..? அப்பா….நீ பிறந்தப்பவே உனக்கு டாக்டர் மாப்ள பார்க்கனும்னு சொன்னார்….”

அம்மாவின் வலியில் மௌனமானாள் கிருபா. இந்த வாயில்லா பூச்சியை தேளாக கொட்டி என்ன பிரயோஜனம்? பாவம் அம்மா. அப்பா இருந்திருந்தால் …… பெருமூச்சு விட்டாள் பெண்.

ஆனால் அப்படி நிற்கமுடியவில்லை அடுத்தவள் ஆனந்திக்கு. அக்கா வாழ்வை நினைத்து கொதித்தாள். “மாப்பிள்ள பேர பாத்தீங்களா..தங்கையா….இந்தகாலத்துல யார் இப்படி பேர்வைப்பா…? .சுத்த பட்டிகாடு…இது படிச்சவங்க வீட்டு பேராவா உங்களுக்கு தெரியுது…?”

“என்ன அனா….நாம கூடதான் நீ சொல்றமாதிரி பட்டிகாட்ல இருக்கோம்….அதுக்காக நீ படிக்கலையா….? வெறும் பேரவச்சு இப்டி நினைக்கிறது உனக்கே சரியா தெரியுதா..?” சற்று நிம்மதி வந்திருந்தது தாயாரிடம்.

“உங்க பாலம்ம எதையும் நம்மட்ட சொல்லிகிறது இல்லனாலும்…உள்ள முழுக்க பாசம்…நமக்கு கெடுதலா எதுவும் செய்ய மாட்டாங்கடா..” தாயார் தனக்கும் மகள்களுக்குமாக ஆறுதல் சொல்லிகொண்டார்.

“ஆனா நல்லதுன்னு நினைச்சு ஏமாந்துபோய் நமக்கு கெடுதலா எதாவது செய்து வைக்கலாமில்லியா….? “ ஆனந்தி தொடர

“ அது………..” அம்மா தடுமாறும்போதே கிருபா பேச்சை தன் தேவையின் பக்கம் திசை திருப்பினாள்.

“ எனக்குன்னு ஒரு ஆசை எதிர்பார்ப்பு அப்படில்லாம் இருக்கும்லமா…? ஊம கண்ட கனவும் என் ஆசையும் எப்பவும் ஒன்னு…..நான் பி.ஈ படிக்கபோறேன்னு சொன்னேன்… பாலம்ம நான் என்ன படிக்கபோறேன்னு கேட்க கூட இல்ல…அது பாட்டுக்கு பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரினு முடிச்சுட்டு…சரி…பி.ஜி பண்ணலாமுனு பார்த்தா  பி.எட் ல சேர்த்துட்டு… முடிச்சுட்டு டீச்சரா வேல பார்க்கலாம்னு நினைச்சா…ரிசல்ட் வரதுகுள்ள கல்யாண தேதி…அதுவும் மாப்பிள்ள பேர தவிர எதாவது சொல்லி இருக்கா……? எதோ தங்கையாவாம் ஜெபம் பண்ணிக்கோங்கன்னு சொன்னதோட சரி…”

“அப்படின்னா இன்னொரு பேர் இருக்கும் தான அம்மு?, அது மார்டனா இருக்கபோய்தான் உங்க பாலம்மைக்கு சொல்ல முடியலையா இருக்கும்…” அம்மாவின் நம்பிக்கை

முறைத்தாள் ஆனந்தி. ஆனால் கெஞ்சினாள் கிருபா.

“இப்படி கற்பனை பண்ணிகிட்டு கூட கல்யாணம் செய்ய நான் சரின்னு தான சொல்லி இருக்கேன்…கல்ல கட்டி கிணத்துல குதிக்கிறதுன்னு ஆச்சு..அந்த கல்லு கறுப்பா இருந்தா என்ன சிவப்பா இருந்தா என்னனு….

நம்ம வீட்ல இதுவரை நான் நானா எதையும் செய்ததில்லை…அனுபவிச்சது இல்ல…போற இடம் எப்படியோ….? இன்னைக்கு ஒருநாள் மட்டும்மா..ப்ளீஸ்மா…போய் என் ஃப்ரெண்ட்ஸோட அந்த எக்க்ஷிபிஷன் பார்துட்டு, புக் ஃபேர்ல கொஞ்சம் புக்ஸ் வாங்கிட்டு நேரே வீட்டுக்கு வந்துடுவேன்…ப்ளீஸ்மா”

அதற்கு மேல் மறுக்கமுடியவில்லை அந்த அம்மாவால்.

“அம்மா பீரோல கொஞ்சம் பணம் வச்சிருக்கேன்….எடுத்துட்டு பத்திரமா போய்ட்டு சீக்கிரம் பாலம்ம வாரதுகுள்ள வந்துடு அம்மு..”

“அங்க என்ன அம்மு பொம்முன்னு கொஞ்சல்…நீ கிளம்பு பெரியவளே..” அதட்டினார் பாலம்மை. பெரியவள் என்பது இங்கு கிருபாவின் அம்மா ஜெயசீலி.

ஜெயசீலி கிளம்பி வீட்டைவிட்டு இறங்கியதும் அவரோடு கிளம்பிய பாலம்மை என்றும் இல்லாத வழக்கமாக பெண்களை உள்ளே வைத்து வெளியில் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார்.

“சாயந்தரம் வந்துடுவோம்….பத்திரமா இருங்க” என்றபடி அவர் விடைபெற, அவரை எதிர்த்துப் பேசி அறியாத ஜெயசீலி திரும்பி திரும்பி பார்த்தபடி கண்ணில் நீரோடு போன காட்சி இன்னும் இவள் கண்ணில் தெரிகிறது.

 

 

 

ங்கு தென்பாவூரில் இளையவர்கள் நால்வரும் மொட்டை மாடியில் உச்சி மாநாடு. இருபக்க சூழலையும் பேசி எப்படியும் இந்த கல்யாணத்தை நடத்தியே தீர்வது என்ற முடிவுக்கு வந்திருந்தது நால்வர் கூட்டணி.

“எங்க அக்கா ஏற்கனவே கல்யாணதுக்கு சரின்னு தான் சொல்லிருக்கா..இனி சந்தோஷமா சொல்லுவா….ஆனா பெரிய அத்தான சம்மதிக்க வைக்க என்ன வழி….?” ஜீவனி முக்கிய ப்ரச்சனையை சுட்டிகாட்ட….

“ம்க்கும்….”தொண்டயை கணைத்துக் கொண்டான் ஆனந்த். “அதுக்கு ஒரு வழி இருக்குது …எங்கள பத்திதான அண்ணா யோசிக்கிறான்…. என் தம்பிக்கு அடுத்த அண்ணியும் இந்த வீட்ல இருந்தே வந்தா……” அவன் கண்கள் ஜீவனியிடம் போய் திரும்பியது.

தன் அண்ணன் ஆனந்த் முகத்தைப் பார்த்த ஜீவன் “இது எப்ப இருந்துடா….? வர்றப்ப நல்லாத்தான இருந்த..? ” என்றபடி ஏற இறங்க பார்த்தான்.

“அது…இதுக்கெல்லாம்….அப்படித்தான்….தோணிச்சு…..” ஆனந்த் சொல்ல இப்பொழுது ஜீவனி தலையை குனிந்து கொண்டாள்.

ஆனந்த் ஜீவனி இருவர் முகத்தையும் பார்த்த ஜீவன்

“வர்ரே வா…அப்ப ரெண்டு கல்யாணம்னு சொல்லு….கங்குராசுலேஷன்ஸ் சின்ன அண்ணி…” ஜீவனியிடம் கைகுலுக்க கை நீட்டினான்.

அதுவரை எதுவும் புரியாது விழித்துக்கொண்டிருந்த ஆனந்திக்கு அப்பொழுதுதான் விஷயம் ஓரளவு புரிந்தது.

“ஹலோ….ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது….ஓட்ட காரு ஊர் போய் சேராது…. அவளுக்கு எங்க வீட்டு கணக்குபடி கல்யாண வயசு வரதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்குது…..இப்பதான் டிகிரி முடிச்சிருக்கா…பி எட் பண்ணாம நோ கல்யாணம்….பாலம்ம சட்டம்….”

“அதோட ஆனந்தி அக்கா கல்யாணதுக்கு முன்னால என்னால இதுக்கெல்லாம் சம்மதிக்க முடியாது..” மெல்லமாக ஜீவனி சொல்ல

..ஆ….என்றமுக பாவத்தை ஆனந்த் காட்ட “ ஆனந்தி அக்காவா…?” என அதை மொழிப் படுத்தினான் ஜீவன்.

ஆண்கள் இருவரும் ஜீவனியை மூத்தவளாக தவறாக புரிந்திருந்தனர்.

“இப்ப என்னடா பண்றது…ஒரு கல்யாண ப்ரச்சனைய தீர்க்கவே திருடன் ரேஞ்சுக்கு டெவலப் ஆகி இருக்கோம்…இப்போ ரெண்டு கல்யாணத்துல  ப்ரச்சனைனா…? டான் ரேஞ்சுக்கு டெவலப் ஆகனுமோ….?” ஜீவன் சிந்திக்க

“ஆமாங்க உங்களுக்கு திருடன் வேஷம் ஈசிய பொருந்துது…..டான் ஆ நடிக்கனும்னா…அதுக்கு ஒரு  சார்மிங் வேணும்ல….? பாவம் நீங்க அதுக்கு எங்க போவீங்க…?…” சீரியஸாக கவலைப் பட்டாள் ஆனந்தி…

காதில் புகைவர ஜீவன் அவளைப் பார்த்து நிமிரும்போதே….

“ஹலோ இப்போ பாலம்ம வந்தா ரெண்டு கல்யாணமும் நிரந்தர கேன்ஸல்…இப்படிபட்ட வீட்டுக்கு பொண்னு தர மாட்டேன்னு சொல்லிடுவாங்க….அவங்க வரமுன்னால நாங்க உள்ள போய் ஆகனும்…நீங்க வெளிய….” இம்மீடியட் ப்ரச்சனையை நினைவு படுத்தினாள் ஜீவனி.

பெண்கள் இருவரும் வெளியில் மொட்டை மாடியில் நிற்க, ஆட்டமெட்டிக் லாக் உள்ள மொட்டை மாடி கதவு அடித்த பலத்த காற்றில் அதுவாக மூடி உள்ளே பூட்டிகொண்டிருந்தது. அதற்குதான் ஜீவனி நாம செத்தோம்னு சத்தமிட்டது. சாவியின்றி இப்பொழுது அந்த கதவை திறக்க முடியாது. சாவி பாலம்மையிடம்.

அவசரமாக ஆலோசனை செய்து மொட்டை மாடியில் முதுகாட்டி கொண்டிருந்த  விண்டோ ஏசியை கழற்றுவது என முடிவாகியது.

 

 “அம்மா ஒரு வாயில்லா பூச்சி….ஜீவனி பிறந்த கொஞ்ச நாள்ள அப்பா இறந்துட்டாங்க….ஹீ வாஸ் இன் நேவி….அப்பா போனதுல இருந்து அம்மா நிலைம இதுதான்…நம்ம கல்யாணம் பாலம்ம ஏற்பாடுங்கிறதாலயே எங்களுக்கு பிடிக்கல…” தேவகிருபா அனைத்தும் சொல்லி முடித்தாள்.

“பைதவே என் பேர் தங்கையா கிடையாது தேவ் கிருபாகர்.

வாட்….?????!!!! ஐ கேன்ட் பிலீவ்….மாம்ஸ்…..ஹுர்ரேஏஏஏஏஏஏஏஏஏ

“தங்கையாங்கிறது என் அப்பா பேர். ஸோ என் சர்டிபிகேட் படி தேவ் கிருபாகர் தங்கையா. ஆர்மில சர்நேமா அப்பா பேர் சொல்லி கூப்பிடுவாங்க…., உங்க பாட்டிட்ட என் மாமா எப்படி சொன்னாங்களோ….அவங்களுக்கு எப்படி புரிஞ்சிதோ..!!

“என் பேர் தேவ கிருபா……உங்க பேரை சொன்னப்ப  என் பேரை எதோ சொல்றாங்கன்னு கூட பாட்டி நினச்சிருப்பாங்க…வயசாயிட்டுல அவங்களுக்கு….புரிஞ்சிகிற சக்தி அப்டிதான்”

“ வாவ்…எது எப்படியோ உனக்கு நான் எனக்கு நீன்னு எப்பயோ முடிவாயிட்டு போல…ரெண்டு பேருக்கும் என்ன ஒரு பேர் செலக்க்ஷன்….”

இப்டில்லாம் கேட்டா நான் என்ன பதில் சொல்றதாம்…வெட்க வெட்கமா வருதுல்ல….

“நான் ஆர்மில டாக்டரா இருக்கேன்….யூஜி செய்தது சென்னைல…பி ஜி டெல்லில.. இப்போதைக்கு போஸ்டிங் கஷ்மீர்ல…ம்…அதுவும் ஒரு ரீசன் நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நினைச்சதுக்கு….நான் இருக்கிற இடம் ரொம்ப ஸேபான ப்ளேஸ் கிடையாது….

வர்றதுக்கு முன்னாலயே வரப்போற வைஃப்மேல அவ்வளவு அக்கறையா..?? …நீ ச்சோ ச்வீட்…செல்லுஉஉஉ

“என்னை பத்தி சொல்லிட்டேன்…..நீங்க இன்னும் எதாவது சொல்லனும்னா சொல்லுங்க….”

இரண்டு பேரும் நடந்து தார் சாலைக்கு அருகில் வந்திருந்தனர். சற்று தொலைவில் பேருந்து நிறுத்தம்.

“இன்னும் உங்க வீட்ல கல்யாண சேலை எடுக்கலைனா….இனிமே தான் எடுப்பீங்கன்னா…கோல்டன் கலர்க்கு க்ரீன் கலர் பார்டர் வச்ச சஅரி எடுங்க….இல்ல உங்களுக்கு வேற கலர் தான் பிடிக்கும்னாலும் எனக்கு ஓகே… “ தலை குனிந்து பார்வை தாழ்ந்து வெட்க பிம்பமாக அவள்.

ஆயிரம் கோடி பூக்கள் மலர்ந்தன அவன் முகத்தில்.

“அப்புறம் இன்னொருவிஷயம் …ஒருவகையில நான்  ரொம்பவும் பயந்த சுபாவம் தான்…ஆனா உங்க பக்கத்துல இருந்தா தைரியமா இருப்பேன்னு  எனக்கு தோணுது……”

நின்று அவள் முகம் பார்த்தான்.

காதல் காதல் காதல்.

பார்வை நிமிர்த்தியவள் வெட்கமும் மகிழ்ச்சியுமாம் அவன் முகம் தவிர்த்தாள்.

“அப்ப நானேதான் நீயா கிருபா பொண்ணு.?.” ஒரு அடி அவளை நோக்கி எடுத்துவைத்தான்.

“அடுத்த அடி எடுத்துவச்சா  கிருபா பொண்ணு அருவா பொண்ணாயிடும்…உங்க பக்கத்துல எனக்கு சும்மாவே தைரியம் ஜாஸ்தியாகும்….ஞாபகம் இருக்கட்டும்…”

“அதையும் பார்க்கதான போறேன்…இன்னும் 7 நாள் கழிச்சு தான் உன்னபார்த்து அடுத்த அடி வைப்பேன்…என்ன செய்றன்னு பார்ப்போம்…” குறும்பு சிரிப்பு அவன் முகத்தில்

“பார்ப்போம்…பார்ப்போம்.. எனக்கு .பக்கத்துல எப்பவும் ரெண்டு பாடி கார்டு இருப்பாங்க…”

“பார்ப்போம்…”  இப்பொழுது அவன் குரல் குழைந்தது.

வாயடைத்தது அவளுக்கு.

உன் குரலளவுதான் என் பலமா?

“ஏறி குதிச்சு வெளிய வந்துட்டீங்க….எப்டி உள்ள போறதா ப்ளான்? நான் வந்து ஹெல்ப் பண்ணலாமா….? எங்களுக்கும் கொஞ்சம் ஆர்மி ட்ரெய்னிங் உண்டு….” பேச்சை இயல்புக்கு கொண்டு வந்தான்.

“வாங்க…பாலம்ம இருக்கப்பகூட நீங்க வரலாம்….மாப்ளைய முறச்சுக்க மாட்டாங்க அவங்க…” சிறு சிரிப்போடு அவன் முகம் பார்க்காமல் பேசியபடி நடந்தாள் கிருபா. “ஆனா என் முதுகு தோலைத்தான் உறிச்சிடுவாங்க…”

அடுத்து அவளது ஊருக்கு செல்லும் பேருந்தில் அவனும் பயணம் செய்தான்.

சி கழற்றும் திட்டத்தை ஆண்கள் இருவரும் செயல்படுத்த ஒல்லி ஜீவனி ஏசி விண்டோ  வழியாக உள்ளே, சென்று மாடி கதவை திறந்து அனைவரையும் உள்ளே அழைத்தாள்.

அண்ணன் தம்பி இருவரும் ஏசியை திரும்ப பழையபடி பொருத்தி முடித்து இறங்கி தரை தளத்திற்கு சென்றனர்.

அவசர உபசரிப்பு, ஆனந்த் ஜீவனியின் மொபைல் மற்றும் தொலைபேசி எண்கள் பறிமாற்றம், அதற்கான ஆனந்தியின் முறைப்பு, எல்லாம் முடிந்து ஆண்கள் கிளம்ப எத்தனித்த நேரம்  மாடியிலிருந்து சிலவகை ரகசிய கடமுடா.

நிஜமாகவே திருடனா…??? கையில் கம்பு கட்டை துடப்பம் சகிதமாக பம்மி பம்மி சத்தமின்றி மாடிக்கு சென்றனர் நால்வரும்.

விண்டோ ஏசி மீண்டுமாக நீக்கபட்டு  அந்த விண்டோ வழியாக அவசரமாக நுழைந்து கொண்டிருந்தாள் கிருபா. அவள் உள்ளே நுழைய உதவிக்கொண்டு இருந்தது தேவ்.

“ஹுர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ”

ஆண்கள் கத்த விஷயம் புரிந்து “ஏஏஏஏஏஏஏஏஏஏ” என்றபடி தன் அக்காவை அனைத்துக் கொண்டனர் பெண்கள்.

ஆனால் உள்ளிருந்த நால்வரும் கண்டுகொள்ளாமல்விட்டது கிருபா  செய்த ஷ்…..சைகையைத் தான்.

“திருட்டு நாய்களா..!!!!.” உறுமியபடி வரவேற்பறையிலிருந்து மாடிக்கு ஏறும் படியின் முதல் படியில் நின்று இவர்களைப் பார்த்து கத்தினார் பாலம்மை.

பாலம்மை கார் வருவதை பார்த்துவிட்டுதான் ரகசியமாக யார் கவனத்தையும் கலைக்காமல் உள்ளே வர முயன்றாள் கிருபா.

வாசல் வழியாக உள்ளே போய் ப்ரச்சனையை பேசி சரி செய்து கொள்ளலாம் என்று எவ்வளவோ சொன்ன தேவுடைய வார்த்தைகளை செயல் படுத்த அவளுக்கு தைரியம் இல்லை. அதனால் அவளுக்கு உதவினான் தேவ்.

ஆனால் இப்படி தேவுடைய தம்பிகள் உள்ளே இருக்கிறார்கள் என்றோ , இப்படி அலறுவார்கள் என்றோ தேவும் கிருபாவும் எதிர் பார்க்கவில்லை.

மயான அமைதி.

வெளியே நின்ற தேவிற்கு கதவை திறந்துவிட கூட தோன்றவில்லை கிருபாவிற்கு. நடுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

மீதி நான்கு இளசுகளும் சிலையாகி நிற்க

ஏசிக்கான விண்டோ வழியே உள்ளே வந்தான் தேவ்.

 

Next Page