தூது செல்ல ஒரு தோழி (3)

இவள் பாம்பு பயத்தில் பள்ளத்தில் விழுந்த போது அவனுக்கு அடி பட்டுட்டோ? அவனோடு சென்றாள், வேற வழி? இவளால் அவனுக்கு அடிபட்டால் இவள் இதையாவது செய்தாக வேண்டுமே…மனசாட்சின்னு ஒன்னு இருக்குதே…!!!

ஒரு அறையைக் காண்பித்து அங்கு அவளை உடை மாற்றச் சொன்னவன், இவள் வெளிவரவும்  இஞ்செக்க்ஷன்  செக்க்ஷனுக்குள் நுழைந்தான். அதற்குள் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்துவிட்டான் போலும்.

அங்கிருந்த நர்ஸ் இவளைப் பார்த்தவுடன் ஜெர்க் ஆனதும்  தான் இவளுக்கு உறைத்தது, அந்த நர்ஸ் அறிமுகமான விதம்.

இவளுக்கு ஊசி போட்ட அனுபவத்தை அந்த பாவப்பட்ட நர்ஸ் இன்னும் மறக்கலை போல…இத்தன பேஷண்டுக்கு போட்டுமா இன்னும் மறக்கலை ? என இவள் யோசிக்க….

நர்ஸோ “சார் இவங்களுக்கு இஞ்செக்ஷன் போடனும்னு சொன்னீங்கன்னா நான் இப்பவே எல் ஓ பி எடுத்துட்டு வீட்டுக்கு போறேன் , போன தடவை இவங்களுக்கு டாக்டர் போட சொன்ன இன்ஜெக்க்ஷனை போடுறதுக்குள்ள அதோட முத டோஸ இவங்க என் தைல இறக்கிட்டாங்க, அடுத்த ஷாட்ட என் ஃப்ரெண்டு முதுகுல….அவ அப்ப வேலைய ரிசைன் பண்ணவதான்….திரும்பி எங்கயும் வேலைக்கு போகலை….எனக்கு இந்த வேலை முக்கியம்….அதான் நான் இந்த ஹாஃஸ்பிட்டல்ல வந்து ஜாய்ன் செய்தேன்…இவங்க ஏரியா இங்க இருந்து ரொம்ப தூரம்னு நினச்சேன்….…..இப்ப நான் ப்ரெக்னன்டா வேற இருக்கேன்….கண்ட இஞ்செக்க்ஷன குத்திக்க முடியாது….” விலாவாரியாக புலம்பினார்.

அவன் இவளை திரும்பிப் பார்ப்பான் என இவள் எதிர்பார்க்கவில்லை. சின்னதே சின்னதாய் ஒரு சிரிப்பு அவன் இதழில்.

ஈ என இளித்து இவள் சமாளித்து வைத்தாள். ஒரு பக்கம் மானம் காற்றிலேறி கப்பல் தேடினாலும், மறுபக்கம் ஏதோ கொஞ்சம் நிம்மதி. இவள் அவனை அடித்த பின்பு இப்பொழுதுதான் அவன் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு மறைந்திருக்கிறது.

அந்த நர்ஸ் எதுக்கோ வெளியேற…இவனும் அவளும்.

“சாரி….நான் அடிச்சிருக்க கூடாது….அது மேல கை பட்டதும்…சாரி ஹெல்ப் பண்ணத்தான் செய்றீங்கன்னு யோசிக்காம செய்துட்டேன்….”

இவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நான்கு நர்ஸ் உள்ளே வருகிறார்கள்.

“சார் இவங்கல்லாம் பீடியாற்றிக் செக்க்ஷன் ஸ்டாஃப் சார்….ஓடுற குழந்தைங்கள பிடிச்சு வச்சு இஞ்செக்ஷன் போட்டு பழக்கம் இருக்கும்….” இவளிடம் முன்பு குத்து வாங்கிய நர்ஸ் அறிமுகப் படுத்துகிறார்.

ஓ ஊசி இவளுக்குதான்னு நினச்சுட்டார் போல அந்த நர்ஸ்.

“இஞ்செக்ஷன் எனக்கு இல்ல….” இவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த ரூம் லாட்ச்சை போட்டான் அவன்.

‘ஐயோயோயோயோ…..சதி ஆஃப் திஸ் சென்சுரி….ஏமாத்தி கொண்டு வந்து குத்தப் போறானே….’ நெஞ்சு ஓலமிட

“நோஓஓஓஓஓஓ  எனக்கு ஒன்னுமே இல்ல…..” இவ அலற

“இல்லமா உன் கால்ல அடி பட்டுறுக்குது…அந்த தண்ணில வேற நிறைய சாணம்….கண்டிப்பா ஒரு டி டி போடனும்….”

யாரு நின்னு அவன் விளக்கத்தெல்லாம் கேட்கவாம்….? எந்த பக்கம் ஓட…எப்டி இந்த படைக்கு கவ்ண்டர் கொடுக்க…? அறையின் நீள அகலத்தை பார்வையால் அளந்தாள் . உள்ளுக்குள் பி பி தாறுமாறு.

“ஏய் குட்டிப் பொண்ணு…தயவு செய்து இங்க வச்சு ஓடி என் மானத்த வாங்காதயேன் ப்ளீஸ்….” நர்ஸ் அங்க இன்செக்க்ஷனை கை நடுங்க எடுத்துக்கொண்டிருக்க இவள் காதில் கெஞ்சினான் அவன்.

சட்டென உறைக்கிறது…அவன் விசிடிங் கார்டில் இந்த ஹாஸ்பிட்டல் நேம் தான இருந்துச்சு.

அவனை பரிதாபமாக பார்க்கிறாள்.

“உங்க ஹாஸ்பிட்டலா இது?”

ஆமோதிப்பாய் சின்ன தலை அசைப்பு அவனிடம்.

“டி டி க்கு டேப்லெட் இல்லையா உங்கட்ட?”

“………………………”

“சீக்ரமா கண்டு பிடிக்க சொல்லுங்க”

“…………….”

“ப்ச்….இதுக்குத்தான் பயோடெக் எடுக்கேன்…வாக்சினல்லாம் டேப்லட்டாக்க போறேன்னு சொன்னேன்….ஆனா அதுக்கு …….?”

“என்னாச்சு வினி?”  அவன் கேள்வியில் அக்கறை நிறைந்திருந்தது. நாளைக்கே பயோடெக் சீட் பார்த்து அவள சேர்த்துடுவான் போல

“அதுக்கு +2ல பயாலஜில பாஸ் ஆகிருந்தா மட்டும் போதாது அதுக்கு மேலயும் கொஞ்சமாவது மார்க் வாங்கிருக்கனும்னு சொல்லிட்டாங்க…எனக்கும் பயாலஜிக்கும் எப்பவும் சைக்காலஜி ஒத்துப் போகாது…”

அவனுக்கு சிரிப்பு வருகிறதோ?

“ஹலோ எனக்கும் பயாலஜிக்கும் தான் ஒத்துப் போகாது….லாங்குவேஜ் பயாலஜி தவிர மத்த எல்லாத்லயும் நான் சென்டமாக்கும்…”

“தெரியும்” அவன் சொல்ல, இதற்குள் ஒரு நர்ஸ் அவளுக்கு இஞ்செக்க்ஷன் போட்டு முடித்திருந்தாள்.

அந்த இடத்தை இவள்  சின்ன முக சுளிப்புடன் தேய்த்துக் கொண்டாள்.

‘படீர்’

வேற என்ன இவட்ட முன்னால குத்து வாங்கின நர்ஸ் ஃபெயிண்டட்.

அந்த நர்ஸ் மயக்கம் தெளிந்து எழுந்து அவனிடமாக கேட்டார்

“சார் லவ்மேரேஜா சார்….?”

காதில் விழுந்தும் கண்டு கொள்ளாமல், முக்கியமாக திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியே வந்தாள் இவள்.

பின்னால் வந்த அந்த நிர்விகன் இவளுக்கு முன்னால் வந்து நின்ற ஒருவனை அறிமுகப் படுத்தினான்

“வினி இவன் தான் ஜீவா….என் ஃப்ரெண்ட்…”

கை கூப்பி வணக்கம் சொன்னாலும் பார்வையால் ஒரு ஆராய்ச்சி அந்த ஜீவாவை.

‘நம்ம ஷார்ன்ஸ்க்கு ஒகே வா இவன்?’

மழை மீட்பு கதையை டீசண்ட் லெவல்ல ஜீவா விசாரித்து முடிக்கும் போது

இவள் ஜீவாவை கேள்வி கேட்க தொடங்கினாள்.

இடம் அந்த ஹாஸ்பிட்டல்ல ஏதோ ஒரு ரூம்.

இவள் அவனை கேட்ட கேள்விகளில் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தவை கூட மறந்து போயின.

“க்ரிக்கெட் விளையாடுவீங்களா? பாப்பீங்களா?”

“இரெண்டும்”

“டிவில நீங்க க்ரிக்கெட் மேட்ச் பார்த்துகிட்டு இருக்றப்ப உங்க வைஃப் அனிமல் ப்ளனட் பார்க்கனும்னு சொன்னா என்ன செய்வீங்க….?”

இப்டி எல்லா ஆங்கிளிலும் அவனை துருவி துருவி கேள்வி கேட்டவள் முக்கிய கேள்விக்கு வந்தாள்.

“ஷார்விய எப்ப இருந்து தெரியும்…?”

“ஷார்வி அம்மா கேரலின் டீச்சரோட ஸ்டூண்டண்ட்  நான்….அவள சின்னதுல இருந்து தெரியும், பட் காலேஜ் டேஸ்ல இருந்து அவளப் பிடிக்கும்…..நாங்க ஒரே காலேஜ், அவ எனக்கு ஜூனியர், எனக்கு கல்யாணத்துக்கு பார்க்கனும்னு சொன்ன உடனே ஞாபகம் வந்த ஒரே பொண்னு அவ மட்டும் தான்….”

“………………………..”

சின்ன வயசுல இருந்தே தெரியுமாம். ஆனா காலேஜ்லதான் பிடிக்குமாம், இப்பதான் காதலாம்…ஆரம்பத்துல இருந்தே தெரிஞ்சாலும் 6 வயசுல இருந்தே லவ் பண்றேண்னு சொல்ற கேட்டகிரி இல்ல இவன், வெரி டீசண்ட் பெர்சன்….சென்சிபிள் டூ… லவ் மேரேஜ், அரேஞ்ச்ட் மேரேஜ், தெரிஞ்சவங்க கூட நட்க்ற மேரெஜ்…மூனு கேட்டகிரியின் அட்வாண்டெஜும் இவன்ட்ட ஷார்விக்கு இருக்குது, ஆனா எந்த கேட்டகிரி டிசட்வாண்டேஜும் இவன்ட்ட இல்ல. பெஸ்ட் ஃபார் ஷார்வி.

மனம் நிறைந்து போனது வினிதாவிற்கு.

ஷார்வி அம்மாவும் இவளது அம்மாவும் ஒரே ஸ்கூலில் தான் டீச்சர்ஸ். இந்த நிர்விகன் ஜீவாவுவுக்கு க்ளாஸ் மேட் என்றால் அவனுக்கும் இவளை சின்ன வயதிலிருந்து தெரிந்திருக்கும் தானே? அதோடு அம்மாவுக்கு இவனைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

பார்வையை மட்டும் திருப்பி அவனைப்பார்த்தாள்.

அவன் வெகு இயல்பாய் இவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான். தன் மனம் போகும் போக்கை கட்டுப் படுத்தி, மீண்டுமாய் ஆராய்ச்சியை அன்றைய எலியான ஜீவா மீதே திருப்பினாள். இவளது இன்டர்வியூவில் ஜீவா டிஸ்டிங்ஷன் ஸ்கோர் செய்திருந்தான்.

“அண்ணா நீங்க உங்க வீட்டு பெரியவங்க மூலமா ஷார்ன்ஸ் வீட்ல பொண்ணு கேளுங்க….அவளுக்கு அரேஞ்ச்ட் மேரேஜ்தான் பிடிக்கும்….பட் எங்கேஜ்மென்ட்க்கு பிறகாவது இல்ல மேரேஜுக்கு பிறகாவது உங்க லவ் ஸ்டோரிய அவட்ட சொல்லுங்க…சந்தோஷமா ஒத்துப்பா….பட் இப்ப அவட்ட சொல்லி அவ சம்மதம் வாங்கின்றதுல்லாம் வொர்க் அவ்ட் ஆகாத ப்ளான்…அதோட அது அவ பேரண்ட்ஸுக்கும் கஷ்டமா தோணும்….”

ஜீவா ஷார்விக்கு ஓகே எனப் பட்டால் எதை சொல்ல வேண்டும் என நினைத்திருந்தாளோ அதை ஜீவாவிடம் இவள் சொல்லி முடிக்கவும், அங்கே வந்து சேர்ந்தாள் ஷார்விகா. இவளைத் தேடித்தான்.

“என்னாச்சு வினி…உனக்கு அடிபட்டுறுக்குன்னு நிரு அண்ணா சொன்னாங்க…”

பரிதவிப்போடு வந்திருந்தாள் அவள்.

“ப்ச்…சின்னதுதான்…டி டி போட்டாச்சு…பயப்பட ஒன்னும் இல்லை….”

இயல்பாய் இவள் சொல்ல அடுத்த ‘படீர்’

வேற யாரு நம்ம ஷார்ன்ஸ்தான்.

பட் கரெக்டா ஜீவா அவர் கடமையை ஆற்றி  காட்ச் பிடிச்சுட்டார்.

அதன் பின் இவள் மறுத்தும் கேளாமல், நான்கு பேருமாக வினியை அவளது வீட்டில் ட்ராப் செய்ய வந்தனர்.

பொண்ணு பிடிக்கலைனு சொல்லிட்டுப் போன நிர்விகனைப் பார்த்தால் வீட்டில் எல்லோருக்கும் வருத்தமாக இருக்குமே. அதனால் தான் இவள் மறுத்ததே.

ஆனால் வீட்டில் எதிர்கொண்ட  அம்மாவோ “வாங்க மாப்ள” என வாய் நிறைய வரவேற்க நேத்து இவன் என்ன சதி செய்துட்டு போனான்? என அவனைப் பார்த்தாள். ஆனாலும் அம்மா முன்னால இப்ப என்ன கேட்டுட முடியும்?

ஆனால் அம்மா இவளை யார் முன்பும் கேட்க முடியுமே கேட்டார்

“இன்டர்வியூ எப்டி போச்சுது வினி?”

இன்டர்வியூவுக்கு போகாமல் மழையில் மாட்டி டி டி போட்ட கதையின் அம்மா அக்சப்டபிள் வெர்ஷனை அனைவரும் சொல்ல

அடுத்த படீரை எதிர் பார்த்தால் அப்படி எதுவும் நடக்காமல் அவர்

“எல்லோரும் பேசிட்டு இருங்க காஃபி எடுத்துட்டு வாரேன்” என இயல்பாக திரும்ப

வினிக்கு தாங்கவே முடியலை….எப்டி இது அம்மாவுக்கு ஆச்சர்யாமாவே இல்ல?

“அம்மா உங்களுக்கு ஆச்சர்யமாவே இல்லையாமா? “ இவள் இஞ்செக்ஷனைப் பத்தி தான் கேட்டது.

“உனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு அம்மாவுக்கு தெரியாதா…?” என்று அவர் நிர்விகனை பார்வையால் குறிப்பிட்டுவிட்டு உள்ளே போனார்.

அத்தனை பேர் முன்னிலையிலும்  இறுக கட்டிப் பிடித்து அழுந்த ஒரு முத்தம் வைத்தாள் அம்மா கன்னத்தில்.

ன்று இரவு அவளை அவன் மொபைலில் அழைத்தான்.

“நேத்து எங்க வீட்ல என்ன சொல்லிட்டுப் போனீங்க?”

“வேற என்ன , பொண்ண ரொம்ப பிடிச்சிருக்குன்னு உண்மைய சொன்னேன். தட்டு மாத்தி நிச்சயம் செய்து வச்சாங்கா பெரியவங்க…அதாவது வி ஆர் அஃபிஷியலி எங்கேஜ்ட்…”

“ஆங்…அப்றம் ஏன் ஷார்ன்ஸ்ல இருந்து எல்லோரும் சோக கீதம் வாசிச்சாங்க?”

“உன் முழு சம்மதம் இல்லாம உனக்கு வெட்டிங் ஃபிக்‌ஸ் ஆகிருப்ப அவங்க வேற என்ன செய்வாங்களாம்…? நீ எப்டி ரியாக்ட் செய்வியோன்னு ஒரு டென்ஷன் இருகும்ல….அதோட உன்ட்ட எதையும் கிளற வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன்…”

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு தெளிவா சொல்லியும் இப்டி செய்துறுக்கீங்க என்ன? எவ்ளவு தூரம் என் மனச மதிக்றீங்கன்னு தெரியுது” போலியாய் கோபித்தாள்.

“நம்ம மேரேஜ் மேட்டர என்ட்ட விடு பார்த்துகிறேன்னு நான் சொன்னேன்…நீ சரின்னு சொன்ன…நான் அத பார்த்துகிட்டேன் அவ்ளவு தான்…”

“நீங்க படு பயங்கர conspirator”

“உன்ன விடவா வினிப் பொண்ணு?”

“நான் என்ன செய்தேன்?”

“உன் ஃப்ரெண்ட் ஷார்வியை எப்டி trap பண்ணனும்னு ஜீவாக்கு ப்ளான் கொடுத்றுக்கியே அது பேரு என்னவாம்?

“ஆன்…அது  ஃப்ரெண்ட்ஷிப்…”

“இது லவ்”

“…………………….” இவளுக்கு ஏதோ புரிகிறது.

“ வினிப் பொண்ணு என்ன ஆச்சு ?”

“…………………..”

“ஹேய் நீ ஷார்விக்கு செய்தத அவ உனக்கு செய்தா…..…”

“………………….”

“இதுக்குல்லாம் கோப்படுவியா?”

“அவ என்ன சொன்னா?”

“வினிக்கு  கல்யாணம் செய்ய பயம்..…அதனால அவள அப்ரோச் பண்றது சரி வராது…..அவ அப்பா கொஞ்சம் அலயன்ஸ்லாம் பார்த்து இவ  எல்லாத்தையும் வேண்டாம்னு சொல்லி ஒரு டென்ஷன் மூட்ல இருக்கு அவ வீடு அந்த, இந்த டைம்ல போய் உங்க டீச்சர்ட்ட பொண்ணு கேளுங்க….உங்க மேல அவங்களுக்கு நல்ல ஒப்பினியன் இருக்றதால, வினி அப்பா  சரின்னு சொல்லிட்டு…இது தான் மாப்ளன்னு அவட்ட சொல்லிடுவாங்க…அவங்கப்பா சொல்ற எதையும் வினி மீற மாட்டா…அவளுக்கு அப்பான்னா ரொம்ப இஷ்டம். அதுக்கு பிறகு நீங்க அவட்ட நடந்துகிறதுல உங்கள புரிஞ்சிப்பானு சொன்னா”

“சரி நீ எப்டி ஒரே நாள்ள மனமாற்றம்? நேத்து கல்யாணம் வேண்டாம்னு சொன்ன….இன்னைக்கு எனக்காக ஓடாம ஒரே இடத்துல நின்னு இஞ்செக்க்ஷன்லாம் போட்டுகிட்ட?”

“அதுக்லாம் ரீசன் தெரியாது…..நேத்தே கொஞ்சம் பிடிச்சுது….இன்னைக்கு முழுசா பிடிச்சுட்டு அவ்ளவுதான்….”

“அப்டி என்னல்லாம் பிடிச்சுது…? எது இருக்கதுலே அதிகமா பிடிச்சுது?” அவனுக்கு அவள் வாயால் தன் மேலுள்ள காதலைக் கேட்க ஆசை.

“ம்….எது இருக்கதுலே அதிகமா பிடிசுதுன்னா….”

“சொல்லு வினிக்குட்டி”

“ உங்க நேம்….ஏன்னா நம்ம ரெண்டு பேரு இன்ஷியல்ஸ்ஸ சேர்த்துப் பாருங்க…N…V… எனக்கு நான் வெஜ்னா ரொம்ப இஷ்டம்…..”

அவன் அங்கு தலையில் அடித்துக் கொள்வது இங்கு வினித்தாவிற்கு மன கண்ணில் தெளிவாக தெரிந்தது.

வாய் பொத்தி சத்தமின்றி சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

பிறகென்ன இரண்டு கல்யாணமும் ஒரே நாள்…

“ஜீவாண்ணா கண்டிப்பா ஷீ திக்கா போட்டுக்கோங்க…அதோட அவள விட்டு கொஞ்சம் தள்ளியே நில்லுங்க ஃபங்ஷன்ல….அதுவும் அவள எதாவது டீஸ் பண்றப்ப கட்டாயம் கீப் ஒன் ஃபீட் டிஸ்டன்ஸ்…..ஷார்ன்ஸ் எதையும் அழுத்திச் சொல்லனும்னா காலை மிதிச்சுத்தான் சொல்லுவா…இன்னைக்கு அவ போட போறது பயங்கரமான பாய்ண்டட் ஹீல்ஸ்.”  திருமண விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்த ஜீவாவிற்கு வினி ஃபோனில் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க

“அண்ணா மறந்திடாதீங்க இந்த வினி தினம் நைட் அன் டைம்ல ஜாமூன் இல்லனா பால்கோவானு ஸ்வீட் கேட்பா…அப்டி சாப்ட குடுக்கலையோ அவ்ளவுதான்……அதோட நியாபகம் இருக்குல்லண்ணா அவளுக்கு நாளைக்கு பெர்த் டெ, நைட் 12க்கு விஷ் பண்ணலண்ணா ரொம்ப ஃபீல் பண்ணுவா…… ” ஷார்ன்ஸ் நிர்விகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

சொல்லியனுப்பாத இந்த தூது எப்பொழுதும் தொடரும்.

10 comments

  1. Super sweety semmaya irrukku short and sweet sweety.kutty kadhaila konjam comedy,kadhal,anger,purithal and best characterization romba super.Nirvigan and sharvikka nice name selection,orea varila love fb kooda solliyachu nice nice nice one

  2. Lovely mam. Though it is short the way of ur writing is so impressive that make this story a sweet one. I read this story with a smile 😊. That much it attracted me

Leave a Reply