தூது செல்ல ஒரு தோழி (2)

றுநாள் இன்டர்வியூவுக்கு இவள் அனுமதி கேட்க, எதையும் குடையாமல் அனுமதி கொடுத்தார் அப்பா. அம்மா, அப்பா, தம்பி மூவருக்கும் இன்று வொர்க்கிங் டே, ஆக இருந்த இரண்டு காரும் அவர்களுக்கு தேவை. யாரையும் கொண்டு போய் விடுங்கள் என கேட்கும் சூழல் இது அல்ல.

வீட்டு உறுப்பினர்கள் உடன் வராமல் இவள் இதுவரை தனியாக ப்ரயாணம் செய்திருந்தது பள்ளி கல்லூரி வாகனங்களில் மட்டும் தான். முதன் முறையாக தனியாக ஒரு பயணம். ஆட்டோ எடுக்கலாம் என நினைத்தவள் வேண்டாம் என முடிவு செய்து பேருந்தில் ஏறினாள்.

இவள் ஏறிய நிறுத்தம், டெர்மினஸ் என்பதால் ஜன்னல் ஓரத்து இருக்கை கிடைத்தது இவளுக்கு.  சரியான நிறுத்தத்தில் இறங்க வேண்டுமே என்ற டென்ஷன் முதலில் இருந்தாலும், சற்று நேரத்தில் பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

“ஏம்மா இறங்குமா இதுதான் லாஸ்ட் ஸ்டாப்….” கன்டக்டரின் குரலில் தூக்கி வாரிப் போட எழுந்தவள் “சௌகத் அலி ரோடு….?” கேள்வியாய்  அவரைப் பார்த்தாள்.

“அது போய் அரமணி நேரம் ஆகுது….அடுத்த பஸ் பிடிச்சு திரும்பி போம்மா…” கன்டக்டர் இறங்கிப் போய் விட்டார்.

இறங்கி நின்றாள் வினிதா. இது எந்த இடம் என்றே தெரியவில்லை. எதோ புதிதாக உருவாகும் குடியிருப்பு போலும். தூரத்தில் ரெண்டு வீடு, சற்று அருகில் ஒரு சுடுகாடு….அதிலிருந்து புகை….அவ்ளவுதான்… அவசர அவசரமாக மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள். மொத்த நிறுத்ததிலும் இவளைத் தவிர யாரும் இல்லை.

இந்த பஸ்ஸை தவிர எதுவும் இல்லை. அடுத்த பஸ்ஸிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மெல்ல வீசிக் கொண்டிருந்த காற்று புயலாகி  கடும் மழை இடி மின்னலுடன் இணைந்து கோர தாண்டவமாடியாது.

மற்ற எந்த வாகனம் வரவில்லை என்றாலும் எப்படியும் இந்த பஸ் திரும்பிப் போகும் தானே…. பாஸிடிவ் திங்கிங் இருக்கனும்…… பயப்படக்கூடாது…. தன்னைத்தானே சொல்லிக் கொண்டாள் வினி. ஆனா எவ்ளவு நேரம் இது தாங்கும்??

மழை குறைவதாய் இல்லை….மொபைலை எடுத்தாள். யாருக்கு அழைக்க?

ஜீவா கூட இவளுக்கு இன்னும் இன்ட்ரோ கிடையாதே!!!

சில நிமிட யோசனைக்குப் பின் அடுத்த இடியின் உந்துதலால் அந்த நிர்விகன் எண்ணை அழைத்தாள். அரைமனி நேர பயண தூரத்திற்குள் அவன் தானே இருக்கிறான்.

“ஓ…மை…காட்…அங்கயே இருங்க, இப்ப வந்துடுறேன்….”

அங்கேயே அமர்ந்து அவன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் கவனித்தாள் பேருந்தை சுற்றி தூரத்தில் தெரிந்த உயர்ந்த மண் கரை வரை தண்ணீர் தண்ணீர். ஏதோ ஒரு குளத்தை பேருந்து நிலையமாக்கி இருக்கின்றனர். புயல் மழையில் அது நிரம்பத்தொடங்கி இருக்கிறது.

இவள் இதிலிருந்து எப்படி தப்பிக்க போகிறாள்? அந்த நிர்விகன் வருவதற்குள் இந்த தண்ணீர் மட்டம் உயர்ந்துவிட்டால்????

அதோ அவனது கார். கரையிலேயே அதை நிறுத்திவிட்டான்.

இப்போ இவ இங்க இருந்து காருக்கு எப்டி போறதாம் ? இவளுக்கு நீச்சல் தெரியாதே…..அவன் வேக வேகமாக இவளிடம் வந்தான்.

“வாங்க…”

“நோ…எனக்கு நீச்சல் தெரியாது….முங்கிறுவேன்…”

“இந்த தண்ணில நீச்சல் அடிக்கனும்னா அதுக்கு நீங்க ட்ரெய்னிங் பக்கெட் வாட்டர்ல எடுத்றுக்கனும்….இது வெறும் ஒரு அடி தண்ணி”

“இல்ல வர மாட்டேன் எனக்கு பயமா இருக்கு….”

“ப்ளீஸ்மா….பிடிவாதம் பிடிக்காம இறங்கு..”

“பயமா இருக்குன்னு சொல்றேன்ல…”

ஒரு அடி தண்ணீர் இடுப்பு உயரம் வரும் வரையும் இந்த வா வா வரமாட்டேன் போ போ தொடர,

“இதுக்கு மேல இங்க நின்னா நாம ரெண்டு பேரும் ஜல சமாதிதான்”

அழுத்தமாய் சொன்னவன் பேருந்து வாசலில் நின்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தவளை முரட்டடியாய் தண்ணீருக்குள் இழுத்தான்.

ஏற்கனவே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவள், ஈரம், அதோடு இழுத்தது அவன். துள்ளி திமிறியதில் எக்கு தப்பாய் வந்து அவன்மேலேயே விழ, அவன் ஆட்டமெட்டிக்காக தன்னையும் நிறுத்தி அவளையும் தாங்கும் முயற்சியில் அவள் இடை பிடிக்க, ஓங்கி வைத்தாள் ஒன்று அவன் கன்னத்தில்.

சூப்பர் ஷாட் தான் ஆனா டார்கட் மிஸ்ஸிங்…. எஸ் அடி விழுந்தது அவன் முகத்தில் என்றாலும் உடைந்தது இவள் தன் பாவாடை தாவாணிக்கு மேட்சாக போட்டிருந்த கண்ணாடி வளையல். அண்ட் அது பதம் பார்த்தது இவளது கையை மட்டும்.

விர் என அவனுக்குள் ஏறிய கோபம் அவன் முகம் அருகில் இருந்த இவள் கண்ணுக்கு  தெளிவாக தெரிகிறது. இப்பொழுது என்ன செய்வான்?

படிச்ச எல்லா கதைலயும் இந்த நேரத்துல ஹீரே ரெஸ்பான்ஸ் குண்டக்க மண்டக்க இருக்குமே…. மிரண்டு போய் கண்ணை உருட்டி சுற்றிலும் பார்த்தாள்.

இவர்களும் நீரும் மட்டுமே. என்ன செய்யப் போகிறான்?

‘இத அடிக்றதுக்கு முன்ன யோசிச்சுருக்கனும்டி அறிவு ஜீவி…’ அறிவு அடவைஸ் செய்ய

அவன் என் லிப்ஸையா முறைக்றான்?

அவசர அவசரமாக தன் வாயை கையால் மூடிக் கொண்டாள்.

இவள் நினைவு அவனுக்கு புரிந்ததா இல்லையா தெரியவில்லை. ஏனெனில் அவன் ஒரே மாதிரியே இன்னும் முறைத்துக் கொண்டிருந்தான். உச்ச கோபத்துக்கு மேல ஒரு கோபம் இருக்கா என்ன?

அவன் பார்வை இவளை தொடும் இடத்தைப் பார்த்தாள். இவள் கையில் வளையல் கிழித்திருந்த இடம்…

‘ஐயோ ரத்தம் …..காட்டுமிராண்டி….என் கைய கிழிச்சுட்டான்…’ மனதிற்குள் அவனைத் திட்டியபடி அவனிடமிருந்து திமிறி விலகிக் கொண்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு நொடி அசையாமல் நின்று செல்கிறவளை முறைத்தவன், அடுத்து உணர்ந்தவனாக அவளை நோக்கி வேகமாக சென்றான்.

“ஏய்….தண்ணி இழுக்க ஆரம்பிக்குது….தனியா போகாத….”

‘போடா விருமாண்டி அதுக்காகலாம் உன் கைய பிடிப்பேன்னு கனவுலயும் நினைக்காத…’மனசுக்குள்ள மட்டும் அவனுக்கு பதில் சொல்லியபடி நடையை தொடர்ந்தாள்.

அவளை விட வேகமாக அவளை நெருங்கினான் அவன்.

“என்னை தொட்டீங்கன்னா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்….”திரும்பி அவனிடம் சொன்னவள் ஐயோ என கத்தியபடி அவனை தாவி அணைத்தாள். கால்ல ஓடுறது பாம்புதான….? அவ்வளவு தான் அவளது கடைசி நினைவு. நீருக்கு அடியில் இருந்த குழிக்குள் வழுகுவதாய் ஒரு உணர்வு.

மீண்டும் அவளுக்கு விழிப்பு வரும் போது அவனது காரில் அவள் படுக்க வைக்கப் பட்டிருக்க, இவளது உள்ளங்காலை சூடு வர தேய்த்துக் கொண்டிருந்தான் அந்த நிர்விகன். காரில் ப்ளோவர் ஆனாகி இருந்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவளது வான் நீல பாவடை தாவணி எங்கும் சகதி.

‘நான் கீழ விழுந்த பிறகுதான் தூக்கிட்டு வந்தியா நீ….சொங்கி ஹீரோ….ஆங் தூக்கிட்டு வந்தியா…..ஐய….சே….வெட்கமா வருதே’  மனதிற்குள் இதுவும் அதுவும். அடுத்து அவன் முகத்தை எப்படி பார்க்கவாம்?

அவன் மீண்டும் காரை நிறுத்தும் வரைக்கும் அவனை மட்டுமல்ல எதையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள்.

ஆனால் அவன்தான் ஒன்னொன்றாக சொல்லிக் கொண்டு வந்தான்.

“தல முடிய விரிச்சு விடு, காயட்டும்”

“கைய கொஞ்ச நேரம் ப்ளோவர்ல காமி…..சில்லுனு இருந்துச்சு”

காரை நிறுத்திவிட்டு “இங்கயே இரு எங்கயும் போய்டாத….” என எச்சரித்துவிட்டு எங்கேயோ போய் வந்தவன் கையில் ஒரு காஃபி.

அடுத்து நிறுத்தி அதே மாதிரி போய் வந்தவன் கையில் தந்தது ஒரு பாக்‌ஸ், திறந்து பார்த்தாள். அவள் பாவாடை தாவணி நிறத்தில் ஒரு புடவை. அதோடு ஒரு கோம்ப்.

“ஆஃபீஸ் வர்றப்ப இத மாத்திக்க, இப்ப தலை வாரிக்கோ…முடி காஞ்சுருக்கும்…”

னால் அடுத்து அவன் சென்று நிறுத்திய இடம் ஒரு ப்ரபல மருத்துவமனை பார்க்கிங் ஸ்லாட்.

Next Page