திக்கெங்கும் ஆனந்தி 7 (3)

“அதுமா அது மேல என் கேமோட காயின் ஒன்னு போய் விழுந்துட்டு, எனக்கு வேணும்” என சோஃபாவுக்கு பின்னிருந்த சுவரில் அங்கும் இங்குமாய் நிறுத்தப்பட்டிருந்த சின்ன சின்ன அழகுப் பொருட்களில் ஒன்றை நோக்கி அவன் கையை நீட்ட,

“கீழ விழுந்துடுவமா நீ, சித்தப்பா வரவும் எடுத்து தரச் சொல்றேன்” என சிந்து அவனை சமாதானப் படுத்த முயன்றாள்.

“போ போய் சித்தப்பாவ எழுப்பு, டைம் ஆகிட்டு அவனும் சாப்டணும்” என இப்போது சொன்னது நிகரனின் அப்பா எனில்,

“தூங்குறவங்கள எழுப்புறது பேட் மேனர்ஃஸ் தாத்தா” என்கிறான் அந்த 8 வயது பொடியன்.

“டேய் அது அதிகாலைலடா, இப்ப மதியமே ஆகப் போகுது” அவனது தாத்தா சொல்ல,

“ஸ்டில் தூக்கம் வரப் போய்தான தூங்குறாங்க, அதெல்லாம் எழுப்ப கூடாது” என்றவன் ஒரு ஸ்டூல் பொன்ற ஒன்றை சோஃபவின் மீது போட்டு ஏற என இழுத்துக் கொண்டு வர,

“தீரஜ்” என ஒரு அதட்டல் வருகிறது சிந்துவிடமிருந்து.

அதற்குள் “என்னடா பெரியமனுஷா? தாத்தாக்கு க்ளாஃஸ் எடுக்காப்ல தெரியுது?” என்றபடி நிகரனே அங்கு வந்து சேர,

“ஹேய் உங்க ஆள் வந்தாச்சு” என இவளிடம் கிசுகிசுத்துவிட்டு அவனை மட்டுமாக  முகத்தை சிந்து ஃபோகஸ் செய்ய,

அதற்குள் சிந்துவின் மகன் தீரஜ் “ஹை குட்மானிங் நிகர்” என சித்தப்பனை தம்பியாக்கியவன், “எனக்கு பாகுபலி வேணும்” என அவனிடம் ஓடினான்.

“டேய் எத்தன டைம் சொல்லி இருக்கேன் பாகுபலி வர்றதுக்கும் முன்னமே இதை நாம விளையாடி இருக்கோம்னு, நம்ம பேட்டன்ட் ரைட் வாங்கலைன்னு அந்த டைரக்டர்தான் யூஃஸ் செய்துகிட்டார்னா, அதுக்கு பாகுபலின்னே நீ ஏன்டா பேர் வைக்கிற?” என்றாலு குழந்தையின் முன் தன் இரு கைகளையும் கோர்த்து புடித்தபடி நிகரன் சற்றாய் குனிந்து நிற்க,

“பாகுபலின்னு சொன்னா ஸ்டைல்லா இருக்கு நிகர்” என்றபடி கோர்த்திருந்த நிகரின் கையில் ஒற்றைக் காலை ஊன்றி அடுத்த காலை தீரஜ் நிகரின் தோளில் வைக்க, இப்போது நிகர் சின்னதாய் மகனை உயரத் தூக்க அடுத்த காலையும் நிகரின் தோளில் வைத்து ஏறி நின்றிருந்தான் பிள்ளை.

அடுத்து அங்கு நின்று கொண்டே தீரஜ் உயரத்திலிருந்து எடுக்க ஆசைப்பட்டதை எடுத்துக் கொண்டு அதே முறையில் இறங்கிவிட்டான்.

பார்க்க பார்க்க இவள்தான் அச்சோ எனச் சொல்ல வேண்டி இருந்தது

இதற்குள் “தீரஜ்மா சித்தப்பாவுக்கு சாப்பாடு வேணும்னு ராஜிம்மாட்ட சொல்லிட்டு வா” என கிருபாகரன் குழந்தையிடம் சொல்ல, அவன் அடுத்த புறமிருந்த வாசலை நோக்கி ஓடிப் போனான்.

அதே நேரம் குழந்தை சென்ற வாசல் வழியே வந்து சேர்கிறான் நவிலன்.  அவன் பின்னேயே ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள். அனைவரும் சாப்பாட்டு அறையில் இருந்து வருகிறார்கள் போலும். நிகரனின் குடும்பம் என இருக்கும் அனைவருமே வீட்டில் அணியும் இரவு நேர உடையில் இருக்க வந்திருந்த ஆணும் பெண்ணும் தம்பதி போலும் புடவை ஃபேண்ட்ஸ் சட்டை என அணிந்து விருந்தினர் என்பதை உணர்த்தினர். அதே நேரம் அவர்கள் மத்திய வர்கத்தை சார்ந்தவர் என்பதையும் உடையும் மற்றவையும் காட்டின.

“என்னமா ஜெயா சாப்பாடு நல்லா இருந்திச்சா? உட்காருங்க மாப்ள” என அவர்களிடம் கிருபாகரன் பேச

“ஜெயாண்ணி நிகரனுக்கு தூரத்து வகையில் கசின் முறை வருவாங்க, மாமா அத்தைக்கெல்லாம் ஊர் உங்க ஊர் பக்கம்னு சொல்வாங்க, அங்க உள்ள எதோ தாத்தா வழி சொந்தம்னு சொல்வாங்க, இங்க பிடபிள்யூடில ஜெயாண்ணி வீட்டுக்காரர் வேலை செய்றாங்க, அப்பப்ப வருவாங்க, நல்ல பழகுவாங்க”  என சிந்து அவர்களையும் அறிமுகப் படுத்தினாள்.

ஆனந்திக்கோ சிந்து இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த நவிலன் நிகரிடம் போய் “என்னடா இப்பதான் எந்திரிச்சியா?” என்றபடி சற்றும் படியாமல் கற்றாய், தூக்கத்தில் கலைந்து போய் கிடந்த நிகரனின் முடியில் கை வைத்து அதை படிய வைக்க முனைந்த காட்சியில் மட்டுமே கவனம் போகிறது.

சற்று நேரம் தேவைப்பட்டது அந்தக் காட்சியை தாண்டி வரவே,

அதற்குள் இங்கு என்ன பேச்சுப் போனதோ?

“அருவா வாங்கணும்னா முன்ன நான் ஒரு ட்ரைபல் ஏரியால வர்க் செய்தேன்னு சொன்னனே அங்க வாங்கணும் மச்சான், முன்பக்கம் மட்டுமில்ல லைட்டா பின்பக்கம் சுத்துனோம்னா நம்ம கை மேல இருக்க கையவே வெட்டிடும். அந்த கைப்பிடி அமைப்பு அப்படி, சும்மா சுத்திப்பாக்கேன்னு ஒரு தடவ சுத்தி இங்க பாருங்க என் கைலயே பட்டுட்டு” என அந்த ஜெயாண்ணியின் கணவர் கிருபாகரனுக்கு அடுத்து அமர்ந்திருந்தவர் தன் கையை காட்ட, நவிலனும் நிகரும் எதோ பேச,

எவ்வளவு இயல்பா எல்லார்ட்டயும் தன்மையா பழகுறாங்க. நாம ஏன் இப்படி பயந்தோம் இவங்க ஸ்டேட்டசப் பார்த்து என்ற வகை இத நினைவு இதற்குள்ளேயே ஆனந்திக்கு வந்துவிட்டது.

நவிலனிடம் இவள் பயந்தாளே அதற்காகத்தான் சிந்து இதைச் செய்கிறாள் போலும் என இப்போது நன்றாகவேப் புரிய, நிகரனை மட்டுமல்ல அவனது முழு குடும்பத்தையுமே இவள் இப்போதே நேசிக்கத் துவங்கி இருந்தாள்.

வாய் திறந்து கேளாததற்கும் முன்னும் இத்தனை அக்கறை என்றால் என்னாவாளாம் இவள்?

“போன தீருக் குட்டிய காணோம், போய் ஒரு செகண்ட் பார்த்துட்டு வந்துடுவோமா?” என சிந்து இப்போது தீரஜ் சென்ற வாசல் வழியாய் போக, அடுத்திருந்த அறை முன்பு பார்த்த அறையை விட வெகுவாக சின்னது, ஒரே ஒரு ஜன்னலுடன் சாதாரணமாய் இருந்தது. ஆனால் படு சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது.

அந்த அறைக்கு தெருவிலிருந்தும் ஒரு வாசல் இருக்க, அதன் வழியாய் உள்ளே வருகிறார் ஒரு நபர். “வாங்க மணியப்பா, வெயிட் பண்ணுங்க  ராஜிக்காட்ட சொல்றேன்” என அவரை வரவேற்றுவிட்டு அடுத்திருந்த அறைக்குச் செல்ல அங்குதான் சமையலறையும் அதன் அருகேயே உணவு உண்ணும் அறையும் இருந்தது. எல்லாமே முந்தைய அறையைப் போல் பழைய பாணி.

“இதுதான் அத்தை மாமா ஆரம்பத்தில் கட்டின வீடாம், பின்னால வீட எடுத்து கட்டுறப்ப அத்தைக்கு இந்த போர்ஷன இடிக்க மனசு வரல, அதனால அதை அப்படியே வச்சுட்டு வீட்ட எக்ஸ்டென்ட் செய்திருக்காங்க,

அந்த ராஜப்பான்னு ஒருத்தர் வந்தாரே அதுதான் பழைய வீட்டு ஹால், இப்ப யாருக்கு சாப்பாடு வேணும்னாலும் அங்க வரலாம், கண்டிப்பா சாப்பாடு கொடுக்கணும்னு மாமா ஒரு முறையாவே செய்துட்டு வராங்க. இது ஒன்னு மட்டும் என்னைக்கினாலும் நீயும் நானும் கண்டின்யூ செய்யணும்னு மாமா அத்தை எதிர்பார்ப்பாங்க, மத்தபடி இங்க நம்மட்ட இருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.

எங்களெல்லாம் பார்த்தா பயமா இருக்குன்னு சொன்னியாமே! எல்லோரும் சராசரி மிடில்க்ளாஸ்ல இருந்து உழைப்பால மேல வந்தவங்கதான், இங்க எல்லோர் மைன்ட் செட்டும் மிடில்க்ளாஸ் போலதான் இருக்கும், அதோட எங்க எல்லோருக்கும் ஆனந்திய ரொம்பவே பிடிக்கும், அதனால தேவையில்லாம டென்ஷன் ஆகாம எப்பவும் சந்தோஷமா வந்து போய் இருக்கணும் என்ன” என சிந்து விஷயத்தை முடிக்கும் பொதெல்லாம் கண் இமைகள் சற்று ஈரமாகுமளவு ஆனந்தி நெகிழ்ந்திருந்தாள்.

“ஹேய் சிரிச்சுகிட்டே கால முடிக்கணும், அத்தை இப்ப கிளம்புவாங்க, அதுக்குள்ள அவசரமா உங்க ரூமைப் பார்த்துடுவமா?” என அவசரமாய் இப்போது சிந்து விசாரிக்க,

“இல்லண்ணி மேரேஜாகி அங்கதான கூட்டிட்டு வருவாங்க, அப்ப பார்த்துக்கிறனே ஒரு ப்ளசண்ட் சர்ப்ரைஸா இருக்கும்” என இவள் மறுத்தாள்.

“ஸோ ஸ்வீட், சரி அப்ப நாம இப்போதைக்கு பை சொல்லிப்போம், அத்தை உனக்குன்னு ரெண்டு மூனு ட்ரெசெல்லாம் எடுத்துட்டு வந்திருப்பாங்க, இங்க உனக்குன்னு வாங்கி வச்சிருந்தத காணோம், அவங்க இப்ப உன் அக்கா வீட்டுக்கு போவாங்க, திரும்ப உங்க வீட்டுக்கு வந்து உன்ட்ட சொல்லிட்டுதான் கிளம்புவாங்க, அத்தை வர்றதுக்குள்ள ஃப்ரெஷப் ஆகி அவங்க கொண்டு வந்ததில் ஒரு ட்ரெச மாத்திகிட்டன்னா அத்தை சந்தோஷப்படுவாங்க, உனக்கும் ஐயோ இப்படி தூங்கின கோலத்தில் மட்டுமா நம்மள பார்த்துட்டு போய்ருக்காங்களேன்னு இருக்காதுல்ல, எப்படியும் நீ இன்னைக்கு லீவ் தானே எடுக்கப் போற? முகத்தப் பார்த்தாலே தூங்கின போலவே இல்லையே” என சிந்து சொல்லி முடிக்க,

அதை தன் திட்டமாகவே எடுத்து இவளும் சிந்துவுக்கும் இவளது வருங்கால மாமியாருக்கும் விடை கொடுத்தாள்.

பின் ரசித்து சிரித்து இவள் குளித்து தயாராகி, நிகரனின் அம்மா கொண்டு வந்திருந்த ஒரு வெண்மையும் மஞ்சளுமான புடவையை உடுத்திக் கொண்டு, இன்னும் காயாத தலை முடியை மட்டும் உலர்த்திக் கொண்டிருந்த போது

இவளது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

நிகரனின் அம்மா துணைக்கு ஒரு ட்ரைவரையும் கூட்டி வந்திருந்தாலும், ரென்ட் எ கார் முறையில் சென்னையில் ஒரு காரை எடுத்துக் கொண்டுதான் அவர் பயணித்துக் கொண்டிருந்தாலும் அவரை தனியாக அனுப்புவது மரியாதையாக இராது என இவளது அப்பா தன் மூத்த மகளின் வீடை காட்ட என உடன் போயிருந்தார்.

ஆக இவள் மட்டுமாக இங்கிருக்க, யாரும் இந்நேரம் வர வாய்ப்பே இல்லை என்பதும் தெரிந்திருக்க, யாராய் இருக்கும் என்றபடி பீப் ஹோல் வழியாக இவள் பார்த்தால், வந்திருந்தது நிகரன்.

வானம் திறந்து செந்நிற தேன்மின்னல்களை இவள் தேகம் மீதே சிந்தித் தெறிக்க,

இதுக்குள்ள எப்படி? இப்பதான அங்க இருந்தான்? என்ற நினைவோடும் “அச்சோ” என்ற வார்த்தையோடும் அரக்க பரக்க இவள் அவசரமாய் கதவைத் திறக்க,

சட்டென உள்ளே வந்து தன் பின்னாய் கதவை மூடினான் அவன்.

அடி உதடைக் கடித்தபடி நின்றிருந்த அவன் வம்பு செய்யப் போகிறான் என இவளுக்கும், விழுங்கப் போவது போல் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள் அவனுக்கும் தெரிகிறார்கள்தான், ஆனால் இவர்களை துரத்தி வந்து நிற்கும் பிரச்சனைதான் அவர்களுக்கு அப்போதைக்கு தெரியவில்லை.

தொடரும்…

உங்க கமென்ட்ஸ ஷேர் செய்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

திக்கெங்கும் ஆனந்தி – Comments Thread