திக்கெங்கும் ஆனந்தி 6 (2)

“என்ன பேசுற நீ? நான் அரைவேக்காடா உனக்கு? நீ எனக்கு ஃப்ரென்டா இல்ல நிகருக்கா? சும்மா ஓவரா சப்போர்ட் செய்ற? அந்த ஆள்லாம் இனி நான் கால் பண்ணா கூட எடுக்க மாட்டார்”

“இதெல்லாம் நம்புறாப்லயா இருக்கு? என்ட்ட தேடி வந்து சொல்லிட்டு போனாங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன் நான்”

“உன்ட்ட சொல்லிட்டுப் போனார்னா நான் ஏன் பேசணும்? நீதான் அவரது பாச தங்கையா மாறின சந்திரமுகியா இருக்கியே! நான் பேசிகிட்டு இருக்கப்பவே அந்த ஆள் பாட்டுக்கு எழுந்து போய்ட்டார்”

இரண்டு கைகளாலும் தன் தலைக்கு முட்டு கொடுத்தபடி இவளை முறைத்தாள் கௌஷி.

“நம்பாட்டிப் போ, அவர் லவ்வ பத்தி எழுதி வச்சிருக்க டைரின்னு ஒன்னு என்ட்ட காட்ட கொண்டு வந்திருந்தார், அதையும் அங்கயே போட்டுட்டு போய்ட்டார். இதை எடுத்துட்டு போங்கன்னு கூப்டுறேன் திரும்பியே பார்க்கலையே, அவர் காதலோட நியாபகமா வச்சிருக்க டைரியே வேண்டாம்னா என்ன அர்த்தம்?, இதில் இனி போய் அவர்ட்ட பேசுன்னு நீ வேற.” இது வரை தீவிரமாய் சொல்லிக் கொண்டு வந்தவள்

“ப்ச் அவர எனக்கு ஒரே ஒருநாள்தான் ஃபியான்சியா தெரியும். எல்லாத்தையும் பிடிக்காத கனவா நினச்சு மறந்துட்டு வெளிய போய்டுவேன் கௌஷி, கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும், அப்றம் சரியாகிடுவேன், என் அம்மா இறந்ததையே தாங்கி தாண்டி வந்துட்டேன்ல இதில் இந்த நிகர் விஷயம் எம்மாத்திரம்?” எனும் போது தன் வலிகளை தாங்க தாண்ட தவிக்கிறாள் என்பது கௌஷிக்கும் புரிய,

“சரி விடு அவரே போய்ட்டார்னா அப்றம் நமக்கென்ன?” என கௌஷி இவளோடான வாதத்தை ஒருவிதமாய் முடித்துவிட்டாள்.

“அது சரி அந்த டைரிய என்ன செய்த?” என இங்கே பேச்சை இழுத்தாள்.

“என்ன செய்ய? இந்தா வீட்ல வச்சா கூட யாரும் பார்த்துட்டா என்ன செய்யன்னு கைல தூக்கிட்டு சுத்திகிட்டு இருக்கேன்” என்றபடி தன் பேக்கிலிருந்து ஆனந்தி அதை எடுத்து வைக்க,

“வாவ்  செம்மயா இருக்கே பார்க்கவே, என்ட்ட குடேன், எனக்கு இந்த நிஜ லவ் கவிதைகள் எல்லாம் படிக்கணும்னு செம்ம ஆசை” என கௌஷி அதை கைப்பற்ற,

“சீ, படிச்சன்னா பிச்சிடுவேன், அடுத்தவங்க டைரியப் போய்..”

“ஹலோ நிகர் உன் ஆள்னா என் அண்ணா, அப்ப நான் மேனர்ஸ் டீசண்ஸி எல்லாம் அவங்க டைரிக்கு காட்டணும், ஆனா இப்ப நிகர் உனக்கு யாரோ ஒரு ஆள், அப்படின்னா எனக்கும் அப்படித்தான், அப்படி யாரோ ஒருத்தன் டைரிய அதுவும் அவனே வேண்டாம்னு போட்டுட்டு போய்ட்ட ஒன்ன நான் ஏன் படிக்க கூடாது? நிகர் மேல உனக்கு இப்பவும் இன்ட்ரெஸ்ட் இருக்குன்னா மட்டும் சொல்லு, நான் இதில் கை வைக்கல” என்றபடி தன்னிடமாக டைரியை இழுத்துக் கொண்ட கௌஷி

“பசங்க லவ் பண்ற பீரியட்ல அசத்தலா எழுதுவாங்கன்னு சொல்வாங்க” ஆசையாகவே அவள் டைரியை திறக்க,

“அடி பின்ன போறேன்” என்றபடி இவள் இழுக்க,

“அப்ப நிகரன் எனக்கு இன்னும் அண்ணாவாதான் இருக்காங்கன்னு ஒத்துக்க அறிவு ஜீவி, அப்றம் நான் ஏன் படிக்கப் போறேன்? நேரா அண்ணாவுக்கு ஒரு கால் அடிப்பேன், உங்க ஆந்த உங்கள மிஸ் செய்து என்னை பரண்டிகிட்டு இருக்குன்னு சொல்வேன், ஊடல டூயட் பாடி முடிக்க அண்ணா அடுத்த ஃப்ளைட்ல இங்க ஆஜர்” இன்னும் டைரியை பற்றி இருந்த கௌஷி இவளை கண்ணோடு கண்ணாகப் பார்க்க,

இவள் பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டாள். கையையும் டைரியை விட்டு எடுத்துவிட்டாள். நிகரன் விஷயத்தை இனி தொடரவே போவதில்லை என்கிறாள்.

“ம்க்கும், முதல் டைமா ஒரு நிஜ லவ் ஸ்டோரி கவிதையும் கதையுமா செம்மயா என்ட்ட மாட்டி இருக்கு” என்றபடி பக்கத்தை திறந்த கௌஷி கொஞ்சம் கூட சங்கோஜமின்றி வாசிக்கத் துவங்கினாள்.

‘ஒரு பக்க காதல்னு ஒரு பொண்ணுட்ட பேசாம பழகாம அவ இப்படித்தான்னு வளர்த்துக்கிற கற்பனைகள்ள எனக்கு நம்பிக்கை இல்ல, அதனால அவளப் பத்தி நான் எதையுமே கற்பனை செய்துக்க போறதில்ல, ஆனா இந்த நிமிஷங்களில் காதல் எனக்கு என்னதை தந்ததுன்னு என் மனசப் பத்தி மட்டும்தான் இங்க எழுதி வைக்கிறதா இருக்கேன்’ கௌஷி வாசிக்க வாசிக்க விழுந்து கொண்டிருந்தது யாராம்?

“என்னது பொண்ண பத்தி டூயட் இல்லையா,  அப்ப நான் கவிதைக்கு எங்க போக?” என கௌஷியோ எதோ ஒரு பக்கத்தை புரட்டினாள்.

“ஹேய் முதல் சந்திப்பாம், இது இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றபடி இப்போது ஒரு பக்கத்தை வாசிக்கத் துவங்கினாள்.

அன்று நிகர் தொழில் விஷயமாக சென்னை வந்திருந்தான். நவிலன் ஆஷிஷை சந்தித்துவிட்டு வரச் சொல்லி இருந்ததால் ஆஷிஷின் கல்லூரிக்குச் சென்றிருந்தான். ஆஷிஷிடம் நவிலனுடன் அரட்டை அடிப்பது போல் எல்லாவற்றை பற்றியும் பேசுவது இவன் வழக்கம்.

ஏதோ பேச்சு எதிலோ துவங்கி “அதெப்படி அண்ணா சொல்றீங்க, எனக்கு என்னமோ இதிலெல்லாம் உடன்பாடு இல்ல.ஒரு பொண்ண பார்க்கவும் ஒரு பையனுக்கு பிடிக்குது, அதுவும் மியர் அப்பியரென்ஸ்னு இல்லாம கேரக்டர் வேல்யூஸ்னு எல்லாமே பிடிச்சு ஜென்யூன் லவ் வருதுன்னே வச்சுகோங்க, அந்த பையன் போய் அந்த பொண்ணுட்ட சொல்லி கன்வின்ஸ் செய்தான்னா அந்த பொண்ணுக்கு வர்றத எத வச்சு லவ்ன்றீங்க, அது பையனோட மார்கெட்டிங் ஸ்கில்லோட சக்ஸஸ்னு வேணா சொல்லுங்க.. ” என இவன் வாரிக் கொண்டிருக்க,

“ஓஹோ அப்ப அரேஞ்ச்ட் மேரேஜ்ல மட்டும் எல்லாம் சரியா இருக்குன்ற? பணம், படிப்பு, தொழில்னு பார்த்து மட்டுமே செய்றதுதான 99% அரேஞ்ச்ட் மேரேஜ், டவ்ரி பார்கெய்னிங் ஸ்கில்தானே அங்கே எல்லாத்தையுமே முடிவு செய்யுது?” ஆஷிஷ் வாதிட,

“நான் எங்க அரேஞ்ச்ட் மேரேஜ்தான் சரின்னு சொன்னேன்? என்னைப் பொறுத்தவரைக்கும் லவ் மேரேஜோ அரேஞ்ச்ட் மேரேஜோ ரெண்டு பேரோட வேல்யூ சிஸ்டமும் ஒத்துப் போகணும், அப்படின்னா அவங்க லைஃப் அதாவே அழகா மாறிடும்” இவன் பதில் சொல்லிக் கொண்டிருக்க,

“இப்ப ஒருத்தன் எந்த சூழ்நிலையிலும் பொய் புரட்டு பேசக் கூடாதுன்ற அடிப்படையில் வாழ்ந்துட்டு இருக்கான்னு வைங்க, அவனுக்கு வர்ற வைஃப் சூழ்நிலைக்குத் தக்க பொய் சொல்லிக்கலாம்ன்ற நம்பிக்கையில் அமையுதுன்னு வைங்க, அது லவ் மேரேஜா இருந்தாலும் அரேஞ்ச்ட் மேரேஜா இருந்தாலும் அங்க தினமும் சண்டைதானே இருக்கும்?.” என விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க,

இவர்கள் மருத்துவமனையின் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளம் செல்லும் படிக்கட்டில் நின்றபடி பேசிக் கொண்டிருக்க, தரைத் தளத்திலிருந்து முதல் தளம் நோக்கி இதே படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்து கொண்டிருந்த ஒரு பெண் குரல் “நான் சொல்ல வர்றதே வேற கௌஷி, அந்த பாக்யாவ பார்த்தா நீ ஏன் தெரிச்சு ஓடுற? உன் ஊர்தானே அவ? ஏன்னா அவட்ட ஒரு விஷயத்த சொன்னா அது முழு காலேஜுக்கும், ஏன் எல்லா ஸ்டாஃபுக்குமே சொன்ன மாதிரி,  அதனாலதான் நானும் அவ கூட சேர்ந்துக்க மாட்டேன்,

அதே நேரம் என் அக்காட்ட கூட சொல்ல முடியாத விஷயங்களெல்லாம் நான் உன்ட்ட தான் வந்து ஒப்புவிப்பேன், ஏன்? உன்ட்ட சொன்னா ஒருகாலமும் விஷயம் வெளியவே போகாது. வைஸ் வெர்சா, நானும் வெளியே போய் சொல்லிட்டு இருக்கமாட்டேன்றதாலதான நீயும் என்ட்ட ஓபனா பேச ஆரம்பிச்ச, இதைத்தான் சொல்றேன் ஒரே வேல்யூஸ் இருந்தா ஒத்து போய்டும்னு, அரேஞ்ச்ட் மேரேஜோ லவ் மேரேஜோ நம்ம கூட வேல்யூஸ் ஒத்துப்போறவங்கள கண்டு பிடிச்சு கல்யாணம் செய்துட்டோம்னா மேரேஜ் லைஃப் ஜெயிச்சுடும்னு சொல்றேன், ஆனா அதை எப்படி கண்டு பிடிக்க” என சொல்லியபடியே இவர்களை நெருங்கி வந்து, கடந்தும் போனது. வேற யார் ஆனந்திதான்.

தான் பேசிக் கொண்டிருந்ததை அப்படியே நிறுத்திவிட்டு அவள் பார்வையைவிட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றது நிகரன். காரணம் நிச்சயமாய் ஒத்த சிந்தனை மட்டுமே!

“உன்ன போல தாறுமாறா யோசிக்க நீ மட்டும்தான் இருக்கன்னு இல்லை போலயே!” என்ற ஆஷிஷின் கமென்ட்டில் நிறைவுற்றது அந்த நிகழ்வு.

இதை வாய்விட்டு வாசித்து காட்டிய கௌஷி “ம்க்கும் கொஞ்சம் கூட ரொமான்டிக்காவே இல்லையே, அவ தனியாளாதான் வந்தா ஆனா எனக்குள்ள திருவிழாவே வர்ற போல இருந்துச்சு, அவ முகம் என்ன, முடியென்னன்னு எவ்வளவு ரொமான்டிக்கா சீன டிஸ்க்ரைப் செய்திருக்கலாம்..” என சொல்லிக் கொண்டே அடுத்த பக்கத்தை திருப்ப,

“போடி இவளே” என்றபடி டைரியை பிடுங்கி மூடி இருந்தாள் ஆனந்தி.

“ஹலோ கதை படிச்சுட்டு இருக்கப்ப என்னடி பாதில பிடுங்குற? உன் ஆள் டைரின்னா மட்டும்தான் பிடுங்க உனக்கு ரைட் இருக்கு” கௌஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே டைரியை தன் பேக்கில் இவள் வைத்துக் கொள்ள,

“அப்ப நிகர் எனக்கு அண்ணாதான்ற?” என இவள் விஷம பாவத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் போது,

“நீ ஒரு மக்கு” என கௌஷியின் தலையில் கௌஷியின் புத்தகத்தாலேயே ஒரு போடும் போட்டுவிட்டு கிளம்பிவிட்டாள் ஆனந்தி.

அன்று இரவு கௌஷி சொன்னதுதான் பலித்தது. என்ன நிகரனிடம் நேரடியாக மொக்கை போடவில்லை ஆனந்தி. ஆனால் அவன் டைரி முழுவதையும் படித்து முடித்திருந்தாள்.

மாதம் ஒருமுறை இவர்களுக்கு ஷோஷியல் அவர்னெஸ் என்ற ஒரு வகுப்பு இருக்கும். நிகரன் முதல் நாள் இவளைப் பார்த்த மாலைதான் இவர்களுக்கு முதல் முறை அந்த சோஷியல் அவர்னெஃஸ் வகுப்பு போலும். ஆஷிஷ்தான் சொஷியல் அவர்னெஃஸ் வகுப்புகளை கையாள்வது.

எந்த வருடத்தை சேர்ந்த மாணவ மாணவியரிலும் விரும்புவோர் ஷோஷியல் அவர்னெஃஸ் வகுப்பில் கலந்து கொண்டு அந்த வருட இறுதியில் அதற்கென நடக்கும் பரீட்சை எழுதலாம். இவள் விரும்பி அங்கு போக ஆஷிஷுடன் சும்மா அங்கு வந்திருக்கிறான் நிகரன்.

பல வகுப்பு மாணவர்கள், கூட்டம் என இவள் நிகரனை அப்போதுமட்டுமல்ல எப்போதுமே கவனித்திருக்கவில்லை.

அவனோ ஒருகட்டத்தில் மாதம் தோறும் இந்த வகுப்பை கணக்கிட்டே வந்து இவள் வாயாடுவதையெல்லாம் கேட்டு ரசித்துவிட்டு போயிருக்கிறான்.

அந்த முதல் வகுப்பில் ஆஷிஷ் எல்லோரையும் அறிமுகம் செய்து கொள்ளச் சொல்ல, “எதுக்கு BDS எடுத்தீங்கன்னும் சொல்லணும், ஒன்னு அஃபீஷியல் ரீசன், அதாவது நம்ம டீன் இந்த கேள்விய கேட்டா என்ன சொல்வீங்களோ அப்படி ஒரு பதில், இன்னொன்னு உண்மையான ரீசன்னு ரெண்டையும் சொல்லணும், டைம் ஜாலியா போகணும்” என்க

வந்த பதில்களெல்லாம் அஃபீஷியல் ரீசன் பிடிஎஸ் என் கனவு லட்சியம் என்ற வகையிலும், உண்மை பதில்கள் “மெடிசின் கிடைக்கல, இதுதான் கிடச்சுது” என்றுமே இருக்க,

ஆனந்தியோ அவளது அப்பா “குட்டிமா பெண் பிள்ளைகளுக்கு சொந்த சம்பாத்யம்ன்றது ரொம்ப முக்கியம்டா, வர்றவன் கைய மட்டுமே நம்பி நிக்றதுன்றது எல்லா நேரத்திலும் சரியா இருக்கும்ன்னு சொல்ல முடியாதே! அதனால உனக்குன்னு ஒரு வேலை கண்டிப்பா வேணும், அதே நேரம் உன் குழந்தை குடும்பம்னு கூட இருந்து பார்த்துக்க முடியாம, 16 மணி நேரம் ஆஃபீஸ்ல கிடக்கிற போல வேலைக்குப் போனாலும் உனக்கு நிம்மதியாவா இருக்கும்? அதனாலதான் அப்பா சொல்றேன் டென்டிஸ்ட்டுக்கு படி… பின்னால க்ளினிக் வச்சுக்கலாம்.. தினமும் ஃப்யூ அவர்ஸ் க்ளினிக் போய்ட்டு வா. உனக்கு இன்கம்மும் இருக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் வசதியாவும் இருக்கும்” என சொல்லி 11ம் வகுப்பிலேயே சயின்ஃஸ் பயாலஜி க்ரூப்பில் சேர்த்துவிட்டதையும் விளையாட்டாக சொன்னாள்.

“சோ உன் அப்பாவோட ஆசைய நிறைவேத்ற அப்படியா?” என ஆஷிஷ் இப்போது விசாரிக்க,

“அப்படில்லாம் இல்ல அப்பா வ்யூ எனக்கு 100% அக்ரி செய்ய முடியுது, அதோட அப்ப இருந்தே பிடிஎஸ்னு தோணிட்டதால நான் நினச்ச கோர்ஸ் எனக்கு கிடச்சிருக்குன்னு படிக்கவும் பிடிச்சிருக்கு” என இவள் பதில் சொல்லி இருக்கிறாள்.

.‘சுயகால்ல நிற்க ஒரு தொழில், அதுவும் கூட என் குடும்பத்தை பார்த்துக்கிடுறதுக்காகத்தான், மத்தபடி எனக்கு குடும்பம்தான் ரொம்பவும் முக்கியம்’ என்பது நிகரனின் சுபாவமாம். அவனுக்கு ஆனந்தியின் சுபாவம் மற்றும் வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் எல்லாம் அவனைப் போலவே இருப்பதாகத் தோன்ற இந்த நிகழ்விலிருந்து இவளிடம் சற்றாய் மனம் சரியத் துவங்கி இருக்கிறான்.

அடுத்து சில பல சந்திப்புகளுக்கு பிறகு, அதாவது ஒருபக்க லவ் போல ஒன் சைட் மீட்டிங் இது, வர்றது அவ பேசுறத கேட்பது போய்விடுவதுன்னு. அடுத்து அவன் அவளோடு பேசும் சூழல் ஏற்பட்டதாம்.

வெகு வெகு ஆவலாக ஆனந்தி இந்த பக்கங்களை வாசித்துக் கொண்டிருந்தாள் எனச் சொல்லத் தேவையில்லை.

அன்று இவளுக்கு ப்ராக்டிகல் எக்சாம். கல்லூரி மருத்துவமனையில் அது நடக்கும். வரும் நோயாளிகளுக்கு தேவையான பல் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் இவளும் இவள் பேட்ச் மாணக்கரும். அது செமஸ்டர் பரீட்சை.

எக்ஸ்ரேக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்த நோயாளிகளுக்கு வரிசைப் படி இவளது பேட்ச் மக்கள் ஒவ்வொருவராக எக்ஸ்ரே எடுத்து முடிக்க, இவளுக்கு நோயாளி யாரும் இல்லை. எக்ஸ்ரே தேவையோடு வரும் நோயாளிக்காக இவள் காத்து நிற்கத் துவங்கினாள்.

வழக்கமாய் இது அதிக நோயாளிகள் வரும் நேரம்தான். ஆனால் ஏனோ இன்று இல்லை.

எக்ஸ்ரே எடுக்கும் பிரிவும் அறைகளும் இவள் மருத்துவமனையில் பேஸ்மென்டில் இருக்கும். அதன் தரைதளத்துக்கும் யாராவது வருகிறார்களா எனப் பார்க்க முதல் தளத்துக்குமாக ஓடிக் கொண்டு இருந்தாள் இவள்.

பரீட்சை நேரம் முடியும் முன் எக்ஸ்ரே எடுத்து அது சம்பந்தமான அனைத்தையும் இவள் செய்தாக வேண்டும். நேரம் செல்லச் செல்ல யாரும் வரவில்லை எனவும் இவள் எக்சாம் அவ்வளவுதான் போல என்ற நிலைக்கும் உச்ச பதற்றத்துக்கும் வந்துவிட்டாள்.

அன்றும் சென்னைக்கு வந்திருந்த நிகர்,  ஏதேச்சையாய் நின்று கொண்டிருந்த இடம் அந்த எக்ஸ்ரே பிரிவுக்கான கட்டிடத்திற்கு எதிரில் இருக்கும் மரங்களுக்கு அடியில். இவள் மேலே வருவதும் உள்ளே ஓடுவதுமாய் இருப்பதை கவனித்தவன், என்ன விஷயம் எனப் பார்க்க பேஸ்மெண்டுக்கு வந்துவிட்டான்.

“எக்ஸ்ரே எடுக்க சொல்லி அனுப்பினாங்களா சார், உங்க ஃபைல இங்க கொடுங்க, நீங்க நேர எக்ஃஸ்ரே எடுத்துடலாம், ஆனந்தி உனக்கு பேஷண்ட் வந்தாச்சு, கடகடன்னு எடுத்துட்டு ஓடு, டைம் ரொம்பவே லேட்” என அங்கிருந்த ரிஷப்ஷனிஸ்ட் பரபரக்க இவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

இவனிடம் ஓடிவந்த ஆனந்தியோடு எக்ஸ்ரே சேம்பர் பார்த்து நடந்தபடி “உங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கத் தெரியுதுன்னு காட்டதானே எக்ஸ்ரே வேணும், எடுத்துக்கோங்க, பட் நான் பேஷண்ட் இல்ல, சோ ப்ரெஃஸ்க்ரிப்ஷன் எதுவும் இல்ல” என இவன் சொல்ல,

“அச்சோ சார் அப்படில்லாம் எடுக்க முடியாது” என அவள் மறுத்தாள்.

“ஓ கண்டிப்பா ப்ரிஸ்க்ரிப்ஷன் வேணுமா, இருங்க போய் வாங்கிட்டு வந்துடுறேன், அடுத்த ப்ளாக்தானே உடனே வந்துடுவேன்” என இவன் அவள் பதற்றத்தை குறைக்க முயல, அவளோ

“ஐயோ இல்ல சார், அப்படில்லாம் எக்ஸ்ரே சும்மா சும்மா எடுக்க கூடாது. அதுவும் பல் எக்ஸ்ரேவ ரொம்ப அவசியம் இல்லைனா அவாய்ட் செய்யணும் பார்த்துக்கோங்க. பல்லுக்கு பக்கத்தில் தைராய்ட் கிளாண்ட்லாம் இருக்குல்ல அதை பாதிச்சிடக் கூடாது” என முழுக்கவும் இவனுக்காக பேசினாள்.

“என்ன மேம் எப்படியும் அவசியம்னா ஒரு டைம் எடுக்கதானே செய்றோம், அது போல நினச்சுக்க வேண்டியதான, ஒரு டைம்தானே” என இவன் எத்தனை

தான் அவளை சம்மதிக்க வைக்க முயன்றும் அவள் கடைசி வரை சம்மதிக்கவே இல்லை. செமஸ்டர் பரீட்சையில் அதுவும் ப்ராக்டிகல் பரீட்சையில் ஃபெயிலாகிவிடுவோமோ என ஒரு பயம் இருக்கும் நிலையில் எந்த ஒரு நபருமே உட்சபச்ச அழுத்தத்தில் தனக்கு என்ன வேண்டும் என தன் வேலையில்தானே குறியாய் இருப்பது இயல்பு. அப்போது கூட அடுத்தவருக்கு சின்னதாய் கூட தீங்கு செய்து விடக் கூடாது, தவறாக பயன்படுத்தி விடக் கூடாதென  நினைத்த அவளது அந்த செயலில்தான் இவள்தான் தனக்கு வாழ்க்கைக்கும் துணையாக வர வேண்டும் என நிகர் விரும்பத் துவங்கினாம்.

இது தவிர கௌஷி ஆசைப்பட்டது போல சில பல கவிதைகள், குட்டி குட்டி நிகழ்வுகள் என எல்லாம் இருந்தன. வாசித்து முடிக்கும் போது விடியலில் வானம் வெளுத்திருந்தது. ஆனந்தியின் மனமோ கருவுற்ற கார்மேகம் போல் காதலால் சூல் கொண்டிருந்தது.

அதெல்லாம் சரிதான். அதை நிகரனிடம் எப்படிச் சொல்லப் போகிறாளாம் இவள்?

தொடரும்…

உங்க கமென்ட்ஸ ஷேர் செய்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப் படுவேன்.

திக்கெங்கும் ஆனந்தி – Comments Thread