திக்கெங்கும் ஆனந்தி 5 (3)

“பணக்காரங்க சார் நீங்க உங்களுக்கு பார்க்கதெல்லாம் வேணும், தேடி பிடிச்சு வாங்கினா இன்னும் கொஞ்சம் கிக், அதை கொஞ்ச நாள் ஷோ கேஸ்ல வைப்பீங்க, அப்றம் அது ஸ்டோர் ரூம்லயாவது இருக்குமோ இல்ல குப்ப தொட்டிக்கு போகுமோ, ஆனா ஸோ கேஸ்க்கு புதுசு புதுசா எதாவது வந்துகிட்டே இருக்கும்” என அவனுக்கு ஒரு விளக்கம் வருகிறது அவளிடமிருந்து.

இன்னும் கைப்பையையும் மொபைலையும் ஒழுங்காய் வைப்பது போல் எதையோ அவள் செய்ய முயன்று கொண்டிருந்தாலும் கண்ணிலிருந்து சுட சுட நீரும் வடிகிறது அவளுக்கு.

“நதீ!! நீ என்னை கேரக்டர் அசால்ட் பண்ற நதி. என் கேரக்டர முடிவு செய்ற அளவுக்கு உனக்கு என்னைப் பத்தி அவ்வளவு தூரம் தெரியக் கூட செய்யாது” குரல் உயர்த்தாமல் வந்தாலும் அழுத்தமான கர்ஜனை வகைதான் வாக்கியம். அவனிடம் கோபம் ஆழ உயரமாய் குடி வந்திருந்ததுதான். ஆனால் அவள் கண்ணீர் முன் அவனுக்கு அதை வெளியிட பிடிக்கவில்லையோ? அல்லது உச்சகோபமே அவளிடம் அவனால் இவ்வளவுதான் முடிகிறதா? அவனுக்கே அவன் நிலை புதிது!

என்ன வேண்டுமானாலும் வார்த்தை சிதறு, ஆனால் விஷயம் என்னவென்று சொல் என  கேட்டவன் இவன்தானே! அவள் ஈரக் கண்கள் நிமிர்த்தி பார்த்த வகையில் இது வேற ஞாபகம் வர,

“ப்ச் என்ன நதிமா இது? என்ன பேசுற நீ? இதுல என்ன தப்பா இருக்கு? நவில் ஆஷிஷ் அண்ணா விஷயம் எனக்கு தெரியாதுன்னு சொல்றேன்ல, மத்தபடி உங்க வீட்ல வந்து முறையா பெண் கேட்டிருக்கேன் அவ்வளவுதானே, இதுல எத தப்புன்ற?”

“ஆமாமா ரொம்ப முறையா கேட்டிருக்கீங்க?” இப்படியாவது பதில் பேசும் அளவுக்கு அவளும் இறங்கி வந்தாள்.

“ஏன் மேட்ரிமோனில பொண்ண பார்த்து பிடிச்சு  வீட்ல பெண் கேட்டா மட்டும்தான் முறையா பெண் கேட்கிறதா? நேர்ல பார்த்து பிடிச்சு கேட்டா அது ஃப்ராடுதனமா? என்ன லாஜிக் இது?”

“ரொம்ப நல்லா பேசுறதா நினைப்போ? மேட் ரிமோனில பொண்ணோட ப்ரைஃபல பார்க்காங்க, இந்த ஒன் சைட் லவ்னு சொல்ற பேக்குங்களாம் மூனு டிகிரியில் உன் முகத்தை திருப்பி இருந்தது நல்லா இருந்தது, உன் முன் நெத்தி முடி ஆடிச்சா, அதில் என் உயிரே பிழச்சதுன்னு தத்துபித்துன்னு உளருவாங்க. வாழ்நாளைக்கும் அந்த பொண்ணு என்ன மூனு டிகிரில முகத்த திருப்பிகிட்டேவா நிக்க முடியும்? அப்றம் நான் நினச்ச போல இல்ல நீன்னு கழுத்தறுப்பாங்க.  அவனோட கற்பனை சுகத்துக்கு பலியாடு இந்த பொண்ணா? இப்படி சில கேனம்னா மத்த கூமுட்டைஸ் வேற ரகம்

என் க்ளாஸ்மேட்டயும் ஒருத்தன் மூனு வருஷமா உன்னை மனசுகுள்ளயே லவ் பண்றேன்னு சொல்லிதான் கரச்சான். அப்றம் போன மாசம் ப்ரேக்கப் செய்தான். என்னன்னு கேட்டா, எங்க அண்ணாவும் லவ் மேரேஜ், இப்ப எங்க அண்ணி எங்க அம்மாவ நல்லாவே நடத்தல, அதனால நான் லவ் மேரேஜே செய்றதா இல்லைன்னு சொல்றானாம். நான் சக மனுஷங்கள எப்படி நடத்துவேன்னு கூட தெரியாம என்னத்த மூனு வருஷமா காதலிச்சான், போறான் லூசுன்னு சாதாரணம் போல சொல்லிட்டுதான் போனா என் க்ளாஸ்மேட். அப்றம் பார்த்தா அவ சூசைட் அட்டெம்ட். அவள காப்பாத்திட்டாங்க, ஆனா தொண்டைக்குள்ள தண்ணி கூட ஒரு ஸ்பூன் அளவுதான் ஒரு டைம்ல இறங்கும், குடிச்ச மருந்துல வெந்துட்டு த்ரோட்.

எந்த லூசுக்கோ பிடிச்ச பைத்தியம் கடைசில இவள் தொண்டையில் வந்து விடிஞ்சிருக்கு.

இப்படி ஆயிரம் கதை என்னால சொல்ல முடியும்.

ஒன் சைட் லவ்ன்றது டேஞ்சரஸ் ஃபேன்டசி. எனக்கு அது செட் ஆகாது நிகரன் சார்.

நானெல்லாம் நல்லபடியா கல்யாணம் செய்து குழந்தை குடும்பம்னு நிம்மதியா வாழ நினைக்கிற ரகம். என்னை தலைல தூக்கி வச்சு ஆடுற ஹீரோல்லாம் எனக்கு தேவையில்ல, எனக்கு நிறையும் இருக்கு குறையும் இருக்குன்னு புரிஞ்சி ஏத்துக்கிற மூளையும் மனசும் ஆரோக்யமா இயங்குற ஒருத்தன் எனக்கு போதும்”

இத்தனை பேசி முடிக்கும்போதெல்லாம் முதலில் இருந்த இருண்ட முகம் மாறி ஒருவித தெளிவுக்கு கூட வந்திருந்தாள் பெண். அவள் முடிவுதான் 100% சரி என அவள் தைரியப்படுவது நிகரனுக்குப் புரியாமல் இல்லை.

ஒருபக்கம் தவித்தாலும் இன்னொரு புறம் அவளை சின்னதாய் ரசிக்கவும் வருகிறதே இவனுக்கு.

“ஏய் நதிப் பொண்ணே, இதே இந்த விஷயத்த நானும் இப்படி மட்டுமேதான் யோசிப்பேன், இன்ஃபேக்ட் அதுதான் நம்மள சேர்த்து வச்ச விஷயமுமே, என்ன நடந்ததுன்னு சொல்றேன் உனக்கே புரியும்” அந்த ரசனை புன்னகையாய் வெளிப்பட, அவன் வார்த்தைகளை எடுத்து வைக்கத் துவங்க, அவளோ

“இப்ப என்ன வேணாலும் கதை சொல்லாலாமே சார் நீங்க” என இடையிட்டாள்.

ஒருகணம் சட்டென நின்று போனான்தான் அவன். பின்னே இவனைப் பற்றி எந்த அளவுக்கு அவளுக்கு நம்பிக்கையின்மை வந்திருக்கிறது?

அடுத்த பக்கம்