ஜிலேபிக் கெண்டை

என் ஹீரோஸ் தன் ஹீரோயின்ஸ்க்கு வைக்கிற பெயரைப் பத்திய ஆராய்ச்சில் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் களமிறங்கவும்… சில நியாபகங்கள். அதில் ஒன்று இது.
 
விவன் ANPE ல ரியுவுக்கு வைக்கிற ஜிலேபி கெண்ட… என்ற பெயர் ஒரு மீனுடைய பெயர்.
 
தென்காசி புறங்களில் அதை பண்ணா மீன் என சொல்லுவர். மீன் சாப்பிடுபவர்கள் அதையும் சாப்பிடுவார்கள்தான்.
 
ஆனால் பராக்கிரம பாண்டியரது அரண்மனை இருக்கும் விந்தன் கோட்டை புறங்களில் அந்த மீனின் பெயர் ஜிலேபிக் கெண்டை.
 
ஏனோ மீன் சாப்பிடுபவர்கள் கூட அங்கு அதை சாப்பிடுவதில்லை.
வலையில் மாட்டினாலும், திரும்ப எடுத்து குளத்திலேயே விட்டுவிடுவார்கள்.
 
ஜிலேபி என்று வந்து இனிப்பை நியாபக் படுத்துவதாலும்,
 
மீனாகவே இருந்தும் கைலயே மாட்டினால் கூட அதுக்கு ஆபத்து கிடையாதுன்ற ஸ்பெஷல் ஸ்டேச வச்சும் ..
 
விவன் இப்படி ரியூக்கு பெயர் வச்சுடார்னு வச்சுக்கலாம்.