சிலகாலம்

நின்று போன இக் காலசுவற்றை

சிலகாலம்

நின்றே கடந்து கொள்கிறேன் நான்

உன்னில் தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்

என்னில் நீயும்தான்

நம்மை நாம் என்றோ தேடிக் கொள்ளலாம்.

நின்று போன இக் காலசுவற்றை

சிலகாலம்

நின்றே கடந்து கொள்கிறேன் நான்

………………………………………………………………………………………

காட்டுப் பூக்கள் கரம் தட்டிய காற்று

கடக்கும் வெளிகளையெல்லாம்

சிறகின்றி நான் சேர்ந்து கொள்கிறேன்

சுவாசத் துகள்களில் உன்னை சுமந்து கொள்கிறேன்

நட்சத்திர முற்றங்களில் நடந்து கொள்கிறேன்

பாதம் பயணிக்கும் பால் வண்ண கனவுகளில்

மாத்திரம் அல்ல

இதயத் துடிப்புகளிலும்

இமைப் பீலி தழுவி நிற்கும் கரு நிற மையிலும்

உள்ளும் புறமுமாய் ஊடுருவிக் கிடப்பவன் நீயே என்பதால்

நின்று போன இக் காலசுவற்றை

சிலகாலம்

நின்றே கடந்து கொள்கிறேன் நான்

Leave a Reply