சித்திரமே நில்லடி

மலர்கள் கேட்டேன்  மந்திகள் தந்தனை

மந்திகள் மேய்த்தே மண்டை காய்ந்தனை

ம்….அத சொன்ன  பொண்ணு situationனே  தேவலை……அந்த பொண்ணு எதையோ கேட்டதுக்கு எதையாவது  கொடுத்துருக்காங்களே அவங்க அவர்….நம்ம ஆளும் இருக்காரே……மௌன சாமியார்….நம்ம எதையாவது கேட்டா அவர் அதுக்கு காது கூட கொடுக்க மாட்டார். நொந்து கொண்டிருந்தாள் ஓவியா.

பேரண்ட்ஸ் பார்க்ற மாப்ளையத்தான் கல்யாணம் செய்யனும்னு இப்டி அரேஞ்ச்ட் மேரேஜுக்குள்ள வந்து மாட்னது என் தப்பு….

எதோ மேரேஜ் fix ஆனதும் ஒரு மூனு நாள் மாஞ்சு மாஞ்சு அவர் அம்மா அப்பா கல்யாணத்துல இருந்து இவர் பிறந்து பெரியாளான வரை எல்லா கதையும் சொன்னார். அதுல விழுந்தேன் நான்.

அவர் பேசுன ஸ்பீடைப் பார்த்து இனிமே நமக்கு கூட வீட்ல இருக்ற gabby ovi  பட்டம் காணாமப் போய்டும்னு ஏமாந்து போய் இந்த கல்யாணத்துல வந்து மாட்னேன்.

அதுக்கப்புறம் எப்ப “எதாவது பேசுங்களேன்பா” ன்னு கேட்டாலும்….அதான் என்னைப் பத்தி  எல்லாத்தையும் சொல்லிட்டனே….அப்டின்னு ஒரு answer….அதுக்கும் மேல எதாவது கேட்டா என் டைரீஸ்லாம் இருக்கே படிச்சுப்பாரு….உனக்கு மட்டும்தான் அதப் படிக்க உரிமைனு ஒரு லுக்….”என்னப்பா நீங்க” அப்டின்னு நாம மூனாவது கேள்வி கேட்கிறப்ப சார் தூங்கி இருப்பார்.

தினமும் நைட் 9 மணிக்கு வீட்டுக்கு வர்றது. நியூஸைப் பார்த்துட்டே சாப்ட வேண்டியது. சாப்ட்ட கைய கழுவிட்டு அப்டியே போய் பெட்ல விழுந்துட வேண்டியது. ஹால்ல இருந்த தட்டை எடுத்து நான் கிட்ச்சன் சிங்க்ல வச்சுட்டு வர்றதுக்குள்ள சார் நித்திரையில third heaven  தாண்டி இருப்பார்.

காலையில நான் எந்திரிச்சு கிட்சன் வேலை முடிச்சு வர்ற நேரம், நேத்து நான்  புக் செல்ஃப்ல அடுக்கி வச்ச books ஐ எல்லாம் திரும்பவும் டேபிள்ள பரத்திப் போட்டுட்டு, இவர் மட்டும் டிப் டாப்பா டை கட்டிட்டு இருப்பார்.

பச்சப் புல்ல தட்டுல போட்டு கொடுத்தாலும் நிமிர்ந்து பார்க்காம சாப்டுட்டு வழக்கம் போல நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போவாரோன்னு எனக்கு ஒரு doubt ரொம்ப நாளா இருக்குது.

அவர் சாப்டுற ஸ்டைல் அப்டி…ஒன்றே face ஒருவகையே expression னு ஒரே facial எக்ஸ்ப்ரஷோனடதான் தினமும் சாப்டுவார். என்ட்ட பேசிட்டேன்னு கணக்கு செய்துக்றதுக்காக இந்த நல்லாருக்கு டயலாக் போல. ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்ற officeக்கு packed லன்ச் வேற.

திருப்பி 9 மணிக்கு வீடு, அதே நியூஸ்…அதே பெட், அதே குட் இல்லாத நைட்… சனிக் கிழமை இன்னும் மோசம்.

Half working day ந்னு பேரு சாயந்தரம் 5 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். அதுக்குப் பிறகு கண்டிப்பா ஒரு பார்க் விசிட் உண்டு. செடி பூன்னு இருட்ற வரைக்கும் பார்ப்பார்…என்ன பெரிய இருட்டுற வரை…அரை மணி நேரம் கிடைக்கும்…அதுக்குள்ள நான் 4000 சென்டன்ஸ் பேசிருப்பேன் அவர் 4 சென்டன்ஸ் சொல்லிருப்பார்….அதுவும் என்னதுங்கிறீங்க….”என்னப்பா எதுவுமே சொல்ல மாட்டேன்றீங்க…”அப்டின்னு நான் கேட்டுறுப்பேன்….அவர் I’m listening அப்டின்னு ரிப்ளை செய்துறுப்பார்… இதுவே நாலு தடவை repeat ஆகிருக்கும்…

அப்றம் இருட்டுனதும் ஒரு பென்ச்ல  உட்கார்ந்து ஐ பேட்ல பாட்டுக் கேட்பார் பாருங்க….நான் அந்த ஐப் பாட எதாவது பிச்சக்காரனுக்கு தூக்கிப் பிச்சப் போட்டுடலாமான்னு கூட நினச்சிருக்கேன்….இருந்தாலும் அது நான் அவருக்கு வாங்கி  கொடுத்த கிப்டுன்ற ஒரே காரணத்துக்காக அதை இன்னும் நான் எக்ஸிக்யூட் செய்யல….

ஆனா கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஒடிக்கிட்டு இருக்ற ப்ளனா நிச்சயமா எக்‌ஸ்சிக்யூட் செய்யப் போறேன்….இன்னைக்கு நாலு மணிக்கு flight. அம்மா வீட்டுக்கு போறேன்…திரும்பி வரவே மாட்டேன்…

அவர்ட்ட எப்பவும் பிசின்னு சொல்ற ஒரு மொபைல் இருக்குது…அந்த படாவதி மொபைலுக்கு கூப்டுறேன்…
50 தடவை ட்ரை செய்ததுக்குப் பிறகு லைனல்ல வாறார்.

“என்ன எதுவும் எமெர்ஜென்சியா?”

Labour pain ஆரம்பிக்கவும் கால் செய்தேன்னா, பிள்ளைக்கு எல் கே ஜி அட்மிஷன் போடுறதுக்குள்ள காலை பிக் அப் செய்துடுவார்னு தெரியுது…

“நான் எங்க அம்மா வீட்டுக்குப் பொறேன்…”

“ஓ  good….இன்னைக்கு இவ்னிங் ப்ளைட்ல டிக்கெட் புக் செய்துர்றேன்…டாக்ஸி வரும் கிளம்பி இரு…பை…”

போனை வைத்திருந்தார் அவர்.

அடப்பாவி….நான் எடுத்த முடிவு தப்பே இல்லை….

அம்மா வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாகிறது. பகலெல்லாம் பேச்சு சத்தம். வேற யாரு அம்மா, அதோட பக்கத்து வீட்டு அக்கா எல்லோரும் தான். ஆனா ரெண்டாவது நாள் நைட் அம்மா  “என்னடி கல்யாணமாகி முதல் தடவை வந்துருக்க அதுவும் மாப்ள கூட வராம தனியா” இந்த கேள்வியிலேயே எனக்குள்ள ஒரு முக்கிய பலூன்க்கு காத்துப் போய்ட்டு…. சீக்கிரமா வேலை தேடனும்…மனதிற்குள் தீர்மானித்துக்  கொள்கிறேன். மறு நாள் என் own அக்கா அத்தானோட வந்திருக்கா.

அன்னைக்கு ஈவ்னிங் என் மொபைல் ரிங் ஆகுது அக்கா கூட அரட்டை அடிச்சுகிட்டே கால் பண்றது யாருன்னு பார்க்காம கால் ஐ பிக் அப் செய்தாச்சு.

“ஓவியா…இந்த வீக்கெண்ட்ல உனக்கு ரிட்டென் டிக்கெட் புக் செய்திடவா?”

அட மௌன சாமியாருக்கு என் பேர்கூட வாய்ல வருத்துப்பா….

மொபைலை எடுத்துக் கொண்டு என் ரூம்குள்ள வந்துட்டேன்.

“ஹலோ…நான்லாம் அங்க வரல, திரும்பி வரதுக்கா இங்க வந்தேன்….வரவே மாட்டேன்…நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்….என்னால இத தாங்கவே முடியலை….இந்த 2000 s.ft வீட்டை க்ளீன் செய்து, நீங்க கலைக்ற புக்கை  அடுக்கி வச்சு, headless chicken மாதிரி காலைல அரைதூக்கத்தோடயே சமச்சு…..இதுக்குத்தான் நான் பிறந்ததேவா….எங்க அம்மா வீட்ல எப்டி இருந்தேன்…எப்பவும் அப்பா கூட அரட்டை, அம்மா கூட வம்பு, அக்கா கூட சண்டை….காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்…..அங்க உங்க கூட இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு பேசவே மறந்துடும் போல….

பகல்லலாம் இருக்ற pindrop silence   தாங்க முடியாம ஓன்னு கத்தலாம் போல இருக்குது… நான் திரும்பி வரவே மாட்டேன்” போனை வைத்துவிட்டார் சாமியார்.

தெரியும் எனக்கு. பெட்ல பக்கத்துல உட்காந்து நான் அழுதா கூட அசையாம தூங்குவாரே அவர். இதெல்லாம் ஒரு விஷயமா அவருக்கு. வேலைக்காரி சமையலுக்கு பயந்து என்ன கல்யாணம் செய்துருப்பார்…இப்ப வேலைக்காரி சாப்பாடே பெட்டர்னு தோணி இருக்கும்….அவ இவரை இப்டில்லாம் confront செய்ய மாட்டாளே….

அன்னைக்கு நைட் எதோ EB ப்ராப்ளம்….வீட்ல என் ரூம்  AC க்கு மட்டும் தான் கரெண்ட் வருது……அம்மா என்ட்ட சொல்றாங்க, நீ போய் அக்கா ரூம்ல படுத்துக்கோ…பெரிய மாப்ள வந்துருக்கார் பாரு, அவங்களுக்கு AC வேணும்….இன்னைக்கு உன் ரூம்ல அவங்க தங்கட்டும்…

அப்பன்னா மாப்ள இல்லாம வந்தா இதுதான் என் நிலமையா வீட்ல…? அத்தனை பலூனுக்கும் காத்து போயேவிட்டது என்னுள்.

அக்கா அம்மா கூட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கா…. எனக்கு யார் கூட போய் பேசவும் மூட் இல்லை….பழைய CDல்லாம் எடுத்து பாட்டு கேட்க ட்ரை செய்றேன்.

திடீர்னு அக்கா வந்து நின்னு காச் மூச்னு கத்றா…”.இதெல்லாம் நான் எவ்ளவு கஷ்ட பட்டு கலெக்ட் செய்தது…உன்னை யாரு இதெல்லாம் எடுக்கச் சொன்னது..” அவ எப்பவும் இப்டித்தான். அப்பா வாங்கின CDல்லாம் என்னதும்பா….நான் சொல்லித்தான் வாங்குனாங்க அதனால அது என்னது…தொடாத….உனக்கு handle செய்யவே தெரியலன்னு கத்துவா…..எனக்கு பாட்டு கேட்க அவ்ளவா பிடிக்காம போனதுக்கு முக்கிய காரணம் இது…

“அவட்ட ஏன் வம்புக்கு போற ஓவி….அவளுக்கு பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்னு உனக்கு தெரியும்ல” எப்பவும் சொல்ற டயலாக் தான். அம்மா அச்சு பிசகாம அவங்க டயலாக்க சொல்லியாச்சு….

“வீட்டுக்கு வந்தா கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா…உன்னை யார் இப்ப இங்க வரச் சொன்னது…?” அக்கா முனங்கிக் கிட்டே எல்லா CDயையும்  அடுக்கி வைக்றா

எனக்கு எப்பவுமே அழப் பிடிக்காது. ஆனா கல்யாணத்துக்குப் பிறகு ஏன்னு தெரியலை ஈசியா அழ வந்துடுது. இந்தா இப்பவும் அதத்தான் செய்துட்டு இருக்கேன்…

மௌன சாமியாருக்கு அவர் collectionல இருக்ற books ரொம்ப பிடிக்கும்….தினமும் புக்க பார்க்காரா இல்ல படிக்கத்தான் செய்றாரான்னு இப்பவரை எனக்கு தெளிவா தெரியாது…ஆனா அவர்  புக் விஷயத்துல ஒரு crazy cat…. ஒரு டைம் இவ கை தவறி டேபிள்ள கிடந்த அவர் புக் மேல தண்ணிய கொட்டிட்டா….அப்ப கூட அந்த மௌன சாமியார் வாயத் திறக்கலைனு இப்போ ஏனோ ஞாபகம் வருது…

மொபைல் ரிங் ஆகுது. இந்த தடவை கூப்டுறது யார்னு பார்துட்டுதான் எடுத்தேன்…அவர் தான். என்னதிது எர்த் ரிவர்ஸ்ல சுத்தப்போதா…ஒரே நாள்ல செகண்ட் டைம் கால்….

“நாளைக்கு நான் அங்க வர டிக்கெட் புக் செய்துருக்கேன்….இப்போ எதுவும் flight இல்ல….”

ஏற்கனவே அழுது கொண்டு இருந்ததாலோ என்னமோ  குரலோட சேர்ந்து எனக்கு அழுகையும் வருது.

“அதெல்லாம் வர வேண்டாம்…நீங்க எதுக்கு இங்க….?” அவ்வளவுதான் இணைப்பை துண்டித்துவிட்டார்.

விட்ட இடத்துல இருந்து அழுகையை சிறுது தொடர்ந்துவிட்டு, அக்கா ரூமில் போய் படுத்து தூங்கிவிட்டேன். அவ தான் என் ரூம்ல இருக்காளே.

காலையில் அரை தூக்கத்தில் ஏதோ உணர கஷ்டப் பட்டு கண் விழித்தால் என் நெற்றியில் கை வைத்தபடி மௌன சாமியார்.

ஏதோ ரொம்பவும் வித்யாசமாய்….என்னதிது? ஓ few days old  தாடி அவர் முகத்துல. இன்னைக்கு வரை அவர் ஷேவ் செய்யாத முகம் எப்டி இருக்கும்னு எனக்கு தெரியாது. நான் இங்க வந்ததுல இருந்தே shave செய்யலையா?

மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். எப்டி வந்தார் இவர்? என்ட்ட பேசுன நேரத்துக்குப் பிறகு ஃப்ளைட் கிடையாதே இல்ல உண்டோ?

“எப்டி வந்தீங்க?”

“கார்ல தான்…”

“ஆங்…?”

“ நீ அழுதல்ல எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு அதான் அப்பவே காரை எடுத்துட்டு கிளம்பிட்டேன்…இப்பதான் ரீச் ஆனேன்…”

பேங்களூர் to தூத்துக்குடி….full night ride…..எதுக்கு?

அம்மா அப்பா அக்கா யார் சொல்லியும் கேட்காமல் அன்னைக்கு மதியமே நான் திரும்பியும் பேங்களூர் கிளம்பியாச்சு.

“வழக்கமா உன்ட்ட பேசுற மாதிரிதான பேசினேன்….அதுக்கா கோவச்சுகிட்டு இப்பவே கிளம்புற ஊருக்கு….இந்தா இந்த CDய வேணா நீயே வச்சுக்கோ…” அக்கா தான்…வழக்கம்போல்.

“சே இல்ல…அவங்களுக்கு லீவு இல்ல….நான் இல்லனா சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவாங்க”

இன்னும் சில மாதங்கள் கடந்திருந்தன.

வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் ஓவியா. கையில் ஒரு இன்விடேஷன். சித்து வீட்டு function போய்ட்டு அப்டியே அம்மா வீட்ல one week தங்கி நல்லா தூங்கி எந்திரிச்சு வரனும்.

“எனக்கு நீன்னா ரொம்ப precious….my treasure ….ஆனா எனக்கு நான் நினைக்றதை உன்ன மாதிரி verbalize செய்ய தெரியலை….செய்யனும்னு தோணவும் இல்லை just நீ என் பக்கத்துல இருந்தா போதும்…I’m blissed out பட் இனி மனசுக்கு படுறதெல்லாம் உன்ட்ட சொல்றேன் ஓகேவா…” அன்றைக்கு ஊரில் இருந்து கூட்டி வரும்போது அவன் சொன்னது.

அதில இருந்து காலைல 4.30 மணிக்கு அவன் எந்திரிச்ச நேரத்துல இருந்து நான் தூங்கிட்டு இருந்தாலும் அப்பப்ப எதாவது சொல்லி கொஞ்சிட்டுப் போவான்…எப்டியும் தூக்கம் காயப்…காணாம போச்சே தான். பகல்ல தூங்கலாம்னு பார்த்தா

“ இங்க செம stress ah இருக்குது…உன் வாய்ஸையாவது கேட்கலாம்னு கூப்டேன்….”

“எம்டியப் பார்க்கப் போறேன்…இம்பார்ட்டன்ட் மீட்டிங்…..உன்ட்ட ஒரு two words பேசிட்டு போனேன்னா ரிலாக்ஸா ஹேண்டில் செய்வேன்….pray for the meeting”

“டீ சாப்டுட்டு இருக்கேன்…அப்டியே உன்ட்ட பேசலாம்னு கூப்டேன்…”

“ ஒன் மினிட் வாக் வந்தேன்…”

“ இன்னைக்கு இன்டர்வியூ வந்திருந்த ஒரு கேன்டிடேட் நேம் ஓவியா…உன்ட்ட சொல்லனும்னு தோணிச்சு அதான் கூப்டேன்…”

இப்டி எதாவது சொல்லி அப்பப்ப நாள் முழுக்க கால் செய்துட்டே இருப்பான்….ஒவ்வொரு தடவையும் பேசுறது 30 seconds தானாலும் எங்க தூங்க? இதுல lunch க்கு ஒரு lightining visit வேற.

நைட் தூங்குறதுல அவன் குழந்தை தான். டான்னு 10 க்கு flat. காலைல 4.30 க்கு எந்திரிக்றதால அப்டிதான். ஆனா லேட்டா தூங்கி பழகின எனக்கு லேட்டா தான் தூக்கம் வருது.

அவன் introduce செய்துவைத்த chillzee யில் late night ud படிச்சுட்டு தூங்க போனா அவன் காலைல 4.30 ரொமான்டிக் ஹீரோவா எழுப்பிவிட்றுவான்.

இதுல எல்லாமே பிடிச்சிறுக்கு. எதையும் மிஸ் செய்ய இஷ்டம் இல்லை…பட் ப்ரெக்னென்ட் ஆனதும் ரெஸ்ட் தேடுது உடம்பு. so ஒன் வீக் அம்மா வீடு.

அவன் போன்ல பிஸியா இருப்பான்….office ஐடிக்கு மெயில் அனுப்பிட்டா பார்த்ததும் டிக்கெட் புக் செய்துடுவான்.

‘வீட்டுக்குப் போறேன்,  புக் த டிக்கெட்’ அவனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு chilzee ஃபாரம்ல கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன்….”

காலிங் பெல்.

கதவைத் திறந்தால் அவன். முகமெல்லாம் அத்தனை தவிப்பு டென்ஷன்.

பார்த்தவுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“என்னப்பா? என்னாச்சு? வீட்டு வாசல்ல நின்னுகிட்டு?”

“முழுசா உன் expectation அளவுக்கு நான் மாறிருக்கனான்னு தெரியலை…பட் முன்னால விட expressivah தானே இருக்கேன்…பிறகு ஏன் விட்டுட்டுப் போறேன்னு மெசேஜ் செய்துருக்க..ப்ளீஸ் ஓவி போகாத, நீ இல்லாம என்னால ஒரு நாள் கூட முடியாது…”

என் டைபிங் ஸ்கில்லும் கீ போர்டும் சேர்ந்து சதி செய்துருக்குன்னு புரிஞ்சிட்டு.

“சித்து வீட்டு ஃபங்ஷனுக்குப் போகலைனா எனக்கு அருவா பார்சலும்  உங்களுக்கு அஹிம்சை பேச்சும் கிடைக்கும். அதானால ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் மாடி…நெக்‌ஸ்ட் டே ரிடர்ன் டிக்கெட் புக் செய்துடுங்க….”

கையில் அள்ளிக் கொண்டான் மனைவியை. Half day leave எடுத்து வந்திருந்தான் அவன். அதை எப்படி வேஸ்ட் ஆக்குவதாம்?

மீண்டும் ஓவியா தூக்கம் கலைந்து விழிக்கும் போது இரவு 7 மணி. கண்ணை கசக்கிக் கொண்டே அவனைத் தேடி சென்றால் கிட்செனில் எதையோ செய்து கொண்டிருந்தான். டைனிங் டேபிளிலும் சில பாத்திரங்கள் மூடியிடப் பட்டிருந்தன.

“உன் lap ஆன்ல இருந்துது… ஃபாரம்ல நீ chat செய்துறந்ததப் பார்த்தேன்… எனக்கு குக்கிங்ல hands on கிடையாது…ஸ்டில் பொண்ணுங்களுக்கு husband கையால சாப்ட பிடிக்குதுன்னு தெரிஞ்சுது….உங்கம்மாட்ட கேட்டு அவங்க செய்றமாதிரி fish curry வச்சுருக்கேன்….”

சித்த நில்லடி, உன் மனசுல என்ன நினச்சுகிட்டு இருக்க மாப்ளய சமைக்கவிட்டுட்டு அங்க உனக்கென்ன தூக்கம்….அம்மாவிடம் இருந்து கிடைக்கப் போகும் டோஸ் மனதில் ஓடினாலும் சந்தோஷமாக அவன் முதல் cooking experiment அவுட் கம்மை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டாள் ஓவியா

Flight டிக்கெட் கேட்டேன்

Fish கரி தந்தனை

ஆனா ஒன்னு மந்திகள் தந்தனையா இருந்தாலும் சரி,  fish curry தந்தனையா இருந்தாலும் சரி hidden message என்னனா  Husband னாலே  காது கொஞ்சம் மக்கர் party தான் போல, ஒன்னைக் கேட்டா இன்னொன்னத்தான் தருவாங்க போல….still life is beautifull…..

15 comments

  1. HaI sis super. Inga Ella storyyume supER super.but personala this story semma. Same life odidu iruku. 👌👌👌

Leave a Reply