காற்றாக நான் வருவேன் 3 (5)

ஆனால் உயிருக்குள், உறவுக்குள் இது ஆற்றும் செயல் இறைவனுக்கு அடுத்தபடி. தன் ஆவி, ஆத்மாவை தம்பதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் தருணம். அதன் பின்விளைவுகள் ஆனந்தம். ஒருமித்த மனம், உள்ளான மனிதனில் பலம், பாதுகாப்பு, நிறைவு, நிர்சலனம் இப்படி தொடரும் இதன் கனிவகைகள். உயிர்கள் ஒருமிக்கும் ஓர் செயல்.

ஆதாமிற்குள் வைத்து உருவாக்கபட்டாள் ஏவாள். மீண்டுமாய் அந்நிலை ஏகும் இரு உயிர் இக்கணம். இது  இறைவனின் திருமண இலக்கணம்.

திருமணத்திற்குள் காமம் புனிதம்.

சாத்தானின் சதி திட்டங்கள் திருமணத்திற்குள் வராமல் தடுக்கும் முக்கிய தடைசுவர் இது என்கிறது வேதம்.

வன் கண்விழிக்கும் பொழுது அறைமுழுவதும் இருள். மாலையில் தூங்கி விழிக்கும்போது ஏற்படும் உணர்வு அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் முடிந்தவரை அதை தவிர்த்துவிடுவான்.

ஆனால் இன்று மனமெல்லாம் இனிமை தளும்பியது. அவனது தயனி அவனது கைகளை அரணாக்கி, அவனது மார்பை தன் முகம் தாங்கும் தலையணையாக்கி தூங்கி கொண்டிருந்தாள்.

அடுத்த உயிராக உணரமுடியவில்லை அவளை. தானேதான் அவளும். அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான். இருளில் ஒளிர்ந்த சுவர்கடிகார மணிகரங்கள் அறிவித்த நேரத்தை பார்த்தவன் தனக்குள் மெல்ல சிறித்துக் கொண்டான்.

“தயூ…தயனிமா….” அவளிடம் அசைவே இல்லை.

“தக்காளி சாதம்…., தம் பிரியாணி…., தந்தூரி சிக்கன்…” மெல்ல எழுந்தவள் ‘பே’ என விழித்தாள். ‘இப்படியும் கொஞ்சுவார்களா என்ன?’

“பசிக்குது குட்டி தக்காளி! சாப்பிட்ட பிறகு விட்டதை தொடரலாம்…”

அந்த மென் வெளிச்சத்திலும் அவள் முகம் சிவப்பதை உணரமுடிந்தது அவனால்.

“தூங்கிறதை சொன்னேன்டா” படுக்கையைவிட்டு எழுந்து வந்தான் அவன். அவனது வாலாக அவனை தொடர்ந்தாள் மனைவி.

இரவு உணவிற்காக சாப்பாட்டு மேஜைக்கு வந்தனர் இருவரும். தன் பி.ஏ ராஜீவை அழைத்தான் அபிஷேக்.

“ஒரு டாக்டர் பி.ஏ வச்சிருப்பது நீங்களாகத்தான் இருக்கும்”

மென் புன்னகையுடன் தயனி கூற அதிர்ந்து விழித்தான் அபிஷேக்.

எப்படி மறந்தான் இதை? எப்படி சொல்லாமல் விட்டான் இவன்? என்ன நினைப்பாள் இவள்? எப்படி ஏற்பாள்? இவ்வளவு பெரிய விஷயம் சொல்ல மறக்குமா? தனக்கே தன்னை நம்ப முடியாதபோது அவள் எப்படி நம்புவாள்?

இத்தனை காலம் திருமணத்திற்கு தடைகல்லாக நின்றமுக்கிய காரணம் அதுதானே? அதையே தெரிவிக்காமல் இவன் இவளை மணந்திருக்கிறானே? மறைத்து மணந்ததாக அல்லவா தோன்றும்?

தொடரும்…

2 comments

  1. sema ka…really superb…indha story read pannum bothu i could feel the presence of god…and power of prayer..matha stories read pannum bothu jolly a entertaining a irukum but ithu oru vitha nimadhiya tharuthu….

Leave a Reply