காதல் வெளியிடை final 2 (4)

வெடிக்க வெடிக்க உள்ளே வந்தார் தர்மராஜ்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் அப்பா வீட்டுக்கு வராதவர் வந்து கொண்டிருந்தார். அதுவும் வாயில் என்ன வருகிறதென்றே சொல்ல முடியாத அத்தனை வசை மாரியுடன்.

அவருக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாய் சகாயனின் அண்ணன்.

அந்த காட்சியைக் கண்டதுமே ஏதோ நிலை தடுமாறிப் போன உணர்வு ஷ்ருஷ்டிக்குள். அவள் முகத்தைப் பார்க்கவும்…”நீ உள்ள போ சிமி” என அனுப்பிவிட்டான் சகாயன்.

ஏனோ மாடியிலிருந்த இவர்களது அறைக்கு வரவெல்லாம் அவளுக்கு சுத்தமாக எண்ணமில்லை. தரை தளத்தில் பக்கவாட்டில் இருந்த ஒரு அறையில் சென்று நின்று கொண்டாள்.

உட்கார கூட முடியாமல் உணர்ச்சிகள் அவளை உந்தித்தள்ள அங்கும் இங்குமாய் உள்ளேயே அலைந்தவள் ஒரு கட்டத்தில் அறையின் வாசலில் வந்து நின்றாள். சகாயனின் தந்தையின் பேச்சு தாரளமாய் வந்து விழுகிறது இவளது காதில்.

“வேலைக்கார நாய் கூட ஒன்னும் வரமாட்டேன்னுட்டு போய்ட்டு… தனியாளா நான் என்ன இழுபடுதேன்னு யோவ் கிழம் உனக்கு கூடவா புரியல… தினமும் எத்தன அடி, எத்தன உதை இந்த பைத்தியத்துட்ட இருந்து நான் வாங்க…?  அஞ்சு மாசம் முன்னால வீட்ல இருந்த ஆசிட்ட எடுத்து தூங்கிட்டு இருந்த என் கண்ணுல ஊத்திட்டான் அந்த கிறுக்கன்… அதுல எனக்கு வலது கண்ணு அவிஞ்சே போச்சு… பார்வை வராதுன்னு சொல்லிட்டாங்க…  என் கை விரல் ரெண்ட சவச்சே துப்பிட்டான்… அந்த விரல் நரம்பு என்னமோ ஆகிட்டாம்… பாரு அதை அசைக்க கூட முடியல… ஒரு நாள் தீய எடுத்து முதுகுல போட்டுட்டான்… இன்னொரு நாள் கத்திய வச்சு கைய கிழிச்சுட்டான்னு தினம் தினம் நரகமா இருக்கு வாழ்க்கை… அவனை அடிச்சி அடிச்சே என் உயிர் போகுது… இதுல இன்னும் நான் எத்தன நாளுக்கு இருப்பேன்…?

இந்த கிறுக்கனே என்ன சீக்கிரம் கொன்னுடுவான் போல… அப்றம் இந்த பைத்தியத்த யார் பார்ப்பா? அதெல்லாம் நினச்சாலே மூச்சடச்சுகிட்டு வருது.. அதுக்குத்தான ஒருத்திய இழுத்துட்டு வந்து கட்டிவச்சேன்…” சஹாவின் தாத்தாவைப் பார்த்து கத்திக் கொண்டு இருந்த தர்மராஜ் இப்போது சஹா புறமாய் திரும்பி கருவினார்.

“நாயே நீல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா.. அண்ணன் சம்சாரத்த அடுத்தவனுக்கு கட்டி வச்சுருக்கியே… விளங்கிவியா நீ… அதுவும் அந்த அண்ணன் என்ன நிலமைல இருக்கான்… அவன யார் பார்ப்பான்னு கொஞ்சம் கூடவா ரத்த பாசம் இல்லாம போச்சு உனக்கு? அவன் தலைல போய் மண்ணள்ளி போட்டுருக்கியே…” என குமுறியவர்

“போதாக் குறைக்கு அவ தங்கச்சிய வேற கட்டப் போறியாமே… வகுந்துடுவேன் அப்டில்லாம் எதையாவது செய்தன்னா…” என உறுமிக் கொண்டிருந்தார். சகாயனின் ரிஷப்ஷன் விஷயம் அவர் காதுக்கு திருமணம் என போயிருக்கிறது போலும்.

இதையெல்லாம் அறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஷ்ருஷ்டிக்குள் ஏக திக் திடும்கள்… அவளால் சுத்தமாய் இயல்பாய் இருக்க முடியவில்லை.

விபரீதம் விபரீதம் என எதுவெல்லாமோ அவளுக்குள் படு பயங்கரமாய் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன.

தந்தையின் பின்னாலேயே முதலில் வந்த சகாயனின் அண்ணன் மீது செல்கிறது இவளது கவனம்.

வந்த நொடியிலிருந்து வெடுக் வெடுக்கென அங்கும் இங்குமாய் பார்த்தபடி நின்றவன்… அவனது அப்பா சகாயனைத் திட்டும் போது வேறெங்கும் பார்க்காமல் சகாயனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாய மூடுடா தர்மா” என தாத்தா இப்போது சினப் பட்டார். “என் வீட்டுக்குள்ள வந்து நின்னுட்டு உன் பிள்ளயவே சபிச்சுகிட்டு இருக்க… அறிவு இருக்காடா உனக்கு? சொந்தப் பிள்ளய சபிக்கிறவனுக்கும் தன் தலையில மண் அள்ளிப் போட்டுகிறவனுக்கும் என்னடா வித்யாசம்?

அதோட உனக்கு ஆனந்த் மகன்னா எனக்கு நீயும் அப்படித்தான்டா… உன் வலியப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்குதுன்னு நினைக்கிறியா…? ஆனா இப்டில்லாம் ஆக கூடாதுன்னுதான் நான் முதல்ல இருந்து பணக்காரனோ இருக்கதோ ஆம்பிளப் பிள்ளையா இருக்கதோ எதோ பெரிய விஷயம்னு ஆடாதன்னு அத்தனை அத்தனை தடவ சொன்னேன்…

ஆனந்த் இப்டி இருக்கான்னா அவன் செய்த தப்புக்கெல்லாம் பணக்கார வீட்டுப் பையன்னா அப்டித்தான் இருப்பான்னு கொம்பு சீவின நீயும்தான்டா முக்கிய காரணம்…

உனக்கு கண்ணு போய்ட்டுன்னு கேட்கிறப்ப எனக்கு எப்டிப்பா இருக்குது? ஆனா அந்த நித்துப் பொண்ணையும் அவ வீட்ல கண்ணு மாதிரிதான பொத்தி பொத்தி வளத்துருப்பாங்கன்னு கூடவே நியாபகம் வருதே.. நீயா இருந்தாலும் நானா இருந்தாலும் வாலிபத்துல விதைச்சத வயோதிகத்துல அறுத்துதான் ஆகனும்.. அதுல இருந்து யார் யாரக் காப்பாத்த? ஆனந்தனுக்கு அவன் நிலமையே தண்டனைனா… உனக்கு அவன்தான்டாபா தண்டனை…

அப்றம் இன்னொன்னு… இதுவரைக்கும் இந்த வீட்டுக்குள்ள நீ வரக் கூடாதுன்னு நான் சொன்னதே இல்ல… ஆனா இனி உன் கால் இங்க படக் கூடாது… எனக்கு சின்னவனும் அவன் வீட்டுக்காரியும் கண்டிப்பா சந்தோஷமா இருந்தே ஆகனும்… அதுக்கு இதுதான் வழின்னா… இதை நான் செய்துதான் ஆவேன்..”

இங்கு ஷ்ருஷ்டிக்குள் எதோ ஒன்று படு விபரீதமாய் தோன்றுகிறது. அவளை மீறி விறு விறென வரவேற்பறைக்குள் மீண்டுமாய் நுழைந்து விட்டாள் இவள்.

ஒரு கணம் தனது நெற்றியை ஒற்றை விரலால் தேய்த்துக் கொண்ட சகாயனின் அண்ணன் இப்போது இடுப்பில் இருந்து கையில் எடுத்தது பிஸ்டல்…!!!!!!!!

வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்…. என்றபடி இவள் பாய்ந்து வந்து சகாவை அப்பிக் கொள்ளும் போது இவளது அலறலில் இவளைப் பார்த்து, அடுத்து இவள் பார்வை சென்ற திக்கை மற்ற மூவரும் பார்க்கும் போது…  சகாயனை நோக்கி பிஸ்டலில் இருந்த தோட்டாவை அனுப்பி இருந்தான் அவனது அண்ணன். ஷூட்!!!

எது என்னதாய் தோன்றியதோ? ஏன் சுட்டானோ? பிஸ்டலை அவனது அப்பாவிடமிருந்து எப்போது எடுத்து வைத்தானோ? இப்படி செய்து விட்டான் அவன்.

இதை உணர்ந்து விலகவெல்லாம் ஏது வாய்ப்பு? அவன் நின்று சுட்ட தொலைவு அத்தனை அருகாமையாயிற்றே…

சஹா தன்னவளோடு தரையில் உருளும் போது ஏற்கனவே தோட்டா அவளுக்குள் சென்று அமர்ந்திருந்தது.

அவள் நினைத்த விபரீதம் நடந்தேவிட்டது.

இன்னுமொரு முறை சுட்டுவிடக் கூடாதே… புயலென ஷ்ருஷ்டியை விட்டு உருண்டு… மின்னல் வேகத்தில் கால் நீட்டி தன் அண்ணன் காலை தட்டிவிட்டு… அவன் கையிலிருந்த பிஸ்டலை பிடுங்கிய பின் சஹா ஷ்ருஷ்டியிடம் ஓடி வரும் போது…

அவன் நரக பரிதவிப்பில் இருந்தானானால்… அவளோ “வாளெடுத்தவங்க வாளாலதான் சாவாங்களாம்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் வார்த்தைக்கு எதுவும் பதில் சொல்லாது… அவள் காயத்தில் கை படாது வாகாய் அவளை இவன் அள்ளிய போது… இவன் முகத்திற்கு அருகில் இருந்த அவள் முகத்தில் அத்தனை வலியிலும் சின்னதாய் புன்னகை “பயப்படாதீங்கத்தான் வாளெடுத்தவங்களுக்குத்தான் சாவு.. நான் வாள எடுக்க நினைக்க மட்டும்தான் செய்துருக்கேன்… அதனால… திரும்பி வருவேன்”

இதற்குள் இவர்களது கார் ஒன்றில் அவளோடு ஏறி இருந்தான் சஹா.

ட்ரைவர் காரை செலுத்த… முன் சீட்டில் தாத்தாவும் கூட அமர்ந்திருக்க… யாரைப் பற்றியும் யோசியாது… ‘திரும்பி வருவேன்’ என சொல்லி முடித்த அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான் இவன்.

‘தெய்வமே என்ன விட்டு இவள மட்டும் எடுத்துடாத..’ கதறிக் கொண்டிருக்கிறது இவன் நெஞ்சம்.

மயக்கத்திற்குள் சரிய தொடங்கி இருந்த அவளோ “இனிம நான் எப்பவும் சந்தோஷமா இருப்பேன்” என முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.

நான்கு மாதங்களுக்குப் பின்பு

“ஹும் ஹும்” அந்த ட்ரான்ஸ்பரன்ட் ப்ளாஸ்டிக் அறையின் தரையில் முழங்காலிட்டு, சுவரில் முகம் பதித்து, கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ருஷ்டி சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

கடலின் அடியில், தரைப் பகுதியில் ஒரு அறை போல அமைக்கப்பட்டிருந்த அந்த கண்ணாடி போன்ற வீட்டில் தங்கி இருப்பதும், இப்படி வேடிக்கைப் பார்ப்பதும் அவளுக்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கிறதென்றால்… அவளது கணவனின் அருகாமையோ சுகோற்சவம்.

ஆனாலும் அவள் போலே முழந்தாளிட்டு… பின்னிருந்து அவள் இரு புறமுமாய் கைகளை படரவிட்டு, அவள் தோளில் முத்தெடுத்தவன் செயலுக்குத்தான் சற்று மறுப்பாய் அந்த சிணுங்கல் பதில்.

இப்போது அவள் கையிலிருந்த தழும்பை அவன் ஒற்றை விரல் மென்மையாய் வருடத் துவங்க, அடுத்து அவளவன் எதை நாடுவான் எனத் தெளிவாக அவளுக்கு புரிய…

“இங்கயா?” என வார்த்தையாக வெளியாகிறது அவளது சிணுங்கல்.

“ஏன் எப்பவும் இங்கயே இருந்துடுவமான்னு முன்னால நீதான கேட்ட… அதான இங்க வந்ததே…” அவனது பதில் இது. ஆம் ஒரு கடலடியில்தான் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தம்பதியர்.

“அதுக்கு இப்டியா மீனிங்க் எடுப்பீங்க நீங்க?” சம்மதமும் சற்றே சற்று தடையுமாய் அவள் பெண்மை.

“ஃபிஷெல்லாம் இருக்கு” குழந்தை போன்ற ஒரு விளக்கம்.

வாய் விட்டு சிரித்தான் அவன்.. “இருட்லயே இருந்து பழகின இங்க உள்ள ஃபிஷ்க்கெல்லாம் கண்ணே தெரியாதாம்… பாட்னி மேடம் ஸூவாலஜில செம்ம வீக் போலயே” அவளை அள்ளி எடுத்திருந்தான் அவன்.

“அதெல்லாம்… அது..” என்றவள் … “நமக்கு தெரியுதே” என்ற அடுத்த விளக்கத்துக்குப் போகும் முன்… உள்ளிருந்த கர்டனை அவன் இழுத்திருக்க…. அறையின் அத்தனை புறமும் இளம் பச்சை நிற திரை விழுந்து மறைக்க…

கடல் அடி தரையில் காதல் வெளியிடையில் சங்கம ராகம்.

முற்றும்

துவங்கியதை முடிக்க வைத்த தெய்வத்துக்கும்… கதையின் துவக்கம் முதல் இறுதி வரை உடன் வந்த அனைவருக்கும்… அத்தனை அத்தனை உறுதுணையாய் இருந்த உங்கள் வார்த்தைகளுக்கும்… ஓராயிரம் நன்றி.

செம்மயா டிலே செய்து செய்து முடிச்சுருக்கேன்… அத்தனையும் அனுசரித்து உடன் வந்துருக்கீங்க ஃப்ரெண்ட்ஸ்….Special Thanks.

f080f5cc7c3766586ae297e6e146d223--thank-you-ideas-thank-you-for

இக் கதை நான் Sharonனுடன் சேர்ந்து எழுத ஆசைப்பட்ட ஒன்று… காரணம் sharonஇன் சென்ஸ் ஆஃப் ஹூமர் அதை அவங்க எழுத்தில் வெளிப்படுத்தும் ஸ்டைல்  இவைகளுக்கு நான் die hard fan. அப்படி இணைந்து எழுதும் சூழல் அமையாமல் போனாலும்…  கதையின் ஒன் லைனை சொன்னதிலிருந்து…  கதை அமைப்பு, காட்சி , டயலாக்‌ஃஸ், கேரக்டர்ஸ், லாஜிக், மாரல் ஏன் போடுகிற இமேஜ் வரைக்கும் ஒன்றொன்றிலும் Sharonனின் பங்களுப்பு வெகு அதிகம்.

ஒவ்வொரு சீனையும் டைப் செய்து Sharonனிடம் அனுப்பி… அது இரவு 12 மணிக்கு மேலாகத்தான் பலமுறை இருக்கும்…  அவங்க வியூஸ்… சஜசன் எனக் கேட்டு கேட்டுதான் காதல் வெளியிடை நடந்தேறியது.

நன்றி சொல்வதில் பலத்த நம்பிக்கை உள்ளவள் நான். ஒரு கட்ட த்தில் எத்தனை முறை நன்றி சொல்ல எனத் தெரியாமல்… அதை விட வேண்டிய சூழலை எனக்கு உண்டாக்கிய ஒரு நட்பு இந்த ஷேரன் எனும் ஜீவன்.

(I thank GOD for you shrns…வேற என்ன சொல்லன்னு தெரியல…)

FTD-C12-4792

 

இப்படி பல அற்புத நிகழ்வுகளை உறவுகளை இனிமைகளை உண்டு செய்த காதல் வெளியிடையில் சந்தித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்…

IF its GOD”S will…அடுத்த கதையாம் காதலாம் பைங்கிளியில் சந்திப்போம்.

aswer

 

அடுத்த கதையெல்லாம் அடுத்து… இப்ப காதல் வெளியிடை பத்தி உங்க மனசில வர்ற விஷயங்களை ஷேர் செய்துப்பீங்களாம் ஃப்ரெண்ட்ஸ்… கேட்டு சந்தோஷப்பட்டுபேன்… புத்தக வெர்ஷனுக்கு இன்னும் கொஞ்சம் மெருகேத்திப்பேன்… அடுத்த கதைக்கு ஓடி வரவும் அது கண்டிப்பா எனக்கு ஹெல்ப் செய்யும் …Waiting for your words.

 

 

14 comments

 1. Final 2 episode muzhukka muzhukka Saha .. Sri urchavam than… Sri oda characterization..thappu pannitu adhukkaga varundhi adhai saripadutha seyyum muyarchigal… woowww… Saha ..Sri a complete ah purinju avalukkagave vazhbavan… indha kadhaiyil varum niraya sindhanaigal .. adhu Sri , Bavan, Saha, Nithu ivargalil ellorin ennamume.. hats off .. nnu solla vaikkudhu… Kadhal veliyidai.. .kavidahi.. hats off sweety sis..

 2. 100 koodai poova thalayila kottina maari irukku indha final episode. Well portrayed script. Kannukku munnadi nigalura maari eluthirukkinga… well done Sweety…

 3. Wow awesome mam. Saha’s love ❤ is amazing always. What a man he is! And Saha’s grand father is also so good. Sri has at last came out of her problems and she has started her life happily with Saha. Superb mam. The story was completely different with romance, thrilling,friendship etc. This story will always be cherished in my memories. Thank u mam for giving us a beautiful story.

  1. Hi Anna
   Worth for waiting…. such a lovely ending. Thoroughly enjoyed. Waiting for your new novel. Please look after yourself.

 4. முழுக்க முழுக்க காதல் கொண்டு நிரப்பப்பட்ட ஒரு வெளியிடை இந்த காதல் வெளியிடை.

  கப்பலில் சக பயணி ஒருவன்

  அவனுடன் கனத்துடன் ஸ்ரீ

  கசங்கிய காகிதமாய் நித்து

  காற்றாய் ஒருவன் வந்து கதவு தட்டுகிறான்.

  நெருங்க மறுக்கும் நிம்மி

  குழப்பத்தில் ஆகாஷ்

  இதற்கிடையில் பூரி, மோனி, கவிதைகள்

  குளிர் பரந்த நீலக்கடலில் ஒரு காதலும் நீலக் குயின்கீழ் பரப்பில் ஒரு காதலுமாய் இரண்டு காதல் கதைகள்.

  சஹா பேர சொன்னாலே அதிரும். ஹஹா கதை படிச்ச படிக்குற நிறைய காரிகைகள் மனதைக் கவர்ந்த கள்வன் இந்த சஹா. நாயகனுக்கே உரித்தான சகல லச்சணங்களும் அம்சமா பொருந்தின கதாபாத்திரம். நாயகிய நெஞ்சுக்கூட்டுக்குள்ள பொத்தி வைச்சி பாதுகாக்க நினைப்பதாகட்டும் அவளுக்காக அவளிடமே பேசி புரிய வைக்க முனையும் இடங்களாகட்டும் ஒரு செயலின் பின்னணிய அலசி அதன் நியாய தர்மங்களை புரிந்து கொள்ளும் முதிர்வாகட்டும் சஹா அவன் நாயகிக்கு சகலமும்ஆனவன். அவன் நீதி நியாயங்களை புரிந்து அநீதியை திரை மறைவில் விடும் பாத்திரம் அல்ல எது சரியோ அதை செய்து எது தவறோ அதை திருத்த முயல்பவன்.

  சஹா பெயருக்கேற்ற பாத்திரம். அவன் அப்படி என்பதால் காரணப்பெயரா இல்லை பெயர்க்காரணத்தால் அவன் அப்படியோ ஆனால் கதை முழுவதும் சஹா சஹாயன்தான்

  பாழாய்ப்போன மனது அன்பு கொண்டால் கொண்ட அன்புடனேயே அன்பிற்காகவே வாழும். தன் அன்பிற்குரிய நெஞ்சு செய்தது தவறே என்றாலும் நோகவிடமால் பார்த்துக்கொள்ளும் . அப்படி ஒரு நெஞ்சாளன் சஹா!

  பவன் என் மனச கொள்ளை கொண்ட கள்வன்😜வாழ்வெனும் தேகக் கதவின் கதவு, ஜன்னல் எல்லாம் மூடிக்கிடந்தவள் அவள். காற்று புகாத இடத்திலும் காதல் பூருமாம். இங்கு காற்றே காதலாய் வர விழி எனும் சாரளம் வழி புகுந்த அவன் திறந்துவிட்டான் அவள் துன்பெனும் மனக்கதவை. திறந்த கதவின் வழி துன்பம் அகன்றுவிட இன்பெனுன் சுவாசம் அவன் பெயர்கூறி இடத்தை நிரப்பி விட்டது

  கதையின் நாயகர்கள் இருவரும் கள்வர்கள் இருவருமே களவு போனவர்கள்.

  கள்வ(ர்களி)ன் காதலி(கள்)
  கள் – ளி- கள்.
  (கள்) கள்வர்களை
  நீல (வானம், கடல்) வெள்( ளி) யிடையில் (வெள்ளை நிற அலைகள்) கொள்ளையடித்தவர்(கள்)

  ஆழியில் முத்தெடுப்பதில் இருவகை. முத்தெடுக்கப்போய் மூழ்குபவர்கள் ஒருவகையினர் என்றால் மூழ்க நினைத்து முத்தெடுப்பவர்கள் அடுத்த வகையறாவினர்.

  நித்திலம் தேடலாம் என மூழ்கடிக்கபட்டு காற்றழுத்தத்தால் கரைசேர்ந்தவள் நித்து.

  கடலில் மூழ்கப்போனவள் ஆழத்தில் விழுந்து சஹா என்னும் முத்தெடுத்துடன் கரைசேர்ந்தாள் சிமி

  கதையின் ஆரம்பத்தில் நின்றிருந்த கப்பலில் கால்பதிக்கும் இள நங்கையுடன் கதையும் கப்பலும் நகர ஒவ்வொரு நகர்விலும் கேள்விகள் வந்து நம்முள் ஏறிக்கொள்ளும். அங்கங்கு முடிச்சுகள் விழும் சுவாரிசியம் கதைநெடுகிலும் எம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.

  கடலோடு உறாவாடிக்கொண்டிருக்கும்போது மண்வாசனை ஒன்று ஈரம் சுமந்துவர கதையின் போக்கில் ஒரு புது கேள்வி எழும்.

  காய்ந்த சருகாய் மரம்விட்டுதிர்ந்த இலையொன்று தரைமீது அலங்கோலமாய் கிடக்க காற்றடித்த திசையில் கோலம் மாற கள்ளிப்புறாவாய் (சிரிக்கும் புறா )காதல் வெளியிடையில் சிறகுவிரிக்கும் மாயம் ஒன்று நிகழும்.

  வளியும் வளியை விழி வழியாய் கொள்ளையடித்தவளுக்குமான காட்சிகளில் தடிஅடி, அக்கறை , அன்பு, காதல், காதல், காதல் என காதலோடு கடந்துவந்த காட்சிகள் கடைசியில் குறும்போடு இணையும்.

  காரியம் ஒன்றும் காரணம் வேறொன்றுமாய் ஒரு தீர்க்கம். காதல் சொல்லாமலே வேரறுக்க முயல காதல் கணைகளை வீசியவன் கையணைப்பில் காயம் ஆற நிறைவேறியது காதல் கல்யாண வைபோகம் ஒன்று.

  சிமி கதையில் கவனிக்கத்தக்க பாத்திரம். நாயகி என்பதைத்தாண்டி அவள் மனநிலையும் செய்கைகளும் கதையை கவனிக்கவைக்கும். சில சங்கடங்கள் அவளை ஆழ அதிலிருந்து மீழும் வழிவகை அறியாமல் தவிக்க அதன் எதிரொலியாய் அவள் செய்கை மாற கதையின் களம் மாறும்.

  உண்மை உறுத்தும் என ஸ்ரீ ஒதுங்கி ஒடுங்க அவளை மீட்டெடுக்கும் வேலை மன்னவனுக்கென்றானபின் மணிப்புறாவாய் அவள் அவன் கைசேர்ந்தாளா இல்லை சிறகொடிந்து கூண்டில் அடைந்தாளா என்பது கதை முடிவு.

  நித்து

  ஏமாந்தாளா ஏமாற்றப்பட்டாளா என சிந்தனை ஓடும்போதே அவள் கதை முடிந்துவிடும். அவசரமோ இல்லை வாய்ஜாலத்தின் வித்தையோ ஏதோ ஒன்று வெட்டிய குழியில் வீழ்ந்து விடுகிறாள். நாம் பொதுவாக சாதாரணமான வார்த்தைகளில் கடந்துவிடும் வலியை அனுபவித்து இழப்புகளுடன் வாழும் வாழ்வு அவளுக்கு. இருட்டில் கிடைத்த விடிவெள்ளியாய் ஒரு துணை கிடைக்க பின் அவனே அவளுக்கு விடியலாகவும் மாறிவிடுகிறான்.

  பவன் நண்பனாய் வரும் சஹா நித்துவாழ்வில் வந்துபோன கதை தெரிய கதை சூடுபிடிக்கும்

  தான் ஏமாந்ததால்தானோ என்னமோ அந்த திருட்டை கண்டுபிடித்து சரியான விதமாய் தொழில் செய்வாள்.
  கதையில் இருதந்தைகளைப் பார்க்கலாம். இருவருக்கும் குறிப்பிட்டு சொல்லும்படி வேற்றுமைகள் இருந்தாலும் சில மோசமான ஒற்றுமைகளும் உண்டு.

  மோனி கொஞ்சம் சுயநலமானவள். ஆனாலுல் பயங்கரமானவள் அல்ல. போட்ட திட்டங்கள் எல்லாம் தோல்வியைத்தழுவ அதன் விளைவாய் அவள் புரிதல்கள் நகைச்சுவையாய் இருக்கும்.

  மோனி வைத்த புள்ளி கதையை எங்கெங்கோ நகர்த்தி எப்படி எப்படியோ மாற்றிவிடும்.

  பூரி சின்னப்பெண் கதையில் நிறைய காட்சிகளில் வரவில்லை என்றாலும் வந்துபோன காட்சிகளில் ஸ்ரீ மூளை தாறுமாறாக வேலை செய்ய தன்னளவிலானதை செய்துவிட்டு போவாள்.

  ஆகாஸ் – நிம்மி

  இணையத்துடிக்கும் மனங்களிடையே பிரியத்துடிக்கும் மனம் நிம்மிக்கு. ஏன் என்பதில் பதில் கண்டால் அவளும் ஸ்ரீயும் ஒன்றுபோல்தோன்றும்.

  சுயநலம் துருப்பிடித்த கத்திபோல. அதன் கீறல்கள் கொடுக்கும் வலிகள் கொடுமை. புண் பட்டவருக்கு உடனடி வலி புண் படுத்தியருக்கு காலம் தாழ்த்தி வலி. ஆனால் வலி நிச்சயம் அதன் வழிகள் மாறுபடும்போதிலும்.!

  மரண தண்டனை வரை சென்றுபார்க்கும் துணிவிருந்தால் சஹாபோல் ஒருவனை காதல் செய்யலாம்.

  மரணம் வென்று காதல் செய்ய ஆசை இருந்தால் பவனைப்போல்
  ஒருவனைக் கரம்பிடிக்கலாம்.

  அவள் கப்பல் அவன் கடல். துறைமுகம் காதல் .எங்கு சுற்றினாலும் கப்பலுக்கு கடலோடுதான் உறவு. கப்பலும் கடலும் இணையும் புள்ளி துறைமுகம். அவள் எங்கிருந்தாலும் அவளைவிட்டு பிரியாது அவன் சிந்தை!

  அவன் காற்று அவள் தேகம். சுவாசமின்றி வாழ்வென்பது ஒன்றில்லை அவளுக்கு.

  கடலில் பயணிக்க ஆரம்பிக்கும் காதல் கப்பல் தரை கரை தொட்டு இறுதியில் கடலாடி முடியும்.

 5. காதல் வெளியிடை

  தலைப்பிற்கேற்ப காதல் காதல் காதல் என்று கடலில் மிதக்கும் கப்பல் போல் ஒய்யாரமாக ஊஞ்சல் ஆட்டுகிறது கதை .இடையில் வார்தா,சுனாமி ,போன்றதொரு வாரி சுருட்டும் திருப்புமுனை.காதலுக்குள் போயின் சா’ தள்’ சா’தள் சா’தள் ,அதாவது சாவையும் தள்ளி விடும் காதல் என்று நிறைவாக நிறைவடைகிறது கதை.

  கதை களம் முற்றிலும் புதுமை .புதிராக புனையப்பட்ட கதை மாந்தர்கள் .படிக்கும் நமக்கு புத்துணர்வும் பூ மணமும் நிரம்பும் மனதில் .கூடவே கதையின் போக்கால் ஆவலும் ஆர்ப்பரிப்பும் அருவி என அள்ளும் மனதினை .

  அனைவருக்கும் ஒரு அழகிய fantancy உலகில் வாழ அவா உண்டு .இக்கதை படித்தால் அப்படியான ஒரு 3d அனுபவமும் fairytale ￰நாயகி போல் நம்மை உணர செய்யும் சுவாரஸ்யங்கள் நிறையவும் நிரம்பும் உள்ளத்தில் .

  சமூகத்தின் சகுனி தனத்தில் சாய்க்கப்படும் போது எழும் உணர்ச்சிகளில் புதையுண்டு போகாமல் எங்கனம் விதையென எழுந்து விருட்சமென வளர்ந்து வானம் தொட்டு ,புன்சிரிப்பில் புண்களை சிறிதாக்கி ,சிக்கல்களை சிதைத்து ,வாழ்ந்து வாழ வைப்பதென அழகியலுடன் அழுத்தமாக பதிவு செய்கிறது கதை .

  ஸ்வீட்யின் கதைக்காக அடர் திரையாய் ஆவல் எங்கள் விழிகளை ஸ்பரிசித்திருந்த வேலை காதல் வெளியிடையை கண்ணில் பார்க்கவும் எங்கள் வான வீதியில் வெள்ளி ஊஞ்சல்.பூவுக்கு மட்டும் அல்ல ,பூத்திருக்கும் காதலுக்கு மட்டும் அல்ல,அதை தாங்கி நிற்கும் எழுத்திற்கும் இத்தனை இத்தனை வாசம் உண்டோ என படிக்கும் அத்தனை பேரும் அவ்வாசத்தை வியந்து நுகர தவறார் . கதையை படிக்கும் போது நழுவிய ஒவ்வொரு நொடியும் சுகமே.ஒவ்வொரு வரியையும் அது தாங்கி நிற்கும் உணர்வுகளையும் அதன் ஆழ அகலத்தோடு உணரும் எங்களுக்கு எப்படி வெளிப்படுத்த என்று தெரியாத பூரிப்போன்று எங்கள் வதனத்தில் தங்க மின்னலாய் பூத்தெழுகிறது .sweety தங்களின் மொழி சிறைக்குள் எழும் விடுதலை உணர்வினை உயிர் வரை ஸ்பரிசிக்கிறோம் .அன்பு காட்டாறாய் பெருகி வரும் ஒவ்வொரு வரியிலும் எங்களுக்குள் பிரவாகிக்கும் உணர்வு நதிக்கு ,மனித நிலைக்கு பெயர் வைக்க தெரியவில்லை .

  மேல் பத்தி என் உணர்வு,sweety மொழியில் .இது அவர் மொழிக்கு மிக சிறிய சான்றே .கதை முழுதும் உள்ளம் அள்ளும் மொழி பிரயோகம் .

  கதை நிறைவுற்றவுடன் நிறைவில் நிரம்பி வழி்கிறோம் .காதல் வெளியிடை எங்களுள் எத்தனை வெளியிடைகளை கொண்டு சேர்த்தது என்ற பட்டியல் பெரிது .

  அன்பு வெளியிடை,பண்பு வெளியிடை,நேசம் ,பாசம் ,நட்பு வெளியிடை,பழியையும் தீர்க்கும் காதல் வெளியிடை இப்படி அநேக வெளியிடை…..

  ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமான மனிதர்களோட வெவ்வேற thought process, அதனால சூழல் ல ஏற்படும் மாற்றம் அதுக்கு 16 திக்குல உங்களோட analysis,logic,விளக்கம் நினச்சு வியந்து விக்கலே வந்திரும் .பின்னாடியே moral,ethics,social issues kuritha paaravai ￰பத்தின வியப்பு வந்து விக்கலை நிறுத்திடும் .

  மொத்தத்தில் எழுத்தால் வைக்கப்பட்ட ஒன்சுவை விருந்து ….நன்றிகள் பல ….

 6. Very nice story mam…ship la adventure trip kootitu ponathuku thanks….
  Saha and bhavan nice ….. Sri and nithu charectors very nice…. Moni so innocent…sirichi sirichi kannula thanni vanthachi…pavam ippadiya yemaruva…avaloda yellow costume hahahaha too comedy….Saha sonna single poiya nammi yenna paadu paduthu intha ponnu….very nice….
  Poori very clever girl…
  Finally darmaraj and ananth yenna ananga sollave ilaiye mam…Anand hospital a serthu treatment tharalame …
  Very nice story….

 7. Hi iam very to ur site,but the story is very very very sweet .i love Saha the best ,as a person he behaves like his name.nobody could care like him.simi’s feelings are understandable.the characters they meet in the ship help us to laugh,and makes us to longing to travel with them in that ship.its an wonderful journey with Saha,especially their adventures in the flood are bringing us to the edge of the chair.thanks a lot for the such a wonderful story with the loveable characters.may god bless you.please do bring us more nice stories with seeet characters.

 8. Hai Sis. I am Mathi.continuesa kadhal veliyidai padichuruken. Finals varum podhu phone floop aiduchu. Today epdiyum final padichakanumnu phone vandhadhume Final padichu mudichuten. Really superb. Fantastic. Awesome ending. Keep rocking always.

Leave a Reply