காதல் வெளியிடை 9

“ அவ நல்ல டைப்னு தெரியும்…… இல்லனா கண்டிப்பா இந்த மேரேஜ் ஐடியாவ ப்ரொசீட் செய்ய சொல்லமாட்டேன்…. ஆனாலும் சும்மா ஒரு மீட்டிங்ல இப்டி முடிவெடுக்கிறதெல்லாம் கண்டிப்பா சரி கிடையாது…..அவள அவங்க அப்பா பிஸினஸ்க்குள்ள கொண்டு வர ஹெல்ப் பண்ணு…..

அவ வளர்ந்த பேக்ரவ்ண்ட்ல இருந்து அவங்க பிஸினஸை மேனேஜ் செய்ற அளவு அவ வர்றதுக்கே எப்டியும் ஒரு ஃப்யூ மந்த்ஸாவது நீங்க சேர்ந்து வர்க் பண்ண வேண்டி இருக்கும்……

அப்போ நீங்க ஒருத்தர பத்தி ஒருத்தர் அதிகமா தெரிஞ்சுக்கவும் சான்ஸ் இருக்கும்…. அடுத்தும் உனக்கும் அவளுக்கும் பிடிச்சுதுன்னா எங்க தாத்தாட்ட சொல்லி பொண்ணு கேட்க சொல்வோம்….

வில்லேஜ்ன்றதால காஸ்ட்லாம் பார்க்க தான் செய்வாங்க…..இதுல நீ அடுத்த ஸ்டேட் வேற……அப்டின்றப்ப அவ வீட்ல ரொம்பவும் யோசிக்கத்தான் செய்வாங்க….. ஆனா தாத்தாவுக்கு அந்த பக்கம் நிறைய மரியாதை உண்டு….. சோ அவ அப்பா இறங்கி வரலாம்… அப்டி அவர் ஒத்துகலைனாலும் போகுது…. அவ அண்ணனா நான் நின்னு நடத்தி வைக்கேன்டா உங்க மேரேஜ….. இந்த பண ப்ரச்சனைலையும்….. ” சஹா இன்னும் சொல்லிக் கொண்டு போக….

ஒரு மாதிரி விக்கித்துப் போனாள் ஷ்ருஷ்டி…..அவள் வளர்ந்த சூழ்நிலையில் ஜாதியை தாண்டி கல்யாணம் செய்து தரேன்…. பொண்ணு  பையன் விருப்பம்தான் முக்கியம்னு சொல்ற ஒரு அண்ணனை பார்ப்பது படு அபூர்வம்…. அதுவும் சொந்த அண்ணனை விட கசின் ப்ரதர்ஸ்தான் கத்தி எடு.. கம்பு எடு… எங்க குடும்பமாங்கும்… அதோட மானமாங்கும் என இதில் அதிகமா எகிர்றது வழக்கம்….

ஆக இப்போது ஷ்ருஷ்டியின் மனம் அடுத்த சைட் கோல் போட்டது அவளை கேட்காமலே…..

‘ அதெல்லாம் அவன் பேசுறதில் ஒன்னும் தப்பில்ல….அந்த பொண்ண இவனுக்கு பெர்சனலா தெரியும்ன்றதாலதான் சொல்றான்….. மத்தபடி தன் தங்ச்சிக்குன்னும் பார்க்காம ஃப்ரெண்டுக்கும்னும் பார்க்காம ரெண்டு பேருக்கும் நடு நிலமையா எது நல்லதுன்னு பார்த்து தானே பேசுறான்…… பொண்ணு யாருன்னு தெரியுறதுக்கு முன்னாடியே அந்த ஃபேமிலிக்கு ஹெல்ப் பண்ணத் தானே சொன்னான்…..’ இப்படி ஓடத் துவங்கியது அவளது நினைவு….. அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்கவில்லை அவளுக்கு…..

சஹா பவனிடம் பேசி முடித்து திரும்பிப் பார்க்கும் போது ஷ்ருஷ்டி இவர்களது பேச்சு காதில் விழாத தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்…..

டுத்து ஆரம்பித்தது அவன் சொன்ன ட்ரைனிங்….  அதற்காக முதலில் அவன் அவளை கூட்டிச் சென்ற இடம் அவனது அறைக்குத்தான்…. “உள்ள பெர்சனல் பூல் உண்டு….அதுதான் இதுக்கெல்லாம் பெஸ்ட்….” ரூம் வாசலில் போய் நின்றபடி அவன் இப்படி சொல்லவும்தான் அவளுக்கு ட்ரெய்னிங் எங்கு என புரிய…..சுர் என ஏறியது அவளுக்கு….

எதோ ஓபன் பூல்ல….. அவன் எதோ செஞ்சு காமிப்பான்…..இவளுக்குத்தான் ஏற்கனவே ஸ்விம்மிங் கொஞ்சம் தெரியுமே…. ஆக அடுத்து இவ இறங்கி அதை செஞ்சு பார்த்துக்கனும்….இவ்ளவுதான் அதுவரை அவளோட ப்ளான்….

அவளைப் பத்தி ஏற்கனவே தெரியுமே அவனுக்கு…..அதனால இதுக்கு மேல அவனுமே ப்ளான் செய்துறுக்க மாட்டான்….. இப்படி ஒரு நினைப்பில் போனவளுக்கு….அவன் ரூமில்தான் ட்ரெய்னிங் எனவும்…. என்னப்பத்தி என்ன நினச்சுட்டு இருக்கான் இவன்…?  என எகிறுகிறது

அதற்குள் அவன் தன் ரூம் காலிங் பெல்லை அழுத்த…… இவன் கூட இன்னும் ஒருத்தனா என இவள் இன்னுமாய் ஏறும் முன்….. கதவை திறந்து “வாடா…. வாங்க ஷ்ருஷ்டி….. “ என  வரவேற்ற புதியவன் பின்னால் தெரிகிறது நிம்மியின் முகம்….

“இது ஆகாஷ்…. “ என இவளுக்கு சஹா அறிமுகம் செய்து வைக்கும் முன்பே அது இவளுக்கு புரிகிறதுதான்….

நிம்மி இருக்கப்ப உள்ள போறது ஒன்னும் தப்பில்ல என ஒரு மனம் சொன்னாலும்…..இன்னும் கொஞ்சம் தயக்கம் இவளுக்குள் இருக்க….

அதை முழுவதுமாய் துடைத்துப் போடுகிறது “நீங்க வர்றீங்கன்னு தெரியாது….ஆரு இப்பதான் தூங்க போனான்….” என வந்து இவள் கையை பற்றிக் கொண்ட நிம்மியின் செயல்…

என்னமோ இவள் அருகில்தான் அவள் பாதுகாப்பாக உணர்வது போல் தோன்றுகிறது நிம்மியின் முகபாவங்களும் நடவடிக்கையும்….

பார்த்திருந்த ஆகாஷின் முகத்தில்  நிச்சயமாய் சந்தோஷம் இல்லை…..

கடகவென நிம்மியோடு உள்ளே சென்றுவிட்டாள் ஷ்ருஷ்டி…

அடுத்து சற்று நேரத்தில் துவங்கியது ட்ரெய்னிங்…. ஆகாஷ் உள்ளிருந்த அறைக்குள்ளேயே அடைந்து கொள்ள….நிம்மியிடம் பேசி அழைத்து வந்திருந்தான் சஹா.  இவர்களை பார்த்தபடி அந்த பூலின் பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள் அவள்…

நினச்சாலும் இவ முங்க முடியாதுன்ற மாதிரி நீச்சல் குளம் உண்மையில் வெகு குறைவான ஆழம் இருந்தது…… மிஞ்சி மிஞ்சி போனால் இவள் கழுத்தளவு ஆழம் இருக்குமாயிருக்கும்.

குளத்தின் தரை மர நிறத்தில் ரம்யமாக தெரிய…. குளத்தில் இறங்க இருந்த வளைந்த ஸ்டீல் கம்பியிலான ஏணியை காண்பித்து…..”அது வழியா முதல்ல உள்ள இறங்கு ஸ்ரீ….”  என சொன்னான் சஹா…

இவள் அதன்படி உள்ளே இறங்கினாள்….

“இது ஒன்னும் கஷ்டமா இல்லைதானே…” கேட்டுக் கொண்ட சஹா… இவ இல்லை என மண்டை ஆட்ட…. “இப்ப மேல வந்துட்டு திரும்ப இறங்கு….. ஆனா இறங்குறப்ப கண்ண கட்டிட்டு இறங்கிப் பாரு…..ஏன்னா கடலோட அடியில போறப்ப உள்ள இருட்டாதான் இருக்கும் அப்போ இது ஈசியா ஃபீலாகும்” என வித்யாசமான இன்ஸ்ட்ரெக்க்ஷன் கொடுத்தான்…

அதே போல் மேல வந்தவள் அந்த ஏணியில் இரண்டு பக்க கம்பிகளை பிடித்துக் கொண்டு நிற்க…. அவளுக்கு சஹா சொன்னபடி நிம்மி கண்களை ஒரு துணியால் கட்டிவிட… கவனமாக இறங்க தொடங்கினாள்…

4 அல்லது 5 படியில் தரை வந்துவிடும் என்ற நினைவில் தான் ஆரம்பித்தாள் ஷ்ருஷ்டி… ஆனால் இறங்க இறங்க…..இன்னுமே இறங்க வேண்டிதான் வந்தது…

‘கண்ண கட்டினதுல படி கணக்கு குழப்புதோ….’ என சற்று நேரம் நினைத்தபடி இறங்கியவள்.…. ஒரு கட்டத்தில் காலில் கடக்கும் படிகளை எண்ணிக் கொண்டு இறங்க தொடங்க…..அதற்கு பிறகும் 10 படிகளை தாண்டினாள் அவள்…

‘இல்ல இங்க வேற எதோ நடக்குது..’ கையை விட்டு கண்ணில் இருக்கும் துணியை எடுக்கலாமா…..’ என இவள் நினைத்த நொடி….. இவள் கால் தரையில் பட்டது.

அவசரமாக கண் கட்டை அவிழ்த்துப் பார்த்தால்….இவள் இருந்த நீச்சல் குளத்தில் ஆழம் ரெண்டு மாடி உயரத்துக்கும் அதிகம்….

சிறு சிரிப்போடு சஹா நின்று கொண்டிருந்தான் எனில்

நிம்மியோ “சூப்பரா செய்றீங்க….கீப்  இட் அப்…”  என மேலிருந்து ஊக்குவித்தாள்…

ஆம் அக்குளத்தின் தரை என ஷ்ருஷ்டி நினைத்தது உண்மையில் அதன் மூடியாம்….வேண்டும் என்ற ஆழம் அளவு அதை இறக்கிக் கொண்டே வரலாமாம்…. அதை வைத்து இவள் இறங்க இறங்க….குளத்தின் ஆழத்தை அதிகமாக்கிக் கொண்டே வந்திருக்கிறான்…

“இவ்ளவு உயரம் பயம் இல்லாம உனக்கு இறங்க முடியுதுதான……? முழுக்க முழுக்க சேஃபாதான இருக்க…..?” அவ்வளவு மட்டும்தான் சஹா கொடுத்த விளக்கம்…

கண் கட்டை அவிழ்த்துவிட்டு பயம் இன்றியே மேலே ஏறி வந்தாள் ஷ்ருஷ்டி….

மனம்தான் “நம்மள எவ்வளவு கவனிச்சு வச்சுறுக்கான்…..அதுவும்  அதுக்கு எப்டி சொல்யூஷன் வேற யோசிச்சுறுக்கான்…” என அலை பாய்ந்தது…..

“ கடல்ல ஸ்விம் செய்யனும்னா உயரம் ஆழமெல்லாம் பார்த்து பயப்படுறது கண்டிப்பா சரியாகனும்…..அந்த வகையில் இதுவும் ஸ்விம்மிங் ப்ராக்டீஸ்தான்….. மத்தபடி நிம்மிக்கு நல்லா ஸ்விம்மிங் தெரியும்…. பூல் ஆழத்த குறச்சு வச்சுட்டு தினமும் அவங்க கூட பழகிக்கோ” என அடுத்தும் அவன் கழன்டு கொள்ள…

அந்த அவனது முடிவு இன்னுமாய் கலைக்கிறது இவள் மனதை…… எந்த வகையிலும் அவசியமற்ற அட்வான்டேஜ் எடுக்காமல்…..ஆனாலும் இவளுக்கு என்ன தேவைன்றத பார்த்து பார்த்து செய்து….. இதையெல்லாம் என்னதாக காரணபடுத்த வேண்டும் இவள்…?

காயனின் அறைக்கு வரும் போது நிம்மி ஷ்ருஷ்டியை தவிர யாரிடமும் ஒரு ஒட்டாத பாவத்தோடு இருந்தாள்தான்…. அடுத்தும் சகாயனாக சென்று கூப்பிடும் வரை பூல் பக்கமும் வரவில்லை அவள்…..

ஆனால் அடுத்து சகாயன் ஷ்ருஷ்டிக்கு கொடுத்த ப்ராக்டீஸ்…..அதைப் பற்றி அதற்கு முன்னதாக இவளிடம் சொல்லி உதவக் கேட்டது….. அடுத்தும் ஷ்ருஷ்டியை அவன் நடத்திய விதம்….. அவளை கண்ணைக் கட்டி படு கேஷுவலாக அந்த கம்பி ஏணியில் அவன் இறங்க சொல்லிவிட்டாலும்…. அவசரமாக அந்த ஏணியில் ஷ்ருஷ்டிக்கு கீழாக சென்று ஏறிக் கொண்டு…. தப்பிதவறி ஷ்ருஷ்டி சறுக்கினாலும் அவள் கீழே விழுந்துவிடக் கூடாதென அவளை கவனித்து கொண்டே அவன் இறங்கியது…. கூடவே இவளை ஷ்ருஷ்டிக்கு ஸ்விம்மிங் சொல்லி கொடுக்க சொன்னது என எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு வகையில் சகாயன் மீதும் ஒரு பாசிடிவிட்டியை தோற்றுவிக்க…..

அடுத்து பூல் அருகிலேயே உட்கார்ந்து ஸ்ருஷ்டியும் அவளும் பேசிக் கொண்டிருந்தபோது இவர்களோடு வந்து அமர்ந்த சகாயனிடமும் ஓரளவு பேச துவங்கினாள் அவள்….

ஒரு மணி நேரம் போல் ஆகாஷ் வரும் வரை தொடர்ந்த இந்த அரட்டை கச்சேரி….. அவன் வரவும்…. “ ஆரு எழுந்துருவான்…. நான் பார்த்துக்கனும்..…. ஷ்ருஷ்டி நாம ஈவ்னிங் ஒரு செவனோ க்ளாக் பக்கம் இங்க மீட் பண்ணலாம்… சஹாண்ணா நாங்க உங்க பூல அந்த டைம் யூஸ் செய்துக்கிறோம்” என நிம்மி எழுந்து சென்ற போது முடிவுற்றது…

ஆகாஷ் முன்னிலையில் நிம்மி பயப்படுகிறாளோ என்று கூட தோன்ற துவங்கி விட்டது ஷ்ருஷ்டிக்கு….. ஆனாலும் ஆகாஷும் நிம்மியும் அங்கு இருக்கும்போது….அவர்களைப் பற்றி பேசி சகாயனிடம் விசாரிப்பது சரியாக படாததால் எதுவும் பேசாமல் விடை பெற்றாள் அவள்…

 ணி ஏழு…… நிம்மியை தேடி கிளம்பிச் சென்றாள் ஷ்ருஷ்டி….  இந்த டைம்ல வர சொல்லிருக்கிறது ஸ்விம்மிங் ப்ராக்டீசுக்குத்தானா…..? இல்ல நிம்மி எதுவும் தனியா பேசனும்னு நினைக்கிறாளா…..? இவங்க ரெண்டு பேருமா ப்ராக்டீஃஸ் செய்ய போறதா சொன்னா கண்டிப்பா சஹா கூட அங்க இருக்க மாட்டான்…. சோ நிம்மியா மனம் திறந்து பேசலைனா கூட கண்டிப்பா இவ எப்டியும் அவள மனசுவிட்டு பேச வைக்கனும்….. என திட்டமிட்டபடி கிளம்பிப்போனவளை வரவேற்கிறது சஹா அறை வாசல் முன்னிருந்த அந்த கடிதம்….

நேற்று போல இன்றும் எதுவோ சிவப்பு இதயத்துடன்.….

ஒருமாதிரி அதிர்ந்து போய் நின்றுவிட்டாள் பெண்…. இப்டி தினம் தினம் சஹாவ துரத்தினா என்ன அர்த்தமாம்???

கவரை குனிந்து எடுத்த போது….கைகள் நடுங்க துவங்கி…..வியர்க்க ஆரம்பித்தது அவளுக்கு….. சுற்று முற்றும் பார்த்துவிட்டு…..கடகடவென அதை பிரித்தாள்….

Next Page