காதல் வெளியிடை 8

டுத்து ஒருவர் உள்ளே வருவதை சற்று அதிர்வோடு பவன் எதிர்கொண்டானாகில் வந்த நபரை முழு வெறுமையுடன் பார்த்தபடி நின்றாள் நித்து…. அவரை வெளிச்சத்தில்  பார்க்கவும் பவனுக்கும் புரிந்து விட்டது அது ராஜசுந்தரம் என்று….

அவர் வீட்டில் இருக்கும் போதுதான் ஒரு கிழம் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்ற புரிதல் அவனுக்குள் இன்னும் இரண்டு எரிமலையை எழுப்பி விடுகிறது எனில்….இது எதையும் புரிந்து கொண்டதாக எந்த அடையாளத்தையும் காட்டாமல்…

“எழக்கு…தெளியும்…..எல்ல்லாம் தெழியும்….எழ்ழாஆம் சழி ஆகிலும்னு நள்ளாவே தெழியும்….” என எங்கோ பார்த்தபடி எதையோ சொல்லியபடி  தடாலடியாய் தரையில் சரிந்தார் அந்த ராஜசுந்தரம்….

அவர் விழ ஆரம்பிக்கவும் ஓடிப் போய் பிடித்தாள் அவர் மகள்…. அடிபடாதவாறு தன் தகப்பனை தரையில் மெல்லமாய் சாயவிட்டவள்…..மீண்டும் தான் எழுந்து நிற்கும் போது முன்பிருந்ததைவிடவும்  எல்லையிலா வெறுமையே அவள் முகம் முழுவதும் குடி இருந்தது….

இப்போது முதலில் கவனிக்க வேண்டியது இந்த கிழத்தைத்தான் என முடிவு செய்துகொண்ட பவன்….. அந்த தற்கொலை கடிதத்திற்கு இரண்டு காப்பி….கூடவே போலீஸ் கமிஷனருக்கு என்ற பெறுநர் முகவரி ஒரு கவரில் என எல்லாம் அவர் கையெழுத்தில் எழுதி வாங்கிக் கொண்டான்  அந்த கிழவனிடம்….

“இனி நீ இந்த பொண்ணுட்ட வாலாட்டினாலோ….இல்ல வேற எந்த பொண்ணுட்டயாவது வில்லங்கம் செய்தாலோதான் இந்த லெட்டரா யூஸ் செய்வேன்னு நினைக்காத….. நீ ஒன்னுமே செய்யாட்டாலும்….சும்மா எனக்கு தோணினா கூட உன்ன போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்….. இருக்கப்போற கொஞ்ச நாளாவது ஒழுங்கா இருந்துட்டுப் போ….” என அரை சதவீதம் கூட அலட்டல் இன்றி நிதானமாய் மிரட்ட….

தலை தெறிக்க ஓடிப் போனான் அந்த கிழவன்…

“உன் சித்தி எங்க…?…..இப்டித்தான் பயந்து ஓடி வருவியா….? வயசுப் பொண்ணுதான நீ…..ஓங்கி இழுத்து தள்ளுனா….எலும்பு உடஞ்சு எழும்ப முடியாமே கிடப்பானே அவன்……? ஏன் இந்த கம்பி உன் வீட்லதான இருந்துச்சு எடுத்து கைல வச்சுகிட்டு கத்தினா போதுமே…..கிராமம் தானே……பக்கத்துல எல்லாம் சொந்தகாரங்களாதானே இருப்பாங்க….ஹெல்ப்க்கு வருவாங்கதான….?” இப்போது நித்துவைப் பார்த்து நிறுத்தாமல் பொரிந்தான் பவன்….

மூச்செடுக்காமல் வெடித்துக் கொண்டிருப்பவனை விழி விரிய பார்த்திருந்தாள் பெண்……அவன் கோபத்தை அவள் சற்று முன் கண்டிருக்கிறாள்….. அந்த கிழவரிடம் அவன் நடந்து கொண்டதைப் பார்த்தாள்தானே……அப்போது கனன்று கொண்டிருந்த எரிமலை போலிருந்தான் எனில் இப்போது இது நிச்சயம் வேறு வகை…..

இது அகத்திற்குள் ஒளிந்திருக்கும் அசுத்தமின்மையை மித மென்மையை அப்படியே வெடித்து வெளிப்படுத்தும் சோளப்பொரி ரகம்…. பாப்கார்ன்….

ஒரு கணம் தன் சூழ்நிலை எல்லாம் மறக்க…அந்த அக்கறையில் நனைந்தவள்…. பின் சட்டென தான் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்கும் விதமும் தன் அவல நிலையும் உறைக்க….. மீண்டுமாய் அவளது விரக்திக்குள் நுழைந்து கொண்டாள்…..

“ சித்தி வீடு அடுத்த தெருவுல…… சோ போய் கூப்ட்டாதான் வருவாங்க….. அடுத்த ஆட்கள கூப்ட்டா உங்க அப்பாதான் வரவே சொன்னான்னு சொல்வேன்னு அந்த கிழவன் சொல்லிட்டு இருந்தான்….. அது உண்மை இல்லைனு நான் எதவச்சு யார நம்ப வைக்க……?  இந்த நாட்ல தப்பு செய்தது யார்னாலும் குற்றவாளி மட்டும் எப்பவும் பொண்ணுங்கதான் சார்….. பனிஷ்மென்டும் அவங்களுக்கு மட்டும்தான்…..நான் உங்களப் போல மாறினாதான் சார் இந்த ப்ரச்சனையெல்லாம் நிற்கும்…. அதாவது ஆணா மாறிடனும்னு சொல்றேன்….” விரக்தியின் மொத்த வீரியத்துடனும் செத்தவைகளாகவே வெளிப்பட்டன அவளின் இந்த பதில்…..

பவனுக்கு மொத்தமும் புரிந்தது என்று இல்லை எனினும்….. “அது என்ன என்னைப் போல மார்றது…? லேடி CM, PM எல்லாம் மென்ன விட டாமினன்ட்டாவே இருந்து ஆட்சி செய்த நாட்ல இருந்துட்டு என்ன பேச்சு இது….?” என பதில் வந்தது அவனிடமிருந்து….

“ஆமாம் ஏன் சொல்ல மாட்டீங்க….. லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன பொண்ண சர்ச்ல வச்சு வெட்றதும்…..ஆசிட் வீசி கொல்றதும் கூட இங்கதான் சார்….. லவ்வ ஒத்துகலைனு இப்டின்னா… ஒத்துகிட்டு கல்யாணம் செய்தவங்கள கட்டி போட்டு காதுல பாய்சன் விட்டு பெத்தவங்களே கொன்னுடுறாங்க…..

இதுக்கெல்லாம் தப்பிச்சு  மேரேஜ் ஒழுங்கா ஆகிட்டா….அங்க என்ன நடந்தாலும் அடிச்சாலும் உதச்சாலும்….கழுத்துல கால வச்சு மிதிச்சு வாய்ல ஆசிட்டயே ஊத்தினாலும்…..அடிமையா அங்க தான் கிடக்கனும்னு சட்டமே சொல்லும்….. தாங்க முடியாம தப்பிச்சா போதும்னு தனியா வந்துட்டாலோ..…இல்ல அவங்களே துரத்தி விட்டுடாலோ….வாழவெட்டின்னு வந்தவன் போறவன்லாம் வயசு வித்யாசம் பார்க்காம வர்றியான்னு கேட்பான்…..

இவ்ளவு ஏன்… நீங்க சொல்றீங்களே அந்த CM PM அவங்களோட டெத் கூட எப்டி சார் ஆச்சு?” விரக்தி என்ற அவள் நிலையில் கோபமும் இப்போது கலந்து வந்திருந்தது….

ஒரு கணம் அவளை சற்று ஆயாசமாய் பார்த்திருந்த பவனின் முகத்திலோ இப்போது கனிவு….

“சாவோட  வாழ்க்கை முடிஞ்சு போய்டுதுன்னு நினைக்றியா நித்து?” கனிவோடு இரக்கமும் குழைத்து செய்த குரலில் வந்தது அவனது இந்த கேள்வி….

“………………”

“ உயிரினமே இல்லாத பூமி மண்ணோட சில உயிரில்லாத துகள்…. டபக்குன்னு கொயன்சிடன்ஸ்ல மூச்சு விட ஆரம்பிச்சு….. ஒரு செல் உயிரி ஆகி…..அதே கொயன்சிடன்ஸ்ல அது இனப்பெருக்கமும் செய்து….. அதுல கொஞ்சம் ரெண்டு செல்லா பரிணாம வளர்ச்சியும் அடஞ்சு…….அப்டியே கொயன்சிடன்ஸ்ல கண் மூளைனு எல்லா காம்ளீகேட்டட் ஆர்கன்ஸ் கூட தற்செயலா உருவாகி…. அப்டியே அதாவே குரங்கு வரைக்கும் உண்டாகி….. அதுல இருந்து மனுஷன் வந்துட்டான்னு சொல்றத நம்புறத விட….. கடவுள்னு ஒருத்தர் இதெல்லாம் செஞ்சார்னு நம்புறது உனக்கு லாஜிகலா படலையான்னு கேட்கிறேன்…..” தன் கேள்வியை விளக்கினான் அவன்….

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னா….லைஃப் ஆஃப்டர் டெத்னு ஒன்னு இருக்கிறதும் லாஜிகலி கரெக்ட் தானே…..  சோ சிலரோட டெத்தை பார்த்து இவ்ளவுதான் லைஃப்ன்னு நினைக்கிறது எப்டி சரி….. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன கிடச்சுதோ…?”

ஒரு காலத்தில் கடவுள் நம்பிகையில் இருந்தவள்தான் அவள்…..ஆனால் இன்றைய நிலையில் அவள் மனம் என்னதை நம்புகிறது என அவளுக்கே தெரியவில்லை…. பதிலின்றி மௌனமாக நின்றாள் நித்து…

அவள் முக பாவத்தில் தெளிவு எதுவும் தோன்றாததைக் கண்டு…

“சரி கடவுள நீ நம்பலைனே இருக்கட்டும்…… நீ உன் வாழ்க்கைக்கு எதை உதாரணமா எடுத்துக்கப் போற…..அந்த லேடீஸ் வாழ்ந்த வாழ்க்கையையா…..இல்ல அவங்க ஃபேஸ் செய்த டெத்தையா….? அவங்க ஜெயிச்ச காலங்களையா….? இல்ல அவங்க இழப்புகளை சந்திச்ச நேரங்களையா…?” அடுத்த வகை கேள்விக்கு போனான் அவன்….

அவன் கண்களையே பார்த்தபடி நின்றாள் பெண்…. நெஞ்சுக்குள் அனல் அருவியாய் ஒரு நம்பிக்கை பொழிவை உணராமல் இல்லை அவள்…

“நீ சொல்றியே அந்த அத்தனை லேடிசும் லாஸ்ட் மினிட் வரைக்கும் அவங்களுக்கு எது சரின்னு பட்டுதோ அதை மட்டுமே செய்தவங்க….. அதாவது அவங்க வாழ்க்கைய முழுக்க முழுக்க அவங்கதான் வாழ்ந்திருக்காங்க…… அவங்கள அடிமையாக்க நினச்ச யாருமே ஜெயிக்கல…..ஆனா இப்டியே நீ ஒன்னொனையா யோசிச்சுட்டு  ஓடி ஒழிஞ்சா….. போனானே அந்த கிழட்டு நாய்….அவன் கூட உன் வாழ்க்கைய அடிமையாக்கிட்டு இருப்பான்…… “

“எப்டியும் ஒரு நாள் சாகத்தானே போறோம்….. அப்டின்றப்ப அது எப்டி வந்தா என்ன…? வாழ்றப்ப வாழ்க்கைய வந்து பாருன்னு சொல்ல வேண்டாமா?”  தன் முன் சிலை போல நின்றிருப்பவளை பார்த்தபடி பேசிக் கொண்டு போனவன்….அதோடு தன் பேச்சை நிறுத்திக் கொள்ள… சில நொடிகள் இருவருக்குமாய் மௌனத்தில் கழிந்தது….

இது எதற்கும் அசையாமல் விழுந்து கிடந்த அவளது அப்பாவை இப்போது ஒரு பார்வை பார்த்த பவன்…… “சரி நீ போய் தூங்கு….. இங்க பக்கத்தில் என் கார் ஸ்ட்ரக் ஆகிட்டு…..அதில்தான் இருப்பேன்…. அந்த கிழத்தாலோ..….இல்ல வேற எதுவும் ப்ரச்சனைனாலோ ஒரு ரிங்க் கொடு வந்துடுவேன்…. அடுத்து என்ன செய்யலாம்ன்றதை காலைல பார்ப்போம்….” என்றபடி அருகிலிருந்த டேபிளில் தென்பட்ட தன் மொபைலை எடுத்துக் கொண்டான்…

‘இவளுக்காக வீட்டு வாசல்ல காவல் இருப்பானாமா…? ‘ மனம் முரண்ட அவசரமாக தன் மறுப்பை அவள் தெரிவிக்க நினைத்த நொடி…

“உன் அப்பா காலைல விழிக்கவும் எனக்கு சொல்லிடு….அவர நான் கண்டிப்பா பார்த்தே ஆகனும்..” என அடுத்த இன்ஸ்ட்ரெக்க்ஷன்னையும் கொடுத்தான் பவன்….

‘ஓ அப்பாவ மீட் பண்ணத்தானா இது….’ என ஒரு எண்ணம் வந்தாலும்….அதுவும் தப்பாக தோன்றவில்லை அவளுக்கு….. ‘பின்ன ஒரு கோடி கொடுத்தவன் சும்மாவா இருப்பான்….? நாளைக்கு எப்படியும் அப்பாவ இவன மீட் பண்ண வச்சாகனும்…. என மனதில் முடித்துக் கொண்டாள்….

வெளி கேட்டை பூட்டிவிட்டு வந்து உள் கதவுகளையும் இவள் பூட்டிக் கொள்ளும் வரை வாசலில் நின்று பார்த்து விட்டே கிளம்பிய அவனைப் பற்றியே எண்ணமாய் இருந்தது வெகு நேரம் நித்துவுக்கு….

படுக்கையில் கிடந்தவளுக்குள் ‘வாழ்க்கைய வந்து பாருன்னு சொல்லனுமாமே… அப்டி சொல்லிட்டா இவ பழையபடி சந்தோஷமா ஆகிடுவாளாமா?’ என்று ஒரு கேள்வியும்….. அவன் பாப்கார்ன் மாதிரி பொரிந்த போது இவளுக்குள் வந்த சந்தோஷமும்  நொண்டி அடித்தது….

Next Page