காதல் வெளியிடை 7

திருவேங்கடம்….

ந்த வீட்டு முன் காரை நிறுத்தி இறங்கிய பவன்….. சுற்றிலும் காம்பவ்ண்ட் சுவரால் சூழப்பட்டிருந்த அப் பெரியவீட்டை முழுமையாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டான்….

மூன்று நான்கு தலைமுறையாவது கண்டிருக்கும் பழைய கட்டிட அமைப்பு…..ஆனாலும் முழு பராமரிப்பின் அடையாளமாய் அழகிய வர்ணம் பூசப்பட்டு மர வேலைகள் எல்லாம் வார்னிஷ் செய்யப்பட்டு என பொலிவோடும் கம்பீரத்தோடும் அரண்மனை போல நின்று கொண்டிருந்தது அது…

சற்றாய் அசைந்தாடும் மரங்களுக்கு நடுவில் அது நின்று கொண்டிந்த அமைதியான சூழல் அவனுக்கு பிடித்திருக்கிறது…. நகர வாழ்வில் உணர முடியா ஒருவித பரபரபற்ற தன்மை அவனுள்….  அதோடு இவன் தேடி வந்திருக்கும் ராஜசுந்தரத்தின் வீடு கிராமத்தில் இருக்கிறது என கேள்விப்படவும் வந்திருந்த ஒருவித மனபிசைதலும் விலகிப் போகிறது….

இவன் வந்திருப்பது பண பட்டுவாடா விஷயமாக….. இதுவரை அவனைப் பொறுத்தவரைக்கும் கிராமம் என்பது பொருளாதாரத்தில் மிக பின் தங்கிய மக்களின் வசிப்பிடம்…. கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் தர வேண்டிய நபர் கிராமத்தில் இருக்கிறார் என்றால்…. அவர் பணநிலவரம் எப்படியோ? வந்து சேர வேண்டிய பணம் வருமோ வராதோ? என ஒருவித எண்ணத்தில் வந்தவனுக்கு இந்த வீட்டின் அளவும் அது பேணப்பட்டிருக்கும் வகையுமே அந்த ராஜசுந்தரத்தின் பொருளாதார செழுமையை அறிவிக்க……

சற்று நிம்மதியுடனே போய்  கேட் அருகில் தென்பட்ட காலிங் பெல்லை அழுத்தினான்….. காம்பவ்ண்ட் சுவருக்கும் வீட்டிற்கும் இடையில் இருந்த தூரம்  அதிகம் என்பதால்….வீட்டிற்குள் காலிங் பெல் சத்தம் கேட்கிறதா இல்லையா என்றும் தெரியவில்லை….. சில நிமிடங்கள் காத்து நின்று பார்த்தபின்னும் உள்ளிருந்து யாரும் வருவதாயும் இல்லை…..

கேட் பூட்டி இருக்காததால் அதை தள்ளி திறந்து கொண்டு உள்ளே சென்றான்….. மரசட்டங்களில் பதிக்கப்பட்டிருந்த நீள நீள இரும்புக் கம்பிகளை மட்டுமே முகப்பு சுவராக கொண்ட அந்த வீட்டின் கதவுமே திறந்து கிடக்க…..அந்த பெரிய வரண்டாவிலும் யாரும் இல்லை என தெளிவாக தெரிய….. இங்கிருந்து கூப்பிடுவதும் ப்ரயோஜனப்படாது என புரிய……அதற்குள் நுழைந்தவன்…..

அடுத்து கர்டெய்ன் காற்றில் ஆட தெரிந்த வாசலின் கதவை தட்டிக் கொண்டே உள்ளே செல்ல….. கண்ணில் படுகிறாள் அவள்…..

அந்த விஸ்தீரமான பெரிய ஹாலின் நட்ட நடுவில் ஒரு கையை நீட்டி, மறு கையை மடித்து அதில் தன் நாடியை பதித்தபடி குப்புற படுத்திருந்தாள்….. பாசி பச்சை நிற சல்வாரில் பார்க்க தரை மேல் கிடக்கும் இலை போல் அவள்….

பார்த்த முதல் கணம் இவனுக்கு என்ன சொல்ல வேண்டும்… என்ன செய்ய வேண்டும் என எதையும் சிந்திக்க கூட முடியவில்லை…..

அந்த சங்கு நிற மார்பிள் தரைக்கும் கறுப்பு என சொல்லிவிடக் கூடிய அளவான அவள் நிறத்திற்கும்…..  மெல்லியதாயும் மென்மையும் தோன்றிய அவள் உருவ அமைப்பிற்கும்….. திரைசீலைகள் ஆடிக் கொண்டிருந்த சன்னல்கள் வழியாக சற்று குறைவாகவே சிந்திக் கொண்டிருந்த வெளிச்சத்திற்கும்…..

பார்க்க படு ரம்யமான பழையகால ஓவியம் போல தோன்றியது அக்காட்சி அவனுக்கு…. எதிர் பாரா நேரத்தில் முகத்தில் அடித்தாற் போல் எதிர்ப்பட்ட இந்த ரம்யத்தில் சில நொடிகள் செய்கையற்று நின்றவன்……

என்னதான் இவன் சினாரியோவ ரசிச்சாலும்…..பார்க்க ஒரு பொண்ண பார்த்துட்டு நிக்க மாதிரிதான் தெரியும் என மெல்ல உறைக்க…. “ஹலோ…” என கூப்பிட்டு தன் வரவை அறிவிக்க நினைத்த நொடி

“ஏ நித்துப்பாப்பா வச்சுட்டு போன காஃபி அப்டியே ஏடு படிஞ்சு கிடக்கு….இப்டியே அழுதுட்டு கிடந்தா நடந்ததெல்லாம் இல்லன்னு ஆகிடுமா….?” என்றபடி வீட்டின் மற்றொரு புறந்திலிருந்து அங்கு வந்தார் ஒரு மத்திம வயதான பெண்மணி…….

அந்த நித்துப்பாப்பாதான் கவலையில் இவன கண்டுகிடலைனா  நெடு நெடு என நிற்கும் இவனை இவருமா பார்க்காமல் இருப்பார்……இவனைக் கண்டுவிட்ட அந்த பெண் “யாருங்க நீங்க…? யாரப் பார்க்க வந்தீங்க….? வந்துட்டு ஒரு குரல் கொடுக்க கூடாது….? இப்டியா பொம்ளபிள்ளய பார்த்துட்டு நிப்பீங்க…? “ என ஆரம்பிக்க….

இதற்குள் தடபுடவென எழுந்திரித்த அந்த நித்துப்பாப்பா…..உள்ளறைக்குள் சென்று தலைமறைந்துவிட்டாள்…

இவனுக்கோ சுருசுருவென ஏறுகிறது….. இவன என்னன்னு நினைச்சுட்டாங்க அந்த ரெண்டு பேரும்…??….  ஆனா இது பனை மரத்தடியில் நின்று பால் குடிப்பதற்கு சமானம்….என்ன சொல்லி நான் சும்மாதான் பார்த்தேன்…..தப்பா எதுவும் பார்க்கலை என விளக்கவாம்….?

ஆக விளக்கம் சொல்லும் எண்ணத்தை அப்படியே கைவிட்டவன்…. நேரடியாக விஷயத்திற்கு வந்தான்….. அந்த நித்து அழுது கொண்டிருந்தாள் என்பது மனதில் சுழன்று கொண்டே இருந்தாலும்….இனி இவன் இளகி பேசினாலே  தப்பாக தோன்றும் என்பதால் சற்று கராராகவே பேசி அந்த ராஜசுந்தரத்தை சந்திக்க வழி வகை செய்து கொண்டு கிளம்பிவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டவன்…

“ராஜசுந்தரம் சார பார்க்கனும்…” என வெட்டு தெறித்தார் போல் ஆரம்பித்தான்.

“அவரப் பார்க்கனும்னா இங்க ஏன் வர்றீங்களாம்…? அவர் ஆஃபீசில போய் தேடுங்க…. இல்லனா எங்கயாவது விழுந்து…..”  அந்தப் பெண் மணி வெடுவெடுத்துக் கொண்டு போக…..

“சித்தி!!!” என உள்ளிருந்து வருகிறது ஒரு அதட்டலும் கெஞ்சலுமான குரல்….. அனேகமாக அந்த நித்துவின் குரல் போலும்…. இவன் யூகித்து முடிக்கும் முன் அவள் முன்பு அணிந்திருந்த சல்வாரின் மேல் ஒரு துப்பட்டாவை போர்த்தியபடி வெளியே வந்தாள்….

“சார் என்ன விஷயம்னு சொல்லுங்க…. அப்பா வரவும் உங்கள கான்டாக்ட் செய்ய சொல்றேன்….” என்றாள் எங்கோ பார்த்தபடி……

இவன் பார்வையை தவிர்க்கிறாள்…. அதுதான் இவனுக்கு முக்கியமாய் பட்டது அந்த நொடி…..பொறுக்கின்னே முடிவு செய்துட்டா போல….

“இங்க பாருங்க…..இதைக் கேட்டுட்டு சும்மா திரும்பிப் போறதுக்காக நான் ஒரிசால இருந்து கிளம்பி வரல…..” இவன்தான்…

எங்கோ பார்த்திருந்தவள் இப்போது இவனை திடுக்கிடுதலோடு பார்த்தாள்….. “ஒ…ரிசாவா?” அவ்ளவு தூரத்திலிருந்து தேடி வருவதென்றால் விஷயம் பெரிதென அவளுக்கும் புரிகிறதுதானே….

“எதுனாலும் என்ட்ட சொல்லுங்க சார்…. கண்டிப்பா சால்வ் செய்து தர்றேன்…..” அவள்தான்…. குரலில் மட்டுமல்ல கண் முகம் என எங்கும் தவிப்பு வந்திருந்தது அவளுக்கு…..

“பண விஷயம்….சோ சொந்தகாரங்கள பக்கத்தில் வச்சுகிட்டல்லாம் பேச முடியாது….”

ராஜசுந்தரத்தின் கடன் அளவை அவரது உறவினருக்கு பறைசாற்ற இவனுக்கு இஷ்டம் இல்லை…. அது நாகரீகம் இல்லை என்பதோடு விஷயம் வெளியே பரவ பரவ இன்னும் என்ன ப்ரச்சனைகளை எல்லாம் கொண்டு வருமோ…. ஆக அந்த நித்துவை இவன் இப்படி கேட்க….

இவன் எதிர்பார்த்தபடியே எதிரில் நிற்பவள் இப்போது எச்சில் விழுங்கினால் என்றால்….

“அதென்ன வயசுபிள்ளைட்ட தனியா பேசுறது என எகிறினார் அந்த சித்தியம்மா….

“இந்தாங்க….முதல்ல இதப்பிடிங்க….” தன் மொபைலை  எடுத்து அந்த நித்துவிடம் நீட்டியவன்……இங்க லேண்ட் லைன் இருக்குதா….? எந்த ரூம்ல இருக்கு…?” என விசாரித்தான்….

ஒரு கணம் விஷயம் புரியவில்லை எனினும்…அடுத்த நொடி அவன் நோக்கம் புரிய அந்த நிலையிலும் அவள் கண்ணில் மின்னல் வெட்டியது…..முதன் முறையாக அவனை பயம்தாண்டிய விதமாக கவனித்தாள் நித்து….

அவள் கை அதுவாக திசை காட்ட….அருகிலிருந்த அந்த ரூமுக்குள் நுழைந்த அவன் கதவை சாத்த….…… அடுத்து இவர்கள் வீட்டு லேண்ட் லைன் எண்ணை காண்பித்தபடி இவள் கையிலிருந்த மொபைல் சிணுங்கியது….

இவள் அழைப்பை ஏற்க்கும் போது இவளது சித்தியின் முகத்தில் கூட புன்னகை பூத்திருந்தது…… “இப்பவாவது எங்கயாவது உங்க சித்தியவிட்டு தள்ளி நிப்பீங்க தானே…” ஃபோனில் அவன் கேட்கும் போது இவளுக்கு கூட சிறு முறுவல் ஒன்று எட்டிப் பார்க்கிறது….

பவன் அவளிடம் சுத்தி வளைத்தெல்லாம் பேசவில்லை…. நித்துவின் அப்பா கடையான ஜெயம் மார்பிள்ஸ் அண்ட் டைல்ஸுக்கு கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய்க்கு கட்டாக்கிலுள்ள ஜேசி டைல்ஸ் என்கிற  கம்பெனியில் இருந்து சரக்கு வாங்கப்பட்டிருக்கிறது…..அதற்கான  பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை…  அதைப் பெற்றுச் செல்ல இந்த பவன் இங்கு வந்திருக்கிறான்… இதுதான் அவனது பேச்சின் சாரம்சம்…

“கிட்டதட்ட 20 வருஷமா உங்க அப்பா கூட பிசினஸில் இருக்கவங்க எங்க கம்பெனி….. சோ உங்கப்பா ஆர்டர் கொடுக்கவும் நாங்க சரக்கனுப்புறதும்….லேட்டர் அதுக்கு பணம் வாங்கிக்கிறதும் காமன்…. ஆனா என்னதான் இருந்தாலும் 10 லட்சத்துக்கு மேல அப்டி பெண்டிங்க் போக விட்டது கிடையாது உங்கப்பா…..இதுல மூனு மாசம் முன்னால பெரிய ஆர்டர்…. கிட்டதட்ட ஒன்றர கோடி ரூபாய்க்கு…. ஏழு லோடா அனுப்பனும்னு அக்ரிமென்ட்….. முதல் ரெண்டு லோடுக்கான ஐம்பது லட்சத்தை அட்வான்சா வேற கொடுத்துட்டாங்க….அடுத்து ஏழு லோடு அனுப்பியாச்சு எங்க கம்பெனில இருந்து…. ஆனா அப்றம் உங்கப்பாவ ஃபோன்ல கூட பிடிக்க முடியல…..” என அவன் சொன்ன போது….. அவன் இவளிடம் இவ்வளவு தன்மையாக பேசிக் கொண்டிருப்பதே இவளுக்கு பெரிய விஷயமாகப் பட்டது….

கூடவே எப்படி இருந்த அப்பா இப்படி மாறிவிட்டார் என்ற நினைவும் தேளாக கொட்டியது….

“சரி இப்ப சொல்லுங்க…..நான் என்ன செய்யனும்…? உங்க அப்பாவ எங்க பார்க்கலாம்…?” அவன்தான்…

“அ…து….. நிஜமா அப்பா எங்க இருப்பாங்கன்னு தெரியலை….”தயங்கி தயங்கி நிலமையை சொன்னாள் இவள்…..ஆனா பயப்படாதீங்க….. நான் எப்டியாவது….” அவள் இழுக்க…

“இங்க பாருங்க பொருள் கொடுத்தது உங்க அப்பாட்ட….. அவர்ட்டதான் விலையும் கேட்க முடியும்….” அவன் சொன்ன வார்த்தைகள்

Next Page