காதல் வெளியிடை 5

குளித்து முடித்து ப்ளூகலர் பாவாடை சட்டை தாவணியில் பாத்ரூமைவிட்டு வெளியில் வந்த ஷ்ருஷ்டியின் முகத்துக்கு முன்பாக விர்ரென இறங்கி ஏறியது அது….

“உஸ்ப்……. “ எதிர்பாராத இந்த செயலில் துள்ளிக் குதித்தாள் இவள்….

அது என்னவென பார்க்க இவள் லெஃப்ட்டில் திரும்பினால் அது ரைட்டுக்கு போய்…..படாரென முட்ட வருவது போல் அடுத்து லெஃப்டுக்கு  பாய…

“ஐய்யோ….” பதறிப் போய் இவள் அடுத்த துள்ளல்….

அடுத்து அது அப்படியே தலைக்கு மேல் சடாரென எழும்ப…..அதை ஒரு வழியாய் பார்த்துவிட்டாள் அவள்….

நாலு பக்கம் விங்கோட ஒரு குட்டி பறக்கும் ஆப்ஜக்ட்…. drone…..அடிப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா தெரியும் அளவு பெரிதுதான்……

இதற்குள் அது  கீழே இவள் கால் வரை இறங்கி….. சட்டென இடுப்புக்கு அருகில் வந்து பின் இவள் மார்புக்கு நேராய் அது பறந்து…..இவளது முகத்துக்கு நேராய் சுற்றி என இவளை வம்புக்கு இழுக்க…..

“பாரு இப்ப நான் போடுற போடுல உன் செவுடு தவுடு திங்க போகுது….” வழக்கமான எந்துவோடு இப்போ அவ அவசரமா கட்டிலுக்கு அடியிலிருந்து ப்ரூம் ஸ்டிக்கை  எடுத்து ….வாள் வீசுறாப்ல அதை சும்மா சுழட்டி சுழட்டி வீச…..

அதுவோ ஹ ஹ ஹா ஹா ன்னு சவ்ண்ட் கொடுக்கலைனாலும் அந்த ரேஞ்சுக்கு அவளப் பார்த்து சிரிக்றது போல மாட்டாம மாறி மாறி ஓடுது…. இவளையே பக்கத்தில முன்னால பின்னாலன்னு சுத்தி வந்து டீஸ் செய்யுது….

சட்டென இவளுக்கு ஒரு கேள்வி…..இது இவள இடுப்பு முன்பக்கம்னு பார்ட் பார்ட்டா க்ளோசப் ஷாட்ல வீடியோ எடுக்கோ?…..

அவ்வளவுதான்……

தன் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே பாய்ந்தாள் அவள்…. அத உள்ள வச்சு கதவ பூட்டிறனும்…. இவள் ட்ரைப் பண்ண அதுக்கும் முன்பாக வெளியே வந்திருந்தது அது……

இனி நோ ஆப்ஷன்…அதன் காமிரா கண்ணுக்கு மாட்டாமல் ஒன்லி ரன்னிங்…. காரிடாரில் இவள் தலை தெறிக்க ஓட….

சகட்டு மேனிக்கு துரத்துது அது…..

அப்போதான் இவளுக்கு நியாபகம் வருது……ப்ளூ கலர் க்ளாத்தாலா கவர் செய்துறுக்க பார்ட்ட வீடியோல மார்ஃபிங் செய்றது ஈசின்னு எங்கயோ கேள்விபட்ட விஷயம்….

Next Page