காதல் வெளியிடை 4

மோனா கிளம்பிச் சென்ற பின்னும் எழுந்து செல்ல முடியாத நிலை ஷ்ருஷ்டிக்கு…. எதிரில் இருப்பவன்தான் இன்னும் இவள் பாஸ்போர்ட்டைப் பத்தி எதுவும் சொல்லவில்லையே….

அவனையே திருதிருன்னு பார்த்துட்டு இருக்கவும் எப்படி இருக்குதாம்?

அதற்குள் அவனே ஆரம்பித்தான்….

“இங்க எப்டி நீ?…ஐ மீன் இந்த க்ரூஸுக்கு…?”

‘என்ன நீ? என்னை எப்படி நீ போன்னு ஒருமையில் பேசலாம்?’ என்றெல்லாம் கேட்க முடியவில்லையே இவளுக்கு….இதில் ‘நான் இங்க வந்தா உனக்கென்னவாம்?’ என்று எப்படி கேட்கவாம்? அவன்ட்ட இருக்றது இவ பாஸ்போர்ட் ஆச்சுதே….

“அது….நான் என் ப்ராஜக்ட் விஷயமா வந்துருக்கேன்…” பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் வாயை திறந்தாள். மாட்டிக் கொண்ட பரிதாப முழி கண்ணிலும் முகத்திலும்….

இந்த பதில் அவனுக்கு போதவில்லை போலும்…  அப்றம்? என்பது போல் இன்னும் இவளையே பார்த்திருந்தான்..

“ஒரு டைப் க்ரீப்பர்ஸ்ல ரிசர்ச் செய்றேன்…….”

அவனது அப்றம் அடைப்புக் குறியோடு அவன் கண்ணிலே இன்னுமே நிற்க

“என் பி எச் டி தீசிஸ்காக….” தொடர்ந்தாள் இவள். ‘சொல்றத நம்புறானா..? அவன் கண்களையே கவனித்திருந்தாள்.

“பி எச் டியா செய்ற?” வெளிப்படையான மெச்சுதல் இருந்தாலும் கொஞ்சம் ஆச்சர்யமும் அவன் குரலில் உள்ளே….

‘அப்டின்னா பி எச் டி செய்றேன்றத அவன் நம்பலை போல’ இவளுக்கு அதன் பொருள் இப்படித்தான் புரிகின்றது….. ‘இந்த பேக்கு எப்படி பி எச் டி லாம் செய்துன்னு நினைக்கிறான் போல?’

“நான் சிட்டிக்கு வந்து மூனு வருஷம்தான் ஆச்சுது…. அதுவும் க்ளாஸ் ரூம், ஹாஸ்டல் இது தவிர எங்கயும் போனது இல்ல….. .சோ  சிட்டி பழக்கம் எல்லாம் எனக்கு அவ்ளவா தெரியாது…… சிலது வராது….கொஞ்சம் பிடிக்காது….” தன்னைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறதே என்ற தயக்கம் இருந்தாலும்…   அவன் தன்னை நம்பவில்லை என்று தோன்றிய உணர்வு தூண்டிய விதத்தில் ஆக்சிலேட்டரையும் அடுத்து ப்ரேக்கையும் மாத்தி மாத்தி போட்ட மாதிரி  பேசினாள் இவள்…

எதையோ  சொல்ல வந்த அவனும் ஏனோ இப்போது எதுவும் தலையிடாமல் கதை கேட்டான்.

“எனக்கு இங்க்லிஷ் பேசுறது தான் கொஞ்சம்  கஷ்டமா இருக்குமே தவிர இங்க்லிஷ் நல்லாவே எழுதுவேன்…. படிப்பேன்…. BSc ல எங்க யுனிவர்சிட்டி டாப்பர்….அதுலதான் MSc இங்க சிட்டி யுனிவர்சிட்டிலயே கிடச்சுது…..” அவன் முகத்தையே பார்த்தபடி இவள் சொல்லிக் கொண்டு போக…

இதுவரைக்கும் இவள் முகத்தையே பார்த்திருந்த அவனது பார்வை இப்போது தன் இரு கை நகங்களையும் மாறி மாறி ஆராய்ந்து கொண்டிருந்த இவள் விரல்கள் மீது சென்று திரும்புகிறது….

சட்டென டேபிள் மீதிருந்த தன கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்….

“பிஜிலயும் நான் டாப்பர்தான்….. அதான் எங்க டிபார்ட்மென்ட்லயே என்னை பி எச் டிக்கு எடுத்துகிட்டாங்க…..வேணும்னா என் ப்ராஜக்ட் டீடெயில்ஸ் கூட உங்கட்ட காமிக்கிறேன்…. “ அடுத்தும் கூட இவள் இன்னும் என்ன சொல்லி இருப்பாளோ…

“ரிலாக்‌ஸ் ஷ்ருஷ்டி” என இப்போது இவளது பேச்சை நிறுத்தினான் அவன்…

“நீ பி எச் டி  செய்றதை நம்பலைன்னே நான் சொல்ல வர்ல….பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்கியேன்னு யோசிச்சேன் அவ்ளவுதான்….. பைதவே  இங்க்லிஷ் பேச தெரியுறதுக்கும் சப்ஜெக்ட் நாலட்ஜுக்கும் எந்த லிங்கும் இருக்றதா நான் நினைக்கிறது இல்ல…” என்றவன் பின் எதோ சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்திக் கொண்டான்.

“சரி உன் ரிசர்ச்சுக்கும் இந்த க்ரூஸ்க்கும் என்ன சம்பந்தம்?”  விஷயத்துக்கு வந்தான்…

“ஃப்ரான்ஸ்ல உள்ள ஒரு லேபும் எங்க யுனிவர்சிட்டியும் கொலாப்ரேஷன் வர்க் இது….  ஃப்ரான்ஸ் ஸ்பான்ஸர் செய்ற ப்ரோக்ராம் இது….நான் ரிசர்ச் செய்ற க்ரீப்பர்ஸ்ல ஒரு நியூ வெரைட்டி இப்ப ஒரு ஐலன்ட்ல லொகேட் செய்துருக்காங்களாம்….. இந்த க்ரூஸ்தான் அங்க போற ஒரே பாசிபிள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்…..அந்த க்ரீப்பர்ஸ் இன்ஃபோவும் நான்  கலெக்ட் செய்யனும்னு ஃப்ரான்ஸ் லேபிலிருந்து டிசைட் செய்துறுக்காங்க….

என் பி ஜி ப்ராஜக்ட் ரிப்போர்ட் பார்த்துட்டு இந்த ப்ராஜக்டுக்கு எங்க டிபார்ட்மென்ட்ல என்னை செலக்ட் செய்தப்ப இப்டில்லாம் போக வேண்டி இருக்கும்னு நான் மட்டுமில்ல எங்க ஹெச் ஓ டி கூட எக்ஸ்செப்ட் செய்யல…..” அழுதே விடுவாள் போல இதை சொல்லும் முன்…. இங்கேயே கை காலெல்லாம் வியர்த்துக் கொண்டு வருவது போல் இருக்கிறது அவளுக்கு….

இப்போதோ வார்த்தையால் உதவிக்கு வந்தான் அவன்….“ஹேய் அதுக்கென்ன…… அதெல்லாம் எல்லாத்தையும் சூப்பர்பா செய்து முடிச்சுடுவ நீ….a very determined person ” என ஒரு என்கரேஜிங் செர்டிஃபிகேட் அவனிடமிருந்து…

“எதாவது ஹெல்ப் வேணும்னா ஹெசிடேட் செய்யாம  கேளு…” இப்படி வேற ஒரு வெல்கம் நோட்….

இப்போ இவ பயம் பட்டென விட்டுப் போக….. அதான் ஹெல்ப் செய்றேன்னுட்டானே…..இதுக்கு பிறகும் இதை எப்படி கேட்காமல் இருக்கவாம்?

“அது…. என் பாஸ்போர்ட்” இழுவையாய் எனினும் கேட்டுவிட்டாள்….

“இந்த மோனா அன்ட் கேங்க்….. இவங்கல்லாம் ஷிப் அஃபீஷியல்ஸ்ட்ட   ப்ரைப் செய்து உன் பாஸ்போர்ட் டீடெயில்ஸ் வரைக்கும் விசாரிச்சுட்டு இருந்தாங்க…. அப்ப காதில் விழுந்ததுதான் இந்த விஷயமெல்லாம்…”  இதை அந்த சஹா சொல்லிய விதத்தில் அக்கறை இன்மை இல்லை என்றாலும் அக்கறைப்பட்டான் எனவும் சொல்ல முடியவில்லை…

“……….”

“இன்டெர்னேஷனல் வாட்டர்ல நடக்கிற எந்த க்ரைமையும் எந்த நாட்டு லாவும் ஒன்னும் செய்ய முடியாது….. வெறும் ப்ராங்னு அவங்கட்ட கேர்லெஸா இருக்காத….” இப்போதோ அவன் வாய்ஸில் வந்து எட்டிப் பார்க்கிறது கொஞ்சம் அக்கறையும் கொஞ்சமே கொஞ்சம் அதட்டலும்…

Next Page