காதல் வெளியிடை 20 (4)

ப்போதுதான் ஷ்ருஷ்டி மொட்டை மாடியிலிருந்து இறங்கிப் போவதற்காக கதவருகில் வந்தது….. இந்தக் காட்சியைக் காணவும்தான் எது சொல்லவும் தோன்றாமல்…தான் அவர்களை கண்டதை கூட காண்பிக்க விரும்பாமல் திரும்பி ஓடினாள் அவள்….

“நான் இன்னும் ஷ்ருஷ்டிட்ட சொல்லலப்பா….ஒவ்வொரு டைம் பார்க்கிறப்பவும் சொல்லனும் போல இருக்கு…ஆனா எப்டி சொல்லன்னு தெரியல…”  நிம்மி சொல்லி அழுவது ஷ்ருஷ்டியின் காதிலுமே விழுகிறதுதான்…

“ஒன்னும் சொல்ல வேண்டாம்….” தான் இருந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தாள் ஷ்ருஷ்டி…

“எல்லாம் தெரியும்…” அவள் தொடர

சட்டனெ தன்னவன் கைகளில் இருந்து வெளி வந்து கொண்டாள் நிம்மி..

“ஷ்ருஷ்டி…” இவள் அழைப்பில் இவர்கள் பார்வைக்குள் வந்து நின்ற ஷ்ருஷ்டி…

“இப்ப நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்கன்னுதான் தெரியுமே…அப்படின்னாலே நான் என்ன புரிஞ்சிருந்தாலும் அது தப்புதான….. எல்லோருக்கும் சொல்ல முடியாத விஷயம்னு சிலது இருக்கும்… எனக்கும் இருக்கு….அத வெளிய சொல்ல என்னால முடியாது…..அப்டின்றப்ப உங்களோடதையும் நான்   கேட்க கூடாது….” என்ற வகையில் அந்த பேச்சை முடிக்க முயன்றாள்.

“இத அப்பன்னா நீ சஹா சார்ட்ட சொல்லலாமில்லையா?” என நிம்மியோ கமா போட்டாள்….

‘எதை?’ என்பது போல் ஷ்ருஷ்டி கேள்வியாய் பார்க்க…

“தப்பா புரிஞ்சுகிட்டா சாரி கேட்கனும் இல்லையா?”  நிம்மியின் இந்தக் கேள்வி கடந்த காலத்தின் பலவற்றையும் மீண்டுமாய் மனதில் உருட்ட வைத்தது ஷ்ருஷ்டியை…. நித்துவுக்கு ஆனந்துடனான திருமண காரியத்துக்கு பிறகு கொதித்துக் கொண்டிருந்த ஷ்ருஷ்டிக்குள் ஒரு வெறியே இருந்தது…அதுவும் நித்துவுக்கு விவாகரத்தும் தரமாட்டேன் என அந்த தர்மராஜ் குடும்பம் கொடூரமாய் நடந்து கொள்ள….போலீஸ் கோர்ட் என போராடிப் பார்த்துவிட்டு விழுந்து கிடந்தவளுக்கு எதோ வகையில் இதை சும்மாவிடக் கூடாது திருப்பிக் கொடுக்க வேண்டும் என வெறி….

அப்பொழுதுதான் அவளது படிப்பு சார்ந்த ப்ராஜக்டுக்காக எதிர்பாராவிதமாக அந்த தீவில் சென்று குறிபிட்ட செடியைப் பற்றி அறிந்துவரும் பொறுப்பும் கடைசி நிமிடத்தில் இவள் தலையில் விழுந்தது….அதற்கு சென்று வரவேண்டும் அது தன்னால் முடியும் என்று கூட இவளுக்கு எண்ணம் இல்லை….முடியாது எனதான் மறுத்தாள்….படிப்பையே தூக்கிப் போட்டுவிட்டு போய்விடலாம் என்ற மனநிலைதான் அவளுக்கு அப்போது…..

இவளது டிபார்ட்மென்ட் சீனியர் அண்ணா ஒருவர்தான் அதெல்லாம் இல்ல நீ போயே ஆகனும் என இவளை அரித்துக் கொண்டு இருந்தவர்….கப்பல் பயணத்துக்கு பயந்து கொண்டுதான் இவள் மறுக்கிறாள் என நினைத்து…. ஏற்கனவே துறைமுகத்தில் நின்றிருக்கும் அந்த கப்பலுக்கு நேரில் சென்று ரொம்ப சின்சியராய் விபரம் சேமித்து வந்தார்…. அப்போது அவர் கப்பலில் விசாரித்த நபர்களுள் ஒருவர் சகாயன்…

சகாயன் அவரிடம் நடந்து கொண்ட விதம் இவருக்கு பிடிக்கவும்… ஷ்ருஷ்டியிடம் ‘கப்பல் இப்படித்தான் இருக்கு.. இன்ன இன்ன ப்ரொசீர்…உன் சேஃப்டிக்கெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை…தாராளமா போய்ட்டு வா…’ என தகவல் கொடுக்கும் போது கூடவே… ‘இந்த இப்டி சகாயன்னு ஒருத்தர பார்த்தேன்.. அவரும் அதுல இந்த ட்ரிப் வர்றார் போல…ரொம்ப ஃப்ரெண்ட்லி பேர்சன்…எதாவது ஹெல்ப் வேணும்னா நீ இவரக் கூட கேட்கலாம்’ என சொல்லி அடையாளத்துக்கு ஃபோட்டோவையும் காண்பிக்க….

அப்பொழுதுதான் முடிவெடுத்தாள் ஷ்ருஷ்டி இவள் குடும்ப அழிவிற்கு ஆதாரமான இந்த சகாயனுக்கு  திருப்பிக் கொடுக்க இவள் இந்த பயணத்துக்கு போய் வரவேண்டும் என…

அவளைப் பொறுத்தவரை இனியும் நியாயம் கிடைக்கும் என சட்டத்தையோ தெய்வத்தையோ நம்புவது அறிவீனம் என முழுதுமே விட்டுப் போயிருந்தது அவள் மனம். சகாயன், தர்மராஜ் போன்ற மிருகங்கள தண்டிக்காமவிட்டா….நித்து மாதிரி இன்னொரு அப்பாவிய அதே ஆனந்துக்கு கல்யாணம் செய்து வச்சாலும் வைப்பாங்க…இந்த சகாயனும் இன்னும் எத்தன பொண்ணுங்கள நாசாமாக்குவானோ….தண்டிக்கப்படாத குற்றம் எப்போதும் அடுத்த குற்றத்திற்கான தடையற்ற திறந்த வாசல்தானே….. ஆக நிச்சயமாய் அந்த குடும்பம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பது இவளது வெறி….

ஆக இதுதான் திட்டம் என எதுவும் மனதில் இல்லை என்றாலும் இன்டர்நேஷனல் வாட்டரில் நடக்கும் கொலைக் குற்றத்துக்கு கூட விசாரணைக்கோ தண்டனைக்கோ பெரும்பாலும் வழி கிடையாது என்ற அறிவு அவளுக்கு தைரியம் தந்தது….. அதோடு ஹாஸ்டலில் படித்த இவள் நித்து திருமண தினத்தில் மட்டுமே விழாவிற்கு வந்து போயிருந்ததால்….அன்று விழாவிற்கு வராத சகாயன் இவளை எப்போதுமே பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்ற உறுதியும் சேர கப்பலுக்கு கிளம்பிவிட்டாள் இவள்….

வாழும் விருப்பத்தை முழுதுமே அப்பொழுதைய காலத்தில் அவள் இழந்திருந்தாலும் அவளது தந்தைக்காகவும் நித்துக்காகவும் கட்டாயம் இவள் உயிரோடு இருக்க வேண்டும் அதுவும் ஜெயிலில் அல்ல இவர்களுது ஊரில் என்ற புரிதல் அவளுக்கு இருந்தது….  அந்த நிலையில் இந்த கப்பல் பயணம் வெகு சாதகமாகப் பட்டது…

அப்படி கப்பலுக்கு செல்லும் போது சஹா மீது இவள் கொலை வெறியில் இருந்தாலும் அடுத்து அவனது ஒவ்வொரு செயலிலும் இவள் அவனைப் பற்றி நேர் எதிரிடையாய்த்தான் உணரத் துவங்கினாள்….

முதல் முறையாக அவனை சந்தித்தாளே மோனிக்காக… அது இவனைத்தான் பார்க்கப் போகிறாள் எனத் தெரியாமல் போய் ஏற்பட்ட  எதிர்பாராத சந்திப்பு…..அப்போதே அவன் மோனியிடமிருந்து இவளை பாதுகாக்க முயன்றானே அங்கேயே அவனிடம் இவள் விழுந்து போனாள் எனதான் சொல்ல வேண்டும்….. அடுத்து ஒவ்வொரு நிகழ்விலும் அவனிடம் இவள் தலைகுப்புற விழுந்து கொண்டுதானிருந்தாள்….. யாருண்டு இவளுக்கு அவனைப் போல் நேசித்திட? என்று கண்டிருக்கிறாள் அத்தனை அன்பை?

நித்து திருமண விஷயத்தில் அவனைப் பற்றி ஏற்பட்ட புரிதல் அனைத்துமே தவறோ எனக் கூட இவளுக்கு தோன்றத் தொடங்கியது அப்போது….. அலக்சான்ட்ரியா பயணத்துக்குப் பின் அவனிடம் எல்லாவற்றையும் மனம் திறந்து பேசிவிடலாம் வருவது வரட்டும் என்று முழுவதுமாயே இவள் அவனுக்குள் வீழ்ந்திருந்தாள்……

அப்போது  அதை பேசுவதற்காகத்தான்  அவனது அறைக்கு அவள் வந்திருக்க…. அந்நேரம்தான்  நிம்மியை உடற்காயங்களுடன்  அப்படி ஒரு கோலத்தில் காணவும்….அத் திருமணத்தை செய்து வைத்ததே சஹா என்றதும் மீண்டுமாய் இவள் தடுமாறிப் போனாள்….

தன் ஃப்ரெண்டான ஆகாஷ் எப்படிப்பட்டவன்னு கொஞ்சம் கூடவா சஹாக்கு தெரியாம இருந்திருக்கும்…..தெரிஞ்சும் ஒரு அப்பாவிப் பொண்ண ஆகாஷ் தன் ஃப்ரெண்டுன்ற ஒரே காரணத்துக்காக மாட்டிவிட்ட சஹா… தன் அண்ணனுக்காக நித்துவ மாட்டிவிட்டிருப்பானோ என்ற அந்த தடுமாற்றத்தை அப்படித்தான் நடந்திருக்கும் என உறுதியாக இவளை நம்ப வைத்தது கப்பல் சஹாவினுடையது என்ற அந்த செய்திதான்…..

அதுவரைக்கும் சஹா நல்லவன் என்று இவளுக்கு தோன்றத் தொடங்கி இருந்ததற்கு  முக்கிய காரணம் கப்பல் நிர்வாகத்திடம் அவன் இவளுக்காக வாதடியதும்….தன்னை பிணயம் வைத்து இவள் ப்ராஜக்டுக்காக அவன்  கப்பல் நிர்வாகத்துக்கு எழுதிக் கொடுத்த அக்ரிமென்டும்தானே….. அதுவே நாடகம் என்றால்….. ?

இதன் மூலம் இவளுக்கு புரிந்தது என்னவென்றால்….சஹாவுக்கு இவளைப் பிடித்திருக்கிறது….இவளோடு பழக வேண்டும் என்பதற்காக கப்பல் அவனுடையது என்பதை மறைத்து இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கிறான்… இவளுக்கும் அவனுக்கு திருமணம் நடந்த பின் இது இவளுக்கு தெரியவந்தால்….பெண் பிறந்திருப்பதே கல்யாணம் செய்துருக்கவனுக்காக வாழவும் சாகவுன்றதுதானே அவன் வீட்டோட கொள்கை…..அவன் கால்லதான் இவ விழுந்துகிடப்பான்ற நம்பிக்கை….

ஆகா  அவனுக்கு பிடிச்ச இவ வேணும்னா இவள ஏமாத்தலாம்…. அவன் ஃப்ரெண்டு ஆகாஷ் குழந்தைய பார்த்துக்க நிம்மி வேணும்னா நிம்மிய ஏமாத்தலாம்…அவன் அண்ணன பார்த்துக்க நித்து வேணும்னா நித்துவ ஏமாத்தலாம்….இதுதான் சஹாவோட மனப்பான்மை…

ஆம் இப்படித்தான் விஷயத்தைப் புரிந்து கொண்டாள் ஷ்ருஷ்டி…. அவன் தேவைக்காகன்னு இந்த சஹா இன்னும் எத்தனை பேரை என்ன செய்ய மாட்டான்?  என இவளுக்கு புரிய…. அடுத்துதான் அந்த தீவு நிகழ்வு….

அது கூட அன்றைய சூழலில் அவளுக்கு அப்படி ஒரு திட்டம் உதித்து அது மனதில் கனன்று கொண்டிருந்தாலும் கடைசி நிமிடம் வரை அத்தீவுக்கு போகவே இவளுக்கு மனம் வரவில்லை…. கிளம்பாமதானே உட்காந்திருந்தா….அப்பவும் வந்து கப்பல் போய்டும் உன் ப்ராஜக்ட் வேஸ்ட் ஆகிடும்னு சஹா சொல்லவும்…அவன் கப்பல்னு எனக்கு இப்ப வரை தெரியாதுனு நினச்சுகிட்டு…இப்பவும் எதோ ரொமான்ஸ் ப்ளான்ல என்னை ஏமாத்தலாம்னு இவனுக்கு இருக்குதுல்ல…..ஏமாத்துக்கரான்….யாரையும் ஏமாத்த கவலையேபடாதவன் என்பதுதான் இவளுக்குள் இருந்த வெடிகுண்டு திரிக்கு தீ வைத்தது…..

ஆனால் இப்போது பார்த்தால் உண்மையில் கப்பல் அவனுடையதே இல்லை போலயே…அவன் தாத்தாவோடது…. பண விஷயத்தில் கப்பல் நிர்வாகத்தின் முடிவை மாத்த இவனுக்கு அதிகாரம் இல்லைன்றதால ரகசிய இன்ஸ்பெக்க்ஷனுக்காக வந்தவன் தன்னை வெளிப்படுத்தாமல் ஒரு சகபயணியாகவே வாதாடி இவ ப்ரச்சனையை தீர்த்து கொடுத்திருக்கிறான்….. அந்த பனவோலை கொழுக்கட்டைக்கு பனைமரம் வேணும்ன்றப்ப ஏற்கனவே நிறைய மாசம் கப்பல் நிர்வாகத்தை ரகசியமா கண்காணிச்சுட்டதாலயோ…. இவ ஆசைப்படுறாளேன்னு அவன் தன் தாத்தா பேரை சொல்லி இருப்பானா இருக்கும்….அவர் பேரன்றப்ப பண விஷயத்தில்தான் எதுவும் செய்ய முடியாது… ஆனா இப்டி மரத்த கொடுப்பாங்கல்ல…. அத இவ என்னதா புரிஞ்சு வச்சுருக்கா???

கடைசியில் பார்த்தால் அவன் யாரையுமே எப்பவுமே ஏமாத்தவே இல்லை போலயே….ஆனா இவல்ல அவனை கொலை செய்ய முயன்றிருக்கிறாள்….

கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற எல்லா நியாயங்களும் சரிதான்….. ஆனால் அவைகள் சட்டங்களாக இருந்து சமுதாயம் விசாரித்து முழு மொத்த மக்களின்  தீர்ப்பினால் நிறை வேற்றப்பட வேண்டியவை….

அதை தனி மனிதன் கையிலெடுக்கும் போது இதுவும் இன்னொரு குற்றமாகத்தான் போய்விடுகிறது…..

தர்மராஜ் திட்டம் தீட்டி அநியாயமாய் நித்து வாழ்வை நாசமாக்க முயன்றார் என்றால் இவளும் திட்டம் தீட்டி அநியாயமாய் சஹாவை அழிக்க நினைத்திருக்கிறாள்….. இதில் தர்மராஜ் செயலுக்கும் இவள் செயலுக்கும் வித்யாசம் என்ன?

குற்றச் சிலுவை பாரம் தாங்காமல் தத்தளித்தாள்….

இதையே மனம் வலிக்க வலிக்க திகைக்க குழம்ப யோசித்துக் கொண்டே எங்கோ நடந்தவள் வெயில் சாயும் நேரம் கால் ஓய்ந்து எங்கோ உட்கார்ந்தாள்…. சற்று நேரம் கழித்து கவனிக்கும் போதுதான் எதோ ஒரு தேவாலய வாசலில் அமர்ந்திருப்பதே அவளுக்கு புரிகிறது…

வெகு காலத்திற்கு பின் முதன் முறையாய் உள்ளே போனாள்…

எவ்வளவு நேரம் அழுதாலோ…..

தெய்வமே… பழி வாங்குதல் உங்களுக்குரியதுன்னு ஏன் சொல்லி இருக்கீங்கன்னு எனக்கு இப்பதான் புரியுது…அதுல தேவையில்லாம தலையிட்டுட்டேன்….இப்ப என்னால தாங்க முடியலையே…..

ஒவ்வொரு நொடியும்  என்ன அவ்ளவு விரும்பி… எனக்கு எது பிடிக்கும்… எனக்கு எது நல்லதுன்னு ஒவ்வொரு விஷயத்திலும் அவ்ளவு யோசிச்சு….ஏன் எதுக்குன்னு கூட கேள்வி கேட்காம அவ்ளவு தூரம் என்ன நம்பி என் கூட வந்தவங்களுக்கு நான் என்ன செய்து வச்சுருக்கேன்….. அதுவும் அவ்ளவு மோசமான அப்பா வேற அவங்களுக்கு….அம்மாவும் இல்ல…..சொல்லப் போனா குடும்பமே இல்ல….இதுல இடையில் போய் நான் வேற நாசம் பண்ணி வச்சுருக்கேன்…..

அவங்கள இனி எப்ப எப்பவும் நல்லா பார்த்துகோங்க….ரொம்ப ரொம்ப சந்தோஷமா வச்சுகோங்க….உலகத்துலயே அதிகமா அவங்கள நம்புற… உலகத்துலயே அதிக அதிகமா அவங்கள லவ் பண்ற… கேர் எடுத்துக்ற….தன் உயிரவிடக் கூட பத்ரமா பார்த்துக்குற ஒரு பொண்ண அவங்களுக்கு மேரேஜ் செய்து வைங்க… அவங்களுக்கும் அந்தப் பொண்ண ரொம்ப ரொம்ப பிடிக்கனும்…. அவங்களுக்கு விருப்பமில்லாத கல்யாணமால்லாம் அது இருந்துடக் கூடாது…. ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டுதான் கல்யாணம் செய்துக்கனும்…..அவங்க ரெண்டு பேருக்கும் அது ரொம்ப ரொம்ப ஹேப்பியஸ்ட் மேரேஜ் லைஃபா இருக்கனும்…..அவங்கள உங்க கைல குடுத்துட்டேன்….இதுக்கு முழு பொறுப்பும் நீங்க மட்டும்தான்…… இதுக்காக நான் எதாவது செய்யனும்னா அது என்னதா இருந்தாலும் செய்து கொடுப்பேன்….

லயத்திலிருந்து வெளி வரும் போது சஹா விஷயத்திலிருந்துமே முழுதுமாய் வெளி வந்திருந்தாள் இவள்…. அவளைப் பொறுத்த வரை அவனை கடவுளிடம் கொடுத்தாயிற்று…..இனி இவள் நினைவில் கூட அவனை அனுமதிப்பது அவளது இந்த வேண்டுதலுக்கு எதிரானது என எண்ணினாள்…

ஏனெனில் இப்போது அவன் வகையில் இவள் மனதில் மிச்சமிருப்பது சுத்த காதல் மட்டும் அல்லவா? அவனை இன்னொரு பெண்ணிற்கு கொடுக்க சொல்லிவிட்டு இவள் அவனை காதலித்தால் அது பாவமல்லவா?

ஆக தான் உண்டு தன் வேலையுண்டு என்பதாக தன் உலகத்தை சுருக்கிக் கொண்டாள்…. அவளது ப்ராஜக்டும் முடியும் தருவாயில் இருந்ததால் கடுமையாய் வேலை வாங்கி தனக்குள் அவளை புதைத்துக் கொண்டது….

இதில் வந்து சேர்ந்தது நித்துவுக்கு விவாகரத்து…..ரத்து என்பதைவிட மன நிலை சரியில்லாத  மணமகனின் அந்நிலையில் நடந்த அது விவாகமே அல்ல என வந்திருந்தது தீர்ப்பு…

யாரும் இவளிடம் விவரிக்கவில்லை என்றாலும் தீர்ப்பு விஷயங்களை வாசிக்கவுமே இவளுக்கு புரிந்தது இதில் சஹாவின் உதவி பெரும் பங்கு இருக்கிறதென….ஏனெனில் அவன் அண்ணனின் உண்மையான மனநிலை குறித்த அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் அவனே கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தான்…சாட்சியும் கொடுத்திருந்தான்…

சஹா வாழ்க்கை ரொம்பவுமே நன்றாக அமையும் என்று மட்டும் நினைத்து தன் மனதை நிறுத்திக் கொண்டாள் ஷ்ருஷ்டி…. அவளது ஆய்வுகளை சமர்பித்து தன் படிப்பை அவள் நிறைவு செய்தது அப்போதுதான்….

டுத்துதான் பவனுக்கும் நித்துவுக்குமான இந்த திருமணம்…. இது அவர்கள் உறவினர் சூழ தங்கள் ஊரில் நடை பெற வேண்டும் என விரும்பினர் பவனின் பெற்றோர்…. நித்து பவன் மட்டுமல்ல இதற்குள் பவனை நம்பத் தொடங்கி இருந்த இவளது தந்தைக்குமே  இந்த எண்ணம் பிடித்திருக்க…..புவனேஷ்வரில் கோலாகலமாக தொடங்கி இருந்தது திருமண கொண்டாட்டம்…..இன்னும் மூன்று நாளில் திருமணம்….

இந்த ஒரு வருட காலத்தில் சகா இவளை தொடர்பு கொள்ளவே முயவில்லை என்பதால் அவன் இவளை மனதிலிருந்து விலக்கி இருப்பான் என ஒரு வகையாக நம்பிக் கொண்டாள் ஷ்ருஷ்டி…. இவளைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காகவே அவன் இத் திருமணத்திற்கு வரவும் மாட்டான் என்றும் எண்ணினாள்….

ஏனெனில் பவன் நித்துவே இவளுக்கு மன வேதனை தரக்கூடுமென சஹா பற்றி எதுவுமே சொல்வதில்லை என்கிற போது….இவளைப் பொறுத்தவரை சஹா இன்னும் மென்மையானவன் நிச்சயமாய் எதிரில் வந்து நின்று இவளுக்கு பலதையும் நினைவில் கொண்டுவர விரும்பமாட்டான் என நம்பி இருந்தாள்…. ஆனால் நட்புக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம் தெரியுமாதலால்……பவனுக்காக வருவானோ என்றும் அடிமனதில் ஒரு உணர்விருந்தது போலும் இவளுக்கு…

எப்படியோ அவன் வந்தாலும் வராவிட்டாலும் இயல்பு மாறாமல் அவனைக் காணாமல் இருந்து கொள்ள வேண்டும் என்ற இவளது மன உறுதிதான் அவன் குரல் காதில் விழவுமே காணமல் போயிற்று…..

ஒற்றைப் பார்வையிலோ உயிரே போயிற்று…..

அவன் இவளுக்கில்லை என்ற உண்மை அடி மனதை அங்குலம் அங்குலமாய் அரம் கொண்டு அறுக்க…..அழாமல் அசையாமல் அதை அனுபவித்தபடி  இவள்.

இதில் இவள் போய் சஹாவிடம் மன்னிப்பு கேட்பதா? நியாப்படி கேட்பதுதான் சரி… ஆனால் வெறும் மன்னிப்பு கேட்பதில் முடிந்து போகிற விஷயமா இது? அதற்காக கேட்காமலே இருந்துவிட்டால் மட்டும் சரியாமா?

அவனிடம் இவளால் பேச முடியுமா? இவள் பேசினால் அவன் பதிலேதும் பேசுவானா?

மெல்ல மெல்லத்தான் புரிகிறது…இதையெல்லாம் யோசித்துக் கொண்டே இவள் வேக வேகமாக புவனேஷ்வர் நகரின் தெருக்களில் நடந்து கொண்டிருக்கிறாள்…

திருமண அரங்கில் எங்கு சென்றாலும் யாரோ ஒருவரை சந்திக்க வேண்டிய நிலை இருந்ததில்… அதிலும் சஹாவே அங்கு வந்திருப்பதாலும் அரங்கை விட்டு வெளியே வந்து நடந்து கொண்டிருந்தவள்….. யோசனையின் வேகத்தில் கவனமின்றி எங்கோ வந்து சேர்ந்திருக்கிறாள்…

அவள் சென்று சேர்ந்த தெருவில்  எதோ ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது….  அந்த இடம் ஒரு சந்தைப் பகுதி என இவளுக்குப் புரிந்தது…… அதுவரையும் நச நசத்துக் கொண்டிருந்த மழையும் இந்நேரம்  வானம் பிய்த்துக் கொண்டது போல் கொட்ட ஆரம்பித்தது…..

மழைக்காக எங்கு ஒதுங்கலாம் என இவள் இடம் தேடிய நேரம்….. பைக்குகளிலும் புல்லட்டுகளிலும் வருகிறது ஒரு கும்பல்….கண்ணில் பட்ட கையில் கிடைத்த யாவரையும் கையிலிருந்த நீண்ட வாள் போன்ற ஆயுதங்களால் அது தாக்குகிறது…… அழுகையும் கூக்குரலுமாய் சிதறி ஓடுகிறது கூட்டம்….. இவளும்தான்…

பெரும் தெருக்களை தவிர்த்து சிறு சிறு சந்துகளுக்குள் திக்கின்றி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஷ்ருஷ்டி…மனோ வேகம் காற்று வேகம்….

எதோ ஒரு தெருவில் கண்ணில்பட்ட ஒரு சிறு வீட்டின் கதவு திறந்து கிடக்க….. பாய்ந்து சென்று அதற்குள் புகுந்தவள்…..அவசரமாக அதன் கதவை பூட்டிக் கொண்டு திரும்ப…

அவளுக்கு எதிரில் நின்று கொண்டிருக்கிறான் சஹா….

இங்கும் இவனா????

தொடரும்…

14 comments

 1. The plot points are beautifully unravelled here. Akash-Nimmi mrg life ku ipdiyoru karanam irukumnu nan yosikave ila. I was surprised. Shrushti oda mind overwork pani Saha ku against and for a goal podudhe. Epdiyo, she understood his intentions. Ini Saha side story a keka waitingggg. Nimmi-Akash moment -simply amazzzzing! Mr.kaathu and Silvandu scenes lam nachu pichunu asathala iruku ma’am. Romba rasichu padichen. 3rd part kaga waitingggggggg

 2. Ammadiyov….etha ma2m than sola varudhu sj….taku taku taku nu elathaum theriya vaika…rmba ve kashtapatrukinga….adudhu ena adudhu ena nu eye race odi inaiku than pathen….simply awesome…😍😘😘😘😘

 3. Next epa varum sj…..sekram kuduga…kandipa ini happy epi than irukum😍😍😍waiting hei…

 4. Very nice epi.. shrusti side yalame cleared.. poori sonathu and nimmi side confusion every thing solved.. nimmi and akash lifela epadi nadanthurukum nu ninaikala.. finally shrusti got to know saha is good . Ini saha side la ena nadanthuchu terinjuka eagerly waiting… hatsoff to ur efforts sweet dear.. waiting very eagerly for next epi

 5. wow at last the truth behind every incidents has been revealed to Sri. Hmmm she has wrongly estimated that Saha would leave her. Again he comes to rescue her. Wow what a twist mam. superb ud.

 6. Saha Sri vishayam ellam clarify ayittudhu .. Sis.. enakku Akash Nimmi kadhai thaan romba yosichuttu irundhen.. adhu neenga kodutha vidham excellent.. Akash second marriage ku kodukkira niyayam.. claps than .. woww… Sri oda characterizhation.. wowwwww.. .. Ippovum Saha than avala kappatha varaan.. nice. eppadi Saha Sri ya convince panna poran.. ? waiting to know..

 7. Sis Awesome 👏👏
  Verum vilakkangal matume ula oru episode ah ivlo aarvama padika vaika ungala matum than mudium 👍👍 Saha epdiyume romba nallavan thanu therium aanalum ovoru situationakum elarume accept panra mathri oru reason athukana menakeduthal than chanceless 👏

 8. So sweet sweety dear,we can understand the efforts taken by you to clarify us the reasons behind srishti.Hero is a gentleman who cares her lady love .I guess he could have been watching her with out her knowledge because so much of caring person could not be wait for a year without seeing his lover.

 9. Hi Anna,
  I am new to this blog. But I have read 2 stories of yours before and loved them so much. My hugs and kisses to you. I admire your writing.
  Kadhal veliyidai too is fantastic. It is very heart wrenching to know that Nithu’s characterisation is from a real life incident.
  Your humour is amazing. While reading about Moni and her fear of Srishti and Saha thinking them as aliens made me laugh soooooo much.
  Hope Saha and Shrishti get back together soon.

  1. Welcome to The blog Uma sis <3 <3 <3 Wow… feeling very very excited and encouraged… Yes sis soon and very soon Saha and shrusti will tie the knot happily 🙂 🙂 … Thanks a lot <3 <3

Leave a Reply