காதல் வெளியிடை 3

ரிந்து அமர்ந்த நிலையிலிருந்து ஒழுங்காய் எழுந்து அமர்ந்து கொள்கிறான் அந்த சஹா…

“நீங்க…?” ஷ்ருஷ்டியைப் பார்த்து கேட்கவும் செய்தான்.

நட்பாய் சிரிக்கிறானோ? ஒரு கன்னத்தில் சின்னதாய் குழி மட்டும் விழுகிறது அவனுக்கு…

“த்..தா ந்…நம்….னா….”

என்ன ட்ரைப் பண்ணி என்ன?  கிலோ கணக்கில் கோந்தும்… பெட்டி பெட்டியா ஃபெவிகாலும் போட்டு ஒட்டினது போல வாய் வந்தும் வராமலும் கீ போர்ட் வாசிக்கிறது இவளுக்கு…

இவளையே பார்த்திருந்த அந்த சஹா இப்போது இவளைத் தாண்டி எங்கோ பார்த்தான்….

என்ன சொல்ல…? எப்படி சொல்ல… ? எதற்கு வந்தோம்?  என்பது கூட மறந்து போய் மிரண்டு நின்றவளும் தன்னிச்சையாய் அவன் கூடவே பார்வையை திருப்பினாள்….

வாசல் அருகில் இருந்த வெயிட்டர்தான் கண்ணில் தட்டுப்பட்டான்…

‘ஐயயோ வெயிட்டர கூப்ட்டு வெளிய அனுப்ப சொல்லிடுவானோ?…’

அப்பொழுதுதான் அந்த பாய்ண்ட் புரிய…. அவசரமாக

“நா….நான் இங்க உட்காரலாமா?” என ஒரு வழியாக கேட்டுவிட்டாள்…

தன் பார்வையை இவள் மீதே வைத்துக் கொண்டு எதிர் இருக்கையை பார்த்து கை காட்டினான் அவன்….

உட்காரும் போது அவள் பார்வை அவளது ட்ரெஸ் மீது படுகின்றது…. .டார்க் பிங்க் ரோஜாக்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட லைட் பிங் பாவடை சட்டை…அதற்கு டார்க் பிங்கில் ஹால்ஃப் சேரி…..அளவுக்கு மீறி நகை…. அதுதான் இவளது இப்போதைய கோலம்…

மோனி சொன்னபடி செய்ததுதான்…

மோனி ஞாபகம் வரவும் சட்டென ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டாள் இவள். ‘அவளுக்காக இவ்ளவு தூரம் வந்தாச்சு….செய்றதை ஒழுங்கா செய்துட்டு போகனும்….’ முடிவெடுத்துக் கொண்டவள்…

“இங்க பாருங்க எனக்கு இந்த வெட்டிங் ப்ரோப்சல் சுத்தமா பிடிக்கலை….” என தொடங்கி….’மேரேஜ் எனக்கு பிடிக்கலைனு நாம சொல்ல கூடாது அவனாதான் பிடிக்கலைனு சொல்லிட்டு போகனும்’ என்ற மோனியின் இன்ஸ்ட்ரெக்க்ஷனின் நியாபகத்தால்…

“ ஐ மீன் இது போறவிதம் சுத்தமா பிடிக்கலை…..பொண்ணும் பையனுமா இப்டி நேர்ல பார்த்துக்கிற இது நல்லாவா இருக்கு…?”  என மாற்றினாள்.

‘அவன் செம மார்டன் டைப்பாம்…. அதான் நான் க்ரூஸ்ல இருக்கேன்னதும் ஒத்துகிட்டானாம்….நீ ட்ரெடிஷன் கல்சர்னு பேசு கண்டிப்பா அவனே வேண்டாம்னுடுவான்…உன்ன மாதிரி ட்ரெடிஷனா எனக்கோ என் ஃப்ரெண்ட்ஸுக்கோ நடிக்க கூட வராது….’ மோனி சொல்லி அனுப்பிய ஸ்ட்ரடஜியை கையாண்டாள் இவள்.….

“எனக்கெல்லாம் எல்லாத்திலும் ட்ரெடிஷனா இருக்கனும் அதுதான் சரியா இருக்கும்….”

இவள் தன் ஸ்பீச்சை தொடர ட்ரைப் பண்ண…

சட்டென “ஏன்?” என்றான் அவன்… “ஏன் பொண்ணும் பையனும் நேர்ல பார்க்க கூடாதுன்னு கேட்கிறேன்…?” என திரும்பவும் திருத்தமாக விளக்கம் கேட்டான்.

கல்சர்னதும் கழன்டுக்க வழி பாப்பான்னுதான் மோனி சொன்னது…..இப்படி ஏன்னு கேட்டா என்ன சொல்லவாம்…?

அவ்ட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்காத அபிஷ்டுன்னா சொல்ல முடியும்…?

“அது…. பொண்ணும் பையனுமா பார்த்து வெறும் எமொஷனல் பேஸ்ல எடுக்ற முடிவு எப்டி சரியா இருக்கும்…? பசி மாதிரிதான் எந்த எமோஷனும்…இப்ப இருக்கும்…அப்றம் போய்டும்… unstable…அதவச்சுல்லாம் எனக்கு எந்த முடிவெடுக்கதும் பிடிக்காது….” அவ மனசில் பட்டதை சொல்ல

அவன் கண்ணில் சின்னதாய் ஒப்புதல்…

‘அச்சோ ரூட்ட மாத்து…..’ இவள் சுதாரிக்கும் முன்….

“அப்போ பெரியவங்கல்லாம் ரொம்ப சரியா முடிவெடுக்றாங்கன்னு சொல்றீங்களா?…. அவங்களும்  ஃபினான்ஸ் ஆர் எல்ஸ் சம் அதர் செல்ஃபிஷ் நோஷன்லதான மேரேஜ் டிசைட் செய்றாங்க பொதுவா?” என்று கேட்டு வைத்தான் அவன்…

அவன் சொல்றது அக்மார்க் உண்மைனாலும்…..இப்ப இவ என்ன சொல்லனும்?

‘டாபிக்கை டைவர்ட் செய்யனும்’ இவள் சடுதியாய் முடிவெடுத்து அதற்கு என்ன செய்யவென பார்க்க…

அவனோ “டீ சாப்டுகிட்டே பேசலாம்தானே…” என்றபடி அருகிலிருந்த ஜக்கிலிருந்து ஒரு  க்ளாஸில் ஊற்றி இவள் புறமாக வைத்தான்…

‘அப்பா பொழச்சேன்…..யோசிக்க டைம் கிடைக்கும்…..’ அது என்ன என்று கூட பார்க்காமல் கையில் எடுத்துக் கொண்டாள்.

அதை அவள் வாயில் வைத்த நிமிடம்…

“வாட்டவெர் உங்களுக்கு என்ன இஷ்யூ….? வெட்டிங் முன்னால இப்டி நேர்ல மீட் செய்ய கூடாது அவ்ளவுதானே…! No probs…. இப்பவே இங்க ஷிப்லயே  வெட்டிங்க அரேஞ்ச் செய்துடலாம்…” என்றானே பார்க்கலாம் படு கேஷுவலாய்…

அவ்வளவுதான் இவள் குடிக்கத் தொடங்கிய அந்த சிவப்பு நிற  cold டீ…. ஈசோபகஸில் என்டர் ஆகாமல் எக்குதப்பாய் எங்கயோ ரிட்டனாகி…..சடாரென புரையேறி ….. வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் வாகில்லாமல் வெளி நடப்பு செய்கிறது….

“ஹேய்…ரெட் டீ பிடிக்காதா உங்களுக்கு….ஃபர்ஸ்ட்டே சொல்லி இருக்கலாமே….” அதற்கு அவனோட அம்சமான ஆதங்கம்…

உர்ர்ர் என்ற முகத்தோடு ஹச் ஹச் என எகிறி எகிறி தும்மியவாறே வேக வேகமா இல்லையென தலையாட்டினாள் இவள்…

அவ சொல்ல நினைக்கிறத அந்த டீ சொல்ல விட்டாதானே….

“ஓ ட்ரடிஷனல் மேரேஜ்னு சொன்னீங்கல்ல…..அப்போ பேரண்ட்ஸ் வரனும்னு நினைப்பீங்க…..தென் ஷிப் நெக்‌ஸ்ட் எந்த போர்ட் போகுதோ அங்க…..ஹேய் சீசில்ஸ்ல வெட்டிங் வச்சுகலாம்….. வீட்ல சொன்னா எல்லா அரேஞ்ச்மென்ட்டும் செய்துடுவாங்க ஷிப் அங்க ரீச் ஆகுறதுக்குள்ள….” ஏறுன புரைய இறங்கவே விடாம அவன் பேச…

ஒரு கையால் தன் தலையை தட்டிக் கொண்டிருந்தவள், சிக்கு புக்கென சிக்கி சிக்கி வந்த சின்ன சின்ன breathதோடு அடுத்த உள்ளங்கையை உயர்த்தி காமித்தாள்…. ‘டேய் நிறுத்துடா….நான் கொஞ்சம் மூச்சு விட்டுகிறேன்…’

அவள் சைகை உணர்ந்து அவன் அமைதியாக…. தும்மலால் துன்புற்றுக் கொண்டிருந்தவள் ஒரு வழியாக ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்….

“இங்க பாருங்க….எனக்குன்னு சில எக்ஸ்‌பெக்டேஷன்ஸ்லாம் இருக்குது…”

“சொல்லுங்க கேட்போம்” லிசன் செய்ய ரெடியானான் அவன்…

மிரள்றானா அவன்? அட்டன்டிவாய் அவனை அப்சர்வ் செய்துகொண்டே ஆரம்பித்தாள். “காலைல 5.30க்குள்ள குளிச்சு ப்ரேயர் எல்லாம் முடிச்சுடனும் என் வீட்ல உள்ள எல்லோரும்..”

“யூ மீன் உங்க ஹஸ்பண்டும்…. ஓகே….நல்ல விஷயம் தான்…எனக்கும் பிடிக்கும்” same side goal சளைக்காமல் போட்டான் அவன்…

‘அடப்பாவி சொல்றதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டா எப்டி?…. மிரண்டு போனது இவள்தான்….இப்படியே போனா என் கதை என்ன ஆகிறது…..?

கன்னாபின்னானு  கண்டிஷன் போட்டு ப்ரோபசல் சீனுக்கு ஃபுல் ஸ்டாப் போட்ற வேண்டியதுதான்….. இருந்த டென்ஷனில் இப்படி ஒரு  டெஷிஷனுக்குத்தான் இம்மீடியட்டாய் வர தெரிந்தது அவளுக்கு.

“ எப்பவும் என் வீட்ல டிஃபன்  இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் இதுல எதாவது ஒன்னுதான்…..ஐ மீன் ப்ரெட் சான்ட்விச் பீசா பர்க்கர்னு இப்டி எதுவும் யாரும்  சாப்ட கூடாது…” அவள் நினைத்த கன்னா பின்னா மோடுக்கு மாறினாள்..

“ஏங்க?” கேட்ட அவன் கண் மட்டும் சிரிக்குதோ?

“அது ஒரு பெரீஈஈ…….ய கதை…. இப்டித்தான் நான் ஒரு குட்ட்ட்ட்டி நாய் வளர்த்தேன்….” அசட்டையாய் அப்பாவியாய் கதை இழுத்தாள்…

“ஓ…சுப்ரமணி சுப்ரமணின்னு கூப்டுவீங்க போல…? “ சிரிக்காமல் வந்து விழுகிறது அவனது சின்சியர் ரிப்ளை….

என்னப் பார்த்தா இவனுக்கு எப்படி தெரியுதாம்? காது விடாய்க்க..…முறைத்தாள்…

“இல்ல ச….ஹா..… ச….ஹான்னு கூப்டுவேன்….”

அவனுக்கு மட்டும் அவனை சொல்கிறாள் என புரியாமலா போகும்…?

சின்னதாய் சிரித்தாலும் முக மொத்தமாய் சிரித்தான்.

“அதுக்கு தினமும் ப்ரெட் பன்னுனு போட்டு அமோஓஓ……கமா வளர்த்தேன்…. ஆனா ஒரு நாள்….. நான் ஆச ஆசையாஆஆ……. போட்ட ஒரு அரை ப்ரெட், அப்படியே அதோட முழு தொண்டைல விக்கி அநியாயமா செத்து போச்சு அந்த சஹா…. அப்ப எடுத்தது இந்த முடிவு” முறையான ஏற்ற இறக்கத்தோடு முழு கதையையும் சொல்லி முடித்தாள்.

அதற்கு answerராக “என்னங்க  லிக்கர் சிகெரெட்கெல்லாம்தான் ரெஸ்ட்ரிக்க்ஷன் போடுவாங்க……அது நியாயமும் கூட” என அவன் முழுதாக கூட சொல்லி முடிக்கவில்லை…..

அவன்  ஆர்டர் செய்து ஏற்கனவே வர வைத்திருந்த எதோ ஒரு டிஷ்ஷை….  வெசலோடு வேகமாக டேபிளிலிருந்து  எடுத்து…. அதில் அவசரமாய் அப்படியே க்வாக்…. ஓங்கரித்தாள்…

இப்போ கண் மூக்கு எல்லாம் சிவக்க நிமிர்ந்தவள்….. “இப்டியா இதெல்லாத்தோட பேர சொல்லுவீங்க…..அத நினச்சாலே….”

இப்போது அடுத்த டிஷ்க்கு அதே க்வாக் கிடைத்தது இவளிடமிருந்து…..

“எனக்கு இப்டித்தான் வாமிட் வரும்…” இளைக்க இளைக்க சொல்லி முடித்தாள்.…

நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை அவன் என்பது ஒரு ஸ்டெப் சேரோடு பின்னால் நகர்ந்த அவனது செயலிலேயே தெளிவாக தெரிந்தது இவளுக்கு….

‘ஓகே கேம் ஓவர் ….. ரூமுக்கு கிளம்பலாம்’ என இப்ப ஷ்ருஷ்டிக்கு மனதில் வெற்றிப் புன்னகை…

ஏன்னா அவன் ஃபேஸ்ல இப்ப கொஞ்சம் முன் வரை இருந்த எதோ ஒரு சாஃப்ட்னஸ் காணாமல் போயிருந்துது….

வள் சாரி கூட சொல்லாமல் எழுந்து கொள்ள….. அவனோ இப்போது “உட்கார் ஷ்ருஷ்டி “ என்றான் படு அமைதியாக….

“சோ ஷ்ருஷ்டி ஃப்ரெம் கழுகுமலை….” அவனோட அடுத்த வார்த்தைகள்…

Next Page