காதல் வெளியிடை 2

டவி தடவியே ஒரு வழியாய் தன் ரூமிற்கு வந்து சேர்ந்த ஷ்ருஷ்டி….. அவளுக்கான அறை  படுக்கை அறை மற்றும்  பால்கனியும் என இருந்ததெல்லாம்  கவனிக்கவில்லை….. கதவை மட்டும் சரியா பூட்டுகிறோமா என கவனித்தவள் அப்படியே சென்று பெட்டில் புதைந்து கொண்டாள்.

கடலில் நின்று கொண்டிருக்கும் கப்பலின் ஆட்டமெல்லாம் இந்த மார்டன் டெக்னாலஜி காலத்தில் ரொம்ப ரொம்பவுமே இன்சிக்னிஃபிகன்ட்….. இருந்தாலும் வல்வோ பஸ்ஸிலயே வாமிட் எடுக்கிற இவளுக்கு இது ரோலர் கோஸ்டர் எஃபெக்ட்….

இவளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கப்பல் பயணிக்க துவங்கியவுடன் இந்த சின்ன அசைவு கூட இருக்காது என படித்திருக்கிறாள்…. அப்றமா எழுந்துகிட்டா போதும் என அதற்காக காத்திருக்க துவங்கினாள்.

முந்தின நாளே வந்து போர்டாகிட்டா ரொம்ப நல்லது….குறஞ்ச பட்சம் கிளம்புற அன்னைக்கு மதியம் 1 மணிக்குள்ள போர்ட் ஆகிடனும்…ஷிப் ஈவ்னிங்க் 6 மணிக்கு கிளம்பும்னு கப்பல் கம்பெனி கொடுத்திருந்த கண்டிஷனுக்காக இந்தா 1 மணி ஆக போற நேரம் உள்ள வந்திருக்கா….நைட் வரை இதை சமாளிக்கனுமே….

அவளோட ப்ராஜக்ட் சம்பந்தபட்ட புக்‌ஸை எடுத்து வாசிக்க துவங்கினாள்…

யெஸ் அதே அதேதான்…. டெக்‌ஸ் புக்கவிட  நம்ம யூத்துக்கு சிறத்த ஸ்லீப்பிங் பில் இருக்கா என்ன…? அப்டியே கண் சொக்க….அடுத்த சில நிமிஷத்தில் அவ சொப்பன லோகத்தின் மூன்றாம் நிலையிலிருந்து நாலாவது ஸ்டேஜுக்கு நல்லவிதமாய் நழுவிக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் போச்சுதோ….

இப்போது  அவள் காதில் விழுகிறது அந்த சத்தம்….. மம்மி மூவில மம்மி வர்றதுக்கு முன்னால அப்படித்தான் பேக்ரவ்ண்ட் ம்யூசிக் வரும்…. அதில் தூக்கம் கலைய எழுந்து உட்கார்ந்தாள்….

எங்க இருந்து வருதாம் இந்த சத்தம்?

ரூமில் லைட் ஆன் செய்யாமல் அத்தனை இருட்டாக இருக்க….. மெல்ல எழுந்து போய் முதல் வேலையாக ஸ்விட்சை ஆன் செய்தாள்….

கப்பலில் அந்த ஸ்விங் மூவ்மென்ட் சுத்தமாக இல்லை….ஓ ஷிப் கிளம்பியாச்சு போல….

அதற்குள் ரூமிற்குள் மெல்ல பரவுகிறது அந்த வாசனை…. பெர்ஃப்யூம்தான் என்றாலும் அடி வயிறை அவஸ்தை படுத்தும் அப்படி ஒரு இன்டென்ஸ் ஸ்மெல்…. ஏனோ டெட் பாடி அதாகவே நியாபகம் வருகிறது….

சத்தம் பால்கனி புரமிருந்து வருவதாய் தோன்ற இவள் அந்த பக்கம் பார்த்தால்….இப்போது அங்கு எதோ மணல் மழை போல தூவுகிறது….

சத்தமும் தூசியும் கூடிக் கொண்டு வர…… மெல்ல அங்கு போய் நின்றாள் இவள்…. சுற்றும் முற்றும் பார்த்தாள்… சட்டென அந்த ம்யூசிக் சவ்ண்ட் அதிகமாகி அடுத்து சடனாக நிற்க…. திடும் திடும் என்ற ஒலியோடு இவள் முன் வானத்திலிருந்து இறங்கி வருகிறது  ஒரு மம்மி பாக்‌ஸ்…

எஸ் கீழ விளவில்லை அது…..ஜஸ்ட் அந்தரத்தில் மிதந்து இறங்குகிறது….

தரை தொடும் முன் படீரென அது திறந்து கொள்ள….. பட்டென எழுந்து நிற்கிறது அதிலிருந்து ஒரு மம்மி….. தலை முதல் கால் வரை அழுக்கு வெள்ளை துணியால் இடமின்றி சுத்தி வைக்கபட்டிருந்தது அது….

“கஹ் க்ஹ……”.எதோ அது பாஷையில் அது தொடங்கும் முன்……பக்கத்தில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த நீள ப்ரூம் ஸ்டிக்கை எடுத்து……அதன் தலையில் ….இடது தோளில்….. வலது கையில் என மாறி மாறி …..சரி அடி….வெளுத்துவிட்டாள் வெளுத்து…

“சீ வர்றதே வந்த ஒரு நல்ல பெர்ஃப்யூம் போட்டுட்டு வந்தியா….? இப்டியா என்  ரூமே நாறுது…”

“கஹ்……”

“போடுவ? ….இனிம இந்த பெர்ஃப்யூம் போடுவ நீ…?”

“க்ஹ்..”

இவள் கேட்டுக் கொண்டே விளாச…

மம்மிக்குதான் வாய கூட திறக்கவிடாம துணி சுத்தி இருக்கே…..அதோட ரெண்டு கைய வேற பாக்சுக்குள்ள ஃபிட் ஆகனும்னு……நெஞ்சோட சேர்த்து வச்சு துணியால சுத்தோ சுத்துன்னு  சுத்தி இருக்காங்களே…

அது என்ன சொல்ல ட்ரைப் பண்ணிச்சோ…?!

கஹ்….கஹ்னு மட்டும்தான் வெளிய கேட்குது…. துள்ளி ஓட கூட முடியாம கால்ல வேற துணி…. அவசர அவசரமா தன் கைய வச்சு ட்ரைப் பண்ணி தன் வாய் மேல இருந்த கட்ட அது பிரிக்க ட்ரைப் பண்ணுது….

“அதுவும் பால்கனி முழுக்க மண்ண வேற கொட்டி இருக்க…..சரியான அழுக்கு மூட்ட…. போறப்ப ஒழுங்கா அத க்ளீன் செய்துட்டு போய்டு…”

இவளோ பின்னி பெடலெடுக்க…

“ஏய்….நான் பேய்…. எஜிப்ஷியன் மம்மி….நீ என்ன பார்த்து நியாயபடி பயபடனும்….” கஷ்டப்பட்டு கட்டு பிரிந்த வாயால் அது இப்போ இன்ட்ரோ கொடுக்கிறது…..

“என்னது எஜிப்ட்ல இருந்தா வர்ற…? அங்க இருந்து வர்றவனா இவ்ளவு கேவலமா ம்யூசிக் போட்ட….?  இனி இப்டி ம்யூசிக் போடுவ….? “இப்போது கம்பால் கன்னா பின்னாவென கடம் வாசித்தாள் அந்த மம்மியை…

“ஐய்யோ அம்மா உனக்கு பிடிச்ச ம்யூசிக்க சொல்லு….. இனி அதையே போடுறேன்…”  நின்ன இடத்தில் எத்தனை அடிவாங்குமாம் மம்மி?  கஷ்டபட்டு அதன் பாக்‌சிலிருந்து வெளிவந்து இவள் காலில் சாஷ்டாங்கம் அது…

“நாங்கல்லாம் அஜுபா ரேஞ்சுக்கு உனக்கு ம்யூசிக் போட்டு வச்சா….. சே …..இனி ஒழுங்கா எங்க AR sir பாட்டா போடனும்….” இவளோட ரிப்ளை இது…  அதற்குள் அது வந்த பாக்ஸை கட்டி இறக்கி இருந்த  அந்த மெல்லிய நீண்ட கறுப்பு கயிறினால் அந்த மம்மியை இப்போது கடகடவென சுத்தி கட்டி வைத்தாள்…….

“நான் முதல்லயே சொன்னேன்…. உள்ளூர் பேயா போறேன்னு…. என்ன அனுப்பின பேய்ங்க கேட்க மாட்டேன்னுட்டு…. See நான் நிஜமாவே நாட்டு பற்று உள்ளவன்…. உன்ன போல AR sir fanம் கூட…..”

கஷ்டபட்டு  தன் முகம் மறைத்திருந்த துணிகளை இப்போது ஓரளவிற்கு அவிழித்திருந்தான் மம்மி கெட்டப்பில் வந்தவன்….

இவள் இதுவரை பார்த்தே  இல்லாத அன்னியன்…

“என் பேர் பாதல்….. என் ஃப்ரெண்ட்ஸ்தான் உன் கூட ஒரு இன்ட்ரோ வேணும்னு…..” என்று இழுத்தவன்…

மேல் புறமாக பார்த்து “ஏய் மம்மி கி பட்சோன்…..ஒழுங்கா வந்து காப்பாத்துங்க….” என கத்தவும் செய்தான்.

பின்  “  மம்மி, அதுக்கேத்த பேக்ரவ்ண்ட்னு எவ்ளவு கஸ்ட்லியா ப்ளான் போட்டு நான் வந்தேன்….  அதுக்காகவாவது இவ்ளவு சீப்பான ஐட்டத்தால நீ அடிச்சிறுக்க வேண்டாம்….” என இவள் கையிலிருந்த ப்ரூம் ஸ்டிக்கை பார்த்து பரிதாபமாக புலம்பிக் கொண்டான்.

“ஒரே ஒரு ரிக்வெஸ்ட்…. என்ன எதால அடிச்சன்னு அந்த மங்கீஸ்ட்ட மட்டும்  சொல்லிடாத…. ரொம்பக் கே…………..வலமா போய்டும்….” அடுத்தும் அவன் படு கெஞ்சலாய் ரிக்வெஸ்ட் வைக்க….

இப்போது இவளுக்கு கொஞ்சம் சிரிப்பு கூட வருகிறது…

இதற்குள் இவள் ரூம் வாசலில் கதவை தட்டும் சத்தம்…

கூடவே கோரசாக “சாரி….வெரி வெரி சாரி…” என கேர்ள்ஸ் வாய்ஸ்.

கதவை திறந்தாள் இவள்.

மோனி கூட பார்த்த அந்த மத்த பொண்ணுங்கதான்….  “மோனி நீ எதோ போல்ட்னு சொன்னா…..சும்மா அது இல்லன்னு……வந்து….ஒரு ப்ராங்க்…..சும்மா விளையாட்டுக்குத்தான்….. அந்த மம்மிய பால்கனில இறக்கிட்டு தூக்கிடலாம்னு நினச்சோம்….பாதல உன் ரூம்குள்ள விடுறதால்லாம் ப்ளான் இல்ல….இப்ப  பார்கிறப்ப ரொம்ப தப்பா நடந்துகிட்டோம்னு தெரியுது…” எல்லோரும் தலை குனிந்து நின்றபடி மன்னிப்பு கேட்க….

அதற்குள் அங்கு தரையில் உருண்டு கிடந்த அந்த பாதலோ…. “கட்ட பிரிச்சுவிட்டுட்டு கால்ல விழுந்தீங்கன்னா….நானும் வந்து நல்லதா சாரி கேட்பேன்ல” என கத்த…. அடுத்து என்ன?… அத்தனை பேரும் அத்தனை விதமாக மன்னிப்பு கேட்டு….இவளது பால்கனியை வரை பக்குவமாய் சுத்தம் செய்து கொடுத்துவிட்டு போனார்கள்.

அந்த பட்டாளம் போய் கொஞ்ச நேரத்தில் இப்போது வந்து நின்றாள் மோனி….

“ஹ…..வணக்கம் மிஸ்….ராசாத்தி…” அப்படி ஒரு ஐயோ பாவம் முகபாவத்தோடு இவளுக்கு கை குலுக்க கை நீட்டியவள் பின் சட்டென உணர்ந்தவளாக கை கூப்பினாள் அந்த மோனி…

“எனக்கு தெரியாம  என்னல்லாமோ நடந்து போச்சு…. வெரி வெரி சாரி….” அவள்தான்…

ராசாத்தியா…?? என ஒரு ‘பே’ லுக் கொடுத்தாலும் முதல் வேலையாக அந்த மோனியின் கை பற்றி குலுக்கினாள் இவள்….

“உள்ள வாங்க….. என் பேரு ராசாத்தி இல்ல….. ஷ்ருஷ்டி….”

“இல்ல இல்ல….எனக்கு என்னைக்கும் நீங்க ராசாத்திதான்…..ராசாத்தினா க்யின்….ராணினுதானே அர்த்தம்… உங்களவிட யாருக்கும் என் மனசுல அந்த நேம் சூட் ஆகாது….” ஆயிரம் டன் ஐஸ் கட்டியும் அப்படியே காலில் விழப் போவது போல் ஒரு பாடிலங்குவேஜிலும் அவள்…

“என்ன தயவு செய்து வேற பேர் சொல்லி கூப்ட சொல்லிடாதீங்க…” அவள்தான்..

“பேர்ல என்னங்க இருக்கு…..உங்களுக்கு பிடிச்ச மாதிரியே கூப்டுக்கோங்க….” குளிர் புன்னகையோடு விட்டுக் கொடுத்தாள் இவள்.

‘ஐ நோ யூ பேக்கு…’ மனதிற்குள் வாய்விட்டு சிரித்தாள் மோனி…..’இப்டித்தான் நான் சொன்னதுக்கெல்லாம் ஆடப் போற நீ’  அப்டி ஒரு சூளுரை வேற…

“நான் ரொம்ப பெரிய ப்ராப்ளத்தில இருக்கேன் மிஸ்.ராசாத்தி…. அந்த குழப்பத்தில் இருக்கப்ப இந்த  லூசுங்க வேற இப்படி செய்து வச்சுறுக்காங்க……எனக்கு நிஜமா எந்த விஷயத்திலும் உங்கள போலெல்லாம் தைரியம் கிடையாது….” அடுத்து எதுவும் ஷ்ருஷ்டி யோசிக்கும் முன் தன் வேலையை துவங்கினாள் மோனி…

“நடந்த விஷயத்துக்கு நீங்க என்ன செய்வீங்க…அதோட அவங்களும் விளையாட்டுக்கு செய்ததுதான்…..சாரி வேற கேட்டுடாங்க….” இவள்தான்….

“பேயப் பார்த்து கூட நீங்க பயப்படலைனு சொன்னாங்க…..எப்டிங்க இப்டி…?” அடுத்த ஐஸ்

“அது எந்த ஊர்லங்க பேய் பேக்ரவ்ன்ட் மியூசிக்கோட வருது… ? யாரோ விளையாடுறாங்கன்னு முதல்லயே தோணிட்டு….” ஷ்ருஷ்டியின் பதில்..

‘அடப்பாவி தெரிஞ்சுகிட்டுதான் அவன அடி பின்னிட்டியா நீ…?’  மனதுக்குள் மோனியின் மைன்ட் வாய்ஸ்

“செம ஷார்ப்ங்க நீங்க……எதையும் செமயா ஹேண்டில் செய்றீங்க….. உங்க அளவுக்கு நான் மட்டும் இருந்தா எவ்ளவோ நல்லா இருக்கும்…” அதை வெளியே இப்படி ப்ரெசென்ட் செய்தாள்.

“………………….”

“உங்கள  மட்டும்தான் நம்பி இருகேன்….” சட்டென இப்போது மோனியின் கண்ணில் நீர் எட்டிப் பார்க்கிறது…  இவள் கைகளை அவள் பிடித்துக் கொண்டாள்…

“என் அப்பா மராத்தி… அம்மா சென்னை…. “ தன் ப்ரச்சனையை சொல்ல துவங்கினாள் அந்த மோனி..

“எங்க வீட்டில் ரொம்ப எதிலயும் ரெஸ்ட்ரிக்க்ஷன் எல்லாம் கிடையாது….எக்செப்ட் ஒரு விஷயம்…..மேரேஜ்….. இந்த க்ரூஸ் எல்லாம் அப்பாக்கு தெரிஞ்சுதான் புக் செய்து கிளம்பினேன்…

நேத்தே ஷிப்ல வந்து போர்டாயிட்டேன்….இன்னைக்கு சொல்றாங்க அப்பா…. அவங்க சைட் பாட்டி இறந்துட்டாங்களாம்….அவங்க ட்ரெடிஷன் படி ஒன் இயர்குள்ள எனக்கு மேரேஜ் செய்யலைனா இன்னும் த்ரீ இயர்சுக்கு  மேரேஜ் செய்ய கூடாதாம்…. இந்த ட்ரிப் வேற 6மந்த்ஸா….? இங்க ஷிப்லயே எங்கப்பாவுக்கு தெரிஞ்ச பையன் இருக்கானாம்….அவன் கூட எனக்கு மேரேஜ்னு முடிவு செய்துட்டாங்களாம்….. வீட்டுக்கு போனதும் எங்க மேரேஜாம்…. பையன்ட்ட இன்ட்ரோ ஆகிக்கோன்றாங்க….” சொல்லி நிறுத்தியவள் முகத்தில் இப்போது நிஜமாகவே எக்கசக்க வேதனை

“எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல….. அப்பா சொல்றதைப் பார்த்தா இது ரெண்டு பேர் வீட்டு பிசினஸுக்காக மட்டுமே நடக்கிற மேரேஜ்…. எனக்கு பயமா இருக்கு “ என முடித்தாள்.

பார்த்திருந்த ஷ்ருஷ்டி முகத்திலும் இப்போது அதே அளவு வலி… ‘பாவம் இந்த மோனி’ என பரிதாபமாக பார்த்தாள்.

“ஆனா நானா மேரேஜெல்லாம் நிறுத்த முடியாது…..எங்க வீட்ல அதை ரொம்ப பெரிய இஷ்யூவாக்குவங்க… ஃப்ரீடம் கொடுத்ததுக்கு ஏமாத்திட்டன்னு ரொம்பவே இஷ்யூ ஆகும்…” தவித்த மோனி இப்போது

“எனக்கு நீங்கதான் ஹெல்ப் செய்யனும் ராசாத்தி … அவனே இந்த மேரேஜ் வேண்டாம்னுட்டான்னா நான் தப்பிச்சுடுவேன்…..எனக்கு பதிலா நீங்க மோனின்னு அவனைப் போய் பார்த்தீங்கன்னா….. ப்ளீஸ் ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதீங்க… லாஸ்ட் மினிட்ன்றதால அவனுக்கும்  என் போட்டோ அனுப்பலை…“ தன் திட்டத்தை அம்சமாய் ஷ்ருஷ்டியின் மீது திணித்தாள் அவள்..

சில நிமிட கான்வெர்ஷேஷனுக்கு பின் தலையை ஆட்டி வைத்தாள் ஷ்ருஷ்டியும்…

கிளம்பும் போது மறக்காமல் கேட்டு வைத்தாள் மோனி…. “அடி பின்னிடீங்கன்னு சொன்னான்…..எதால அடிச்சீங்க….? இங்க அடிக்கிற மாதிரி எதுவுமே இருக்காதே….”

“பாவம்ங்க அந்த வேதாள்….சாரி பாதல்தான அவர் பேரு…. யார்ட்டயும் சொல்லாதீங்கன்னு சொன்னாரு…”

ஓஹோ….என சிரித்துவிட்டு போனாள் வந்து சென்றவள்…

Next Page