காதல் வெளியிடை 19 (4)

த்தனை இரவுகளும் பகல்களும் வந்து போயினவோ…. மூன்றோ நான்கோ இருக்கலாம்….. பூரி வந்து போவது மட்டும் ஷ்ருஷ்டிக்குத் தெரியும்….

இவனையும் சஹாவையும் சாப்பிட வைப்பது அவளாக இருக்கலாம்….

“கைகாயம் தவிரவும் உங்களுக்கு வேற எதுவும் முடியலையாக்கா? எதுவும் மோசமான ஃபீவராக்கா….? என்னை கூட இங்க விடமாட்டேன்றாங்க ஜிஜு…… ரொம்ப பயந்துட்டாங்களாக்கா…?” முழு நினைவு இவளுக்கிருந்த ஏதோ ஒரு நேரத்தில் பூரி இவளிடமாய் கேட்டாள்…

ஆகாஷ் அண்ணா நிம்மியக்காவெல்லாம் உங்க பக்கம் விடவேமாட்டேன்றாங்கக்கா…..உங்களுக்கு அவங்கள பிடிக்காதா தீதி….?

இதற்கு என்ன பதில் சொல்வாள் ஷ்ருஷ்டி…..? வெற்று மௌனத்துடன் சுருண்டு கொண்டாள் இவள்…..

ப்படியான நாட்களில் பெரும்பாலும் மருந்தின் உதவியுடனோ என்னமோ ஷ்ருஷ்டி தூங்கியபடியே இருக்க….ஒரு வேளை அவள் கண் திறந்த போது….. எதிரில் அவளது அக்கா நித்து இன்னுமொரு ஆணுடனும் சஹாவுடனும் பேசிக் கொண்டு நிற்பது தெரிகிறது…

நித்து சற்று தயங்கி தயங்கிப் பேசுகிறாள்தான் சஹாவிடம்…..ஆனால் நிச்சயமாய் கோபமோ வெறுப்போ எதுவும் இல்லை……

உயிரின்றி அதைப் பார்த்திருந்தாள் ஷ்ருஷ்டி….

அடுத்த ஒரு மணி நேரத்துக்கெல்லாம்  ஷ்ருஷ்டி அவளது அக்கா மற்றும் அவளுக்கு வர இருப்பவனாகிய பவன்……அவனும் சஹாவுக்கு ஃப்ரெண்டாம்…. அவர்களோடு கிளம்பி இருந்தாள்…

சஹாவை அப்போதும் அதன் பின்னும் எப்போதும் பார்க்கவில்லை ஷ்ருஷ்டி…

ஒரு வருடத்திற்குப் பிறகு…..

ஒரிஸா தலைநகர் புவனேஷ்வரின் அந்த கல்யாண அரங்கு சுகசுகமாயும்  பரபரப்பாயும் கலகலத்துக் கொண்டிருந்தது…..

வெகு விஸ்தாரமான அந்த திறந்த வெளியை பல பல வகை வண்ண துணிகளாலும் பூக்களாலும் அலங்கரித்திற்கும் பாங்கு ஒரிசா முறையிலும்….வாசலில் குலை தள்ளிய வாழை மரங்களை  நிறுத்தி இருந்த வகை தமிழகத்தையும் சார்ந்திருக்க….

பாட்டு சத்தமும் கைத்தாள ஓசையும்…கூடவே ஹேய் ஹா என்ற வகை சிரிப்பொலிகளுமாய் எங்கோ சங்கீத் நிகழ்வும் அதற்கான நடனமும் நடந்து கொண்டிருக்கின்றன என வாசல் வரைக்கும் அறிவித்துக் கொண்டிருக்கிறது….

மழை சிணுங்கிக் கொண்டும் அந்த இருளத் துவங்கிய மாலை நேரத்தில்

கார்கள் வந்த வண்ணம் இருக்க….. முகப்பை ஒட்டிய பெரும் அரங்கில் ஆரோன் பின் ஓடிக் கொண்டிருந்த ஷ்ருஷ்டியின் காதில் அத்தனை ஒலிகளையும் தாண்டி….

“டேய்  ஒழுங்கு மரியாதையா உள்ள வாடா….மனுஷன் எரிச்சல கிளப்பாத” என்ற ஆகாஷின் வரவேற்பும்…

“வருவேன்டா….அந்த எரும கல்யாணத்துக்கு நான் இல்லாமலா…. சீக்கிரமா வந்து ஜாய்ன் செய்துக்கிறேன்டா” என அதற்கு கிடைத்த சஹாவின் பதிலும் காதில் விழுகிறது….

சிலிர்க்காமல் சிதறாமல் இவளுக்குள் பூப் பூக்க அவள் செய்யக் கூடாதென நினைத்ததை….அந்நினைவு முடியும் முன்னும் செய்து வைத்தாள் அவள்….திரும்பி அவன் குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்….

கூட்டத்திற்குள் நிற்கும் இவளை கண்டிருக்க மாட்டான் அவன் என்ற இவளது நினைவுக்கு நேர் மாறாக இவளைத்தான் இக்கணம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்….

தொடரும்...

இங்கு குறிப்பிட்டிருக்கும் நித்துவின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில்  எழுதப்பட்டது…. பொழுது போக்கு கதையில் வெகு வன்முறையும் வலியும் வேண்டாமே என்பதுதான் எனது பொதுவான மன நிலை…. ஆக நிகழ்வுகளை ஆழமாய் கொண்டு போக எனக்கு விருப்பம் இல்லை… எனினும்…கதையின் அமைப்பில் ஷ்ருஷ்டியின் செயலை காரணப் படுத்த இதை ஓரளவாவது தெரிவித்தாக வேண்டி இருக்கிறது…. இந்த இரண்டு வகை மன எல்லைக்கும் இடையில் நின்று எழுதிய எப்பி இது… வன்முறை மற்றும் வார்த்தைகள் பல தேவையான அளவு இல்லாமலோ இல்லை … சொல்லப்பட்ட பல டயாலாக்குகள் உண்மை சம்வங்களிலிருந்தே எடுக்கப்ப ட்டவை என் பதால் வரம்பு தாண்டுவதாகவோ உங்களுக்கு தோன்றக் கூடும்…. கருத்துக்களை பதிவிடுங்கள்…. உதவியாக இருக்கும்….. நன்றி….

 

6 comments

  1. Kaatumirandi. This is the correct description for Anandh and his father. I am not able to come out of this. Ivvalavu vakrama. How did nithu escape from them. Miracle.

  2. Such a shocking news to read the Nithu’s marriage life. How arrogant Dharmaraj is?Nithu is soooooo pavam. The real person who has faced all these cruel activities is so painful. Hmmm human beings are in this kind also. Now it is able to understand the activities of Sri. Why she is unable to love Saha and tried to kill him. Waiting eagerly for your next post mam.

  3. Romba kodumai….kathaiaga padikave manam pathuruthu….unmai sambavam endral antha penin nilai…..ethirparatha twist…..ippo Shruti nilai purikirathu….ini….

  4. All of Shrushti’s actions seem to be justified by the flashback. But the means she took to meet her ends werent the right ones. Saha kuda irukapo Shrushti face panra andha dilemma lam ipo yenu puriyudhu. Above all, Saha avaloda ovoru move um avlo azhaga purinju vachurukar. Thats the beauty of it. Nithu- amazing characterisation. She reminds me of phoenix, the bird; ivlo kashtathuku apramum ezhundhu avanga nikuradhu… Amazing! After a year rendu perum meeting… Mr.Saha neenga dhan adhiradiya erangi enga Shrushti ku konjam theliya vaikanum

Leave a Reply