காதல் வெளியிடை 18 (2)

ப்பலில் இருந்து சிறு படகில் இறங்கி அங்கிருந்து அந்த தீவுக்கு குறிப்பிட்ட தொலைவு இவர்கள் இருவருமாக சென்று வர வேண்டி இருந்தது…..

சற்று மந்தாரமான ஒரு பருவ நிலை அதோடு கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீரும் இவளும் இவனும்….

சஹா உற்சாகமாகவே இருந்தான்…

மூனு நாளு நாலா கண்ணுலயே படமட்டேன்னு பதுங்கிப் போய் அலஞ்ச இவனோட  சீனி மிட்டாய்…..அதுவும் ப்ராஜக்டுக்கே வர மாட்டேன்னு ஆர்பாட்டம் எல்லாம் செய்து நோகடிச்சவ….. இப்ப ஒரு வழியா இவன் கூட கிளம்பி வந்து விட்டதில் அவனுக்கு மகா சந்தோஷமே….

அதே நேரம் அவளது மூட் ஸ்விங்க்…அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்ற ஆராய்தலும் அவன் பின் மனவெளியில் ஓடிக் கொண்டுதான் இருந்தன….

எது எப்படியோ உர் என உட்காந்திருக்கும் இவனது உம்மணா மூஞ்சி சீனிமிட்டாய பேச வைக்கிறதுதான் இப்போதைய இவனோட மெயின் ப்ராஜக்ட்…

“இந்த ஐலண்ட்ல என்ன ஸ்பெஷல் ஸ்….?” அவளது சப்ஜக்டிலேயே ஆரம்பித்தான்…. ஆனால் அவளை எப்படி கூப்பிட என்பதில் வந்து  இடித்து நின்றது கேள்வி….

படகை செலுத்திக் கொண்டிருந்த இவனுக்கு எதிராக உட்காந்திருந்த அவளோ இதுவரைக்கும் தூரத்தை வெறித்துக் கொண்டிருந்தவள்….இவன் சத்தம் காதில் விழுந்த அடையாளமாக சற்றாய் அசைந்தாலும் மீண்டும் எங்கோ பார்த்தாள்.

“பேரே இல்லாம எப்படி பேச….? இனிமே சிமின்னு தான் கூப்டுவேன்…. இந்த பேரும் பிடிக்கலைனு சொன்னா அடுத்து ‘டி’ ன்னுதான் கூப்பிடனும்….” அறிவிப்பு போல சொன்னான்.

கிட்ட தட்ட சுவரிடம் பேசும் எஃபெக்ட்தான்…. அவளிடம் சலனம் கூட இல்லை…

“ஓகேய்ய்ய்…..இந்த சிமி அப்ரூவ் ஆகிட்டுன்னு வச்சுகிறேன்…அப்ஜக்க்ஷன் வரலையே….”  இவன் தான்.

மௌனம் அவளிடமிருந்து மறுமொழியாய் கிடைத்தது….

“இங்க நீ வர வேண்டி இருக்குன்னதும் முடிஞ்ச வரைக்கும் எல்லோர்ட்டயும் விசாரிச்சேன்  கொஞ்சம் கூகிளும் செய்தேன்….ஆனா ரொம்ப ஒன்னும் தெரிஞ்சுக்க முடியல….. நீ எப்டியும் படிச்சுருப்பியே டீடெய்ல்ஃஸ் சொல்லு….”

“……………………”

“ஏன் சிமி இப்டி செய்ற…? ஐலண்ட்னா என்ன ஆபத்து வேணும்னாலும் இருக்க முடியும்…ரெண்டு பேருமா வர்றோம்…. கொஞ்சம் ப்ரிகாஷியசா இருக்கவாவது தெரிஞ்சுக்கனும் இல்லையா…?”

“……………………..”

“இதுக்கு மேல போட்ட உள்ள கொண்டு போனா தரை தட்டும்…. இதென்ன இப்டி தண்ணி  நிக்குது தரை மேல….? இது மார்ஷி லேண்டா….? சொல்லி இருந்தா ஒழுங்கா அதுக்கான பூட் எடுத்துட்டு வந்திருக்கலாம்…”  சுற்று முற்றும் பார்த்தபடி இப்போது படகை நிறுத்தினான் சஹா….

அவர்கள் வந்திருந்த தீவு மொத்தமுமே வெள்ளை வெளேர் என வெண்மணல் பரப்பாய் கொட்டிக் கிடந்தது…..அதில் பார்வை பட்ட தொலைவு வரை ஒரு அடி உயரம் போல் நீர் நின்று கொண்டு இருந்தது….. அத்தனை உயர நீரில் படகை செலுத்த முடியாது என்பதால் இங்கேயே நிறுத்தி இருந்தான் சஹா….

பதிலே சொல்லாமல்  படகிலிருந்து இறங்கி சளப் சளப் என நடந்து போனாள் அவனோடு வந்திருந்தவள்…..

“ஹேய்….நில்லு ஸ்….சிமி” படகை பக்கத்திலிருந்த ஒரு பாறையோடு கட்டியபடி அதட்டிக் கொண்டிருந்தான் இவன்…

“எதாவது அனிமல்சோ ரிஸ்கான எதுவோ இருக்கான்னு பார்த்துட்டு போவோம் சிமி…..ப்ளீஸ் என்ன கோபம்னாலும் கொஞ்சமாவது புரிஞ்சு நடந்துக்கோ…”  அங்கும் இங்குமாய் மண்டி இருந்த புதர்களை கைகளால் விலக்கிக் கொண்டு விறு விறு என சென்று கொண்டிருந்தவளுடன் ஓட்டமும் நடையுமாய் சென்று சேர்ந்து கொண்டான் இவன்…

அவளோ கப்பலை குறி வைத்த டர்பிடோ போல்…..தீவின் உள்புறத்தை மாத்திரமே  நோக்கி தீவிரமாய் முன்னேறிக் கொண்டிருந்தாள்….

அவள் முகத்தில் இருந்த தீவிர பாவத்தைப் பார்த்தவன் சற்று நேரம் ஒன்றும் சொல்லவில்லை….

சில நிமிடங்களில் இதுவரை காணக்கிடைக்காத  செடி வகை  ஒன்று கண்ணில் கிடைக்கிறது….. ஏறத்தாழ இவனது  உயரம் நின்றிருந்தன அவைகள்….. இவன் கை தடிமன் கூட இல்லாத தண்டோடு….. இரு விரல் தடிமனில் ஏராளமாக நீள நீள கிளைகளை பரப்பிக் கொண்டு…..அந்த கிளை முழுவதும் வரிசையாய் அடுக்கப்பட்ட ஒற்றை இலைகளோடும்….. ஆங்காங்கு காணப்பட்ட ஆணி நீள முட்களோடும் இருந்தது அச்செடி வகை….

ஆனால் ஓர் இடத்தில் கூட ஒற்றைச் செடியாய் தனியாய் நிற்கவில்லை அது….எங்கு எந்த செடி ஆரம்பிக்கிறது…எங்கு முடிவடைகிறது….இது எந்த செடியின் கிளை என யாராலும் கண்டே கொள்ள முடியாத படி….வரிசை வரிசையாய் குறுக்கும் நெடுக்குமாய் அதே வகை செடிகள் ஏராள ஏராளமாய் பிண்ணிப் பிணைந்து ஒரு அடர் சுவர் போல….. பச்சை காடாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவிக் கிடந்தன….

நிச்சயமாய் அச் செடி காட்டுக்குள் மனிதர்கள்  சென்றுவிடல்லாம் முடியாது…..

“இதுதான் நீ தேடி வந்த செடியா சிமி?” அதன் முன் நின்று அங்குமிங்குமாய் கண்களை உருட்டி அளவிடலாய் பார்த்துக் கொண்டிருந்தவளை கேட்டான் சஹா…..

அவளோ தோளில் தொங்க விட்டிருந்த ஸ்லிங் பேக்கிலிருந்து இப்போது ஒரு கத்தியை எடுத்துக் கொண்டவள்…

சற்றாய் குனிந்து அச்செடியின் அடிப் புறப் பகுதியில் கத்தி கொண்டு சில சில கிளைகளை வெட்டி வழி செய்து கொண்டு அச் செடி காட்டுக்குள் தவழ்ந்து தவழ்ந்து முன்னேறினாள்…

அவள் செய்வதை புரியாது பார்த்துக் கொண்டு நின்றவன்….. சரி எப்படியும் அவ என்னதுன்னு சொல்லப் போறது இல்ல….ஆனா இது தான் அவ தேடி வந்த செடி போல…..என்ற முடிவுடன் அவளைப் பின்பற்றி உள்ளே நுழைந்தான்….

தரையில் ஓரடி அளவுக்கு ஓடும் நீருக்கும்….. அந்த வெளிச்சம் பட முடியா நிழலுக்கும்… பாம்பு விஷப் பூச்சி ஏன் முதலை போல எதாவது இருக்கலாமே….. அவைகளை யோசித்த வண்ணம் ஜாக்கிரதையாக அவளை சுத்தி சுத்திக் கண்காணித்துக் கொண்டிருந்தான் இவன்….

அவளோ இப்போது அச்செடியின் அடிப் பகுதிகளில் இருந்து இலைகளை ஒன்று ஒன்றாக பறித்து சேர்க்க தொடங்கினாள்….

“இந்த லீவ்ஸ கலெக்ட் செய்யனுமாபா…?” கேட்டபடி இவனும் அதை செய்யத் தொடங்கினான்….. மறுப்பேதும் சொல்லவில்லை அவள்…

நேரம் நழுவிக் கொண்டிருந்தது…..

எத்தனை நேரத்தை மௌனத்தில் கழிக்கவாம்?

“நான் ஒன்னு கண்டு பிடிச்சுருக்கேன் சிமி” சற்று ஆவலாகவே அறிவித்தான்.

அவ தான் கிணத்துல போட்ட கல்லு போல இருக்காளே….முழு சைலண்ஸ்…

“எனக்கு ஸ்ரீநிதின்னு இன்னொரு ஸ்ரீயத் தெரியும்….”

அத்தனை மங்கிய வெளிச்சத்திலும் இவனை திரும்பிப் பார்த்த ஷ்ருஷ்டியின் கண்கள் பளபளப்பதை அவனால் கண்டு கொள்ள முடிந்தது…..

இவ்ளவு நேரம் இவன் எதோ இல்லாத சுவர்ட்ட எக்கோ கூட இல்லாம பேசுறாப்ல இவட்ட பேசிட்டு வந்திருக்கான்….அப்பல்லாம் இவன் மனசு என்னதுன்னு தெரியலையாம்…. ஆனா எதோ ஒரு பொண்ணப் பத்தி பேசவும் இது என்ன ஜெலசியா…? கொஞ்சம் கோபமும் வந்தது இவனுக்கு…. ஆனாலும்  அதற்கெல்லாம் இது கிடையாது இடம்…

“ஹேய் அது என் கசின்….அண்ணினு யோசி”

“……………”

“அந்த ஸ்ரீநிதிக்கும் உனக்கும் ஏதோ லிங்க் இருக்குமோன்னு  இப்ப தோணுது…..”

ஷ்ருஷ்டி அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை…. மூக்கில் மாட்டி இருந்த ஒற்றை வளையத்தை கையால் சற்றாய் அழுத்திக் கொண்டாள்.

“அன்னைக்கு மோனி ஷ்ரீன்னு உன்ன சொன்னாங்க….  எனக்கு தெரிஞ்ச மனநிலை பாதிக்கப்பட்ட ஒருத்தன் ஸ்ரீநிதிய ஷ்ரீன்னு கூப்டுவான்…..  அது நியாபகம் வந்துச்சு….. ஆனா இப்ப கொஞ்ச முன்னால….அந்த ஷ்ரீ ஸ்ரீநிதிக்கும்….இந்த ஷ்ரீ ஷ்ருஷ்டிக்கும் ஏதோ லிங் இருக்கும்னு படுது… ஜஸ்ட் இன்ட்யூஷன்.”

“……………….”

“உங்க ரெண்டு பேருக்கும் நேட்டிவ் கூட பக்கம்தான்….கழுகு மலைதான உன் ஊரு…. அவளுக்கும் அது பக்கம்தான்….”

“……………………”

“ஆனா என்ன  அவ உன்னப் போல கிடையது…. நல்லபொண்ணு…” நக்கலடித்தான் அவன்….. பின்ன என்னவாம் என்ன சொன்னாலும்   எந்த ரிப்ளையுமே கிடையாதுன்னா பாவம் இவனும்தான் என்ன செய்வான்….

“நல்ல பொண்ணுனா எப்படி?” வெகு நேரத்துக்குப் பின் வாய் திறந்தாள் இவன் காதலி…. ஆனால் குரலில் இருந்தது என்ன?

அந்த புதர்களை விட்டு  வெளியேறிக் கொண்டிருந்தாள் அவள்…

இவனும் அவளை பின்பற்ற நினைக்க  அதை செய்ய முடியாமல் அங்கும் இங்குமாய் செடிகளுக்குள் சிக்கி இருந்தான்….

கைல இருந்த நைஃப வச்சு அவ முதல்ல இருந்தே அவள சிக்கும் ஒவ்வொரு கிளையையும் விலக்கிக் கொண்டே இருந்திருக்கிறாள்… ஒரே இடத்தில் நின்றபடி வேலை செய்ததில் இவன் அதை பெரிதாய் சட்டை செய்திருக்கவில்லை….

“வெளிய போய்ட்டு நைஃப கொடு சிமி….. இந்த செடி செம்மயா சிக்குது…”

“நல்ல பொண்ணுனா எப்படின்னு கேட்டேன்…?” இவனை விட்டு நன்றாகவே விலகிச் சென்றிருந்த ஷ்ருஷ்டி கேட்பது இவன் காதில் விழுகிறது….

“கிராமத்துப் பொண்ணுங்க…. மிடில்க்ளாஸ் மண்டுங்க……என்ன செய்தாலும் எதுத்து கேட்க மாட்டாங்க….  கல்யாணம்னு ஆகிட்டாலே  கால்ல விழுந்து கிடப்பாங்க… எப்டி அடிச்சாலும் திருப்பி அடிக்கிறது எங்க… தப்பிச்சு போக கூட தைரியம் இருக்காது…. அவங்கல்லாம் நல்ல பொண்ணுங்க அப்படியா சகாயன்?”  ஏறத்தாழ அமனுஷ்ய குரலில் கர்ஜித்துக் கொண்டிருந்தாள் ஷ்ருஷ்டி…

அவள் முழுக்கவும் இந்த புதர்காடை விட்டு வெளியே சென்றிருக்க….புதரின் இருட்டுக்குள் இருந்த இவனுக்கு அவள் அப்படியே ஜொலிப்பது போல் இருக்கின்றது….

அத்தனை உக்கிர கோபத்தில் அவள் இருக்கிறாள்…. ஆனால் ஏன்??

“ஹேய் என்ன நீ எதை சீரியசா எடுக்கிறதுன்னு இல்லையா…? சும்மா டீஸ் செய்ய சொன்னேன்….. “ இவன் வார்த்தைகளை கண்டு கொள்ளவே இல்லை அவள்

“கால்ல மாட்டின புழு கூட சாக முன்ன உடம்ப ரெண்டு மூனு தடவ முறுக்கியாவது காமிக்கும்….. நாங்கன்னா எதிர்ப்ப கூட  காமிக்காம அடங்கிப் போய்டனும் என்ன?”

நிச்சயமாய் முழு மொத்தமாய் எதோ சரி இல்லை என புரிகின்றது இவனுக்கு….. அவசர அவசரமாக அவளிடம் செல்ல முயன்றான் இவன்….

ஆனால்  அசைய  மட்டும்தானே முடிகிறது….. நகர முடிந்தால்தானே…

“அது  நம்ம ஊரு செடி கிடையாது  மிஸ்டர் சகயான்….  நம்ம ஊர் பொண்ணுங்க போல நாம வெட்டினாலும் குத்தினாலும் வாங்கிட்டு  விழுந்து கிடக்க….. கார்னிவோரஸ் ப்ளான்ட்….. மாமிச பட்சிணி…. பக்கத்துல வந்து நிக்குற எந்த அனிமலையும் மெல்லமா பிடிச்சு இப்டிதான் கட்டி வச்சுக்கும்….பட்னில அந்த அனிமல் செத்த பிறகு அதோட உடம்ப கொஞ்சம் கொஞ்சமா இது ஸ்வாகா பண்ணிக்கும்….”

தலை சாய்த்து ஒரு விதமாக பார்த்தான் இவன்…

‘கோபம் வந்தா இப்டித்தான் தத்து பித்துன்னு உளறுவியா?’ என்பது போன்ற பார்வை…. உச்ச கோபத்தில் எதோ வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்தான் அவன்….

“இந்த லூசுக்கு என்ன அறிவிருக்கு….. பெருசா மிரட்டுது…. செடிதான  கொஞ்சம் கைய கால உதறுனா ஒன்னு ரெண்டு மணி நேரத்துல வெளிய வந்துடலாம்னு நினைக்கிறியா….  அந்த அளவுக்கெல்லாம் இங்க உள்ள சுறா  டைம் தராது….”  அவளிடம் இருந்து இப்படி ஒரு விளக்கம் வெடித்தது….

கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை நேரத்துக்குள் நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வந்ததை கவனித்திருந்த சஹாவுக்கு அவள் சொல்வதின் உண்மை புரியாமல் இல்லை….

மாலை நேரம் இது…..இரவு ஏறத் தொடங்கும் போது இன்னும் எவ்வளாய் நீர் மட்டம் உயர்ந்து போகும்….  சுறா எல்லாம் எத்தனை எளிதாய் வந்து  போகமுடியும் என அவனுக்கு புரிகிறதுதானே….

ஆனால் அவளால் இப்படி எல்லாம் பேச முடிகின்றதென்பதே அவனுக்கு ஆச்சர்யம்….. யாரிடமும் அவள் கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக் கூட அவன் பார்த்தது இல்லை…. அதிக பட்ச கோபம் என்றால்கூட பேசாமல்தான் நோகடிப்பாள்….. பொதுவில் மென்மையானவள்….  அதிலும் இவன் மீது அவளுக்கிருப்பது காதல்…. என்னவாயிற்று இவளுக்கு…? சுத்தமாக புரியவில்லை அவனுக்கு…..

ஆனால் இது அதையெல்லாம்  யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் இல்லை…… அப்படியெல்லாம் அவள் இவனை விட்டுவிட்டு போய் விட மாட்டாள் என 100% இவனுக்கு தெரியும்….. ஆனால் இப்படி இவன் சிக்குண்டு கிடக்கும் நேரத்தில் இங்கு வேறு ஏதோ ஒரு ஆபத்து வந்துவிட்டாள் என்ன ஆகும் நிலமை…?

ஆக அடுத்து அவள் சொல்வது எதையும் சட்டை செய்யாதவனாய்….அந்த செடிகளில் இருந்து வெளி வர வழியை  கவனிக்க துவங்கினான்…..

பொதுவாக இப்படி எந்த பயணத்திலும் முன்னெச்சரிக்கையாய் சின்னதாய் ஒரு விரல் அளவு கத்தி இன்ன பிற அவன் பாக்கெட்டில் எப்போதும் இருக்கும்….  அவளிடம் இருக்கும் கத்தி அளவு இந்த செடிகளை வெகு வேகமாய்  இச் சிறு கத்தி கொண்டு வெட்டித் தள்ள முடியாது எனினும்….. ரொம்ப சீக்கிரமே வெளிய போய்டலாம்தான்…..

ஆக சர சரவென கையில் மாட்டிக் கிடக்கும் கிளையில் ஒன்றை அவன் அறுக்க தொடங்கிய நேரம்….

“ஷ்ஷ்……”  என்ற அவளின் சத்தம் விபரீதமாக காதில் பட துள்ளி நிமிர்ந்து பார்த்தான்….

நிஜமேதான்….அந்த இஷ்…என்னதாய் இருக்கும் என இவன் அறிவு சொன்னதோ அதையே செய்திருந்தாள் அவள்….

தன் கையை கையிலிருந்த கத்தியால் முதல் முறை வெட்டி இருந்தவள் இரண்டாம் முறையும் இப்போது ஒரு வெட்டு…. “ஷ்ஷ்….” ரத்தம் நீரில் விழுந்து இவன் மீதும் தெரிக்கிறது…

“ஹேய்ய்ய்ய்ய்….லூசு…..ஸ்ரீ…..” இவன் என்ன சொல்ல நினைத்தென்ன செய்ய முயன்றென்ன…. நகர முடியவில்லையே….

காதலில் பதற பதற பார்க்கும் இவன் அறிவுக்கு சட சடவென பலதும் புரிகின்றது……

ரத்த வாடைக்கு சுறா உடனடியாக இவனிடம் வந்துவிட வேண்டும் என்பதுதான் அவளது இப்போதைய நோக்கம்….. முன்பும் கப்பலில் பல முறை ஆள் அற்ற நேரங்களில் இவன் இருந்த இடங்களில் அவள் பின்னால் வந்து நின்று பார்த்திருக்கிறான்….

திட்டம் போட்டு கொல்ல வந்தவளா இவள்???? ஆனால் ஏன்???? இவளுக்கு எதாவது ஆச்சுதுன்னா இவன்தான் பொறுப்பு எனக் கூட எழுதிக் கொடுத்திருக்கிறான்?? இது இன்டர்நேஷனல் வாட்டர்…எந்த க்ரைமுக்கும் யாருக்கும் அத்தனை எளிதாய் தண்டனை எல்லாம் வாங்கிவிடவே முடியாது…..இவ்வளவு ஏன் கப்பலுக்கு திரும்பிப் போய் இவன் இங்கு இறந்துவிட்டான் என்று  அவள் அழுது வைத்தால் யார் அவளை சந்தேகிக்க போகிறார்களாம்….. இவனுடைய காதலி என மொத்த கப்பல் நிர்வாகத்துக்குமே இதற்குள் எண்ணம் வந்திருக்குமே…….இதெல்லாம் இவள் திட்டமிட்டு செய்த சதியா?????

ஆனால் ஏன்??????????

அறிவு இதெல்லாம் அவனுக்குள் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் மனதில் இன்னுமே அசைக்க முடியாமல் நின்று கொண்டிருக்கிறது அது…. அவ நிச்சயமா என்ன காதலிக்கிறா என்ற புரிதல்…… ஆனா ஏன்????

நொடி நேரம் எல்லையில்லாமல் இருண்டது  இவன் உலகம்….

‘தெய்வமே என்ன நடக்குது எனக்கு’

கொல்றதா இருந்தா இப்ப கூட கத்திய வச்சு இவன வெட்டாம தன்ன ஏன் வெட்டிக்கனும்….?’ அவன் அறிவும் மனமும் இந்த  ஒற்றைப் புள்ளியில் சென்று விடிந்தது….

‘ஷ்ருஷ்டியோ பெரும் குரலில் அழுதபடி இப்போது இவனை விட்டு ஓடி கொண்டிருந்தாள்….. படகுக்கு போகிறாள் என இவனுக்கு புரியாமல் என்ன?

“எதையோ எதாவோ புரிஞ்சுகிட்டு….என் மேல இத்தனை காதலையும் வச்சுகிட்டு  என்ன கொல்றேன்னு உன்ன கொன்னுட்டு ஓடிட்டு இருக்கடி நீ…..” கத்தினான் இவன்….

தூரத்தில் படகில் சென்று ஏறி அவள் கிளம்புவது இவன் கண்ணில் பட்டது….

படகை கிளப்பிவிட்டாள் ஷ்ருஷ்டி….அது சீறிக் கொண்டு கிளம்பியது…..படகை எப்படி செலுத்த வேண்டும் என பார்த்திருக்கிறாளே தவிர…..செய்து பார்த்தது எல்லாம் இல்லையே….சற்று அங்கும் இங்குமாய் தடுமாறிக் கொண்டு ஓடியது அது….

ஆனால் அதையெல்லாம் விட உச்ச தடுமாற்றத்தில் இருக்கிறாள் அவள்….. கிடுகிடுவென அவளுக்குள் ஆடிக் கொண்டிருக்கிறது உயிர்…உடலோ வெளிப்படையாய் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது….

திறந்தாலும் மூடிக் கொண்டாலும் கண்களுக்குள் ஒரே காட்சிகள்தான் தெரிகின்றன….ஒரு கட்டத்தில்  கண்ணை இறுக மூடியவள் திறக்கவே இல்லை…

எப்போழுது நினைத்தாள் எப்படி செய்தாள் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை…..தட் தட்டென படகு தரையில் தட்டி தட்டி போவதை உணர்ந்துதான் கண் திறந்தாள்….

தீவை நோக்கி திரும்பி வந்திருக்கிறாள்…. தூரத்தில் இன்னுமே அந்த செடிகளை விட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்த சஹா கண்ணில் படுகிறான்…..சுற்றிலும் வட்டமிட துவங்கும் சுறாக்களும்தான்….

எத்தனையாவது நொடி அவனிடம் சென்றாளோ….. என்ன வேகத்தில் செடிகளை வெட்டினாளோ….மூர்க்கம்…..

இருவருமாய் மீண்டும் வந்து படகில் ஏறிக் கொண்டது மட்டுமே அவளுக்குத் தெரியும்….. முட்டுக் கட்டி படகில்  அமர்ந்திருக்கிறாள் அவள்…. இவளை ஒரு கையால் வளைத்து  தன்னோடு இறுக்கிப் பிடித்திருக்கிறான் அவன்….

“எல்லாம் சரியாகிடும்டா…” அவன் குரல் காதில் மெல்ல உறைக்கிறது….

“இன்னொரு டைம் என்ட்ட பேசுன….. இப்டியே தற்கொலை செய்துட்டு செத்துப் போய்டுவேன்,…..” இவளது குரலின் உறுதியில் அவள் மீதிருந்த தன் கையை விலக்கிக் கொண்டான் அவன்.

11 comments

  1. Ippo varai unga master piece of characterization Liya vum avaloda dimension um than. Atha intha shirusti ennaiya stun akkaral. antha moment antha dialogue payangaraam.
    padikka enake ivalo pramimba iruku adutha konja nimisathula kilambi vanthu avanaiya save panni ithula intha saha Ellam sari agiduma.
    I was stuck O my god What an epi.

  2. Nail biting epi…. Appadiye avanga ulagathila iruntha mathiri oru feel… Sweety mam one big huggy to u… Che ippadi mesmerise pannringale… Wow waiting for next one very eagerly

  3. Semma confusion. But shrushti mela enaku bayangara kovam. Yen enna edhukunu solitu pana kuda othukalam. Idhena sollama adikuradhu? Whats her issue? Planned attempt dhana idhu? Nalla kolapi vituteenga ma’am. Nithu kum enachunu therilaye. But epdiyo, avanga line clear ayruchu.

  4. Paavam Saha. 🙁 Irundhalum last la yellam seriaydum nu Saha soldradhu. Happa yevlo poruma Saha ku.. 😍 Simi romba confuse pandra.. Yena ninaikirane purila.. 😕 But andha Island super ah irundichu mam.. Engala kutitu ponadhuku thanks.. 😍😍Eagerly waiting for next epi mam😍

  5. Srushti ya.. Nithu vaa.. yarukkaga indha kobam Sri kku.. Saha.. eppadi ivala approach panna poran ? Nithu Saha kitte pesumbodhu yedhavadhu clue kidaikkuma… Waiting for next update… Island information sema.. mass.. 🙂

  6. Happa Pavan Nithu matter Saha naala solve Aga poguthunu Partha Sri ennamo payangra mana velaiyalum seiyarangla. Mam what’s the twist? It’s keeps on growing. What happened in Nithu’s life? And why Sri is reacting like this to Saha? Soon give the next update mam.

Leave a Reply