காதல் வெளியிடை 17 (2)

 

பவனை நினைக்கிறதே குற்றம்…பாவம்… தப்பு என்றெல்லாம் கொஞ்சம் முன்னால் நினைத்த நினைப்பெல்லாம்  அவள் நினைவினிலே வராமலே போக….

அவசர அவசரமாய் பவனின் எண்ணை அழைத்தாள்…..

‘சிக்னல் இருக்க ஏரியாக்கு வந்துட்டானா….? ஆனா ஏன் கால் பண்ணாம மெசேஜ் அனுப்பிகிட்டு இருக்கான்….?’

ஆனால் இவள் அழைப்பு அவன் மொபலை அடைய முடியவில்லை…. அதாவது இன்னும்  அவன் இடத்தில் சிக்னல் இல்லை என்றுதான் விடை வந்தது…

பின்னே? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு…. சற்று நேரம் திரும்ப திரும்ப அவன் எண்ணை முயன்று பார்த்தவளுக்கு மெல்லத்தான் அவன் அனுப்பி இருக்கும் மெசேஜ் மிஸ் யூ என்றே கவனத்தில் வருகிறது….. அதையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்… இவனுக்கு விஷயம் தெரிஞ்சுட்டா இல்லையா?

ஒரு வழியாய் இவள் கண்மூடி மீண்டும் படுக்க…..

‘சிக்னல் எப்பயாவது வந்து போகுது போல……உனக்குன்னு அனுப்பி வச்ச மெசேஜ் இப்ப டெலிவர் ஆகுது….’ அடுத்து இப்படி ஒரு மெசேஜ் அவனிடமிருந்து….

ஏதோ ஒன்று இவளையும் மீறி  எல்லை மீறுகிறது  இவளுள்….. சிக்னலே இல்லாத டைம்ல மெசேஜ் அனுப்பி பார்ப்பதை என்னவென்று நினைப்பதாம்?

இந்த முறை அடுத்த மெசேஜ் சில நிமிடங்களில் வந்துவிட்டது…. சற்று நீளமான மெசேஜ்…

அதன் நீளத்தைக் காணவே படு ஆசையாக தோன்ற….வரி வரியாய் ரசிக்க ரசிக்கவே வாசித்தாள் இவள்….

‘இங்க ஃபேக்டரியோட  கெஸ்ட் ஹவுஸ் டெரஸ்ல இருக்கேன்…..‘  என தொடங்கியது அது…. ‘அச்சோ இந்த டைம்லயா?… மழை பெய்யலையா…. குளிருமே…..’ என அவன் சூழலுக்குள் தான் மானசீகமாய் நின்றபடி  அடுத்த வரியில் கண் பதித்தாள் இவள்.

‘அதிகம்னு இல்லாம ஓரளவு குறைவா மழை பெய்துகிட்டுதான் இருக்கு….’  இப்படியாய் இருந்தது அது…..

‘ஐயோ நனஞ்சுகிட்டா இருக்கீங்க…?’ இவள் மனம் பரபரக்க

‘நான் அதில் நனையுறேன்னு நினச்சுடாத…. துணைக்கு ஒரு கோழி குஞ்சு இல்லாம நான் நனையுறது இல்லைனு முடிவு செய்துருக்கேன்….’  அவன் மெசேஜ் இப்படியாய் தொடர்ந்தது

‘ஹான் நனையுறதுக்கு ஒரு துணை…..அதுவும் கோழிகுஞ்சா…? உங்க ரசன ஏன் மார்க்கமா இருக்குது…?’ இப்படியாய் மனதுக்குள் அவனோடு உரையாடியபடி அடுத்த  வரியை வாசித்தாள் இவள்.

‘ஒரு சின்ன ஷெட் இருக்கு இங்க…..அதில் இருந்து மழைய வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கேன்…. கரண்ட் இல்ல…. பவர் பேக்கப்லன்றதால  இங்க லைட் ஆன் செய்யல……  பக்கத்து கட்டிடத்துல இருந்து வர்ற ஒரு சின்ன வெளிச்சம் மட்டும்தான் இருக்கு….. அதனாலயோ என்னமோ பார்க்க ரம்யமா இருக்கு……’

இப்போது இவளும் அந்த டெரஸிலிருந்து மானசீகமாக அவன் சொன்னவைகளை ரசித்தாள்.

‘நம்ம மேரேஜ்க்கு பிறகு  மழை பெய்ற ஒரு நைட்டாவது உன்னை இந்த டெரஸ் கூட்டிட்டு வரனும்னு முடிவு செய்துருக்கேன்….’ சட்டென இப்படி முடிந்தது  பவனின் மெசேஜ்….

காட்சிகளை அது வரை கற்பனை செய்தபடியே வாசித்துக் கொண்டிருந்தவள் மனதிற்குள்ளோ புடவையும் நகையுமாய் முழு மணக்கோலத்தில் இதோ இந்த நொடி அவனோடு நின்று கொண்டிருந்தாள் அங்கே.

அவ்வளவுதான் அதை ரசிக்கவெல்லாம் முடியவில்லை இவளால்…… கிடுகிடு என நடுங்கத்தொடங்கியது இவள் ஆவி அனைத்துயிர் மற்றும் சரீரம்…

வந்த வெறியில் அரக்க பறக்க  பவனின் எண்ணை அழுத்தினாள்…..

ம் ஹூம்….இவ அவசரம் சிக்னலுக்கு புரியுமா…இல்லை மழைக்குத்தான் தெரியுமா….?

நாட் ரீச்சபிள் என்றே அது சொன்னது…..

அசுர உடல் மொழியில் அவசர கதியில்  ‘வானமும் பூமியும் இடம் மாறினாலும் இந்த கல்யாணம் நடக்காது பவன்….  நாளைக்கு நீங்க வர்றப்ப உங்க  டைல்ஸ் ரெடியா இருக்கும்….எடுத்துட்டு போங்க…. குட்பை…‘  என ஒரு மெசேஜை டைப் செய்தாள் இவள்.

அடுத்து அவனிடமிருந்து சில முறை டிங் டிங்க் என சத்தம் இவளது மொபைலுக்கு வந்து கொண்டிருந்தாலும் இவள் எதையும் பார்க்கவே இல்லை…..

றுநாள் முழுவதுமே முழு மொத்த வெறியில் இருந்தாள் நித்து என சொல்லிவிடலாம். ஆக எதையும் இரண்டு தடவையாக கூட யோசிக்கவில்லை அவள்.

முதல் வேலையாக  தேவையான அளவு கன்டெய்னர் லாரிகளை புக் செய்தாள்….. அவைகளை புளியங்குடி ஊருக்குள் நுழையும் இடத்தில் இரவு 9 மணி வாக்கில் வந்து காத்திருக்க சொன்னாள்.

வந்து நின்னு வழி மறிக்கும் மாதிரியான லேபர்களைப் பத்தி இவ அப்பா சொல்லி இருக்காரே…அவங்கள்ல ஒருத்தர பிடிச்சு ஒரு நாலைந்து பேர் அவங்க ஆட்களை கூட்டி வர வைத்தாள்…..

மீதிக்கு வயலில் கூலி வேலைக்கு வருகிறவர்கள் ஒரு  ஒரு குழுவை வரச் செய்தாள்….

இவள் கடையில் வேலை செய்யும் யாரையும் இதில் அவள் சம்பந்த படுத்தவே இல்லை….யார் வழியாகவும் அந்த க்ளாடியசுக்கு விஷயம் தெரிந்துவிடக் கூடாதே….

இருளத் தொடங்கியதும்….  அத்தனை வாகனங்களையும் நபர்களையும் புளியங்குடியைப் பார்த்து போகச் சொன்னவள்….. இவளுக்கு ஒரு காரை அமர்த்திக் கொண்டு…. கடைசி நிமிடத்தில் இவளது வீட்டு செக்யூரிட்டிக்கு அழைத்து வந்திருக்கிறாளே மணியக்கா தம்பதி…அவர்களையும் சேர்த்துக் கொண்டு…..அந்த க்ளாடியசின் கடையை நோக்கி பயணித்தாள்.

இவள் அங்கு சென்றடையும் போது இவள் எதிர் பார்த்தது போல இரண்டு செக்யூரிட்டி தவிர அங்கு யாரும் இல்லை….. கடையை மூட துவங்கி இருந்தனர் அவர்கள்…அந்த கடையும் ஊருக்கு சற்று வெளியே புதிதாக குடியிருப்புகள் வர தொடங்கி இருந்த இடத்தில் இருந்ததால் இப்போது பெரிதாய் ஆள் நடமாட்டமும் இல்லை….

“என்ன அண்ணாச்சி…… நம்ம கடை சரக்கை நம்ம கடைக்கே மாத்திடலாம்னு பார்த்தோம்…. இந்நேரம் போய் கதவை மூடிட்டு இருக்கீங்க….” உள்ளே நின்ற வேலையாளைப் பார்த்து இவள் கேட்க….அவர்கள் இவள் புறமாக திரும்பிப் பார்த்தால்…..இதற்குள் சாலையில் இவள் அருகில் வரிசை வரிசையாய் வந்து நிற்கின்றன  கன்டெய்னர் லாரிகள்….

கூடவே பைக்கிலும் டிவிஎஸ் ஃபிஃப்டியிலுமாக கட்டுமஸ்தான லோட் மேன்கள் ஒரு 20 பேருக்கு குறையாமல்….

இவளிடம் என்ன ஏது என விசாரிக்க கூட சற்று தடுமாறினார் அந்த வேலையாள்….பின்ன இப்படி ஒரு கூட்டத்தோடு வந்து நிக்கிறப்ப… கண்டிப்பா ஏதோ வில்லங்கம்னு தெரியுதே… பேசவே பயமா இருக்குதுல்ல…. யாருக்காக யார் அடிவாங்குறதாம்?

அந்த க்ளாடியஸ் இந்த பொண்ணு வீட்டு கடைல இருந்துதான் பிச்சுகிட்டு வந்தார்னு எல்லோருக்கும் தெரியும்…. திருடிட்டு வந்தாரான்னு யாருக்கு தெரியும்….. ?

“க்ளாடியஸ் அண்ணாச்சி எங்கட்ட நீங்க வருவீங்கன்றாப்ல எதுவுமே சொல்லலையே” இப்படி மெல்லமாய் கேட்டுப் பார்த்தார் அந்த வேலையாள்.

அதற்குள் நித்துவோ

“சரி சரி நின்னுகிட்டே இருந்தா லேட் ஆகும்…. இருக்க டைல்ஸ் எல்லாம் நம்ம கடை சரக்குதான்….மார்பிள்ஸ மட்டும் விட்டுடுங்க…அது க்ளாடியஸ் அண்ணாக்கு உள்ளது….. நான் காமிக்க காமிக்க லோட் செய்ய ஆரம்பிங்க….”  தன் பின்னால் நின்ற கூட்டத்திற்கு  கட்டளை இட்டுக் கொண்டிருந்தாள்.

பின் தன்னை கேள்வி கேட்ட வேலையாளைப் பார்த்து…..”ஒன்னு செய்ங்க….நீங்க போய் க்ளாடியஸ் அண்ணாவை கூட்டிட்டு வாங்க…. அவங்களே சொல்லுவாங்க” என பதில் கொடுத்தாள்.

இப்போது அவர் மொத்தமாகவே குழம்பிப் போக….அதற்குள் இவளோ கையில் கொண்டு சென்றிருந்த லிஸ்ட்டை பார்த்து பார்த்து வரிசையாக சரக்கை அடையாளம்  காட்ட துவங்க….மடமடவென லோட் ஆகியது அது கன்டெய்னர் லாரிகளுக்குள்…

இன்னும் பார்த்துக் கொண்டு நிற்க அந்த கடை செக்யூரிட்டியாலும் முடியாதே….. அவர் தன் முதலாளியை மொபைலில் அழைத்தார்…

அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கூட நித்து காது கொடுத்து கேட்கவில்லை…..

அந்தா அதையெல்லாம் நீங்க ஏத்துங்க….இந்த பக்காமா நீங்க பாருங்க அண்ணா…. எறும்பு போல இங்கும் அங்கும் சுறுசுறு என சுற்றி சரக்கை ஏற்றுவதை மட்டுமே கவனித்தாள் அவள்…

அந்த க்ளாடியஃஸ் அரக்க பறக்க இங்கு கடைக்கு வந்து சேரும் போது….. இவர்கள் பொறுள் 99 % லாரிக்குள் சென்று சேர்ந்திருந்தன…

கடிச்சு குதற தயாராகும் சிங்கம் போல முகத்தை வைத்திருந்தாலும் ஆட்கள் சூழ நிற்பவளிடம் “என்னல பொம்பிள பிள்ள வந்து இந்நேரத்துக்கு இங்க நிக்குற?” என்றே கேட்டார் அவர்…

இத்தனை தைரியமாய் இங்கு வந்து நிற்பவள்…இவன திருடன்னு எல்லோர் முன்னால சொல்ல எவ்ளவு நேரமாகும்?

“உள்ள வந்து உட்காரு…. ஏல ராசு பிள்ளைக்கு ச்சேர் எடுத்து போடுல…” பக்கத்தில் நிற்பவனை அதட்டினார்.

“இல்ல அண்ணா….நேரமில்ல….இன்னொரு நாள் பார்ப்போம்….எங்க சரக்க மட்டும்தான் எடுத்திருக்கேன்…. ஏற்கனவே இதுல நீங்க வித்துட்ட பங்கு கணக்கு பார்த்து அப்றமா காசு வாங்கிக்கிறேன்…”  நித்துவோ இப்படியாய் சொல்லியபடி தன் காரை நோக்கி செல்லத் துவங்கினாள்…

தனியா வந்து பேசுவா அவள தலயிலடிச்சு மிரட்டலாம் என இன்னுமாய் எப்படி காத்துக் கொண்டிருப்பானாம் அந்த க்ளாடியஸ்….

“என்னடி ரொம்ப திமிரா….? கட்டினவன கழட்டிவிட்டுட்டு அடுத்தவன ஆள் தேடி  அலஞ்சுகிட்டு இருக்கிற  நாய்…. என்ன வந்து மிரட்டுறியா…?” அவன் ஊளையிட…

அதே நேரம் வந்து அவளது  கையைப் பற்றினான் பவன்…

தொடரும்….

12 comments

  1. Wowwwwww semma ud. Sooooooooper…. Nithu bhavan marriage eppo? Shri scene Ku epo varuvanga? Onnu pannunga motha storium onna ud pannidungalen…. Suspense tension mudiala plssss

  2. Hey, nice one Anna ma’am. Nithu chuma gun-u mari yaru thirudanu kandu pudichu sarakayum gambeerama vandhu meetutangale. Kadaisi line la suspense vachuteenga. Nithu already married o, adhanala dhan avanga Pavan ku nono solrangala? Missed shrushti and Saha… Adutha epi la avangalayum konjam kanla kaatunga , kudave avangaluku oru happy scene oda.. Saha pavam la 😉

  3. Wow awesome epi…. Nama nithu poonuku Semma dhairiyam vanthuduche… Yennama yosikiringa ammani…. And last but not least namma finishing touch by hero 😍😍 timing entry ponga…. Bayangarama tension kudukiringale sweety mam Sekirama update Kudunga pls Pls pls

  4. Nice ud.. nithu intha ud la pichu otharita.. good approach.. nithu shrushti FB nice.. pavan msgs to nithu nice.. nithu already married ah wat happn..but seekaram nithu pavana serthu vechudunga pls.. next ud la shrushti amd saha kondu vanga missing both a lot.. waiting for next ud eagerly

  5. Superb update mam. Enna oru writing mam. Nithu is so talented. How faster she has calculated the problems and tried to find a solution for the same. And how quickly she went to Claudius shop and shifted the load to her shop. Amazing mam. On the other side I was shocked to read that she was married and she is single ar present. What happened for Nithu mam? Wow Pavan is awesome. How beautifully he has expressed his love for Nithu and is entry at the correct situation like a hero is WOW. Waiting eagerly for your next update mam.

  6. Nithu action adhiradi scenes dhool Sweety sis.. very clever movement.. Bavan .. rasanai .. wah..wah.. Srushti yum Nithu vum sisters ah ? kadaisiyil ippadi oru vishyam irukka enna ? interesting going sis.. waiting to read more

  7. Very interesting episode sweety. I have read 3 times already. Viru virunu pochu. Indha alavuku nithuku eppudi courage vandhadhu. What’s the relationship between nithu and srishti

Leave a Reply