காதல் வெளியிடை 15 (3)

ஹா கப்பலுக்கு வரவும் பூரி தன் வீட்டாரோடு போய் சேர்ந்து கொண்டாளா என  ஆகாஷிடம் விசாரித்துக் கொண்டவன் முதலில் சென்று சந்தித்தது மோனியைத்தான்.

இவன் அவள் அறைக்கான மணியை அழுத்தவும்…. திறந்து எட்டிப் பார்த்த மோனியோ…. ஹுர்ரே….. வாவ்….  ஊஊஊஊஊ…என்றெல்லாம் வாய்விட்டுக் கத்தாவிட்டாலும் அதைத்தான் அவள் முகத்தில் காண்பித்தாள்… ஹைய்ய்ய்ய்ய்ய் ஏலியன் என் ரூமுக்கு…. வாவி……. இது தான் அவளது அப்போதையே ஒரே மூட்….

காஃபி நிறமும் அதில் கலந்து கிடந்த சந்தன நிறமுமாய் ஒரு உடையில் இருந்தவள்

“ஒ…ஒன் மினிட் ஜி…”  என்றபடி சட்டென காணாமல் போயிருந்தாள்….

அவளது அறையும் வெகு ஆடம்பர பிரிவை சார்ந்த ஒன்றுதான்…. ஆக அதிலும் உள் அறைக் காணப்பட அதற்குள் ஓடி இருந்தாள்….அப்புறம் எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் அடிச்ச விடியோ சி டி போலதான்  பார்க்க கிடச்சுது சஹாக்கு…

விஷ்க் என அந்த அறையிலிருந்து வெளியில் வந்தவள் மஞ்சள் நிற புடவையில் இருந்தாள்.

சரக் சரக் சரக்……எல்லா ஜன்னலிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கலர்  திரைசீலைகளை ஓடி ஓடி விரித்துவிட்டாள்.

“எ…” சஹா எதையோ ஆரம்பிக்க

“அச்சோ!!!” என்ற அலறலுடன் அடுத்தும் அவள் அப்ஸ்காண்ட்…. திரும்பி வரும் போது கை கால் முகம் நகம் எல்லாம் மஞ்சளோ மஞ்சள்…..

கழுத்து பகுதியில் மஞ்சள் பொடியை வைத்து இன்னும் கூட தேய்த்தபடிதான் இவன் முன் வந்து நின்றாள்…

“மோ…” சஹா திரும்ப ஆரம்பிக்க….

“மை காட்…”  பாய்ந்து போய் ரிமோட்டை எடுத்தாள் அவள்….

“மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன்….”

“மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன்…”

மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன்…”

வேற ஒன்னுமில்ல இந்த ஒரே ஒரு வரி திரும்ப திரும்ப மியூசிக் ப்ளேயர்ல இருந்து பொங்கி பொங்கி வந்துச்சு…. ஏலியனை துரத்த எல்லோ கலர் பாட்டு….எப்பூடி?…

அந்த  பேக்ரவ்ண்ட் மியூசிக்கோட….கை  நிறைய மஞ்சள் பொடிய வச்சு கழுத்த தேச்ச படியே திரும்பவும் சஹா முன் தரிசனம் அவள்.

ஈஈஈஈஈஈஈ…… “நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்……ரூம்குள்ள இருக்கப்ப மட்டும்தான் வேற கலர்ல ட்ரெஸ் போடுவேன்…. ஷ்ருஷ்டிட்ட சொல்லிடுங்க…” ஈஈஈஈஈஈஈஈ

வாசல் நிலையில் சற்றாய் சாய்ந்து நின்றிருந்த சஹா இப்ப்து நெற்றியை ஒரு கையால் பிடித்திருந்தான்….

இருந்த அத்தனை கவனங்களிலும் அவனுக்கு ப்ரதானமாய் இருந்த விஷயம் சிரிச்சுடக் கூடாதுன்றதுதான்…

“கொஞ்சம் உங்கட்ட பேசனும்….” வெளிய போகலாம் என்ற தொனியில் கேட்டான் சஹா….

தனியாக மோனி இருக்கும் அறைக்குள் சென்று அவளிடம் பேசுவது  இவனுக்கு சரியாக படவில்லை…

“கண்டிப்பா….வாங்க…சாரி டென்ஷன்ல கை கால் ஓடல……உள்ள வர சொல்ல மறந்துட்டேன்….வாங்க சஹா சார்” அவளோ இப்படித்தான் வரவேற்றாள்…

“நீங்க நல்லவங்கதான்……ரொம்பவே நல்லவங்கதான்…… ஆனா… சாரி….. பாருங்க எனக்கு எல்லோ கலர்  பக்கத்துல இருந்தாதான் முடியும்….” என தன் அறையை விட்டு அவனோடு எங்கும் வர மாட்டேன் என்பதை தயங்கி தயங்கி  ஆனால் பிடிவாதமாக சொன்னாள் மோனி…..

எங்க வரமாட்டேன்னு சொன்னதுக்கு அவன் கோபப்பட்டுடுவானோன்ற பயம் அவள் கண்ணில் அப்பட்டமாக தெரிந்தது…

“மோனி மேம்……நான் ஷ்ருஷ்டிக்குத்தான் சூப்பர் நேச்சுரல் பவர் இருக்குன்னு சொன்னேன்… அது கூட நீங்க  கொஞ்சம் குழம்பிப் போய் அவளவிட்டு விலகி இருக்கனும்றதுக்காகத்தான்….. இதுல என்ன ஏன் ஏலியனாக்கிட்டீங்க…?……நான் அக்மார்க் ஆதாம் வாரிசு….100% மனுஷன்…..” என்னதான் இலகுவாக இவன் பேசினாலும் ம்ஹூம் கொஞ்சம் கூட அசையவில்லையே மோனி…

“என்ன நீங்க….. ஷ்ருஷ்டியும் நீங்களும் இப்படியே பேசிட்டு இருக்கீங்க….? இதுவரைக்கும் யார்ட்டயும் நான் சொல்லலியே…இனிமேலா சொல்லிடப் போறேன்….” மறுத்தவள்

“எதோ ஓலை எல்லாம் வச்சு ஸ்னாக் செய்தீங்களே….அது உங்க ப்ளானட்ல செய்றதா…?” குரலை இறக்கி ரகசியம் போல கேட்டாள்.  “அத சாப்டப்பவே கண்டு பிடிச்சுட்டேன்…மேஜிகலா இருந்துது டேஸ்ட்…பூரி கொடுத்தா” கொஞ்சம் பெருமையும் கர்வமுமாக ‘பாரு பாரு எனக்கு தெரிஞ்சுட்டே’ என்ற தொனியில் பாராட்டினாள்….

இந்த முறை சஹா சிரித்தே விட்டான்….

“மோனி மேம்…உங்க ரூம்க்கு நேர் மேல என் ரூம்….. நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஸ்ரீ ரூமுக்கு மம்மிய இறக்கனும்னு ப்ளான் போட்டப்ப மேல நின்னுகிட்டு இருந்த என் காதில் அது எதேச்சையா விழுந்துது….  ஆக்சுவலி அப்ப கூட நான் அதை பெருசா எடுத்துக்கல….எதோ உங்க ஃப்ரெண்ட்ல ஒருத்தங்கள டீஸ் செய்து விளையாட போறீங்கன்னு நினச்சுட்டேன்….. அதே போலதான் ஸ்ரீ உங்க மம்மிய பின்னி எடுத்த விஷயமும் காதில் விழுந்துது…. அப்றம் நீங்க அவளோட பாஸ்போர்ட் டீடெயில்ஸ்…. அவ பேக்ரவ்ண்ட்னு ஷிப் பீபுள்ட லஞ்சம் கொடுத்து கலெக்ட் செய்ய ட்ரைப் பண்ணது தெரிய வந்தப்பதான் எனக்கு விஷயம் வெறும் விளையாட்டா படலை….

ஆனா  ஷிப்ல  இதுக்கெல்லாம் உங்க மேல ஆக்க்ஷன் எடுக்கவும் எந்த ரூல்ஸும் கிடையாது….

அந்த டைம்தான் உங்க கல்யாணத்த நிறுத்தன்னு ஸ்ரீய ஹோட்டல்க்கு அனுப்பினீங்க….  நான் அவள முதல் தடவ பார்த்ததே அங்க வச்சுதான்…… அதுவும் பின்னால மறஞ்சு நின்னு பார்த்து நீங்க சிரிச்சுகிட்டு நின்ன வகையிலதான் அது யாரா இருக்கும்னு  கெஸ் பண்ணினேன்…..

அவள பார்க்கச் சொல்லி நீங்க அனுப்பின சாஹித் நான்  இல்லைனு தெரிஞ்சும் நீங்க அவள நிறுத்தவே ட்ரைப் பண்ணலைனதும் எனக்கு ரொம்பவே கோபமா இருந்துது…அதில் ஸ்ரீ வேற தன் சேஃப்டி பத்தி யோசிக்கிற ஆளாவே தெரியலையா….. சோ உங்கள கொஞ்சம் குழப்பி  அவளவிட்டு தள்ளி நிறுத்த தான் அந்த ஏலியன் கதை சொன்னேன்….” இலகுவும் இல்லா கோபமும் இல்லாத தொனியில் சற்று இறுக்கமாகவே விளக்கிக் கொண்டு போன சஹா…

தன்  ஷேர்ட் பாக்கெட்டிலிருந்து  கடுகு அளவில் கலர் கலரான உருண்டை வடிவ மிட்டாய்களை எடுத்தான்…

“இது என் ஹாபி…. “ சொல்லியபடி அவைகளில் இரண்டை அவன் ஆட்காட்டி விரலிலும் அடுத்த விரலிலும் நக பகுதியில் வைத்து கட்டைவிரலால் பிடித்துக் கொண்டவன்…. என்ன செய்தான் என புரியும் முன்னும்… இரண்டும் அவன் நாவில் போய் உட்கார்ந்திருந்தன….  அப்படி சுண்டி இருந்தான் அவைகளை….

“இத இப்டித்தான் சாப்டுவேன்…எங்க வேணும்னாலும் எய்ம் பண்ணி என்னால அதை அடிக்க முடியும்….” சொல்லி முடிக்கும் முன்  பறந்து சென்று அவள் கன்னத்தில் அமர்ந்திருந்தன அடுத்த இரண்டு மிட்டாய்கள்……

”ரொம்ப சின்னதுன்றதால உங்களுக்கு இது மேல பட்டதே ஃபீல் ஆகி இருக்காது….. அதுவும் சாஸ்ல டிப் செய்து உங்க கழுத்துல அடிச்சுறுந்தேன்…. அதுதான் அந்த ரெண்டு சிவப்பு புள்ளி….”

அவன் சொல்ல சொல்ல மோனியிம் வாவ்!!! வகை முகபாவம் குறைந்து கொண்டே வந்து மண்ணைக் கவ்வும் மகராணி போசில் அவள்…ஞே!!!

“ரூம் சர்வீஸ்ல உள்ளவங்கட்ட உங்களுக்கு ஸ்பெஷலா தக்காளி சாஸையும்  ரெட் சில்லி சாஸையும் கலந்து அனுப்ப சொல்லி  இருந்தேன்…….அதான் நீங்க சாப்டுறப்ப அப்பப்ப இனிப்பும் அப்பப்ப காரமுமா இருந்திருக்கும் அது” மீதியையும் அவன் சொல்லி முடிக்க…

முறைத்துக் கொண்டிருந்தாள் மோனி…..

“ஆனா கண்டிப்பா உங்கள ஹர்ட் செய்யனும்ன்றது என் நோக்கம் கிடையாது…. உண்மையில் இதெல்லாம் நம்புவீங்கன்னே நான் நினைக்கல….. ஆனா கொஞ்சம் குழப்பமா இருக்கும்….அதனால தேவையில்லாம  ஸ்ரீட்ட வாலாட்டாம இருப்பீங்கன்னு மட்டும்தான் எதிர்பார்த்தேன்…. இதில் உங்க ஃப்ரெண்ட்ஸ் அனுப்பின ட்ரோனப் பார்த்து நீங்களே கடல்ல போய் விழுந்ததெல்லாம்….சுத்தமா நான் எதிர் பார்க்காத விஷயம்….” சஹா இன்னும் தொடர…

“வாட்????!!! என் ஃப்ரெண்ட்ஸா அனுப்பினாங்க அந்த ட்ரோன….?” அலறல் போல் ஆரம்பித்து அழமாட்டாத குறையாக  முடித்தாள் மோனி….

“பின்ன வேற யார் செய்யப்போறா இதெல்லாம்…? ஆனா என்ட்ட எவிடென்ஸ் கிடையாது…..இல்லைனா கண்டிப்பா சிவியரா  இருந்திருக்கும் ஆக்க்ஷன்….. அதோட உங்களுக்கு தெரியாமதான் அவங்க செய்றாங்கன்னும் எனக்கு புரிஞ்சுது….இல்லைனா நீங்க ஏன் பயந்து போய் விழப் போறீங்க…?” அவன் தொடர…

“அதான் எனக்கும் காம்பன்சேஷன் எல்லாம் வாங்கித் தந்தீங்க போல…” என பதில் கொடுத்தாள் மோனி…. அவள் குரல் வெகுவாக இறங்கிப் போயிருந்தது…

“நிஜமா விளையாட்டு இவ்ளவு ப்ரச்சனையாகும்னு நாங்க யாருமே நினைக்கல….” தெரியாம தப்பு செய்துட்டோம் என்பது போல் இருந்தது  அவள் சொன்னது…..

“எனக்கு மொத்த இன்டென்ஷனே பிடிக்கலை மோனி மேம்….அதென்ன வீக்கா இருக்கவங்களப் பார்த்தா ஏறி மிதிக்கனும்ன்ற மென்டாலிட்டி…?” சஹாவின் கேள்வியில் காரம் இருந்தது….

“அதை ரியலைஸ் செய்துட்டேன் சஹா சார்….கண்டிப்பா ஒரு வகையில் அது சாடிஸ்டிகல் மைன்ட் செட்தான்….நிச்சயமா தப்புதான்…. ரியலி சாரி…” குனிந்து போய் இருந்தது மோனியின் தலை..

“அப்றம் என்ன…? அதான் புரிஞ்சுட்டுன்றீங்களே…. ஹேப்பியா இருங்க…”  சொன்ன சஹாவின் முகத்தில் இப்போது இனிய பாவம்…..

விடை பெறும் வண்ணம் தலையாட்டியவன்…. சட்டென நியாபகம் வந்தவனாக கேட்டான்… “அப்றம் அந்த சாஹித் விஷயம் சால்வ் ஆகிட்டுதானே…” நட்பு இருந்தது கேட்ட சஹாவின் குரலில்…..

“அதுக்கென்ன….. இந்த யெல்லோ கலர் கோலத்தைப் பார்த்தே அவன் தெரிச்சு  ஓடிடமாட்டானா….. பொண்ண பிடிக்கல….வியர்ட்டா பிஹேவ் செய்றான்னு ஏற்கனவே வீட்டுக்கு சொல்லிட்டான்…. எப்படியோ உங்களால என் ப்ராப்ளம் சால்வ்ட்…தேங்க்ஸ்” மோனியின் இந்த சந்தோஷ பதில் சஹாவுக்கு நிச்சயமாய் வலித்தது….

“சாரி….. இந்த விஷயம் இப்படி போகும்னு நான் யோசிக்கல…… நான் வேணும்னா அந்த சாஹித்ட்ட…” சஹா மன்னிப்பு கேட்க துவங்க…

“ஹலோ  என்ன விளையாடுறீங்களா….? நான் தப்பிச்சது உங்களுக்கு பொறுக்கலையா? வயலின் வாசிக்கிறீங்க…”   இந்த திருமண காரியம் நின்றதில் தனக்கு முழு நிம்மதியே என்பதை இப்படியாய் வெளியிட்டாள் மோனி…

“இல்ல அந்த சாஹித் பையன் தப்பிச்சுட்டானேன்னு வருத்தமா இருக்கு….” இப்போது இப்படியாய் வாரினான் சஹா…

முறைக்க முயன்ற மோனி முடியாமல் வாய்விட்டு சிரித்தாள் இப்போது…..

“ஃப்ரெண்ட்ஸ்” என்றபடி இப்போது சஹாவை நோக்கி கை குலுக்கவென  வலது கையை நீட்டவும் செய்தாள்.… பின் சட்டென கையை மடக்கியும் கொண்டவள்…..

“பூரி சொல்லி இருக்கா உங்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப்ன்றது  ரொம்பவும் முக்கியமானதுன்னு…… சோ என் மேரேஜ ப்ரொபோசல நிறுத்த என் ஃப்ரெண்ட்ஸ்ட்ட கூட ஹெல்ப் கேட்காம நான் ஷ்ருஷ்டிய அனுப்பினது உங்களுக்கு  வித்யாசமா தோணும்தான்…….  உண்மைய சொல்லனும்னா எங்க வீட்ல என் அப்பா செம டாமினட் பெர்சன்…..நான் என் அம்மாலாம் டம்மி பீஸ்…வாயவே திறக்க முடியாது….  இப்ப இந்த ட்ரிப் நான் வந்துறுக்கேன்னா அதுக்கு காரணம் எனக்கு ஆசைன்றதவிட… இப்டில்லாம் பொண்ண அனுப்பி வச்சா தன் சர்க்கிள்ள தான் பெரிய பணக்காரன்னு நினைப்பாங்கன்ற  அப்பாவோட நினைப்புதான்..…அது போல அந்த சாஹித்….அவன் அப்பாட்ட இருக்க ஷேர்ஸும் என் அப்பாட்ட இருக்க ஷேர்ஸும் சேர்ந்தா அப்பா ஆசைப்பட்ட எதையோ செய்துடலாமாம்… இதிலெல்லாம் வீட்ல நான் ஒன்னுமே செய்ய முடியாது…..ஆனா வெளியில நான்  அப்படி கிடையாது….எனக்கு எது பிடிக்குதோ அதையெல்லாம் மட்டும்தான் செய்வேன்….அதை வச்சு கிடச்சவங்கதான் என் ஃப்ரெண்ட்ஸ்…. அவங்க எல்லோருக்கும் என் மேல ஒரு ஹீரோ இமேஜ்….  அவங்கட்ட நான் வீட்ல ஒரு வெத்து வேட்டுன்னு காமிச்சுக்க என் ஈகோ விடலைனு வச்சுகோங்களேன்…..அதான் அப்படி இப்படின்னு ஆயிரம் காரணம் சொல்லி ஷ்ருஷடிய வச்சுதான் கல்யாணத்தை நிறுத்த பார்த்தனே தவிர என் ஃப்ரெண்ட்ஸ்ட்ட என்னால போக முடியல….

எனக்கு தெரிஞ்சு நான் வில்லியெல்லாம் கிடையாது…. அதே நேரம் பூரி போல ரொம்ப நல்ல பொண்ணுனும் சொல்லிக்க மாட்டேன்…..கொஞ்சம் மீடியமா இருப்பேன்…. அப்பப்ப எதாவது ரொம்ப தப்புன்னு மனசு உறுத்திச்சுன்னா மாத்திப்பேன்னுதான் நினைக்கிறேன்…. இவ்ளவுதான் நான்…. நம்பலாம்னு தோணிச்சுன்னா….” என்றபடி இப்போது தயக்கமின்றி கை நீட்டினாள் மோனி…

சிரிப்புடனே அவள் கை பற்றி குலுக்கினான் சஹா…” எனக்கு ஒரு கெட்ட பழக்கம்….என் ஃப்ரென்ட் யாரையும் சிங்கிளா இருக்க விடமாட்டேன் நான்….“ தன் பங்குக்கு பாவ அறிக்கை வெளியிட்டான் சஹா….. சும்மா வம்பிழுக்கிறதுக்காக சொல்லியதுதான்….  பின் அதே தொனியில்

“டேய் சாஹித் எங்கடா இருக்க…? எங்க மோனியவா வேண்டாம்னு சொன்ன….இருடா வர்றேன்…. எப்படிடா நீ தப்பிக்கலாம்…?” என விளையாட்டாய் அவன் சூளுரைக்க….

“ஷ்ரீரீ…. உன் பெருக்குமார எங்க….? இங்க உடனே தேவைப்படுது….” என பதில் கொடுத்தாள் மோனி…..

அடுத்து இருவருமே வாய்விட்டு சிரித்தாலும் சஹா மனதில் இது எங்கோ எதையோ உறுத்தலாக நினைவு படுத்தியது…

ஆனால் எதை என்று அவனுக்கே புரியவில்லை…..

தொடரும்….

ஷ்ருஷ்டி பார்ட் வரை கொண்டு வந்துட்டு எப்பிசோட போஃஸ்ட் செய்யலாம்னு நினச்சு ரொம்ப  லேட் ஆகிட்டே போகுது….. அதனால இப்படியே போஃஸ்ட் செய்றேன்….படிச்சுகிட்டே இருங்க….அதுக்குள்ள அந்த பார்ட்ட எழுதி பதிஞ்சுடுறேன்….. ஒவ்வொரு எப்பிசோடுக்கும்  கமென்ட் கொடுத்துக் கொண்டு இருக்கும் உங்க எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றியும் சொல்லிக்கிறேன்…

 

Thanks Friends..

10 comments

 1. “அதில் புளிமையும் கசமையும் சொல்லொணா சோகமும் கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு திரவ வகை சந்தோஷமும் சாரல் நிலையில் உண்டாகி இவள் மூச்சுக் காற்று தொடங்கி அது முடிவடையும் சதை திசுக்கள் எங்கும் சென்று சிந்தியும் தொலைக்கிறது..”

  intha mathiri recipe ellam enga pudikureenga semmayaa iruku padikka.

  enna incident ah irukum. athaukana intro suspense packed ah perfect ah iruku.

  antha paiyan ah saha va yosikka nalla ah than iruku.
  ippadi thookam muidyama thookinathu ku than antha ponnu kadala kootitu poi neechala nirunthi keela ilukuthu hei.
  Saha moni conversation wow semma..
  enaku intha intention ye pudikala enna thought ithu.
  voice modulation muthar kondu semma saha I really connected to that.

  intha sree ah ezhuppi kottitu vaanga.

 2. Nithi ku en evvalavu feeling… Nithi um sri yum relatives ah… Kooda saha vera… super sweety sis fb semmya irrukum pola… Saha moni oda conversation superabu.. saha ku enna gnabagam varuthu sri yudan ana fb ya.. miss u sri… nice epi sweety sis…

 3. Nice Episode.
  விழுந்து அழுறதால எதுவும் மாறப்போறதில்ல….என்ன முடியுமோ அதை யோசிக்கனும்னு நினச்சுறுக்கேன்”

  Very good wordings.

 4. Nice update mam. Nithu has some serious and sorrowful flashback? What happened for her mom? Why her past is so sad 😢? HmmmNithu and Sri are relatives and Saha too? Good twist mam. And now Saha has explained the things happened for Moni? What he is going to do next? And Sri? Waiting eagerly for your next update mam.

 5. As usual sema rocking update Sweety sis.. Saha & Srusti rendu perum relatives ah ?? Nithu part romba nalla irukku sis.. avaloda andha thadumatram… nicely said.. Moni kku kidaitha bulb ha .ha.. sema.. so.. hero sir.. Moni kkum oru pair set pannitaar polave.. & sema cute narration sis.. waiting eagerly for next update

Leave a Reply