காதல் வெளியிடை 15 (2)

வசர அவசரமாய் எழுந்து வெளியே ஓடினாள் நித்து …..மணியக்கா வீட்ட நேத்துதான இங்க கொண்டு வந்து வச்சுறுக்கா….அவங்க மேல எதுவும் விழுந்துட்டுன்னா…..? இவளுக்குத்தான் எல்லாம் எப்படியோ ஏறுமாறாவேதான நடக்குது…..

போய்ப்பார்த்தால்….. பழைய ஜாமான் போட்டு வைக்கவென வைத்திருந்த அந்த அறையின் மேல் கிடந்த சில சாமான்கள் காற்றில் விழுந்துகிடந்தன… இவ்வளவு சத்தம் வருவதெற்கெல்லாம் அதில் ஒன்றும் பெரிதாய் இல்லை….. சின்ன வயதில் இவள் நடை பழகிய  நடைவண்டி…. இவள் ஓட்டி விளையாடிய மூன்று சக்கர சைக்கிள்…..கூடவே குட்டியா ஒன்னு ரெண்டு மரகட்டை…

எது எதுமேல இடிச்சுதோ இவ்ளவு சத்தம்…

“ஒன்னுமில்ல தாயி… கீழ இடத்த அடச்சுகிட்டு கிடக்கேன்னு நாந்தான் மேல தூக்கிப் போட்டேன்….விழுந்துட்டு போல……நீ போமா…….நான் எடுத்து வச்சுர்றேன்….” மணியக்கா எடுத்து வைக்க துவங்க….

அந்த நடை வண்டியை மட்டும் கையில் எடுத்தாள் இவள்…. எப்போதோ இதை ஷ்ருஷ்டி தள்ளிக் கொண்டு நடை பழகியதும்…..அவளை அதில் உட்கார வைத்து அவளோடு விளையாடிய இவளது உறவுக் காரப் பையனும் சின்னதே சின்னதாய் நியாபகத்தில் வருகிறது இவளுக்கு…

மூளையைப் பிழிந்தால் கூட நினைவில் வராத  அந்த நிகழ்ச்சி….. இப்போது  துண்டு துண்டாய் மனதில் வருகிறது…

இவங்க ஊர்ல அப்ப ஏதோ பங்ஷன்….இவளுக்கு அப்ப ரெண்டுல இருந்து மூனு வயசுக்குள்ளதான் இருக்கும்…. எப்டி இந்த இன்சிடென்ட் நியாபகத்துல இருக்குதுன்னு கூட தெரில….. ஷ்ருஷ்டி சரியா நடக்க தெரியாத ஸ்டேஜ்…..தத்தக்க பித்தக்கன்னு வண்டிய பிடிச்சுகிட்டு  நடக்கும்…. செம பொத்து பொத்து பாப்பா அவ…

அந்த பையனுக்கு அப்ப அஞ்சு இல்லனா ஆறு வயசு இருந்திருக்குமா…? ஒல்லியா கொஞ்சம் வெட வெடன்னு இருந்தது போல நியாபகம்….இந்த பங்ஷனுக்குத்தான் வந்திருந்தாங்களோ..? வேற எப்பயும் பார்த்த மாதிரி தெரியல…..  ஷ்ருஷ்டிய இந்த நடைவண்டிய பிடிக்க வச்சு நடக்க விட்டு……அவ விழுந்துடாம அந்த பையன் பின்னால இருந்து பிடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தான்….

ஆனா அதெல்லாம் அப்ப அப்பதான்….பெரும்பாலான நேரம் அவள தூக்கி வைக்கத்தான் ட்ரைப் பண்ணிட்டு இருந்தான் அவன்…. அவ சைஸுக்கு  அந்த பையன் தூக்க முடியாம தூக்குற மாதிரி இருக்கும்….

ஷ்ருஷ்டி வேற செம துரு துரு….. ஒழுங்கா உட்காரமாட்டா….அந்த பையன் தூக்கி வைக்க….இவ உருண்டு சரிஞ்சி அல்மோஸ்ட் தொங்கிற மாதிரிதான் தொவ்விகிட்டு இருப்பா…. ஆனா ஒரே சிரிப்புதான் அவ…..

ஷ்ருஷ்டி அப்ப நெருக்கமா முத்து வச்ச கொலுசு போட்டிருந்த நியாபகம்….  அவளோட கொழுக் மொழுக் கால்லாம் கூட இப்ப இவளுக்கு தெரியுது…..அவள தூக்கி வச்சுகிட்டு….அந்த கொலுசு முத்த தட்டி தட்டி சத்தம் வர வச்சு அந்த பையனும் இவளும் விளையாடினதா நியாபகம்….

‘ஒரு வேள அந்த பையன்தான் இந்த கொழுக்கட்ட அண்ணாவா இருப்பாங்களோ…?!!’ திடீரென தோன்றுகிறது இவளுக்கு…. ‘இருக்கலாம்தான்….அப்டி நினைக்க நல்லாத்தான் இருக்கு….’

இப்பொழுது  தன்னை கண்ணாடியில் ஒருதரம் பார்த்துக் கொண்டாள் நித்து…. ஆம் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே கடைக்கு போக கிளம்பி இருந்தாள் அவள்.

‘ஆனா எப்படி போக? ஏற்கனவே லேட் ஆகிட்டு….இனி பஸ் பிடிச்சு போய்ட்டு எப்ப திரும்ப வர?’ அடுத்த கேள்வி ஆஜர்.

கூடவே அதுதான் பதில் என்பது போல் கண்ணில் படுகிறது வீட்டுக்கு பக்கவாட்டில் நிற்கும் யமஹா பைக்.

சாவியை தேடி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். “மணியக்கா கடை வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்” என்றபடி.

இவள் பக்க கிராம்பங்களைப் பொறுத்தவரை பொண்ணுங்க கியர் வண்டி ஓட்ட கூடாது என்ற எந்த எழுதப்படாத சட்டமும் கிடையாது….. எல்லோரும் பொண்ணுங்களுக்கு ஸ்கூட்டி, வீட்டு ஆம்பிளைங்களுக்கு கியர் வண்டின்னு வகைக்கு ஒன்னா வாங்குற அளவு வசதிப்பட்டவங்க கிடையாது…..

ஆக வீட்ல என்ன வண்டி இருக்கோ அத எடுத்து பழகிக்கிறதுதான்…. அப்ப அப்ப தேவைக்கு ரெண்டு பேருமே எடுத்துட்டும் போய்க்கிறதுதான்…..

ஆனா ஒரு டைம் இவ காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் இவ வீட்டுக்கு வந்தப்ப இவ  யமஹா ஓட்றதைப் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறை…… “அங்க க்ளாஸ்ல அடுத்த சேர்ல பாய்ஸ் யாராவது வந்து உட்காந்தா அப்படியே அரண்டு போய் உட்காந்திருப்ப…. ஆனா இங்க அந்த பாய்ஸ் ஓட்ற வண்டிய பறக்க விடுறியே….இந்த அபிதகுஜலாம்பாள்குள்ள இப்டி ஒரு சொர்ணாக்காவா….” என ஆளாளுக்கு வாய் பிளப்பு….

‘பசங்க பக்கத்துல உட்கார்றது இவங்க ஊரப் பொறுத்த வரைக்கும் தப்பு….ஆக இவளுக்கு உதறும்….யமஹான்னா சிட்டிய பொறுத்தவரைக்கும் ஆம்பிள பசங்க வண்டி…..ஆக அங்க பொண்ணுங்களுக்கு உதறும் போல……எல்லாம் மைன்ட் ப்ளாக்தான் போல….’ யோசித்துக் கொண்டே போனவள் கடையை அடைந்திருந்தாள்.

கடைக்கு முன்பாக வண்டியை நிறுத்தி இறங்கி ஸ்டாண்ட் போடும் நேரம் உள்ளிருந்து வெளியே வந்தார் அந்த பால் நிற வெள்ளை வேஷ்டிக்காரர்…. கையிலும் கழுத்திலும் விரல் தடிமனில் நகை…..செங்கல் அமைப்பில் மோதிரம் வேறு…. ஒரு முழு நொடி தேவைப் பட்டது இவளுக்கு அடையாளம் கண்டு பிடிக்க….

இவங்க கடையில் ரொம்ப காலமாக வேலை பார்க்கும் க்ளாடியஸ் அண்ணா…..

ஏதோ உறுத்துகிறது……. நேத்து இவர் இங்க இல்லைதானே…… அப்பா கூட வெளிய போய்ருப்பாரோ?…..மரியாதை நிமித்தம் சிரிக்க முயன்றாள்….  ஆனால் அந்த க்ளாடியஸோ இவளைக் காணவும் இவளை இந்நேரம் இங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை முகத்தில் அதிர்ச்சியாய் காண்பித்தவர்…..பின் எதோ மிதிக்க கூடாததை மிதித்து விட்டது போல் முகம் சுளித்தபடி…..அலட்சிய பாவத்துடன் அருகில் நின்ற புல்லட்டை எடுத்துக் கொண்டு போய்விட்டார்….

நியாயப்படி வலிக்க வேண்டும்தான் இவளுக்கு….. உண்மையில் வலிக்கவும் செய்கிறதுதான்…..ஆனால் இவள் கவனம் அதையும் தாண்டி அடுத்த விஷயத்திற்கு போகிறது….

டைல்ஸை திருடினது யாருன்னு இவளுக்கு தெரிஞ்சுட்டுதோ????!!!

அடுத்த பக்கம்