காதல் வெளியிடை 13 (pg 2)

ஆனால் எல்லாம் சில நொடிகள் தான்…..

“போலாமா ஸ்ரீ….? ஃபீல் ஃப்ரீ…. எதுனாலும் உடனே என்ட்ட சொல்லு..” என்றபடி சஹா இப்போது கடலுக்குள் மூழ்க துவங்க….. பூரி நிகழ்வின் உணர்ச்சிகளுக்கு உட் பட்டிருந்த ஷ்ருஷ்டிக்கு ‘பூரிக்காகதான வந்தேன்….அவளே போயாச்சு….நான் மட்டுமா தனியா இவன் கூடவா? ஏன் போகனும்?’ என்ற கேள்வி உண்டாகிய போது…..அவனோடு இவளும் நீர் உலகுக்குள் ஊடுருவ துவங்கி  இருந்தாள்….

கண்ணோடு விரிந்த கடலெனும் திரவ ப்ரபஞ்சம் அவளைக் கைப்பற்றிக் கொள்ள…..’இந்த ஸ்டேஜ்ல எப்படி என்ன சொல்லி வரமாட்டேன்னு சொல்ல….?’ என்ற கேள்வி முழுதாய் கூட தோன்றும் முன் தொலைந்து போனது…..

காலிலிருக்கும் துடுப்பின் சிறு சிறு அசைவுக்கும் பெரும் தொலைவு புதைய…..சுவாசிப்பது செல்ல செல்ல இயல்பு போலவே தோன்ற…முகம் மறைத்திருந்த கண்ணாடி தொடும் பசும் நீலத் தண்ணீரில் பாதை கண்டபடி இன்னும் இன்னுமாய் தீராத திரவ லோகத்தில் தீர்க்கமாய் பயணம்…

விழித்து விழித்து மூடும் விழிகள்  வீற்றிருக்கும் நீர்க்காட்சிக்கு பழக பழக கண்திறந்தே காணும் கனவாய் விரிகிறது கடல் கோளம்…

மெல்ல மெல்ல மேலேயே  நின்று போகுறது நிஜ உலகம்….அதன் நிதர்சன ரணம்….வலி வேதனை பயம்…இயல் சூழல் மற்றும் இன்ன பிற….

எட்டுதிக்கும்  எங்கும் இடைவிடாது நீர்மமாய் நிறைந்திருக்கும் இந்த பெருவெளி  இவளது கனவுகள் காட்டும் கற்பனை வீதி….இங்கு இவள் ஷ்ருஷ்டியே இல்லை…. இன்னும் ஷ்ருஷ்டிக்கப்படாதவள்…..பெயரற்றவள்….

அவள் சுயத்தின் மீது சூட்டி இருந்த அத்தனை விலங்குகளும் நழுவி விழ…. திரவத்தோடு திரவமாய் ப்ரவாகித்தாள்….. விடுதலை

இதே நேரம் வந்து இவள் கை பற்றுகிறான் சஹா…. “வாட்டர் ப்ரஷர் அதிகமா இருக்கும் இனி” என்றபடி….. இருவரும் பிரிந்துவிடக் கூடாதென அவன் நினைப்பது புரிகின்றது…..

தன்னை தடுக்காமல் மொத்தமாய் அவன் கையில் விட்டாள் இவளை…..

இழுபடும் இலை போல் அவன் பின்னால் இவள்…..

முடிவிலியாய் ஒரு பயணம்…..இன்னும் இன்னுமாய் நீர்….

ஏதோ ஒரு நேரத்தில் மொத்த உலகும் இவளிடமிருந்து திருடப்பட்டுவிட்ட காலத்தில்…… மாயையும் அதன் மந்தகாசமுமாய் இவள் மாறிக் கொண்டிருந்த வேளையில்….

“சைட்ல கவனிச்சியா ஸ்ரீ?”  எனக் கேட்டான் சஹா…

அம்பு போல கொஞ்சம் சாய்வான கோணத்தில் தலை கீழாய் பயணித்துக் கொண்டிருந்தவள்…. சற்று நேரமாக தனக்குள்ளாக கிடைக்கப் பெற்றவைகளை மாத்திரமே பார்த்தபடி சென்று கொண்டிருந்தவள்….

இப்போது மெல்ல இடமும் வலமுமாய் பார்க்கிறாள்…..

இடப்பக்கம் இவர்கள் இறங்க இறங்க  இன்னும் அடி தெரியாத ஒரு கறுப்பு திரை போல் எதோ ஒன்று ஓரளவு தொலைவில் புலப்படுகிறது…..

இவர்கள் இருவரும் அதன் முன் சிற்றெறும்புக்கு கூட சமமில்லை….அத்தனை விஸ்தீரமுமாயும் அது….. மிரள வேண்டுமல்லவா இவள்…. ஆனால் மாயையில் ஏது மரண பயம்….?

‘என்னதுப்பா அது?’ நட்பின் ஆவலாகவே வருகிறது இவள் வார்த்தைகள்…. ஒரு கணம் அவளை திரும்பிப் பார்த்தான் அவன்….

அவன் உயிருக்குள் ஊறுகிறது ஒரு உற்சவம்….

சட்டென அவளை இழுத்தபடி இடப்பக்கமாய் பாய்ந்தான்…… “வா காட்றேன்” என்றபடி…

“அது கடல்குள்ள இருக்கிற மலை….. இங்க இது ரொம்ப சின்னதுதான்…. வேற இடத்துல நிறைய பெரிய மலை கூட இருக்கும்….” அவன் வார்த்தைகளை கம்யூனிகேஷன் சிஸ்டம் வழியாய் காதில் வாங்கியபடி…..கண்களை அம்மலைக்கு கொடுத்திருந்தாள் இவள்….

மலையின் சர்வ லட்சணங்களுடனும்….படிந்து கிடந்த சில பசுந்தாவரங்களுடனும் மீன்கள் சூழ இருந்தது அது…

மலையை ஒட்டியே இறங்கிக் கொண்டிருந்தனர் இருவரும் சற்று நேரம்….

“இங்க பாரு…இது உனக்கு பிடிக்கும்….” சொன்னபடி… இப்போது அம்மலையில் காணப்பட்ட ஒரு முகடின் சரிவுப் பகுதிக்கு கூட்டிப் போனான்…..

முழு மலையும் மொத்த இவளும் தண்ணீருக்குள்தான் இருந்தாலும்…. இப்போது இவள் தலையில் வந்து கொட்டுகிறது நீர் தட தடவென… வினோத இந்த அனுபவத்தை முதல் நொடி கண்மூடி சுகித்தாள் அவள்….. பின்  மெல்ல மெல்ல உயிர் தீயில் உள் வாங்கினாள் அதை…. எங்கோ பற்றி எரியும் பாவைப் ப்ரதேசத்தில்  பால் நதி ப்ரவாகம்….

“இது கடலுக்குள்ள இருக்கிற குட்டி அருவி..” விளக்கம் சொன்ன அவன் குரல் இவள் காதுக்குள் ஒலித்தாலும்  இன்னுமே கண் மூடிக் கிடந்தாள் அவள்….. செய்து வைத்த தெய்வம் இவளை சிநேகிக்கிறதுதானே…. இல்லையென்றால் இங்கு இவளுக்காய் இப்படி ஒரு அருவியும்…. அதை அனுபவிக்க இவ்வாறாய் ஒரு வழி வகையும்  ஏதாம்…? சென்று கொட்டுகிறது  செந்தேன் ஒத்த திரவங்கள் சில இவளுள்…… தீந்தித்திப்பாய் பரிணமித்தாள்…

சேதாரமற்ற சில நிமிட செலவுக்குப் பின் “நேர…” என அவன் எதோ சொல்ல துவங்க…“ப்ளீஸ் ப்ளீஸ் சஹா கிளம்பலாம்னு சொல்லாதீங்க…” சிணுங்கலுக்கும் கெஞ்சலுக்கும் இடையில் ஏதோ குரலில் அவன் பேச்சை நிறுத்திப் போட்டாள்…

இவளை  பிடித்தாளும் இயற்கையின் இந்த படைப்பிரிவுக்குள் சுகம் சுகமாய் செத்தொழிய கூட சிறு ஆசை இருக்கின்றது…. விட்டு வெளியேறேவோ விருப்பமே இல்லை….

சின்னதாய் சிரித்துக் கொண்டாலும் அவன் சிறிது நேரம் ஏதும் சொல்லவில்லை…….ஏதோ ஒரு கணத்தில் இவள் மெல்ல கண் திறந்து பார்க்க…..அப்போதுதான் புரிகின்றது அது…. இவளது இரு புறமுமாய் மலை மீது கையூன்றி இவளை முப்புறமும் சூழ்ந்து நிற்கிறான் அவன்…. சிறிதளவும் தீண்டவில்லை என்றாலும் அத்தனை அருகாமையில் அவன்…

‘நீரின்  வேகத்தில் இவள் எங்கோ போய் விழுந்திடக் கூடாதே…..’ என்ற அவன் எண்ணம் பார்த்ததும் புரிகிறதுதான் இவளுக்கு….மலையின் அமைப்பு காரணமாய் மற்ற ப்ரதேசத்தில் காணப்படுமளவு கூட இங்கு வெளிச்சம் இல்லாததால் தலையிலிருந்த விளக்கிலிருந்து சிதறும் ஒளியில் சுற்று முற்றுமாய் கவனித்த வண்ணம் நின்றிருந்தான் அவன்…..தாய்மையின் போர் சேவகம் அவன் முகக் கூறுகளிலும்… உடல் மொழியிலும்….

இவளுக்குமே இத்தனை நெருக்கத்தில் இயல்பாய் ஆணின் அருகாமையில் வரும் அருவருப்போ….விலகலோ….தற்காக்க நினைக்கும் போர் வேகமோ எதுவும் தோன்றவில்லை….அதற்காய் நெகிழ்ந்தாள் கிளர்ந்தாள்  என்றெல்லாம் அதுவுமில்லை…..

சற்று நேரமாய் இவள் சுவாசிக்கும் விடுதலைநிலை கடல் தந்தது இல்லை இந்த இவன் தந்தது  என இவள் முழுமுதலாய் நம்பும் வண்ணம் ஓங்கி தணிக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு உள்ளும் புறமாய் உற்பத்திக்க அதை எதிர்க்க தோன்றாமல்  நின்றாள்.

இவளை கவனிக்காமல் அங்கும் இங்கும் சுழலும் அவன் கண்களில் தன் விழி திக்க திக்க சில நொடி கலைந்தவள்…. மெல்ல அவன் விழி செல்லும் திசை நோக்க…..அப்பொழுதுதான் அவள் கண்ணில் படுகிறது அது…. மலைச் சுவரோடு சுவராக தோன்றும் இரண்டு பெரும் கருப்பு கோலிகள்… இருட்டிலும் பளபளத்தபடி….

படீர் என பாயும் தீ நாவு போல் அதே கணம் அது இவர்களை நோக்கிப் பாய…..இவனும் இவளை அதே அதே வினாடி இரு கையாலும் பிடித்தபடி எப்படி துள்ளினான் என தெரியவில்லை….. பாறையில் கால் ஊன்றி எவ்வி இருப்பானோ?…. மலையிருந்து விலகி கடலின் ஆழப் பரப்பிற்கு சுறா வேகத்தில் போய் விழுந்தான்…..

இவள் இரு விழி முன்பாய் பாய்ந்த அந்த கருப்பு……நாகம் என்றும் எண்ண முடியாதபடி…..மீன் என்றும் சொல்ல முடியாதபடி எதோ ஒன்றாய் இருக்க…. எதோ ஒரு திசையில் போய் விழுந்து எங்கோ சென்று போயிற்று….

சற்று நேரமாயிற்று இவர்கள் சக்கரவகை பயணம் முடியவும் சாதாரண நிலைக்கு வரவும்…

பயமென்பதே பாதம் தொடாத அந்த மந்தகாச மாய உலகில் விழி மூடாமல் எதிரிலிருக்கும் அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அந்த மொத்த நேரமும்……’ இவனுக்கு நான் யாராயிருக்கிறேன்?’ என்ற கேள்வியில் நின்று போயிருந்தாள் அவள்….

“எதுனாலும் உன் இஷ்டம்தான்….” அவன் சொல்லிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று இப்போது விடை போல் விழுகிறது அவள் காதில்….

அதன் விளைவாய் ‘என் இஷ்டம் என்ன?’ என்ற கேள்வி ஒன்று இவள் மனதிற்குள் பிறந்து.…அவள் எழுதி வைத்திருந்த கவிதை ஒன்றை விடையாகவும் அள்ளி வருகிறது…..

கனவென்னும் கற்பனை வீதியில்

கலைந்தே கிடக்கின்றன

என் நிம்மதி நீர் வீழ்ச்சி

நீங்காது நின்னோடு என

அங்கே ஒரு நினைவுமிருக்கிறது

நீங்காது அவனோடு இருப்பது என்ற ஓர் இஷ்டம் உண்டாகி சில பொழுதுகள் கடந்திருக்கின்றன என குற்றமின்றி சுட்டிக் காட்டியது இவள் பெண்மை…. இதுதான் இவள் கனவு கண்ட கற்பனை வீதியாயிட்டே….நினைக்கலாம் தப்பில்லை என அனுமதி அளித்தது அவள் உழன்று கொண்டிருந்த மாயை….

“என்ன செய்யலாம்?…..” சஹாவின் அடுத்த கேள்வியில் மீண்டுமாய் நிகழ்வுக்குள் வந்தவள்

“எ…என்ன சொன்னீங்க…?” என விசாரித்தாள்…..

“ இப்பவாவது கிளம்பலாமா….இல்ல திருபவும் ஃபால்ஸ்தான் வேணுமா? இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அடுத்து மேல போக வேண்டியதுதான்… சிலிண்டர் கேஸ் அதுக்கு மேல தாங்காது….எங்க போக? கீழயா..? இல்ல ஃபால்ஸானு கேட்டேன்….” விளக்கம் சொன்னான் அவன்…

மீண்டுமாய் கடலின் அடிப் பகுதியை நோக்கி நீந்த துவங்கினர் இருவரும்…..இவள் முடிவின்படிதான்…

மெது மெதுவாய் வெளிச்சம் கருக்க நீல உலகம் மறைந்து மெல்லப் பிறக்கிறது இருள் உலகம் இவள் முன்னே…
இருவர் தலையிலும் அணிந்திருக்கும் லைட்டிலிருந்து பிறக்கும் ஒளிக்கற்றைகள் மட்டுமே இரு கோடுகளாய் வெளிச்சம் சிந்துகிறது சிறிது தூரம் வரை…..
அடுத்தோ எதுவுமற்ற இருள் வெறுமை….ஆழம்…
இலக்கணப்படி இவளுக்கு இப்போதாவது  பயம் வந்தாக வேண்டும்…..ஆனால் ஏதோ இவள் குடியேறப் போகும் வீட்டிற்கு வந்துவிட்டது போல் குளிர்மை இவள் உயிரில்….
நிதர்சனம் இவளை நினைத்தாலும் தீண்ட முடியாத வகையில் தடுத்துப் போடுவதாய் இவ் விருள் மீது எண்ணம் வந்தாடுகிறதே….
பூமியின் கோரப்பிடியிலிருந்து எங்கோ புது கிரகத்திற்கு தப்பி புகுந்து விட்டதாய் ஒரு புரிதல் இவளுள்ளே….. மெத்த பாதுகாப்பாய் ஒரு மனோநிலை
இது இவள் உலகம்….
“மேலருந்து சன்லைட் வர முடியுற தூரத்தை தாண்டுறோம்மா” என்ற சஹாவின் குரல் காதில் விழுகிறது……
கையின் முழு நீள அளவில் அவனிடமிருந்து விலகி பயணித்தவள் இப்போது ஓரளவு அவனை நெருங்கிக் கொள்கிறாள்…
இவளை திரும்பிப் பார்த்த சஹாவோ…..” என்னாச்சு…. பயமா இருக்குதா?” என்றான்..
“இல்ல இது பிடிச்சுறுக்கு “ என வருகிறது பதில் இவளிடமிருந்து…

 

இப்போதும் ஒரு பார்வை இவள் மீது பதித்தெடுத்துக் கொண்டான் அவன்…..

“கீழ க்ரீன் கலர்ல அங்கங்க  லைட்ஸ் தெரியும்…..  ரிசர்ச் சைட்ல ஃபிக்‌ஸ் செய்து வச்சுருக்காங்க….” சஹா அடுத்து சொல்லி முடிக்கும் போது…..அடி ஆழத்தில் எங்கோ அந்த பச்சை வெளிச்சம் புலப்படுகிறது ஷ்ருஷ்டிக்கு….

எப்படி உணர்கிறாள் என வார்த்தைப் படுத்த இயலவில்லை அவளுக்கு….. கடலின் காணக்கிடைக்காத எல்லைக்குள் கால் வைக்கப் போகிறாளா? தாண்ட முடியாதவை என எதுவும் இல்லைதான் போலும்… கற்பனைக் கோடை தாண்டி மாயைக்குள் அவனும் இவளுமாய் மட்டும் கிரஹப் ப்ரவேசம்….

தரையிலிருந்து இரண்டு மூன்றடி உயரத்தில் இவர்கள்…..

“இது ஐசிஸ் ப்ரீஸ்ட்டோட சிலைனு சொல்றாங்க…. இது கிடைக்கவும் இங்க இருந்து எடுத்து க்ளீன் செய்துட்டு இங்கயே திரும்ப வச்சுட்டாங்களாம்….” மெல்ல மெல்ல நழுவுவது போல் தரை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தவர்கள் கண்ணில் பட்ட அந்த சிலையை குறித்து  விளக்கினான் அவன்….

“எனக்கு தரைய தொடனும் சஹா…” இப்படியாய் வந்தது இந்நேர இவளது கோரிக்கை….

அவளது கண்களோ அச்சிலையை ஒட்டிய தரைப் பகுதியின் மீது இருந்தது….. சிலையை ஒட்டிய ஒரு தூண் அடிப் புறத்தில் உடைந்து தரையில் உருண்டு கிடந்தது….மற்றவகையில் அவ்விடம் சற்றாய் சேறாய் இருப்பது போல் ஒரு உணர்வு அங்கு….

“இல்ல இங்க வேண்டாம்….. இதுதான் உட்கார பெர்ஃபெக்ட்டா இருக்கும்….. “ இவள் கை பிடித்து அழைத்துச் சென்றான்…. இத்தனை நேர நீச்சலில் அவள் தொய்வது அவனுக்கு புரிகின்றது….

அதோடு அடி ஆழம் போக போக…கடலைப் பொறுத்தவரை நம் மீதிருக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்க….. உடல் வகையில் அது நிச்சயம் சோர்வுறுத்தும் ஒரு செயல்….

பாளம் பாளமாய் கட்டிட தரைபகுதிகள்…சிவப்பு வர்ண க்ரானைட் வேலைப்பாடுகளுடன்…… என கிடக்கும் க்ளியோபட்ராவின் அரண்மணையின் நீர் தின்றது போக மிஞ்சி இருக்கும் பகுதிகளை கடந்து போய்….அடுத்த புறமாக இணைந்தே விழுந்து கிடக்கும் இரண்டு தூண்களிடமாக அவளைச் சேர்த்தான்….

“முதல்ல இதில் உட்கார்….” அவன் சொல்லும் முன்னும் அதில் அமர முடிவு செய்துவிட்டாலும்….. ஷ்ருஷ்டிக்கு அதை செயல் படுத்துவது கூட பெரும் வேலைபோல் பட்டது…….

சில நொடி அவள் முயற்சியை கவனித்திருந்தவன் அவளைப் பற்றி ஒரு வகையாக உட்கார வைத்தான்….

இதில் வல கால் பாதத்தை தனக்கு வெகு அருகில் கொண்டு வந்து….. அதில் அணிந்திருந்த துடுப்பு போன்ற ஸ்கூபா ஃபின் ஷூவை தொட முயன்றாள் அவள்..… கடும் முயற்சி…

“என்ன ஆச்சுபா?” கேட்டபடி கால் மடக்கி அவள் அருகில் அமர்ந்தான் இவன்…

“எனக்கு தரைய தொடனும்….அது எப்டி இருக்குன்னு ஃபீல் பண்ணனும்….” மெல்லமாய் அவள் சொல்லிக் கொண்டிருக்க

“இங்க பாரு… வாட்டர் கண்டிப்பா  ரொம்ப கோல்டா இருக்கும்….கொஞ்ச நேரம் தான் அலவ் பண்ணுவேன்…” என்றபடி இப்போது அவள் காலை பற்றியவன்  ஃபின்னை கழற்றிவிட்டு…..அவள் பாதத்தை தரை மணலில் பதிய வைத்தான்….

அவ்வளவுதான் துடிக்க துடிக்க பரவியது ஒரு சுகம் அவளுள்…. மாய நதிப் ப்ராவகம்…. சுழன்று அப்படியே தன்னுள் அமிழ்த்திக் கொண்டது ஆனந்தப் புயம் ஒன்று…. மெல்லமாய் அப்படியே அவள் அமர்ந்திருந்த தூண்களில் சரிந்தாள்….

”ஸ்ரீ என்ன…என்னாச்சுமா…ஸ்ரீ…?” பதறினான் சஹா….இதுவரை நடந்த  எல்லா விஷயங்களிலும் அவன் அவளது  கையைப் பற்றி இருக்கிறானே…..அதனால் அவள் நோக்கி இழுக்கப்பட்டும் இருந்தவன் முகம் மெல்ல திறக்கும் அவள் கண்களுக்கு மிக மிக அருகாமையில்…

“ப்ளீஸ் ஸ்ரீன்னு கூப்டாதீங்கப்பா….” இது தான் இந்நேர முதல் பதில் அவளிடமிருந்து…

தொடரும்…

ஆயிரம் தடைகளுக்கு மத்தியில் எழுதிய எப்பி இது…எப்படி வந்திருக்கிறது என உங்கள் கருத்துப் பதிவு நிச்சயம்  பேருதவியாக இருக்கும்….நன்றி

 

20 comments

 1. Semaya irundhuchu sis epi
  Apdiye nanum kadal kula pona maari irundhuchu
  எங்கோ பற்றி எரியும் பாவைப் ப்ரதேசத்தில் பால் நதி ப்ரவாகம்….
  Nice lines sis nane andha aruvila nina maaari oru feel andha lines padichadhum..
  Poori saha va love panradha saha kandupidichutana ilaya??
  And neenga nithi ya marandhuteengala
  Nithi pathi eluthave ila sis.. .

 2. Wow just wow sweety

  Scuba tiving ivlo azaga engalayum kadaluku ulle izhutudu poideenga

  Lovely epi
  மெல்ல மெல்ல மேலேயே நின்று போகுறது நிஜ உலகம்….அதன் நிதர்சன ரணம்….வலி வேதனை பயம்…இயல் சூழல் மற்றும் இன்ன பிற….

  Itarkaduta varigal ellamum ite azavu manatai kavarntana

 3. Sweety sis.. Naanga ellarum kadal ku pona feel kondu vanthutinga… Unga story enaku pidichathey intha mathri feel tha padikaravangala athey feel kuduthuruvinga… Thank u so much for the update…

 4. Hi Mistyma,
  Superb epi. Where your are getting all these words? Even though first time I am reading these words but it is very sweet like you. I think saha knows both Poori’s and shri’s love. He handled both of them in a good and protective way. With luv, Niranjana.

 5. Anna, Super episode. Thanks to you. Really a very intresting episode. The way you have expressed Shruti’s feeling brought me tears. Really a wonderful episode. Really you brought the underwater world to our eyes. After reading this episode wanted go for Scuba diving.

  I think you have typed someones mobile no. in between the episode.

  Once again. Thank You

 6. Sweety sis entha motha epi yume neenga sentence by sentence a ezhuthi irrunthal oru kavithai book mari potrukkalam.. super super super…. oru phone number type pannirukeenga yarodathu
  Sis..

 7. Semma narration.. very expressive unga ezhuthu… Antha kadalukulaye naanum kooda irunthu paakura feel … Srusti and saha feeling for each other romba azhaga ezhuthirukeenga sweety… Again,as always romba kavithuvama ezhuthureenga.. waiting eagerly for next ud..

 8. Mam, amazing epi mam… Scooba diving na eppadi irukkum nu nijamavae feel panna vachuteenga… Alexandaria va nangalum underwater la pathathu romba sandhosham ah irukku… Real life la idhai ellam explore panra chance kidaikumo kidaikadho, but we all feel blessed of having felt that experience through your writing Mam…

  Thanks a lot Mam…

 9. Awesome update mam. Hmmm the experience of Sri inside the sea is absolutely fantastic mam. Wow what a narration and I feel like I am also swimming with Sri and Saha . Saha is an excellent lover. When he is going to open up to Sri? Eagerly waiting for your next update mam.

 10. Naan lam ECR la 1/2 mani neram car la ponale vomit panni tiered agiduven. ennaellam Ippadi entha Adverse event um illama Alexandra vayaium under sea trip ah kattitena sathanai ungalaiye saarum.
  wowsome narrartion.
  kavithai ya iruku.
  Romba munnadi orthanga ungaluku sonna cmnt than athenna kathai ezhutha sonna kavithai ezhuthureenga.
  Ma nu koopdu vudtha heroine romance panna vidatha author paavam saha athan love ah solla ivalo yosikarar.

 11. enna solvathu endre thriyavillai…wonderful…..romba romba pidithu irukku…naanum athe pola kadalukkul pona mathiri oru feel….

 12. Sweety superb ,wonderful epi.. yepd ungaluku evalo imagination thonuthu..really unga story flow la nane antha kadalukula irukara matiri oru feel. Kadalukula oru china malai athula oru aruvi wow sema..sri yepo saha voda love ah feel panvuva mam.. eagerly waiting for next epi.. no words to explain my feeling about story… simply superb..

 13. Wow fantastic Anna Ma’am 🙂 No comments. Looking forward for next update. Ungaloda andha cute dialogues-k oru special hatsoff fabulous. Keep rocking 🙂 Thanks for sweet cute update.

Leave a Reply