காதல் வெளியிடை 12

ஷ்ருஷ்டிக்கு சஹா சொன்ன விதத்தில் முதலில் தோன்றிய நினைவு ‘உடனே இங்க இருந்து போய்டனும்’ என்பதுதான்….. அவன் பார்வையோ வார்த்தையோ அதன் பின் ஒழிந்து கிடந்தோ எதோ ஒன்றோ அவள் அறிவுக்கு புரியவில்லைதான்…… ஆனால் உயிருக்கு புரிந்து வைக்கிறது….அதை தூக்கி சுமக்க இவளால் இயலாது….

“ஆமா ஓலக் கொழுக்கட்டைனா என்னதுன்னு முதல்ல கண்டு பிடிங்க…அப்றம் இத சொல்லுங்க பார்ப்போம்…. இப்ப நான் போறேன்….” சிறு குரலில் என்றாலும் ஒரு வித வெட்டுப் பேச்சோடே பிடிவாதமாய் போய் கதவை திறக்கப் போனாள் ஷ்ருஷ்டி….

இதற்குள் இவள் அருகில் வந்திருந்த ஆகாஷோ….” ஓ கிளம்புறீங்களா….?” என்றான்…. அவன் சற்று  கவலையாய் கேட்ட விதம்  அவனுக்கு ஏதோ உதவி தேவைப்படுகிறது என ஷ்ருஷ்டிக்கு புரிய……. குழந்தைக்கா நிம்மிக்கா யாருக்கு என்ன ப்ரச்சனை என துணுக்குறுகிறது இவள் மனம்.

ஆகாஷை கேள்வியாய் பார்த்தாள் அவள்…” இல்ல குழந்தைய உங்கட்ட கொஞ்ச நேரம் கொடுக்கலாம்னு நினச்…” சொல்ல துவங்கிவிட்டவன் பின் அவன் கேட்டது தப்போ என தோன்றி நிறுத்திக் கொள்ளவும் செய்ய…..

நிம்மி சற்று முன் வரை எதோ ஒரு வகையில் நார்மலாக இல்லை என்பது இப்போதுதான் இவளுக்கு கருத்தில் வந்தது….ஒரு வேளை ஏதோ சண்டையில் ஆகாஷ்ட்ட குழந்தைய பார்க்க மாட்டேன்னு அவ சொல்லி இருந்தா….? அது அந்த நேர கோபமா  கூட  இருக்கலாம்….. அவனப் பார்த்தாதான் நிம்மி தெரிச்சு ஓடுறாளே….இருந்தாலும் இந்நேர குழந்தையின் நிலை என்ன? இப்படி ஒரு எண்ணம் வரவும் உடனடியாக கை நீட்டி ஆகாஷிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் ஷ்ருஷ்டி….

ஆனால் அடுத்துதான் நியாபகம் வருகிறது நீச்சல் சொல்லித் தரவென கிளம்பி வந்திருந்த நிம்மி புடவையில் இருந்தாள் என….’குழந்தைய பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டு எதுக்கு புடவை கட்டப் போறா அவ…?’ என்றும் தோணுகிறது ஷ்ருஷ்டிக்கு

ஆனாலும் கையில் வாங்கியபின்  குழந்தைய பார்க்க மாட்டேன்னு எப்படி சொல்லவாம்? அதையும்விட முக்கியமா குழந்தை இதோ இவட்ட வரவும்….

நீச்சல் பழகியதால் ஈரமாகி இருந்த இவள் முன் நெற்றி முடி கற்றை ஒன்றை தன் மெத்தென்ற பஞ்சுக் கையில் பிடித்துப் பார்த்து..…இழுக்க முயற்சி செய்து….அதுவும் வேலைக்காகல போல…. முடிக் கற்றை இணைந்திருந்த முன் தலைப் பகுதியில்…. ஆ…….என   ஈர வாய் வைத்து…..அது கடிச்சு எடுக்கும் முயற்சியா…இல்ல சந்தோஷ முத்தமா…இல்லை டேஸ்ட் ஆராய்ச்சியா…? தன் அல்வா துண்டு உதடுகளால் இவள் தலைக்கும் நெற்றிக்குமான சந்திப்பில்  கோலம் வரைந்து கொண்டிருந்தான்….

அவனை வேண்டாம் என எப்படி தருவாள் இவள்…? சஹா முதல் சர்வமும் மறக்க “குட்டியார் இதெல்லாம் யாரும் இப்டி  டேஸ்ட் பார்க்க மாட்டாங்க” என கொஞ்சியபடி  குழந்தையோடு அறைக்கு உள்ளே சென்றாள் ஷ்ருஷ்டி…

போய் சோஃபாவில் உட்கார்ந்து இவள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட துவங்க…..

சற்று நேரம் கழித்து இவளைத் தாண்டி பேசிக் கொண்டு போன சகாயன் சத்தம் காதில் விழுகிறது இவளுக்கு….

“அதில்ல எரும….ஆகாஷ்க்கும் அது  தெரியல…..  அதான் கேட்க சொல்றேன்…..மத்தபடி அவன்ட்ட இன்க்ரிடியன்ட்ஸ் எல்லாம் இருக்கும்…” மொபைல்ல தன் எரும ஃப்ரெண்ட்ட கொழுக்கட்டை ரெசிப்பி விசாரிக்கிறான் என புரிகின்றது ஷ்ருஷ்டிக்கு…

இவளுக்கு சின்னதாய் சிரிப்பு வர….அடி வயிற்றில் ஆனந்தமும் அமிலமும்…

‘கேளு கேளு…. அவன் பன ஓலை வேணும்னு சொல்வான்…..அப்போ பார்க்கனும் உன் முகத்தை….’ மனதுக்குள் சஹாவை கிண்டல்  செய்தபடி இவள்.

ங்கு அந்நேரம் பவன் நித்துவோடு காரில் சென்று கொண்டிருந்தான். மொபைலில் அழைப்பு வரவும் அது சஹாவின்  கால் எனப் புரிய

அந்த ஆளரவமற்ற சாலையின் ஓரத்தில் காரை நிறுத்துவிட்டு தான் மட்டுமாய் இறங்கி சஹாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

நித்துவோ உள்ளே இருந்தபடி சாலையின் இரு பக்கங்களிலும் அங்கும் இங்குமாய் ஓரோர் இடத்தில் சோளம் விளைந்திருப்பதையும் ஏனைய இடங்கள் பயிர் அற்ற மொட்டை நிலமாக கிடப்பதையும்  பார்த்துக் கொண்டிருந்தாள்…

இப்போது இவள் பக்க கதவை தட்டிய பவன்…” ஓலக் கொழுக்கட்டன்னா என்ன? அத எப்டி செய்யனும்?” என படு முக்கியம் போல் விசாரித்தான்.

‘க்ளுக்’ என சிரித்து வைத்தாள் நித்து…. பின்ன இப்டி ஒரு இடத்தில் காரை நிறுத்தி பேசுற முக்கிய பேச்சாமா இது…?

ஆனாலும் இந்த பவன் இவனோட ஃப்ரெண்ட்ஸ்லாம் அலாதிதான்…

அவள் சிரிப்பைக் காணவும் பவனுக்கும் சிரிப்பு வந்தது….. “அங்க என் தங்கச்சி ஓலக் கொழுக்கட்ட வந்தாதான் சாப்டுவேன்னு சொல்லிட்டு இருக்காளாம்….ஆஃப்ரிக்கால இருந்து அலறி அடிச்சு ஒருத்தன் கால் பண்ணிட்டு இருக்கான்…” என சிறு சிரிப்போடே நிலையை சொன்னான்..

அவன் சொன்ன விதத்தில் சூழ்நிலையை பவனும் ரசிப்பது புரிய நித்துக்கு இன்னுமாய் ஒரு ஈர்ப்பு பவன் மீது……..இந்நேரம் வரை பார்த்திருந்த பவன் அவளைப் பொறுத்தமட்டில் கொஞ்சம் சீரியஸ் டைப்…..நியாயமான கோபம்…..நியாயமான அக்கறை….அழுத்தமான பிடிவாதம் என அவனுடைய குணங்கள் அவளுக்கு அப்படித்தான் தோன்றின….ஆக அவனது இந்த முகம் இன்னும் வர்ணம் சேர்த்தது அவன் பற்றிய இவள் இதய உருவத்தில்….

கூடவே இவன் ஃப்ரெண்டோட வைஃப்க்காக இதை கேட்கிறான் எனவும் அவள் புரிந்து கொண்டாள்….. சஹாவ இன்னும் பவன் இவட்ட அறிமுக படுத்தி இருக்கலையே….

அப்படி அறிமுகப் படுத்தாதற்கு  காரணம் இரண்டு நண்பர்களிடமும் பெரிதாய் எதுவும் இல்லை…. சஹாவை இப்போ நித்துவுக்கு அறிமுகப் படுத்தினால் பேச்சின் நேரம் அதிகமாகும் என்ற புரிதல் இரு நண்பர்களுக்கும் இருந்தது….

ஆளில்லாத ஒரு ரோட்டில் முன்ன பின்ன தெரியாத ஒரு இடத்தில் பவனும் நித்துவுமாக நின்று கொண்டு இருக்கிறார்கள் என தெரியவுமே சஹா “வீட்டுக்கு போன பிறகு அவட்ட பேசிக்கிறேன் எரும…இப்ப ஜஸ்ட் கேட்டு மட்டும் சொல்லு….சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு” என்றுவிட்டான்….

பவனுக்கு அதைப் போல….சஹா அன் கோ இப்ப வரை சாப்டல…..ஏற்கனவே டைம் ஆகிட்டு….இப்ப ரொம்ப நேரம் பேசிட்டு அப்றம் எப்ப சமச்சு சாப்ட என்றவகை நினைவு….. ஆக இரண்டு நண்பர்களும் இந்த அறிமுக படலத்தை ஈசியாய் தள்ளிப் போட்டிருந்தார்கள்…

“ அது செய்றது ஈசிதான்…… பச்சரிசிய  ஒரு ஹால்ஃபனவர் ஊற வச்சு….அடுத்து மிக்சில திரிச்சி……” இப்போது நித்து பவனிடம் சொல்லிக் கொண்டு போக…

அதை பவன் மொபைல்  வழியாக கேட்டுக் கொண்டிருந்த சஹாவோ… அவசரமாய் ஒரு பேப்பர் தேட…..பார்த்திருந்த பூரி எழும்பிப் போய் அவள் பவுச்சிலிருந்து ஒரு பேனாவை எடுத்து நீட்டினாள்…

புன்னகை கண்களால் அவளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே சஹா இப்போது ரெசிப்பியை சின்ன சத்தத்தில் சொல்லியபடி எழுதினான்….

“திரிச்…ச மாவ சலிப்பா..ல சலிச்சு…..அதில சக்கரை பா..கோ கறுப்பட்டிப் பா…கோ காய்ச்சி ஊத்தி…….ஏலக்கா தட்டிப் போட்டு…. கொஞ்சம் எள்ளு போட்டு பிசஞ்சு……துண்டு துண்டா நறுக்கின  பனை ஓலைல வச்சு பார்சல் போல கட்டி…..இட்லி குக்கர்ல வச்சு அவித்து எடுத்தா போதும்….”

பூரி எழும்பி ஓடி செய்த சேவகத்தில்  ஷ்ருஷ்டி உர்ர்ர்ர்ர் என்றாலும்…..  மொபைலை காதோடு வத்து தோளால் அழுத்தியபடி ஒரு கையை டேபிளில் ஊன்றியும்….அடுத்த கையால் எழுதிக் கொண்டும் நின்ற  சஹாவை படு சுவரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..…  அதுவும் பனை ஓலைனதும் அவன் முகம் எப்படி போகும் என பார்க்க படு ஆவல் அவளுக்கு..…

ஆனால்  அவனோ எதற்கும் பல்ப் வாங்காமல் இவளுக்கே பல்ப் ஆனான்.

அங்கோ அதே நேரம் திடீரென நித்துவுக்கு அப்போதுதான் உறைக்கிறது….. பொதுவா ப்ரெக்னென்டா இருக்கவங்கதான திடீர் திடீர்னு இப்டி சாப்ட எதாவது கேட்பாங்க  என….அவ்வளவுதான் அவசரமாய் பவன் கையிலிருந்த மொபைலை இழுத்து…

“அண்ணாண்ணா….” என சொல்ல வந்ததை ஆரம்பித்தாள்…. இங்கு சஹாவோ “தங்கச்சிக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுடா எரும…” என பேச்சை முடிக்க துவங்கி இருந்தான்..… அது அப்படியே போய் நித்துவின் காதில் விழுந்து வைத்தது….

குரலெல்லாம் அடையாளம் தெரியவில்லை…..முழு பொருளும் புரியவுமில்லை….. சட்டென அவளுக்குள் சாரல் மழை…..

வெகு இயல்பாய் வந்தது அவளது அண்ணா இப்போது….. “அண்ணா பொதுவா ப்ரெக்னென்டா இருக்கவங்களுக்கு எள்ளு போட்டு எதுவும் கொடுக்கமாட்டோம்.…சோ  அண்ணிக்கு எள் இல்லாம செய்து கொடுங்க “ அவள் சொல்ல….

கேட்டிருந்த சஹாவுக்கு எப்படி இருக்குமாம்…? வாய்விட்டு சிரித்தபடி  ஷ்ருஷ்டியை திரும்பிப் பார்த்தவன் மனதிற்குள் தாய்மை கோலத்தில் அவள்…..

அவன் தேகத்தில் இள மின்னல் சில பூசி….. கண்களில் ஆசை கர்வம் அளவாய் கூட்டி…..  மனதிற்குள் மாருதங்கள் பல காட்டி…. அதன் ஓரத்தில் தலைமைக்கான தியாக உணர்வொன்றை சிந்தாமல் ஊற்றி….. தான் எனும் எல்லையெக்கும் தெரித்தோடிய சந்தோஷ செயல்  ஹார்மோன்கள் வகை வைபவம் என்றால்

இப்போது வரை அவனது குடும்பம் என்பது அவனும் அவன் தாத்தாவும் மட்டும் என்ற நிலையில் இருந்தவன் இதயத்திற்குள் வந்து கொட்டும் பால்நதிக்கு என்ன பெயர்….? பால் பருகி முடியவும் பச்சிளம் குழந்தைக்கு உண்டாகும் திருப்தி வகையான ஒரு உணர்வுக்குள் அவன்…

ஷ்ருஷ்டியும் அவனையேதானே பார்த்திருந்தாள்…. இந்த அவன் பார்வைக்கு வார்த்தைகள் எதுவும் தேவைப்படவில்லை அவளுக்கு….. அதில் கிளைத்திட்ட சங்கிலியாய் வந்து பிணைக்கிறது இணை இவன் என்ற உணர்வொன்று….. இதம் சேர்க்க வேண்டும் இவனுக்கு என எங்கோ கேட்கிறது ஒரு கூக்குரல்….

மௌனத்தின் பிடியில் மொழியாற்றும் நிலையில் இருவரும் சில நொடி….

அடுத்து சஹா தன் சூழல் உணர்ந்து பேசத் துவங்கிய போது…… அதான் மொபைல்ல பேசிட்டி இருந்தானே……அதை அவன் தொடர முனைந்த போது இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது…. சிக்னல் இஷ்யூ…

ஆக கான்வர்ஷேஷன் அதோடு முடிந்தது…

இதில் அடுத்த 40 வது நிமிடம் ஷ்ருஷ்டி முன் அவள் கேட்ட ஓலைக் கொழுக்கட்டை வேறு உட்கார்ந்திருந்தது….

ம் “இரு ஓலையோட வர்றேன்…” என  அறையைவிட்டு கிளம்பிப் போன சஹா அடுத்த அரை மணி நேரத்துக்குள் ஒரு சிறு பனைமர கன்றோடு வந்து நின்றான்….சின்னதாய் தொட்டியில் இருந்தது அது….

ஆஃப்ரிக ப்ரதேசமான நுபிய பாலைவனத்தை சார்ந்த அர்கன் வகை அபூர்வ பனைமரம் என அதைப் பார்க்கவும் இவளுக்கு புரிந்தது….  பாட்னி பார்ட்டியாச்சே அவ…..

ஆனாலும் கப்பல்ல இவனுக்கு எப்படி கிடச்சுதாம்?

பல்ப் வாங்குவான்னு நினச்சா…..இப்டி பல்ப் கொடுத்துட்டானே என்றெல்லாம் நினைக்க கூட தெரியவில்லை ஷ்ருஷ்டிக்கு…..

பி எச் டி வரை படிக்கிறவங்களுக்கு அவங்க சப்ஜக்ட் மேல இருக்ற பைத்தியகார அபிமானம் அப்படித்தான் செய்யும்…. “இங்க எப்டி கிடச்சுது இது?” துள்ளாத குறையாக அத்தனை ஆர்வத்துடன் இவள் ஆர்ப்பரித்தாள்.…….

அதற்கு சஹாவோ “மரம் உனக்கு..…அதுல இருந்து ரெண்டு கீத்து ஓலை மட்டும் கொழுக்கட்டைக்கு…..மத்தபடி சஸ்பென்ஸ்” என்றபடி  தொட்டியோடு  மரக்கன்றை அவளுக்கு பரிசாக கொடுத்து பேச்சை முடித்துவிட்டான்….

ஏதோ குட்டிக் குழந்தையை வாங்குவது போல ஆவலே உருவாக அந்த மரக்கன்றை வங்கிக் கொண்டாள் அவளும்….. அது பரிசு என்றோ தருவது ஒரு ஆண் என்றோ எதுவும் ஷ்ருஷ்டிக்கு தோன்றவே இல்லை….

அத்தனை நிறைவான உணர்வு  சஹாவுக்கும்.….. அவளுக்கு இத்தனையாய் இந்த மரம் பிடிக்கும் என்பது அவன் கொஞ்சம் எதிர்பார்க்காத விஷயம்….ஆக அவளே ஆசையாய் ஏற்றுக் கொள்ளும் பரிசை கொடுத்துவிட்ட  சந்தோஷம் அவனிடம்…..  அதைத்தான் உணர்ந்தானே தவிர இதே இந்த மரம் அவன் காதலுக்கும்…..ஏன் அவன் உயிருக்குமே  கொண்டு வர காத்திருக்கும்  ஆபத்தை அவன்  அறிந்திருக்கவில்லை….

ங்கு நித்துவோ அழைப்பு துண்டிக்கப்படவும்தான் ஒருவிதமாய் பவன் சிரித்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

“அவனுக்கு இன்னும் மேரேஜே ஆகல…..அது அவன் கல்யாணம் செய்யப் போற பொண்ணு…..” தன் சிரிப்புக்கு காரணமும் சொன்னான்…

“ஓ…” கொஞ்சம் அசடுவழிதலாய் அதை ஏற்ற நித்து

“நீங்க தங்கச்சின்னதும் அப்டி நினச்சுட்டேன்….” என காரணம் கொடுத்தாள்.

“அவதான் அவனுக்குன்னாலே  எனக்கு தங்கச்சிதான்…..” இவன் இப்படி பதில்கொடுக்க

நித்துவுக்குள் மெல்ல உருவாகின்றது அந்த கேள்வி….. ‘இந்த பவனோட ஃப்ரெண்ட் என்ன தங்கச்சின்னு தானே சொன்னான். அதுக்கும் இப்படித்தான் அர்த்தமோ?’

பயம் வந்தது அவளுக்கு…. கூடவே வலி வேதனையும்…. ஆனாலும் அதைத்தாண்டிய அடி மனதில் அழகாய் சிறகு விரித்தது எதோ ஒன்று….

ரு வழியாய் டைனிங் டேபிளில் அமர்ந்தாகிவிட்டது ஷ்ருஷ்டி……இதுக்கு மேலயும் எதாவது காரணம் சொல்லி சாப்ட மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க அவளுக்கே விருப்பம் இல்லைதான்….

கொழுக்கட்டைக்கான ரெசிப்பியை பக்கத்தில் வைத்துக் கொண்டு….. “ஒழுங்கா வந்து நாங்களும் தமிழ்நாட்டுகரங்கதான்னு ப்ரூவ் பண்ணிடு…” என கொழுக்கட்டை மாவிடம் பேசிக் கொண்டும்…. “ஏய் கொழுக்கட்ட பார்ட்டி…. பாகுக்கு இவ்ளவு தண்ணி ஊத்தினா போதுமா…..? .” என இவளிடமே கூட கேட்டுக் கொண்டும்……

“ஜி….கொஞ்சம் தயிர் சேர்த்துப்பமா மாவுல…?.” என தன் பங்குக்கு ஐடியா கொடுத்து கலவரமூட்டிய  பூரியை மேய்த்துக் கொண்டுமாய் சஹா இந்த கொழுக்கட்டை தாஜ்மகாலை கட்டும் போது சாதாரணமாய்  என்று கூட இல்லாமல் சகஜமாய் சிரித்து முறைத்தபடி  பார்த்துக் கொண்டிருந்துவிட்டு

கடைசியில் ஓலையை  வெட்டும் போது….”ப்ச் குடுங்க இப்டி…” என அவனிடமிருந்து வாங்கி தேவையான நீளத்தில் வெட்டி அதில் மாவை வைத்து முறையாய் பொதிந்து கொடுத்து என எல்லாம் செய்தும் கொடுத்துவிட்டு….

இப்ப எப்டி சாப்ட மாட்டேன்னு சொல்றதாம்…?

எதிர் சேரிலிருந்த பூரியைப் பார்த்தாள்….. அது கர்மசிரத்தையாய் ஒரு கொழுக்கட்டையை எடுத்து தன் முன் வைத்து அதை முறைத்துக் கொண்டிருந்தது….”இதுல நான் சாட் மசாலா போட்டுகட்டுமா?’ இப்படி வேறு கேட்டு வைத்தது….

சஹா இவளுக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்தான்…..நிமிர்ந்து அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் பார்வை முழுவதும் இவள் மீதுதான் என புரிந்தது இவளுக்கு….

மெல்ல ஒரு வாய் எடுத்து சாப்பிடத் துவங்கினாள் ஷ்ருஷ்டி…. இப்போது இவர்களைப் பார்த்த பூரியோ திடுமென “ ஜி பாபிகே சாத் “ என எதையோ சொல்ல துவங்கியது…..

அவசர அவசரமாய் அதை சஹா சகையால் நிறுத்தச் சொல்வதை பாராமலே உணர்ந்தாள் ஷ்ருஷ்டி….அவளுக்கு சர்வ நிச்சயமாய் புரிந்தது பூரி பேசியது இவளைப் பற்றிதான்…..அது இவளுக்கு தெரிந்துவிடக் கூடாதென நினைக்கிறான் சஹா…

“என்ன சொன்ன பூரி…?” காரமாகவே வெளி வந்தது இவளது கேள்வி… ‘பாவியா?…….என்ன பாவின்னு சொல்றாளா?’ என்ற புரிதலோடு இவள் நிமிர்ந்து பார்க்க….. (ஹ ஹா நம்ம ஷ்ருஷ்டி ஹிந்தி நாலெட்ஜ் அப்டித்தான்….)

மிரண்டு போய் இவளையும் சஹாவையும் மாறி மாறி பார்த்த பூரி இப்போது “அது…..நா….நாளைக்கு உங்க கூட வரட்டுமான்னு “ என பயத்தில் எதையோ உளறியது….

அவ்வளவுதான் தன் அருகில் இருந்தவனை திரும்பிப் பார்த்து கடுகடுத்தாள் ஷ்ருஷ்டி….. “நாளைக்கு நீங்க எங்க போறீங்க…?”

பூரியைப் போல சஹாவோ மிரண்டெல்லாம் இல்லை…..மாறாக விஷேஷித்த விஷம பாவம் அவனிடம்….” அலெக்சான்ட்ரியா சிட்டிய அன்டர் வாட்டர்ல பார்க்கப்போறேன்…. ஏன்  கேட்கிற?” என்றான்.

“அ…அதான்….நா….நானும் அங்க வரேன் ஜி உங்க கூட…” பூரி இன்னும் தகிட தகதிம மோடில் ஆரம்பித்து பின் சரியான பதிலை சொல்லிவிட்டவள் போல் இப்போது ஈஈஈஈ….

இதை ஒரு பார்வை பார்த்த ஷ்ருஷ்டி “நானும் வரேன்….”என சட்டென அறிவித்தாள்.….

“ஹேய்…” என்ற சஹாவின் குரலில் ஆனந்த அதிர்ச்சிதான் இருந்தது…. “கண்டிப்பா போகலாம்” என்றான் அவன்.

டுத்து ஆகாஷ் வந்து குழந்தையை வாங்கிக் கொள்ளவும் தன் அறைக்கு வந்த ஷ்ருஷ்டிக்கு மெல்லமாய் நியாபகம் வருகிறது……இவள் மோனியைப் பத்தி இன்னுமே சஹாவிடம் பேசி இருக்கவில்லை என….. அதோடு நிம்மியைப் பத்தி இவள் கேட்க நினைத்த விஷயத்தையும் கேட்டிருக்கவில்லை……

சஹா அறையில் இவள் இருக்கும் போது “ஓலை எடுத்துட்டு வரேன்” என சஹா கிளம்பிய நேரம்…. ஆகாஷும் இவளிடம் விடை பெற்றான்….அதுவும் தன் கையோடு நிம்மியை வேறு அவன் கூட்டிப் போனான்….. “ரெஸ்ட்டரண்ட் வேலை எப்டி போகுதுன்னு பார்க்கனும்….கொஞ்ச நேரத்தில் வந்துடுவோம்” என காரணமும் சொன்னான்…

‘குழந்தைய பார்த்துக்க ஆள் இல்லைனு மேரேஜ் செய்துகிட்டு….அப்றம் அந்த வைஃபையும் வேலைக்கு வான்னு கூட்டிட்டு போய்ட்டா…குழந்தை நிலை என்ன…? ‘ என ஆகாஷ் மேல் ஒரு கோபம் வந்தாலும்…. கூடவே…’மே பி ரெண்டு பேருமா பேசி ப்ரச்சனைய சால்வ் செய்றதுக்காக கூட இப்டி போறாங்களா இருக்கும்’ என ஒருவாறு தன் மனதை சமனப் படுத்திக் கொண்டாள் ஷ்ருஷ்டி…

ஆனாலும் நிம்மி விரும்பிப் போவது போல் துளியும் இவளுக்கு தோன்றாததால் இவள் மனதிற்கு அது உறுத்தலாகவே  இருந்தது…

அடுத்து சஹா திரும்பி வரவும் அதை அவனிடம் எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என இவளுக்குள் பலத்த உந்தல்…..என்னமோ ரொம்பவும் ஃப்ரெண்டுக்கு சப்போர்ட் செய்தானே என எரிச்சல்….

இது நியாபகம் வரும் போதுதான் மோனி பற்றி இந்த சஹாவை சக்கையாய் பிழிய நினைத்திருந்த இவளது ப்ளானே இவளுக்கு நியாபகம் வருகிறது…. ‘இந்த பூரி கொடுத்த டென்ஷன்ல அதை கூட மறந்திருக்கேன் மக்கு….’என இவள் தன்னை தானே நொந்து கொண்ட நேரத்தில் கூடவே குட்டியாய் எட்டிப் பார்க்கிறது ஒரு கேள்வி…. ‘பூரியாலதான் மறந்தியா?’

விலுக்கென எழுந்து உட்கார்ந்தாள் இவள்….. சஹாவின் அருகாமையில் இவள் ப்ரச்சனைகளை மறந்துவிடுகிறாளா?…..அதெப்டி??? லவ் பண்றோம்னு ந்யூஸ் பரவுது வெளிய…. அதுக்கு காரணமானவன்ட்ட  அதை சரி செய்ய சொல்ல  கூட மறக்குமா?….ஏன்?.’

பய அமிலம் பாவை இதயம் வசம்…

சற்று நேரம் அதில் உழன்றவள்…..பின் ஒரு வழியாக……  பூரி எப்பவும் சூரியன் சுத்தும் பூமி போல் இவர்களை சுற்றிக் கொண்டு இருந்ததால் இவளால் எதையும் கேட்க முடியவில்லை என்ற  காரணம் கண்டு பிடித்து…..கடித்துக் குதறிக் கொண்டிருந்த மனசாட்சியை அப்போதைக்கு கட்டிப் போட்டாள்…..தன்னை ஒருவாறு சமாதானப் படுத்தியும் கொண்டாள்….

இப்போது மெல்ல இவள் கண்கள்  சஹா கொடுத்த குட்டி பனை மரத்தின் மீது சென்று அமர்கிறது…. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாளாம் இவள் மனசாட்சியின் வாயடைக்க….?

தொடரும்

 

‘அண்டர் வாட்டர்ல அலெக்சாண்ட்ரியா சிட்டியை அடுத்த எப்பில நாளைக்கு பார்ப்போம் ஃப்ரெண்ட்ஸ்….. கூடவே பவன் நித்துவோட லவ் ப்ரொசீடிங்கையும்…. Until then Bye

8 comments

 1. hai anna!
  i hv read all ur stories.
  They are superb.
  I always admire your story lines which are very unique from ordinary stories.
  And the charecterisation of male and female leads of ur stories are simply superb.
  When i read ur stories i felt more similarities between ur heros and heroins but at the same time u made me to feel that they are unique. It is the magic of ur writing.
  I think shrushti charecterisation is quite different from your previous heroin charecters.
  And the plot of the story also very interesting.
  Poori charecter is very funny.
  And finally your way of writing is awsome.
  Eagerly waiting for the next epi.

 2. Hey superb mam. Somehow Saha has managed and made olaikolukattai for Sri. Wow he is so adorable mam. But still Sri’s imagination is travelling unexpected ways. And what Saha and Poori has planned to do next day? And Nithu is so sweet . Waiting for your next update eagerly mam.

 3. Sis asathureenga ponga 👍👍
  தேகத்தில் இளமின்னல் கண்களில் ஆசை மனதிற்குள் மாருதம் – இந்த பத்தி மட்டும் திரும்ப திரும்ப படிக்கிறேன்😙😙 அழகு தமிழ் 😍

 4. Hi Akka kozhukkattai episode super taste Akka…neraiya type kozhukattai nan sapitiruken ..senchum irukken. But pana olai ippo than ka kelvi paduren. ..as usual u r rocking…..waiting to see under water Alexandria city….

 5. அவன் தேகத்தில் இள மின்னல் சில பூசி….. கண்களில் ஆசை கர்வம் அளவாய் கூட்டி….. மனதிற்குள் மாருதங்கள் பல காட்டி…. அதன் ஓரத்தில் தலைமைக்கான தியாக உணர்வொன்றை சிந்தாமல் ஊற்றி….. தான் எனும் எல்லையெக்கும் தெரித்தோடிய சந்தோஷ செயல் ஹார்மோன்கள் வகை வைபவம் என்றால்
  – Sweetttttttyyyyyyyyyyyyyyyyy… enna arumaiyana tamil… very happppppppppyyyyyyyyyyy…. indha story kozhukattai famous ayiduchu… interesting going sis..

Leave a Reply