காதல் வெளியிடை 11

பார்த்த காட்சியை உள்வாங்க ஷ்ருஷ்டிக்கு சிறுது நேரம் தேவைப் பட்டது…… ‘இந்த பூரிப் பொண்ணு பூர்ணிமா சஹாவ லவ் பண்ணுதா?…ஐயோ’ என்றிருக்கிறது இவளுக்கு….

இந்த கப்பல் பயணத்தில் இவளுக்கு அறிமுகமான இன்னொரு நட்பு இந்த பூர்ணிமா…. 18 வயதுக்கு உரிய துருதுப்பு பூரிப்பு  கூடவே ஒரு தாமரை நிற ஓவல் முகம்  அதில் சற்று அளவுக்கு மீறியே ஆக்ரமிப்பு செய்திருந்த பெரிய கண்கள் இதெல்லாம்தான் யாருக்கும் பூர்ணிமாவைப் பார்த்தவுடன் கருத்தில் படும்…..ஆனால் இவளுக்கோ அவளிடம் இன்னும் விடைபெறாமல் விழுந்து கிடந்த குழந்தைத்தனம்தான் வெகு இஷ்டம்…

இவளை பார்த்த மாத்திரத்தில் “அக்கா நீங்க தமிழா?” என கேட்டு ஒட்டிக் கொண்டவள்…..

“என் பேரு பூரிக்கா….. ஹையோ பூரிக்கா இல்ல…..பூர்ணிமான்னு பேர்…பூரின்னு கூப்டுவாங்க…. அதச் சொன்னேன்….நீங்களும் அப்டியே கூப்டுங்க….. ஓகேவாக்கா…. பூரின்னா எனக்கு செம்ம இஷ்டம்….  எங்க பூர்வீகம் பஞ்சாப்கா…..ஆனா நான் பிறந்து வளந்தது எல்லாம் சென்னைதான்…..அந்த வகையில் நான் அக்மார்க் தமிழ் பொண்ணு….. இந்த ஷிப்ல என் சொந்தகார பொண்னு ஒருத்திக்கு கல்யாணம்…அதுக்காக வந்துருக்கேன்… என்னடா காலேஜ் போகம இப்டி மாசக் கணக்கா கட் அடிச்சு கல்யாணத்துக்கு வந்துறுக்கேன்னு பார்க்கீங்களா….? எங்க வீடு அப்டித்தான்கா….டிகிரி முடிக்கவும் என்னை மூட்டைய கட்டிடுவாங்க…… ப்ச் ஆனா எனக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லகா…..இந்தா இப்டி க்ராண்ட்டா கல்யாணம் செய்து வச்சு கண்காணாத நாட்டுக்கு அனுப்பிடுவாங்க….  எனக்கு சென்னைதான் பிடிச்சிறுக்கு….பேசாம ஒரு தமிழ் பையன ரூட்டு விடலாமன்னு கூட யோசிச்சேன்… பட் பாவம் அவன் என் பூரியையும் சப்பாத்தியையுமா சாப்ட்டு செத்துறுவானேனுதான் ஐடியாவ ட்ராப் பண்ணிட்டேன்…. சொன்னா தப்பா எடுத்துக்காதீங்ககா….. எனக்கு இட்லிய விட பூரிதான் இஷ்டம்….அதுவும் டெய்லி காலைல சோலே பூரின்னு சொல்வீங்களே…அது இல்லனா எனக்கு தலை வெடிச்சுடும்….” இப்டித்தான் எடுத்த இரண்டாம் வாக்கியத்தில் பேசினாள் அவள்…

ஷ்ருஷ்டியின் எல்லாமும் அவளுக்கு ஆச்சர்யமே… “ஹையோ என்ன க்யூட்டா தாவணி கெட்றீங்க…..” “ஹையோ பி எச் டி யாக்கா செய்றீங்க…. ?” “ என்னது?? வாவ்….!!தனியா ப்ராஜக்ட்க்குன்னு இவ்ளவு தூரம் வந்துறுக்கீங்களா?”   “அப்போ நான் ஒரு சைன்டீஸ்ட்டயா பேசிட்டு இருக்கேன்….? வாவீ”  “நம்ம நாட்ல கூட லேடி சைன்டீஸ்ட்லாம் இருக்காங்கன்னு எனக்கு இப்போதான்கா தெரியுது…..”  நீங்கல்லாம் க்ரேட்கா…. எவ்ளவு படிச்சாலும் அலட்டலே இல்லாம….” “எவ்ளவ்வ்வ்வ்வ்வ் நீள முடிக்கா உங்களுக்கு…”  உங்க தமிழ் சூப்பரா இருக்குகா….” இப்டித்தான் இவளுடைய எல்லா பதிலுக்கும் அவளிடம் ரெஸ்பான்ஸ் இருக்கும்……

கப்பலில் தெரிந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒருவகையில்  ஷ்ருஷ்டியின் நிம்மதியை கெடுக்க….இன்று வரை அப்படி எந்த துன்பத்தையும் தராத ஒரே ஜீவன் இந்த பூர்ணிமாதான் என்பது ஷ்ருஷ்டியின் எண்ணம்….. இப்ப இவளுமா?

இவளுக்குப் போயும் போயும் ஏன் சஹாவ பிடிச்சுது? தகித்துக் கொண்டு வருகிறது ஷ்ருஷ்டிக்கு…. கூடவே இன்னொன்றும் நியாபகம் வர இப்போது திக் என்கிறது…..

“அக்காக்கா என் கசினோட கேங்க் ஒன்னுக்கா…..ஏதோ கவிதை பத்தி  அவங்களுக்குள்ள என்னமோ போட்டியாம்….  சூப்பரான  ரொமான்டிக் தமிழ் கவிதை ஒன்னு   என் கசின்க்கு அவசரமா வேணும்கா…. என்னைய நல்லா தமிழ் தெரிஞ்சவன்னு என்ட்ட வந்து கேட்காங்க…  எனக்கு பேசதாங்கா தெரியும்…..அப்டில்லாம் எழுத வராதுக்கா…. இத சொன்னா கெத்து போயிரும்….ப்ளீஸ் ப்ளீஸ்க்கா உங்களத்தான் நம்பி வந்துருக்கேன்…. நாலு வரினா கூட போதும்….நச்சுன்னு ஒன்னு எழுதி தருவீங்களாம்….”  என வந்து நின்றவள்…..

இவள் எழுதி….  அடுத்து  அந்த பக்கத்தை மட்டுமாய் கிழித்து…..பின் மனம் வராமல் அதை சுக்கலாக கிழித்து போடாமல் டேபிள் மீது வைத்திருந்த கவிதையை எடுத்துக் கொண்டு “இது போதும்கா….இது மட்டும் போதும்…. தமிழ்லயும் காதல் கவிதைலாம் நச்சுன்னு இருக்கும்னு நான் அவங்களுக்கு புரியவச்சுட்டு வாரேன்….” என அதையும் இதையும் சொல்லி எடுத்துக் கொண்டு போயிருந்தாள்.

பொதுவா இவ காலேஜ்லயும்  அவங்க லவ்க்கு சப்போர்ட் செய்ய இவட்ட கவிதை கேட்டவங்க உண்டு…. அப்போலாம் ஒத்தக்கால்ல நின்னு தர மாட்டேன்னு சாதிச்சுடுவா ஷ்ருஷ்டி…. இங்க பூரி கேட்கவும் முதல்ல அப்டித்தான் மறுக்க தோணிச்சு….ஆனா பூரிக்கு காதல் கீதல்னு எதுவும் கிடையாதுன்ற நம்பிக்கை இருந்ததால அவ சொன்னத நம்பி அவ எடுத்துட்டு ஓடுறப்ப ஒன்னும் சொல்லாம விட்டுட்டா இவ….

‘அந்த கவிதையையும் சஹாக்குத்தான் கொடுத்துருப்பாளோ’ என பய சங்கு ஊதுகிறது அடிவயிற்றில் ஏதோ ஒன்று இப்போது….

அன்று இரவு ஷ்ருஷ்டியின் தூக்கத்தைக் கெடுக்க இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது…… ‘முழு ட்ரிப்பும் இருக்கப் போறதில்லனு தான சொல்லி இருக்கா….. சீக்கிரம் போய்டுவாதானே இந்த பூரி….. அது வரைக்கும் அவ சஹா பக்கத்துல போக முடியாதது போல பார்த்துக்கனும்….’ என என்னலாமோ யோசித்து முடித்த பின்தான் தூங்கினாள்.

மறுநாள் காலை இவள் அறை காலிங் பெல் அழைக்கும் போது முதலில் அது  அழைப்பு மணி என்று கூட தெரியவில்லை ஷ்ருஷ்டிக்கு…. அலாரம் என நினைத்தவள்….. கண்ணை திறக்காமலே கை நீட்டி நாலைந்து முறை  மொபைலின் வாயை அடைக்க முயன்று பின் மெல்ல உணர்ந்து கதவை சென்று திறக்கப் போனாள்…..

இன்னுமே முக்கால் தூக்கத்தில் இருந்தவள்  கதவை திறக்கவும் கண்ணில் பட்ட உருவத்தில் அத்தனை தூக்கத்திலும் “ஐயோமா…”  என அலறிக் கொண்டு  பின்னால் வந்துவிட்டாள்….

அடிக்கும் மஞ்சளில் அப்படி ஒரு புடவை….அதுக்கு அதே நிற ஸ்லீவ்லெஸ் ப்ளவ்ஸ்….வெளியே தெரிந்த கைப் பகுதியில் தோள் முதல் விரல் நுனி வரை அத்தனை திக்காய் மஞ்சள்….. கழுத்து முகத்துக்கும் அதே கதி….தலையிலும் மஞ்சள் கலர்ல பேப்பர் பூவோ இல்ல துணியோ எதோ ஒன்னு….

அந்த உருவம் இப்போது ஈஈஈஈ… “பயந்துட்டீங்களா?” ஈஈஈஈஈஈஈ….. “நான் தான்” என்றபடி கொஞ்சமாய் உள்ளே வந்தது…. இருந்த தூக்கம் எல்லாம் ஷ்ருஷ்டிக்கு எட்டுதிக்குமா தெரிச்சு ஓடியிருக்க….

வேக வேகமாய் ஏறி இறங்கிய நெஞ்சில் கை வைத்துக் கொண்டு….” என்ன மோனி…? எப்டி….இ…ப்டி….இ..ந்த டைம்ல…”  என திக்கி…..ரொம்ப நாளா இவளப் பார்த்து ஓடி ஒழியுறவ அவளா வந்திருக்காளே என்ற உணர்வில் கஷ்டப்பட்டு சமாளித்து….  ஒருவழியாய் சிரித்து

“ எப்டி இருக்கீங்க மோனி..?” என கேட்டு முடித்தாள்.

அதற்குள் உள்ளே வந்திருந்த மோனியோ…. “பாருங்க ஷ்ருஷ்டி….Sp….ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க… உங்கள ஹர்ட் செய்யலாம்  நான் இந்த யெல்லோ கலர் போடல…. உங்கட்ட ஒன்னு முக்கியமானது பேசனும்….” என படு பவ்யமாய் கொஞ்சம் தைரியமாயும் ஆரம்பித்தாள்.

ஷ்ருஷ்டி இப்போது திரு திரு…..’

“பாருங்க உங்களுக்கு யெல்லோ கலர்னா கஷ்டம்…அத ஹேண்டில் செய்ய முடியாது…. அது உங்க வீக்னஸ்….. சாரி சாரி லிமிடேஷன்……அது போல மனுஷங்களான எங்களுக்கும் சில லிமிடேஷன்ஸ் இருக்கு….உங்கள போல அடுத்தவங்க இன்டென்ஷன் என்னனு எங்களால ஈசியா புரிஞ்சுக்க முடியாது……அப்றம்…அப்றம்….தூரத்துல இருந்துட்டே ப்ளட்டல்லாம் வலி இல்லாம குடிக்க முடியாது….. “ மோனி பதற்றத்தைக் காண்பிக்காமல் சொல்லிக் கொண்டு போக..

“ஹான்…அ…”  இப்போது ஷ்ருஷ்டி குறுக்கே போய் எதையோ சொல்ல போனாள்…

சடக்கென இதுக்கே ஜம்ப் செய்து பின்னால் போன மோனியோ…

“பாருங்க பாருங்க……நான் குறையால்லாம் உங்கள சொல்லல….உங்களுக்கு அது சாக்லேட் சாப்டுறது போல எதாவதா இருக்கும்…..சாக்லேட் சாப்டுறத யாராவது தப்புன்னு சொல்வங்களா…..? என்ன சாக்லேட்டுக்குத்தான் பாவம்…வலிக்கும்….இங்க எங்களுக்கு அப்டி கூட இல்லையே…இருந்தாலும் அனிமிக் ஆஅகி நாங்க …..”  என உளறாத குறையாக எதையோ கிளறி….. கடைசியில்….

“ப்ளீஸ் Sp என்ன மன்னிச்சு விட்டுடுங்களேன்….” என வேர்த்து விறுவிறுக்க அழ தொடங்கி இருந்தாள்…

“என் “ ஷ்ருஷ்டி இப்போதும் ஆரம்பிக்க…

“பயத்துல உளர்றேன்னு  இல்ல நிஜமாவே திருந்திட்டேன்……” கடகடவென பேசினாள்  மோனி….

“பவர் இல்லாம சாதாரண மனுஷியா உங்கள போல பவர் உள்ளவங்க முன்னால நிக்கப்பத்தான்…. அப்பாவி மக்கள  ப்ராங்க் செய்றது அவங்களுக்கு எப்டி இருக்கும்னு புரிஞ்சுது….” விளம்பரத்தில் வரும் mutual funds are subjected to market risks  வேகத்தில் ஒப்பித்தாள்…. பின்ன அதுக்குள்ள SP எதுவும் செய்துட்டுன்னா?

இதற்குள் ஷ்ருஷ்டிக்கு விஷயம் கொஞ்சம் புரிந்துவிட்டது…..இந்த சஹா எதோ சொல்லி வச்சுறுக்கான்…..

“நீங்க சஹா சார்லாம் ஏலியன்ற விஷயம் எனக்கு தெரிஞ்சுட்டேன்னு நினைக்காதீங்க…..கண்டிப்பா நான் அத யார்ட்டயும் சொல்ல மாட்டேன்….” மோனி தொடர புரையேறியது ஷ்ருஷ்டிக்கு…

என்னது ஏலியனா? கொஞ்சம் சிரிப்பும் கூட வருகிறது அவளுக்கு….. ‘இந்த சஹா க்ரியேட்டிவிட்டிக்கு அளவே கிடையாது போலயே’

ஷ்ருஷ்டியின் முகத்தில் வந்த சிரிப்பின் தடயத்தை சட்டென கேட்ச் பிடித்த மோனி இப்போது ரிலாக்‌ஸ் ஆகினாள்… அடுத்தும் அவள்தான் இடம் விடாமல் பேசினாள் என்றாலும்… கேள்வியின் வண்ணம்தான் மாறிப் போய் இருந்தது…..

“உங்க ப்ளானட்லயும் இப்டிதான் லவ் பண்ணுவீங்களா….? தப்ப நினைக்காதீங்க…..பயங்கர க்யூரியாசிட்டி…..  என் கூட ரெண்டு ஏலியன்ஸ்……. அது எனக்கு மட்டும்தான் தெரியும் அப்டின்னு நினைக்கிறப்பவே எப்டி இருக்கு தெரியுமா…..ரெண்டு பேரும் லவ் பண்றீங்க ஆனா உங்களுக்கு ஊடல்…..” துள்ளி குதிக்காத குறையாக மோனி பேசிக் கொண்டு போக…….இப்படியெல்லாம் அவள் பேசினாள் ஷ்ருஷ்டிக்கு எப்படி இருக்குமாம்?

ஆடிப் போனாள் அவள்..….சட்டென மிரண்டு “என்னது லவ்வா?” என வார்த்தையால் பாய்ந்தாள்…

“பார்க்கிற எனக்கே தெரியுது சஹா சார் உங்க மேல உயிரையே வச்சுறுக்கார்னு….. “ இந்த முறை பயமில்லாமல் வருகிறது மோனியின் பதில்……இதுக்கு ஷ்ருஷ்டி மெல்ட்தானே ஆகனும் என்ற நம்பிக்கை அவளுக்கு…..”உங்களுக்கும் அவர் மேல செம லவ்தான்…..ஆனா எதோ கோபம்னும் தெரியுது….”

இதற்கும் மேலும் மோனியை எப்படி பேச விடவாம்? “மோனி தயவு செய்து நிறுத்துறீங்களா?” இப்போது குரலை உயர்த்தி கத்தி இருந்தாள் ஷ்ருஷ்டி…. உள்ளுக்குள் திக் திக் என துடித்துக் கொண்டிருந்தது அவள் இதயம்….

“முதல்ல ஒன்ன புரிஞ்சுக்கோங்க…… நானோ சஹாவோ ஏலியனே கிடையாது…. நாங்க லவ்வர்சும்….” கடுகடுவென எரிந்து விழுந்தாள் அவள்….. ஆனால் இவ்வளவுதான் ஷ்ருஷ்டியைப் பேசவிட்டாள் மோனி….

“யூ கேன் ட்ரெஸ்ட் மீ ஷ்ருஷ்டி…..நான் கண்டிப்பா யார்ட்டயும் சொல்ல மாட்டேன்….. சஹா சார் சொன்னாங்க…..இந்த ரகசியம் வெளிய தெரிய தெரிய உங்க பவர் குறையும்னு….. எனக்கு உங்க கன்சர்ன் புரியுது….. ஆனா எனக்குதான் ஏற்கனவே தெரிஞ்சுட்டுதானே…..சோ உங்கள கண்டிப்பா இதுக்கு மேல அஃபெக்ட் செய்யாது…” சொல்லியபடி வாசலை நோக்கி பின் புறமாக நகர தொடங்கி இருந்தாள் மோனி…

பின்ன Sp கத்துதே….

“நான் செய்த  ப்ராங்க் எல்லாம் தப்புதான்….அதுக்கு ப்ராயச்சித்தமா இந்த ஷிப்ல இருக்க வரைக்கும் இப்டியே எல்லோ ட்ரெஸ்ல இருக்க போறேன்….. சோ இனிமே நாம ஃப்ரெண்ட்ஸ்…..நான் உங்க வெல் விஷர்…. ஃபேன்…அட்மயரர் எல்லாம்…..  நீங்க என்ன மன்னிச்சுட்டீங்க…” ஓடி இருந்தாள் அவள்…

தலையை பிடித்துக் கொண்டு நின்றாள் ஷ்ருஷ்டி…. .தாறுமாறா சுத்துதே அது…… ‘லவ்வர்சா? இப்டியா வெளிய ந்யூஸ் பரவுது…..? தெய்வமே இது என்னல்லாம் ப்ரச்சனைய கொண்டு வருமோ…..? என்ன சொல்லி இந்த  மோனிக்கு புரிய வைக்க?

நம்மளா என்ன பேசினாலும் அவ மண்டையில் ஏறாது போல…… இந்த சஹாவ போடுற போட்டுல……இந்த மோனிக்கு புரியுற மாதிரி அவன் உண்மைய சொல்லனும்….’ கொதிக்க கொதிக்க இப்படி ஒரு முடிவு எடுத்துக் கொண்டவள்…..மீண்டுமாய் போய் படுக்கையில் விழுந்தாள்…

இப்போது இவள் மனதில் இவளிடம் எந்த அனுமதியும் பெறாமல் “சஹா சார் உங்க மேல உயிரையே வச்சுறுக்கார்…“ என்ற பதங்கள் மென்மையாய்….மிக மென்மையாய் நழுவியது….

 

டுத்து எதோ  உணர்ந்து இவள் கண் விழிக்கும் போது இவள் பார்வையில் படும் இடத்தில் அமர்ந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள்  பூர்ணிமா….

“விழிச்சுட்டீங்களாக்கா….. கதவ திறந்து வச்சுட்டே தூங்கிட்டீங்கக்கா…… அதான் சரின்னு ரூம்ல வந்து உட்காந்திருந்தேன்…. நேத்து எழுதுனீங்களாக்கா…..கவிதை க்யூட்டா இருக்கு …ஆனா மீனிங்தான் புரியல..” மேஜை மீது இவள் கிறுக்கிப் போட்ட பேப்பரை எடுத்து கையில் வைத்துக் கொண்டு இப்படியாய் பூபாளம் வாசித்தாள் பூரி…

அடித்து பிறண்டு எழுந்தாள்  ஷ்ருஷ்டி…’என்னத எழுதி வச்சேன் எது இவ கைல மாட்டிச்சோ?’

“அக்கா நீங்க தூங்குறப்ப உங்கள தேடி அவங்க வந்தாங்க….” அதற்குள் அடுத்த தகவல் பூரி சொல்ல

“அவங்கன்னா?” இவளுக்குள் ஆன்டெனா ரெய்சிங்…

“அவங்கதான் சஹா வந்தாங்க…. உங்க ஃப்ரெண்ட்…” பூரி சொன்ன ஃப்ரெண்டில் அழுத்தம் அதிகமோ….? உனக்குத்தான் ஃப்ரெண்ட் என்கிறாளா?

‘ஆனா இதையெல்லாம் என்னதுன்னு இவ கேட்க முடியுமாம்?’

“எதோ ஸ்விம்மிங் ப்ராக்டீசாமே…..சீக்கிரமா கிளம்புங்கக்கா…. சஹா…” அடுத்து பூரி எதையும்  சொல்லும் முன்னும் இவள் பாத்ரூமிற்குள் புகுந்திருந்தாள்….. பூரி வாயால் சஹாவைப் பத்தி கேட்கவே என்னவோ போல் இருக்கிறது இவளுக்கு….

அடுத்த 20 வதாவது நிமிஷம் சஹா அறையைப் பார்த்து போய்க் கொண்டு இருந்தனர் பூரியும் ஷ்ருஷ்டியும்…

“நான் ரெடியாகிட்டேன் பூரிமா…. இனி முழுக்க ப்ராக்டீஃஸ் தான்… கேட்ச் யூ லேட்டர்….” கிளம்பி முடிக்கவும் ஷ்ருஷ்டி பூரியை வழி அனுப்ப முயல…

அவளோ….”சஹா என்னையும் அவங்க ரூம்க்கு இன்வைட் செய்தாங்கக்கா…”  என எளிதாக சொல்லிவிட்டு இயல்பாக  கூட வந்தாள் பூரி…..

க்ளிப்ல மாட்டி தொங்கவிட்ட சப்பாத்தி மாவு போல தொங்கிக் கொண்டு போனது ஷ்ருஷ்டிப் பொண்ணோட முகம்…

இப்படியே போய் இவர்கள் காலிங்பெல்லை அமிழ்த்த கதவை திறந்தது ஆகாஷ்…. அவன் கையில் குழந்தை வேறு…

“ஹேய் நீங்க…..நீங்க அந்த பனீர் கட்லட்… அண்ணாதானே…” ஆச்சர்யமாய்  அடையாளம் கண்டபடி அந்த ஆகாஷிற்கு கை குலுக்க கை நீட்டினாள் பூரி…

அடுத்த நொடி குழந்தையையும் கை நீட்டி வாங்கிக் கொண்டாள் அவள்….

மூவருமாக அந்த சூட் போன்ற அறையின் ஹால் பகுதிக்குள் நகர…

அதே நேரம் அறையின் உள்ளிருந்து எதிரில் வந்தான் சஹா…. தன்னைப் பார்க்கவும் சட்டென அவன் கண்ணில் ஏறும் வழக்கமான மலர்ச்சியை தாண்டிய பாராட்டை கவனித்தாள் ஷ்ருஷ்டி…  அவளையும் மீறி தன்னை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டாள் அவள்…

புதுசா ஸ்கர்ட் டாப்ஸ் எல்லாம் போட்டிருக்கிறாளே…. மீண்டுமாய் அவனை இவள் பார்த்த பார்வையில் ‘எப்படி இருக்கு?’ என்ற கேள்வி இவள் சம்மதம் தாண்டி ஏறி இருந்தது….அவன் கண்ணில் அவள் பெண்மையை குறுகச் செய்யும் பாவங்கள் எதுவுமின்றி….. இவளது அம்மாவின் ‘அழகா இருக்கடி சின்னகுட்டி’க்கு நிகரான உணர்வு பரவுவுவதைக் கண்டவள் இவளை மீறி அவனிடம் தன் தாய்வீட்டை உணர்ந்தாள்… அன்யோன்யம் அவளுக்குள்…

இதற்குள் “ஹாய் ஜி” என துள்ளலாக அங்கு வந்து நின்றாள் அதுவரை ஆகாஷிடம் பேசிக் கொண்டிருந்த பூரி….

‘அதென்ன சஹாவ ஜி ன்னு கூப்டுற?” கேட்டேவிட்டிருந்தாள் ஷ்ருஷ்டி….. ‘ஆகாஷ் மட்டும் அண்ணாவாம்..’ உள்ளுக்குள் இடித்த இடியில் வெளி வந்த வார்த்தைகள் இவை….. ஆனால் கேட்ட பிறகுதான் எத்தனை மோசமான கேள்வி இது என இவளுக்கு புரிய….

அதற்குள் விலுக்கென நிமிர்ந்தானோ சஹா….. அவன் ஒரு விதமாக ஒரு பார்வை வைத்தெடுத்தான் பூரி மேல் என்றால்….பூரி முகத்திலும் ஒரு கள்ளத்தனம் மற்றும் சிறு வெட்கம்…. “அ..அது அப்டித்தான்….” இ..இது இங்க எங்க இருக்கு அது….? என எதையோ உளறிவிட்டுப் போயேவிட்டாள்…

சஹா முகத்தில் சின்னதாய் குறும்போ….? கடவுளே எனக்குத்தான் இப்படி தோணுதா….? ஷ்ருஷ்டிக்கு சட்டென கை கால் மரத்துப் போனது போல் உணர்வு….எது என்னவெல்லாமோ செய்தது…..வெகுவாய் பாதிக்கப்பட்டாள் அவள்….

ஆனால் தன் நிலையை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் சஹாவிடம் காட்டிக் கொள்ளவும் முடியாதே இவளால்…

“நிம்மி எங்க?” என கேட்டபடி இவர்கள் நின்ற வரவேற்பறைக்கு பக்கவாட்டில் இருந்த அடுத்த அறை போன்ற அமைப்புக்குள் ஓடாத குறையாக சென்றாள். நீச்சல் குளம் அங்குதான் இருக்கிறது…

ஆனால் இவள் தலை மறையவும்….இன்னும் இவள் காது கேட்கும் தொலைவில் இருக்கும் போதே

“ஜி….அசத்துறீங்க போங்க….. சோலே பூரியா மெனு…?” பூரி உற்சாகமாக கேட்பதும்…

“உனக்கு பிடிக்கும்தானே….நானே செய்ய போறேன்…. நீ சாப்ட்டு பார்த்துட்டு சொல்லு…” சஹா பதில் கொடுப்பதும் இவள் காதுக்குள் ஈயமாய் கொட்டுகிறது….

அடுத்த அடி எடுத்து வைக்க வராமல் அங்கேயே நின்று போகிறது ஷ்ருஷ்டியின் கால்கள்….

‘சோலே பூரி செய்ய தெரிஞ்ச தமிழ் பையனா? இதுக்கு மேல இந்த பூரிட்ட என்ன சொல்லி என்ன மாறப் போகுது???’ பூரிய விடவும் பொரிந்து கொண்டு போகிறது ஷ்ருஷ்டியின் உள்ளம்…

இதற்குள் இவள் எதிரில் வந்து நின்றாள் நிம்மி….  “வாங்க நிம்மி… நேத்து என்ன ஆச்சு…?” இயல்பு போல காட்ட முயன்றாள் ஷ்ருஷ்டி…

“ இந்த ப்ளவ்ஸ் பெர்ஃபெக்ட்டா சேருதுதானே எனக்கு…தேங்க்ஸ்” என பதில் கொடுத்து நிம்மியோ இவளது கேள்வியை சாய்சில் விட்டாள்….

ஷ்ருஷ்டிக்கும் அடுத்து எதையும் பெரிதாய் குடைந்து கேட்டுக் கொண்டிருக்க மனம் இல்லை….. ‘போகுதே வெள்ளம் போகுதே…அது தாவிக் குதிச்சு தலைக்கு மேல போகுதே மொமன்ட் அவளுக்கு…

சட்டென ப்ராக்டீஸ் ஆரம்பித்து சட சடவென நீந்த ஆரம்பித்தாள் அவள்….. எவ்ளவு சீக்கிரம் கத்துகிறமோ அவ்ளவு சீக்கிரம் திரும்பவும் பூரி சஹாட்ட போய்டலாம் என்ற உந்துதலோ என்னவோ….ஏற்கனவே இந்த ப்ராஜக்ட்க்கு இவள் வருவது என முடிவாகவும்  அவசர அவசரமாக கொஞ்சம் நீச்சல் கற்று வைத்திருந்ததால் இப்போது எளிதாகவே சுமூகமாக நீந்தினாள்.

சற்று நேரப் பயிற்சிக்குப் பின் “இன்னைக்குப் போதும் நிம்மி” என செஷனை முடித்து….நீந்த என மாற்றி இருந்த ஒரு காட்டன் பேண்ட்ஸிலிருந்து பழையபடி ஸ்கர்ட்டுக்கு மாறி  ஜெட் வேகத்தில்  பூரியிடம் வந்திருந்தாள்..

“ஜி ஆசம் ஜி…. பூரி உங்களுக்கு செம்மயா வர்க் அவ்ட் ஆகுது ஜி……“ என சஹாவைப் பார்த்து சொன்னபடி பூரியோ ஒரு மெகா சைஸ் பூரியை மொக்கிக் கொண்டிருந்தது….. ஷ்ருஷ்டிக்குள் எதுவோ எதுவோ எகிறி ஏறுகிறது…  மிளகுக் காரம்….வேப்பங்காய் ப்ராவகம்… பீதியாய் ஒரு பெரும் பயம்

“நீயும் உட்கார் ஸ்ரீ….” இவளை வெகு இயல்பாக உபசரித்தான் சஹா…. சாப்பிட்டுக் கொண்டிருந்த பூரியோ… “இங்க” என சைகையால் தன் பக்க சேரை காண்பித்தது….

“எனக்கு பூரில்லாம் பிடிக்காது…” கட் என கடப்பாரை கொண்டு அடி மரத்தை குத்துவது போல் வெட்டினாள் ஷ்ருஷ்டி…..”கிளம்புறியா பூரி…? டைம் ஆகுது” என பூரியையும் அழைத்தாள்.

சஹா ஒரு விதமாக பார்த்தான் ஷ்ருஷ்டியை…… சாப்டுகிட்டு இருக்றவள எந்திரிக்க சொல்றாளே….அது ஒன்னும் சாதாரணமாக படவில்லை அவனுக்கு….

“ஸ்ரீ அவ சாப்டுட்டு இருக்கா” என்றான் அவன்…. அவன் குரலில் இருந்த அமைதி கோபத்தின் வர்ணமாய் பட்டது ஷ்ருஷ்டிக்கு…….

“சரி அப்ப நான் கிளம்புறேன்…..” கடகடவென வாசல் நோக்கி நடக்க துவங்கி இருந்தாள் ஷ்ருஷ்டி….

“எனக்கு இங்க என்ன இருக்கு…” வாய்க்குள் அவளது முனங்கல் இது…

செல்கிறவளைப் பார்த்து நின்ற சஹாவுக்கு ஒரு நொடி ஒரே ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை…… ஆனால் அந்த நொடி முடியும் போது அவனுக்கு புரிந்தே விட்டது….. ஸ்ரீக்கு வந்திருப்பது காதல் வகை  கலவரம்…. அவன் ஒரு பக்க கன்னத்தில் வந்தமர்கிறது குழி…

ஆனாலும் போயும் போயும் பூரிய பார்த்தா?….. அவனுக்கு ஒரு வகையில் சிரிப்பாக வருகிறது என்றால்….ஸ்ரீ வகையில் இது பிடிக்கவும்..….பூரி வகையில் சங்கடமாகவும் இருக்கிறது……அவனைவிட பத்து வயது இளையவளான  பூரி அவனைப் பொறுத்த வரைக்கும் குட்டிப் பாப்பா….

‘நம்ம சீனி மிட்டாய் அதவிடவும்  குட்டிப்பாப்பா போலயே…..’ அவசரமாய் ஷ்ருஷ்டி முன்னால் போய் நின்றான்….

“எல்லோரும் இங்க சாப்டுறதாதான் ப்ளான்….” அவள் முகத்தை அணு அணுவாய் படித்தபடி இவன் சொல்ல….

“ப்ச்…. எனக்கு…” அவள் சலிப்பு போல் ஏதோ சொல்ல வந்தாள்.

அதற்குள் “பூரி பிடிக்கலைனா என்ன பிடிக்கும்னு சொல்லு….. செய்து தரேன்” என முந்திக் கொண்டான் இவன்….

‘அம்மா தாயே உன்ன நான் கண்டுக்காம இல்லமா…..’ என்பதைத்தான் அவன் இப்படியாய் புரியவைக்க முயல்வது…… ஆனாலும் இதெல்லாம் சொல்றப்ப சும்மா கல் மாதிரியா இருக்கும் அவன் முகம்….?  காதல் அவன் ஒரு பக்க கன்னத்தில் ஒற்றை குழிக்குள் ஒழிந்திருக்க…… பார்த்திருந்த அவன் பார்வையில் பாவையை சிணுங்க செய்யும் சிறு ரசனை செழித்திருக்க…. சின்னதாய் ஒரு புன்னகை அவன் பேசும் அதரங்களில் சீண்டலாய் தலை காட்டியது….

எதிரில் நிற்பவளுக்கு இதெல்லாம் என்னதாய் தெரியுமாம்?

“ம்…ஓலக் கொழுக்கட்ட வேணும்……கிடைக்குமா? சீண்டப்பட்ட அவள் எக்கத்தாளமாய் நக்கலடித்தாள். “குறஞ்ச பட்சம் எங்க ஊர் சீனி மிட்டாய்….அதாவது முடியுமா?” இளக்காரம் போல் இதழ் பிதுக்கினாள்…. “ என்ன வேணும்னு கேட்கனுமாம்” நொடிப்பாய் முனங்கிக் கொண்டாள். பனை ஓலைக்கு எங்க போவானாம் கொழுக்கட்டை அவிக்க? சென்னைல கூட கிடைக்காத சீனி மிட்டாய் கப்பல் ஆஃப்ரிக்க கண்டத்துக்கு அபவ்ல நிக்றப்ப எங்க இருந்து கிடைக்குமாம்?

அவள் எதாவது டிஃபன் ஐட்டம் சொல்வாள் எனதான் சஹா எதிர் பார்த்தது….. ஆகாஷுன் முக்கிய பிசினஸ் ஹோட்டல்….. இந்த கப்பலிலும் ஒரு இந்திய எத்னிக் உணவு வகைக்கான ரெஸ்ட்டரண்ட் திறக்கும் எண்ணத்துடன்தான் அவன் இங்கு வந்திருந்தான்…. ஆக ஷ்ருஷ்டி கேட்கும் உணவு வகை எதை செய்வதற்கும் அவனிடம் பொருட்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் சஹா இந்த கேள்வியை கேட்டது….. அவனது சீனி மிட்டாயோ சூடு மிட்டாயாய் சுட்டு வைத்தது…..ஆனாலும் கேட்ட பிறகு எப்டி பின் வாங்குறதாம்?

அதுவும் அவன் சீனி மிட்டாயே சீனி மிட்டாயை கேட்க்கும் போது…..

“கொழுக்கட்ட இப்பவே அரேஞ்ச் செய்துடலாம்…..ஆனா சீனி மிட்டாய்க்குத்தான் கொஞ்சம் டைம் ஆகும்…”  அவள் முகம் மீதி விழி பரவவிட்டபடி பதில் கொடுத்தான் அவன்…..

சகாயன் சாரோட கொழுக்கட்டை அட்வன்சர்ல இருந்து  நித்து பவன் காதல் அட்வன்சர் வரை எப்பி எழுதப் ப்ளான்…. ஆனால் என் ஐ என்னை ஆப்தமாலஜிஸ்ட்ட கூட்டிடு போயே ஆகனும்னு அடம் பிடிப்பதால் மீதிய நாளைக்கு நைட் போஸ்ட் செய்றேன்…..முடிஞ்ச வரை ஆல்டர் நேட் டேஸ்ல எப்பி வச்சு காதல் வெளியிடையை இனி கரக்ட் செய்துடலாம்…

இப்போதைக்கு பொறுத்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்…நன்றி

11 comments

 1. Sis sugapravagam than ithuvarai ipo veppankai pravagamamum 😛 Athuvum sema azhagu than 🙂
  intha poori mela enaku doubtae varala sis Pavam Shri romba confuse agura 😛 kathal paduthum padu 😀
  Saha seeni mittayin seeni mittay aasaiyai epdi niraivetruvanu therinchuka waiting 🙂

  Unga Tamil happpaaaa <3 <3

 2. hey.. indha poori intro ippo than agudha.. ? illai naan engiyum miss pannitena…? Poori.. ku pidicha chola poori pidicha.. enga sweety kku olai kozhukkattai .. seeni mittai.. sema… gethu.. Moni.. eppadi ivlo thairyama .. aliens kite ellam pesina… sema brave than po… veppangai pravagam – indha word sema catchy sis… Saha pora pokka partha seeni mittai yum ready panniduvan polaye? very interesting update sis.

 3. Wow Purnima is so innocent. But Sri has mistaken in wrong way which shows her love ❤ on Saha and her possessiveness on him. Soon Saha must propose to her otherwise she cant bare it. And the other hand Moni is still believing Saha’s words and thinking them as aliens is so comedy mam. What is Saha going to do to get senimittai? Mam eagerly waiting for your next update.

 4. Hi Anna Ma’am, Hope your doing good.
  Finally 11th epi padichitten but too late madam Ji adhuvum illama this is too small update… update-k wait seithu seithu thuruuuumbha poittu irupen :-p but as always worth waiting, 2 sitting la mudichitten 1-10 but was waiting for 11th update to give an on time comment but long wait pa….as always cute ana dialogues rasika vaikum sense of humor…. logic pattri ketkave thevai illai smart Ji.apro those rosy moments, ungaloda messages…awesome…Ithana periya team vachi adha ippadi super ah move panuradhu really fantastic 1 or 2 jodi’s irundhale yaru mele focus panuradhun theriyadhu idhula ithana couples and ellarukkum ninga kodum importance..epis la entha oru jodi illa vittalum konjam disappointing thaan madam ji…sinni-a sinni mittai ketta eppudi ma hahahah….Moni oda gang oda acts ellame funny ya irundhadhu sply Saha oda SP idea was hilarious and indha epi la Moni vandhu apologize seivathu innum hilarious. Puri oda talks, Puri-k poori mele irukkum loves, Puri-a Shri misunderstand seivathu and Halloween day la nadandha galatta etc etc ellame super ah irundhadhu Anna ma’am. Innum neriya sollikitta pogalam but rombha blade poda virumbala.next time landhu on time padipen… Sorry for late comment. Thanks for this beautiful series….. Keep rocking 🙂

 5. Read 10 epi in a single day.. was waiting for the next update for long time…Super epi.. waiting eagerly for the next..
  Please give epi continuously..

  Unga tamil happa… Chance less.. romba kavithuvama ezhuthureenga.. i read almost all your stories in your blog… All stories are awesome…

  Kaadhal veliyidai , romba nalla poitu iruku… I liked saha and sri pair the most… Sri oda misunderstanding kooda cute ah iruku… athuku saha oda inniKu reaction semma..antha reaction ah evalo azhaga neenga express pannirukeenga writing la… Semma nga….

  Eagerly waiting for the next epi..

 6. Semma ya irundhuchu epi
  seekirama next epi paste pannedunga sis pls….
  romba super ah Pohuthu story wait panna mudila
  pls sis………

 7. Haii sis…. Asusual an awesome episode… U have a very gud creativity and humour sense… Good work sis keep going…. Waiting for nxt episode eagerly…

Leave a Reply