காதல் சொல்ல வந்தேன்

       

ப்பொழுதுதான் சுரஞ்சகன் அறைக்குள் நுழைந்தான். அனுமதி பெற்று அறைக்குள் நுழைந்த இவன் பின் மற்றவன். இவனைப்போன்றே சீருடையில் அவனிருப்பது அறையிலிருந்த ஐஜி பால்வண்ணன் தலைக்கு பின்னாக சிரித்திருந்த தேசத்தந்தை புகைப்படத்தின் கண்ணாடியில் முழு தெளிவின்றி தெரிகின்றது.

ஹேய்….மின்னலுக்கும் குறைவான நேரத்தில் தன் வலக்காலால் பின்னோக்கி குறிபார்த்து குதிரைபோல் ஒரு உதை. இடக்கை எதிரிலிருந்த ஐஜியை அவரது மேசைக்கு கீழாக தலை பிடித்து அழுத்த, அதே நேரம் வலக்கை அதன் அருகில் நின்றிருந்த அவளை தரையோடு தள்ளிற்று.

சுரஞ்சகன் உதையில் ஐஜியை துப்பாக்கியில் குறிவைத்த பின்வந்தவன் தடுமாறி சரிய, அதற்குள் வெளிப்பட்டிருந்த தோட்டாக்கள் சுவரின் குறுக்காக புள்ளிகளிட, மைக்ரோ செகண்டில் 180 டிகிரி சுழன்று பின்னால் விழுந்திருந்தவன் கழுத்தில் தன் இடது முழங்காலை மடக்கி ஊன்றி இடக்கையால் அந்த அந்நியன் பிஸ்டலை பிடுங்கி அதை விழுந்துகிடந்த அவன் நெற்றிப் பொட்டில் வைத்தான். வலக்கையால் அவன் கன்னத்தில் ஓர் அறை

“யார்டா…நீ?”

வந்திருந்த அந்த இரும்புச்சிலை மனிதன் மயங்கிச்சரிந்தான் அவ்வறையில்.

வெல்டன் யங்மேன்…வெல்கம்…வெல்கம் டூ அக்க்ஷன் என்று கண்சிமிட்டிய ஐஜி அவனது வலத்தோளை தட்டியவர் அவனை தன்னோடு ஒரு கணம் அணைத்து விலகினார். அவர் முகம் எங்கும் பரவசம் பெருமை. கண்ணோரம் என்ன நீரா?? தன் பெரிய மீசையை முறுக்கிக் கொண்டார்.

“உன்ன இப்படி பார்க்க எவ்ளவு நாளா காத்துகிட்டு இருக்கேன்….” என் கனவ நிறைவேத்திட்டடா..இனி சாகனும்னா கூட நெஞ்ச நிமித்திகிட்டு சாவேன்…”

“க்கும்..இது ஐஜி ஆஃபீஸுன்னு நினச்சேன்…என்னமோ சினிமா ஷூட்டிங் …இல்ல  சீரியல் சூட்டிங் மாதிரி இருக்குது…நீங்கெல்லாம் சேர்ந்து இவனுங்கள பிடிச்சு…ஒருத்தன் துப்பாக்கியோட உள்ள வந்து விழுந்து கிடக்கான்….அத கவனிக்காம மாமா…மாப்ளேன்னுகிட்டு…”

தன் முன்தலையை ஒரு கையால் அடித்துக் கொண்ட  அவள் ஐஜியை நோக்கி “ அப்பா ..பை” என்றுவிட்டு இவனை திரும்பி கூட பார்க்காமல், குறுக்காக விழுந்து கிடந்த அந்த அரை வழுக்கையனை ஹீல்ஸ் காலால் தாண்டிச் சென்றாள்.

சுரஞ்சகன் முழுப்பார்வையும் அவளது கறுப்பும் வெள்ளையுமான சல்வார் கண்பார்வையை விட்டு மறையும் வரையும் அவள் பின் சுழன்று அவள் மறைந்த பின்பே எதிரில் நிற்பவரை நோக்கி மீண்டுமாக வந்தது. இப்பொழுது எதிரில் நிற்பவர் முகத்தில் ஒரு விதமான நக்கல் பாவம். அதே ரக புன்னகை வேறு. மாட்டிகிட்டியா…என்றது விழிமொழி.

வாய்விட்டு விசிலடித்தார்..

“இது எத்தனா நாளா…? எனக்கே தெரியாம? “

 

தற்குள் அவரது அறைக் கதவிற்கு வெளியாக அத்தனை காக்கி கால்கள்.

விழுந்துகிடந்தவனுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகாளை செய்து முடித்தபின்பு மீண்டுமாக இருவருக்குமாக தனிமை கிடைத்தது.

“ஆக்க்ஷன் பார்ட் இஸ் ஓவர்….ஸ்விட்ச் ஓவர் டூ ரொமன்ஸ்…டெல் மீ..யங்மேன்.. டெல் மீ  உயவர் லவ் ஸ்டோரி…”

“ சார் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல… “

அவன் பேச்சை தொடரும் முன் அவர் முந்திக் கொண்டார்  “ ஒன்னுமில்லையா…இடி மின்னல்…கடும் மழை எல்லாம் இருக்குது அங்க…நீ என்ன தப்பு பண்ண..? .நீ இன்னைக்கு ட்யூட்டில ஜாய்ன் பண்றன்னு தான் மேடம் இன்னைக்கு இங்க வந்தாங்களா…? நீ சொன்னத விட லேட்டா என்ட்ரி குடுத்துட்டியோ…? தன் வாட்ச்சைப் பார்த்தவர் இல்லையே..பெர்ஃபெக்ட் டைமிங்…அப்போ …ரூமுக்குள்ள வந்தவுடனே அவ முகத்த பார்க்காம இந்த வயசான யூத்த பார்த்துட்டன்னு பார்ட்டிக்கு டென்ஷனா..?”

“சார்…அவங்க உங்க டாட்டர் சார்…பார்டி அது இதுன்னு….”

இப்பொழுதும் அவனை அவர் பேசவிடவில்லை.

“மேடத்தை சொன்னா சாருக்கு டென்ஷன் ஏறுதே….குட் …குட்… ஐ லைக் இட்….பை த வே நான் தான் மைவி அப்பான்னு ஞாபகம் இருந்தா சரி..”

“சார்…நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல… நான் மைவிழி மேடத்தைப் பார்த்து கிட்டதட்ட நாலு வருஷம் ஆகுது…அப்ப இருந்து…இப்ப வரைக்கும் எங்களுக்குள்ள எந்த கம்யூனிகேஷனும் இல்ல…”

“நாலு வருஷ கோபம்….?” யோசனையோடு சற்று இழுத்துச் சொன்னவர். ஒரு பெரு மூச்சை வெளியிட்டார்.

“உங்களுக்குள்ள என்னனு எனக்கு தெரியாது…பட் நீங்க விரும்பி கல்யாணம் செய்துகிட்டாலும்…இல்ல கல்யாணம் செய்துகிட்டு விரும்புனாலும்….எனக்கு பூரண சம்மதம். ரொம்..”

“சார்..”  இடையிட்டான் சுரஞ்சகன்.

“வெயிட் மை பாய்…லெட் மி ஃபினிஷ்….உன்னைய இப்படி ஐ பி எஸ் ஆஃபிஸரா பார்க்கனும்ங்கிறது எப்படி என்னோட கனவோ அப்படியே தான் மைவிக்கும் உனக்கும் கல்யாணம்ங்கிறதும் என் ஆசை…நான்  ஆசைப்பட்டதுக்காக நீ இதை செய்ய வேண்டாம்…செய்யவும் கூடாது…பட் நீங்க ரெண்டு பேரும் விரும்பி மேரேஜ் செய்துகிட்டீங்கன்னா உங்களவிட சந்தோஷ படுற ஒரு உயிர் இருக்கும்…..அது நான்… உன்னவிட நல்ல இடத்த என் பொண்ணுக்கு கண்டுபிடிக்க என்னால முடியாது..அதே மாதிரி அவளவிட உனக்கு கொடுக்கிறதுக்கு என்ட்ட வேற மேலான பொருள் எதுவும் கிடையாது…ஷீ இஸ் மை ட்ரெஷர்”

தன் கையிலிருந்த தொப்பியை மேஜை மீது வைத்தான் சுரஞ்சகன்.

“அங்கிள் நீங்க கேட்டுகிட்டதுக்காக நான் அவள கட்டாயத்துக்காக கல்யாணம் செய்றேன்னு தப்பா புரிஞ்சிகிடுவா….அதனால நீங்க என்ட்ட சொன்ன விஷயத்தை இப்போதைக்கு அவட்ட சொல்ல வேண்டாம்…ப்ளீஸ்….”

 

“அது வந்துமா….நான் இத வேனும்னே செய்யலமா…எங்க தோட்டம் மலைய ஒட்டி இருக்கிற இடம்மா…புலி… கரடி…மிளா ..காட்டு பன்னி…சில நேரம் யானை கூட வந்து பயிர அழிச்சு நாசம் செய்யும்மா….அது மாதிரி அன்னைக்கும் எங்க மரத்தை எதோ ஆட்ற சத்தம்மா…சாயங்காலம் 7மணி இருட்டு…வீட்ல இருந்து பார்க்கிறப்ப  எதிர்ல இருக்கிற தோட்டத்துல மரம் ஆடுது…யாரோ கத்திகிட்டே போறான் ஏ…வேது…உம்ம தோட்டத்துல மிளான்னு…எதுக்கும் இருக்கட்டுமேன்னு அரிவாள எடுத்துட்டு ஓடினேன்…எந்தம்பி பக்கத்து வீட்ல இருந்து கேட்டவன் அவனும் பின்னால ஓடியாந்து இருக்கான்…அண்ணன் தனியா போறேன்னு ஒரு பாசம் இருக்கும்ல…அதான்…தூரத்துல எதோ ஓடுதா…கைல இருந்ததை தூக்கி வீசுதேன்…அப்பதான் நான் இருக்க பக்கம் வராம எதிர் பக்கத்துல மலைய பாத்து ஓடும்னு…

வந்தது திருட்டுபயலா இருந்துறுக்குது….அறுவா அவன் கால்ல போய் விழுந்து இருக்குது அவன் அதோட ஓடிட்டான்…

மறுநாள் ஒரு கூட்டம் வருது வீட்டுக்கு…ஏல வேது …அவன் கால்ல அறுவா பட்டதுக்கு செலவுக்கு காசு தான்னு…எவன் தாயி கொடுப்பான் திருடனுக்கு வயித்திய செலவு…அதான்…முடியாதுன்னுட்டேன்…வாக்குவாதம்..இரண்டு பக்கமும் வார்த்தைய சிந்தியாச்சு…

என் நேரம் மறுநாள் அந்த திருட்டுபய செத்துட்டான்…திருட போன இன்னொரு மரத்தில இருந்து விழுந்துட்டானாம்….

முந்துன நாள் என்ட்ட சண்ட போட்டு வசவு வாங்கிட்டு போனவன்ல ஒருத்தன் போலீஃஸ்ல போய் நானும் என் தம்பியும் சேர்ந்துதான் அந்த திருட்டுபயல கொன்னுட்டோம்னு கேஸ் பதிஞ்சிட்டான்…

மரத்துல இருந்து விழுந்து செத்ததுக்கும் அறுவா வெட்டி செத்ததுக்குமா கோர்ட்டுக்கு வித்யாசம் தெரியாதுன்னு நாங்க தைரியமாத்தான் இருந்தோம்…எங்க வக்கீலும் அப்படித்தான் எங்கட்ட சொல்லிகிட்டே இருந்தான்…கடைசில தீர்ப்பு எங்களுக்கு செயிலுன்னு வந்துட்டுமா…. எங்க வக்கீலு எதிர் ஆளுங்கட்ட காசு வாங்கிட்டான்னு அப்புறமாதான் தெரியுது..

என்ன செய்ய ஜெயிலுக்கு வந்துட்டேன்….

“அப்ப இப்போ எதுக்குங்க கடவுள்ட்ட மன்னிப்பு கேட்கனும் அந்த ஜெபம் பண்ற பாப்பாவ பார்க்கனும்னு என்னை வர சொன்னீங்க…?” மைவிழி தன்னிடம் பெசிக்கொண்டிருந்த அந்த முதியவரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அது இல்லமா…இது நான் செயிலுக்கு வந்த கதை…ஆனா நான் செய்த தப்பு வேறமா…..என் தம்பின்னா எனக்கு உயிருமா…எங்கபோனாலும் சேர்ந்துதான் போவோம்…ஒரு தகராறுல என் தம்பி ஒருத்தன ஓட ஓட வெட்டிடான்மா…அவன் வெட்டுறதுக்கு முன்ன அந்த வெட்டு வாங்கினவன்…என்ட்ட கதறுனாம்மா…ஏ  வேது…நீ வேண்டாம்னு சொல்லுல…உன் தம்பி கேட்பான்னு…என் தம்பிய அப்படி அதிகாரம்பண்ணி எனக்கு பழக்கம் இல்லையா…நான் ஒன்னும் சொல்லாம நின்னுட்டேன்…

நான் சொன்னாகூட என் தம்பி நிறுத்தி இருப்பானான்னு தெரியாது…அவன் குணம் அது…ஆனா இப்போ அடிக்கடி நான் அன்னைக்கு பண்ணது தப்பு …ஒரு உயிர் போறத தடுக்க நான் முயற்சி செய்யல…அதான் இப்படி இந்த வயசான காலத்துல செய்யாத தப்புக்கு இங்க வந்து கெடக்கேன்னு இருக்குதுமா…

தப்பு செய்துட்டேன்…தண்டணை கூட அனுபவிச்சாட்சி…ஆனாலும் போற இடத்துல கடவுள எந்த மூஞ்ச வச்சுகிட்டு பார்க்கன்னு தெரியல… நான் தண்டணை அனுபவிச்சதாலமட்டும் செத்தவன் வீட்ல உள்ளவிய பட்டபாடு இல்லனு போயிடுமா…? அதான் உன்ட்ட பேசனும்னு சொன்னேன்…என்னமோ நாளைக்கு நான் பூமியில இருப்பேன்னு தோணலை….நான் இப்போ என்ன செய்யனும்மா..?”

“நம்மளால கடந்த காலத்தை மாத்த முடியாது…ஆனால் யேசப்பாவால ஒரு இழப்பை விதையா மாத்தி புது நன்மை விளைய வைக்க முடியும்….அதனால அவரை நம்பி அந்த குடும்பத்துக்காக ஜெபம் செய்ங்க…உங்களால முடிஞ்ச நன்மைய அந்த குடும்பத்துக்கு செய்ங்க…அதோட உங்க தப்புக்காக மன்னிப்பு கேளுங்க….தன்னிடம் வரும் யாரையும் நான் புறம்பே தள்ளுவதில்லைனு யேசப்பா சொல்லி இருக்கார்…”

பேசிமுடித்து வெளியே திரும்பும்போதுதான் கவனித்தாள் சுரஞ்சகன் அறை வாசலில் நின்றிருந்தான்.

காரிடாரில் இவளோடு இணைந்து நடந்தவன்..”.மைய்யூ நான் தப்பு செய்துட்டதா உனக்கு தோணிச்சுன்னா என்னை மன்னிச்சிடு..ப்ளீஸ்…நான் என்ன சொல்ல வறேன்னே கேட்காம இப்படி அவாய்ட் செய்தா எப்படி..? கொலை செய்தவங்கள கூட கடவுள் மன்னிப்பர்னு சொல்லிட்டு வர்ற…ஆனா என்ட்ட..”

“மனம் திருந்தினவங்களுக்குத்தான் மன்னிப்பும் ஃப்ரெண்ட்ஷிப்பும்..திருந்தாதவங்களுக்கு ஒன்லி மன்னிப்பு ….நோ ப்ரெண்ட்ஷிப்…நான் உங்கள எப்பவோ மன்னிச்சுட்டேன்…”

“நான் என்ன தப்பு செய்தேன்னு சொல்லு….நிச்சயமா ஐ’ல் ரிபென்ட்….”

“செய்தது தப்புன்னே தெரியாதவங்க..திருந்த போறாங்களாம்….” இதற்குள் வெளி வந்து தன் கார் அருகில்  வந்திருந்தவள் காரை எடுத்துக் கொண்டு பறந்தாள்.

கொலையவிட பெரிய தப்பா..? அப்படி என்ன செய்தேன் என யோசிக்க தொடங்கினான் சுரஞ்சகன்.

 

பார்வை அற்ற மாணவிகளுக்கான பள்ளி அது. மைவிழி விரும்பி பணி செய்யும் இடம். பள்ளியில் ஒருவிழா. வரவேற்பாளராக அவள்.

அவள் முன்னிருந்த தட்டிலிருந்த கற்கண்டை எடுத்து வாயில்போட்டான் சுரஞ்சகன்.  அவளையும் மீறி அவன் மீது கட்டற்ற வெள்ளமாய் பாய்ந்தது அவள் பார்வை. அடர் க்ரீம் நிறத்தில் பஅண்ட்ஸ் பளீர் வெண்ணிற சட்டை. ஷஅர்ட் டக் இன் செய்து கறுப்பு நிற பெல்ட்.

பார்க்காதே பார்க்காதே என்ற மனதில் அழுத்தம்.அதிகமாக அதே வேளை எதோ உறுத்த அவளையும் அறியாமல் அவன் முகம் பார்த்தாள் மைவிழி. அவளைத்தான் படித்துக் கொண்டிருந்தான் அவன்.

“சார் இங்க முன்னால இருக்குதுல்ல இந்த காரிடார்..அதுல ஃஸ்ட்ரெயிட்டா . போனா கடைசி என்ட்ரன்ஸ் திறந்து இருக்கும்…அங்க தான் ப்ரோக்ராம்…நான் அங்க தான் போறேன்…வாங்க வழிகாட்றேன்…” அருகில் ஒரு வாண்டின் சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் ஒரு ஏழெட்டு வயது மதிக்கத்தக்க சிறுமி. ஊண்கண்ணில் ஒளியற்றவள்.

“எங்க மைவிழி மேமை டிஸ்டர்ப் செய்யாதீங்க….”

“தேங்க்ஸ் சின்ன மேடம்….ஃபங்ஷனுக்கு கூப்பிட்டவங்க தான் வழி சொல்ல மாட்டேங்கிறாங்க…நீங்களாவது சொன்னீங்களே…சோ ஸ்வீட் ஆஃப் யு..பை த வே நான் சுரஞ்சகன்..” கை பற்றி குலுக்கினான். குழந்தையோடு சேர்ந்து நடக்க தொடங்கினான்.

“ப்ளெஷர் இஸ் மைன் மிஸ்டர். சுரஞ்சகன். ஐம் தெபோரா…தெபின்னு நீங்க கூப்டலாம்…”

பேசிக்கொண்டெ இருவரும் அந்த நீள கார்டாரின் பாதி தூரத்தை அடைந்திறுக்க அவனை பற்றி இருந்த கையை அழைப்பின் அடையாளமாக இழுத்தாள் தெபி. “அங்கிள் கொஞ்சம் குனிங்க..”

குனிந்தான் “என்னமா?”

“அங்கிள் மைவிழி மேம்க்கு உங்க மேல பயங்கர கோபம்…. ஆனா அதையும் தாண்டி ரொம்ப உள்ள உங்கள அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது….”

ஆச்சர்யமாய் குழந்தையை பார்த்தான். “தெபி டார்லிங்க்கு இது எப்படி தெரிஞ்சிதாம்…?

“..அப்பப்ப இப்படி அடுத்தவங்கள பத்தி தோணுது… மைவிழி மேம் நம்ம பின்னால நடந்து வர ஆரம்பிச்சப்பல இருந்து அப்படியே தோணுது..’

 

திரும்பிப் பார்த்தான். மைவிழி வெகு பின்னால் வந்து கொண்டிருந்தாள் க்ரீம் நிற புடவையில் ஆரஞ்சு வர்ணம். அழகு.

அத்தொலைவில் ஆள் வருவதை இக்குழந்தை அறிந்திருப்பதே அதிசயம். அதிலும் வருவது யார்… அவர்கள் மனதில் என்ன என்றெல்லாம் …ஆச்சர்யமே!

“அவங்க வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கலை….கொஞ்சம் கோபமா….கொஞ்சம் வித்யாசமா…” யோசனையாய் ஒருநொடி வலபுறமாய் தலை சாய்த்த தெபி

என்னமோ எனக்கு அவங்களுக்கு உங்கள பிடிச்சிருக்கதாதான் தோணுது…அவங்க ரொம்ப நல்லவங்க…வேணும்னே தப்பு செய்தா மட்டும்தான் மேடத்துக்கு பிடிக்காது…அப்ப கூட அவங்க எங்கள அடிக்கவே மாட்டாங்க….”

தன் ஆசிரியைக்கு விளம்பரம் போல் ஆர்வமாய் ஆரவாரமாய் சொல்லிக் கொண்டு சென்றவள் தன் தொனியை வெகுவாக இறக்கி ரகசியம் போல்

“நீங்க ரொம்ப பெருசா தப்பு செய்துட்டீங்களா அங்கிள்…….? நான் வேண்ணா உங்களுக்காக மேடத்துட்ட பேசட்டுமா….அவங்களோட ஃபேவரைட் ஸ்டூண்ட் நான்…ஆனா நீங்க சாரி கேட்டுடனும்…அதோட அந்த தப்ப திருப்பி செய்யவே கூடாது…” கடைசி வரியில் தலையை இருபுறமும் மறுப்பாக ஆட்டியபடி தெபி பேச அவனுள் பாச அலை, பெருமிதம்.

குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான் சுரஞ்சகன்.

“டஅடி கிஸ்பண்ணா இப்படித்தான் இருக்குமா அங்கிள்…?” குழந்தையின் ஏக்க கேள்வியில் அவள் முன் முழந்தாளிட்டு அவளை தோளோடு அணைத்தான் சுரஞ்சகன்.

“ஐய…இப்படில்லாம் சைல்டிஷா செய்யகூடாது..ஐம் நவ் அ பிக் கேர்ள்……” மறுப்பாய் விலக்கினாள் தெபி.

“டாட்டர் இஸ் ஆல்வேஸ் அ சைல்ட் ஃபார் ஹெர் டஅட்…” இப்பொழுது அவன் கன்னத்தில் விழுந்தது மழலை முத்தம்.

“.எனக்கு அப்பாவே கிடையாதுன்னு எல்லோரும் சொல்றாங்களாம் அங்கிள்…அதான் அம்மா கூட என்னை இங்க விட்டுட்டு போய்ட்டாங்களாம்….”

“இதெல்லாம் உன்ட்ட யார் சொன்னாங்க…?” அவன் முகத்தில் வந்த இறுக்கம் குரலிலும் வெளிப்பட்டது போலும்.

“யாரும் வேணும்னுல்லாம் என்ட்ட சொல்லலை அங்கிள்…ஒரு நாள் ஆஃபீஸ் ரூம்க்கு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரை திருப்பி குடுக்க வந்தனா…அப்ப அங்க யாரோ மதர்ட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க…”

“அதை..” அவன் எதோ தொடங்க அவனை பேசவிடாமல் தெபியே தொடர்ந்தாள்.

“அதுக்காகல்லாம் எனக்கு கவலை இல்ல அங்கிள்…..ஒவ்வொருத்தருக்கும் ஒன்னொன்னு இல்ல…சிலருக்கு பாட தெரியலை…சிலருக்கு டஅன்ஸ் தெரியலை…எங்க மதர்க்கு கம்ப்யூட்டர்ல டைப் செய்யவே வராதாம்…எங்க மோசே அங்கிளுக்கு மேத்ஸே வராதாம்…சிலருக்கு காசு இல்ல..சிலருக்கு படிப்பு இல்ல…அதுபோல எனக்கும் சிலது இல்ல……எங்க மதர் சொல்லி இருக்காங்க…நான்  சந்தோஷமாதான் இருக்கிறேன்…”

அதே நேரம் அவர்களை பின்னிருந்து கடந்தாள் மைவிழி.

“நான் ஒன்னும் உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்கலை…” சொல்லியபடியே திரும்பாது நடந்தாள்.

“ஆஃபீஸ்ல எல்லோரையும் என் டாட்டர் இன்வைட் செய்திருக்கான்னுதான் சார் சொன்னாங்க…நானும் இன்றைல இருந்து உங்க அப்பா ஆஃபீஸ் ஸ்டாஃப் தாங்க மேடம்.”

அவன் முகம் பார்க்காமல் சென்றேவிட்டாள் மைவிழி.

 

தெபி இவனை அழைத்துச்சென்று முன்னிருந்து மூன்றாவது வரிசையில் ஒரு இருக்கையை காண்பித்து  “ஃபர்ஸ்ட் டூ ரோஸ் வி ஐ பி ரோஸாம்…இங்க இருங்க…நான் தான் காம்பயரிங்…ஸ்டேஜ்க்கு போகனும்…”

சொல்லிக் கொண்டு இருக்கும்போதே “வெல்கம் சார்…வாங்க…வாங்க…மிஸ்.மைவிழி சொன்னாங்க…நீங்கதான் நியூ ஏஎஸ்பின்னு…” என்றபடி பள்ளி தலைமை மதர் வரவேற்க….அவன் பார்வை தூரத்திலிருந்த மைவிழியை ஒருமுறை வருட…

”ஹே அஸ் யூஸ்வல் நான் கரெக்ட்… “என்றபடி ஸ்டேஜை நோக்கி தன் காலடியை எண்ணியபடி சென்றாள் தெபி.

விழா முடிந்து வெளி வந்தவனை அரை இருளில் நின்றிருந்த வாகனம் வரை வழி அனுப்ப வந்தார் மதர். அவருடன் மைவிழி. ஆனால் அவள் கண்கள் இவன் கண்களை தவிர்த்து தத்தி அலைந்தது.

மதரிடம்  முறையாக விடை பெற்றவன்,

“அங்கிள்க்கு இம்பார்டன்ட் மீட்டிங்…அதான் இடையில கிளம்பிட்டாங்க….நான் உன்ன ட்ராப்பண்றேன .மைவி….”

மைவிழியிடம் சொல்லிவிட்டு மதரை பார்த்தான். புன்னகைத்துவிட்டு அவர் திரும்பி நடந்தார்.

 

“இல்ல….அப்பா பேசினாங்க….அவங்க மீட்டிங் முடிஞ்சு நேர வந்துடுவாங்களாம்….ஈசிஆர்..  ஆட்டிட்யூட்ல டேபிள் புக் செய்துறுக்காங்க…என் பெர்த்டே அப்பாவுக்கு எப்பவும் முக்கியம் தான்..” கடைசி வரியில் ஒரு அழுத்தம். அவள் கண்களில் நீர் கோர்ப்பது அவள் குரலில் தெரிந்தது.

“பை” ஒற்றை வார்த்தையில் விடை பெற்றான். அவன் குரலில் ஒரு மரத்தன்மை. ஏன்?

அவளுக்குள் இன்னுமாய் கொந்தளித்தது. பெர்த் டேன்னதும் அவனுக்கு எத்தனை வெறுப்பு! அலட்சியம்.

கர்டசிக்காக கூட ஒரு ஒற்றைவார்த்தை வாழ்த்துகூட  கிடையாது. எப்படி வாழ்த்துவான்?

நெஞ்சடைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உணர்ச்சி புயலை உள்ளத்தில் உண்டாக்கி…கண்ணில் கார்காலம் கட்டளையிட ….தன் கார் கதவை திறந்தவள் உள்ளமர்ந்து தன் இயலாமையை கதவில் காண்பித்தாள்.

பயணமெங்கும் பழைய குப்பை நினைவுகள்.

 

சுரஞ்சகனின் தந்தை இவளது அப்பா பால்வண்ணனின் உயிர் நண்பர். அவரும் அவர் மனைவியும் ஒரு விமான விபத்தில் இறக்க, அவர்களது ஒரே மகனான 8 படித்துக்கொண்டிருந்த சுரஞ்சகனுக்கு பால்வண்ணன் அப்பொழுதிலிருந்தே கார்டியன், காட்பாதர் எல்லாம். சுரஞ்சகன் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் அவனை வருட விடுமுறை காலங்களில் மட்டும் தான்  பார்க்கும் வாய்ப்பு இவளுக்கு.

அதுவும் ஆளுக்கு ஒரு காம்ப், கோச்சிங் என அலைந்து கொண்டிருப்பார்கள் இருவரும். பெரிதாய் பேசி பழகிக் கொண்டது இல்லை. ஆனால் அவன் படிக்கும் கல்லூரியில் இவள் சேர்ந்தபோது கதை மாறியது.

கல்லூரியின் முதல் நாளே “ரஞ்சா…இவள பார்த்துகிடுறதும் உன் பொறுப்பு” என்று அப்பா சொன்ன வார்த்தையில் தொடங்கியதோ..?

அப்பொழுது மைவிழி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி.  சுரஞ்சகன் இறுதி ஆண்டு.

அவன் ஹயர் எஜுகேஷனுக்காக டெல்லி செல்ல போகிறான் என தெரியவும் இவளுக்குள் அடி அற்று போனதாக உணர்வு. அவனைப் பிரிந்து இருக்க முடியாது என்ற தவிப்பின் தாக்கம் கடுமையாக இருந்தது.

கல்லூரி இறுதி நாள் இவள் தன் காதலை அவனிடம் வெளியிட்டாள்.

அவன் மறுத்ததை தாங்க முடியவில்லை எனில் அவன் மறுத்த விதத்தை ஜீரணிக்க முடியவில்லை.

“இதை நான் எதிர்பார்த்தேன்….

இதெல்லாம் சரி இல்லை மைவிழி….

இப்ப உனக்கு புரியாது….பின்னால நீயே புரிஞ்சுப்ப…இனி நம்மளுக்குள்ள எந்த கம்யூனி கேஷனும் வேண்டாம்…அது நல்லதுக்கு இல்ல….” அந்த மரத்தடியில் வைத்து சொல்லிவிட்டு சென்றேவிட்டான்….

இதை நான் எதிர்பார்த்தேன்

அந்த வார்த்தையில் இவள் செத்தே போனாள். இன்றுவரை அந்த மரணத்திலிருந்து இவள் முழுதாக உயிர்த்தெழவில்லை..

இஞ்சினியரிங் படித்தாலும் அவள் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இங்கு வந்து வேலை செய்வதற்கும் அதுதான் காரணமோ?

Next Page