காதல் காலமிது (2)

தூரத்தில் பார்வையில் பட்டது டாமர்….. இவள் வேக வேகமாக அதைப் பார்த்து போக….அந்த ஜீவாவும் இவள் பின்னால் வர….

எப்பவும் குட்டி காம்பவ்ண்ட் வாலுக்குள் கட்டிக் கிடந்த டாமர்க்கு இந்த பரந்து விரிந்த தோட்டம் படு குஷியைத் தந்ததா….இல்ல டைம் ட்ராவல்க்கு பயந்து அது தாறுமாறா ஓடிச்சானு தெரியலை…..

இப்போது அது ரெண்டு துள்ளு…..ஒரே ஓட்டம்…. ஓட்டம்னா ஓட்டம் அப்படி ஓரு ஓட்டம்….. துரத்தல்னா துரத்தல் அப்படி துரத்தல் இவ….

அதில் டாமர் ஒரு புதர் அருகில் உட்கார்ந்திருந்தவனை தாண்டி ஓடுகிறது….இவள் இடம் பொருள் மறந்து அங்கு ஓட……இவள் பின்னால் வந்த ஜீவா…. “சரித்ரா….அங்க ஆள்….” அவன் சொல்லி முடிக்கும் முன் அந்த நபர் இவளைப் பார்த்துவிட்டார்….

ஆனால் பார்த்தவர் இவர்கள் எதிர் பார்த்தது போல் பெரிதாய் எந்த அதிர்வும் காட்டாமல்…..அவர் செய்து கொண்டிருந்த வேலையை தொடர்ந்தார்….

அதாவது வாய்விட்டு அழுதார்…. நின்றுவிட்டாள் இவள்…. ஜீவாவும் தான்…..

இவர்களது உடை கோலத்துக்கு அவர் இதற்குள் துள்ளிக் குதித்து கூப்பாடு போட்டிருக்க வேண்டும்……ஆனால் அவர் கண்டு கொள்ள கூடாமல் அழுதால்??

அதுவும் அவரது வயது வேறு இவள் மனதை பிசைந்தது…..60பதுகளில் இருப்பாரோ…..உடை அந்த ஜோதா அக்பர் கால உடைதான் எனினும் நைந்த ஒரு கோலம்…அவர் பொருளாதார நிலையை கூற….

“என்ன ஆச்சு தாத்தா…? ஏன் அழுறீங்க….” கேட்டேவிட்டாள் இவள்…

இப்போது திரும்பி ஒரு விதமாக இவளைப் பார்த்தவர் அடுத்தும் ஒன்றும் சொல்லாமல் சோக முகத்தோடு எங்கோ பார்த்தார்…

“அவருக்கு தமிழ் தெரியாதுமா…” ஜீவா காரணம் சொன்னான்…

ஆமான்ன…..டப் செய்து புரிஞ்சுக்க இது என்ன மூவியா?

“தாத்தா க்யூம் ரோனா ஹெய்…?’ இவளுக்கு தெரிந்த ஹிந்தியில் இவள் கேட்க….அந்த பிபிஎஸ் சிரிப்பானோ என ஓடுகிறது உள்ளே உதறல்…. சிரிச்சா சிரிச்சுட்டு போறான்… என மனதை சமாதனப் படுத்தியபடி முக்கால் கண்ணால் தாத்தாவையும் கடைக் கண்ணால் ஜீவாவையும் பார்த்தால்…

அவன் முழு அக்கறையாய் தாத்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் பதிலுக்காக….

இப்போது தாத்தா ஏதோ நீளமாய் சொல்ல…. எல்லாம் புரியவில்லை எனினும்….அவர் அரண்மனை தோட்டக்காரர்….பூசணி விளைய வைத்து அரண்மனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்……தரமில்லை என திருப்பி அனுப்பிவிட்டனர் அங்கே…..அரண்மனை சமையலுக்கு வருவதென்றால் அது சரியாய் உருண்டு திரண்டு பந்து போல பார்வையாய் இருக்க வேண்டுமாம்… இந்த வேலையும் வருவாயும் இவருக்கு வாழ்வாதாரமாம்…என்பது இவளுக்கு புரிந்தது…

இப்போது இவள் அவர் கூடையில் இருந்த பூசணிகளைப் பார்த்தாள்…..இது தரையில் மண்ணில் அமர்ந்து வளந்த விதத்தில் ஒவ்வொன்றும் கொஞ்சம் நெளிந்தாற் போல் இருக்கிறது…

சுர் என கோபம் வருகிறது….”வெட்டி சமைக்க போற காய் என்ன ஷேப்ல இருந்தா என்னவாம்….? யார் இங்க ராஜா..?” இவள் எகிற..

“ஹேய்…காயெல்லாம் ராஜாவா செக் செய்துட்டு இருப்பாருன்னு நினைக்கிற நீ….இது கீழ உள்ளவங்க செய்ற கெடுபிடி…..ராஜாலாம் நல்ல ராஜா தான்….எனக்கு தெரிஞ்சு இப்ப நாம அக்பர் காலத்துல இருக்றோம்னு நினைக்கிறேன்….” ஜீவா விளக்க….

அக்பரா…இவளுக்கு சைடில் கூடுதலாய் ஒரு லைட்…… அவளுக்கு வரலாற்றில் படித்த அக்பர் காலம் பிடிக்கும்……இங்க வர முடிஞ்சா நல்லா இருக்கும்னு நான் எவ்ளவு ஆசப் பட்டிறுப்பேன்….

“அக்பர் அச்சா ராஜா ஹெய்…அவர் சமஜ்சக்தி ஹெய்…” சொல்லிக் கொண்டிருக்கும்போது இவளுக்கே இவள் ஹிந்தியில் சிரிப்பு வருகிறதெனில்….. தாத்தா அருகில் முழங்காலிட்டு அமர்ந்திருந்த இவள் அருகில் சட்டென ஒரு கால் மடக்கி உட்கார்ந்தவன் கண்களால் பேசாதே என்பது போல் ஒரு பதற்றமுடன் சகை செய்தவன்….

“அரசாரோட பேர இப்டி சொல்லக் கூடாதுன்னு எதுவும் இருக்கும்…” என இவளை எச்சரித்தான்….

ஆமான்ன…இவளுக்கு இப்போது இது உறைக்க……அதற்குள் அங்கு வேறு யாரோ வரும் காலடி சத்தம்…

“அடுத்தவங்க  யாரும் நம்ம பார்த்துட்டு இப்டி சும்மா கதை பேசிட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது…. நீ தாத்தாட்ட அவர் தண்ணி வச்சுறுக்கார் பாரு பானை..அது மாதிரி உருண்டை பானைல… பூசணிகாய் செடியில பிஞ்சா இருகப்பவே விட்டு வைக்க சொல்லு……விளையவும் பானை ஷேப்லயே இருக்கும் காய்…..மண்பானைதான அது….பானைய மட்டும் உடச்சுட்டா… பெர்ஃபெக்ட் ஷேப்ல காய் கிடச்சுடும்னு சொல்லு….. நாம இப்ப கிளம்பியாகனும்…”

சொல்லியபடி கிட்தட்ட இவளுக்கு கவசம் போல் பின்னால் நின்று கொண்டான்…. கழுகின் கண்களை கண்டாள் அவன் பார்வையில்…சுற்றிலும் கண்காணிக்கிறான் அவன்….

அந்த காலடி சத்தததில் அப்படியே எங்கே இவளை இழுத்துக் கொண்டு போய்விடுவானோ என இவள் நினைத்துக் கொண்டிருக்க….அத்தனை சூழலிலும் ஆப்டா அந்த தாத்தாக்கு ஒரு சொலுஷன் சொல்லிட்டு கிளம்புற அவன் தன்மை…..இவளை சேஃப் காட் செய்ய நினைக்கிற அவன் மனம்….

‘கொஞ்சம் குட் பாய்தான் இவன்’ என சொல்ல வைக்கிறது இவளை இவளுக்குள்…

“தாத்தா…இதர் தேக்கோ…..ஏ பானை ஹெய்….” அவர் குடி நீர் வைத்திருந்த பானையை கையில் எடுத்தவள்…..

“கத்து ப்ளான்ட் ஹெய்….” எனும் போது…. இதற்கு மேல் எப்படியும் அவளால் சிரிக்காமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவள்…..இவனைப் பார்க்க……அவனும்  சிரிப்பை அடக்க படாதபாடு படுகிறானோ…??!!

முறைப்பும் அதை மீறிய பீரிடும் சிரிப்புமாய் இவள்….…

“நாட் பேட்…குட் ட்ரை….” என இப்போது அவன் வார்த்தை பாராட்டினாலும் அவனும்  இவளைப் போலத்தான்  சிரித்துக் கொண்டிருந்தான்….

.கூடவே அருகில் இருந்த மரத்தில் குட்டி குட்டி சிவப்பு பழங்களுடன் படர்ந்திருந்த கொடியை எடுத்து இவளிடம் கொடுத்தான்….இவள் ஆக்க்ஷனில் உருண்டை பூசணிக்காயிற்கு  சின்சியராய் வழி சொல்லி முடிக்கும் போது….இவளுக்கு எதிரில் வந்து நிற்கிறது அந்த உருவம்…..பல்லக்கில் வந்தவர்…

பக்கென பயந்து போய் இவள் திரும்ப……கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜீவாவைக் காணோம்….

அடப்பாவி மாட்டிப்போம்னதும் விட்டுட்டு ஓடிட்டியா….??!!  இவள் நினைத்து முடிக்க கூட இல்லை…..இவள் சட்டென இழுக்கப் படும் உணர்வு….காருக்குள் வந்து பொத்தென அமர்ந்தாள்…..காரை எடுத்துட்டு வந்திருக்கான்…..அது யார் கண்ணுக்கும் தெரியாத மோட்ல இருக்குது கார்…. இவளைப் பிடித்து உள்ளே இழுத்திருந்தான் அவன்….

ஹப்பா என்றிருக்கிறது இவளுக்கு….

இதற்குள் அங்கிருந்த அந்த  தாத்தா….அந்த புது மனிதர்….. ரெண்டு பேரும் அதிர்ச்சியாய் இவளைத் தேட….

காரிலேயே சென்று சற்று தொலைவில் நின்ற டாமரை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர் இவர்கள்…..

“கடைசியா வந்தாரே அவர் யாருன்னு தெரிஞ்சுதா…?” ஜீவா கேட்க

“எங்கயோ பார்த்த மாதிரி இருக்குது…”

“பீர்பல்….” அவன் சொல்லும் போதே இவளுக்கு இவரது பெயின்டிங்கை  பார்த்த நியாபகம் வந்துவிட்டது….

“ஹையோ என் மோஸ்ட் ஃபேவரிட்….அங்க வச்சே சொல்லிருக்கலாமில்ல நான் ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வந்திருப்பேன்…” இவள்தான்….சும்மானாத்துக்கும் ஒரு ஆதங்கம்….

“அதான் உன் ஆட்டோகிராஃப பீர்பல் தாட்ல போட்டுட்டியே….   காபூல் அரசர் ஒரு குடம் அதிசயம் அனுப்பவும்னு அரசர் அக்பருக்கு ஒரு லெட்டர் அனுப்புவாரு…..அதுக்கு  பீர்பால் குட பூசணி அனுப்பி வைக்க சொல்வார்……அதைப் பார்த்த காபூல் அரசர் இவ்ளவு குறுகுலான வாயுள்ள குடத்துக்குள்ள பூசணிய எப்டி போட முடியும்…..இது அதிசயம்தான்னு ஒத்துபார்னு ஒரு கதை நியாபகம் இருக்கா…..? பீர்பால்க்கு ஐடியா குடுத்துட்டு வந்தே இப்ப நீங்க தான மேடம்…” அவன் வார…

“வாவ் இது சரித்ரா சரித்ரத்துல தடம் பதிச்ச நாள்….” மனசுக்குள் மட்டுமாய் முனங்காமல் இப்போது அவன் முன் வாய்விட்டே சொல்லிக் கொள்ள முடிகிறது அவளால்…..

அடுத்த இரண்டாம் நிமிடம்….கண் மூடி திறக்க….இப்போ இவளோட ஊட்டி….

“அப்போ நான் கிளம்புறேன் சக்கு….” ட்ரைவர் இருக்கையில் இருந்தபடி இப்போது அவன் இவள் புற கதவை திறந்துவிட….

“என்னது சக்குவா…?”

“ஆமா சரக்குன்னு கூப்டா நல்லா இருக்காதுல்ல…..அதான்…..” அவன் சின்ன சிரிப்புடன் சொல்லியபடி இவளைப் பார்க்க….

இவள் புகை வருமளவு கோபத்தில் முறைக்க….

“எப்பவும் சரி சரின்னு சொல்லப் போறேன்…இப்ப மட்டுமாவது சக்குன்னு சொன்னேன்னு இருக்கட்டும்….” சொல்லிவிட்டு கதவை மூடினான்….

இவளுக்கு எதுவோ புரிந்தும் புரியாமலும்…..கொஞ்சமே கொஞ்சம் கஷ்டமா இருக்கோ அவன் கிளம்புறான்னு…..

‘இனி எப்ப பார்ப்போம் இவன?’ இவள் சிந்தனை தொடங்கிய நொடி….

“டூ இயர்ஸ்ல பார்ப்போம்….” மறைந்திருந்தது அவன் கார்….

இரண்டு வருடங்களுக்கு பிறகு….

பெர்ஃபெக்ட் அரேஞ்ச்ட் மேரேஜ்……ஜீவாவுக்கும் சரித்ராவுக்கும் நடந்திருக்க….. திருமண இரவில்…….

“ அன்னைக்கு முன்ன எதுக்கு டைம் மஷின்ல வந்தீங்கன்னு கேட்டுட்டே இருந்தல்ல…..” ஜீவா ஆரம்பிக்க….

‘ம்…..இன்னைக்கும் எதாவது சொல்லி அதுக்கு பதில் சொல்லாம போவீங்க…..நானும் நம்ம வெட்டிங் ஃபிக்‌ஸானதுல இருந்து  கேட்டுட்டு இருக்கேன்…..நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்….’ பெட் அருகில் நின்றிருந்த சரித்ரா  மனதிற்குள் பொரிந்தாள்……பின்னே அவள்  இந்த விஷயத்தில் கோபமா இருக்கான்னு அவனுக்கு புரியனுமே….

“இல்ல ரித்து குட்டி இன்னைக்கு கண்டிப்பா சொல்வனாம் நான்….” இவள் கை பிடித்து தன் அருகில் அமர வைத்து….இவள் தாடை பிடித்து செல்லம் கொஞ்சிய   அவன் கையை ஒரு தட்டு….

‘ரித்துவா….?அப்ப அந்த சல்வாரும் நான் நினச்ச மாதிரி உங்க வேலை தானா?…’ இவள் மனதிற்குள் அடுத்த அம்பு வித் ஃபயர்….

“ சல்வாரதான நினைக்கிற…..பின்ன….முதல் தடவை பொண்டாட்டிய பார்க்க போறவன் அவளுக்கு எதுவும் கொடுக்காம வந்தா எப்டியாம்…?. ரித்ரான்ற உன் நேம ரித்துவாக்கியாச்சு….” அவன் விளக்க அவனை முறைத்தாள்…..

“நம்ம மேரஜுக்கு பிறகு உள்ள ஃப்யூசர்ல இருந்து தான் அன்னைக்கு அங்க வந்தேன்……அதான் இப்ப நீ சொன்ன பிபிஎஸ் வரை தெரிஞ்சு இருந்துச்சா…. அங்க வந்து எழுதி வச்சு உன்னை குழப்பிட்டேன்…….”

அவன் விளக்க விளக்க இன்னுமாய் உர்ர்ர்ர்ர்ர்ர் என இவள்…..

“ சரி இப்ப விஷயத்துக்கு வர்றேன்…. நான் ஏன் வந்தேன் தெரியுமா….?”

‘நான் கேட்க மாட்டேன்…’ மனதிற்குள் சொல்லியபடி இவள் காதுகளை மூட…..

“அப்டியே நம்ம வெட்டிங் ப்ரபோசல் உனக்கு வந்த நாளை கொஞ்சம் யோசிச்சுப் பாரு….” அவளை தன் தோளோடு இழுத்து சாய்த்தான்….…அவசரமாய் அவனை பிடித்து தள்ள முயன்றாள் அவள்….

“காத திறந்துட்ட…அப்ப நானே சொல்றேன்….” அவன் சொல்ல மீண்டுமாய் தன் காதுகளை இவள் மூட….

இன்னும் முறைப்பாய் விறைப்பாய் அமர்ந்திருந்தாலும்….அந்த நிகழ்வு அவள் கண்ணில் விரிகிறதுதான்…..

“லேப் டாப்பை மடியில் வைத்து குடைந்து கொண்டிருந்த போது இவளது அம்மாவின் அழைப்பு…

“சரு….நான் சொன்னேன்ல ஒரு இடம்…..” அம்மா ஆரம்பிக்க…

“அம்மா…..” கெஞ்சலாய் வழிந்தது இவள் குரல்….

“நீதான் வேலைக்கு போய் டூ இயர்ஸ் கழிச்சுதான் வெட்டிங்க்னு சொன்ன……இப்ப டூ இயர்ஃஸ் ஆயாச்சு….” அம்மாவின் குரலில் உறுதி…. மொட்டையாய் இனி மறுக்க முடியாது என இவளுக்கு தெரியும்…..மேரேஜ் என்றால் ஒரு பக் பக் ஃபீல் இருந்தாலும் திஸ் இஸ் ஹெர் டைம்

“எனக்கு அப்பாக்குலாம் ஒரு  இடம் பிடிச்சுறுக்குன்னு சொன்னோம்ல…” அம்மா தொடர… “அந்த பையன் ப்ரொஃபைல் அனுப்பி இருக்கேன்…..நீ பாரு….”

இங்கு மெயிலை திறந்தாள்…..

“ஆர்மில ரிசர்ச் விங்ல இருக்கார் போல…” அம்மா சொல்ல

‘அம்மா அம்மா நல்ல அம்மால…எனக்கு ஆர்மி போலீஸ்லாம்…….” அவசர அவசரமாக மறுக்க தொடங்கிய இவள் கண்களுக்கு முன்னாக இங்கு லேப்டாபில் திறக்கிறது அந்த ஃபோட்டோ…….

ஜீவாவின் முகம்……தோள்……..

“சரிமா அப்பாக்கு பிடிச்சிறுக்குன்னா…..எனக்கு ஓகே…….ப்ரோசீட் செய்ங்க…” சொல்லிய பின்பே அவனது ஃப்ரொஃபைலில் கண் ஓட்டினாள்…..

“உன்ன முன்னமே பார்த்திருக்கேன் ரித்து….அதோட ஆர்மி போலீஸ்லாம் வேண்டாம்னு சொல்வன்னும் தெரியும்…. அதான் உனக்கு கொஞ்சம் அறிமுகமாகிட்டா சரியா இருக்கும்னு நினச்சேன்….”கணவனின் குரலில் நடப்புக்கு வந்தாள் இப்போது……

“இல்லனா இது காதலோட காலமா இருக்காதே நமக்கு…” அவனை விழி நிமிர்த்திப் பார்த்தாள்….

“அதோட அன்னைக்கு அப்டி பஸ் ப்ரேக்டவ்ண்னு நீ ரோட்ல நிக்றப்ப உன்னை எப்டி தனியாவிடவாம்..? சொல்லியபடி இவளை கையோடு அணைத்தவன் தோளில் இதமாகவே  சாய்ந்தாள் இப்போது…

“அதெல்லாம் சரி…..இப்ப நம்ம மேரேஜ் ஃபிக்‌ஸானப்ப இதெல்லாம் சொல்லாம….இன்னைக்கு மட்டும் சொல்றீங்க ஏன்னு தான நினைக்கிற….?” அவன் கேட்க…

உண்மையில் இதற்கு காரணம் இவளுக்கு புரியவில்லைதான்…..அவன் கண்களை கேள்வியாய் பார்த்தாள்…..

“அது வந்து நீ கோபமா இருந்தா மட்டும் தான்  பேசாம இருப்ப…..அடுத்தவங்களை கொஞ்சமாவது பேசவிடுவ…..இல்லைனா நைட் முழுக்க மொக்கை போட்டே முடிச்சுறுவன்னு உன் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பவும் சொன்னாங்க……இன்னைக்கு நைட் நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியம்….” அவன் சொல்ல சொல்ல…… அவள் முறைத்த முறைப்பில்……..அவள் நெற்றி முட்டிய இவன் முட்டலில்……இவனுக்கு முகம் கொடுக்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்ட அவள் செயலில்…..அவளை பின்னிருந்து அணைத்த இவன் அணைப்பில்…..

காதல் காலமிது…….

7 comments

  1. Sweety sis neenga enna correct a en moodu ku thaguntha mathri kathai update panreenga 😂😂😂 ok kathai pattri : muthal scean la jeeva ka ga logic pakka ma vittudalam (pinna bus brake down na athuvum untime la… first ladies ku thana first preferance koduppanga) sarithra .. enna solla .. superb sweety’s heroine.. nig name vakkarathu, kanavu scene sollrathu, puthusa pakra oruthar kitta varra avaloda safe and lovable feelings nu pappa semma.. jeeva sweety yoda normal hero tha, ana time mechine la vanthu thannoda rithu ponna thanku ethira oru vartha kuda solla vidama avar pakkam safe pannikittar. Ana sweety sis beerbal ku idea koduthathe rithuvum jeevavum nu sonneenga parunga….. 😁😁😁goundamani yoda addra addra moment than.. enaku eppa tha time mechine irruntha paravallaye nu oru thought poitu irrunthathu.. fb ku vantha correcta intha kathai ya update panirukeenga.. i feel so happy..

  2. Wow sema….time machine yeppadi la use aguthu….pot pumpkin sema sirippu….birbal a pathacha…..avvvv….nanum pakanum…..

  3. Hi Anna
    Story very superb …oru sarithira kathaiyai ippadi sadharanama soliteengale😂😂 akbar birbal varaikum paarthachu … I enjoyed this

  4. Very nice..enjoyed… Nanum ninaichathu undu nambaluku Oru time machine irunthu rajakal kalathuku Oona Epdi irukumnu😂😂

Leave a Reply