காதல்வெளியிடை 21

சகாயன் அப்போதுதான் பவன் நித்து திருமண இடத்திலிருந்து கிளம்பி வந்திருந்தான்.

நித்துவின் விவாகரத்தில் தன் பக்க உதவியை அவனது தந்தைக்கு தெரியாமலேதான் செய்து கொடுத்திருந்தான் சஹா. இல்லைனாதான் இடையில புகுந்து இன்னும் எதாச்சும் திருட்டுத்தனம் செய்து ப்ரச்சனைய இழுத்துட்டே போவாரே அவனோட அப்பா. அதனால் விவாகரத்து தீர்ப்பு கூட அவனது தந்தையின் கையில் கிடைக்க கால தாமதமாகும்படி செய்திருந்தான் இவன்.

ஆக விஷயம் தெரிந்து அவர் துள்ளிக் குதிக்கும் போதுதான் அந்த தர்மராஜுக்கு தெரியவே வருகிறது நித்துவுக்கு வேறு திருமணம் நடக்க இருக்கிறதென.

நித்துவும் சரி… அவளை மணக்கவென வேறு யாரும் சரி… இரண்டாவது கல்யாணம் என்ற ஒன்றிற்கு போகவே மாட்டார்கள் என அவரது ஆணாதிக்க பழமைவாத கொள்கையின் படி சர்வ நிச்சயமாய் நினைத்திருந்தவர் தர்மராஜ். இதில் அவரது மகனின் நண்பனே அவளை மணக்கிறான் என தெரியவரவும்… நிச்சயமாய் இதில் சகாயனின் கை இருக்கும் என நம்பினார் அவர். கொதித்தும் போனார்.

‘தர்மராஜ் மருமகளுக்கு கல்யாணமாம்னு ஊர்காரன் பேசுறதே பெருத்த அவமானம்னா… அதை முன்ன நின்னு செய்றது அவரது மகனேன்றப்ப அது இன்னும் எவ்வளவு பெரிய கேவலம்’ என குமுறிய அவர்… அந்த கல்யாண வீட்டில் அத்தனை பேர் முன்னிலையில் நித்துவையும் பவனையும் கண்டிப்பாக அவமானப் படுத்த வேண்டும் என துடித்தார்.

தன் மகன் சகாயனையோ கட்டி வைத்து அடித்து நொறுக்க வேண்டும் என கொந்தளித்தது அவரது கௌரவம்.

ஆக அவருக்கு கிடைத்த அரைகுறை தகவல்களை வைத்து… புவனேஷ்வரில் திருமணம் என புரிந்திருந்தவர் அது எங்கே என தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பி இருந்தார்.

பவன் நித்து திருமணம் முடியும் வரையே அது தன் தந்தைக்கு தெரிய வேண்டாம் என நினைத்திருந்த சஹா ஒருவேளை அதற்கு முன் தெரிந்துவிட்டால் இப்படி ஒரு நிலை வரும் எனவும் எதிர்பார்த்தான். அவனோட அப்பாவோட கௌரவ வெறியப் பத்தி அவனுக்கு தெரியாதா? ஆக முன்னெச்சரிக்கையாக பல ஏற்பாடுகளையும் செய்திருந்தான் அவன்.

இவர்கள் அனுப்பிய குறிப்பிட்ட திருமணபத்திரிக்கை இல்லாத யாரும் திருமண இடத்திற்கு வரமுடியாதபடியும்… விழாவிற்கு வரும் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடாதபடியும்… பலத்த ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான். அந்த ஏற்பாடுகளை திருமண ரிசார்ட்டில் மேற்பார்வை செய்துவிட்டு… அதைப் பற்றி பவனிடமும் பேசிவிட்டு வரத்தான் அன்று அவன் திருமண நடக்கும் ரிசார்ட்டுக்கு சென்றது.

அந்நேரம் ஷ்ருஷ்டி அவளாகவே கிளம்பி வெளியே சென்றுவிட்டாள்… வெகு நேரமாக திரும்பவில்லை என தகவல் கிடைக்கவும் வெகுவாக தவித்துப் போனான் அவன்.  கார்பர்க்கிங்கில் இவனைக் காணவும் அவள் ஓடி ஒழிந்ததை கவனித்திருந்தான் இவன். அதனால் இவனை தவிர்ப்பதற்காகத்தான் அவள் வெளியே போய்விட்டாளோ… போன இடத்தில் இவனது அப்பாவின் அடி ஆட்கள் யாரிடத்திலும் மாட்டிக்கொண்டாளோ என்ற பெரும் வதை அவனுக்கு.

ஆக இவன் திருமண ரிசார்ட்டைவிட்டு கிளம்பி வந்துவிட்டான். ஷ்ருஷ்டி இவன் நிமித்தம் ஒழிந்து கொண்டிருந்தால் உடனே நித்துவிடம் வந்துவிடுவாள்… அப்படி வரவில்லை என்றால், இவன் அவளைத் தேடிப் போக வேண்டும் என தத்தளித்துக் கொண்டிருந்த நேரம்… இங்கே இவன் வீட்டிலே இவன் எதிரிலே வந்து நிற்கிறாள் அவள்.

இதை என்னவென்று சொல்வதாம்?

ஷ்ருஷ்டிக்கு தான் நிற்கும் இடம் நிலை எதுவும் புரியவில்லை… மழையையும் வெளியே வெடித்துக் கொண்டிருக்கும் கலவரத்தையும் சட்டென முற்றிலும் மறந்தே போனாள்.

அரள அரள ஓடி வந்தவளுக்கு இந்த இடத்தில் சகாயனைப் பார்க்கவும் அதுவரைக்குமே அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருந்ததால் இப்படி தாறுமாறாய் மனதுக்குப் படுகின்றதோ என்றுதான் முதலில் தோன்றியது.

மூச்சிளைக்க இளைக்க நின்றவள் எதிரில் நிற்பவனை காட்சிப் பிழை எனதான் எண்ணிக் கொண்டாள். அவனை நேரில் பார்க்க தவிர்த்தவளுக்கு இப்படி அவன் உருவைப் பார்ப்பது அவளது ரணகாய இதயத்தில் மயில் பீலி வருடலாய் நழுவ… அவளை மீறிய நிலையில் இமைக்காது சிலையாய் இவள்.

சஹாவுக்கும் இவளது இந்த வருகை சற்றும் எதிர்பாராத ஒன்றுதானே… அவனுமே ஒரு ஜெர்க் வாங்கினான் என்றாலும் அடுத்த நொடியே அவனுள் வெடித்து சிதறுகிறது நிம்மதி பெருங்காற்று… அதனிலும் மேலாய் அவனை ஆளுகை செய்கிறது… அலை அலையாய் தன்னுள் அடித்து சுருட்டி புதைக்கிறது ஆனந்த புனல் காடு ஒன்று.  அவளாக அவனைத்தேடி வந்தாளோ அல்லது அற்புதமாகத்தான் அவன் கைகளுக்குள் வந்தாளோ… எதோ வகையில் இவனிடமாக வந்திருக்கிறாளே…

அதே நேரம் அவள் வந்து நிற்கும் நிலையை வைத்து அவளை யாரும் துரத்துகிறார்களோ என்றும் நினைத்தவன்

படு வேகமாய்ப் போய் அவள் பூட்டி இருந்த கதவுக்கு பக்கவாட்டில் இருந்த ஜன்னல் வழியாய் வெளியே என்ன எனப் பார்த்தான்.

அதான் அவன் அசைந்தாயிற்றே… இன்னுமா தெரியாமல் இருக்கும் அவன் நிஜம் என? அதிர்ந்தே போனாள் ஷ்ருஷ்டி…!!! இங்கயும் இவனா?!!

சஹாவுக்கோ வெளியே மழையைத் தவிர எதுவும் காணக் கிடைக்கவில்லை…

“என்னாச்சு சிமி?” வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் கேட்க…

அவ்வளவுதான் துடித்தே போனாள் ஷிருஷ்டி…!!! சிமியா??

முன்பே அவள் மனதுக்கு தெரியும் அவன் சீனிமிட்டாய் என்பதைத்தான் சுருக்கி சிமி என இவளுக்குப் பெயர் வைத்தான் என. இன்னும் இவளை சிமி என்கிறான் என்றால் இப்போதும் அவள் மீது அவனுக்கு காதல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

சரேலென அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

இப்போது கண்ணில்பட்ட அவன் விழியிலும் முழுமுகத்திலும் காத்திருந்த காலத்தில் கனிந்து வந்த காதலணைத்தும் மறையாமல் திறந்து கிடந்து அவள் புரிதல் சரிதான் என கட்டியம் கூறின.

இதை சற்றும் எதிர்பாராத அவளது காதல் பாகம் தாங்க முடியாமல் தவித்தும் வெடித்தும் கிளம்புகிறது என்றால்…

அவனை நினைக்கவோ விரும்பவோ தனக்கு எந்த வித தகுதியும் இல்லை என சர்வ நிச்சயமாக நம்பி இருந்த அவளது குற்றமனப்பான்மையோ

“இவன் எப்ப உன்ன மறந்து… எப்ப ஒரு நல்ல பொண்ண கல்யாணம் செய்ய…?! இதுல இப்ப நீ அவன்ட்ட பேசி பழகி வேற வச்ச இன்னும் அது எவ்வளவு கஷ்டம்…?! இங்க இருந்து இப்பவே போய்டு…” என அப்பழுக்கற்ற இவளது அதீத காதலை குத்தி ஏவுகிறது.

அவ்வளவுதான் அடுத்த நொடி எதையும் எண்ணாது கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

ஆனால் எல்லாம் இரண்டே நொடிதான்… இவள் வெளியே பாய… சற்றும் இதை எதிர்பாராத சஹா “ஹேய்” என்றபடி அவசர அவசரமாய் இவள் பின்னால் வர…

இவள் அவ்வீட்டின் வாசலை தாண்டிய நொடி.. அவள் காதில் விழுகிறது அதட்டும் வகையான அந்த முரட்டுக் குரல்கள்.

இவளது வீட்டிற்கு முன் புல்லட்டில் இருந்தபடி கையிலிருந்த சில போட்டாக்களை காட்டி யாரிடமோ அதட்டலாக விசாரித்துக் கொண்டிருந்தனர் இருவர். சற்று முன் இவள் பார்த்த கலகம் ஞாபகம் வந்து இவள் சற்றுத் திணறினாள் எனில்… அவ் வீட்டின் படிகள் சற்று அளவுக்கு மீறியே உயரமாய் இருக்க…. அதன் மேல் படியில் உயரத்தில் நின்றாள் இல்லையா எதோ ஒரு கோணத்தில் அவளது கண்ணில் பட்ட அந்த போட்டோக்களில் உயிரே போய்விட்டது இவளுக்கு.

அந்த புகைப்படங்களில் இவள் மற்றும் சஹா முகங்கள் இவளுக்கு தெளிவாக கிடைக்கிறது. அந்த புல்லட்காரன்ங்கள் ஓங்கு தாங்காய் முகம் கொள்ளா தாடியோடு மட்டும் இல்லை… முதுகுப் புறத்தில் நீண்டு வெளியே துருத்திக் கொண்டு நின்ற வாள் போன்ற கத்திகளுடனும் நின்றிருந்தனர்.

ஷ்ருஷ்டியோ சற்றுமுன்தானே இதேப் போன்ற கத்திகளால் மக்களை இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் வெட்டித் தள்ளியதைப் பார்த்தாள்… அப்படின்னா சஹாவைக் கொல்லவா தேடுறாங்க…? என மிரண்டாள். சஹாவின் அப்பாதான் ஆட்களை ஏவி இருக்கிறார் என அவளுக்கு தெரியாதே.

சஹாவின் உயிருக்கு ஆபத்து என்ற சிந்தனை வந்தபின் அதற்கு மேல் நின்று யோசிக்கவா முடியும் இவளுக்கு? அந்த தடியன்ங்கள் கவனம் இவர்கள் மீதாய் வரும் முன்னே, வந்த வேகத்தைவிடவும் மின்னல் வேகத்தில் திரும்பியவள் இவளை நிறுத்திவிடும்படி ஓடி வந்த சஹா மீதே மோதிக் கொண்டாள். அப்படியே அவனை அப்பிப் பிடித்து வீட்டிற்குள்ளாக தள்ளியபடி வந்து கதவை மூடினாள்.

எங்கு அவன் எதையும் இந்நேரத்தில் சொல்லி அது வெளியில் இருப்பவர் காதில் விழுந்து இவர்கள் இங்கு இருப்பதை காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற தவிப்பில் தன் ஒரு கையால் அவன் வாயை வேறு படு வேகமாய் மூடி வைத்தாள்.

“ப்ளீஸ் ப்ளீஸ் எதுவும் சொல்லிடாதீங்க… அங்க உங்கள மர்டர்…” என அவன் காதுக்குள்ளாக கிசுகிசுப்பாய் பரிதவித்தவள் அதற்கு மேல் எதையும் சொல்ல இயலாமல் நின்று போனாள்.

இதற்குள் அவள் பிடியில் இருந்த அவன், தன் வாயை மூடி இருந்த அவளது கையை கூட எடுக்க முனையாது… அவள் பின்னிருந்த அடைபட்ட கதவை தன் கை நீட்டி தாழிட்டிருந்தான். அதுவே விஷயம் அவனுக்கு புரிந்துவிட்டதை இவளுக்கு தெரிவிக்கிறதுதானே…

இன்னுமே அவனைப் பிடித்தபடி அவனுக்கும் கதவுக்கும் இடையில் இருந்த இவள் காது புறமாக குனிந்து… அவளைப் போலவே கிசு கிசு குரலில் “அப்டில்லாம் என் சீனிமிட்டாயவிட்டு என்னை யாரும் பிரிச்சுட முடியாதாம்…” என்று ஆறுதலும் சொன்னான்.

ஒரு பக்கம் இவள் செவி தொடங்கி தண்டுவடம் வரை செந்தேன் மின்னல்கள் சின்னதும் பெரிதுமாய் தாண்டவம் ஆடுகிறதென்றால்… மறுபுறம் ‘ஐயோ தெய்வமே அவனுக்கு என்ன ஒரு பொய்யான நம்பிக்கைய கொடுக்கிறேன்’ என தன் பிடியை உதறத் தோன்றுகிறது இவளுக்கு…

ஆனாலும் ஏன் என்று தெரியவில்லை முரட்டடியாய் எதையும் அவனுக்கு செய்ய இவளுக்கு இயலவே இல்லை.

‘அவனுக்கு ஆபத்துன்னு இவ பதறி வந்து நிக்கப் போய்தானே அவனுக்கு இப்டில்லாம் சொல்ல முடியுது’ என தவித்தாள். அதற்காக அவனை இந்நிலையில் விட்டுவிட்டு போகவும் அவளால் முடியாது.

“நான் மேரேஜே செய்றதா இல்ல” என முனங்கியபடி மெல்ல தன் கைகளையும் தன்னையும் அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் அடுத்து எதுவும் பேசவில்லை… கூட வரும்படி சைகை செய்துவிட்டு வீட்டின் உள்நோக்கி சென்றுவிட்டான்.

அந்த வீடு மிக மிக சிறியதாக இருந்தது… இவர்கள் நின்ற குட்டி வரவேற்பறை… அதை தாண்டியதும் இருந்த சிறிய அறையில் ஒரு ஓரத்தில் அடுப்பு மேடை… அடுத்ததாய் பின்வாசல்… எதிர்பக்கம் சின்னதாய் டைனிங் டேபிள்… ரெண்டே பேர்தான் இருக்க முடியும்… அந்த அறைக்கு பக்கவாட்டில் இன்னொரு கதவு…. அதற்குள் மிக குட்டியாய் ஒரு படுக்கை அறை…

இங்குதான் அவளைக் கொண்டுவிட்டான் அவன்… அதோடு அங்கிருந்த ஒரு டவலை எடுத்து இவளிடம் நீட்டியவன்… தன் மொபைலில் யாரையோ அழைக்கவும் செய்தான்…

“எரும… சிமி இங்கதான் இருக்கா… நீ டென்ஷனாகாம நான் சொன்னத செய்யப்பாரு…” என அவன் சொல்ல… அவன் பவனிடம் பேசுகிறான் என உடனடியாக புரிந்துவிட்டது இவளுக்கு.

“இல்லடா… நான் கிளம்பினேன் அதுக்குள்ள அவளே வந்துட்டா…” இவளைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான் சஹா என புரிகிறதுதானே…

அடுத்தும் பவன் என்ன சொன்னானோ…

“நீயே அவட்ட சொல்லு” என இப்போது மொபைலை இவளிடம் கொடுத்தான் சஹா.

“சாரி ஜிஜு… வாக்கிங்னு கிளம்பி வந்தேன்… இப்டி ஆகும்னு எதிர்பார்க்கல” என இவள் ஆரம்பிக்க… அதன் பின்னான பரஸ்பர பேச்சுகளுக்குப் பின்…

“ரொம்ப நம்பதகுந்த இடத்துல இருந்து இன்ஃபோ சோட்டு… இங்க நாளைல இருந்து கர்ஃப்யூ இருக்கும் போல… அங்கங்க கலவரமா இருக்குது… அதனால இங்க கல்யாணம் வைக்கிறது இம்பாசிபிள். நாம எல்லோரும் கொல்கத்தா கிளம்புறோம்… அங்க வெட்டிங் செருமனிக்கு தேவையான எல்லா ஏற்பாடையும் சஹா செய்திருக்கான்… அவன் அப்பாக்குவேற கல்யாணத்த பத்தி இப்பதான் தெரியும் போல… கல்யாணம் வீட்ல வந்து ப்ரச்சனை செய்யனும்னு அவர் ஆட்களை அனுப்பி இருப்பார் போல… அவங்க வேற இங்க கல்யாண ஹால் ஒன்னு ஒன்னையும் தேடிட்டு இருக்காங்க… நாங்க எப்டியாவது சமாளிச்சு பத்ரமாவே ஏர்போர்ட் போய்டுவோம்… ஃப்ளைட்ல டிக்கெட் புக் செய்தாச்சு… நீ சஹா கூட வந்துடுவியா? இல்ல நான் வந்து உன்னை பிக்கப் செய்துட்டு ஏர்போர்ட் கிளம்பவா?” என நிலமையை சொல்லி விசாரித்தான் பவன்.

“இல்ல ஜிஜு… நீங்க கிளம்புங்க… நான் அவங்க கூடவே வரேன்…” இந்த ஆபத்தான சூழ்நிலையில் பவனை இழுத்தடிக்கவா என்ற நினைவில் இப்படி முடிவெடுத்தாள் ஷ்ருஷ்டி. சஹாவின் சம்மதம் இல்லாமல் பவன் இதை கேட்டிருக்கமாட்டான் என தெரியுமென்றாலும்… அவளை அறியாமல் இவள் கண்கள் இப்போது சஹா முகத்தை வாசிக்க செல்ல…

அவனோ உட்சபட்ச சந்தோஷத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குள்ளும் அத்தனை திசையிலுமாய் இறகு விரித்து மிதந்து கொண்டிருக்கிறான் என்பது இவளுக்கு எதுவும் சொல்லாமலே புரிகின்றது… அவன் கண்களில் வெடித்து வெடித்து தெறிக்கும் ஆனந்த மின்னல்களின் வீச்சும் ஆளுகையும் படு அதீதம்.

ஏன்??? அவசர அவசரமாய் ஆராய்கிறது இவள் மனது.

ஷ்ருஷ்டிக்கு யாரையுமே அத்தான் என்றெல்லாம் கூப்பிட பிடிக்காது… அதுவும் பவனை ம்..ஹூம்… நோவே… அதனால் எப்படியாவது கூப்பிட்டு சமாளிப்பதுதான்… இப்பதான் ஜிஜுக்கு மீனிங் தெரிஞ்சுட்டே… அதனால இப்படிக் கூப்டுறது… அந்த ஜிஜுவுக்கா சஹா சந்தோஷப்படுகிறான்? ஓ பூரி விஷயம் இவளுக்கு புரிஞ்சுட்டுன்னு அவனுக்கு இப்பதான் தெரியுதோ…

‘அட லூசே… அவன் அப்பா ஆட்கள் துரத்திகிட்டு இருக்க இந்த சிச்சுவேஷன்ல அவன மட்டுமா நம்பி அவன் கூட வர்றேன்னு சொல்லி இருக்க… இதவிட நித்து விஷயத்தில் அவன் பக்கம் தப்பே இல்லைனு நீ புரிஞ்சுகிட்டன்னு காமிக்க வேற என்ன செய்யனும்?’ அறையைவிட்டு சகாயன் வெளியேறி சற்று நேரம் கழித்துதான் புரிகிறது இவளுக்கு…

வெகுவாக துவண்டு போனாள் ஷ்ருஷ்டி… அவளுக்கு தன் அன்பு மற்றும் புரிதலை துளி அளவு கூட சஹாயனிடம் காட்டிவிடக் கூடாதென மலையளவு எண்ணமிருக்கிறது… அவன் இவள விலகி ஆகனுமே… ஆனால் ஒவ்வொரு செயலிலும் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறாள்.

ஆனால் இந்த சூழலில் வேறு என்ன செய்ய முடியும் என்றும் அவளுக்கு சுத்தமாக புரியவில்லை…

இதற்குள் இவளிடமிருந்து மொபைலை வாங்கிக் கொண்ட சஹா பவனிடம் பேசிக் கொண்டிருப்பது இப்போது இவள் காதில் விழுகிறது.

“யாரு அவளா…? ஷிப்ல நான் மீட் பண்ண மாதிரில்லாம் அவ இல்லவே இல்ல… அங்க வச்சு ஒரு சிச்சுவேஷன்ல கூட அவ பொய் சொல்லல தெரியுமா? நடிக்கல… ஏமாத்தல… அவ மனசுல உள்ளது அப்படியே அவ முகத்துல வரும்… விருப்பு வெறுப்பு எல்லாம் அப்படி அப்படியே காமிப்பா… ரியலா இருந்தா… இப்ப வாய திறந்தாலே பொய்..” சஹாவினுடைய இந்த  வார்த்தைகள் இவளுக்கானது என இவளுக்கு தெரியுதே…

அதிர்ந்து போய் நின்றாள் ஷ்ருஷ்டி.

உண்மைதான்… அவள் கப்பலுக்கு போன நோக்கம் என்னவோ சகாயனுக்கு எதிரானதுதான்… ஆனால் அங்கு அவள் எதையும் திட்டமிட்டாள், சதி செய்தாள் என்றெல்லாம் கிடையாது… அந்த அந்த நேர உணர்வில் என்ன தோன்றியதோ அதை அப்படியே செய்து வைத்தாள். ஆனால் அதெல்லாம் இவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும்…? அவனைப் பொருத்தவரை இவளை பெரும் சதிகாரியாகத்தானே தோன்றும் என்ற தவிப்பு உண்டு இவள் இதயத்தில்… ஆனால் எத்தனை எளிதாய் அதை புரிந்தும் வைத்து இயல்பாய் அதை இவளிடம் வெளிப்படுத்தவும் செய்கிறான்…?!

“என்ன பொய்யா? அவ மேரேஜே செய்துக்க போறதில்லைன்னு சொல்லிட்டு இருக்கா… நீயும் நித்துவும் மட்டும்தான் கல்யாணம் குழந்தை குடும்பம்னு சந்தோஷமா செட்டில் ஆவீங்களாம்… இவளபத்தி உங்களுக்கு அக்கறையே இல்லையாம்… தனியா கிடந்து இழுபடுன்னு விட்டுடுவீங்களாம்…” இன்னுமாய் சஹா தொடர பாய்ந்து போய் அவன் மொபைலை இழுத்து தன் காதில் வைத்து கத்தினாள்.

“ஐயோ அப்டில்லாம் நான் சொல்லல ஜிஜு… அவங்க சும்மா சொல்றாங்க…” மறுத்தாள். அதேநேரம் இவள் மொபைலை வைத்திருந்த கன்னம் அருகில் தன் கன்னம் கொண்டு வந்த சஹா…

“டேய் அப்ப கல்யாணம் செய்வேன்னுதான சொல்றா…? அப்டின்னா உடனே எங்க மேரேஜுக்கு அரேஞ்ச் செய்துடு… ஒரு வகையில் நீதான்டா என் மாமனார்… உன்ட்டதான் நான் பொண்ணு கேட்கணும்…” என பவனுக்கு தகவல் சொன்னான்.

அதோடு நில்லாமல் “மாமா உன் பொண்ணக் குடு.. அட ஆமா சொல்லிப்புடு” என பாட்டு வேறு.

முறைத்தாள் இவள். அவன் விளையாடுகிறான் என இப்போது தெரிகிறதுதான்… ஆனாலும் இதிலெல்லாமா விளையாடுவது?? கடுமையாய் கோபம் கொள்ள தோன்றுகிறது… ஆனால் தோன்ற மட்டுமே செய்கிறது… மனமோ இதெல்லாம் உண்மையாக இல்லாமல் போனதென்ன? என கருகி சுருங்குவதிலேயே நின்றிருக்கிறது…!

பவனும் நித்துவும் இவனும் இவளுமாய் ஒரு குடும்பம்… நினைக்க நினைக்க எப்படி இருக்கிறது? ஏக்கத்தில் எரிந்தாள்.

சஹாவோ இவள் முறைப்பை சட்டை செய்தது போலவே இல்லை… அதோடு இவ்ளவுதான் விளையாடுவேன்னு நினச்சியா என்பது போல்… பவனுடன் இணைப்பை துண்டித்து அடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்த அவன்.

“தாத்தா ஒரு செம்ம குட் நியூஸ்… என் கல்யாணத்த பத்தி கேட்டுகிட்டே இருந்தீங்கள்ல… நீங்க சந்தோஷமா அரேஞ்ச்மென்ட்ட பாருங்க… ஒரு வழியா உங்க பேத்தி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா…“ என ஆர்ப்பரிக்க…

ரொம்பவுமே திகைத்துப் போனாள் இவள்… கொதித்தும்தான். பவனாவது அவனோட ஃப்ரெண்ட்… இது தாத்தா… ஏற்கனவே இவனைப் பற்றி எத்தனை ஆசையில் இருப்பாரோ? அவரைப் போய் தூண்டிவிட்டு… பின் இதெல்லாம் விளையாட்டு என்றால் எப்படி இருக்குமாம்…?

‘கொஞ்சமாவது அறிவிருக்கா?’ என இவள் க்ரீச்சிட நினைத்தால்… அதற்குள் “இந்தா நீங்களே பேசுங்க…” என மொபைலின் ஸ்பீக்கரை வேறு ஆன் செய்தான் அவன்.

“ஷ்ருஷ்டிமா” என்றது ஒரு முதிய குரல் இப்போது. அன்பும் கனிவுமாய் அது.

திக்குமுக்காடிப் போனாள் இவள். சூழலை எப்படி கையாளவெனவே தெரியவில்லை… மூச்சடைக்க திணறினாள்.

“ஏன்டாமா? என்ட்ட பேச மாட்டியா? என் மேலயும் கோபமா?” இவள் தடுமாறிப் போன கணங்களில் அவர் இப்படி கேட்க…

“தா… தாத்தா…” திக்கினாள். “வணக்கம் தாத்தா” சற்றாய் சமனப் பட முயன்றாள். ஏனோ தெரியவில்லை அடுத்த நொடி அவளை மீறி வந்தே விட்டது “சாரி தாத்தா… நான்… நான்… அவங்கள அப்படி செய்திருக்க கூடாது…” சகாயனிடம் கேட்க வேண்டிய மன்னிப்பை அவரிடம் கேட்க தொடங்கி இருந்தாள். அழுகையில் நெஞ்சடைக்க வார்த்தைகளில் சத்தம் கூட வர மறுக்கிறது.

“ஹேய்… நான்..“ இப்போது சஹா என்ன சொல்ல வந்தானோ… அவன் இவளது இந்த செயலை எதிர்பார்த்திருக்கவில்லையே…  இவனிடம் சற்றாவது அவளை இயல்பாக பேச வைத்துவிட வேண்டும்… அதை தடுக்கும் அவளது குற்ற உணர்வையும் சுயத்தையும் அவளை மீறித் தாண்டி பேச வைப்பதற்காக மட்டுமே அவன் பவனிடமும் தாத்தாவிடமும் இப்படியாய் அவளைப்  பற்றி பேசியது… அவளோ இவனே எதிர்பாரா வகையில் இப்படி மன்னிப்பென்றெல்லாம் மனம் திறக்கவும் ஒரு கணம் திணறினான். ஆனால் அடுத்த நொடி மொபைலை இவள் முன்னாக வைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறப் போனான்.

‘மனசுல இருக்றத அவ யார்ட்டயாவது பேசுறது கண்டிப்பா அவளுக்கு நல்லது… அதுவும் தாத்தாட்டன்றப்ப அது கொஞ்சமும் அவளுக்கு பாதிப்பில்லாம போய்டும்… அவ மனசு சமாதானமாகிற மாதிரி தாத்தாவும் எதுவும் சொல்வாரா இருக்கும்…’ இப்படியாக யோசித்து அவன் கிளம்ப…

நெஞ்சடைக்க அழுகை உடைய பேசக் கூட முடியாமல் திணறிக் கொண்டிருந்த ஷ்ருஷ்டியோ… இருந்த அழுத்தத்தில் தன்னைக் கடந்த அவனை சட்டென கை நீட்டி பிடித்து நிறுத்தினாள். அவள் இதையெல்லாம் சொல்ல வேண்டியது அவனிடமே அல்லவா?

அதன் பின் அவன் அவளை எங்கிருந்து பிரிய?

தன் காதலையும் அது சார்ந்த முடிவுகளையும் தவிர்த்து நித்து திருமணம் தொடங்கி கப்பலில் நடந்த ஒவ்வொரு நிகழ்வு அது சம்பந்தமான அவள் மன ஓட்டங்கள்… எதைச் செய்தாள் ஏன் செய்தாள் என ஒவ்வொன்றையும் அழுகையினிடையே சொல்லித் தீர்த்தாள் அவள். எப்போதும் குனிந்திருந்த தலையை இடையில் ஒரு முறை கூட நிமிர்ந்து இவனைப் பார்க்கவே இல்லை பெண்.

ஒருவழியாய் அவள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் போது… சில நொடி மௌனம்… இவன் எதிர்பார்த்தது போல் இப்போது தாத்தா “ஷ்ருஷ்டி கண்ணா” என பேசத் துவங்க… அவரும் லைன்ல இருந்தாரே… சஹா அங்கிருந்து வெளியே வந்தான்.

பொதுவாகவே பெண் பிள்ளைகளிடம் மிக மென்மையாக நடந்து கொள்ளும் தாத்தா… இப்போது இன்னுமே அதீத அணுசரையும் ஆறுதலுமாய் பேச… மனம்விட்டு பேசிவிட்டதாலோ என்னமோ சற்று இலகுவாகி இருந்த மன நிலையில் இருந்த ஷ்ருஷ்டி இப்போது அவர் பேசுவதை கவனித்த படி நின்றாள்… சஹாவை தடுக்க முனையவில்லை.

சுட சுட அதிக இனிப்போடும் சிறு கசப்போடுமாய் ஸ்ட்ராங் காஃபி ஒன்றை அவளுக்காய் தயாரித்து சஹா எடுத்துச் சென்ற போது…

ஷ்ருஷ்டியோ அவள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் கிடந்த குட்டி மேஜையில் தன் ஒரு விரல் நகத்தால் திரும்ப திரும்ப கோடு கிழித்தபடி… மொபைலின் ஸ்பீக்கர் மோடை மாத்திவிட்டு “ம்.. சரி தாத்தா… ம்… செய்றேன் தாத்தா… சரி தாத்தா… இல்ல… அதெல்லாம் ஒன்னுமில்ல… ஆமா தாத்தா” என பேசிக் கொண்டிருந்தாள். முழுமையாகவே சமனப்பட்டிருந்தாள்.

இவனைப் பார்க்கவும்… “இந்தா அவங்க வந்துட்டாங்க தாத்தா… நீங்க பேசுங்க…” என்றவள்…

“அதுவா… காஃபின்னு நினைக்கிறேன்…ம்…” என அடுத்தும் தாத்தாவுக்கு எதையோ சொல்லும் போது சின்னதாய் புன்னகை வந்திருந்தது அவள் கன்னத்தின் எதோ ஒரு இடத்தில்.

“என்னது என் காஃபிய பத்தி என்ன ரகசியம்?” என்றபடி இவளிடம் காஃபி கோப்பையை நீட்டிய சஹா இப்போது அவளிடமிருந்து மொபைலை வாங்கிக் கொண்டான்.

இவனிடம் பதில் ஏதும் சொல்லவில்லை என்ற போதும்… இவன் நீட்டிய காஃபியை வாங்கிப் பருக தொடங்கினாள் அவள்.

தலையை நிமிர்த்தி அவனைப் பார்க்காமல் கண்களை மட்டுமாய் உயர்த்தி எதிரில் நிற்பவன் என்ன செய்கிறான் எனப் பார்த்துக் கொண்டே அவள் பருக…

“என் முறப்பொண்ணு என்ன முறச்சுப் பார்க்குது… என்ன விஷயம்னு கேட்டுட்டு அப்றமா பேசுறேன் தாத்தா… ஆமா இப்பவே கிளம்பிடுவோம்… அப்பதான் ஃப்ளைட்ட பிடிக்க முடியும்… பை” என இணைப்பை துண்டித்தான் சஹா.

தனக்கு விழும் அடியைக் கூட தாங்கிக் கொள்வானாய் இருக்கும் ஒரு தந்தை… ஆனால் அந்த அடி அவன் பிள்ளை மீது விழுகிறது என்றாகும் போது அதை தாங்குவதென்பது அத்தனை எளிது கிடையாது எந்த ஒரு சராசரி தகப்பனுக்கும்…

அந்த வகையில் சஹாவைவிடவும் அவனது தாத்தா இவளிடம் இன்னுமாய் கொதிப்படைவதே இயல்பு என்ற புரிதலில் இருந்த ஷ்ருஷ்டிக்கு… அவரே

“என் மகன் செய்த வேலைக்கு உன் அக்கா மட்டுமில்லமா நீயும் சகாயனும் கூட விக்டிம்… இதுல நாம ஒருத்தர ஒருத்தர் நொந்து என்ன செய்ய…? இப்டி ஒரு மகனை பெத்து வச்சுருக்கனேன்னு நினைக்கிறப்ப ஏன் உயிரோட இருக்கோம்னு கூட நிறைய நேரம் வெறுத்துடுது எனக்கு… ஆனா சின்னவன நினைக்கிறப்ப நான் உயிரோட இருக்றதுக்கும் ஒரு அர்த்தம் வந்துடுதுல்ல… அப்டிதான் முடிஞ்சத மறந்துட்டு உன் பக்கம் இருக்ற நல்லத நினச்சு நிம்மதியா இருக்க பார்க்கனும்… சின்ன வயசுடா கண்ணா உனக்கு… சீக்கிரமா இதெல்லாம் தாண்டி வர்ற தெம்பும் உன் மனசுக்கு இருக்கும்… எப்பவும் சந்தோஷமா இருக்கனும் சரியா?”

என்றெல்லாம் பேசி இருந்தது… கேட்டிருந்த மன்னிப்பால் பெரிதாய் உண்டாகி இருந்த ஒரு விடுதலை உணர்வு தவிர… ‘feeling accepted’ எனச் சொல்வோமே அப்படி ஒரு  ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மனநிலையையும் தந்திருந்தது.

இதில் சகாயனும் எதையும் கிளறாமல் வெகு இயல்பாய் இவளுக்கு காஃபி எடுத்துவர… அவளது எடை இழந்திருந்த மனதால் அவன் முன்னிலையில் ஓரளவு இயல்பாயும் உணர முடிந்தது.

ஆக அடுத்து “காஃபி பாஸ் மார்க் வாங்கிடுமா?” என சஹா கேட்ட போது…

“காஃபி நல்லாருக்குன்னு சொல்லிடுமா…இல்லனா இது பரவாயில்லையா? இது பெட்டரா இருக்கான்னு இன்னும் ரெண்டு மூனு காஃபி குடிக்க வச்சு படுத்திருவான் அவன்னு தாத்தா சொன்னாங்க…” என தாத்தா சொன்னதை சொல்ல முடிந்தது அவளால்.

கண் சுருக்கி போலிக் கண்டனம் தெரிவித்தான் அவன். “கொடுக்றப்பலாம் டேய் கண்ணா இன்னொரு கப் தாடான்னு கேட்டு வாங்கி குடிச்சுட்டு… இப்ப இப்டி சொல்லி வச்சுருக்காரா? இருக்கட்டும் நைட் வீட்டுக்கு போய்டுவோம்ல அங்க வச்சு என் காஃபி புகழ நிலை நிறுத்துறேன்” என அவனும் இலகுவாகவே பேசினான்.

பின் அதே ஃப்ளோவில்… “இங்க வாட்ரோப்ல பாரு சிமி… சில ட்ரெஸ் இருக்கும்… எதவாது ஒன்ன மாத்திட்டு கிளம்பு… ஃப்ளைட்டுக்கு டைம் ஆகுது…” என்றுவிட்டு போய்விட்டான்.

இது யார் வீடு? லேடீஸ் ட்ரெஸ் இங்க எப்படி வந்துச்சு? அடுத்தவங்க ட்ரெஸ்ஸ இவ எப்படி எடுத்துக்க? என்ற குழப்பத்துடன்… இவள் முழுக்கவே நனைந்திருந்த ஒரே காரணத்தினால்… அவன் சொன்ன அந்த சின்ன வாட்ரோபை திறந்தாள்.

அதன் உள்ளே ஒரு பக்கம் அவனது சில உடைகள்… மறுபக்கம் இவளுக்கென அவன் சொன்ன உடைகள்… அதன் மீது ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் கவிழ்ந்து இருந்தது. அதை எடுத்துப் பார்த்தாள்.

இவளது ஒரு வயதில் எடுத்த புகைப்படம் போலும்… கொழுக் மொழுக் என்றிருந்த இவளை தூக்க முடியாமல் தூக்கியபடி நின்றிருந்தது… கவனித்துப் பார்த்தால் புரிகிறது… அவன்தான்.

அதாவது இது இவனது வீடுதான் போலும்… அப்படியானல் இவளுக்காகவே உடைகளை வாங்கி வைத்திருக்கிறானா? இவ இங்க வருவான்னு அவன் எப்படி எதிர்பார்த்தான்?

அப்படியே மூடி வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள். அவனோடு ஏர்போர்ட் செல்வதும்… அவனுடன் முகம் முறியாமல் பேசுவதும் வேறு. தன் காதலின் அடிப்படையில் அவன் வாங்கி வைத்திருக்கும் இந்த உடைகளை ஏற்பது என்பது முற்றிலும் வேறு எனப் படுகிறது அவள் மனதுக்கு.

இவள் வரும் சத்தம் கேட்கவும் கண்களில் ஆர்வம் மின்ன அவன் திரும்பிப் பார்ப்பது இவளுக்கு புரிகிறது. முகத்தை இறுக வைத்துக் கொண்டு அவனை பார்ப்பதை தவிர்த்தாள் இவள்.

எதுவும் சொல்வானோ என இவள் எதிர்பார்க்க… அவனோ எதுவும் சொல்லவில்லை… “சரி நான் ரெடியாகி வந்துடுறேன்” என இருந்த அந்த ஒற்றை படுக்கை அறைக்குள் நுழைந்து தாழ் செய்து கொண்டான்.

அறைக்குள் சென்றவன் இப்போது உடை மாற்றி வெளியே வந்தான்… முதன் முதலில் அவனைப் பார்த்த நாள் போல் வைட் ஷேர்ட் மற்றும் டெனிம் பேண்ட்ஸ்… இவள் இன்னும் அந்த சாப்பாட்டு மேஜை அருகில் நின்றிருந்தாள்.

இப்போது மேஜையின் எதிர் இருக்கையில் அமர்ந்து  கொண்ட அவன்… அங்கிருந்த  ஃப்ளாஸ்கிலிருந்த பாலை எடுத்து ஒரு கப்பில் காஃபி கலந்து கொண்டான். அந்த காஃபியின் துணையோடு ஒரு மாத்திரையை விழுங்கினான் அடுத்ததாக.

‘என்ன செய்யுது அவனுக்கு?’ இவளுக்கு கவலையாக இருக்கிறது.

“என்னாச்சு? ஃபீவரா இல்ல ஹெட்டேக்கா?” மெல்லக் கேட்டாள்.

அவனை இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டுமாக தன் கையிலிருந்த மொபைலை பார்த்து குனிந்து கொண்டான்.

“ஏன் கேட்கிற?“ என அடுத்து வருகிறது ஒரு சிறிய கேள்வி அவனிடமிருந்து.

பதிலே சொல்லவில்லை இவள். என்ன சொல்லிவிட முடியும் இவளால்?

அப்போதுதான் கவனிக்கிறாள் அவனது தலைமுடி ஈரமாக இருக்கிறது… அவனுமே நனைந்திருக்கிறான் போலும்… ட்ரஸ்ஸ மாத்தினவன் தலைய துவட்டாம வந்திருக்கான்.

‘இப்டி சொட்ட சொட்ட ஈரமா இருந்துகிட்டு மாத்திரை போட்டா சரியா போய்டுமாமா?’ ஆனா இதெல்லாம் எப்டி கேட்க இவ…?

அசையாமல் நின்றிருந்தாள்.

அதே நேரம் ஒருவிதமாய் சூழ்ந்திருந்த மழையின் அமைதியைத் தாண்டி வீட்டின் வெளியே வீறிடலாய் பெருத்த அழுகையாய் அமனுஷ்யம் போல் கேட்கிறது குழந்தையின் அழுகுரல் ஒன்று.

ஏதோ கடும் விபரீதம் நடக்கப் போவதாக சொல்கிறது ஷ்ருஷ்டியின் உள்ளுணர்வு.

தொடரும்…

காத்திருந்து பொறுத்தருளி எப்பி படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி…  தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிரவும். இனி  வரும் அத்தியாயங்கள்   by His grace உடனுக்குடன் வந்துவிடும் என நம்புகிறேன். 

 

12 comments

  1. Oru feel good epi ma’am. Kaata kudadhunu nenachalum Shrushti oda anbu thaana velipadudhu. Saha oda understanding vera level ma’am, semma! Vibareedhama? Romba avangala kashta paduthidadheenga , seekrama duet paada vachudunga.. Waiting for the next epi… 🙂

  2. Saha Sri kku naduvil oru happy episode.. thanks for this epi… Sri Saha paatti kitte pesi thelivu anadhu.. good.. indha theliva ippadiye continue panni Saha va marraige seyvaala Sri? azhura andha kutti yaru? waiting to know more sis

  3. Nice update mam. Saha is expressing his love ❤ in many ways. But Sri is so sad 😢. Her situations are not allowing to be normal. Hmmm when she is going to come out of this? Bavan Nithu’s marriage is being shifted to Kolkata. This is unexpected twist mam.What’s next? Waiting eagerly for your next post mam

  4. Sorry to hear that there was a sad occurence in the family and thank you for coming back for us inspite of that. Update was good. Felt happy that Saha and Shrishti have come together and Srishti could confide all her guilty feelings to Saha’s grandfather. Hoping now that she realises soon that she cannot have a life without Saha as a part in it.

  5. I was very much worried about yourself. By God’s grace you are safe. In spite of your personal issues you have given us this update. Hat ‘s of to you Mam.

Leave a Reply