காதலாம் பைங்கிளி 2 (2)

குழந்தைகளிடம் மும்முரமாக கதை சொல்லிக் கொண்டிருந்த மீரட் அனிச்சையாக விழிகளை நிமிர்த்தி இவளைப் பார்க்கும் போதுதான், இவள் அவனை பாகிஸ்தான் ப்ரியாணியைப் பார்த்த பஞ்சாப்காரன் ரேஞ்சில் பார்டர்தாண்டி பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள்,

‘திருடன்ட்ட மாட்டின போலீஸ் ரேஞ்சில் ஆகிடுமே இவள் நிலை’ என்ற பதற்றத்தில், அவசரமாக அவனிடமிருந்து கண்களைத் திருப்பி எங்கு பார்ப்பதென தடுமாறி அங்குமிங்குமாய்ப் பார்க்க,

என்னமோ எதோ என இவள் பார்வையை அவனும் தொடர,

அரை குறை பார்ட்டி ஏற்பாட்டில் வீடு நிற்கும் சூழலை உணர்ந்தான் போலும்… அதற்குத்தான் கிருபாவும் அப்படி விழிக்கிறாள் என எண்ணிக் கொண்டானோ என்னவோ?!

இல்லை இவள் தடுமற்றத்தை இயல்பாய் தாண்டிப் போகவும் அந்தப் பேச்சை எடுத்தானோ?!

“சாரி வீட்ல ஹெல்ப்க்கு வேற ஆள் இல்லைனு சொன்னீங்கல்ல… நிறைய வேலை இருக்குமே” என்றவன்,

அடுத்து நாகரீகமாக விடை பெறுவான் என இவள் எதிர்பார்க்க,

“கொஞ்ச நேரம் இவங்களப் பார்த்துக்கோங்க” என குழந்தைகளை இவளிடம் ஒப்படைத்தவன்,

அடுத்த நிமிஷத்தின் முடிவில் அவனது காக்கி நிற கார்கோவை மடக்கிவிட்டுக் கொண்டு, ஒரு கையில் பக்கெட் மறு கையில் ஈக்கு மாறுமாக வீடு கழுவ களமிறங்கி இருந்தான்.

“ஐயோ என்ன நீங்க! சார் சார் அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்” என இவளும் வாணியும் கெஞ்சியதை அவன் சட்டை செய்யவே இல்லை.

“இப்படி பார்த்து பார்த்து ரெண்டு பேருமா வேலை செய்தா எப்ப முடிப்பீங்க?” இவ்வளவுதான் அவனது பதில்.

“மாப் செய்றதவிட இத ஃபாஸ்ட்டா செய்துடலாம்” இப்படி ஒரு விளக்கம்.

அடுத்து இவள் தர்மசங்கடமாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடகடவென நீர்விட்டு அத்தனை பெரிய வீட்டை அலம்பி முடித்திருந்தான். சூப்பர் சானிக் வேகம்.

அவன் வந்திருப்பதாக செக்யூரிட்டி சொன்ன லேண்ட் ரோவர் காரிலிருந்து அவன் ஷூ முதல் ஷர்ட் காலர் வரை காணக் கிடைக்கும் காஸ்ட்லி கனவான் பேக்ரவ்ன்ட்டுக்கும்,

அவனது அசத்தும் உடைத் தேர்விலும், குவித்தும் மெல்லியதாய் சிரித்தும் பேசும் உதடு பிரியா பேச்சிலும், கட்டாய் இறுகிய உருவ அமைப்பிலும், அதோடான நடை, நால் பக்கம் திரும்பும் முறை, நின்றல், நீட்டுதல், விழிப் பார்வை அதன் வீச்சு என எல்லாவற்றிலும் இயல்பாகவே கலந்திருக்கும் ஒரு இனம் புரியா இலக்கணம் மற்றும் இளமைத்தனம். Sassy!

அந்த ஸ்டைலிஷ்னெஸ்க்கும் இப்போது இப்படி ஃபேண்ட்ஸை மடக்கிவிட்டுக் கொண்டு பெருக்குமாரும் கையுமாய் செய்யும் இந்த வேலைக்கும்,

அவனது இந்த சுபாவம் மனதில் எங்கோ வெள்ளை மணியாய் ஒலித்தது இவளுக்கு.

எப்போதுமே கிருபாவுக்கு நின்ற இடத்தில் நின்று கொண்டு வேலையாட்களை வேலை ஏவுவது ஒத்துவராது. இவளும் கூடச் சேர்ந்து வேலை செய்து கொண்டுதான் வேலை வாங்குவாள்.

வேலையில் என்ன கௌரவமான வேலை கௌரவம் இல்லாத வேலை? திருடுறது கொலை செய்றது ஏமாத்துறது போல தப்பான வேலைதான் அவமானம். மத்தபடி நியாயமான வேலை என்ன வேலையா இருந்தா என்ன? அதில் என்ன அவமானம்? என்பதும் அவள் நம்பிக்கை.

அதை அந்த சுபாவத்தைத்தான் அவனும் செயல்படுத்துவதை உணர்ந்து கொண்டு நின்றாள் பெண். எங்கோ ஒரு இடத்தில் இவளைப் போலத்தான் இவனும் என ஏதோ ஒன்று பட்டுச் சிறகாய் பட்டு தெறித்தது.

அதே நேரம் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவன் ஷர்ட் தடை தாண்டி வெளியே வந்திருந்த அவனது கழுத்துச் செய்ன் இவள் கண்ணில் படுகிறது. ‘மாம்’ என ஆங்கிலத்தில் மூன்றெழுத்து தொங்க அதுவேறு ஒரு அழகிய மாருதத்தை அவசரமாய் பிறப்பிக்கிறது அவள் வரையில்.

இப்படியெல்லாம் இவள் மனதில் அலை அடித்தால் வெளி விழியின் நிலை என்னவாக இருக்குமாம்?

அதே ப்ரியாணிப் பார்வை.

பார்க்கிற நமக்கு எப்படி பார்க்கிறோம்னு புரியலைனாலும் பார்க்கப்படுற ப்ரியாணிக்கு இந்த கபளீரப் பார்வை புரியாம இருக்குமா என்ன?

அனிச்சையாய் இவளைப் பார்த்தவன் இயல்பு போல திரும்பிப் போக… சின்னதாய் சிரித்தானோ என்று கூட இவளுக்குள் ஒரு உணர்வு.

ஆனால் அடுத்து ஒருவகையில் அவன் இவள் புறம் வரவே இல்லை. அதாவது முடிந்தவரை தவிர்க்கிறானோ எனத் தோன்றிவிட்டது இவளுக்கு.

வீடை சுத்தம் செய்து முடித்துவிட்டதால் இப்போது டெக்கரேஷன் படலம் துவங்கி இருந்தான். இதிலும் அசுர வேகம், அசத்தலான செய்முறை என அசரடித்துக் கொண்டிருந்தான்.

உயரத்தில் இருக்கு எந்த கொக்கியில் அலங்கார காகித சரத்தையோ அல்லது வேறு அலங்கார காகித பொருளையோ கட்ட வேண்டி இருந்தாலும், மீன் தொட்டியில் இருந்து எடுத்த ஒரு சிறு கூழாங்கல்லில் நூலின் ஒரு முனையைக் கட்டி அந்நூலின் மறு முனையில் அக்காகித சரத்தை இணைத்து… இங்கிருந்து இவன் குறிபார்த்து ஒரு வீசு!

கல் குறிப்பிட்ட கொக்கி வழியாய் இரண்டு மூன்று முறை உள் சென்று வெளி வந்து காகித சரத்தை சரியாய் அதில் தொங்கவிட்டிருக்கும்.

அப்புறம் ஆரவாரத்துக்கென்ன குறை…?! மிஷாவும் அபியும் அவனது அர்டென்ட் ஃபேனாகி ஃபேன் கிளப்பும் வைத்திருந்தனரே இதற்குள்.

அதனால் அடுத்து சிறியதோ பெரியதோ எது தேவையாய் இருந்தாலும் அபியிடமோ மிஷாவிடமோவே சொல்லியனுப்பினானே தவிர… அதற்கு முன் வெகு இயல்பாய் இவளிடம் கேட்டுக் கொண்டிருந்த அவன் பழக்கம் துடைத்துப் போட்டது போல் நின்று போயிருந்தது.

இது புரியாமலிருக்க இவள் என்ன மரமண்டையா? நிச்சய நிச்சயமாய் அவள் தன்மானத்தில் வலித்தது.

என்னமோ இவள் அவனை லவ் பண்ணிடக் கூடாதுன்னு அவன் பயந்து ஓடுற மாதிரிதானே இது?!!!

ஆனால் இதையெல்லாம் வாய்விட்டுக் கேட்கவா முடியும்? இல்லை கோபத்தை வெளியிடத்தான் முடியுமா?

போய் ஒரு ஓரமாய் அமர்ந்து பிறந்து நாள் கேக் வைப்பதற்கான டேபிளை செட் செய்ய ஆரம்பித்தாள் இவள்.

டெக்கரேஷன் முடியவும் அவனாய் கிளம்பிப் போய்விடப் போகிறான். அதோடு அவனுக்கு ஒரு குட்பை.

இப்ப பாதியில கிளம்பினா மிஷாவும் அபியும் அவன்ட்ட எப்படியும் ஏன்னு கேட்பாங்க. அவங்களுக்காக முடிச்சுட்டு போக நினைக்கிறான் போல.

என்னதெல்லாமோ இவள் யோசித்துக் கொண்டிருக்க… எதோ ஒரு டேபிள் மீது ஏறி நின்று எதையோ ஒட்ட முயன்று கொண்டிருந்த அவன் கால் எதேச்சையாய் கண்ணில் படுகிறது இவளுக்கு.

ஃபேண்ட்ஸை மடக்கிவிட்டிருந்தான் இல்லையா? ஆக கணுக்காலுக்கு மேல் இருந்த அது கண்ணில் படுகிறது. அது அவன் பெயர். ஆம் மீரட் என பச்சை குத்தி இருந்தான் அவன். கொஞ்சமும் ஸ்டைலிஷாய் இல்லாமல் கோழிக் கிறுக்கலாய் அது.

என்னதான் அழகாகவே இருந்தாலும் அழகிற்காக தன் உடலை வேதனைப் படுத்தும் இந்த டாட்டூ பழக்கம் சுத்தமாக ப்ரியம் இல்லாத விஷயம் கிருபாவுக்கு

.இங்கு இந்த இவன் டாட்டூ அழகாக கூட இல்லை. எதுக்கு இப்படி தன்னைத்தானே வலிக்க வச்சுக்கணுமாம்?!

இவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் கை குனிந்து பேண்ட்ஸை இழுத்துவிட்டு அந்த பச்சை குத்தலை மறைக்கிறதும் இவள் பார்வைக்கு கிடைக்கிறது.

இவள் பார்ப்பதை அவன் கவனித்துவிட்டான் என புரிகிறதுதானே!

இதுக்கு வேற அவன் என்னத்த நினச்சு வைப்பானோ?! இன்னுமே ஏக ஏக எரிச்சலாய் வருகிறது இவளுக்கு. எதுக்கு இவளுக்கு இதெல்லாம் பார்வைக்கு படணும்? இப்படி எல்லாம் இவன்ட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கணும்?

‘நான் ஒன்னும் உன்னை சைட் அடிக்கல…’ என எப்படியாவது இவனிடம் சொல்லியே ஆக வேண்டும் என பற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் அப்படியே அதை எப்படிச் சொல்லவாம்?

“நம்ம கால நமக்கு அடையாளம் தெரியனுமே… அதுக்காகவாவது இப்படி பேரேல்லாம் கிறுக்கி வச்சுக்கணும்தானே” என குத்தலாய் கடுகடுத்தாள் கிருபா.

‘எனக்கு ஒன்னும் இதெல்லாம் பிடிக்கல… நான் ஒன்னும் உன்னை ரசிச்சுகிட்டல்லாம் இல்லை’னு கொஞ்சமாவது சொல்லியாகிவிட்ட உணர்வு அவளுக்கு.

அதற்கு அவனோ “அதை குத்தினவங்கட்டத்தான் கேட்கணும்” என பதில் கொடுத்தான். அவன் குரலில் என்ன இருந்ததென்றும் பிடிபடவில்லை.

எது என்னவென்றெல்லாம் புரியவில்லை கிருபாவிற்கு. ஆனால் அடிவயிற்றில் அப்படி ஒரு அலைக் கழிப்பு. மனதளவில் ஒரு மாமலை உருக்கம்.

அவனுக்கு தெரியாமல் குத்தியது என்றால் என்ன அர்த்தம்? அவன் குழந்தையா இருக்கப்பவே குத்தி இருப்பாங்களோ? இவனோட பேக்ரவ்ண்ட்ட பார்க்கிறப்ப இவன் பேரேண்ட்ஸுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க முடியும் என்றே இவளுக்கு தோணவில்லையே!

யாரும் குழந்தைக்கு வலிக்க வைக்கணும்னு இப்படி செய்திருப்பாங்களோ?’ இப்படியாய் இவள் மனக் குதிரை மண்டியிடாது ஓடிய வேகத்தில்,

ஆனாதை ஆசிரம வாசலில் பச்சை குத்திய காலோடு பச்சை குழந்தையை விட்டுப் போன அம்மா வரை கண்ணில் வந்து போக,

அடுத்து அதைப் பற்றி எதைப் பேசவும் இவளுக்கு தோன்றவில்லை. அவனது ‘மாம்’ டாலர் வேறு இப்போது இன்னொருவிதமாய் இவள் மனக் கண்ணில் வந்தது.

அப்புறமென்ன, அந்த எண்ணத்தின் விளைவாய் அது வரை அவன் மீது ஏறி இருந்த எரிச்சல் மட்டுமல்ல, அது வரை எழுந்து நின்ற அத்தனை ஆன்டெனாக்களும் கூட அப்படியே அடங்கிப் போனது இவளுக்குள்.

இப்போது அவனை ஒழுங்கும் முறையுமாய் உபசரித்தாள் கிருபா.

அபியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள கேட்டாள். இதுவரைக்கும் என்ன விழா என்று கூட அவனிடம் இவள் சொல்லி இருக்கவிலையே!

“இல்ல அவ்வளவு நேரெமெல்லாம் மிஷாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகாம இருக்க முடியாது. அண்ணி இதுக்குள்ளயே அவள மிஸ் செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க” என படு கண்ணியமாக அழைப்பை மறுத்தான் அவன்.

ஆனாலும் தன்னைக் கண்டு அவன் விலகி ஓடுவதாக கோபமெல்லாம் இப்போது இவளுக்கு வரவில்லை.

அந்த நேரம்தான் வந்து சேர்ந்தன கேட்டரிங் வேன்கள்.

அரை மணி நேரத்துக்குள்ளாகவெல்லாம் அசத்தலாய் அத்தனை அலங்கார வேலைகளையும் செய்து முடித்திருந்த மீரட் மிஷா அன் கோ… மிஷா கொண்டு வந்திருந்த அவளது ட்ராயிங் ஒன்றையும் கிருபவிடம் காட்டிவிட்டு கிளம்ப எத்தனித்துக் கொண்டிருந்தது இப்போது இந்த வேன்கள் வருகையில் அதன் மீது கவனத்தை பதித்தது.

ஆம் வேன்களைப் பார்க்கவும் மீரட் மீண்டும் நின்றுவிட்டான்.

வீட்டின் தோட்டப் பகுதியில் இருந்த லானில்தான் பஃபே வைப்பதாய் ஏற்பாடு. இப்போது வேனிலிருந்து அதற்கேற்ப உணவுகளை லானில் அமைக்கும் வேலை நடைபெற… அதை செய்ததெல்லாம் ஹேட்டால் தொழிலாளர்கள்தான் என்றாலும் கிருபாவுக்கும் சின்ன சின்ன வேலை இருக்கத்தான் செய்தது.

அதில் மீரட்டும் கலந்து கொண்டான்.

அப்போதுதான் அந்த அதைக் கவனித்தாள் கிருபா.

கிருபா வீட்டுத் தோட்டத்தில் அலங்காரத்திற்காய் அங்கங்கு க்ரில் ஒன்றை சுவர் போல் நிறுத்தி அதன் மீது பூக்கொடிகளை படரவிட்டிருக்கும்.

அப்படி ஒரு க்ரில்க்கு அந்தப் புறம் நின்று கேட்டரிங் மக்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்த மீரட்டின் இரு கண்களும் புருவங்களுமான அந்தப் பகுதி மட்டும், அந்த க்ரிலில் இருந்த இடைவெளி வழியாய் அதன் மறுபுறம் நின்ற கிருபாவின் பார்வையில் சற்றாய் திரும்பிய பாவத்தில் கிடைக்க,

சுரீலென நியாபகம் வருகிறது கிருபாவுக்கு இவள் இந்த காட்சியை எங்கு இதற்கு முன் பார்த்திருக்கிறாள் என!!!!

தினமும் இவள் வெளியே செல்லும் போது சில பலமுறை ஹெல்மெட்டுக்குள் இப்படியே இந்தக் கண்களை கண்டிருக்கிறாள்.

இதற்குள் இங்கு மீரட் எதற்கோ சற்றாய் நகர, இப்போது க்ரிலில் இருந்த இன்னொரு இடைவெளி வழியாய் ஃபேண்ட்ஸ் பாக்கெட்டிற்குள் விட்டிருந்த அவனது கையின் முழங்கைப் பகுதி மட்டுமாய் இவளுக்கு தெரிகிறது.

காரில் இவள் பயணம் செய்யும் போதெல்லாம் இதே காட்சியை காரை அடுத்து வரும் பைக்கில் இவள் பலமுறை கண்டிருக்கிறாள்.

அப்போதெல்லம் எல்லாமே இயல்பாய் நடப்பது போல இருந்ததால், இந்த காட்சிகளையெல்லாம் இவள் கண்டு கொண்டதே கிடையாது.

ஆனால் இப்போது அப்படி யோசிக்க முடியாதே!

இங்கே இவள் வீட்டிலல்லவா நின்று கொண்டிருக்கிறான்.

இதன் மொத்தப் பொருள் என்ன?

இந்த மீரட் இவளை இத்தனையாய் இத்தனை நாளும் பின் தொடர்ந்து வீடு வரை வந்திருக்கிறான்.

ஆனால் ஏன்???!!!

இங்கு இவன் வந்திருப்பது எதற்காக???!!!

தொடரும்…

Please drop your comments here.

 

Advertisements

14 comments

  1. Meerat yaruppa ne…avala follow pandra nalla theriyudhu…oru velai yethachum avalukku prblm a so ni protection thariya…appadina first time yen kovam varanum paarvaila….

  2. Super update sis. Aana nalla kulapi vituteenga. Kiruba ena panranga attha meerat pinthodarndhu varuvatharku

Leave a Reply