கனியாதோ காதெலென்பது 6

றுநாள் நிரல்யா விழித்தெழுந்து அறைக்கு வெளியே வரும்பொழுதே அவளுக்காக தன் அண்ணனுடன் காத்திருந்தாள் ஆரணி. தன் எட்மாண்டன் விசிட் பற்றி இவளிடம் தெரிவித்துவிட்டு சொந்த விமானத்தில் சொந்த ஊர் கிளம்பினாள் அவள்.

நிரல்யா வீட்டிலிருந்து இவளுடன் நேராக விமான நிலையத்திற்கு சென்று தங்கையை வழி அனுப்பிவிட்டு வந்தான் ரக்க்ஷத். அதாவது நிரல்யாவை தூங்கும் நேரம் தவிர தனியாக விட அவன் தயாராக இல்லை.

கடந்தன சில தினங்கள். பகலில் ரக்க்ஷத்தின் கண் பார்வைக்குள் காவல் வைக்க பட்டிருந்தவள், இரவில் அறைக்கு முன்னும் பின்னும் அதை சுற்றியுமென ஆயுத அலங்கத்திற்குள் அடங்கி இருந்தாள்.

பகலில் படுத்தாத மனம், இரவில் இம்சித்தது. அவன் பார்வையிலிருக்கும் பொழுது அவனை மட்டும் சுற்றிய அகம், இரவின் இருளில் இடி தாங்கி இல்லா கட்டிடத்தின் மேல் விழும் கொடும் மின்னலாய் எதிர்பாராத கோணங்களில் குத்தியது. கொடுமை படுத்தியது. ஒழுக்கம் கெட்டவள் என வித விதமாய் ஓதியது. ஓய்வின்றி அழுதன அவள் கண்கள்.

அலுவலகம் வீடு என்று மட்டும் அவளை அழைத்து கொண்டு அலைந்து கொண்டிருந்த ரக்க்ஷத் அன்று ஒரு பெரியவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம். அவளை தன்னோடு அழைத்து கொண்டு அந்த பள்ளிக்கு சென்றான்.

து ஒரு தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பள்ளி. பெற்றோரில்லாத பிள்ளைகள் தங்கி இருந்து கல்வி கற்ற வளாகமது.

செல்லும் வழியில் அந்த பள்ளியை பற்றியும் அதன் தலமை பொறுப்பிலிருக்கும் ஆமி டார்கஸ் என்ற அந்த பெரியவர் பற்றியும் ரக்க்ஷத் இவளிடம் பேசினான்.

ஆமி டார்கஸ் அயர்லாந்து தேசத்தை சேர்ந்தவர். இள வயதில் இங்கு வந்து இந்த பள்ளியை நிறுவி நடத்தி வருபவர். இக் குழந்தைகளே அவரது குடும்பம்.

இப்பொழுதோ முதுமை காரணாமாக நெருங்கும் மரணத்தின் நிமித்தம் அவரது பணியை தகுதியான அடுத்த நபரிடம் ஒப்படைக்க விரும்பினார்.

பல ஆண்டுகளாக ரக்க்ஷத்தின் குடும்பம் பொருளாதார உதவியோடு வேறு பல உதவிகளும் இப்பள்ளிக்கு செய்திருந்தது. இவர்கள் குடும்பத்தோடு ஆமி அம்மையாருக்கு  இருந்த நட்பாகிய நெருங்கிய நல்லுறவு காரணமாக, இப்போதைய சூழலுக்கும், உதவிக்கு அவனையே நாடியிருந்தார்.

 

இன்நிலையில் திடீரென அவர் உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக ரக்க்ஷத்தை பார்க்க அழைத்திருக்கிறார் இப்போது. அதனால் தான் ரக்க்ஷத் நிரல்யாவோடு அங்கு செல்வது.

வர்கள் செல்லும் போது அந்த அம்மையார் படுக்கையில் இருந்தார். பொறுப்புகளை அவசரமாக ரக்க்ஷத்திடம் ஒப்படைக்க போவதாகவும், ஏற்ற நபரை கொண்டு அவனே இதை பராமரிக்கட்டும் என்றபடி அவர் பேசிக்கொண்டிருக்க, ஒரு நிறை மாத கர்பிணி பெண் இவர்களுக்கு குடிக்க காஃபி கொண்டு வந்து பரிமாறினாள்.

நிரல்யாவிற்கு மனம் அந்த பெண்பால் கசிந்தது. மிகவும் சிறு வயதாய் இருக்கும் அப்பெண்ணிற்கு. கர்ப்ப காலத்திற்கே உரிய மெருகோடு சேர்ந்து தேவதை போல அவளிருந்தாலும், வறுமை அதன் அடையாளத்தை அவள் மீது ஆழமாக தடம் பதித்திருந்தது நிரல்யாவிற்கு அவள்பால் இரக்கம் பிறக்க போதுமான காரணமாக இருந்தது.

இவர்கள் குடித்து முடிக்கும் வரை குடித்த கோப்பைகளை வாங்கி செல்ல காத்திருந்தாள் அவள். காலி கோப்பையை அப்பெண் நீட்டிய ட்ரேயில் நிரல்யா வைத்த நொடி, தலையை பிடித்தபடி   “க்வே…..வக்….வக்” ஓங்கரிக்க தொடங்கினாள் அக் கர்பிணி பெண்.

வேகமாக அறையின் வாசலை நோக்கி ஓடிய அவள் சறுக்கி விழத்தொடங்க பதறியடித்து ஓடினாள் நிரல்யா. ஏற்ற நேரம் அவளை தாங்கி பிடித்தாலும் அப்பெண்ணைவிட அதிகம் பதறியது நிரல்யாவிற்கு.

அந்த பெண் தடுமாறியபடி முண்ட அவளை கைதாங்கலாக அழைத்து கொண்டு அருகிலிருந்த மாணவியருக்கான கழிவறை பகுதிக்குள் நுழைந்தாள் நிரல்யா.

ரு நீண்ட ஹாலில் ஏழெட்டு சிறு கழிவறைகள், அதற்கு எதிர்புறமாக நான்கைந்து வாஷ்பேசின்கள்.

அதில் ஒன்றில் அப்பெண் குமட்டியபடி குனிய, அதே நேரம் ஒரு கழிவறையிலிருந்து வெளியே வந்தான் அவன். ப்யூன் போன்ற காக்கி உடை. முன் வழுக்கை. வெள்ளையும் கறுப்புமாய் பின் பக்க முடி. 40 வயதிற்கு மதிக்கலாம் என்பது போல் தோற்றம்.

பெண்கள் பகுதியில் இவனுக்கு என்ன வேலை என நிரல்யா நினைத்து முடிக்கும் முன்பே வந்தவன்

வாந்தி எடுத்து கொண்டிருந்தவள் முடிந்திருந்த சுருட்டை முடி கொண்டையை கைபற்றியபடி கன்னத்திலும் முதுகிலுமாக அவளை அடிக்க ஆரம்பித்தான்.

கொதித்து போனாள் நிரல்யா.

“ஏய்…விடு….நீ…விடு அவளை”

நிரல்யாதான் கத்தினாளே தவிர அடி வாங்கிய பெண்ணோ

“பே……..ப்பே…ம்ம….பே….ப்பே” என்றபடி அடித்தவனை நோக்கி கை கூப்பி கெஞ்சினாள்.

நெஞ்சில் கத்தி குத்தியது போல் வலித்தது நிரல்யாவிற்கு. பேச முடியாதபடி ஊனப்பட்டவளா அவள்…..அவளை ..கர்பிணிவேறு……..இப்பபடி முரட்டு தனமாய்…

ஓடிச்சென்று அப்பெண்ணை அந்த முட்டாள் முரடனிடமிருந்து பிய்த்தெடுக்க முயன்றாள்.

“விடுறா நீ…..பேச கூட முடியாதவள..விடுறா நீ”

சட்டென அடிப்பதை நிறுத்தியவன் முகத்தில் வேறு வித பாவனை. ஒரு வெண்ணிற கவரை இவளிடம் நீட்டினான்.

பிரித்து பார்த்தாள் நிரல்யா.

“தன் பக்க நியாயத்தை பேச கூட முடியாதவங்களை அடிக்கிறது எப்படி வலிக்கும்னு உங்களுக்கு புரியுதா நிரல்யா மேடம்?

காதலை கர்ப்பமாய் சுமந்துகிட்டு இருந்த என்னை பேசவே விடாம அடிக்கிறீங்களே…இது எப்படி நியாயம் நிரல்யா?

உங்க ரக்க்ஷத் உங்களுக்கு எப்படியோ, அப்படித்தானே என் ஆரணி எனக்கும்…….எப்படி விட்டு கொடுப்பேன்?……வலிக்குது ரொம்பவும்…

காத்திருந்த கர்பகாலம் முடிஞ்சு கல்யாணங்கிற பிரசவ நேரத்தை எதிர்பார்த்திட்டு இருக்கிறப்ப எல்லாத்தையும் கலச்சுட்டீங்களே…

கைக்கு எட்டியதை கண்ணால கூட பார்க்க முடியாதம மாதிரி பண்ணிட்டீங்களே!

என்ன ஒரு அபாண்டமான குற்றசாட்டு….காரணமே இல்லாம….விசாரணை இல்லாம தூக்குல போடுறமாதிரி…..

ப்ளீஃஸ் பேசுங்க…..என்ன ப்ரச்சனை? என்ன குழப்பம்? என்ன குற்றம்?

எதுனாலும் என்ட்ட பேசுங்க! எது உங்களுக்கு பிடிக்கலைனாலும் என்னை மாத்திகிறேன். ஆராவுக்கு பிடிக்காத எதுவும் என் எல்லைகளுக்குள்ளே இல்லாம பார்த்துபேன்.

ப்ளீஸ் இப்படி காரணமே இல்லாம உயிரோடு கழுவிலேத்தாதீங்க!

காத்துகிட்டு இருக்கேன் ஒவ்வொரு நொடியும் உங்க ஃபோன் காலுக்காக!

அகன் ஜெஷுரன்

என்றது அக்கடிதம்.

படித்து முடித்து நிமிர்ந்து பார்த்தால் அந்த வழுக்கை தலையணை காணவில்லை. எதுவும் நடவாததுபோல் இயல்பாய் இவள் முகம் பார்த்து நின்றிருந்தாள் அந்த கர்பிணி. இவள் கேள்விகளுக்கு அவள் ஏதோ பதில் சொன்னாள் தான், ஆனால் புரியத்தான் இல்லை.

அதற்குள் அவள் அலை பேசி அலற எடுத்தால் ரக்க்ஷத் “ என்னடா…என்னாச்சு..இவ்வளவு நேரமா?” கழிவறை வாயிலில் இருந்து பரிதவித்துகொண்டிருந்தான்.

அந்த நொடி முடிவு செய்தாள். இந்த ஜெஷுரன் விஷயத்தை ரக்க்ஷத்திடம் சொல்ல கூடாது என.

இப்பொழுதே இவள் நிமித்தமாக ஜாஷ் விஷயத்தில் பரிதவித்து கொண்டிருப்பவன் ரக்க்ஷத். இதில் இந்த ஜெஷுரன் இப்படி திட்டம் தீட்டி இவளை பின் தொடர்வது தெரிந்தால் இன்னும் இதற்காகவும் பரிதவிப்பான் இவள் காதலன்.

ன்று இரவு படுக்கையில் நிரல்யா தன்னை பற்றி சுய ஆராய்ச்சி செய்யவில்லை. காரணம் அவள் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது அந்த அகன் ஜெஷுரனின் கடிதம்.

ஆரணிக்கு நடந்த கொடுமைக்கும் இக் கடிதத்திற்கும் காரணம் ஒரே மனிதன் என மனம் ஒப்ப எவ்வளவு முயன்றும் நிரல்யாவால் முடியவில்லை.

ரக்க்ஷத்தை இத்தனை காலம் இவள் பார்த்ததில், அவனின் ஆட்களை எடை போடும் திறம், சோடை போன ஒரே இடம், இந்த ஜெஷுரன்தான். ஒருவேளை இந்த ஜெஷுரன் நல்லவனோ?

அல்லது ஜெஷுரனின் சதியின் அடுத்த நடவடிக்கையா இந்த கடிதம்.?

ஆனாலும்  ஆயிரத்தில் ஒரு பங்காக அவனிடம் நியாயமிருந்தால்?…..

அப்படியானால் ஆரணிக்கு நேர்ந்த கொடுமைக்கு என்ன விளக்கம்??????

இக்கடிதம் உண்மை என்றால்?….

இவளை இன்றுபோல் இன்னுமாய் துரத்துவான். தொடர்புகொள்ள முயல்வான். அது இவளுக்கும் இவளை விட ரக்க்ஷத்திற்கும் பல மடங்கு பரிதவிப்பை தரும்.

அதோடு ஒருபக்க வாதமாக ஆரணியின் கருத்தை மாத்திரம் கேட்டு முடிவு எடுத்ததாக இருக்க வேண்டாமே!

உள்மனதில் ஒரு எண்ணம்.

‘போன்தானே….. பேசிடலாம்.’

இரு புறமுமாய் வாதத்தில் ஊஞ்சலாடிய உள்ளத்தை சமாதானபடுத்த இரவு 2மணி என்றபோதும் அழைத்தாள் அந்த அகன் ஜெஷுரனின் எண்ணிற்கு.

“ஹப்பா கூப்பிட்டீங்களே! பிழச்சேன்”

முதல் ரிங் தொடங்கவும் அழைப்பை ஏற்ற அவன் இப்படித்தான் பேச்சை தொடங்கினான்.

காத்திருந்திருக்கிறான் இவள் அழைப்பிற்காக. அதுவும் அழைப்பாள் என்ற நம்பிக்கையுடன் இத்தனை மணிக்கும். குறித்து கொண்டாள் மனதிற்குள்.

“என்ன பேசனும்?” கடு கடுத்தாள் நிரல்யா.

“நான் என்ன தப்பு செய்தேன்னு என்னை இப்படி பண்ணிட்டீங்க?” மரியாதையும் கோபமும் ஆதங்கமும் அதை அடக்கிய அறிவும் கலந்த குரல்.

“என்ன தப்புன்னு சொன்னேனே…!”

தொடங்கிய தொனியிலேயே தொடர்ந்தாள் நிரல்யா.

மேடம்” கண்டன அழுத்தமாக வந்தது அவன் குரல்.

“என்ன சொல்றீங்கன்னு யோசிச்சுதான் சொல்றீங்களா?….ரக்க்ஷத் வாயடைக்க அவன்ட்ட நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம்….சரியா சொல்லனும்னா, இப்படித்தான் சொல்லனும். அப்பதான் என்னை கேள்வியே இல்லாம கட் பண்ணுவான்.

ஆனா என்ட்ட நீங்க உண்மையை சொல்லனும்.”

வெறும் மிரட்டலாக இல்லாமல் கட்டளையாக வந்தது அது.

அடுத்த நொடி தழைந்தான்.

“ப்ளீஸ் நிரல்யா….ப்ளீஸ் என்ன காரணம்னு சொல்லுங்களேன் யோசிச்சு யோசிச்சு மண்டையே வெடிச்சிடும்போல இருக்குது…..ப்ளீஸ்….ஆரா வேற என்னை பார்த்தாலே அரண்டு போய்…….’சே’ ன்னு வருது…..ப்ளீஸ் நிரல்யா அவளை பார்க்க உங்களுக்கே பாவமா தெரியலையா? எத்தனை நாள் அவ இப்படி பயந்துட்டே இருப்பா?….என்ன சொல்லி வச்சுருக்கீங்க…”

மொத்த கோபத்தையும் முழுதாக புதைத்து கொண்டு, மலை உச்சியிலிருந்து பாதாளத்துக்கு தன்னை தள்ளியவனிடமே, தன்னை காப்பாற்ற சொல்லி, அகபட்ட சிறு பிடியை பிடித்துகொண்டு தொங்கி கொண்டிருப்பவன் மன்றாடுவது போல் இருந்தது அவனது செயல்.

இதன் அத்தனை வழியாகவும் நிரல்யா உணர்ந்தது அகனுக்கு ஆரணியின் மேல் உள்ள காதலைத்தான்.

குழம்பினாள்.

 

“ஆராவோட ஷேர்ஸ்க்காக பார்கீங்களா?, ப்ளீஸ்..அது உங்களுக்கே வர்ற மாதிரி செய்றேன்…?” என பேரம் தொடங்கினான்.

“ஷட் அப்,” அலறினாள் நிரல்யா. “நான் காரணத்தை ஏற்கனவே சொல்லியாச்சு”

இணைப்பை துண்டிக்க போனாள். உள்மனது கூவியது ‘வாயில் இருந்து விஷயத்தை வாங்கத்தான் அவன் உன்னை ஊசியாய் குத்தியதே’

“நிரல்யா” என்ற ஒற்றை வார்த்தையை அவன் சொன்ன விதமே இவள் உள்மன கூற்றை உண்மை என உறுதி படுத்தியது.

“அப்படின்னா உண்மையாகவே நான் ஏதோ ஒரு பெண்ணை…தப்பா…அப்படின்னு நீங்க…”

அதிர்ச்சியாய் வலியோடு சொன்னவன்,

“ரேப்?” திடுமென உணர்ச்சியற்ற தொனியில், ஆனால் உயிர் வரை உருவும் குரலில் கேட்டான்.

“அப்படின்னு உங்கட்ட பழி சொன்னது யாரு? என் தங்கை துவியா?…இல்ல.. அவ ஆராட்ட சொல்லி இருப்பா…அத ஆரா உங்கட்ட சொல்லி இருப்பா….”

“வாட்?” நிரல்யா அதிர காரணம் இருந்தது. இவன் தங்கை துவி பற்றி ஆரணி சொன்னதில் ஒரு இடறல் நிரல்யா இதயத்தில் உண்டு.

ஆரணி அல்லல்பட்ட அந்த நாளில், வீட்டில் வேலை ஆட்கள் இல்லாத போது, அவர்கள் வீட்டின் வேறு இடத்தில் இருப்பதாகவும்,தேவை என்றால் வருவார்கள் என்றும், துவி ஆரணியிடம் பொய் சொல்லி இருக்கிறாள்.

‘இதை ஆரணியிடம் துருவ நிரல்யாவிற்கு அப்பொழுது விருப்பம் இல்லை, ஆனால்…ஏதும் விஷயம் இருக்குமோ?’

“துவி ஒரு டிரக் அடிக்ட், டிரக்கிற்காக என்ன வேணும்னாலும் செய்வா, என்ட்ட சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போய்ட்டா, என்ன பழி வாங்கன்னு வந்து ஏதாவது ஊளறி இருப்பா..என்னால ஃப்ரூவ் பண்ண முடியும்.”

அவன் நம்பிக்கையோடு சொன்ன விதம், முற்று முடிய அவனை நம்ப சொல்லி குழப்பியது என்றால், தன் தங்கை பற்றி இப்படி பிறரிடம் சொல்ல வேண்டியிருக்கிறதே என்ற அவன் வலியை தாண்டி, நிரல்யாவின் அடி வயிற்றில் அடித்தது வேறு உண்மை.

“அப்படிபட்ட பொண்ணுட்ட ஆருவ ஏன் பழகவிட்டீங்க…அதுவும் ஆருவ கொஞ்சம் கூட எச்சரிக்காம” கொதித்தாள் நிரல்யா.

அந்த துவி திட்டமிட்டு  ஆருவை ஆபத்தில் மாட்டியிருக்கிறாள் என்ற ஒரே புரிதலை மட்டும் நினைத்துதான் நிரல்யா இதை சொன்னது. துவி செய்ததை விட, இவன் குற்றமல்லவா அதிகம்? அது அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் ஒரு நொடி மறந்து போனது நிரல்யாவுக்கு.

“ஆ..ஆரு…..துவி…நான்….தெய்வமே!” அகன் சொன்ன விதத்திலேயே அடிவயிற்றை பிசைந்தது நிரல்யாவிற்கு. ஏதோ பெரிதாக பூகம்பம் வருகிறது.

“அப்படின்னா…துவியால் ஆருவுக்கு ஏதோ பிரச்சனை ஆகியிருக்குது….என்ன பண்ணினா அந்த கழுதை….ஆருவுக்கு என்னாச்சு…?.நீங்க வேற என்னை குறை சொல்றீங்க…ஆரா வேற என்ன பார்த்து பயப்படுறா…பதற்றத்தோடு கணக்கிட்டவன்

அடுத்த கணம் மௌனமானான்.

உயிரற்ற குரலில் வலிக்க வலிக்க தொடர்ந்தான்.

“இவன் கூட ரூம்ல தனியாவான்னு கேட்டீங்க….ஆரு என்ன பார்த்தாலே பயபடுறா….

துவி ஆராவுக்கு எதிரா ஏதோ சதி செய்திருக்கா….அப்படின்னா துவி ஆராவை ஏமாத்தி யார்ட்டயோ மாட்டி விட்டிருக்கா…..

ரேப்னு துவி சொல்லியிருப்பான்னு நான் சொன்னதுக்கு நீங்க மறுப்பு சொல்லலை…அப்ப நடந்த விஷயம் அதுமாதிரி….

அதாவது ஆருவை துவி ஏமாத்தி யார்ட்டயோ மாட்டி விட்டிருக்கா, அண்ட் மை ஆரு இஃஸ் ரேப்ட்,…

மௌனம்.

“ஆனா இதுக்கெல்லாம் நான் காரணம்னு ஆரா புரிஞ்சுகிட்டு இருக்கா….காரணம்னு நினைக்கலை…செய்ததே நான்தான்னு நினைக்கிறா…… இவன் கூட ரூம்ல தனியாவான்னு கேட்டீங்களே, அதுக்கு அர்த்தம் அதுதானே” ஒரு கணம் மௌனம்.

உங்கட்ட ஆரு அவ புரிஞ்சிருக்கிறத சொல்லியிருப்பா…நீங்க நல்ல ஃப்ரெண்டா அத நம்பி….நல்ல அண்ணியா…ரக்க்ஷத் மேல உள்ள அன்பில விஷயத்தை அவனுக்கு விளக்காமலே….என்னை விலக்கிட்டீங்க….”

“ஆருமா” !!!!!

தொலை பேசியில் கூட அவனது வலி, தவிப்பு அப்பட்டமாக தெரிந்தது நிரல்யாவிற்கு.

இவளுக்கு இந்த விளக்கம் பயங்கரமாக வலித்தாலும், முடிவெடுக்க முடியாமல் குழப்பினாலும், அதற்கும் மேலாக தெரிந்தது அவனது தவிப்பு.

சிறிது நேரம் மௌனம்.

“ஆருவ தயவு செய்து என் கையில குடுத்துருங்க…. அவ எத்தனை வலி அனுபவிச்சுட்டு இருப்பா…..நான் பார்த்துபேன்…இனி நான் பார்த்துபேன்…ப்ளீஸ்  நான் சொன்ன ஒவ்வொன்னையும் என்னால ஃப்ரூவ் பண்ண முடியும். எனக்கு …. ஆருவுக்காகவாவது ப்ளீஸ்…”

“ஷ்…ஜெஷுரன் சார்…..கொஞ்சம் பொறுங்க…என் இடத்தில இருந்தும் யோசிங்க” அவன் உணர்ச்சி பிராவகத்தை அதட்டி தடுத்தாள் நிரல்யா.

வலிக்கும் இவள் மனதும், உருகும் இவள் இதயமும் இவள் மூளையை பாதித்தால்…இந்த ஜெஷுரனின் அடுத்த பலி இவளாகாவும் இருக்கலாம்.

“அன்னைக்கு எதுக்காகவோ ஆருவ கஷ்ட படுத்திருக்குது, இப்ப அதே போல வேற சதி இல்லனு…நான் நம்ப ஏதாவது காரணம் வேணுமே எனக்கு…”

நிரல்யாவால் முழுவதுமாய் அவனை நம்ப முடியவில்லை, எனினும் முழுவதுமாய் அவன் தவிப்பை நாடகமென்றும் ஒதுக்கவும் முடியவில்லை.

எந்த வகை உணர்ச்சி நாடகமாடி ஆருவை ஏமாத்தினானோ?

“ப்ளீஃஸ் நிரல்யா தயவு செய்து புரிஞ்சிகோங்க….ஆரா எனக்கு என் உயி..”என தவிப்பாய் கெஞ்சலாய் ஆரம்பித்தவன்

சட்டென தொனி மாற்றினான்.

“ஐ நோ யூ லவ் ரக்க்ஷத்….ஆராவ கஷ்டபடுத்துனவன் நானில்லை. ரியல் கிரிமினல் இஸ் ஆன் லூஸ்…அவன் அடுத்து என்ன செய்ய போறான்? ரக்க்ஷத் குடும்பத்தில் யாருக்கு அடிவிழுந்தாலும் வலிக்க போவது ரக்க்ஷத்துக்கும்தான் மறந்துடாதீங்க…”

இந்த கோணத்தை இதுவரை நிரல்யா யோசிக்கவில்லை. ஆருவுக்காக மன அழுத்தத்தை அனுபவித்து கொண்டிருந்தவளுக்கு குப்பென வியர்த்தது. புது பயம்?

இப்பொழுதே ரக்க்ஷத் சரியாக தூங்கவில்லையோ என அவன் கண்களை காணும் போது தோன்றுகிறது. இதில் இன்னுமாய் வேதனைகளா? அடுத்து ஆபத்து யாருக்கு, எப்பொழுது எதற்கு என தவித்தே நிரல்யா வெருண்டு விடமட்டாளா?

அந்த ஆபத்து அவளது ரக்க்ஷத்திற்கானால்? அவனை விபத்துக்குள்ளாக்கினால்…?

“நோ….இப்ப…அப்படியெல்லாம்..சும்மா மிரட்டாதீங்க ஜெஷுரன்…ஆருவுக்கு நடந்தது விபத்து..”  இவளது காதலை பயன்படுத்தி தூண்டிவிடுகிறான் என நினைத்தாள் நிரல்யா.

“நோ….அது….ப்ளாட்….சதி……நீங்க சொல்றபடி பார்த்தா, ஆருவுக்கு நடந்தது உணர்ச்சி வேகத்தில், சூழ்நிலை வசதியாக அமஞ்சதால நடந்த ஒரு காரியம் மாதிரி தெரியல…..துவிய வச்சு ஆராவ ஏமாத்தி கூட்டிட்டு போயிருக்காங்க…அப்படின்னா அது ப்ளாட் தான?

அப்படி ஆராவ டார்கட் பண்ண என்ன ரீசன்?” என்றவன்

“ஆரா என்ன சொன்னா? அத விளக்கமா சொல்லுங்களேன்…ப்ளீஸ்” என மறுபடியும் கெஞ்சல் மோடுக்கு வந்தான்.

“ஆருட்ட விஷயத்த யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு வாக்கு குடுத்திருக்கேன்….எதுக்காகவும் வாக்கு மீற மாட்டேன், இது வரைக்கும் கூட நீங்களாத்தான் யூகிச்சுருக்கீங்க..அதையும் உண்மைனு நான் இன்னும் ஒத்துகிடலை”

அ..என ஆரம்பித்தவன் மௌனமானான்.

“ரக்க்ஷத் சாய்ஸ் சூப்பர், உங்க மேரஜ் லைஃப் நல்லா இருக்கும்…நல்லாயிருக்கனும், ஆராவுக்கு அண்ணங்க மட்டுமில்ல அண்ணிகளும் சூப்பர் தான். காட் ப்லஷ் யூ”

மனம் உணர்ந்து அவன் பேசுவதாகதான் நிரல்யாவிற்கு பட்டது. உருகவிடமாட்டேன் என தன் மனதை இழுத்து பிடித்து வைக்க வேண்டியிருந்தது பெண்ணவளுக்கு.

“சரி, அப்ப நான் எட்மாண்டன்ல, ஆராவ பார்க்கவாவது ஹெல்ப் பண்ணுங்க….அவட்ட நானே பேசிக்கிறேன்”

“நோ வே…..எனக்கு உங்க மேல நம்பிக்கை வர்ற வரைக்கும், ஆராட்ட நீங்க தப்பு பண்ணலைனு காண்பிக்க, அவ நம்புற அளவுக்கு ஃப்ரூப் கிடைக்கிறவரைக்கும், நீங்க ஆருவ மீட் பண்ண கூடாது.”

பெரு மூச்சுவிட்டான் அகன்.  “ ஆரா மேல உள்ள உங்க கன்சர்ன் புரியுது…சரி அந்த ஆதாரத்த கண்டு பிடிக்கவாவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க”

“ஜெஷுரன் சார்..என் ஸேப்டி பத்தியும் நான் கவனமா இருக்கனும்..”

மௌனம் ஒரு கணம்.

“வலிக்குது நிரல்யா நீங்க இப்படி பேசுறது. என்னை நீங்க ஆரா விஷயத்தில் தப்பா நினைகிறதே கொடுமையா இருக்குது…இதுல…நீங்க..என் ப்ரெண்டோட ஃபியான்சி….. எனக்கு என் தங்கை மாதிரி… எனக்கு துவி மேல பாசம் உண்டு..மரியாத கிடையாது….உங்க மேல ரெண்டும் இருக்குது…உங்க வாயால இப்படி கேட்க்க ரொம்ப கஷ்ட்டமா இருக்குது.”

“வெறும் வார்தையால மட்டுமே நான் உங்கள நம்புற அளவுக்கு நம்ம முன்னாடி உள்ள பிரச்சனை ஒன்னும் சின்னதில்ல ஜெஷுரன் சார்….”

“ஆரா வார்த்தையால சொன்னத நம்புறீங்கதானே? என்ன ஏன் நம்ப கூடாது”

“அவள எனக்கு பெர்சனலா தெரியும். அவ எப்படி பட்டவன்னு தெரியும்….அவ இத சொல்றப்ப அனுபவிச்ச வலி தெரியும்….நம்பாம இருப்பதுதான் கஷ்டம்”

“கிட்ட தட்ட பத்து பன்னிரெண்டு வருஷமா, எங்க இரண்டு குடும்ப பெரியவங்க இருக்கிறப்ப இருந்தே எங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியும். அக்க்ஷத், ரக்க்ஷத்ட்ட கேட்டுபாருங்க என்ன பத்தி…ரக்க்ஷுக்கு ஆராவ எனக்கு கல்யாணம் செய்து கொடுக்கவே விருப்பம் இருந்துது தானே?…இப்ப நான் பேசுறப்ப வலி புரியலையா?”

அவன் கேள்வி லாஜிக்கலாக சரிதான்.

ஆனாலும்…ஆரணி சொல்லும் விஷயத்தில்….வேறு ஒருவனை எப்படி ஜெஷுரனாக ஆரணி புரிந்து கொள்ள முடியும்?

உண்மையில் இந்த ஜெஷுரனின் நோக்கம் என்ன? புரியவில்லை நிரல்யாவிற்கு.

“ஆனா அதே ரக்க்ஷத்தான் ஒரு மூனு வார்த்தயில் உங்க நட்ப க்ளியர் கட் பண்ணதும்….அந்த அளவுதான் நீங்க நம்பிக்கை சம்பதிச்சிருக்கீங்க… “

அகனின் வாயை அடைக்க மட்டும்தான் நிரல்யா இதை சொன்னதே! இவளை தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும், இவள் வருங்கால கணவன் இப்படி வேகமாக, விசாரணையின்றி நட்பை வெட்டி இருக்க மாட்டான் என இவளுக்கு நன்றாக தெரியும்

“அ..து..அவன எனக்கு புரியுது….விடுங்க….எதுக்காகவும் நம்பவே மாட்டேன்னு..பிடிவாதம் உங்களுக்கு….” பெரு மூச்சு விட்டான் அகன்.

அதே நேரம் நிரல்யாவின் தொலைபேசியில், கால் வெயிட்டிங்கில் வந்தது ஆரணியின் எண்.

ஆரணிக்கு இப்பொழுது பகல்தான், ஆனாலும் நிரல்யாவிற்கு இது பின்னிரவு. இந்த நேரத்தில் ஆரு அழைக்கவே மாட்டாள். அழைக்கிறாள் என்றால்…

இருந்த குழப்பமா, அகன் மேல் தோன்றியிருந்த அரை குறை நம்பிக்கையா, ஆரணியின் அகால நேர அழைப்பா, அல்லது வெறும் அவசரமோ அல்லது இவை  அணைத்துமேவோ அகனின் இணைப்பை துண்டிக்காமல், ஆரணியின் அழைப்பை ஏற்க வைத்தது நிரல்யாவை.

கான் கால்.

“நிரு…நிரு…எனக்கு என்னமோ ரொம்ப கஷ்டமா இருக்குது…உன்ட்ட பேசனும்…நீ பக்கத்தில இருந்தா உன் மடியில வந்து படுத்துபேன்…அங்க வந்துரட்டுமா.. ரச்சுட்ட சொல்லேன்..” அடக்கிய அழுகையுடன் கெஞ்சினாள் ஆரணி.

“ஆரு..என்னமா…நீ எங்க விரும்புறியோ அங்க இருக்கலாம்மா…வர்றேன்னா அடுத்த நிமிஷம் உன் அண்ணா இங்க கூட்டிட்டு வரபோறாங்க…எல்லாம் உன் இஷ்ட்டம்தான்…அது உன் அண்ணா..இதில என்ட்ட வந்து…என்னாச்சு ஆரு?” அண்ணியாக போகிறவள் பரிதவித்தாள்.

“என்னமோ…என்னன்னு சொல்ல தெரியலை…உள்ளுக்குள்ள ஒரே தவிப்பா….க்ரீவிங்கா,….எதையோ இழக்க போறமாதிரி பயமா……ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா..”

தாங்க முடியல நிரு….தூங்கவே முடியாதமாதிரி…..தூங்கினா ஒரே கனவு….அது..அது…நீ தப்பா எடுத்துக்க மாட்டல்லா நிரு…என்னால என்ன புரிஞ்சிக்கவே முடியல….உன்ட்ட சொல்ல்லாம்னு தோணிச்சு….அ….அந்த அ..அக…அகன் ஏதோ ரொம்ப பயங்கரமா கஷ்ட படுறமாதிரி கனவா வருது….., அவன் கஷ்ட்டபட்டா நான்  சந்தோஷபடாட்டாலும், இப்படி ஏன் கஷ்ட்டமா இருக்குது…..? அவனுக்கு எதுவும் ஆயிடுமோ?…..பாரு நிரு இவ்வளவுக்கு அப்புறமும்…மனசுக்கு அவன சுத்தமா பிடிக்கலை..ஆனால் உள்ளுகுள்ள இது என்ன?…நான் லூசா?…”

அவள் புலம்பல் தொடர விக்கித்துப்போனாள் நிரல்யா.

அறிவு ஏமாறும்,மனம் எப்பொழுது வேண்டுமானாலும் எத்திசையிலும் பாயும். அதற்கு ஜால்ரா அடிக்கும் சரீரம்.ஆனால் ஆவியின் உள்ளுணர்வு??

காரணமே இல்லாமல் அந்த அகன் ஜெஷுரனை நிரல்யா நம்பியதுற்கு ஆருவின் இந்த தவிப்பு முக்கியகாரணமாயிற்று.

ஜெஷுரனுடன் சேர்ந்து உண்மையை கண்டுபிடிக்க முடிவு செய்தாள்.

அவளது அந்த முடிவு அவளை வேசிதனம் நடக்கும் விடுதிக்கு கூட்டி போகபோகிறது என்றும், பல பைத்தியங்களை வைத்து பராமரிக்கும் மன நோய் இல்லத்திற்கு இழுத்து போக போகிறது என்றும் அவளுக்கு அப்போது தெரியாது.

ரட்சிக்க வேண்டியவன் ரட்சிப்பானா??????????

தொடரும்…

(அடுத்த அத்தியாயம் நாளை பதிவிடப் படும் ஃப்ரெண்ட்ஸ்)

Leave a Reply