கனியாதோ காதலென்பது 9

நிரல்யாவை கிளம்ப சொல்லிய ஜெஷுரனோ அவன் வந்த நிமிஷத்திலிருந்து வெறிக்க வெறிக்க அவனையும் நிரல்யாவையும் மாற்றி மாற்றி பார்த்திருந்த துவியிடம் சென்று நின்றான்.

“நிரல்யாவை வீட்டில விட்டுட்டு திரும்பவும் இங்க வருவேன். அதுக்குள்ள நீ எங்கயாவது ஓடி போய்ட்டனா உன்ன விட சுயநலவாதி யாரும் கிடையாது….உன்னை நியாயபடுத்த நீ ஆயிரம் காரணம் வச்சுருக்கலாம்…எனக்கு விஷயம் தெரியாட்டா நான் நல்லா இருப்பேன்னு நீ நினச்சிருந்தா…உன்னைவிட முட்டாள் உலகத்தில யாரும் கிடையாது…..உன் கஷ்டத்தில் உதவியா இருந்திருந்தா கூட எனக்கு ஏதோ நிம்மதி கிடைச்சிருக்கும்….உனக்கு என்னாச்சோன்னு தவிக்கவிட்டபாரு……அவன் கண்களில் சிவப்பை மீறி பள பளத்தது கண்ணீர்.

“போ!! உன்ன மன்னிச்சுட்டேன்….

ஆனா ஆபத்து, சொந்த அண்ணனைவிட ஜேசன் பாதுகாப்பார்னு நீ இங்க வந்துருந்துட்டு….அதுக்கப்புறமும் அவர்ட்டயே நடிச்சேன்னா……நீ நிஜமாவே லூசா இருந்தன்னா நான் சந்தோஷப்படுவேன். அதுவும் அவர் மனசுல இவ்வளவு …….” வெறுப்பின் உச்சத்தில் வந்து விழுந்தன வார்த்தைகள்.

ஜேசன் அகனின் கரம் பற்றினான். “என் விஷயம்….சொன்னதில்ல…இப்பதான்….ப்ளீஸ்..”

துவியை திட்டுவது அவளது அண்ணணாகவே இருந்த போதும் ஜேசன் தவிப்பது அகனுக்கு புரிந்தது…. காதல்??? அகனுக்கும் அது புரியும். அவனது ஆரா மனகண்ணில் வந்தாள். அவளுக்கு இந்த துவி என்ன செய்துவிட்டாள்!!!

அவ்வளவுதான். கை முஷ்டிகளை இருக்கி மூடியவன் கொதித்தான். “ஜீசஸ்காக மட்டும்தான் உன்னை கொல்லாம போறேன்…..இல்லனா உன்ன ரெண்டா இங்கயே கிழிச்சு போட்டுடுவேன்……”

எரிமலை எழுந்து மனிதனானால் அது அகனைப் போன்றுதானிருக்கும்.

“வாங்க நிரல்யா…”என்ற அவனது வாக்கியம் முடியும் முன் துவி வேகமாக வந்து முகம் குப்புற விழுந்து நிரல்யாவின் கால்களை இறுக பற்றினாள்.

“எங்கயும் போகாத!!…ரக்க்ஷத் அண்ணாட்ட சொல்லு….அருண்…ஸ்…டெவில்..”

பதறிய நிரல்யா பார்க்கும்பொழுது விழுந்த வேகத்தில் மயங்கி இருந்தாள் துவி. முன்தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

ஓடி வந்த ஜேசன் உதவி செய்தான். “ நீங்க கிளம்புங்க நிரல்யா…டைம் ஆகுது….நீங்க அவங்களை டிராப் பண்ணிட்டு வாங்க ஜெஷு”

ஒரு கணம் மயங்கியிருந்த தங்கையை நின்று பார்த்த அகன், ஜேசனிடம் திரும்பி “பார்த்துகோங்க…” என்றுவிட்டு வாசலை நோக்கி நடக்க தொடங்கினான்.

பார்க்கிங் வந்ததும் இவள் கார் அருகில் வந்து நின்றான் அகன். “நீங்க வந்த கார்லயே கிளம்புங்க, நான் என் கார்ல ஃபாலோ பண்றேன்…. போய் ஜேசன்ட்ட கேளுங்கன்னுதானே சொன்னேன்…இப்படி செக்யூரிடி யாரும் இல்லாம தனியா இத்தனை மணிக்கு வந்து நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல…இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க….சற்று உரிமையும் அதட்டலுமாக சொன்னவன் ஒரு கண அமைதிக்கு பின்

“அடிச்சவளும் அடி வாங்கினவளும் எப்படி இருக்காங்கன்னு பாருங்க…..கேர்புல்லா இருங்க நிரல்யா…. ப்ளீஸ்..” என்றான். இது அப்பட்டமான கெஞ்சல்.

“என்ட்ட நீங்க பேசினதுமே துவி விஷயத்தில ஆமி அம்மாவும் ஜேசனும் எதையோ மறைக்கிறாங்கன்னு தோணிச்சு, அவங்க நோக்கம் நல்லதாதான் இருக்கும் ஆனாலும் நேரடியா கேட்டா பதில் வராதுன்னுதான், ரகசியமா கண்காணிக்கலாம்னு இங்க வந்தேன்…

ஆனால் நீங்களும் இப்படி வந்து நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை…

இருட்டியதும் வந்துட்டேன்….ஜேசன் ரூம்…. கொஞ்சம் நெருடிச்சு….வெளியே இருந்து பார்த்துட்டு இருந்தேன்…அவர் கிளம்பி போகவும் உள்ளபோய் பார்க்கலாம்னு இருந்தேன்….அவர் போகவும் நீங்க வந்தீங்க….

ஆனாலும் ரொம்பவும் தைரியம் உங்களுக்கு….. ஒருவேளை வெளியே செக்யூரிட்டி யாரையும் நிப்பாட்டி வச்சுருக்கீங்களா?…….”

“சே!…அப்படில்லாம் என்னை தனியா விட்டுருவாங்களா?…”

“அப்படின்னா உடனே கிளம்புங்க….” பேச்சை இடை மறித்தவன் அவசர படுத்தினான். “நாளைக்கு பேசிக்கலாம்…”

 

காரில் இவள் முன் செல்ல தானொரு காரில் அவளை குறுகிய இடைவெளியில் பின்தொடர்ந்தான்.

காட்டு பாதை. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

‘இப்படி தனியாக வந்தது ரக்க்ஷத்திற்கு தெரியும்போது என்ன சொல்லுவான்? ஜெஷுரனை நம்பி இப்படி தனியாக…? என்ன செய்து கொண்டிருக்கிறேன்…?’

இவள் வீட்டுக்கு அருகில் வரும்போது பின்னிரவாகி இருந்தது.

அதுவரை இவள் காரை பின் தொடர்ந்தவன் இப்பொழுது அவள் காரை முந்திசென்று ஓரமாக வாகனத்தை நிறுத்தினான்.

மொபைலில் அழைத்தான். இவளும் காரை நிறுத்தி இணைப்பை ஏற்றாள்.

“இப்ப உள்ள எப்படி போக போறீங்க?”

“செக்யூரிட்டி இல்லாம வெளிய வரத்தான் பெர்மிஷன் கிடைக்காது….., மறைஞ்சு ஒளிஞ்சு வந்தேன்…இப்ப உள்ள வரக்கூடாதுன்னு யாரும் என்னை சொல்ல மாட்டேங்களே….பார்த்ததும் கதவை திறந்து விட்டுருவாங்க…”

நோ..நோ.., நீங்க உங்க காரிலேயே இருங்க இறங்காதீங்க நீங்க…” என்றபடி அவன் காரிலிருந்து இறங்கி இவள் கார் கதவருகில் வந்து கதவை திறக்க சைகை செய்தான். பயம் மற்றும் மறுக்க மறுக்கும் நட்புமாக தயங்கி கதவை திறந்தாள் நிரல்யா.

அடுத்த இருக்கையில் அவன் அமர…பதற்றம்.

“சாரி!… இதை குடுக்கத்தான் வந்தேன்…” அவன் நீட்டிய கையில் எதுவும் இல்லை.

“இதை போட்டுகோங்க! இதை போட்டா இருட்டுல யாரும் ஈசியா கண்டு பிடிக்க முடியாது.”

மிகவும் கூர்ந்து பார்த்தால் கூட அவன் கையில் எதுவும் தெரியவில்லை. புரியாமல் அவனை பார்த்தாள். அவன் கை எதையோ காற்றில் குடைய நிறம் பெற்றது அது. பார்க்க ஏறத்தாழ அண்டர் வாட்டர் டைவிங் சூட் போல் இருந்தது.

“ஆக்டோன்னு சொல்லுவோம் இதை… சில ப்ரீட் அக்டோபஸ் தோல் முழுசும் த்ரீ கலர் பிக்மென்ட்ஸ் பாக்கட்ஸ் இருக்கும்….அந்த ஆக்டோபஃஸ் ஆபத்தை உணர்ந்து நகர தொடங்கியதும் அந்த ஆக்டோபஸை சுத்தி இருக்கும் நிறத்திற்கு இந்த பிக்மென்ட் பாக்கட்ஸிலிருந்து கலர்ஸ் மிக்ஸாகி ஆக்டோபஸின் உடல் நிறத்தை சுற்றுபுற நிறத்துக்கு மாத்திகிட்டே இருக்கும்…அந்த டெக்னாலஜி பேஸில் செய்த சூட் இது.

இத போட்டுகிட்டு நீங்க மூவானீங்கன்னா, மனித கண்களோட வேகத்தவிட வேகமா கலர்ஸை சுற்றி இருக்கும் சூழலுக்கு அப்படியே மாத்திடும். அதனால யாராலும் இத ஈஃஸியா ஐடன்டி செய்ய முடியாது.

கேமிராவில கவனமா இருங்க…..

எந்த பக்கதிலிருந்தும் அனிமல்ஸ்…, ஹுயூமென்…யார்  வந்தாலும் எவ்வளவு தூரத்தில இருக்காங்க…., அவங்கட்ட வெப்பன் இருக்குதா…என்ன ஸ்பீடில் அப்ரோச் செய்ராங்க…, நீங்க அவங்க விஸிபிள் ரேஞ்சில் இருக்கீங்களா…, நீங்க எந்த பக்கம் மூவானா ஸேப்ன்னு சொல்லிகிட்டே இருக்கும்…அந்த ஸவுண்ட் மத்தவங்களுக்கு கேட்காது…இதை இப்படி இழுத்தீங்கன்னா ஃபங்க்ஷனாக ஆரம்பிக்கும்…இப்படி செய்தா ஸ்டாப் ஆகிடும்….”

டெமோ காண்பித்தவனை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் நிரல்யா.

“உங்க கார் இங்கயே இருக்கட்டும்…நீங்க உடனே கிளம்புங்க…வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க…உங்க ரூமிற்குள் போற வரைக்கும் இங்கதான் இருப்பேன்….எதுனாலும் கூப்பிடுங்க…ப்ளீஸ்……, இத போட்ட பிறகே கார்ல இருந்து இறங்குங்க…அப்புறமா பேசுவோம்….இந்த சூட்ட நாளைக்கு வங்கிக்றேன்….சீக்ரசி மெயின்டன் பண்ணுங்க….பத்திரமா போங்க….” சொல்லிகொண்டே இறங்கி அவன் காருக்கு சென்றான்.

ந்த ஆக்டோவின் உதவியுடன் வெகு எளிதாக சுவரேறி குதித்து,  அவளது வீட்டின் நீண்ட தோட்டத்தை கடந்து, செக்யூரிட்டிகளுக்கென திறந்திருக்கும் சமையலறை பின் கதவு மூலம் வீட்டிற்குள் சென்று, தன் அறையை தன்னிடமிருந்த சாவியின் மூலம் திறந்து உள்ளே சென்றுவிட்டாள் நிரல்யா.

ஜெஷுரன் மீது உள்ள காரணமற்ற சிறுநம்பிக்கை அஸ்திவாரபடுவது போல் ஒரு உணர்வு. ஆனாலும் மனதிற்குள் மழையென கேள்வி பொழிவு.

அன்று இவள் அறைக்குள் வந்து துப்பாக்கி முனையில் மிரட்டியது யார்? ‘ஜாஷ்’தானா? அன்று இருளில்தான் வந்தவன் உருவம் பார்த்தாள்… முழு முகத்தை இதுவரையும் கண்டதே இல்லை என்பது அடுத்த விஷயம்.

மற்றபடி இளவரசி,  போர் பயிற்சி அப்படின்னு சொன்ன காரணத்திற்காகவும், இவளறைக்குள் எளிதாக வந்து விட்டான் என்ற காரணத்திற்காகவும் அந்த சாதுர்யமுடையவனாக அதுவரை ஜாஷை மட்டுமே இவள் நினைத்திருந்ததால் எளிதாக அவனை ஜாஷ் என இவள் மனம் முடிவு செய்துவிட்டது. அந்த முடிவு சரிதானா?

இன்று இவளே இவளறைக்கு வரவில்லையா வெகு எளிதாக?…

ஜேசன் கேட்கவில்லையா ‘பிரின்ஸஸ் டூ ஹோல்ட் வெப்பன்’ என, அவர் சொன்னதுமே இவளுக்குள் நெருடியதும் இதுதான்.

‘எக்ஸ் பிரைம் மினிஸ்டர் மகள், கொஞ்சம் அட்வென்சரசா இருந்தா இயல்பாவே இந்த கேள்விய யார்னாலும் கேட்பாங்களே…அத கேட்க ஜாஷ்தான் வரனுமா என்ன? ஜாஷே இயல்பா கேட்டதுதானே!!’

அப்படிஎனில் வந்தவன் ஜாஷாவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எஸ்.

வந்தவன் உங்க எங்கேஜ்மென்ட் பத்தி சந்தோஷபட்டேன்னு ஏதோ சொன்னானே…அப்புறம் எனக்கு எதிரா சதின்னு ஏதோ…. இவள் கல்யாணத்தை குறிச்சு சந்தோஷபடுற நபர் யார்…?இவ யாருக்கு எதிரா சதி செய்தாள்???

அதோட வேற யாரு நெத்தியில் துப்பாக்கிய வச்சு மிரட்ற அளவு கோபமா வந்துட்டு, மயங்கி விழுந்ததற்கு கரிசனையா தண்ணி தெளிக்க பார்ப்பாங்க…இவளே அது ஜாஷ்னு நினைக்கலைனா அப்படி நிச்சயமாக நடிச்சிருக்கமாட்டாளே!!

ஜாஷ் தவிர, துப்பாக்கி தூக்கினாலும் இவள் மீது கரிசனையாய் நடப்பவன்…யாரது?

பல்ப் பளிச்சிட்டது.

‘அதுக்குள்ள நீங்க வந்து….கல்யாணத்துக்கு முன்னயே நாத்தனாருக்கு கெடுதல் செய்ய நினைக்கிறீங்கன்னு நினைச்சு……..நீங்க எதையோ சொல்லிதான், அவ என்னை பார்த்து பயபடுறதா நம்பினேன்….பேசுனா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன்…. பயங்கரமா கோபம் வந்துச்சுது…. சாரி….வெரி சாரி……தென்…ரக்க்ஷத்தை லவ் பண்றவங்க….என் காதலையும் புரிஞ்சிப்பீங்கன்னுதான் உங்கட்ட பேச டிரை பண்ணினேன்….’

ஜெஷுரன்??? வந்தது அகன் ஜெஷுரன்!!!!

எங்கேஜ்மென்ட் நியூஃஸ் கேட்டு சந்தோஷபட்டது…

ஆருவ பிரிக்க இவள் காரணம் என நினைத்தது…அதைதான் சதி என்று சொல்லி இருக்க வேண்டும்..

“பயங்கரமா கோபம் வந்துச்சுது…. சாரி….வெரி சாரி……” என்ற அவன் வார்த்தைகள்…ஜெஷுரனின் கோபத்தை இவள் பார்க்கதானே செய்கிறாள். கோபத்தில் இவளை மிரட்ட பிஸ்டல் ஃபைட்…

அதன் பின் ஜெஷுரன் கோபமாக பேசிய போதெல்லாம் இவளுக்கு மனதிற்குள் குழப்பியதே!…காரணம் குரல். இந்த சூட் வழியா ஜெஷுரன் பேசினப்ப கொஞ்சம் குரல் மாறி கேட்டிருக்கலாம். அப்புறம் அவர் ஒவ்வொருமுறை கோபத்தில் பேசும்போதும் இவள் மனதுக்கு ஏதோ ஒருவித உறுத்தல். அறிவு ஏமாந்தாலும் மனது விழித்திருந்திருக்கிறது போல.

அப்படியெனில் எதனால் திரும்ப மறவழியை விட்டு அறவழிக்கு திரும்பினான் ஜெஷுரன்?

தென்…ரக்க்ஷத்தை லவ் பண்றவங்க….என் காதலையும் புரிஞ்சிப்பீங்கன்னுதான் உங்கட்ட பேச டிரை பண்ணினேன்…. அன்று அவன் சொன்ன வார்த்தையின் பொருள்…

இவள் ரக்க்ஷத்தை மறைத்து நின்று கொண்டு தன்னவனுக்காக கதறியதை ஜெஷுரன் பார்த்திருக்கிறான். உபயம் இந்த ஆக்டோ சூட்.

எதோ ஜிக் ஸா பஸில் முடிந்து முழு படம் தெரிவது போல் இருந்தது நிரல்யாவிற்கு.

ஜெஷுரன் மேல் ஒரு புறம் கோபம் வந்தாலும் மறுபுறம் அவன் மீது மரியாதையும் வந்தது. ‘ஆருவுக்காக என்னவேணாலும் செய்வாராமோ? இங்க வந்தப்ப பிடிபட்டிருந்தா என்னவாயிருக்கும் அவர் நிலமை?’

இவள் மேல் துப்பாக்கி தூக்கும் அளவு கோபமிருந்தாலும் இவளுக்கு தீங்கு செய்யும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. மயங்கி விழுந்தவளுக்கு (நடிப்பு என ஜெஷுரனுக்கு தெரியாதே) தண்ணீர் தேடி தெளிக்க முயன்றதே அதற்கு சாட்சி.

அன்று இருட்டு அறையில் மிரட்ட என வந்தபோதும், இவள் மயங்கி விழுந்தபோது இவள் தலையை மட்டும் தாங்கி அடிபடாமல் தரையில் படுக்கவைத்த விதம், தேவையில்லாமல் இவள் மீது விரல் நகம் கூட தீண்டாதபடி விலகி நின்ற பாங்கு….பறை சாற்றுவது ஜெஷுரனின் கண்ணியம்.

இப்பவும் ‘இவ எப்படியும் போறான்னு’ நினைக்காமல், இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டு தப்பி தவறி கூட இவளுக்கு எந்த ப்ரச்சனையும் வந்துவிட கூடாது என்று இந்த ஆக்டோவையும் கொடுத்து…

அப்படியெனில் ஆரு நிச்சயமாக எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள். எதை??

ஆரணி இதில் இந்த விஷயத்தில் எதை எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும்???

 

ஆனால் இவளை பிஸ்டலுடன் வந்து மிரட்டியதை ஜெஷுரன் ஏன் அதன் பின்பு இவளிடம் சொல்லவில்லை? மனம் மாறி இருந்தால் இவளிடம் மன்னிப்பு கேட்டிருப்பானே! ஏன்?

ஒருவேளை விஷயம் தெரிந்தால் இவள் இன்னுமாய் அவனை தவறாக நினைப்பாள் என பயந்திருக்கலாம். அடுத்து அவரின் நடவடிக்கை என்ன என பார்க்கலாம்.

‘இதை மறைச்சு நடந்துகிறதால முழுசா அவரை நம்ப கூடாது.’

ப்படியாய் நிரல்யா ஒரு முடிவுக்கு வந்தபோது, அவளை தொலை பேசியில் அழைத்தான் ஜெஷுரன்.

“ஸேஃபா ரீச் ஆகிட்டீங்களா?”

“வந்துட்டேன் சார், இந்த சூட் இருந்தா எவ்வளவு ஈஸியா வந்துட்டு வெளிய போகலாம்னு உங்களுக்கு தெரியாதா?”

“நிரல்யா சிஸ்…..” அவன் அதிர்வது நிரல்யாவிற்கு புரிந்தது. ஆக அன்று வந்தது ஜெஷுரன்தான். ஆனாலும் அவராக சொல்லாத வரை…பார்க்கலாம்.

“தேங்க்ஸ் ஃபார் த சூட் ஜெஷுரன் சார்….”

“இட்ஃஸ் ஓகே நிரல்யா…” ஒரு கணம் தயங்கியவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“தயவு செய்து சொல்றேன்னு தப்பா எடுத்துகிடாதீங்க….இவ்வளவு ரிஃஸ்க் எடுக்காதீங்க..ப்ளீஸ்…நான் உங்கட்ட ஆரா விஷய்த்தில கேட்ட உதவியே வேற…நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காகவே ரக்க்ஷத் ஆராவோட என் கல்யாண விஷயத்த கன்சிடர் பண்ண கூட மாட்டான். நீங்க போய் அவன்ட்ட ஜெஷுரனை ஆராவுக்கு பார்கலாம்னு சொன்னா தான் அடுத்து எதுவுமே நடக்கும், அந்த உதவியத்தான் எதிர் பார்த்தேன் உங்கட்ட இருந்து. அதுக்கு உங்களுக்கு, ஆராவுக்கு என் மேல இருக்கும் தப்பான எண்ணம் மாறனும், அதுக்கு மாரல் சப்போட்…., உங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபோ தாங்க இதுதான் நான் மீன் பண்ண ஹெல்ப்…

இப்படி துப்பாக்கி தூக்கிட்டு துப்பறிய வாங்கன்னு சொல்லவே இல்ல…எல்லாம் ஆரவுக்காகதான் செய்றீங்க அப்படிங்கிறப்ப சந்தோஷமாத்தான் இருக்குது…ஆனா இந்த அன்ப தயவு செய்து இப்படி காட்டாதீங்க…வீட்டில ஏற்கனவே இரண்டு பொண்ணுங்க ஆளுக்கொருவிதமா அழுதுகிட்டு இருக்காங்க…நீங்க வேற…ப்ளீஸ் பீ ஸேப்….”

அன்புக்கும் அதை அதிகாரமாக சொல்ல இல்லாத உரிமைக்கும் இடையில் பேசிய ஜெஷுரன் ஒரு கணம் மௌனமானான்.

நிரல்யாவுக்குமே பரிதாபமாக இருந்தது. ஆரணியை மணந்தால் உறவில் இவளுக்கு அண்ணனாக போகிறவன்.

‘அடிப் பாவி மேரேஜ்னு முடிவே செய்துட்டியான்னு’ மனசாட்சி கேட்ட கேள்வியை அப்போதைக்கு அசட்டை செய்தவள்,

“அண்ணா இனிமே கவனமா இருப்பேன்..” என்றாள்

இந்த பதில் அவன் மனதை தாக்கிய விதம் அவனது அடுத்த பதிலில் புரிந்தது.

“நிரல்யாமா!” உடன் பிறந்தவரின்றி வளர்ந்திருந்த நிரல்யாவிற்கு, அண்ணன் தங்கை பாசத்தை புரியவைக்க அந்த ஒரு வார்த்தை, அதை அவன் சொன்ன விதம், போதுமானதாக இருந்தது.

“சாரி அண்ணா….எனிவே இன்னும் கூட பதிலில்லாத….”

“திரும்பவும் நம்பலைன்னு ஆரம்பிக்காத நிரல்யா…ப்ளீஸ்….கல்ப்ரிட் யாருன்னு தெரிஞ்சுட்டு, அந்த ஓநாய நெயில் பண்ணதான் போய்ட்டு இருக்கேன்.

பை தி வே அந்த சூட்…அத நான் எங்க இருந்தோ திருடிட்டு வந்துட்டேன்னு நினைச்சுராத….அது நான் டிசைன் செய்தது, டெரரிஸ்ட் அட்டாக்கில் என் ஃபேமிலி இப்படி ஆன….ஃப்யூ மன்ஸில் டிஃபன்ஸ் சர்வீஸிலிருந்து ரிசர்ச் ஆபர் கிடச்சுது.. ஒரு த்ரீ இயர்ஸ் போய்ட்டேன்.

இந்த டைப் டெக்னிகல் ஆர் அண்ட் டி இல் எனக்கு எப்பவும் இஷ்டம்ங்கிறதால ரொம்ப சீக்கிரமாவே இத டிசைன் செய்துட்டேன். இன்னும் மத்த சிலதும் செய்துருக்கேன். டெரரிஸ்ட்டை ஹேண்டில் செய்ய ஃஸ்பைஸ்…கமண்டோஸ் இவங்களுக்கெல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சு செய்தேன்…

என் ஃபேமிலிக்கு நடந்த கொடுமை வேறவங்களுக்கு நடக்காம தடுக்கனுங்கிற வெறியில் செய்தது…பிஸினசை கூட அப்படியே தெரிஞ்சவங்கட்ட விட்டுட்டு போனேன்..அப்படி ஒரு வேகம்…அந்த நேரத்தில எனக்கு அப்படித்தான் யோசிக்க முடிஞ்சிது.

ஆனா அந்த டைமில் துவி கூட இருந்திருந்தா, அதுதான் சரியான முடிவா இருந்திருக்குமோன்னு…எனி வே இப்ப உள்ள ப்ரச்சனைக்கு வருவோம்….

நாம ஜேசன் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பினப்ப துவி நடிக்கிறான்னு எனக்கு உறுதியா தெரிஞ்சுட்டு….கடவுளை தவிர யார் கால்லயும் விழக்கூடாதுங்கிற நம்பிக்கை துவிக்கு எப்பவும் அலாதியா உண்டு.

இப்ப மன நிலை பாதிக்கபட்டிருந்துதுன்னா அர்த்தமில்லாம செய்தாலும் மனசுக்குள்ள உள்ளததான் செய்வா…ஆனா இப்படி மனசுக்குள்ள இல்லவே இல்லாத இந்த கால்ல விழுற வேலை செய்றதுன்னா…..அவ நிச்சயமா யோசிச்சு செய்றா…

அப்படின்னா அந்த அருண்ங்கிற பேரை அவ சும்மா உளறலை. அது யாருன்னு  எனக்கு ஒரு யூகம் இருக்கு அவனைதான் தேடி போறேன்….”

“அது யாரு??” பேச்சை தொடரவிடாமல் அவசரமாய் கேட்டாள் நிரல்யா.

 

“அவன் முன்னால ரக்க்ஷத்ட்ட வொர்க் பண்னான். கிட்டதட்ட ரக்க்ஷத்துக்கு அடுத்த இடம் அவனுக்குங்கிற அளவுக்கு ஆஃபீஸில் அவனுக்கு பவர் உண்டு. ரக்க்ஷத்தோட எல்லா ப்ராபர்டிஸையும் சுருட்டனும்னு அவனுக்கு தோணி இருக்குது…..அதுக்கான கிரவ்ண்ட் வொர்க் ஆரம்பிச்சதுமே ரக்க்ஷத் அவனை பிடிச்சுட்டான்…அருண் மேல லீகல் ஆக்க்ஷன் எடுத்தான்…..அப்போதைக்கு அருண் செய்திருந்தது ஒயிட் காலர் க்ரைம்…ஃபைன்…3இயர்ஸ் இம்ப்ரிசன்மென்ட்னு ஜட்ஜ்மென்ட் ஆச்சுது.

அப்புறம் அவனபத்தி எந்த தகவலும் எனக்கு தெரியல…பட் அவன்ட்ட இந்த துவி எப்படியோ மாட்டி இருக்கனும்…ஒருவேளை அவன்ட்ட ஏமாந்து இருக்கனும்….இல்லனா இப்ப உன்னை காப்பாத்த ட்ரை பண்ண மாட்டாளே….ஆரா விஷயத்திலும் இந்த அருண் தான்….பழி வாங்கனும்னு…ஏதாவது…இருக்கும்.”

மௌனமானான்.

“துவி அருணால உனக்கு ஆபத்தாகிடும்னு பயபடுறா, அதோட அவ ஒளிஞ்சு இருக்கா….அப்படின்னா அருண் இன்னும் அவள தேடுறான்…உனக்கும் பக்கத்தில இருக்கான்னு அர்த்தமாகுதுல்ல…

மே பி ஆராவுக்கு நடந்தத வச்சு இந்த துவியே உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு பயபடவும் செய்யலாம்….அவன் இந்தியாவிலேயே இல்லங்கிறதால இங்க வந்து அவ ஒளிஞ்சும் இருக்கலாம்…தெரியல…..

எதுக்கும் நீ ரொம்ப ஸேஃபா இரு..அதுக்குதான் நான் ஆஃபீஷியலா தவிர யார்ட்டயும் சொல்லாத ஆக்டோ சூட் விஷயம் உனக்கு தெரிஞ்சாலும் பிரவாயில்லனு சூட்டை கொடுத்தேன்…நிலமைய புரிஞ்சுட்டு நல்ல பொண்ணா வீட்டில இருமா…ப்ளீஸ்

ஆரா விஷயம் தெரிஞ்சா ரக்க்ஷூ கஷ்டபடுறதவிட அத அவன்ட்ட மறச்சுட்டு நீ போய் ஆபத்துல மாட்டிகிட்டனா இன்னும் அதிகமா அவன் கஷ்டபடுவான்..அத ஞாபகம் வச்சுகோ….ஆராட்ட நடந்துகிட்டு இருக்கிற எல்லாத்தையும் சொல்லு அவ என்னை நம்பாட்டாலும்…அவளே உன் ஸேஃப்டிகாகவாவது  ரக்க்ஷட்ட விஷயத்த சொல்ல சொல்லுவா…ரக்க்ஷு உள்ள வந்தா அந்த ஓநாய பிடிக்க ரொம்ப வசதியா இருக்கும்…

நானும் இப்ப அந்த ஓநாய பிடிக்கதான் ட்ராக் பண்றேன்….

அப்புறம் அன்னைக்கு பிஸ்டலோடு வந்து உன்ன மிரட்டுனதுக்காக சாரி..ப்ளீஸ் மன்னிச்சிடுமா…நான் ஏன் அப்படி செய்தேன்னு உனக்கே புரிஞ்சிருக்கும்…ஆராவுக்கு ஏதோ கெடுதல் செய்ய தான்…நீ….என் மேல அபாண்டமா பழி போடுறேன்னு நினச்சேன்மா ..உன்ன மிரட்டி ஆராவ விட்டு விலகி இருக்க சொல்லனும்னுதான் வந்தேன்…ரக்க்ஷத் மேல உனக்கு இருக்கிறது உண்மையான அன்புன்னு தெரிஞ்சதும்…உன் மேல ஒரு மரியாதை ….நம்பிக்கை…..என் மேல உனக்கு இருக்கிறது தவறான அபிப்ராயம்…அத மாத்திட்டா…….எல்லாம் சரி ஆயிடும்னு தோனிச்சு….அப்புறம் நடந்தது உனக்கு தெரியுமே…. ஆரா விஷயத்தில நான் நிரபிராதின்னு நிரூபிச்ச பிறகு இந்த மிரட்டல் விஷயத்த சொன்னால் உனக்கு என்ன மன்னிக்க ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்…உனக்கு இப்பவே தெரிஞ்சுட்டுதுன்னு புரியுது…அப்புறம் அதுக்காகவும் என்னை சந்தேகபடுவ…சாரி நிரல்யாமா!!

அப்புறமா டீடெய்லா பேசுறேன்…ஸேஃபா இரு…பை”

பேசி முடித்தபோது நிரல்யா மனதில் அகன் ஜெஷுரன் குற்றமற்றவன் என்ற எண்ணம் பெரிதாக தலைதூக்கியது.

ஆரணி நிச்சயமாக எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள். எதை?? குழப்பம் தீர வழி என்ன?

துவிதான் சற்று சாத்தியமுள்ள கதவாகபட்டது.

தட்டினாள்.

ஜேசனை அழைத்தாள். துவியை பற்றி துளைத்தாள்.

 

துவி கனடாவிலிருந்து வரும்போதே கர்பிணி. பிரசவத்திற்கென அவள் தெரிந்தெடுத்ததுதான் ஆசிரமம். விஷயம் ஜெஷுரனுக்கு தெரியகூடாது என்ற அடிப்படையில்தான் அவள் இங்கு வந்து தங்கியதே! மிகவும் மனம் சோர்ந்திருந்தாள் அப்பொழுது. கவுன்சிலிங்கிற்காக ஜேசன் அறிமுகம். ஆனால் அவனிடம் பழைய காதல் எதையும் பற்றி அவள் பேசியதில்லை.

நல்ல நட்பு மருத்துவருக்கும் மனம்வாடி இருந்தவளுக்கும் உருவாகிய தருணம் அது. ஜேசன் அவளை விரும்ப தொடங்கியதும் அப்பொழுதுதான். அவன் குப்பை தொட்டி குழந்தை. எவன் எந்த பெண்ணை ஏமாற்றியதன் பின்விளைவோ இவன்?

அந்த வகையில் துவியின் மீதும் அவளுக்குள் வளரும் குழந்தைகள் மீதும் ஒரு பிடிமானம் இவனுள். ஆனால் இதுவோ அல்லது வேறு எதுவோ காரணம் கிடையாது இவன் காதலுக்கு.

காதல் பலவிஷயங்களுக்கு காரணமாய் இருக்குமே தவிர, காதலுக்கு காரணம் இருக்குமா என்ன?

ஆனாலும் துவியிடம் ஜேசன் அதை பற்றி குறிப்பால் கூட கூறியது கிடையாது. நட்பும் பரி போய்விடும் என்ற பயம் தான் காரணம்.

அகனிடம் குழந்தை விஷயத்தை சொல்ல சொல்லி ஜேசனும், ஆமி அம்மாவும் துவிக்கு ஆலோசனை சொல்லி கொண்டேதான் இருந்தனர். ஆனாலும் குழந்தை பிறக்கும் வரையுமே துவி அகனை சந்திக்க மறுத்துவிட்டாள்.

பிறந்ததும் துவிதான் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது. அகன்யா, துதித்யா பெயர்கள் அவளுக்கு குடும்பம் மீது இருக்கும் பாசத்தைதான் காட்டின.

ஆனாலும் தன் அண்ணனுடன் சண்டையிட்டு சொத்தை பிரித்து வாங்கினாள். இவர்கள் கூறிய எந்த ஆலோசனையையும் அவள் கேட்கவில்லை.

ஜெஷுரன் எந்த காலத்திலும் அவளை பின் தொடர கூடாது என்றுதான் பழி அது இது என்று கடிதம் எழுதி இருப்பாள். மற்றபடி அவன் மீது அவளுக்கு கோபமே கிடையாது.பிள்ளையின் பெயரும் அதற்கு சாட்சி.

பின் பிள்ளைகள் பெயரில் ஒரு பெரும் தொகையை டிபாசிட் செய்தவள் திடீரென காணாமல் போய்விட்டாள். பிறந்து சில நாள் ஆன பிஞ்சுகளை விட்டு எப்படித்தான் போனாளோ போயிருந்தாள். தவித்து போனான் ஜேசன்.

ஆனால் சில நாட்களில் புத்தி பேதலித்த நிலையில் தெருவில் சுற்றினாள் என யாரோ அவளை இவன் மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். அப்படி அவள் சேர்க்க பட்ட நேரம் இவன் அங்கு இல்லை. இவன் சென்று சேர்ந்தபோது அவளை சேர்த்தவர் யாரும் இல்லை.

அதன்பின்புதான் துவி இவன் மருத்துவமனைக்கான கடன்களை அடைத்திருக்கிறாள் என்ற விபரம் தெரிந்தது ஜேசனுக்கு. மீதி பணம் பற்றி தெரியவில்லை.

அப்படியானால் இங்கு வந்து இப்படி தங்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக முன்கூட்டியே துவி மருத்துவமனைக்கு பணம் கட்டினாளா என்ற ஒரு கேள்வி எழுகிறது. அப்படியானாள் அவள் நடிப்பது உறுதியாகிறது.

ஒருவேளை தான நோக்கிலும் ஜேசன் மருத்துவ மனைக்கு உதவி இருக்கலாம் அவள்.

அல்லது துவிக்கு கூட ஜேசன் மேல் காதல் இருக்கலாம், அதன் வெளிப்பாடக இதை கொள்ளலாம்.

இதை எல்லாம் யோசித்து பார்த்தால், ஜெஷுரன் சொல்வது போல் துவி நடிக்கிறாள் என்பதுதான் இன்னும் அழுத்தமாக தோன்றுகிறது.

ஆனால் எது எப்படியோ இது நிரல்யாவுக்கு தேவையான முக்கிய  தகவலை தரவே இல்லையே.

 

ஜெஷுரன் தவறு செய்யவில்லை எனில் ஆரணி எதையோ தவறாக புரிந்திருக்கிறாள். இதில், இந்த விஷயத்தில் எதை எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும்???

யோசித்தபடி படுத்திருந்த நிரல்யா  அவளை அறியாமல் தூக்கத்திற்குள் மாட்டிக் கொண்டாள்.

இருண்ட அறை, கரிய உருவம். தனியாக இருக்கும் இவள் முன் ஆக்டோ சூட் அணிந்து வருகின்றது. ‘ஜாஷ்’ என்றபடி இவள் அதன் முகத்தை பார்க்க, அந்த உருவமோ சிஸ் என்றபடி முகத்தை மறைத்திருக்கும் தலை கவசத்தை கழற்ற அது ஜெஷுரன்.

மீண்டும் இருண்ட அறை, மீண்டும் கரிய உருவம், தனியாக இருக்கும் ஒரு பெண் முன் ஆக்டோ சூட் அணிந்து செல்கின்றது. ‘அகன்’ என்றபடி அந்த பெண் அதன் முகத்தை பார்க்க, அந்த உருவமோ வெறிச் சிரிப்புடன் தன் முக கவசத்தை கழற்ற அருண் என யாரோ அலறும் சத்தம். வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!!!!

எழுந்து அமர்ந்த நிரல்யாவிற்கு மனம் சமனபட சில நிமிடங்கள் தேவைபட்டன. கனவு.

உடல் தூங்கும். மனம் கூட சில நேரம் மயங்கும்…உள்ளிருக்கும் ஆவி எனும் உள்மனம் எப்பொழுதும் விழித்திருக்கும்.

இவள் ஜாஷை நினைத்து கொண்டு இருந்ததால் அங்கு வந்த  ஜெஷுரனை ஜாஷ் என தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள்.

அதே போல் ஆரணி அங்கு ஜெஷுரனை மட்டும் எதிர்பார்த்து அவன் வீடு சென்றிருக்கிறாள், வந்தவனை ஜெஷுரன் என புரிந்து கொண்டிருக்கிறாள் ஆனால் உண்மையில் வந்தது கல்ப்ரிட். அருணாக இருக்க வாய்ப்பு. இப்படியா இவள் உள்மனம் யோசிப்பதன் வெளிப்பாடா இந்த கனவு??

கடவுளே வழி காட்டுகிறாரா?

லாஜிக்கலி இது ரொம்பவும் சரியாக படுகின்றது. ஒரே ஒரு விஷயத்தை தவிர. வந்தவன் முகமூடி அணிந்திருந்தால் ஆரணிக்கு துளி அளவாவது சந்தேகம் வந்திருக்குமே!!

ஆரணியை அழைத்தாள்.

“என்ன நிரு அண்ணி இந்த நேரம்??”

என ஆரம்பித்த ஆரணியிடம் தலை வாலின்றி நிரல்யா கேட்டது இதை தான்

“ஜெஷுரன் வீட்டுக்கு போனியே அப்ப அவர் மாஸ்க் போட்டுருந்தாரா”

:ஞே” என ஆரணி விழித்தது நிரல்யாவுக்கு தொலைபேசியில் கூட தெரிந்தது.

“அப்படியெல்லாம் இல்ல நிரு…இப்ப எதுக்கு இதெல்லாம்..”

ஆரணிக்கு இந்த விஷயத்தை குடைய வேண்டாமே என்று இருந்தது.

“மாடியில நான் பார்த்த எந்த ரூமிலும் லைட் எரியல…நான் ஒவ்வொரு ரூமா லைட் போட்டு பார்த்துட்டே….அதுக்குதான் ரூமுக்குள்ள போனேன்….அந்த குறிப்பிட்ட ரூம் ஸ்விட்ச் ஐ கண்டு பிடிக்க முன்னாடி..அவன்…….இருட்டும் அவனோட வக்ரமான பேச்சும்…..அதுதான் ரொம்ப நாளா கண்ண மூடினா ஞாபகம் வரும்…..ப்ளீஸ் நிரு இப்ப எனக்கு அதே ஞாபகமா இருக்குன்னு இல்ல….பட் இப்பவும் அத நினைக்க…..வேண்டாமே…ப்ளீஸ்”

ஆரணியின் குரல் கை கூப்பி கெஞ்சியது. நிரல்யா அடுத்து எதுவும் இதை பற்றி கேட்கவும் இல்லை, பேசவும் இல்லை.  பதில்தான் கிடைத்துவிட்டதே!! ஆரணிக்கு பிடித்தவிதமாக பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.

ஆக அகனை எதிர் பார்த்து சென்றவள், இருட்டில் தான் அகன் என்று சொன்னவனை, அகன்தான் என்று நம்பி வெறுக்கிறாள். ஆனால் வந்தவன் கல்ப்ரிட்…அவன் பெயர் அருணாக இருக்கலாம்.

இதில் துவியின் பங்கும் பெரிதாக இருக்கிறது. அங்கு இருந்தது அகன் என்று சொல்லி ஆரணியை எதற்காக ஏமாற்றி கூட்டி போனாள் துவி? அதுவும் தன் அண்ணன் விரும்புவளை….தன் அண்ணனை விரும்புவளை??  ஏதோ இருக்கிறது…அந்த ரகசியம் துவியாவது அல்லது அந்த கொடூரனாவது வாய் திறந்தால் தான் வெளி வரும்.

ஆனால் இப்பொழுது முக்கியமான விஷயம், அன்று அங்கு இருந்தது ஜெஷுரனல்ல என ஆரணியை எப்படி நம்ப வைப்பது? அழுத்தமான ஆதாரம் வேண்டும்.

 

தை ஆரணியை நம்ப வைக்க இருப்பது இரண்டு வழிகள்.

ஒன்று துவி நடந்ததை சொல்ல வேண்டும். இத்தனையாய் நாடகமாடி தன் அண்ணனை விரும்புவளை அடுத்தவனிடம் பலி இட்டிருக்கும் துவி இப்பொழுது மட்டும் மனம் மாறி உண்மை சொல்லுவாளாமா?

ஆனால் இப்பொழுது நிரல்யாவை அருணிடமிருந்து காப்பாற்ற விரும்புவதுபோல் நடந்து கொள்கிறாளே? ஏன்? அதிலும் ஏதாவது சதி?

துவி மனம் திருந்தி…. இப்பொழுது இருக்கும் நிலையிலிருந்து உண்மையை சொன்னால் கூட நம்ப முடியுமா? பைத்தியத்தின் உளறலாக கூட தோன்றலாம்.

அடுத்தது அந்த இடத்தில் அன்று இருந்தது அந்த கல்ப்ரிட் @ அருண் என வேறு ஆதாரம் எதையாவது காண்பிக்க வேண்டும். இதற்கு  ஏறத்தாழ சாத்தியமே இல்லை.

என்ன செய்யலாம்??

 

நாள் விடிந்திருந்தது.

காலை தாமதமாக எழுந்தவள் முடிவு செய்து கொண்டாள். ‘இன்று நோ அட்வென்சர். இப்போதைக்கு ஜெஷுரன் விஷயத்த ஹேண்டில் செய்யட்டும். இன்னைக்கே ஆரணிட்ட இப்ப வரைக்கும் நடந்துகிட்டு இருக்கிற ஜெஷுரன் சம்பந்தமா இவளோட அட்வென்சர்ஸெல்லாம் சொல்லி, அவ சம்மதத்தோட ரக்க்ஷத்ட்ட ஆரணி, அருண் விஷயம் சொல்லனும். இப்படி ரக்க்ஷத்துக்கு தெரியாம வேலை செய்றது ரொம்பவும் கில்டியா இருக்குது அதோட இன்னைக்கு.நாள் முழுக்க ரக்க்ஷத்தோடதான், நேத்து ஈவ்னிங் கொஞ்ச நேரம் பார்த்தது. மிஸ் யூ டா”

அப்படி எல்லாவற்றையும் அவளே முடிவு செய்தால் போதுமா??

ஆட்ட நாயகன் ஆல்மைட்டி ஆட்டத்தை மாற்றினார்.

 

நிரல்யா குளித்துமுடித்து குளியலறைவிட்டு வெளி வருவதற்குள் இரு முறை அழைத்து ஓய்ந்திருந்தது தொலைபேசி. முடியை உலர்த்த துவங்கவும் அடுத்த அழைப்பு. சென்று எடுத்தாள்.

ஜெஷுரன்.

“நிரல்யா….. ஒரு எமெர்ஜென்சி…. எனக்கு உங்கள தவிர யாரையும் கூப்பிட முடியாத சூழ்நில….துவி விஷயம்….ரொம்பவும் அசிங்கமும்…அவமானமுமான நிலமை….லேடீஃஸ் யாருடைய ஹெல்ப்பாவது வேணும்…வேற யார்ட்டயும்…..இத…சொல்ல முடியல….நீங்கன்னா….புரிஞ்சுப்பீங்கன்னு………உடனே ஹோட்டல் சீரா ரெசிடென்சி வரமுடியுமா…..ரூம் நம்பர் 12, ஃபர்ஸ்ட் ஃப்லோர்…கீழ இருக்கிற பார்டி ஹால்க்கு ஜஸ்ட் மேல…முடிஞ்ச வர எதையும் யார்ட்டயும் விசாரிக்காம வாங்க…நீங்க வர்றது யார்க்கும் தெரிய வேண்டாம்…..அவசரம்….ப்ளீஸ்…”

அவன் குரலில் இருந்த கெஞ்சலும் வலியும் உடனடியாக கிளம்பிச்செல்ல வைத்தது நிரல்யாவை. வேடனை நோக்கி பறந்தது வெள்ளைபுறா.

நேற்று ‘நீ’ வா’ போ’ என ஒருமையில் பேசியவன் இன்று மரியாதை பன்மையில் பேசுவது ஏன்? ‘வெளியே வராதே’ என படித்து படித்து சொன்னவன் மறுநாளே வரச்சொல்வதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியே கேட்காமல் உடன் சென்றது அவளது மனது.  பெண்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். உதவி கேட்பவர்களுக்கு உதவ உணர்ச்சியின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பார்கள் என்ற ஜாஷின் தத்துவம் உண்மைதானோ?

இவள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் மலை பாதையில் இருந்தது இவள் செல்ல வேண்டிய இடம்.

 

ந்த சீரா ரெசிடெண்சி,

பிறர் பார்வைக்கு உறுத்தா வண்ணம் சாதாரண வாகனம் போல், இவளுக்காக வந்திருந்த செக்யூரிட்டி வாகனம் சற்று தள்ளி வெளியே நின்றது அவளின் வார்த்தை படி.

தன் முகத்தை ஓரளவு  மறைக்கும் வண்ணம் தன் கருநீல துப்பட்டாவில் முக்காடிட்டபடி உள்ளே சென்றாள். இவளை யாராவது கண்டு கொண்டார்களெனில் மீண்டும் துவியோடு ரகசியமாக வெளியேற முடியாது. ஏதோ அசிங்கமான நிலை என்று ஜெஷுரன் சொன்னானே!

தரை தளம் கண்ணியமாக இருந்தது.

பத்திரிக்கையாளர் பலர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். பதட்டமானது நிரல்யாவிற்கு. இவர்கள் பார்வையில் படாமல் துவியுடன் எப்படி வெளியேற?

படியேறி தங்கும் அறைகள் பகுதிக்கு வந்தாள்.

இப்படி இடத்தில் இந்த துவி என்ன செய்கிறாள்? யோசித்தபடியே முதல் தளத்தை அடைந்து அந்த குறிப்பிட்ட அறை கதவை தட்ட முதலில் கதவு திறக்கவில்லை. தன் மொபைலை தேடினாள், அப்பொழுதுதான் அதை அவசரத்தில் மறந்துவிட்டு வந்திருந்தது புரிந்தது.

அண்ணா நான்தான்…கதவை திறங்க…இவள் சொன்ன நொடி கதவு திறக்கபட சட்டென உள்ளிளுத்தான் ஜெஷுரன். அவளை யாரவது துப்பாக்கியால் துளைத்துவிட்டால் ..என்ற பயம் அவனுக்கு.

“என்ன நிரல்யா இப்படி செய்துட்ட….இங்க போய் வந்து நிக்க….?”

பதட்டமும், பரபரப்புமாக அவன் கேட்ட நொடி, தான் ஏதோ சதியில் மாட்டி இருப்பது புரிந்துவிட்டது தேடிச்சென்று கண்ணியில் கால்வைத்தவளுக்கு.

“நீங்கதாண்ணா…வர…சொன்னீங்க..?” என இவளும்     “அந்த அருண் நாய்……அவன் வேலையா இருக்கும்…..உனக்கு ரொம்பவும் ஆபத்தேடா… “ என அவனும் ஒரே நேரத்தில் விளக்க நடந்தது புரிந்துவிட்டது இருவருக்கும்.

இப்பொழுது என்ன செய்ய? என இருவரும் நினைக்க நேரமே இல்லாமல் வெளியே வேகவேகமாக ஓடும் காலடி சத்தங்கள்,

“பகல்ல கூட ரெய்டு….”

இங்க கூட ரெய்டு வருவாங்களா?

ஏன்? தப்பு நடக்காத இடம்னு உலகத்தில ஏதாவது இருக்கா என்ன?

“போலீஃஸ்….”

“ஓடுறா மச்சி…மாட்டுனா அசிங்கமா போயிடும்”

“இவங்களுக்கு காசு வேணும்…அதுக்கு இப்படி ஒரு சீன்….”

பலரும் பலவற்றை பேசிகொண்டு ஓட இப்பொழுது இவர்கள் மாட்டினால் நிலமை என்னவாகும் என நிரல்யாவிற்கு புரிந்தது.

‘ஜெஷுரனோடு ரகசியமாக இவள் இந்த இடத்தில், இந்த சூழலில் இருந்ததாக, பத்திரிக்கையில் வந்தால்….அருகில் வரும் தேர்தல் நேரம்….பத்திரிக்கைகள் இதை சிறிய தகவலாகக்கூட விடப்போவதில்லை’

காவல் துறை இவள் மீது கை வைக்காவிட்டாலும், பத்திரிக்கை பந்தி பரிமாறமல் விடப்போவதில்லை.

பரிதவித்துபோனாள் நிரல்யா. இந்த பெயரையா இவள் அப்பாவிற்கு சம்பதித்து கொடுக்கபோகிறாள்????

ரக்க்ஷத்- அவனுக்கு இந்த செய்தி எப்படியாக இருக்கும்? ஜெஷுரனுடன் ஓர் அறையில் இருப்பதை பத்தி இவள் அவனிடம் குறிப்பிட்ட கதை என்ன? இப்பொழுது அதே ஜெஷுரனோடு ரகசியமாக இப்படி ஒரு விடுதி அறையில் இவள் நிற்பதென்ன???

அப்பாவும், ரக்க்ஷத்தும்  இவளை நிச்சயமாக நம்புவார்கள். ஆனால் அவமானம், வேதனை….அது தலைமுறையை கூட வருத்துமே!

“நான் போறேண்ணா….நீங்க இங்கயே இருங்க…கண்கள் கட்ட…வாசலை நோக்கி இவள் நகர சட்டென குறுக்கே வந்து நிறுத்தினான் ஜெஷுரன்.

“அருண் ஆட்கள் பக்கத்திலயே கூட இருக்கலாம்….சூட் பண்ணாங்கன்னா…இல்ல கிட்நாப் செய்துட்டாங்கன்னா…தனியா போகாதே!” ஜெஷுரனும் பயங்கரமாக தவிப்பது நிரல்யாவிற்கு புரிந்தது.

ஒருவரும் சிந்திக்க நேரம் தராமல் சத்தமெழுப்பி தான் தட்டபடுவதை அறிவித்தது கதவு. மென் தட்டல். வந்திருப்பது நிச்சயம் காவல் துறை பிரதிநிதி இல்லை.

இருவரும் முதலில் உருவியது பிஸ்டலைத்தான். கதவை திறந்தால் அதன் பின் மறையும் விதமாக அவளை கதவிற்கு அருகில் நிறுத்திவிட்டு கதவை திறந்தான் ஜெஷுரன்.

எதிரில் நின்றது ரக்க்ஷத்.

 

“ரக்க்ஷு…..” ஜெஷுரன் ஆச்சர்யபட்டானாகில்,

இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து “ரக்க்ஷத்” என்ற கூவலுடன் ஓடிச் சென்று தன்னவனை கட்டி அணைத்து மன்னவன் மார்பில் மாலையானாள் மங்கை.

அவளது அத்தனை பரிதவிப்பிற்கும் முற்றுபுள்ளியிடும் முத்திரை மோதிரம் அவனது ப்ரசன்னம்.

மென்மையாய் அவளோடு அறைக்குள் நகர்ந்து, உள்ளே வந்து கதவை அடைத்து, அந்த கதவின் மீது சாய்ந்தான் ரட்சிக்க வந்தவன்.

“லயூ…இப்ப…இப்படி ஃபோட்டா வந்தா கூட நல்லாஇருக்காது” என்றான். முகத்தில் இருந்தது வெறும் குறும்பு மட்டுமே.

யார் இவன் உனக்கு? ஏன் வந்தாய் இங்கு? என்ன செய்கிறாய்? ஏன் மறைத்தாய்? எந்த கேள்வியும் கேளாமல்……

விழி விரிய அவன் முகம் பார்த்தாள். இவளை அவன் சந்தேக படாவிட்டாலும், குறைந்தபட்சம் கோபமாவது படவேண்டுமே! ம்கூம்!

“எம் ஹெச்…இப்படி அப்பட்டமா சைட் அடிக்கிறத அப்புறமா வச்சுகிடலாம்….. உனக்கு பதிலா உன் அண்ணன் வெட்கபட்டு வெளிய ஓடிற போறான்”  ரக்க்ஷத் சொன்ன பிறகுதான் ஜெஷுரன் அங்கு நிற்பதை உணர்ந்தவளாய் விலகினாள்.

“நம்ம ஆமி ஃஸ்கூல் 4த் க்ரேட் ஸ்டுடெண்ட்ஃஸ் கீழ பார்ட்டி ஹால்ல இருக்காங்க, நாம . சாஹித்யா குட்டி பெர்த் டே செலிப்ரேட் செய்ய வந்திருக்கோம்.” சொல்லிய ரக்க்ஷத்தின்  கைகளில் இருந்த இரு  கிஃப்ட் பார்சல்களை அவள் அப்பொழுதுதான் கவனித்தாள்.

அந்த குழந்தை சாஹித்யா தன் பிறந்த நாளை பெரிதாக கொண்டாட ஆசை என ரக்க்ஷத்திடம் ஒரு முறை சொல்லியது நிரல்யாவிற்கு தெரியும். ஆனால் இவள் ஞாபகம் சரியானால் சாஹித்யா பிறந்த நாளுக்கு இன்னும் சில தினங்கள் இருக்க வேண்டும்.

இவன் என்ன செய்கிறான்? ஏதோ திட்டம்.

“லைஃப் த்ரெட்டனிங் சிச்சுவேஷன் இல்ல, இது வேற ப்ரச்சனை…சிரிச்சுகிட்டே இயல்பா வரனும்.” நடந்து கொள்ள வேண்டிய முறையை கடைசியாய் வந்தவன் விளக்கினான்.

தன் கையிலிருந்த பரிசு பெட்டிகளை அண்ணனும் தங்கையுமாக மாறி இருந்தவர் கைகளில் ஆளுக்கொன்றாக கொடுத்தான் ரக்க்ஷத்.

“பெர்த் டேக்கு வர்றவங்க இப்படித்தான் வெறும் கையோட வருவீங்களா” என்ற கிண்டல் வேறு. அவன் நடுவில் வர இருபுறமுமாய்  இணைந்து நிரல்யாவும் ஜெஷுரனும் கையில் அந்த பார்சல்களுடன் அறையிலிருந்து வெளிபட்டனர். தரைதளம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள். புகை பட ஒளிவெள்ளம்.

காவல்துறையினர் ஒருபுறம்.  ரெய்டு நடக்கிறதா? அல்லது இந்த திடீர் விழாவில் அது தற்காலிகமாக நின்றுவிட்டதா தெரியவில்லை.

“வெண் பற்கள் தெரிய புன்னகைத்த படி, “இது ரொம்ப சின்ன ஃபங்ஷன், எங்க சாஹித்யா பேபியோட ஆசை, மத்த குழந்தைகளும் ஆசை பட்டா…ஒவ்வொருத்தருக்கும், ரொம்ப பெரிய அளவில செய்ய முடியாதேன்னு சிம்பிளா இங்க அரேன்ஜ் செய்தோம், அதுக்கு இவ்ளவு கவரேஜ் செய்து, நீங்க க்ராண்டா ஆக்கிட்டீங்க, எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டு தான் போகனும்”

பத்திரிக்கையாளர்களை வரவேற்ற விதமாக பேசினான் ரக்க்ஷத்.

இவளையும் ஜெஷுரனையும் ரெய்டில் பிடித்ததாக புகைபடம் இத்தனை பத்திரிக்கைகளில் வந்திருந்தால்……’திக்’ என்றிருந்தது அவளுக்கு. ஆதாரமாக அருகில் இணையாக நடந்து கொண்டிருந்தவன் வலகரம் பற்றினாள்.

நீர் கோர்த்த நயனங்களை நன்றியால் நிரப்பி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எம்.எச் நாளைக்கு ந்யூஸில உன் படத்தபோட்டு அழுமூஞ்சி இளவரசின்னு சப் டைட்டில் போடுவாங்க, அது கூட பிரவாயில்ல உண்மைய சொல்றாங்கன்னு விட்டுறலாம், இப்படி அழகான பையனுக்கு இப்படி ஒரு அழுகாச்சி காவியத்தோட கல்யாணமான்னு தலையங்கம் போட்டு கருத்துகணிப்பு அது இதுன்னு ஆயிபோச்சுன்னு வச்சுக்கோ….”

அவன் எதையோ சொல்லி அவள் மன நிலையை சுமுகமாக்க முயல அவன் பேசியது எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு. காரணம் அவள் உள்ளும் புறமும் நிறைத்து காட்சி தந்தது கனிந்த காதல். அதில் மூழ்கி போனது முழு அறிவும், மொத்த சரீரமும்.

சூழ்ந்திருக்கும் காற்றாய் இவளை சுற்றி இருந்து, இவளே இவள் நலம் மறக்கும் வேளையிலும், இவள் சுகம் பேணும் இவன், இவள் நன்றியால் நெகிழ்வதை கூட தாங்காமல்……

கனிந்த காதல் என்பது என்ன?

நீ எனக்கானவள்(ன்) என தொடங்கி, நீயே தான் நான் என்றாகி, நீ மாத்திரமே நான் என பரிணமிப்பதா?

என்னை என்னைவிட அதிகமாக நேசிப்பவன் நீ

அந்த விழா முடியும் வரையுமே, தன் விழியால் தனக்கானவனை தடையின்றி பருகி அவனை தன் உயிருக்குள் சேமித்ததை தவிர எதையும் செய்யவில்லை அவள்.

பிள்ளைகளை காப்பாளர்களுடன் வாகனத்தில் ஏற்றி ஹோமிற்கு அனுப்பிவிட்டு மூவருமாக கிளம்பிச்சென்றது நிரல்யாவின் வீட்டிற்கு.

உள்ளறையில் சென்றதும் தான் நடந்ததை மூவருமாக தங்களுக்குள் விளக்கி கொண்டனர்.

 

 

டந்தது இதுதான்.

ஜெஷுரன் அருண் பற்றி விசாரிக்க தொடங்கியது அருணுக்கு எப்படியோ எட்டி இருக்கிறது. அவன் ஜெஷுரன் நிரல்யாவிற்கு இடையில் இருக்கும் நடபடிகளை அறிந்திருக்கிறான். ஜெஷுரன் அலை பேசி எண்ணை அருண் ட்ராக் செய்திருந்தாலே இது சாத்தியமாகி இருக்கும்.

ரக்க்ஷத்தை பழி வாங்க இப்படி ஒரு நாடகம். குறிப்பாக ரக்க்ஷத்திடம் சட்ட விரோதமாக மோத அருணுக்கு தைரியம் இல்லை.

ரக்க்ஷத் நிரல்யா நிச்சயம்தான் உலகறிந்த விஷயமாயிற்றே! அதனால் குறி நிரல்யாவிற்கு. மனதில்  அடி விழுவது ரக்க்ஷத்திற்காக இருக்குமே!

அருண் கோயம்புத்தூரில் அந்த குறிப்பிட்ட அறையில்தான் எப்போதும் பொழுது போக்குவது வழக்கம். அந்த அறை எப்பொழுதும் அவன் பெயரில் பதிவாகி இருக்கும். அங்கு அவன் பற்றிய தகவல் மறைத்து வைக்கபட்டிருக்கிறது. என்றவிதமான தகவல் ஜெஷுரனுக்கு கிடைக்கும் படியாக பார்த்துகொண்டான் அந்த அருண். ஆக ஜெஷுரன் அங்கு விரைந்தான்.

ஜெஷுரன் அழைப்பதுபோல் ஒரு அழைப்பு நிரல்யாவிற்கு. பத்திரிக்கையாளர், காவல் துறையினர் ரெய்டு இவைகளை பொய் சொல்லி ஏற்பாடு செய்வது அருணுக்கு பெரிய காரியம் இல்லை.

ஜெஷுரனுடன் தொடர்பில் இல்லை என்றாலும் அவன் அருணை பற்றி துருவும் தகவல் ரக்க்ஷத்திற்கும் கிடைத்திருந்தது. காரணம் ஜெஷுரன் அருண் பற்றி தகவல் துருவிய இடங்களில் ஒன்று ரக்க்ஷத்தின் அலுவலகம்.

ஜெஷுரனுக்கு அருண் பற்றி அறிய வேண்டிய அவசியம் என்ன?

அதனால் ரக்க்ஷத் அருணை ட்ராக் செய்தான்.

ரக்க்ஷத்திற்கு சற்று முன்தான் அருணின் இந்த திட்டம் எட்டியது.

நிரல்யாவை நிறுத்த மொபைலில் தொடர்பு கொண்டால் அது தொடர்பு எல்லைக்குள் இல்லை என்றது. அதாவது மொபைலை வீட்டில் விட்டு சென்றிருக்கிறாள் (.இவள் வீட்டில் ஜாமர் இருப்பதால் அங்கிருக்கும் அலைபேசியை அழைத்தாள் அப்படித்தான் அது சொல்லும்.)

உடனடியாக இந்த திட்டம்.

ஆயுத போர் இல்லை என்பதால் பிள்ளைகளை அழைத்துவர சொல்லிவிட்டு, ஹோட்டலிற்கு ஃபோன் மூலம் விழாவிற்கு  ஆயத்தம் செய்ய பதிவு செய்துவிட்டு, வேகமாக இங்கு வந்திருக்கிறான் ரக்க்ஷத். அருணின் திட்டம் நிரல்யாவை பதம் பார்க்கும் முன் முடிவுக்கு வந்தது.

இனி வேட்டையாடப் போவது யார்???? விளையாடப் போவது யார்???

Leave a Reply