கதையின் கதை 2…

 செம கேப் ஆகிப் போச்சுல்ல இதுல மீட் பண்ணி…. சரி இன்னைக்கு ஒரு கதைக்கு கதை சொல்லிடலாம்னு யோசிச்சேன்……ஆனா  அப்டி யோசிக்கவும் மனதுல வந்த முதல் நியாபகம் முதல் எப்பி படிச்சுட்டு ….எப்டி இப்டி ஆக்க்ஷன் த்ரில்லர்னு எழுத ஐடியா வந்துச்சுன்னு  உங்கள்ள சிலர் கேட்டிருந்த கேள்விதான்…

ஆக்சுவலி அந்த கேள்வியப் பார்த்த பிறகுதான்…ஆமா ஏன் இப்டி எழுதுறோம்னு நான் யோசித்ததே….. ப்ளான் செய்தெல்லாம் இப்டி எழுதலை….ஜஸ்ட் இதுதான் எனக்கு  இயல்பிலேயே வருது….

ஆனா இப்டி ஏன் இயல்பு செட் ஆச்சுதுன்றதுக்கு வேணா காரணம் இருக்கும் போல….

என்னோட  அப்பா ஒரு கவர்மென்ட் டிபார்ட்மென்ட்ல வேலை செய்த மிக straight forward  officer…. ஆக எப்பவுமே பல மிரட்டல்களுக்கு இடையிலும் எக்க சக்க ட்ரான்ஸ்ஃபருமாகதான் எங்க குழந்தைப் பருவமும் கல்யாணம் வரையிலுமான என் வாழ்க்கையுமே  அமைஞ்சு இருந்துது….

‘பாரு உன் பிள்ளைங்கள என்ன செய்றேன்னு’  என்ற வகை  மிரட்டல்களை அடிக்கடி அப்பா அனுபவிக்க வேண்டி இருக்கும்…. அதனால எப்பவுமே  சின்னதில் இருந்து சேஃபா இருக்றது எப்படின்னு சொல்லி கொடுத்தேதான் வளர்க்கப்பட்டோம்…. அதைதான் ஃபாலோ செய்தோம்….அதுதான் இயல்பு போலவே ஆகிட்டு…. இன்ஃபேக்ட் காலேஜ் வர வரைக்குமே எல்லோர் வீடும் அப்டித்தான் போலன்னு நான் நினச்சதுண்டு….

வீட்ல விபரம் தெரிந்த காலத்திலிருந்து ஃபோன் உண்டு…..அதை எப்டி அட்டென் செய்யனும் என்ன பேசலாம் பேசக்கூடாதுன்றதில் ஆரம்பிக்கும் எங்களது சேஃப்டி ஃபர்ஸ்ட் கொள்கை….

யாராவது ஃபோன் செய்தா எந்த காரணத்தைக் கொண்டும் நம்ம வீடு எங்க இருக்குன்னு சொல்ல கூடாது….  வீட்ல அப்பா இருக்காங்களா இல்ல ஊருக்கு போயிருக்காங்களா? நைட் பொதுவா அப்பா எப்ப வீட்டுக்கு வருவாங்க….இது போல யார் கேட்டாலும் அலர்ட் ஆகிடனும்… பதில் சொல்ல கூடாது…. அப்டின்னு ஆரம்பிச்சு எப்படி ஃபோன் பேசனுன்ற ஒரு லிஸ்ட் உண்டு வீட்டில்…

எப்பவும் எங்க ஃபோன் கால்ஸ் ரிகார்ட் ஆகிட்டேதான் இருக்கும்….  ஒரு ஸ்டேஜ்லல்லாம் அப்பா ஆஃபீஸ் டேபிள்ள உள்ள போன்க்கு எக்‌ஸ்டென்ஷன் இங்க எங்க வீட்லயும் உண்டு…. அதாவது அதை எடுத்து கால் பண்ணாதான் அப்பா வருவாங்கன்னு இல்ல….ஃபோன் ரிசீவரை எடுத்தாலே அவங்க முன்னால அது  ஒரு டைப்பா பெல் போல சவ்ண்ட் கொடுக்கும்… (அப்போல்லாம் இந்தியாவிலே மொபைல் பேஜர் எல்லாம் இல்ல)

இது போல வீட்டு கதவை திறக்கிறதுக்கு முன் செய்ய வேண்டியவை….. பூட்டும் முன் செய்ய வேண்டியவை…. ரோட்டில் நடக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்…. இப்டி நிறைய லிஸ்ட் உண்டு…

பொதுவா எங்க குடும்பங்கள்ள சொந்த ஸ்கூல் வச்சுறுக்கவங்க அதிகம்….. தமிழ்நாட்டுக்குள்ள எங்க ட்ரான்ஸ்ஃபர் ஆனாலும் அப்டி ஸ்கூலாத்தான் எங்களை சேர்ப்பாங்க….

ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு  கூட அப்பாவுக்கு தெரியாதவங்க வீட்டுக்கு நாங்க போக கூடாது….. எங்கயும் எதுக்காகவும் தனியா போக கூடாது….ஒரு க்ரூப்பா சேர்ந்து போகனும் வரனும்…. நம்ம ஓன் காமிரா தவிர யார் வீட்டு காமிராலயும் எந்த ஃபங்ஷன்லயும் நம்மள ஃபோட்டோ எடுக்க கூடாது….. இப்டி நிறையா ரூல்ஸ் இருக்கும் காரண காரியத்தோட…

தியேட்டர்க்கு நாங்க போறதெல்லாம் திருவிழா தான்…..  ஆமா வருஷம் ஒரு டைம் போனாதான் உண்டு….. …அப்போ தியேட்டர்ல பாக்‌ஸ்னு ஒன்னு இருக்கும்…21 பேர் மட்டுமா உட்கார்ர பால்கனி அமைப்பு…. அதுக்குத்தான் கூட்டிட்டு போவாங்க…எங்களைத் தவிர யாருமே இல்லாம மூவி பார்த்துட்டு வருவோம்…

இதே இது டீனேஜ் வரவும் நமக்கே சில தற்காப்பு உணர்ச்சி இயல்பிலேயே வருமே அதுவும்  அந்த டைம் நாங்க இருந்த ஊர் ஈவ் டீசிங்க்கு பேர் போன இடம்….. ஒரு ஸ்டேஜ்ல எப்பவும் என் பேக்ல ஈசியா எடுக்க மாதிரி இடத்தில் ஒரு கத்தியும் வச்சுறுப்பேன்….. I strongly believe non violence….ஆனா trap ஆனா தற்காப்புக்கு மிரட்டுறது தப்பில்லைனு தான் நினைக்கிறேன்….. பாம்பா சீறலாம் கொத்த கூடாதுன்றது என் பாலிசி….

ரெண்டு டைம் வீட்டுக்குள்ள வந்த திருடனை கண்டு பிடிச்சுறுக்கேன்…. பொதுவா தூங்குறப்ப கூட  சின்ன மூவ்மென்டும் ஃபீல் ஆகிடும் நமக்குன்ற  அளவு நாமளே டெவலப் ஆகிடுவோம் ஓவர் இயர்ஸ்….

பால் வண்ணம் பருவம் கண்டு ரேயா பேங்களூர்ல ஆம்னி துரத்த ஓடின இன்சிடென்ட்….நிஜத்தில் நான் அப்டி ஓடினதை வச்சு எழுதின ஒன்றுதான்….. இன்சிடென்ட் நடந்த இடம் பெங்களூர் கிடையாது…..….ஆதிக்கும் அப்போ வரல…. ஏன்னா அப்டி ஒருத்தர அப்போ எனக்கு தெரியாது…. நானே ஓடி தப்பிச்சுகிட்டது தான்…

மனம் கொண்டேன் சிறுகதை….அதில் அந்த பொன்மதி கேரக்டர அடுத்த டிபார்ட்மென்ட் பசங்க  அவ  க்ளாஸ் ரூம்ல வந்து மிரட்டுற இன்சிடென்ட்….அதுவும்  எனக்கு நடந்த ஒன்னுதான்……கதையில் சொல்லி இருக்கும் அதே காரணத்துக்காகத்தான்…..

அதே கதையில் முதல்ல ஒருத்தன் வந்து டேபிளை எல்லாம் அடிச்சு மிரட்டுறதா சீன்…அது எனக்கு நடந்த என் முதல் நாள் காலேஜ் எக்‌ஸ்பீரியன்ஸ்

இப்டி சில ஆக்க்ஷன் சீன் வேற வாழ்க்கையில் ஆட் ஆக….இதில் என் கல்யாணத்துக்கு பிறகுதான் தெரியும் என் ஹப்பி வேலையில் ஒரு பார்ட் வைட் காலர் க்ரைம் இன்வெஸ்டிகேஷன்னு…… என் கசின்ஸ் வேற போலீஸ், ரா, ஏர்ஃபோர்ஸ், நேவி, கமண்டோன்னு அந்த ரேஞ்சல நிறைய பேர் செட்டில் ஆக…..

எனக்கு இப்டில்லாம் ஆக்க்ஷன் த்ரில்லர் சஸ்பென்ஸுன்னுதான் எழுதவே வருது….

எப்பவும் கதைன்றது நம்ம மனசோட வெளிப்பாடுதானே…. மனதின் நிறைவை வாய் பேசும் 😊

 

9 comments

  1. Hi Mistyma, Mistykullara oru kushthy podura rangela oru ninja women irukkuradha parthu santhosam. With luv, Niranjana.

  2. Very interesting Anna! Yes, stories pop out from our experiences n our thoughts based on that feel. I’m eager to read all your work. I’m waiting to finish my current story. As I finish waiting to read ANPE. 😊❤️

  3. unga kadhaigal oda inspiration unga life than nnu.. kandupidichittomle.. including dosai, kozhukkattai experience too.. :3)

  4. எங்களுக்கு அந்த அனுபவம் எல்லாம் இல்லை…சோ உங்க கதைகளை படிக்கும் போது ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிடுது…சூப்பர்

  5. Sema sweet ……. But indha true incident lam story la padikkum pothe heart blood over ah pump achu…. Nijama nadanthu irukku nu ninakkum podhe my feeling is OMG😱😱😱…….. But u brave girl adha alagha over come panni ippadi than irukkanum nu lesson ah solliteenga…. Sema…..

Leave a Reply