கதையின் கதை 1

வரிசை படி ஆரம்பிக்கனும்னா கனியாதோ காதலென்பதில் தொடங்கனும்….. 

ஆனா அதுக்கும் முன்ன….நான் கதை எழுத வந்த கதைய முதல்ல சொல்லிக்கிறேன்…. So here we go with my காயில் சுருள்…..

இப்படித்தான் அப்போ……2013 ல நான் வீட்ல மட்டுமா இருக்க வேண்டிய ஒரு சிச்சுவேஷன்….. அம்மா ரோலின் அப்போதைய தேவை அது………

அதுவரைக்கும்  பிஸி லைஃப்ல இருந்துட்டு சட்டுன்னு குழந்தை குடும்பம்னு மட்டுமா  இருக்கவும் எக்கசக்க டைம வச்சுகிட்டு என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்கிற ஃபீல் எனக்கு…..

  அந்த டைம் நான் ட்ராவல் செய்த என் ரிலடிவ் ஒருத்தங்க கார்ல ஒரு  ஃபேமிலி நாவல் கிடந்தது என் கைக்கு  மாட்டிச்சு…  அமுதம் விளையும் புக்னு நினைக்கிறேன்….

நான் படிச்ச முதல் பேமிலி நாவல்னா அதுதான்…. ஸ்கூல்டேஸ்ல  ஹிஸ்டாரிகல் நாவல்ஸ் படிச்சுறுக்கேன்…… மத்தபடி  எப்பவும்  படிக்கிற நான்ஃபிக்க்ஷன்ஸ்க்கு இது நிஜ லைட்டர் ஒன்…. சும்மா எதோ பேசிட்டு இருக்கப்ப என் ஹப்பிட்ட இதை மென்ஷன் செய்தேன் போல…..

அடுத்து அவங்க அது போல புக் அப்டின்னு சொல்லி எனக்கு சம் 200 புக் கொடுத்தாங்க……. அவ்ளத்தையும் அந்த மாசமே வாசிச்சு அப்பவே கண்ணாடி போட்டேன்…..அதுதான் அதோட இம்மிடியெட் எஃபெக்ட்…. கொஞ்சம் லாங்க் டைம் எஃபெக்ட்தான் கதை எழுதுறது போல…..

அப்போ ஒரு  லாங்  கார் ரைடில் என் ஹஃஸ்பண்ட் ட்ரைவ் செய்துகிட்டு இருக்கப்ப   இடைவெளி அதிகமில்லைனு ஒரு புக்…..அதை படிச்சுட்டு இருந்தேன்….. வழக்கமா லாங் ரைட்னா   ரெண்டு பேரும் அரட்டை அடிக்கும் நேரம்…. சோ நான் புக் படிக்கவும் அவங்களுக்கு போர் ஆகி…..அப்டி என்னதான் படிக்க எனக்கும் ரீட் பண்னேன் பார்ப்போம்னு கேட்டாங்க…

இங்க  இன்னொரு விஷயம் சொல்லியே ஆகனும்…..அப்ப என் ஹஸ்பண்டுக்கு தமிழ் வாசிக்க தெரியாது…. தமிழ் பேசுறதும் தகிடதகமிதான்….. அபவ் ஆல் அவங்களுக்குன்னு ஒரு குட்டி லைப்ரரி உண்டு வீட்டில்…..  செம புக் அடிக்ட் அவங்க…..ஆனால் அதில் மருந்துக்கு கூட ஒரு கதை புக் கிடையாது……எந்த லாங்குவேஜிலும் கதை புக்னு ஒன்னு படிச்சதே கிடையாத ஒரு டைப் அவங்க…

ஸ்போக்கன் தமிழ்லயே  அவங்க ஒரு ரேஞ்ச்……இதில்   ரிட்டன் தமிழ் இவங்களுக்கு எப்டி புரியப் போகுதோன்னு நினச்சுட்டே வாசிச்சேன்….. அதோட அதிசயமா ஒருத்தங்க கதை புக்க போய் வாசின்றாங்களேன்னு வேற ஒரு  ஜெர்க்….

 அந்த நாளுக்கு அவ்ளவு ஷாக் போதாதுன்னு… கொஞ்சம் வாசிக்கவும்….

“ஹேய் இந்த தமிழ் அழகா இருக்கு…. ஃபீல் குட்…” அப்டின்னு ஒரு கமென்ட் அவங்கட்ட இருந்து… எனக்கு தலை சுத்திட்டு…. இது நிஜம்தானானு….

ஆனா அப்பவே டிசைட் செய்துட்டேன் இந்த பழக்கத்தை கன்டின்யூ செய்யனும்னு….. தேடி வந்து மாட்டினவங்கள சும்மா விடக் கூடாதுல்ல…..

இப்டி ரீட் பண்றதால அவங்க தமிழ் இம்ப்ரூவ் ஆகும்னு எனக்கு தோணிச்சு…..அதோட எனக்கு அப்டி அவங்களுக்கு ரீட் பண்றது ஒரு சூப்பர் ஹேப்பி ஃபீலும்…..

ஆனா வாங்கின புக்‌ஸ்ல சிலது எனக்கு ரொம்ப பிடிச்சுதுன்னா சிலதை பாதி கூட வாசிக்க முடியல…..என் மாரல் எக்‌ஸ்பெக்டேஷன்க்கு கொஞ்சம் கூட ஒத்துப் போகல….அதை அப்றம் அவங்கட்ட எப்டி ரீட் பண்ணி காமிக்கவாம்?

சேம் டைம் அதுக்கு மேல இப்டி புக் வாங்கவும் விருப்பம் இல்ல…..எது பிடிக்கும் பிடிக்காதுன்னே சொல்ல முடியலையே….. சோ அப்பதான் நமக்கு நாமே எழுதிப்போம்னு கதை எழுத ஆரம்பிச்சேன்….

ஹ ஹா எப்டி இப்டி முடிவெடுத்தேன்னு இப்ப யோசிச்சாலும் சிரிப்புதான் வருது…. முதல்ல  டெஸ்டாப்ல கீ இன் செய்ய ட்ரைப் பண்ணினா…. தமிழ் டைப்பிங் ஒரு சென்டென்ஸ் அடிச்சு முடிக்க ஒரு முழு நாள் போல தேவைப்பட்டுச்சு…..

இப்டியே போச்சுன்னா அரை புக் முடிக்க ஆயிரம் வருஷம் தேவைப்படும்னு அடுத்த நாள் முடிவு செய்து….சரின்னு நோட்ல எழுதினா… ‘சில எழுத்து எப்படி எழுதனும்னே தெரியலை….. ரொம்ப வருஷத்துக்கு மேல தமிழ்ல எழுதவே இல்லாம இருந்ததில் எழுத்து மறந்திருக்குன்னே அப்போதான் எனக்கு புரிஞ்சுது….

இப்டித்தான் ஆரம்பிச்சுது இந்த கதை எழுதுற ஜர்னி…..

முதல் நாவல் எப்படி சொல்வேன் வெண்ணிலவே? தான்….. அந்த ஒரிஜினல் வெர்ஷன்ல வசிகரன், மலர், அதி பார்ட் இல்லாம இருக்கும் கதை….. அதை என் ஹஸ்பண்ட்க்கு ரீட் செய்து காமிச்சேன்……எங்க ரெண்டு பேருக்குமே இந்த கதை  ரீட் செய்ற டைம் ரொம்பவே பிடிச்சுது…

அடுத்து வீக்லி ஒரு நாவல் எழுதுவேன்…..அந்த வீக் என்ட் சனி கிழமை அவங்களுக்கு ரீட் பண்ணி காமிப்பேன்…. இந்த ஒரே ஒரு ரீசன்காக மட்டும்தான் எழுத ஆரம்பிச்சேன்…..

மத்தபடி பப்ளிஷ் செய்யனும்னு தாட்ல கூட கிடையாது….. ஆனா என் ஹஸ்பண்ட் பப்ளிஷ் செய்யலாம்னு என்கரேஜ் செய்ய  ஆரம்பிச்சாங்க….. அதுக்கு ஒரு ஒன் இயர் கழிச்சு எதேச்சையா ப்ரவ்ஸ் செய்றப்ப ஆன் லைன் பப்ளிஷிங் பத்தி தெரிய வந்துச்சு…..

அங்க ஆரம்பிச்சு ஜர்னி இங்க வரை வந்திருக்கு….  இப்போ வீட்ல ஹஸ்பண்ட் குழந்தை ரெண்டு பேருமே தமிழ் ஓரளவு ரீட் பண்ணுவாங்க….  நல்லா பேசுவாங்க…. இருந்தும் என் கதை எழுதுற பழக்கம் மட்டும் கன்டின்யூ ஆகுது……

இதுதான் நான் கதை எழுதுவதின் கதை…..

கதையின் கதை 2

 

One comment

Leave a Reply to Sameera Cancel reply