கதையின் கதை…..பேரை சொல்லவா? அது நியாயம் ஆகுமா??

பேரைச் சொல்லவா? கதையைப் பார்க்கவும் இந்த பொண்ண நியாபகம் வந்துட்டு…. எனக்கு அவ அறிமுகம் ஆகுறப்ப காலேஜில் படிச்சுட்டு இருந்தா…. ஹாஃஸ்டல் வாசம்…. ஞாயிறுகளில் எங்க வீட்டுக்கு வருவா…. ஆர்ஃபனேஜிலிருந்து படிப்பதற்காக இந்த கலேஜுக்கு வந்திருந்தாள் அவள்…. எஜுகேஷன் லோன் போட்டு படிக்க அனுப்பியிருந்த அவளது ஆர்ஃபனேஜ் மேல் எனக்கு இப்போது வரை ஏக மரியாதை உண்டு… ஒரு நாள் வழக்கம் போல் லன்ச் முடியவும் அவளோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது அவளது சிறு வயது கதையை பகிர்ந்து கொண்டாள்…. அவளது அப்பா 10 லாரிகளின் உரிமையாளராம்…… அவளது அம்மாவும் ஓரளவு வசதியான பின் புலம் கொண்டவர்களாம்…. இவளும் இவளது அண்ணனுமாக இரண்டு குழந்தைகள்…. அவளது அப்பா மது பழக்கத்திற்கு அடிமையாக….ஒரு கட்ட த்தில் என்ன நடந்த து என இவளுக்கு தெரியவில்லை….அவரது அத்தனை லாரிகளையும் அவரது நண்பர்களிடம் கொடுத்து விட்டாராம்…. சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ப்ளட்ஃபார்மில் இருந்து பிச்சை எடுப்பதுதான் வாழ்க்கை….. அவளது அம்மா இந்த சூழலில் உங்களோடு இருக்க முடியாது என இரண்டு குழந்தைகளையும் கணவனிடமே விட்டுவிட்டு கிளம்பிப் போய்விட்டார்களாம்…. அப்போது இவளுக்கு வயது 2…. ஆக அம்மா முகம் அவளுக்கு சுத்தமாக நியாபகம் இல்லை…. அ்ப்பாா அண்ணா இவள் மூன்று பேரும் பிச்சை எடுத்திருக்கிறார்கள்….இதில் ் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் ஒரு கும்பல்….இவளை கடத்திப் போய்விட்டார்களாம்… அவர்கள் ஒரு வீட்டில் அவளை மற்ற குழந்தைகளோடு அடைத்து வைத்துவிட்டார்கள் போல…..அந்த குழந்தைகளோடு சென்று பிச்சை எடுக்க வேண்டும்…அவர்களுடனே திரும்ப அழைத்து வன்ந்துவிடுவார்கள்….. அப்போது அவளுக்கு வயது 6…. இப்படி சில மாதங்கள் சென்ற பின்…. இவளுக்கு திரும்பிச் செல்ல வழி எதுவும் நியாபகம் இருக்காது என்ற நம்பிக்கை வந்தவுடன் கண்காணிப்பு ஓரளவு குறைந்திருந்ததாம்….. அது ஒரு மா பெரும் நகரம்…. நிச்சயமா இப்ப கூட என்னாலா அங்க தனியா ஒரு இடத்திலிருந்து அடுத்த இடம் ஈசியா போய்ட்டு வந்துக்க முடியாது…… இவள் அப்ப அவங்க பழைய ஏரியவை நியாபகம் வச்சு தேடி அங்க வந்து அவ அப்பா கூட திரும்பவும் சேர்ந்தாச்சு….. மீண்டும் அப்பா கூட பிச்சை……இதில் நாள் போக போக…..மத்த பிள்ளைங்க போல தானும் படிக்கனும்னு இவளுக்கு ஆசை…. பிச்சை கேட்கிற எல்லோர்ட்டயும் என்னைய படிக்க ஸ்கூலுக்கு அனுப்புங்களேன்னு பிச்சை கேட்டிருக்கா….அப்போ ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவரிடமும் இவள் எதேச்சையாய் இப்படி கேட்க…. அவர் அவளை தன் நிறுவனம் மூலமாக ஒரு ஆர்ஃபனேஜில் தங்க வைத்து படிப்பு செலவிற்கும் வழி செய்திருக்கிறார்….. பள்ளி படிப்பு முடியவும்…எஜுகேஷன் லோன் எடுத்து வெகு தொலைவில் இருந்த அவளது கனவு பிரதேசத்தில் கல்லூரிப் படிப்பு….
அடுத்து வேலைக்கு போய்…..இப்ப லவ் மேரேஜ்….குடும்பமா செட்டில் ஆகியாச்சு பொண்ணு…
எப்பொழுதெல்லாம் அவள் நியாபகம் வருகிறதோ என் மனதில் ஒரு கீற்றாய் கீறிவிட்டுப் போகும் அவளது அம்மா பற்றிய “எப்டி முடிஞ்சுது குழந்தைய விட்டுட்டுப் போக?’ என்ற நினைவையும் தாண்டி…. “கடவுள் இருக்கார்க்கா…..அவர் ரொம்ப நல்லவர்… அம்மா அப்பா கூட நம்ம விட்ருவாங்கக்கா…ஆனா HE never let me down…” அப்டின்னு சொல்றது பலமா மனசுக்குள்ள விழுந்து புரளும்….. எப்பவுமே ஜுபிலன்டா துருதுருன்னு தான் இருப்பா….. அவ இடத்தில் இருந்தால் என்னால் வாழ்க்கைய அப்டி பார்க்க முடியுமான்னு தெரியல….. அதனாலயேவா கூட இருக்கலாம்…. she is my heroine…

5 comments

  1. Romba ganamaana ranamaana Kathai. Padikum pothe valikkirathu. Vazhkkai aduththu Namakku enna vaiththu irukkirathu enbathai ninaiththaale bayama irukku.

  2. “He never let me down.” — This is what we need to learn from her. But for this she didn’t just sit and wait she did what are all she has to do she did that and then only she is saying. Wishing her She will get more and more happiness in her life. With luv, Niranjana.

  3. இந்தக் கதையை வாசித்தபோது இத்தனை அழகான காதலுக்குப் பின்னால் இத்தனை வலி மிக்க ரணத்தை எதிர்பார்க்கவில்லை.
    வாழ்க்கையின் அச்சுறுத்தல்களுக்கு குறை கூறாமல் இறைவன் கொடுத்த வாய்ப்புக்களுக்கு நன்றி செலுத்தும்உங்கள் தோழியின் நேர்மறை அணுகுமுறை மற்றும் மனப்பக்குவம் அபாரம். அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். நான் உட்பட.

Leave a Reply