கதல் வெளியிடை 20 (2)

சின்னதாய் நசநசத்துக் கொண்டிருந்தது மழைத் தூறல்…. தனது தங்கும் அறைக்கு எதிரான காரிடாரில் நின்று அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ருஷ்டி…..

கொலையோ அல்லது அது போன்ற மாபெரும் குற்றங்களோ செய்துவிட்ட எந்த ஒரு சராசரி மனிதனும்…. எத்தனை காலம் கடந்தாலும் அதில் தன் தவறுணர்ந்து திருந்தி இருந்தாலும் இல்லாது போனாலும்.. அத்தனை இயல்பாய் எல்லாம் யாரிடமும் சென்று மனம் திறந்து நான் இப்படி நினச்சேன் இது இப்படித்தானா என்றெல்லாம் பேசிவிட மாட்டார்கள்…. அதனால் எங்கு புது ப்ரச்சனை வந்துவிடுமோ என்பதல்ல காரணம்… எத்தனைதான் மற்ற எல்லாவற்றிலும் இயல்புக்கு கூட அவர்கள் வந்திருந்தாலும் அந்த ஒரு செயலை நினைக்க கூட அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை…அதை பிறரிடம் பேசுவதென்பது ஏறத்தாழ அவர்களுக்கு இயலாத காரியம்…. அந்நிலையில்தான் ஷ்ருஷ்டியும் இருந்தாள்…. நித்துவிடம் தன் குற்றத்தை சொல்ல வேண்டியது கடமை என்ற காரணத்துக்காக அந்த தீவு நிகழ்வை சொல்லி இருந்தவள் வேறு எதையும் எப்போதும் யாரிடமும் பேசி இருக்கவில்லை…

இன்று சஹாவை சந்தித்துவிட்ட நிலையில் அவன் சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் மனதில் வந்து ஆட…அதை தாங்கவும் தெரியவில்லை….தடுக்கவும் முடியவில்லை அவளுக்கு…..

அப்போது அவள் கல்லூரியில் இருந்தாள்… திடுதிப்பென இவள் லேப் அறைக் கதவை திறந்து கொண்டு எட்டிப் பார்த்தது ஒரு மண்டை…

“தீதி இங்கயா இருக்கீங்க…..” என படு உற்சாகமாய் ஆரம்பித்து “என்ன மறந்துட்டீங்கல்ல…..” என முகம் சுருக்கி  “உங்கட்ட சண்டை போடதான் வந்தேன்…..” எனும் போது அழவே தொடங்கி இருந்தாள் அந்த மண்டையின் உரிமையாளினி….

வந்தது பூரி என்ற பூர்ணிமா…

“இப்ப மேரேஜ் இல்லைனதும் என்னை மேல படிக்க பெர்மிட் செய்துட்டாங்க வீட்ல….இங்க தான் பி ஜி ட்ரைப் பண்றேன்….. பார்க்க உங்கள மாதிரி தெரியவும் ஓடி வந்தேன்….” என ஆரம்பித்த அவளது அடுத்த இரண்டு மணி நேர பேச்சில் சில பல விஷயம் ஷ்ருஷ்டியின் ஆணி வேர் வரை அடித்து சிதைத்தது…. வலியோடு வழிந்தோடும் குழப்பத்தில் இவளை கொண்டு போய் கொட்டியது…

முதல் விஷயம் சஹாவுக்கு வந்த அந்த லவ் லெட்டர்களை எழுதியது பாதலாம்….இந்த பூர்ணிமா ஷ்ருஷ்டியின் கவிதைகளை படித்துவிட்டு தனது கசினான பாதலிடம் பேச்சு வாக்கில் அவைகளை சொல்லி வைக்க…. அவன் சஹாவை ஃப்ராங் செய்து… இல்லாத பெண் பின் சுத்தவிடவென.. ஏற்கனவே அனுப்பிக் கொண்டிருந்த கடிதங்களுக்கு தொடர்சியாக அவைகளை அனுப்பி இருக்கிறான்…. அது ஷ்ருஷ்டியின் கவிதை  என அவனுக்கு தெரியாதாம்….

சஹா அறைக்கு வரை பூரி போய் வந்து கொண்டிருக்கும் போது இப்படி பூரி சொல்லும் கவிதைகளையே பாதல் கடிதமாக அனுப்ப…. சஹா அது பூரியின் வேலை என நினைக்க எவ்வளவு நேரமாகுமாம்? சஹா இடத்தில் வேறு ஆணாக இருந்தால் பூரிதான் கடிதம் எழுதுகிறாள் என நினைத்த பின் எத்தனை மோசமாக கூட அவளிடம் நடந்து கொள்ள முடியும்…அது அவளுக்கு எத்தனை ஆபத்து என்றெல்லாம் யோசித்த பூரி….. கொஞ்சமும் அவளது பாதுகாப்பு பற்றி எதையும் யோசிக்காமல் இப்படி நடந்து கொண்ட பாதலை  திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்…….

பாதல் விஷயத்தில் சஹாவுக்கும் அதே கருத்துதானாம்…  அலெக்சாண்ட்ரியா கடலடி பயணத்துக்காக படகில் போய்க் கொண்டு இருந்த போது பூர்ணிமா சும்மா சில கவிதைகளை உளறிக் கொண்டு இருக்க “இது உனக்கு எப்படி தெரியும்? வேற யார்ட்டயும் இதெல்லாம் சொல்லி இருக்கியா  என்றெல்லாம் கேட்டு சஹாதான் பாதலின் இந்த வேலையை கண்டு பிடித்திருக்கிறான்…  அங்கு வைத்தே சஹா சொல்லிவிட்டானாம் எந்த காரணத்திற்காகவும் இந்த பாதல கல்யாணம் செய்துடாதன்னு…

இரண்டாவது விஷயம்… அந்த அலெக்சாண்ட்ரியா கடலடி பயணத்திற்கு வருவது போல் வந்து கடைசி நிமிஷத்தில் விலகிக் கொண்டது முழுக்கவும் இந்த பூரியின் திட்டமாம்… அது சஹாவுக்குமே தெரியாத ஒன்று.

நிம்மியோ பூரியோ இல்லாமல் ஷ்ருஷ்டியும் சஹாவும் பேசிக் கொள்வதில்லை என கவனித்த பூரி….  இவர்கள் இருவருமாய் தனியா பேசினால்தான் சஹாவால ப்ரொபோஸ் செய்ய முடியும் என நினைத்து….. பூரி வருவதாக சொன்னால்தான்  ஷ்ருஷ்டியும் வருவாள் என்பதால் அந்த குறிப்பிட்ட கடல் பரப்பு வரை கூட வந்து…. கடைசி நிமிடத்தில் கப்பலுக்கு போறேன் என பிடிவாதம் பிடித்து திரும்பி இருக்கிறாள்…. முன்ன பின்ன தெரியாத அடுத்த நாட்டுகாரர்களுடன் பூரியை தனியாக அனுப்ப மனதில்லாமல் ஆகாஷை வரச் சொல்லி அவனோடு பூரியை அனுப்பியது மட்டும்தான் சஹாவின் வேலை அந்த நிகழ்வில்…

இது தவிர உபரித் தகவல்… பூரி சஹாவ கூப்பிடும் ஜி என்பது ஜிஜுவின் சுருக்கமாம்….அதற்கு அக்காவின் கணவர் என்று அர்த்தமாம்…. அதாவது ஷ்ருஷ்டியின் கணவன் என்ற முறையிலேயே சஹாவை கூப்பிடிருக்கிறாள்…சஹாவுக்கும் அது தெரியுமாம்…

மற்றுமொரு தகவல் சாலின்றதுக்கு அர்த்தம் மனைவியின் தங்கை…. சஹா “நீ என்  தங்கை” என்றதுக்கு “இல்ல நான் உங்க வைஃபுகுத்தான் தங்கை.. முறைய மாத்தாதீங்க” என கிண்டலாக இந்த பூரி பதில் கொடுத்திருக்கிறாள்….. இதையெல்லாம் வைத்து ஷ்ருஷ்டிதான் எல்லாவற்றையும் கருப்பு வண்ணமாகவே பார்த்திருக்கிறாள்…

கடைசியாய் ஒரு தகவல்…. “நிம்மிக்காவப் பார்த்தேன்…செம்ம சந்தோஷமா இருக்காங்க….பார்க்க இன்னும் அழகா இருக்காங்க…. அவங்க முன்ன மாதிரி இல்ல தீதி….ஆகாஷ் அண்ணா கூட செம்ம க்ளோஸ்….உங்கள பார்க்கனும்னு ரொம்ப ஆசையாம் நிம்மிக்காவுக்கு…… உங்கள எப்ப பார்த்தாலும் அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்கன்னு கண்டிப்பா சொல்ல சொன்னாங்க…. உங்களுக்கும் ஷிப்ல வச்சு பார்க்க அவங்க செம அப்செட்டா இருக்றது போல தெரிஞ்சுதோ….எனக்கும் தெரிஞ்சுது அப்போ…..ஆனா இப்ப செம்மயா இருக்காங்க……கண்டிப்பா உங்க சிஸ்டர் மேரேஜுக்கு கூட்டிட்டுப் போறேன்னு ஆகாஷ் அண்ணா சொல்லி இருக்காங்களாம்….வருவாங்க பாருங்க…. உங்க சிஸ்டர் மேரேஜுக்கு என்னை இன்வைட் செய்யாட்டியும் ப்ரவாயில்ல…..உங்க மேரேஜுக்கு கண்டிப்பா இன்வைட் செய்ங்க…” என வகை வகையாய் குண்டு போட்டுவிட்டுப் போனாள் பூரி…

இந்த இன்னொசென்ட் பூரியப் போய் சஹாவ பார்த்து அட்ராக்ட் ஆகுறான்னு நினச்சுருக்காளே….அதுவே ஷ்ருஷ்டியை அநாயசமாய் வதைத்தது எனில்….

அப்பொழுதுதான் சஹா விஷயத்தில் ஏதோ கொஞ்சம் பெலக்கவும் பிழைக்கவும் தொடங்கி இருந்தாளா….மீண்டுமாய் அடியற்ற மரமாய் விழுந்தாள் இவள்…. இந்த முறை குற்ற உணர்ச்சியின் வகை வேறு விதம்….. எந்த வகையிலுமே குற்றமில்லாதவனுக்கு எதிராய் இத்தனையும் செய்துவிட்டோனோ என ஒடிந்து போனாள் இவள்…

இவள் முதலில் கப்பலுக்கு செல்லும் போதே  சஹா மீது கடும் குரோதத்தில் இருந்ததால் இவளுக்கு அவனின் எல்லா செயலுமே எதிர்மறை வண்ணத்திலேயே தெரிந்திருக்கிறதோ? ஒவ்வொரு நிகழ்வின் போதும் இவள் உணர்ந்தாளே அவனது அக்கறையும் நேர்மையும் அதுமட்டும்தான் நிஜமோ? துடித்துப் போனாள்…

ஆனால் அந்த கப்பல் அவனுடையது என்ற விஷயம்….? இவ கூட அக்ரிமென்ட் எல்லாம் போட்டு ட்ராமா போட்டானே அது? இவள் விஷயத்தை சரியாகத்தான் பார்க்கிறாளா? அவன் காதலை ஸ்பரிசித்த இவள் உயிரும் மனமும் அவன் கொடூரத்தைப் பார்க்க மறுக்கிறதா? அல்லது அவன் மீதுள்ள இவளது க்ரோதம் அவன் நியாயத்தைக் காண தடுக்கிறதா இவளை? வெகு வெகுவாய் குழம்பிப் போனாள்…. தவித்தும்தான்…

“ஹேய் சோட்டு…..இங்க என்ன செய்துட்டு இருக்க….சாப்டுற இடத்துல எல்லாரும் உன்ன தேடுறாங்க பாரு…..” பவனின் குரல் காதில் விழவும் தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட ஷ்ருஷ்டி அவசர அவசரமாக டைனிங் ஹால் இருக்கும் பகுதியை நோக்கி நடக்க துவங்கினாள்….

“நித்துவ பார்க்கனும்னா போய் பாருங்க மை ப்ரதர் இன்லா….அதுக்காக என்னை துரத்தனும்னு அவசியமே இல்லையே…. நான் அப்பாவியா வெளியதானே நிக்கேன்…” போகும் போது  கிண்டலாய் சொல்லிவிட்டும் போனாள்….. நித்துவின் அறையிலிருந்து சற்று தள்ளிதான் நின்று கொண்டிருந்தாள் இவள்….

“செய்யலாமே “ சொல்லியபடி போனான் பவன்….

அப்போதுதான் விழா முடிந்து வந்திருந்த நித்து தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்…. அவளைப் பார்க்க அவளுக்கே பிடித்திருந்தது…. இவள் கன்னத்தில் இவளவன் வைத்திருந்த சந்தனத்தை ஒரு கணம் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்…. அதே நேரம் முதுகுப் புறம் அவள் அறைக் கதவு மூடப்படும்  சத்தம் கேட்டது….

“வாங்க மிஸ்டர் காத்து…. கதவு திறந்திருக்குன்னு ஏசிய ஆன் செய்யாம வச்சுருக்கேன்…அதையும் ஆன் செய்துடுங்க” என வந்திருக்கும் நபரை வரவேற்றாள் இவள் திரும்பிக் கூட பார்க்காமல்….

“ஹேய் சில்வண்டு வர வர மந்திரவாதியா மாறிட்டுப் போறியே…..” உள்ளே வந்த பவன் சிலாகித்தாலும்

“இப்படில்லாம் பயபடாத மாதிரி சீன் போட்டா சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத” என்றபடி அவள் அறைக் கதவை பூட்டினான்….

“எதுக்கு சார் உங்களப் பார்த்து பயப்படனும்?” அவள் இன்னுமே அசந்த மாதிரி தெரியவில்லை….

அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் இரு கைகளிலும் போய் தன் கரங்களை வைத்துக் கொண்டு அவள் முகத்துக்கு வெகு அருகில் குனிந்து கொண்டான் இவன்…

“எதோ மத்தவங்க செய்றத நான் செய்ய முடியாதுன்னு சொன்ன….?” ஒரு கையால் தன் மீசையை முறுக்கிக் கொண்டான்…

“அது…..அத்த இங்க பாருங்க…” அறையின் உள்நோக்கி திரும்பி கூப்பிட்டாள் அவள்….

அவ்வளவுதான் சட்டென துள்ளி விலகினான் இவன்….. “அம்மா… அது சு….ம்மா சொன்னேன்…” என திக்கியபடி….

வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் நித்து…… “அம்மான்னா அவ்ளவு இருக்குதுல்ல…..அப்றம் ஏன் அங்க ஃபங்க்ஷன்ல வந்து அப்டி வம்பு செய்தீங்களாம்?”

“அங்க நான் வர்றதும் இங்க இப்டி நீ தனியா இருக்கப்ப நான் வர்றதும் ஒன்னா…? அம்மா ரொம்ப சீரியஸா எடுப்பாங்க…” சொல்லியபடி அடுத்திருந்த படுக்கையில் போய் உட்கார்ந்தான் அவன்…

“சஹா நம்மட்ட தனியா பேசனும்னு சொன்னான்…..இங்க வரச் சொல்லி இருக்கேன்….” என தான் இப்போது வந்ததின் காரணம் சொன்னவன்

“ஆனாலும் சில்வண்டு உனக்கு என் மேல கொஞ்சம் கூட பயமே இல்லாம போச்சு…” என அங்கலாய்க்க..

“ஒன் இயரா உங்கள பார்த்துருக்கனே இது கூடவா தெரியாது….இன்னும் மூனு நாளைக்கு நான் என்ன வேணும்னாலும் உங்கள சீண்டலாம்….நீங்க அக்மார்க் சாமியார் ரோல்தான் ப்ளே பண்ணுவீங்க…” இது அவள்.

“மூனு நாளைக்கு அப்றம்?” ஆசை இருந்தது அவன் குரலில்….

அவள் முகமெங்குமோ வந்து படர்கிறது வெட்க சிலும்பல்கள்…. அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையை தவிர்த்தாள்….

“அப்றம் எல்லாத்துக்கும வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுப்பனே…”

இன்னுமாய் வெட்க மெருகேருகிறது அவள் மென் கன்னங்களில்….

அதே நேரம் சிணுங்குகிறது பவனின் மொபைல்…

“ஹேய் சஹா வந்துட்டான் போல….”

வன் சொன்னதற்காக டைனிங் ஹாலைப் பார்த்து போன ஷ்ருஷ்டி லிஃப்டில் செல்லாமல்…ஏனோ அவளுக்கு கூட்டத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லையா…. ஆள் இல்லாத படிகள் வழியாகவே இறங்கி……கார் பார்க்கிங்க் வரை சென்று அங்கிருந்து சுற்றிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு போக முயன்றாள்…

அதற்காக அவள் கார் பார்க்கிங் சென்றடைந்த நேரம்….. சரியாய் தன் கார் கதவை திறந்து இறங்கிக் கொண்டிருந்தான் சஹா….

அடுத்த பக்கம்