கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்…..

 

நீயே கேளு நிலு…..எந்த பையனோட ப்ரொஃபைல காமிச்சாலும் எதாவது ஒன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிடுறா இவ……”

ரெஜினாவின் வீட்டிற்கு சென்றிருந்த நிலவினியிடம் புலம்பத் தொடங்கினார் ரெஜியின் அம்மா மெர்சி.

“.இதுல இவளோட அத்தை நேத்து வந்திருந்தாங்க….கூட அவங்க தெரிஞ்சவங்க குடும்பமாம்…. அவங்களும் குற்றாலம் பார்க்கனும்னு வந்தவங்க போல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தாங்க…..அவங்களுக்கு நம்ம ரெஜியப் பார்த்து பிடிச்சுட்டுபோய்ட்டு போல…..அவங்க பையனும் கூட வந்திருந்தாப்ல…..எங்களுக்கும் எல்லோருக்கும் பையனையும் சரி குடும்பத்தையும் சரி பிடிச்சிறுந்துது…..இவ அத்தைக்கு அந்தப் பையன சின்ன வயசிலருந்து தெரியுமாம்….நல்ல பையன் நம்பி கொடுக்கலாம்….இப்டி அமையும்னு நானே கூட எதிர்பார்க்கல இப்பவே கை மாறிடலாம்னு அவங்க அப்டி ஒரு சந்தோஷப்பட்டாங்க…..” அவர் தொடர

நிலவினி இப்போது ரெஜினாவின் முகத்தைப் பார்த்தாள்.

இவள் பார்ப்பதை கவனிக்கவும்…டொட்டடொய்ங் பாவத்துடன்  முகத்தை அவசரமாய் திருப்பி அதுவரை பார்த்தே இராதது போல்  அங்கிருந்த போட்டோவை ரெஜி ஆர்வமாய் பார்க்க….

வினிக்கு ரெஜி அம்மா சொல்லாமலே அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து போனது.

“என்ன நடந்துச்சுன்னு தெரியலமா……பையன் இவட்ட தனியா பேசனும்னு சொல்லி சந்தோஷமாதான் போனான்….அடுத்த அஞ்சாவது நிமிஷம் வெளிய வந்தவன்…..சாரி ஆன்டி எனக்கு உங்க ஃபேமிலி உங்க பொண்ணோட நேச்சர் எல்லாம் பிடிச்சிறுக்குது…. ஆனாலும் அவங்க சொல்ற கண்டிஷன் எனக்கு ஒத்துவராதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்….”

நிலவினி அவசரமாய் தன் வாயில் கை வைத்துக் கொண்டாள்…..ஆன்டி அவ்ளவு சீரியஸா கவலப் பட்டுட்டு இருக்கப்ப….இவ சிரிச்சுடக் கூடாதுல்ல….

“என்னதுன்னு கேட்டா இது வாய திறக்க மாட்டேங்குது….தெரிஞ்சா அதுக்கு ஒத்துவர்ற மாப்ளய நாங்க பார்ப்போம்லமா…. நீயாவது கேட்டு பாரும்மா….” அவர் சொல்லில் ரெஜியை பார்த்தபடி நிலவினி தலையாட்ட….

ரெஜியோ இல்லை என்பது போல் இட வலமாய் தலையாட்டினாள்.

“உனக்கு பிடிச்ச மட்டன் சுக்கா….இறால் ஃப்ரை செய்றேன் நிலு….நீ சாப்டுட்டுதான் போகனும்….மாப்ள தம்பி உன்னை பிக்கப் செய்ய வர்றப்ப இங்க தான் அவரும் சாப்டனும் சொல்லி வச்சுடுமா….” சொல்லியபடி அவர் அறையை விட்டு வெளியேற….

“அம்மா நிலு இறால் சாப்டமாட்டா…..” இங்கிருந்து கத்திய ரெஜினா….”அதுல கூட லவ்வாம் பொண்ணுக்கு…” என்றாள் குரலை இறக்கி நிலவினிக்கு மட்டுமாய் கேட்க்கும் படி…

சட்டென ஒன்று கிடைத்தது வினியிடம் இருந்து ரெஜிக்கு…..

அதற்குள் “அப்டியாமா…?” என்றபடி ஆச்சர்ய முகபாவமுமாமக திரும்ப வந்திருந்தார் ரெஜியின் அம்மா….. “அப்ப நான் வேற எதாவது செய்றேன்….” அவர் தான்…

“அச்சோ அப்டில்லாம் இல்ல ஆன்டி….. அவங்க பெரும்பாலனா நேரம் அங்க ஃபார்ம்ல இருக்காங்க இல்லையா…. அங்க ஆஃபீஸ் ரூம்ல இருந்தாங்கன்னா ஒன்னும் தெரியாது…..ஆனா ஈவ்னிங் லோடிங் டைம்ல ஸ்பாட்ல இருப்பாங்க…. இந்த ஸ்மெல் இருந்திருக்கும்..…. அடுத்து  வீட்லயும் அதே சமையல்னா கஷ்டமா தோண கூடாதுன்னு இதை அவாய்ட் பண்ணிடுவேன்….” நிலவினி இறால் பண்ணை வைத்திருக்கும் தன் கணவன் யவ்வனை நினைத்துக் கொண்டு விளக்க…

“ ஏய் நிலு…. யவி அண்ணா பேரை சொல்லக் கூடாதுன்னு நீ நினச்சா கூட ஒத்துகலாம் இது என்னடி இறால் பேர கூட சொல்ல மாடேன்ற மாதிரி…” ரெஜி மீண்டுமாய் தன் வேலையைக் காண்பிக்க…

இப்போது மீண்டுமாய் அடுத்த அடி ரெஜினாவுக்கு நிலவினியிடமிருந்து….

“ஆத்தாடி…இவ காதல அடிச்சு அடிச்சு தான் சொல்லுவா போலயே…..இங்கயே இப்டின்னா யவி அண்ணாட்ட எப்டியோ…” நிலு அடித்த இடத்தை தடவிக் கொண்டே ரெஜி தொடர….

“அப்ப நீ அங்க இறால் சாப்ட்றுக்க மாட்ட என்னமா….சரி அப்ப இங்கயாவது சாப்டு…உனக்கு ரொம்ப பிடிக்குமே….. மாப்ள தம்பிக்கு மட்டன் பிடிக்கும் தானே….” கேட்ட ரெஜியின் அம்மாவுக்கு

“அதெல்லாம் சாப்டுவாங்க ஆன்டி….நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க” என சொல்லி அனுப்பி வைத்த வினி….

பெட்டில் தன் அருகில் அமர்ந்திருந்த ரெஜிக்கு இப்போது ஒரு கும்மாங்குத்து……”உங்க அண்ணாட்ட இப்டித்தான்…..முடிஞ்சா அவங்கட்டயே கேட்டுப்பாரு….. வந்துட்டா என் லவ் ஸ்டோரிய கிளற…. இப்ப முதல்ல உன் கதைய சொல்லு….என்னடி சொல்லி துரத்திவிட்ட…”

“ப்ச்..அத விடு….” இப்போது ரெஜியோ வெளியே தெரிந்த அவளது புல்லட்டைப் பார்த்தாள்….

திகாலை 6 மணி

.வ்ர்ர்ர்ரூரூரூம்ம்….டப் டப் டப்…..

புல்லட் ஸ்டார்ட் ஆகும் சவ்ண்ட் ரிங்க் டோனாய் ஒலிக்க……தன் மொபைலை துள்ளலாய் எடுத்து காதில் வைத்தாள் ரெஜினா….

“ஹ…” இவள் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்பும் கூட…

“ஹலோங்க…… உங்களுக்கு புல்லட் ஓட்ட வரும்னு சொன்னாங்க…அதான் நான் உங்களையே கண்ணாலம் செய்துகலாம்னு முடிவு செய்துட்டேங்கோ….” என்றது ஒரு ஆண் குரல்….

சும்மா ஒரு புள்ளி கமா மாத்தி பேசினாலே பேசுறவன்ட்டயே சப்புன்னு அறஞ்ச எஃபெக்டல பதில் சொல்ற வர்க்கம் நம்ம ரெஜினா…. இதுல இப்டி பேசினா….?

“டேய் யார்டா நீ…..? பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன்….” பல்லைக் கடித்துக் கொண்டு இவள் எகிற…….

“அம்மணி  ஐ லவ் யுவர் பல் ஆல்சோ….அதனால அதை விட்டுடுங்கோ….இப்ப என்ன உங்களுக்கு இந்த ஐத்தான் பேர் தெரியனும் அவளவுதானுங்க….?” அந்த குரல் இன்னுமாய் எல்லை தாண்ட….

“போடா உன் பேரு இங்க யாருக்கு வேணும்  பொறுக்கி….” இவள் இணைப்பை துண்டித்தாள்….

அடுத்து இவள் குளித்து முடித்து மீண்டுமாய் தன் அறைக்குள் வர …… இவள் அறை ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியில்….

ஐ லவ் யூங்க அம்மிணி…..— இப்டிக்கு உங்க புல்லட் பாண்டி என லிப்ஸ்டிக்கால் எழுதப் பட்டிருந்தது…..

அரண்டுதான் போனாள் ரெஜி….. பின்னே வீட்டுக்குள்ள இவ ரூம் வரைக்கும் வரனும்னா….

ஆனால் அம்மாவிடம் சொல்லி பயம் காட்டவும் இவளுக்கு விருப்பம் இல்லை…… ஆக தன் ஃப்ரெண்ட்ஸ் நிலவினியிடமும் பவிஷ்யாவிடமும் தான்  ஃபோனில் புலம்பி வைத்தாள்….

“இங்க பாரு இப்டி வீடு வரைக்கும் வர்றதுல்லாம் சின்ன விஷயமில்ல….கண்டிப்பா எதாவது செய்தாகனும்…..வெளிய சொல்ல வேண்டாம்…..நமக்கு தெரிஞ்ச போலீஸ் ஆஃபீஸர்ட்ட சொல்லி  வைக்கலாம்….உனக்கு தான் பெரியத்தான் ஃப்ரெண்ட் சசிபால் தெரியும்ல….அவங்கட்டயே ஹெல்ப் கேட்போம்…” என்ற வினியின் வார்த்தைகள் இவளுக்கு சரியாய் பட….

அடுத்து அந்த சசிபாலிடம் இவளே விஷயம் சொன்னாள். பவிஷ்யா திருமணத்தில் நடந்த சில கலாட்டாக்களில் பவிக்கு உதவ சென்றபோது இவளுக்கு சசிபால் அறிமுகம்….அண்ட் அப்படியே பழக்கம்.

“வீட்ல அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கிற டைம்ல இப்டிலாம் ப்ரச்சனைனா இன்னும் சீக்கிரமா செய்ய நினைப்பாங்க சசி…..” இவள் குரலில் ஏராளமான வருத்தம் மற்றும் அழுத்தம்…

“அதெல்லாம் பார்த்துகலாம் ரெஜி…..ஆனா கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத…இப்ப சீக்கிரம் மேரேஜ் செய்துக்கிறதுல அப்டி என்ன ப்ரச்சனை ……சீக்கிரம் செய்துகிட்டா எல்லாருக்குமே ஈசியா போய்டுமே…” அவன் சொல்ல சொல்ல இவள் முகம் இன்னுமாய் சிடு சிடு என ஆகிறது….

“கிரிமினல கண்டு பிடிக்க சொன்னேன் நான்…..” அத மட்டும் பார்த்தா போதும் நீ…. என்ற தொனியில் ஒரு பதிலை சொல்லிவிட்டு விடு விடுவென கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ன்று இரவு இவள் மொபைல் தடதடத்தது……

“ என்ன அம்மிணி என்ன தேடி போலீஸ் வரைக்கும் போய்ட்டீங்க போலயே…..அவ்ளவு ஏன் மெனக்கெடனும்…..அம்மிணி சொன்னா அடியேன் ஓடோடி வந்துடப் போறேன்….” பேசுவது அந்த புல்லட் பாண்டி லூசு  என புரிய

இவள் “டேய்ய்ய்ய்ய்ய்ய்” என ஆரம்பித்தாள் இருந்த எரிச்சலில்…

“டேய் இல்ல கண்ணா பாண்டி புல்லட் பாண்டி…” அவன் இன்னும் வெறுப்பேத்த….

“கைல மட்டும் கிடச்சா நீ ….” இவள் ஏற…

“அச்சோ அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்ன பேசலாங்களா அம்மிணி….” அவன் அடுத்த ஸ்டேஜுக்குப் போக……. இவள் என்ன சொல்லவும் முடியாத எரிமலை கோபத்திற்கு மாற

அதற்குள் அவன்….”நாம முதல் ஸ்டேஜ்ல இருந்தே ஆரம்பிப்போம் அம்மிணி……எல்லாத்திலயும் ஈக்வாலிட்டி பார்க்கிறவன் இந்த புல்லட் பாண்டி….சோ நாளைக்கு நான் பொண்ணு பார்க்க வரேன்…நீங்க மாப்ள பார்க்க வாங்க…..ஓகேங்களா….பீச்ல ஆறு மணிக்கா பார்ப்போம்ங்க…” இணைப்பை துண்டித்திருந்தான் அவன்…..

மறுநாள் மாலை ஆறுமணி…….போலீஸ் ஆஃபீஸர் சசிபாலுடன் பீச்சிற்கு வந்திருந்தாள் ரெஜினா….. அவனோட ஐடியா தான் இது……இவள் அந்த புல்லட் பாண்டி கால் பற்றி சசிபாலிடம் சொல்ல……அவன் இதை யூஃஸ் செய்து அவனை பிடிக்கலாம் என திட்டம் சொன்னான்.

இப்போ அது  இம்ப்ளிமென்ட் ஆகுது….

“அவன் இங்க வரவும் நீங்க வந்துடுவீங்கல்ல சசி…..” சற்று தவிப்பாகவே கேட்டாள் இவள்….

இவள் தவிப்பை பார்த்தவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது போலும்…..

“என் கண்ணுக்குள்ள தான் இருப்ப எப்பவும் நீ…” அத்தனை பதட்டத்திலும் அவன் பார்வையும் குரலும் வித்யாசப் படுவது இவளுக்கு புரிகிறதுதான்…

பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாய் அவனைப் பார்த்தாள்….இயல்பான பார்வை இல்லை அது…. உள்ளுக்குள் இருக்கும் ஏக்கமும் அதை மறைக்க தடுமாறும் மனநிலையுமாய் ஒரு பார்வை…

“கல்யாணத்துக்கு கல்யாணப் பொண்ணு வந்தா போதுங்கோ… எப்டி வந்தாலும்  எனக்கு சம்மதம் தானுங்கோ…” இப்போது  சசிபாலிடம் மொத்த குறும்பும்…..

குரல் அந்த புல்லட் பாண்டியின் குரல்…சொன்னது எதிரில் நிற்கும் சசிபால்

இவள் ஒரு நொடி அதிர்ச்சி ஆனந்தம் பின் அட்லாண்டிக் சைஸ் ஆழ  கோபத்திற்கு குடி போனாள்….

“நீ…ங்களா….??? .இதெல்லாம் உங்க வேலை தானா?”

“பின்னே…. எனக்காக இல்லாம உன் ரூம்ல வந்து அப்டி எழுதி வைக்க உன் ஃப்ரெண்ட் ஒத்துப்பாங்களா…?”

“ஹான் ஃப்ரெண்டா?”

“ஆமா உன் ஃப்ரெண்ட்ஸ் நிலவினியும் பவிஷ்யாவும் உன்னைப் பத்தி என்ட வந்து சொல்லவுமே நான் எடுத்த ஆக்க்ஷன் அது…….”

“ஆன்…..அவட்ட கூட யார்ட்டயும் நான் சொல்லையே…..பிறகு எப்டி…” இவள் பேந்த முழிக்க….

“அம்மா தாயே வாழ்க்கைல எத்தனயோ கேஸை நான் பார்த்துறுக்கேன்…..”பரிதாபமாய் மாறியது சசிபாலின் முகம்….

இவளுக்கும் இதற்குள் கொஞ்சம் புரிவது போல் இருந்தது… ஹி ஹி என்று மாறியது இவள் முக பாவம்…..

“என் ஃப்ரெண்ட் ரெஜி கல்யாணத்துக்கு ஒரு கண்டிஷன் போட்றுக்கா….அது என்ன கண்டிஷன்னு எங்களுக்கு தெரியலை….நீங்க தான் கண்டு பிடிச்சு தரனும்னு என்ட்ட வந்து கம்ளெய்ண்ட் குடுத்தாங்க பாரு உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும்….” அவன் சொல்லிக் கொண்டு போக…

“ஹி ஹி…அவங்களுக்கு என் மேல பாசம் அதிகம்….” சமாளித்தாள் இவள்.

“ஆமா அப்படி பாசம் உள்ள உன் ஃப்ரெண்ட்ஸ், உன் அம்மா….ஏன் உன்னை லவ் பண்ற என்னைனு எல்லாரையும் சுத்த விட்டல்ல….அதான் கொஞ்சம் சுத்தி வளச்சு காதல சொல்லலாம்னு ஒரு ப்ளான்…… அதோட அப்டி என்னதான் கண்டிஷன் போட்டன்னு தெரிஞ்சு உன்ட்ட அதுக்கு ஒத்துகிட்டுதான் ப்ரபோஸ் செய்யனும்னு ஒரு வைராக்கியம்….” அவன் விளக்க…

“கண்டிஷனை எப்படி கண்டு பிடிச்சீங்க சசி…? “ என குழந்தை குதுகலத்துக்கு மாறி இருந்தாள் ரெஜி ….

“வேற எப்படி நீ யார்ட்ட கண்டிஷன் சொன்னியோ அவனை தேடிப் போய் கேட்டுட்டு வந்துட்டேன்….” ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தலையில் அடித்துக் கொண்டாள் ரெஜி.

“போலீஸ்டி உன் மச்சான்…” அவன் தன் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள

“பொல்லாத போலீஸ் நான் இத்தனை பேரை சுத்தி தூது விடுற வரைக்கும் ஒன்னும் செய்யாத போலீஸ்….” இப்போது இவள் நொடித்தாள்….

“ஹேய் நீதான் விலகி விலகி போன….உன் குணத்துக்கு உனக்கு இஷ்டம் இல்லாம நான் மட்டும் லவ் சொன்னனோ பப்ளிக்ல அடி வாங்கின போலீஸ்னு என் பேர்ல வந்திறுக்கும்….. எப்பயாவது தனியா உன்ட்ட பேசுற அளவுக்கு எனக்கு சான்ஸ் கொடுத்றிக்கியா என்ன…? இத்தனைக்கும் பிறகும் கூட ஏன் மேரேஜ போஸ்ட் போன் செய்றன்னு கேட்டேன்….மூஞ்ச தூக்கிட்டு வந்துட்ட….”

“அந்த மூஞ்ச தூக்கினது….அது நீங்களே சீக்கிரம் மேரேஜ் செய்துக்கோன்னு என்னைப் பார்த்து சொல்லவும் வேற யாரையும் செய்ய சொல்றீங்கன்ற மாதிரி தோணிட்டு…..” இவள் விளக்க அவன் முகத்தில் மன்னிப்பு கேட்கும் பாவம்…

“சாரிமா நீ இப்டி யோசிப்பன்னு நான் எதிர் பார்க்கலை…..எனக்கு அப்ப நீ போட்ட கண்டிஷனும் தெரியாது….. அப்போ ஒரு வேளை அது என்னன்னு சொல்லிட மாட்டியான்னு எதிர் பார்த்தேன்….அன்னைக்கு நீ அப்சட்னதும்தான் ஆபத்துக்கு பாவமில்லனு அந்த பொண்னு பார்த்துட்டு போனவன போய் பிடிச்சேன்……அப்றம்தான் அது எப்படிபட்ட கண்டிஷன்னு தெரிஞ்சுது….” அவன் சொல்லிக் கொண்டு போக…..

இவளுக்கு என்ன சொல்லவென தெரியாத நிலை….

“சரி அதவிடு……ஏன் எல்லோரையும் இவ்ளவு சுத்தவிட்ட……என்ட்ட கொஞ்சம் ஒழுங்கா பேசி இருந்தா கூட எப்பவோ நம்ம மேரேஜுக்கு உங்க வீட்ல பேசி இருப்பனே….” அவன் புரியாமல் கேட்டான்.

“அது நீங்க உங்க சிஸ்டர் மேரேஜுக்கு பிறகு தான் உங்க மேரேஜ பத்தி பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்கீங்கன்னு யவி அண்ணா யார்ட்டயோ சொல்லிட்டு இருக்றத கேட்டேன்…..இன்னும் உங்க தங்கைக்கு மேரேஜ் ஃபிக்‌ஸ் ஆகலையே…..என் ஏஜ்க்கு இன்னும்  ரெண்டு வருஷம் கூட வெயிட் பண்ணலாம்….அதோட எனக்கு தங்ச்சி இருக்கா அதனால நான் உடனே மேரேஜ் செய்தாதான் அவளுக்கு பார்க்க முடியும்ன்ற மாதிரி எந்த கமிட்மென்டும் எனக்கு கிடையாது….அதான் நீங்க உங்க கமிட்மென்ட்ஸ க்ளியர் செய்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம்… அடுத்து நிலு வீட்டு வழியா அரேஞ்ச் மேரேஜுக்கு மாதிரி  அப்ரோச் செய்யலாம்னு நினச்சேன்……. “

நிறைவின் புன்னகை அவன் முகத்தில்….. “அது உன்னைப் பார்க்க முன்ன அரேஞ்ச்ட் மேரேஜுக்கு நான் வச்சிறுந்த ப்ளான்….ஆனா காதல் என்ன கேட்டுக்கிட்டா வருது.…பைதவே என் சிஸ்டர் மகிழுக்கும் கல்யாணம் அமஞ்சுட்டு…”

இவள் முகத்தில் இப்போது மகிழ்வின் ஒளி வெள்ளம்….

டுத்து  ரெஜியின் எங்கேஜ்மென்ட்….

“அப்டி என்னடி கண்டிஷன் ? சசி அண்ணாட்ட கேட்டா அவட்டயே கேளுங்கன்னுட்டாங்க… “ கேட்டாள்  வினி.

“அது ரொம்ப ஒன்னும் பெருசு இல்ல…..கால்யாணத்துக்கு ஸ்டேஜ்க்கு நான் புல்லட்லதான் வருவேன்னு சொன்னேன்…..” ரெஜி இயல்பாய் தொடர…

இப்போது புரையேறியது வினிக்கு…

“அதெப்டி நான் சசிய நினச்சுறுக்கேன்னு நீங்க ரெண்டு பேரும் முடிவுக்கு வந்தீங்க….” என அடுத்த கேள்விக்கு வந்தாள் அவள் இப்போது….

“போடி பெரிய பொல்லாத பொடலங்கா ரகசியம்…….கண்டிஷன் என்னனு கேட்டதுக்கு புல்லட்ட பார்த்தன்னு நிலு சொன்னா…… நானும் போய் உன் புல்லட்ட பார்த்தேன்….அதுல சசின்னு  கிறுக்கி வச்சிறுந்த சின்னதா……உனக்கு தெரிஞ்ச ஒரே சசி அவங்க தானே…..” பவிஷ்யா சொல்ல

“அடபாவிகளா…..அது பக்கத்துவீட்டு பாப்பா வேலை…..அது ஃப்ரெண்ட் பேரு சசி…….” பதறிப் போய் ரெஜி விளக்க……பவி பே என பார்க்க….வாய்விட்டு சிரித்தாள் நிலவினி….

ஒரு கணம் பே எனப் பார்த்தாலும் இப்போது விசிலடித்தபடி பாடினாள் ரெஜி

‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் என் புல்லட்மா…..’

6 comments

  1. Lovely… Evlo time padichalum air tight baloon pola manasu full ah sandosam adachu vaikira serial and short stories…..

  2. Ha ha ha sema story mam. Every character in this story is admirable and amazing mam. At last hero has proposed to heroine. Nice friends for Reji .Enjoyed thoroughly mam.

  3. Adada anna namma kadhal pinnadu uzhagu series continuation iduva.appave thonichu.regina story incomplete ah iruken.thanks for finishing touch.

Leave a Reply