#கடவுளவன்

மாம்பூ வாசமோ
மரகதக் குரலோ
சன்னமாய் கசியும் இசையோ
எங்கெங்கினும் சின்னதாய்
தீண்டிக் கிடக்கும் மெல்லிய விடுதலைகளில்
சத்தமற்ற சந்தமாய்
உன் வாசனை
நுகரும் தருணங்களில்
தளிரத் ததும்ப புரிகின்றது
வளையச் சூழ பொதிந்திருக்கும்
உன் வன் தோளின்
மென் அணைப்புகளில்தான்
வாழ்ந்து கிடக்கிறேன் என

Advertisements