என்னைத் தந்தேன் வேரோடு 1

“ஹாய்! ஐ’ம் வியன். கவினோட தம்பி, நேத்துதான் மதுரை வந்தேன்”

தன்னை முழு மண அலங்காரத்திலிருந்த மிர்னாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட விதத்துக்கும், அவன் புன்னகைக்கும் வியன் பார்த்தவுடன் அனைவரையும் வசீகரிக்கும் வண்ணம்தான் இருந்தான்.

ஆனால் அவனை அப்பொழுதுதான் முதன் முறை பார்த்த மிர்னாவின் நினைவோ முற்றிலும் வேறாக இருந்தது.

ஓ நீதானா அந்த தம்பி தங்கரத்தினம், வில்லன் நம்பர் ஃபோர்,

ம்கூம் அந்த பேரை இந்த மிர்னா மாகராணிட்ட வாங்ற தகுதி இந்த  வெள்ள சுண்டலிக்கு இல்ல,

யாரங்கே! பாவம் போல இருக்கும் இந்த பால் கொழுக்கட்டைக்கு ஏற்ற ஒரு பரிகாச பெயர் கொணர்க,

வெயிட்…வெயிட்…பால்கொழுக்கட்டை….இதுவே அட்டகாசமா இருக்கே, என்ன கொஞ்சம் கூட வில்லத்தனமா இல்ல, பிரவாயில்ல பிழச்சு போ, இனிமே உன் பேர் பால்கொழுக்கட்டை!

ஷார்ட்டா பி.கே.

ஹேய்.. கெக்கேபிக்கே…இது கூட நல்லாதான் இருக்குது!’

மிர்னாவின் மனக்குதிரை கண்மண் தெரியாமல் நாலுகால் பாய்ச்சலில் பாய, அதை வெளிகாட்டாமல் அவனைப் பார்த்து புன்னகையுடன் அடக்கமாக கைகுவித்தாள்.

என் அம்மா கண்ல விழுந்துட்டல்ல….பிகே @ கெக்கேபிக்கே உனக்கு மாங்கல்ய பாக்யம் வந்தாச்சு,

நீ எகிறி எகிறி எங்க சுத்தி ஓடினாலும் இழுத்துவச்சு தாலி கட்ட வச்சுடுவாங்கல்ல,

அனுபவி ராஜா அனுபவி

ஆத்துகாரியின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்

மனதிற்குள் பாட்டு அதுவாக வந்தது.

அதே நேரம் இவள் பின்னாலிருந்த கூட்டத்திலிருந்த எவளோ ஒருத்தி

“ஏய் அவன் நச்சு பிச்சுனு சும்மா ஹீரோ மாதிரி இல்ல…” என தன் சகாவிடம் வர்ணிப்பது இவள் காதில் விழுந்தது.

போச்சுடி மிர்னி…உன் மானத்தை வாங்க இவங்களே போதும்….இவள் மனம் நொந்து முடியும் முன்

“ஆமாண்டி அழகா அம்சமா….” என்று ஜொள்ளு தொடர்ந்தது.

ஐயோ…மானம் போகுது…இவன் என் வீட்டை பத்தி என்ன நினைப்பான்?

எனக்கு கேட்குதுன்னா பக்கத்தில நிக்கும் அவனுக்கும் கேட்கும் தானே? கேட்கும் தானேவா? அவன் முழு செவிடா இருந்திருந்தா கூட கேட்டிருக்கும்…மனம் புலம்ப

அவனோ பந்தாவோ, சங்கடமோ, இகழ்ச்சியோ எந்தவித சிறு முகமாற்றம் கூட இல்லாமல் இயல்பாக அவளை பார்த்து

“கிளம்பலாமா…?” என்றபடி அவள் ஏறுவதற்காக அவனது ஜாகுவார் XJன் பின் கதவை திறக்க கை நீட்டினான்.

ஹேய்… நீ குட் பாய்டா பிகே, உனக்கு பாஸ் மார்க் குடுத்துட்டா எம் எம், பிழச்சு போ…

என்ன எம்.எம் தெரியலையா? மிர்னா மகராணி.யோட ஷார்ட் ஃபார்ம், முத தடவைங்கிறதுனால சொல்றேன்.

மனதிற்குள் அவனை பாராட்டிய மிர்னா, அவன் கை கார் கதவை தொடும் முன் அதை பிடித்து திறந்து உள்ளே துள்ளி ஏறினாள்.

எச்சூழலிலும் தன்னியல்பு இழக்காத புயல் அதுதான் மிர்னா.

ஹேய்….நாந்தான் ஃபர்ஸ்ட்…நாந்தான் ஃபர்ஸ்ட்….எப்பூடி?

மனதிற்குள் அவனுடன் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சறுக்கிக் கொண்டுபோய் அமர்ந்தாள்.

(என்ன போட்டியா? காருக்குள்ள யாரு முதல்ல ஏறி உட்கார்றது? அதுதான் போட்டி)

பஸ்ஸில் சீட் பிடிப்பதுபோல் அவசரத்தில் ஏறி அமர்ந்தவள் தன் தலையிலிருந்து அருவி போல் வெள்ளையாய் நீளமாய் காரைத் தாண்டி வெளியில் வழிந்து கொண்டிருந்த அந்த வெட்டிங் வெயிலை சட்டென உள்ளிழுத்தாள்.

“ஹேய்…கூல்…கூல்…மெதுவா…”

வியன் சொல்லி முடிக்கும் முன் தலையிலிருந்த பகுதி தவிர அந்த வெயிலின் மீதிப் பகுதி ஒரு துணிப்பந்தாய் சுருட்டப்பட்டு காரின் மூலையில் முடங்கியிருந்தது. கைங்கரியம் மிர்னா.

“ப்ரைட்’ஸ் மெய்ட் யாரும் கூட வர்றாங்களா?…” சுற்றும் முற்றும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி மிர்னாவிடம் கேட்டான் வியன்.

அடுத்த பக்கம்

Advertisements