எனைக் கொல்வதும் கொள்வதும்…

கண் முன் விரியும் என் வானம் நீ
மையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்
உன் புன்னகை என் புலர் பொழுது
மலர் இதழ்கள் என் இருப்பிடம்
இரவில் பிரிவில் இறக்கிறேன் நான்
தினம் பொழுது
உன் இதழில் என் பெயர் வரும் பொழுது
உயிர்க்கிறேன் மறுபடியும்
என்னைக் கொல்வதும் கொள்வதும்
உன் சுய தொழில்
நான் மரிப்பதும் உயிர்ப்பதும்
காதல் செயல்
சுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்
என் காதல் நிரந்தரம்.
உனக்கு சுகம் சேர்க்காமல்
முடியாது என் ஜீவனம்.
                    – பொழியாதோ ஆனந்த சுக மழை
Advertisements

Leave a Reply