இருவர் வாழும் உலகமிது

வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் முன் ஏதோ தோன்ற கதவருகில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான் சமர்ஜெயன்.

அவன் மனைவி சமர்பணா அந்த வரவேற்பறையின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள். அந்த ஜன்னலில் இருந்து மூன்று அடி தூரத்தில் இருக்கும் காம்பவ்ண்ட் சுவரை தவிர அங்கு பார்ப்பதுக்கு எதுவும் இருக்காது…..அப்படி எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள்….

சில நொடிகள் அவளை கவனித்தான்….அவள் ஏதோ உலகத்தில் மூழ்கிப் போயிருப்பது அவனுக்குப் புரிகிறது…. இப்பொழுதெல்லாம் இப்படித்தான்…. அவன் பார்வையில் அவள் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும்…. அவள் உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கிறாள்….

மெல்ல காலிங் பெல்லை அழுத்தினான்….சட்டென சுய உலகிற்கு வந்தவள் வேகமாக வந்து கதவைத் திறந்தாள்.

அவன் கையிலிருந்த லன்ச் பேக்கை இவள் கை நீட்டி வாங்கியபடி “மதியம் சாப்பாடு எப்டி இருந்துச்சு….?” என ஆரம்பிக்க

உள்ளே நுழைந்த அவனோ அவளை இடையோடு பற்றி தூக்கியபடி அருகிலிருந்த அந்த மொகல் ஜூல்காவில் சென்று அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான். காலால் தரை மிதித்து ஊஞ்சலை சின்னதாய் ஒரு அசை…

அவன் அவ்வப்போது இப்படி செய்வதுதான்…..வழக்கமாக “ ஐயோ விடுங்க….என்னதிது…யாராவது பார்த்திரப் போறாங்க…” என திறந்திருக்கும் கதவை நினைத்து சிணுங்குவாள் அவள்…. அந்நேரம் அவள் முகத்தில் பரவும் அந்த வெட்கமும்….அதன் அடியில் மறைந்திருக்கும் அவள் ஆசையும் சின்னதே சின்னதாய் ஒரு கர்வமும் இவனை அள்ளும்…..

ஆனால் இப்போதோ அவன் புறமாய் திரும்பி அவன்தான் அவள் முழு உலகமே என்பது போல் அரை நொடி இவன் தோளில் முகம் புதைத்தவள் சட்டென  எழுந்து போய்விட்டாள்… “டைம் ஆகிட்டு சாப்ட வாங்க…” என அதற்கு ஒரு சமாளிப்பு வேறு.

இவனுக்கு பலத்த சிந்தனை….. இதெல்லாம் அந்த நாளைக்குப் பிறகுதான்….

இரவு தூக்கத்தின் இடையில் இவன் ஏதோ உணர்ந்து விழிக்க….இவன் கைகளுக்குள் அவள் இல்லை…. திருமணமான புதிதில் இவனுக்குமே இது கொஞ்சம் கஷ்டமான பழக்கமாய் தோன்றும். அவளை கைகளுக்குள் வளைத்துக் கொள்ள பிடிக்கும் எனினும்…..அடுத்தவரோடு அருகில் படுத்து தூங்கி கூட அதுவரை பழக்கமில்லாத காரணத்தினால் அப்படியே அணைத்தபடி அவனால் தூங்கிவிட முடியாது….

ஆனால் அன்னையின் அணைப்பையோ அல்லது தந்தை குடும்பம் என எந்த அரவணைப்பையோ உணர்வில் கூட உணர்ந்து வளர்ந்திராத அவள் இவன் அணைப்பை எப்போதுமே எதிர் பார்ப்பது போல் தோன்ற இவன் முயன்று இப்படி தூங்க பழகிக் கொண்டான்….

இப்போது அவள் இவனைவிட்டு விலகிப் போகிறாள் …… சுற்றிலும் பார்வையை ஓட்டினான்…அந்த இருட்டு அறையின் சுவரில் சாய்ந்து அவள்……அழுகிறாளா என்ன???

இங்கு வந்தால் இந்த இடமாற்றம்….அதோடு இவன் பகலிலும் அடிக்கடி வீடு வந்து அவளைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை.. அது அவளுக்கு மனமாற்றம் தரும் என்றுதான் இவன் அவளை இரண்டு மாதம் லீவு எடுத்து வரச் சொன்னதே…. ஆனால் இங்கு முன்னிலும் அதிகமாக நோகிறாளோ???

என்ன செய்தால் சரியாகும்…? என்ன செய்ய வேண்டும் இவன்?

அன்றும் வேலை விஷயமாக இவன் டவ்னுக்குப் போக வேண்டி இருந்தது…….இவன் வேலை செய்யும் இந்த அணைக்கட்டுப் பகுதியிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவு அது.  குறுக்கு வழி சற்று ரிஸ்க்…. பட் 34 கிலோமீட்டர்….சீக்கிரம் வந்துவிடலாம்….

அந்த மலைக் காட்டுப் பகுதியில் கவனம் அவசியம்…..விலங்குகளும் இருக்கலாம்….அதனால் யாரும் பொதுவாக அதன் வழியாக செல்வதில்லை…. இவனுக்கு அந்த வழியில் போய் வந்துவிடலாம் என தோன்றிவிட்டது…

அந்த ஆள் அரவமற்ற காட்டுப் பாதையில் பாதி வழி போயிருப்பான்….. இவனுக்கு முன்னால் இடப்புறம் தெரிந்த பெரிய பாறையின் பக்கவாட்டில்….. இவன் மனைவியேதான்??? தலையை முக்காடிட்டு மறைத்திருந்தாலும் பார்த்தவுடன் இவனுக்கு தெரியாமலா?

இவன் வாங்கிக் கொடுத்த அந்த பர்பிள் நிற சல்வார்…. முக்காடை தாண்டி வெளியே தொங்கும் அவளது நீள சடை… எங்கயும் வெளிய போறதா அவ சொல்லவே இல்லையே??

இன்னும் செல்ல செல்ல தெளிவாகவே தெரிந்தது…..யாரோ ஒரு நெட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தாள்…. இது யார் இவளை இப்படி ஒழிஞ்சு மறஞ்சு மீட் பண்றது? ஏன்???? சற்று அருகில் செல்லவும் அந்த அவன் யாரென்று முகம் தெரிந்தது இவனுக்கு…

இவனா???அப்படின்னா?????

அன்று இரவு தூக்கம் தொலைத்தது இவனும்தான்….

றுநாள் காலையிலிருந்தே இவனுக்குள் ஏதோ உள்ளுணர்வு…..ஏதோ சரி இல்லை….இன்றைய நாள் ஒன்றும் இலகுவாய் கழியப் போவதும் இல்லை……

டேம் சைட்டுக்கு கிளம்பியவனுக்கு ஏனோ இனம் புரியா கலக்கம்.  எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படுவது அவன் சுபாவம் அல்ல…..ஆனால் இன்றைய அலைக்கழிப்பு அவன் வகையில் அதிகம்….

அவளைப் பார்ப்பது அதுதான் கடைசி முறையோ…..? விடைதரும் முகமாக வீட்டு வாசலில் நின்றவளை அவன் நினைவையும் மீறி இழுத்து அணைத்தான்….

தயக்கமும் தவிப்பும் தடை போடலுமாய் வந்து விழுந்தாள் இவன் பிடிக்குள் அவள்…. படபடவென உதறும் அவள் தேகத்தை அசையக் கூடவிடாமல் அரக்கத்தனமாய் இறுக்கிப் பிடித்திருக்கிறான் இவன் என்பதையே சற்று நேரம் கழித்துதான் உணர்ந்தான்.

மிரண்டு போய் நின்றவளை மெல்ல விலக்கி நிறுத்துவிட்டு….. “சாரி…..ஹர்ட் செய்திருந்தா வெரி சாரி…டேக் கேர்….பை” என இவன் விடைபெற

வாய் திறந்து எதுவும் சொல்லாமல் அப்படியே விரைத்துப் போய் அவள்.

அன்று மதியம் ஒரு மூன்று மணி இருக்கும்…. டேமில் வேலை நடக்கும் ஒவ்வொரு பகுதியாய் பார்வையிட்டுக் கொண்டு வந்தவன்…..ஆள் நடமாட்ட மற்ற அந்த பகுதிக்கு வந்தான். காடும் புதறுமாய் இருக்கும் அந்த இடம் தான் இவன் மறைந்திருந்து தகவல் அனுப்ப சரியான இடம்….

அதற்காக சுற்றுமுற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கவில்லை என நிதானித்து இவன் அந்த மறைவிற்குள் நுழைய……

அங்கு அந்த மூன்று தடி மாடுகள்……

பார்க்கவும் புரிந்துவிட்டது டேம்க்கு பாம் செட் செய்துட்டு இருக்காங்க…… கடவுளே!!!! டேம் இப்ப வெடிச்சா குறஞ்சது 32 கிராமம்….2 டவ்ண்… கண்டிப்பா காலி….அடுத்தும் என்னவெல்லாமோ….?

நின்று யோசித்துக் கொண்டிருக்கவெல்லாம் நேரமில்லை….. அதற்கு வாய்ப்பு அந்த தடியன்ங்கள் கொடுப்பதாயும் இல்லை….. இவன் நடப்பதை நிதானிக்கும் முன் ஒருவன் இவனை நோக்கி ஷூட்……

இவன் இடத் தோளில் இறங்கியது அது…… ஆனால் அடுத்த இரண்டாம் வினாடி வருவதற்குள்  இருவர்  சுருண்டு விழுந்திருந்தனர் உபயம்…… இவனது பிஸ்டல்…..

இப்போது அடுத்தவன் எதிரும் புதிருமாய் ஓட…

இவன் அவனை துரத்திக் கொண்டு…… ஆன் த வே அப்படியே ஹயர் அஃபீஷியலுக்கு விஷயத்தை ஃபோனில் ப்ளூடூத்தில் விளக்கியபடி….

“ ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்திறுந்தேனே….ஷூட் தெம்…… ரிமோட்  ஐ’ல் சென்ட் பேக் அப் ஃபார் யூ….”

இப்போது எப்படி வந்தாள் என தெரியவில்லை அந்த தடியன் கையில் எதிரில் அங்கு வந்திருந்த இவன் மனைவி…. அவளுக்கு பின்னாக ஒழியாத குறையாக அவன்.

ஸ்தம்பித்துப் போய் இவன்.

“உன் வைஃப் தான…..எனக்கு தெரியும்…..இவ தலை சிதறாம இருக்கனும்னா…..இப்பவே போய் அங்க விழுந்து கிடக்றவன்ல சிவப்பு டீ ஷர்ட் போட்டவன் பாக்கெட்ல இருக்ற மொபைல எடுத்துட்டு வா “ என்றான் அவன்…..அவன் பிஃஸ்டல் இவனவள் பக்கவாட்டு நெற்றியில்….

இவன் உள்ளுணர்வு சொன்னது இதைத்தானோ…? அந்த மொபைல் நிச்சயம் பாம்கான ரிமோட்……அதை இவன் எடுத்துக் கொடுத்தால் காலியாகப் போறது எத்தனை உயிர்களோ…. இல்லை என்றால் இவன் மனைவியின் இறப்பில் மட்டுமாய் அது முடியும்…..

தன்னவள் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தான்…. அவளும் இமை கொட்டாது  இவனைத்தான் பார்த்திருந்தாள்…..அந்த தடியன் பிடியில் அவள் பயப்படவில்லை பதறவில்லை….விழியில் விடையோடு இவனோடு கலந்திருந்தாள் உணர்வில்…..

“என்னப் பத்தி யோசிக்காத….” இதுதான் அவளது ஒரே செய்தி….

“வேகமா போடா..” அவன் கத்த….

மனைவியின் கண்களைப் பார்த்தவன் சின்னதே சின்னதாய் பார்வையை ஒரு சிறு நொடி தாழ்த்தி நிமிர்த்தியவன்…ஷூட்….. அந்த தடியனின் நடு நெற்றியில் சரணடைந்தது அது…. இவன் பார்வை உணர்ந்து அதே நேரம் குனிந்திருந்தாள் அவள்….

மூச்சற்ற முழு நொடி தேவைப்பட்டது ஆபத்தை தாண்டி விட்டோம் என இவர்கள் இருவரும் உணர….

அடுத்த நொடி தலை காட்டும் முன் தன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் கணவன்.

பேச்சற்று அழுதாள் அவள் அவன் மார்பில் குழந்தையாய்….

அன்றைய அத்தனை வேலையும் முடியும் வரையுமே அவளை கையோடு கை பற்றிதான் நிறுத்தி இருந்தான்…..

வீட்டுக்குள் வரவும் வெளிக்காற்று உட்புகமுடியாத வேக அணைப்பில் அவள் இதய வெற்றிடத்தில் உயிர் காற்றாய் உறைந்தான்….

“நான் ரா ஏஜென்ட்னு நீ தெரிஞ்சுகிட்ட அன்னையில இருந்து நீ நிம்மதியா இல்ல….. அது என் வேலை பிடிக்காமலா….இல்ல உன் அப்பா அண்ணா விஷயத்தை நான் கண்டு பிடிச்சிறுப்பேன்னு உனக்கு புரிஞ்சிட்டதாலயான்னு என்னால தெரிஞ்சுக்க முடியலை…..

நானா அதைப் பத்தி பேசினா… ஒரு வேளை என் வேலைய நினச்சே அவ்ளவு அப்செட்டா நீ இருக்க…..உன் அப்பா அண்ணா விஷயமே உனக்கு தெரியாம இருக்க….. நான் வந்து விளக்கம் சொல்றேன்னு இன்னுமாய் உன் நிம்மதிய கொன்னுடக் கூடாதேன்னு தவிச்சுட்டேன்…

அப்பதான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்…. இங்க உன்னை அந்த விமலோட பார்க்கவும் தான் எனக்கு விஷயமே புரிஞ்சுது….. உன் அப்பா அண்ணா மாதிரி ஹை எண்ட் கவர்மென்ட் சீக்ரெட்டை கடத்துறவங்களலாம்…. அரெஃஸ்ட் செய்து….விசாரிச்சு பனிஷ் செய்றதுக்குள்ள பாதி ஜனதொகை கூட காலி ஆகிறுக்கும்…. அதனால சீக்ரெட் என் கவ்ன்டர் செய்துறுப்பாங்கன்னு புரிஞ்சுது…. விமல் செக்க்ஷனோட வேலை அது….

அதுவும் அவனுக்குன்னு ஒரு ஸ்டைல் உண்டு….என் ரிப்போர்ட்ல நீ இன்னொசெண்ட்னு தெளிவா குடுத்துருந்தேன்….. ஆக உன்னை அவன் காப்பாத்தினாலும்…. உன் அப்பா அண்ணா டெத்ல சந்தேகம் இருக்குன்னு நீ கேஸ் பைல் செய்து….அது தேவை இல்லாம உன் அப்பா கூட காண்டாக்ட்ல இருக்ற மத்த டெரிஸ்ட்டை அலர்ட் செய்துடக் கூடாதுன்னு

விமல் என்கவ்ண்டர் செய்துட்டு….நீ தான் மர்டர் செய்த மாதிரி செட் செய்துறுப்பான்னு புரிஞ்சிது…. அது அவன் வே ஆஃப் ஹேண்ட்லிங்…..

பட்…..நீ ரொம்ப அப்செட்னதும் அப்பப்ப உன் கூட டச்ல இருந்திருப்பான்….அந்த கேஃஸ் அவன் கண்ட்ரோல்ல இருக்கு உனக்கு ஒரு ஆபத்தும் வராதுன்னு எதாவது சொல்லிட்டு இருந்திருப்பான் மனசு கேட்காம….

நேத்து அவன் கூட உன்னை பார்க்கவுமே விஷயம் எனக்கு புரிஞ்சிட்டு…..

ஆனா இதெல்லாம் சொன்னா நீ ஒத்துப்பியா…ஏன்னா என்னால எந்த எவிடென்ஃஸும் இதுக்கு காமிக்க முடியாது….. இல்லை நீ மர்டர் செய்தது எனக்கு தெரிய வர்றப்ப நான் விட்டுட்டுப் போய்டுவனோன்னு பயந்துட்டு இருக்ற இப்போதைய மனநிலை இன்னும் மோசமாகி  எனக்கு விஷயம் வேற தெரிஞ்சிட்டுன்னு இன்னும் மோசமா ரியாக்ட் செய்வியோன்னு ஒரே டென்ஷன்….

அதுல இன்னைக்கு இன்சிடென்ட் வேற ஒரு வகையில இந்த பீரியட்ல எக்‌ஃஸ்பெக்டெட்…. அதுக்காகதான் என்னை இந்த ஏரியவை மானிடர் செய்ய இங்க அனுப்பி இருந்தாங்க டேம் மெயின்டனென்ஸ் எம்ளாயி போஸ்ட் கொடுத்து…

என்னமோ இன்னைக்கு காலைல ரொம்பவே மனசுக்கு நல்லா இல்லை…”

இவன் விளக்க

“காலைல நீங்க கிளம்பின விதத்துல தான் நான் ஆடிப் போய்ட்டேன்….. என்ன ஆனாலும் உங்களால என்னை விட்டு கொடுக்க முடியாதுன்னு தோணிச்சு…அது வரைக்கும் விஷயம் தெரியவும் என்னை விட்றுவீங்கன்னு பயம்….நீங்க எனக்கு நிலைக்க மாட்டிங்கன்னு….”

அதற்கு மேல் பேச முடியாமல்…. அவன் மார்பில் புதைந்தவள்…

மீண்டுமாய் தலை தூக்கி “ நீங்க கிளம்பி வந்த விதம் மனச பிசஞ்சுகிட்டே இருந்துச்சு….. உங்கள பார்த்தாலாவது மனசுக்கு நல்லாருக்கும்னு சைட்டுக்கு வந்தேன்… “ இவள் வருகைக்கு விளக்கம் சொன்னாள்.

“இப்ப பார்த்தல்ல உன் அப்பா விஷயத்துல கண்டிப்பா நீ எதுவும் செய்திருக்க மாட்ட….ஸ்டில் நான் இன்னைக்கு செய்ததுக்கும் உன் அப்பா  விஷயத்தில் நடந்துக்கும் என்ன வித்யாசம் சொல்லு?”

அவன் அணைப்பை விலக்காமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“இருக்கு சமர்….நீங்க அதுக்குன்னு அதிகாரம் கொடுக்கப் பட்டவங்க அதோட நான் ஒரு கிரிமனலோட பொண்ணு…” கடைசி வார்த்தையில் அவள் உடைய….

“முதல்ல சொன்னியே அது சரி…..எல்லோரும் சட்டத்தை கைல எடுக்க கூடாது…பட் உன் விஷயத்துல விமல் தான் எல்லாம் செய்ததே…..ஆனா அடுத்து சொன்னியே அது தப்பு….. என் வாழ்க்கைன்றது நீயும் நானுமான உலகம்…..அது மாதிரிதான் உன் வாழ்க்கையும்…..என்னையும் உன்னையும் தவிர எல்லோரும் அடுத்தவங்கதான் அங்க…..உன் அப்பாவையும் சேர்த்து தான் சொல்றேன்….”

அவன் உணர்ந்து சொல்லிக் கொண்டிருக்க…..

இப்போது இன்னும் பரிதாபமாய் இவள் முகம் போக…. சற்றே நெற்றி சுருக்கி….நகம் கடித்து…. ஆனால் அவன் அணைப்பிற்குள் அப்படியே நின்று கொண்டு….

“அப்ப நம்ம பாப்பா…?” என பாவம் போல கேட்டாள் இவள். “அந்த குட்டி யார் உலகம்?”

“ஹேய்…” என செய்தியின் இனிமையை, ஆச்சர்யத்தை உள்வாங்கியவன்….”இது எப்போ?…” என திக்குமுக்காடி பின்

“அந்த குட்டியும்…இந்த பாப்பாவும் இனி என் உலகம்…” இவள் நெற்றி முட்டி….அங்கு இதழ் பதித்தான்… அடுத்து வரவிருக்கும் அவன் குழந்தைக்கு….

இப்போது யாரிவன் வந்தது எதற்காக என புரிந்திருந்தாள் அவள்.

இவளவன் இவளை உலகமாய் கொள்ள வந்தவன்…!!!!!

 

Advertisements

9 comments

Leave a Reply