இருபக்கம் நீ

வானவில் இரவுகளில்

வசந்தங்கள் தொடா பொழுதுகளில்

எனக்கே எனக்கான சிறு மேகம் நீ

எங்கு இட்டு வைத்தேன் உனை தெரியவில்லை

இடப் பக்க இதயத்தில் கடை கோடி பெட்டகத்தில்

காத்து வைத்ததாய் நியாபகம்.

கருவிழி மத்தியில் கந்தக அமிலமாய் நீ

வந்து நிற்கும் மட்டும்

செந்நிறம் என் உதிரத்திற்கும்

வெண்ணிறம் இதயத்திற்கும்

உன் நிறமே பூக்களுக்கும்

வடித்து வைத்தவள்

நீயென்றும் அறிந்தே இருக்கிறேன்.

Advertisements

Leave a Reply